மார்க்சியமே வாழ்வின் முழுமை

அனைவரும் மார்க்சியராவோம் என்பதன் பொருள் அனைவரும் முழுமையான மக்களாவோம் என்பது தான். இது மார்க்சியம் குறித்த புரிதலுக்கான தொடக்கம். கொரோனாவை நாடுகள் கையாண்ட விதம், கொரானாவுக்கு முன்னதான உலகின் பொருளாதார நெருக்கடி, நெருக்கடிகளின் போது அதிலிருந்து முதலியம் எவ்வாறு மீள்கிறது? அவ்வாறு மீளும் போது உலகின் பல கோடி மக்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கிக் கொள்வது என மக்களை வாழ விடாமல் தடுக்கும் முதலியத்திலிருந்து மக்களை விடுதலை செய்யும் ஒன்றே மார்க்சியம் எனும் புரிதலை நோக்கி முதல் … மார்க்சியமே வாழ்வின் முழுமை-ஐ படிப்பதைத் தொடரவும்.

ரஷ்யப் போரும் உக்ரைனிஸ்டுகளின் கவலையும்

ஓராண்டுக்கும் மேலாக ரஷ்ய உக்ரைன் போர் நீடிக்கும் காரணம்? ரஷ்ய உக்ரைன் போருக்கும், அமெரிக்க ஈராக் போருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? நேட்டோ நாடுகள் உருவாக்கப்பட்டதன் பிண்ணணி, கலைக்கப்படாததன் காரணம்? இந்தப் போரின்ன் பொருளாதார பின்னணி? உள்ளிட்டவற்றை விளக்கும் காணொளி. https://www.youtube.com/watch?v=SqACnctvzCQ

நெடுமாறன் குண்டு நமுத்துப் போன மத்தாப்பு

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வதன் பொருள் என்ன? யார் அவ்வாறு கூறுகிறார்கள், அவர்களின் பின்னணி என்ன? விடுதலை புலிகளின் அழிவில் செயல்பட்ட இலங்கை, இந்திய உலக அரசியல் காரணிகள் என்ன? இப்போது அதை மீண்டும் பேசுவதின் உள்ளடக்கம் என்ன? போன்ற விவரங்களை அலசும் காணொளி https://www.youtube.com/watch?v=OZaFtaVBROY

ஹிஜாப்: இந்தியாவும் ஈரானும்

இந்த ஆண்டின் தொடக்க மாதங்களில் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை போராட்டமாக மாறியது. அப்போது பலரும் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக நின்றனர், குறிப்பாக இடதுசாரிகள். ஒரு மதப் பழக்கத்தை இடதுசாரிகள் ஆதரிக்கலாமா? என்று அந்த நிலைப்பாடு அப்போது விவாதத்துக்கு உள்ளாகியது. கர்நாடக கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணியலாமா கூடாதா அந்த வழக்கில் நீதிமன்றமே இருவேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. அந்த வழக்கு தற்போது உச்ச நீதி மன்றத்தில் உள்ளது. கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணியலாமா எனும் கேள்வி மதப் பழக்கம் எனும் … ஹிஜாப்: இந்தியாவும் ஈரானும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை

மொழிபெயர்ப்பாளர் உரையிலிருந்து உலகின் தலைசிறந்த நாத்திக சிந்தனையாளர்களின் ஒருவரும், கற்றாய்ந்த படிநிலை பரிணாம வளர்ச்சி உயிரியலாளரும் (Evolutionary Biologist), ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறவருமான ரிச்சர்ட் டாகின்ஸ், இந்நூல் எழுதுவதற்கு முன்பே பெருமளவில் விற்பனையாகும் அறிவியல் சார்ந்த எட்டு நூல்களை எழுதியுள்ளார். அவருடைய கடவுள் எனும் பொய் நம்பிக்கை The God Delusion எனப்படும் இந் நூல் விற்பனையில் சாதனை புரிந்ததுடன் அறிஞருலகில் தொடர்ந்து பேசப்படும் ஒன்றாகும். நான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் … கடவுள்: ஒரு பொய் நம்பிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.

வெகுஜனங்களிடையே கட்சியின் பணி

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வள்ர்ச்சிக்கும், அரசியல் நிறுவன ஒழுங்கமைப்புக்கும் உதவுவது தான் நமது முதன்மையான அடிப்படையான பணி. இந்தப் பணியைப் பின்னுக்குத் தள்ளுகிறவர்கள், எல்லாத் தனிப்பட்ட பணிகளையும் குறிப்பிட்ட போராட்ட முறைகளையும் இதற்கு கீழ்ப்படுத்த மறுப்பவர்கள் தவறான பாதையில் செல்கிறவர்களாவர். இயக்கத்துக்கு பெருந்தீங்கு இழைப்பவர்களாவர். .. .. ..   .. .. .. அரசியல், பிரச்சாரம், கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பு இவற்றின் உள்ளடக்கத்தையும் வீச்சையும் குறுகச் செய்து விடுவோராலும் தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் விதிவிலக்கான சில தருணங்களில் … வெகுஜனங்களிடையே கட்சியின் பணி-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொருளாதாரத் தடைகள் உலகை மாற்றுமா?

செய்தி: ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு நம்பி இயங்கி வந்த நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு, Nors Stream என்னும் எரிவாயு பைப்லைன்-ஐ பராமரிப்பு பணிகளுக்காக மொத்த எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஐரோப்பாவில் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் எரிவாயு இல்லாமல் மக்களும், நிறுவனங்களும் எரிவாயு இல்லாமல் குளிர் காலத்தில் முடங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பா பல முறை விநியோகத்தை அதிகரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தியும் … பொருளாதாரத் தடைகள் உலகை மாற்றுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள்

மார்க்சிய பேராசான் எங்கெல்ஸின் 127 வது நினைவு நாள் இன்று. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் முந்தைய தத்துவஞானிகள் இந்த உலகைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்த தருணத்தில், இவர்கள் இந்த உலகை மாற்றுவதற்கான தத்துவத்தைப் படைத்தனர். மார்க்சின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மார்க்சியம் என்பது மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரண்டு ஆளுமைகளின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்சியம் எனும் சமூக ஆய்வுமுறையை உருவாக்குவதிலும், அதனை சமகாலத்திய முதலாளித்துவ சமூகத்தின் மீது பிரயோகித்து பாட்டாளி வர்க்கத்துக்கான சித்தாந்தத்தை படைப்பதிலும் இருவரின் … பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்

எங்கெல்ஸ் எழுதிய “லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற நூலை நான் பல முறைப் படித்துள்ளேன். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் 25 தடவைக்கு மேல் படித்திருக்கிறேன். சோவியத் நாட்டில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்த போது இந்த நூல் 50 பைசாவுக்கு விற்றனர். இந்த நூலை நான் 100க்கு மேலான படிகளை வாங்கி பலருக்கு இலவசமாக கொடுத்துள்ளேன். இந்த நூலோடு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, டூரிங்குக்கு மறுப்பு ஆகிய மூன்று நூல்களை எனது … லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வலிக்கிறது தம்பீ

துபாய் ஜெபல் அலி பகுதியில் வேலை செய்து வந்த என் தம்பி சிந்தா மதார் கடந்த ஜூலை 11 திங்கட் கிழமை மாலையில் உடல்நலக் குறைவினால் மரணமடைந்தார். அவரின் உடல் நேற்று துபாய் நேரப்படி மாலை ஐந்து மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. சரியாகச் சொன்னால் மரணமடைந்த பிறகு ஏழு நாட்கள் கடந்து எட்டாவது நாள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனையின் மரண அறிக்கை போதிய விவரங்களின்றி இதயம் செயலிழந்ததால் மரணம் நேர்ந்திருக்கிறது என பொதுவாக குறிப்பிடுகிறது. எங்களுக்கு தெரியவந்த … வலிக்கிறது தம்பீ-ஐ படிப்பதைத் தொடரவும்.