இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே, இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் கட்டுரைத் தொடரை 2008ல் தொடங்கினேன். மிகுந்த வரவேற்பையும், பெரும் விவாதங்களையும் கிளப்பிய தொடர் அது. பின்னர் அத்தொடர் சூழல் கருதி முடிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டது. அதை முழுமைப்படுத்தி நூலாக கொண்டுவர வேண்டும் எனும் ஆவல் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், இரண்டு காரணங்கள் அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன. இஸ்லாம் எனும் மதத்தை விமர்சித்து எழுதப்பட்ட இதை பிற மதவாதிகள் தங்களுடைய வெறுப்பு அரசியலுக்கு…

இந்தியாவில் அடிமைகள்

மநு நீதி காத்த சோழர்கள் காலத்தில் சாதியும் ,வருணமும் செழித்தன என்கின்றன ஆய்வுகள். தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தலித்துகளின்  பள்ளு இலக்கியம் தோன்றியுள்ளது. விவசாய வேலைகளில்  இருந்த கொத்தடிமை நிலை அதில் வெளிப்படுகிறது. சமஸ்கிருத மொழியின் பாரம்பரியத்தில் வந்த மநு (அ)தர்மமத்தின்படி  பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்குப் பிரிவில் சூத்திரர்கள் அடிமைகள் ! ஆனால், பஞ்சமர்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களே அல்ல. விலங்குகளிலும் கீழாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்களில் தமிழகத்தின் புதுரை வண்ணார்கள் போன்ற…

இந்துதுவ தீவிரவாதம்

Dismantling Global Hindutva இந்துத்துவர்களின் தீவிரவாதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. குடியுரிமை விதித் திருத்தச் சட்டம் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஜனநாயக அமைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக சீரழிக்கப்பட்டு வருகின்றன. விமர்சனக் குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள், செயல்வீரர்கள், மனித உரிமைக் காவலர்கள், சாதிய வெறிக்கு எதிரான போராளிகள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது, சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஜனநாயக நடைமுறைகளும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகி வருகின்றன. இச்சூழலில், இந்துத்துவமும் இந்துத்துவர்களும் செயல்படும் விதத்தைப் புரிந்து கொள்வது, அவர்களுடைய சித்தாந்தங்களைப்…

வதைபடும் நாடாளுமன்றம்

வரலாறு காணாத வகையில் வதைபடும் நாடாளுமன்ற ஜனநாயகம்..! ”விவாதிக்க வேண்டுமா..? – முடியாது!” ”பேச வேண்டுமா – அனுமதி கிடையாது!” ”இவை அநீதியான சட்டங்கள் மக்கள் பாதிக்கப்படுவார்களே” ”நீங்கள் பேசிய எதுவும் சபை குறிப்பில் இடம் பெறாது..” ”நாங்க பேசும் எதையும் காதில் வாங்க மாட்டீர்களா..? அப்ப எதுக்கு சபை?” ”உட்காருங்க, நீங்க சபை விதிகளை மீறுகிறீர்கள்!” ”மக்கள் விரோத சட்டங்களை தனி நபர்கள் ஆதாயத்திற்காக கொண்டு வருகிறீர்கள்! பிரதமரும், உள் துறை அமைச்சரும் ஏன் சபைக்கு…

பாருக்குள்ளே நல்ல நாடு

அவர்களைச் சிறையில் சந்தித்தேன். “என்ன குற்றம் செய்தீர்கள்” என்று கேட்டேன். ஒவ்வொருவராகச் சொன்னார்கள்.. எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான். “திருடன் திருடன்” என்று கத்தினேன். அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக் கைது செய்து விட்டார்கள். “என் வருமானத்தைக் கேட்டார்கள்” ‘நான் வேலையில்லாப் பட்டாதாரி’ என்றேன் வருமானத்தை மறைத்தாக வழக்குப் போட்டு விட்டார்கள். “நான் கரி மூட்டை தூக்கும் கூலி” கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில் கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது. கறுப்பு பணம் வைத்திருந்ததாகக் கைது செய்து…

இதை முதல்ல பாருங்க!

ஒரு குறும்படத்தால் என்ன செய்ய முடியும்? ஒரு குறும்படத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும்? கலையின் அழகியலில் யதார்த்தம் என்பது என்ன? அரசு என்றால் என்ன? பாசிசம் என்றால் என்ன? ஒரு பாசிச அரசின் கீழ் நாம் இருக்க நேர்ந்தால் என்ன செய்யலாம்? உண்மைகளை பேசும் வழிமுறை என்ன? இன்னும் இது போன்ற பல கேள்விகளுக்கு மிக எளிமையாகவும், கூர்மையாகவும், ஆறே நிமிடத்தில் புரியவைத்துவிட முடியும் என்று காட்டியிருக்கிறார்கள் இந்த குறும்படத்தில். பாருங்கள் .. புரிந்து கொள்ளுங்கள்…

உணவு யுத்தம்

உணவு யுத்தம் – எஸ்.ராமகிருஷ்ணன் நூலின் முன்னுரையிலிருந்து, ‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட் ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உறையில் படமெடுத்து ஆடும் காராசாரமான நாகரீக பொட்டடோ சிப்ஸ்களையும் வரட்டு கௌரவத்துக்காக உண்பது. தற்கால நிலையில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் வாய் ருசிக்காக மட்டுமே…

கலீபாக்கள் ஆட்சி .. .. .. (!)

எது சைத்தானின் படை? பகுதி 3 எது சைத்தானின் படை? எனும் தொடரின் மூன்றாம் பகுதியான இது, ரஷாதிய கலீபாக்களின் ஆட்சி குறித்த விளக்கங்களைக் கொண்டிருக்கிறது. ‘தாவா ஃபார் முஸ்லீம்ஸ்’ன் அந்த காணொளியில் ரஷாதிய கலீபாக்களின் ஆட்சியில் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தனர் எனும் பொருளில் கூறப்பட்டிருந்தது. அதாவது, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகும் கம்யூனிசத்தை நடைமுறைப் படுத்த முடியவில்லை. ஆனால் இஸ்லாமிய ஆட்சி அமைந்ததும் முகம்மது நபியும் ரஷாதிய கலீபாக்களும் தங்கள்…

பொருளாதாரக் குழுவின் வரலாறு பல்லிளிக்கிறது

திமுக தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் சட்டமன்றக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது. அந்தக் கூட்டத்தின் ஆளுனர் உரையில் தமிழ்நாட்டு நிதிநிலையை மேம்படுத்தும் பொருட்டு ஆலோசனை கூறுவதற்காக ஐந்து பொருளாதார வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்திக்கு பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். சிலர் மாற்றுக் கண்ணோட்டத்திலும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். திமுக பொறுப்பேற்ற பிறகு அது வெளியிடும் அறிவிப்புகளியெல்லாம் சிக்சர்களாக கருதி புழகமடையும் கூட்டம் ஒன்று இருக்கிறது….

அறியப்படாத தமிழ் மொழி

மொழி சார்ந்த மிகையுவப்புகள் (மிகை + உவப்பு = மிகையுவப்பு : பெருமிதம்) உலகெங்கும் உண்டு. ஆனாலும், தமிழர்களின் மிகையுவப்புக்கு அருகில் கூட ஏனையவை ஒரு போதும் நெருங்க முடியாது என்றே தோன்றுகிறது. அதில் தவறும் இல்லை. ஏனென்றால், புதிது புதிதான செய்திகள் அதனுள்ளிருந்து கிளைத்து வந்து கொண்டே இருக்கிறது. திராவிடம் எனும் சொல் குறித்த விவாதங்கல் இங்கு அதிகம். திராவிடம் எனும் சொல்லை தமிழுக்கு எதிராக நிறுத்தி ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. திராவிடம்…