தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்

1947 ஆகஸ்ட் 15ல் கிடைத்தது விடுதலை அல்ல, அதுவொரு ஆட்சி மாற்றமே என்று கம்யூனிஸ்டுகள் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறார்கள். அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய அனைத்திலுமே ஒரு சிறு கூட்டத்துக்கு மட்டுமே விடுதலை கிடைத்துள்ளது, ஏனைய எவருக்கும் இல்லை. இது தான் கடந்த 75 ஆண்டு கால வரலாறு. ஆனால் இந்த நாளின் மீது மிகைப்படுத்தப்பட்ட புனிதத்தை ஏற்றி வைத்திருப்பதால் அனைவரையும் உள்ளடக்க முடிகிறது. அதில் ஒன்று தான் தேசியக் கொடி. அது நாட்டைக் குறிக்கும் கொடி … தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இலவசமாக கொடுக்கப்படும் 5ஜி

சில நாட்களுக்கு முன்னர் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் நடந்தது. இதில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே பங்கு கொண்டன. மொத்த அலைக்கற்றை பயன்பாட்டு உரிமையில் 71 விழுக்காடு கலந்து கொண்ட நான்கு நிறுவனங்களும் பெற்றுக் கொண்டன. மீதமிருக்கும் அலவை எதிர்வரும் ஆகஸ்ட் பத்தாம் தேதிக்குள் ஏலம் கோரி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த 5ஜி ஏலத்தில் 4.3 லட்சம் கோடிகள் கிடைக்கும் என்று அரசு எதிர்பார்த்தது. ஆனால் கிடைத்திருப்பதோ 1.5 லட்சம் கோடிகள் தான். கடந்த … இலவசமாக கொடுக்கப்படும் 5ஜி-ஐ படிப்பதைத் தொடரவும்.

மோடியும் வக்கிர எண்ணமும்

பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. ஏற்கனவே தேனீர் விற்ற பட்டறிவு(!) (அனுபவம் என்பதற்கு ஈடான தமிழ்ச் சொல்) கொண்ட, தேர்தல் காலங்களில் வடை சுடுவதில் வல்லவரான மோடி பஞ்சாப் சென்றிருக்கிறார். பெரோஸ்பூரில் 42,750 கோடிக்கு வடை சுடுவதாக மன்னிக்கவும் 42,750 கோடிக்கு நலத்திட்ட அறிவிப்புகள் செய்வதாக திட்டமிட்டு பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பஞ்சாப் மாநில அரசின் கூற்றுப்படி தில்லியிலிருந்து விமானம் மூலமும் பின்னர் எழுவூர்தி மூலம் பெரோஸ்பூருக்கும் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலையினால் … மோடியும் வக்கிர எண்ணமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜியோ கட்டண உயர்வு ஏன்?

அண்மையில் ஜியோ, ஏர்டெல், ஓடஃபோன் நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்டு கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளன. இதன் பின்னிருக்கும் காரணம் என்ன? ஏன் BSNL ஆல் ஜியோவுடன் போட்டி போட முடியவில்லை? ஏன் BSNL ஆல் 4ஜி சேவை கொடுக்க முடியவில்லை? ஏன் BSNL சேவை மக்கள் ஏற்கும் அளவுக்கு இல்ல? இது போன்ற கேள்விகளுக்கான விடை, BSNL திட்டமிட்டு சீர்குலைக்கப்படும் வரலாற்றில் சென்று இணைகிறது. இது BSNL க்கு மட்டும் பொருந்தும் ஒன்றல்ல. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இப்படித் … ஜியோ கட்டண உயர்வு ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

வதைபடும் நாடாளுமன்றம்

வரலாறு காணாத வகையில் வதைபடும் நாடாளுமன்ற ஜனநாயகம்..! ”விவாதிக்க வேண்டுமா..? – முடியாது!” ”பேச வேண்டுமா – அனுமதி கிடையாது!” ”இவை அநீதியான சட்டங்கள் மக்கள் பாதிக்கப்படுவார்களே” ”நீங்கள் பேசிய எதுவும் சபை குறிப்பில் இடம் பெறாது..” ”நாங்க பேசும் எதையும் காதில் வாங்க மாட்டீர்களா..? அப்ப எதுக்கு சபை?” ”உட்காருங்க, நீங்க சபை விதிகளை மீறுகிறீர்கள்!” ”மக்கள் விரோத சட்டங்களை தனி நபர்கள் ஆதாயத்திற்காக கொண்டு வருகிறீர்கள்! பிரதமரும், உள் துறை அமைச்சரும் ஏன் சபைக்கு … வதைபடும் நாடாளுமன்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாருக்குள்ளே நல்ல நாடு

அவர்களைச் சிறையில் சந்தித்தேன். “என்ன குற்றம் செய்தீர்கள்” என்று கேட்டேன். ஒவ்வொருவராகச் சொன்னார்கள்.. எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான். “திருடன் திருடன்” என்று கத்தினேன். அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக் கைது செய்து விட்டார்கள். “என் வருமானத்தைக் கேட்டார்கள்” ‘நான் வேலையில்லாப் பட்டாதாரி’ என்றேன் வருமானத்தை மறைத்தாக வழக்குப் போட்டு விட்டார்கள். “நான் கரி மூட்டை தூக்கும் கூலி” கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில் கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது. கறுப்பு பணம் வைத்திருந்ததாகக் கைது செய்து … பாருக்குள்ளே நல்ல நாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

இதை முதல்ல பாருங்க!

ஒரு குறும்படத்தால் என்ன செய்ய முடியும்? ஒரு குறும்படத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும்? கலையின் அழகியலில் யதார்த்தம் என்பது என்ன? அரசு என்றால் என்ன? பாசிசம் என்றால் என்ன? ஒரு பாசிச அரசின் கீழ் நாம் இருக்க நேர்ந்தால் என்ன செய்யலாம்? உண்மைகளை பேசும் வழிமுறை என்ன? இன்னும் இது போன்ற பல கேள்விகளுக்கு மிக எளிமையாகவும், கூர்மையாகவும், ஆறே நிமிடத்தில் புரியவைத்துவிட முடியும் என்று காட்டியிருக்கிறார்கள் இந்த குறும்படத்தில். பாருங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் … இதை முதல்ல பாருங்க!-ஐ படிப்பதைத் தொடரவும்.

எழுவர் விடுதலை: குரலை மாற்றுங்கள்

பேரறிவாளன், சிறையிலிருந்து சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு 30 நாட்களுக்கு விடுவிப்பு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு அற்புதம்மாள் முதல்வருக்கு நன்றி சொல்லியிருக்கிறார். அவ்வப்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் எழுவர் விடுதலை என்பது பல முறை பேரறிவாளனின் விடுவிப்போடு முடிந்து போயிருக்கிறது. மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் எழுவர் விடுதலை பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் ஈழ அரசியலும் தவிர்க்க முடியாமல் மேலெழுகிறது. அதிலும் தற்போது திமுக, திக, நாம் தமிழர் கட்சி என ஒரு தனிச் சுற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அவைகளை விலக்கி எழுவர் விடுதலை குறித்து … எழுவர் விடுதலை: குரலை மாற்றுங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்று கருப்பு நாள்

வேளாண் மசோதாக்கள் என்ற பெயரில் மூன்று கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்த மோடி அரசாங்கம் இன்று ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அந்த கருப்புச் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் இன்று ஆறு மாதங்களை நிறைவு செய்கிறார்கள். இந்த இரண்டையும் இணைத்து போராடும் விவசாயிகளும், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பவர்களும், பொது மக்களும் இந்த நாளை கருப்பு நாளாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று மக்களுக்கு காட்டுவதற்காகவும், தங்கள் ஒற்றுமையை அடையாளப்படுத்தவும் … இன்று கருப்பு நாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இவர்களை எதால் அடிப்பது?

இவர்களை எதால் அடிப்பது என்று கேட்பதை விட நம்மை எதால் அடித்துக் கொள்வது என்று கேட்டுக் கொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் ஊடகங்கள் என்ற பெயரில் அவர்களின் கருத்தை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணிப்பதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. அதன் விளைவுகளை இன்று அறுவடை செய்ய வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். அவர்கள் எதை தீர்மானிக்கிறார்களோ அது மட்டுமே நமக்குச் செய்தி. விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் குறித்து எந்த ஊடகமாவது … இவர்களை எதால் அடிப்பது?-ஐ படிப்பதைத் தொடரவும்.