இந்தியாவில் அடிமைகள்

மநு நீதி காத்த சோழர்கள் காலத்தில் சாதியும் ,வருணமும் செழித்தன என்கின்றன ஆய்வுகள். தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தலித்துகளின்  பள்ளு இலக்கியம் தோன்றியுள்ளது. விவசாய வேலைகளில்  இருந்த கொத்தடிமை நிலை அதில் வெளிப்படுகிறது. சமஸ்கிருத மொழியின் பாரம்பரியத்தில் வந்த மநு (அ)தர்மமத்தின்படி  பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்குப் பிரிவில் சூத்திரர்கள் அடிமைகள் ! ஆனால், பஞ்சமர்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களே அல்ல. விலங்குகளிலும் கீழாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்களில் தமிழகத்தின் புதுரை வண்ணார்கள் போன்ற…

லட்சத்தீவில் வெறிபிடித்த விலங்கு

நரவேட்டையாடிக் கொண்டிருக்கும் பாஜக எனும் விலங்கு தற்போது லட்சத் தீவை நோக்கி தன் பார்வையைத் திருப்பி இருப்பதால், கடந்த இரண்டு வாரங்களாக ‘லட்சத் தீவுகளைக் காப்போம்’ ‘பிரபுல் பட்டேலை பதவி நீக்கம் செய்’ போன்ற முழக்கங்கள் முன்னிலை பெற்று வருகின்றன. கேரள நடிகர்கள் தொடங்கி, சற்றேறக் குறைய பாஜக மற்றும் அதனைச் சார்ந்த கட்சிகள் தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தின, வெளிப்படுத்தி வருகின்றன. அந்த விலங்கு தொடர்ந்து இப்படி வேட்டையாடிக் கொண்டிருப்பதை எப்படி…

நாங்கள் தூக்கில் தொங்கி விடட்டுமா தோழர்களே,

“சித்தா வெறியர்ஸ்” பிரபல பதிவராக இருக்கும், எதையும் உளவியல் ரீதியாக அணுகும், கம்யூனிசத்தில் அக்கரை கொண்ட தோழர் ஒருவரின் சொற்கள் இவை. ஏன் இவ்வளவு வன்மம். தொடர்ந்து இப்படியான சொற்களும், முத்திரை குத்தல்களும் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதோ ஓரிரு எடுத்துக்காட்டுகள். “சித்தம், ஓமியோபதி, இயற்கை சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. கொஞ்சம் விஞ்ஞானத்தின் குரலை கொஞ்சம் கேளுங்கள்” இது இன்னொரு நண்பர். அதாவது அலோபதி தவிர வேறு…

கொரோனாவில் மே நாள்

கடந்த ஆண்டின் மே நாளில் வெளியான கட்டுரையின் மீள்பதிவே இது. சூழலும் தேவையும் மாறிவிடவில்லை என்பதால் .. கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும்…

மே.2க்கு முன் ஏதேனும் நடக்குமா?

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021, வழக்கமான தேர்தலைப் போலல்லாமல் தனிச் சிறப்பான ஒரு தேர்தலாக அமைந்து இருந்தது. தேர்தல் புறக்கணிப்பை நடைமுறையாக கொண்டிருந்த பல புரட்சிகர இடதுசாரி அமைப்புகள், வசதியான இடங்களில் எல்லையைக் கடந்து தேர்தல் அரசியலுக்குள் நுழைந்திருந்தன. அவை நேரடியாக பரப்புரை செய்தது தொடங்கி சமூக வலைதளங்களில் செய்த பரப்புரை வரை தங்களுக்கு உகந்த வழிகளில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது யாருக்கு வாக்களிக்கக் கூடாது என மக்களை வாக்களிக்கத் தூண்டின. இந்த…

எல்லை தாண்டும் பொய்கள்

பாஜக எனும் பாசிசக் கூட்டத்துக்கும் பொய்களுக்கும் இடையிலான நெருக்கம் அவ்வளவு எளிதில் இற்று விடக் கூடியது அல்ல. இந்தியாவை மத அடிப்படையில் இரண்டாக பிரிக்க ஆவன செய்து விட்டு, ஜின்னா நாட்டை துண்டாடுகிறார் என பரப்பியதில் தொடங்கிய பொய்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். என்றாலும் தற்போது அது புதிய உச்சங்களை எட்டி வருகிறது என்பது கவனத்துக்கு உரியது. இந்தியாவில் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதும் எல்லோருக்கும் தெரிந்த கமுக்க(இரகசிய)ச் செய்தி…