மார்க்சியமே வாழ்வின் முழுமை

அனைவரும் மார்க்சியராவோம் என்பதன் பொருள் அனைவரும் முழுமையான மக்களாவோம் என்பது தான். இது மார்க்சியம் குறித்த புரிதலுக்கான தொடக்கம். கொரோனாவை நாடுகள் கையாண்ட விதம், கொரானாவுக்கு முன்னதான உலகின் பொருளாதார நெருக்கடி, நெருக்கடிகளின் போது அதிலிருந்து முதலியம் எவ்வாறு மீள்கிறது? அவ்வாறு மீளும் போது உலகின் பல கோடி மக்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கிக் கொள்வது என மக்களை வாழ விடாமல் தடுக்கும் முதலியத்திலிருந்து மக்களை விடுதலை செய்யும் ஒன்றே மார்க்சியம் எனும் புரிதலை நோக்கி முதல் … மார்க்சியமே வாழ்வின் முழுமை-ஐ படிப்பதைத் தொடரவும்.

வெகுஜனங்களிடையே கட்சியின் பணி

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வள்ர்ச்சிக்கும், அரசியல் நிறுவன ஒழுங்கமைப்புக்கும் உதவுவது தான் நமது முதன்மையான அடிப்படையான பணி. இந்தப் பணியைப் பின்னுக்குத் தள்ளுகிறவர்கள், எல்லாத் தனிப்பட்ட பணிகளையும் குறிப்பிட்ட போராட்ட முறைகளையும் இதற்கு கீழ்ப்படுத்த மறுப்பவர்கள் தவறான பாதையில் செல்கிறவர்களாவர். இயக்கத்துக்கு பெருந்தீங்கு இழைப்பவர்களாவர். .. .. ..   .. .. .. அரசியல், பிரச்சாரம், கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பு இவற்றின் உள்ளடக்கத்தையும் வீச்சையும் குறுகச் செய்து விடுவோராலும் தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் விதிவிலக்கான சில தருணங்களில் … வெகுஜனங்களிடையே கட்சியின் பணி-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள்

மார்க்சிய பேராசான் எங்கெல்ஸின் 127 வது நினைவு நாள் இன்று. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் முந்தைய தத்துவஞானிகள் இந்த உலகைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்த தருணத்தில், இவர்கள் இந்த உலகை மாற்றுவதற்கான தத்துவத்தைப் படைத்தனர். மார்க்சின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மார்க்சியம் என்பது மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரண்டு ஆளுமைகளின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்சியம் எனும் சமூக ஆய்வுமுறையை உருவாக்குவதிலும், அதனை சமகாலத்திய முதலாளித்துவ சமூகத்தின் மீது பிரயோகித்து பாட்டாளி வர்க்கத்துக்கான சித்தாந்தத்தை படைப்பதிலும் இருவரின் … பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாபெரும் விவாதம்

இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் சித்தாந்தப் போராட்டங்கள், தத்துவ விவதங்கள் பெரிய அளவில் நடந்ததில்லை. நடக்கவே இல்லை என்பது இதன் பொருளல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் எண்ணிக்கையையும் அவை கடந்து வந்த நீண்ட காலத்தையும் சிந்தையில் கொண்டால், நடந்திருக்கும் சித்தாந்தப் போராட்டங்கள் மிகமிகக் குறைவே. நடந்திருக்கும் சித்தாந்தப் போராட்டங்களில் கூட, சரிப்படுத்தும் நோக்கிலான விமர்சனங்கள் என்பதைக் கடந்து, குற்றம் சாட்டும் வாதச் சண்டைகளாக முடிந்தவையே அதிகம். அண்மையில் தமிழ்நாட்டில் SOC உடைதல்களுக்குப் பிறகு இந்த வாதச் சண்டைகள், … மாபெரும் விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தோழருக்கு செவ்வஞ்சலி

பதின்ம வயது தொடங்கி, மரணம் வரை பொதுமை மெய்யியலை உயர்த்திப் பிடித்து, அதற்காகவே இயல்பாக இருந்த வாழ்விலிருந்து விலகி நின்று, திருமணம் உள்ளிட்ட எந்த சட்டகங்களுக்குள்ளும் சிக்காமல், உழைத்த ஒரு தோழரை இழந்திருக்கின்றோம். தோழருடன் நேரடியாக எனக்கு எந்தப் பழக்கமும் இல்லை. சில முறைகளைத் தவிர சந்தித்ததும் இல்லை. இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் பொதுச் சந்திப்புகள் தாம். வகுப்புகளில், தலைப்புகளில். இரண்டு முறை மட்டுமே தனியாக சந்தித்து உரையாடியிருக்கிறேன். என்ன சொன்னாலும், அதை எப்படிச் சொன்னாலும் … தோழருக்கு செவ்வஞ்சலி-ஐ படிப்பதைத் தொடரவும்.

தத்துவம்

மக்களியம். பகுதி - 3 நாம் ஏன் இயற்கை, அறிதல், அறிவு, அறிவியல், சமூகம், தத்துவம் இவைகளை தெரிந்து கொள்ள வேண்டும்? ஏனென்றால் இதன் வழியாகத் தான் நாம் வளந்து வந்தோம். நாம் வளர்ந்து வந்த, கடந்து வந்த வழியில் ஏதோ பிழை இருக்கிறது என்பதையும், ஏதோ ஒரு விதத்தில் புரிந்து வைத்திருக்கிறோம். ஏதோ ஒரு விதத்தில் தான் அது பிழை என புரிந்து வைத்திருக்கிறோமே அல்லாது துல்லியமான விதத்தில் அந்தப் பிழையை நாம் புரிந்து கொண்டிருக்கவில்லை. … தத்துவம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு

“அதெல்லாம் இருக்கட்டும், ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சி பற்றி இன்றுவரை ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம்? …” “அது சரி …புரட்சிக் கட்சிக்கு தேர்தலில் என்ன வேலை? …” “ம்ஹுக்கும் … கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் சங்கங்களில் பிற்போக்கானவர்கள் இருக்கிறார்களே?” “சமரசமில்லாமல் போராட வேண்டாமா?” போகிற போக்கில், இப்படி ஏராளமான ‘புரட்சிகர‘ கேள்விகள் நம்மை நோக்கி வீசப்படுகின்றன. இவைகளெல்லாம் இங்கு மட்டும்தான் எழுப்பப்படுகின்றனவா?… உலகெங்கிலும் இப்படி வீராவேசம் பேசுவோரால் நடந்தது என்ன? என்ன செய்துவிட முடியும்? என்பதைத்தான் ‘இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு’ புத்தகத்தில் தோழர் வி.இ.லெனின் விமர்சனப்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்துகிறார். படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள் மின்னூலாக (பிடிஎஃப்) பதிவிறக்க

செஞ்சட்டைப் பேரணியின் பின்னால்

கடந்த 29ம் தேதி மதுரையில் செஞ்சட்டைப் பேரனி மீகச் சிறப்பாய் நடந்து முடிந்திருக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் சிவப்பு சட்டையணிந்து கலந்து கொண்டது மிகுந்த உவகையூட்டக் கூடியதாக இருந்தது. இது இடதுசாரிகள் நடத்திய பேரணி அல்ல. கருப்புச் சட்டைகள் முன்னின்று நடத்திய செஞ்சட்டைப் பேரணி. சிவப்பு, கருப்பு, நீலம் மூன்றும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பது ஆசையாகவும், கருத்தியலாகவும் இங்கு நீண்ட காலமாக நிலவில் இருக்கிறது. அதற்கு இது பெருந் தொடக்கமாக இருக்க வேண்டும். இந்தப் பேரணி … செஞ்சட்டைப் பேரணியின் பின்னால்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?

மகஇக வின் பாடல்கள் என்றால் உள்ளம் துடித்து எழும். பறையின் அதிர்வுகளைப் போல் மனம் அதிர்ந்து சோம்பலை உதறித் தள்ளி வீரெழும். ஆனால், நேற்று அந்த பாடலைக் கேட்ட போது உள்ளம் துணுக்குற்றுப் போனது. முனை மழுங்கி விட்டால் வாட்கள் கரும்புத் தோகை ஆகிவிடுமோ! மூளை மழுங்கி விட்டால் கோவன் கத்தார் ஆகி விடுவாரோ! கடந்த 7ம் தேதி ‘திராவிட மாடலாகும் இந்தியா’ எனும் தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் மகஇக நடத்திய … மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

உலகப் பேராசான்

மார்க்ஸைப் படி மார்க்ஸே படி