தீபாவளிக்கு முதல் நாள் கோவையில் ஒரு வண்டியின் எரிவாயு உருளை வெடித்தது. அதில் அந்த வண்டியில் இருந்த முபீன் என்பவர் இறந்து போனார். மட்டுமல்லாது அந்த வெடிப்பில் ஆணிகளும், கோலிக் குண்டுகளும் சிதறின. வெடித்த இடம் ஒரு கோவிலுக்கு முன்னால். இவை எல்லாம் சேர்ந்து ஒருவித ஐயத்தை ஏற்படுத்தவே காவல்துறை விரைந்து செயல்பட்டது. இறந்தது யார் என அடையாளம் காணப்பட்டது. இறந்தவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டவர் என்று தெரிந்ததும் தொடர்புடையவர்கள் … கோவையும் சில குரங்குகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகுப்பு: சமூகம்
ஊழல் செய்யாத உத்தமக் கட்சி பாஜக
செய்தி: கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் வாங்கி விட்டு திரும்பச் செலுத்தாத கடன்களின் தொகை 2,40,000 கோடியை தாண்டி இருக்கிறது. 2012ல் 23,000 கோடியாக இருந்த வாராக்கடன் தொகை 2022ல் 2,40,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றியவர்கள் 36 பேர். இந்த 36 பேரில் பெரும்பாலானோர் இன்று இந்தியாவில் இல்லை. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி செய்தியின் பின்னே: இந்த 2,40,000 கோடி என்பது நேரடியாக இந்தியாவின் கொடூரங்களோடு, இந்தியாவின் … ஊழல் செய்யாத உத்தமக் கட்சி பாஜக-ஐ படிப்பதைத் தொடரவும்.
அப்பன் வீட்டு சொத்தா இது?
செய்தி: கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு விளம்பரத்துக்காக மட்டும் சுமார் ஆயிரம் கோடி செலவழித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துளளார். சரியாகச் சொன்னால் 986.85 கோடி தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்காக செலவிடப்பட்டுள்ளது. சன் நியூஸ் தொலைக்காட்சி செய்தியின் பின்னே: சராசரியாக நாள் ஒன்றுக்கு 55 லட்சம் விளம்பரத்துக்காக மட்டும் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் இரவு உணவு இன்றி உறங்கச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 25 கோடி. வேலையில்லா … அப்பன் வீட்டு சொத்தா இது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
வீடு மாற்றும் சடங்கு
சடங்கு எனும் சொல்லுக்கும் வழமை எனும் சொல்லுக்கும் இடையில் பொருள் மாறுபாடு உண்டு. இயல்பாக ஒரு செயலை மீண்டும் மீண்டும் செயல்படுத்த நேர்வதை வழமை என்று குறிப்பிடுகிறோம். சடங்கு எனும் போது அதில் ஒரு திணிப்பு ஏற்றப்படுகிறது. மதம் அல்லது வேறு ஏதோ ஒரு நம்பிக்கை சார்ந்த கட்டாயத்தினால் திரும்பத் திரும்ப செயல்படுத்த நேர்வதை சடங்கு எனக் குறிப்பிடலாம். ஆனால், கருத்து முதல் வாதம் சார்ந்த சடங்குகளில் இருக்கும் ஈர்ப்பு, வேறு வகைகளினால் ஏற்படும் சடங்குகளில் இருப்பதில்லை. … வீடு மாற்றும் சடங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆசியபாணி உற்பத்தி முறை, சாதி, இந்திய கம்யூனிசம்
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி நூறாண்டுகள் ஆகின்ற போதும் ஏன் புரட்சியை நோக்கி முகம் திருப்பக் கூட முடியவில்லை? என்றொரு கேள்வியை கம்யூனிஸ்டுகளிடம் எழுப்பினால் .. .. .. கிடைக்கும் பதிலை இரண்டாக பிரிக்கலாம். ஆசிய பாணி உற்பத்தி முறைசாதி முறை குறித்த போதாமை. இந்த இரண்டையும் குறித்து தத்துவத் தளத்தில் விவாதிக்கிறார் பேராசிரியர் முர்ஸ்பன் ஜல். இவர் புனேவின் இந்திய கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பொருளாதார மற்றும் அரசியல் வாராந்தரி - ஈ.பி.டபிள்யூ இதழில் - … ஆசியபாணி உற்பத்தி முறை, சாதி, இந்திய கம்யூனிசம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக
பிஜேபி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் அவர்கள் கடந்த தேர்தலில் திமுகவை நம்பும்படி கட்டாயப் படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு வேறு எந்த மாற்றுமே இருக்கவில்லை. 'அதிமுக பிஜேபியின் பினாமியாக மாறிவிட்டது. அதனால் முஸ்லிம்கள் கண்டிப்பாக திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாட்டில் அதிமுக மூலம் பிஜேபி அதிகாரத்துக்கு வந்துவிடும்' என பல முற்போக்கு இயக்கங்களும் தீவிரமாகப் பரப்புரை செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்கே பெரும்பாலும் விழும்படி செய்தன. முஸ்லிம்களின் தயவில் திமுகவும் வெற்றி … முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெண் என்றால் அவ்வளவு இழிவா?
அண்மையில் “பெண் ஏன் அடிமையானாள்?” எனும் பெரியாரின் நூலை ஒரு பள்ளி மாணவிகளுக்கு விளம்ப முற்படுகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அதை தடுத்தன என்றொரு செய்தியை பார்த்திருப்போம். ஆர்.எஸ்.எஸ் போன்ற படு பிற்போக்கான அதிகாரத்தை கையில் கொண்டிருக்கும் அமைப்புகள் அப்படித்தான் செயல்படும் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் பெரியாரிய அமைப்புகள் இதில் செய்த எதிர்வினைகள் ஏன் மொன்னையாக இருக்கின்றன? அண்மையில் கோவை பொன்தாரணியின் ‘தூண்டப்பட்ட தற்கொலை’ நிகழ்வில் கிட்டத்தட்ட எல்லோருமே கொதித்துப் போனோம். பெண்களை சமூகம் அணுகும் … பெண் என்றால் அவ்வளவு இழிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழ்நாட்டு me too தொடரட்டும்
சில ஆண்டுகளுக்கு முன் மீடூ எனும் ஒரு இயக்கம், பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு, பாலியல் தாக்குதல்களுக்கு ஆளக்கப்படுதை உலக அளவில் பெரும் விவாதமாக்கியது. அவைகளில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது மிகமிகக் குறைவு என்றாலும், அவ்வாறான பொறுக்கிகளை அம்பலப்படுத்துவதில், எச்சரிக்கை செய்வதில், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மீடூ பெரும் பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது. சற்றேறக்குறைய அதேபோன்ற ஓர் இயக்கம் தமிழ்நாடு அளவில் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. பத்மா சேசாத்திரி பள்ளியில் ராஜகோபால் எனும் ஆசிரியர் நடத்திய பாலியல் … தமிழ்நாட்டு me too தொடரட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
உங்கள் மகனிடம் சொல்லுங்கள்
நூல்களில் எனக்கு பிடிக்காத வகை என்றால் அது சுய முன்னேற்ற நூல்கள் எனும் தலைப்பில் வருபவை தாம். ஏனென்றால் அந்த வகை நூல்களைக் கையில் எடுக்கும் போதே நாம் ஏதோ ஒரு குறையுடன் இருக்கிறோம் எனும் உணர்வைத் தந்து விடுகிறது. மட்டுமல்லாமல், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சூழலின் தாக்கத்தினாலேயே உருவாகிறான் எனும் பொருள்முதவாத பேருண்மைக்கு எதிராக செல்வது தான் சுய முன்னேற்ற நூல்கள். இந்த நூலும் அந்த எல்லையைத் தொட்டு நிற்கும் நூல் தான். என்றாலும், ஒரு … உங்கள் மகனிடம் சொல்லுங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தடுப்பூசியை காட்டி கொள்ளையிடலாமா?
தடுப்பூசி குறித்து ஏதேனும் கேள்வி எழுப்பி விட்டால் போதும், உடனேயே அது அறிவியலுக்கு எதிரான பார்வை என்று ஒரேயடியாக முத்திரை குத்திவிடும் போக்கு தற்போது பரவலாக இருக்கிறது. இந்த தடுப்பூசிக்கு பிரச்சார முகவர்களாக செயல்படும் அலோபதி மருத்துவர்கள், தடுப்பூசியை சுற்றி நிகழும் எது குறித்தும் நாங்கள் அக்கரைப்படமாட்டோம் என்று வாய் மூடி இருப்பார்களானால் தடுப்பூசி குறித்து பிரச்சாரம் செய்யும் உரிமை மட்டும் அவர்களுக்கு எங்கிருந்து வரும்? தடுப்பூசிகளின் பின்னுள்ள அரசியலையையும், கொள்ளையையும் விளக்குகிறார் தோழர் கலையரசன். பாருங்கள் … தடுப்பூசியை காட்டி கொள்ளையிடலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.