ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் புள்ளிவிவரங்களையும் தொகுத்து உலகளாவிய பட்டினிக் குறியீடு உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். இதில் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பட்டினிக் குறியீடு 107 வது இடத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது மொத்தம் 121 நாடுகளின் பட்டினி, ஊட்டக் குறைப்பாடு தொடர்பானபுள்ளி விவரங்களைத் தொகுத்துப் பார்த்ததில் இந்தியாவின் இடம் 107. இந்தியாவுக்கு முன்னால் 106 நாடுகளும், இந்தியாவுக்குப் பின்னால் 14 நாடுகளும் இருக்கின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாள் உள்ளிட்ட பல … பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகுப்பு: முதலாளித்துவம்
மின்சார தூக்குக் கயிறு
அண்மையில் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தது. இதற்கு மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர், ஒன்றிய அரசு மின் கட்டண உயர்வை அறிவிக்கச் சொல்லி எங்களை கட்டாயப்படுத்துகிறது என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் சொல்வது உண்மை தான் என்று கடந்த எட்டாம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மின்சாரத் திருத்தச் சட்டம் 2022 வெளிப்படையாக அறிவித்து விட்டது. தற்போது மின் பகிர்மானம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை தனியாருக்கு மாற்றுவதை … மின்சார தூக்குக் கயிறு-ஐ படிப்பதைத் தொடரவும்.
போராட்டக் களத்தில்
ஸ்டெர்லைட் முதல் தே.பா.சட்டம் வரை பகுதி 3 இந்தப் போராட்டத்தின் இலக்கே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மனு கொடுப்பது தான். இதை போராட்ட நாளுக்கு பல நாட்களுக்கு முன்பே போராட்டக் குழு வெளிப்படையாக அறிவித்து உள்ளது. ‘லட்சம் பேர் கூடுவோம், ஸ்டெர்லைட்டை மூடுவோம்’ என்பது போராட்டத்தின் முழக்கம். ஆனால் போரட்டத்தில் லட்சத்துக்கும் அதிகமானோர் கூடி இருந்தனர். துல்லியமான எண்ணிக்கை தெரியாமல் போனாலும் இவ்வளவு அதிகமானவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்பது முன்கூட்டியே … போராட்டக் களத்தில்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இனவெறியூட்டும் ஊடகங்கள்
செய்தி: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நூற்பாலையில், உள்ளூர் மக்களுக்கு பணி வழங்கியதை எதிர்த்து வடமாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .. .. .. நூற்பாலை நிர்வாகம் காணாமல் போன வடமாநில தொழிவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அங்கு பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தனியார் நூற்பாலை நிர்வாகம் உள்ளூர் தொழிலாளர்கள் சிலரைக் கொண்டு … இனவெறியூட்டும் ஊடகங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆண்கள் மறைந்து கொண்டிருக்கிறார்கள்
பல எச்சரிக்கை அறிகுறிகுறிகளும், தொடர்ந்து அதிகரித்து வரும் பெருமளவிலான ஆதாரங்களும் ஆண்களின் பாலின ஆரோக்கியத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதையே குறிக்கின்றன.கடந்த ஐம்பதாண்டுகளில், உலகம் முழுவதும் விந்து எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. அசாதாரண விந்தணு மாற்றங்களும், ஆண் மலட்டுத் தன்மையின் விகிதமும், பெருமளவு அதிகரித்திருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் இரு மடங்காகி இருக்கிறது. கேள்வி என்னவென்றால், "ஏன்"? நாற்பதாண்டுகளாக ஃப்ளோரிடாவில் ஒரு மாசடைந்த ஏரியில் வாழும் அலிகேட்டர் முதலை இனத்தை தொடர்ந்து கண்காணித்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள், … ஆண்கள் மறைந்து கொண்டிருக்கிறார்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இலங்கையும் அதன் பொருளாதாரமும்
கடந்த பல மாதங்களாக, ஆழமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றிய கட்டுரைகள் உள்ளூர் ஊடகங்களிலும் உலகளாவிய ஊடகங்களிலும் பிரதானமாக இடம்பெறுகின்றன. ஆயினும்கூட, இலங்கையினுடைய பெரும் வெளிநாட்டுக் கடன் சுமை, அந்நியச் செலாவணி இருப்புக்கள் குறைதல், எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டுள்ள சவால்கள் முதலான நெருக்கடியின் அறிகுறிகள் பற்றி பெரும்பாலான கட்டுரைகள் பேசுகின்றன. எவ்வாறாயினும், இலங்கை அரசியல் பொருளாதாரத்தின் நீண்டகால அம்சங்களும், அவற்றுக்கு இப்போதைய நெருக்கடியுடன் உள்ள உறவுகளும் பற்றிய கேள்விகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடந்த கால … இலங்கையும் அதன் பொருளாதாரமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு
ஒரே நூலில் உலகப் புகழ் பெற முடியுமா? என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கு விடையாக ஜான் பெர்கின்ஸ்சை சொல்லலாம். ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்’ எனும் அவரின் முதல் நூல் உலகம் முழுவதும் அரசியல் நூல்களை வாசிக்கும் அனைவரையும் சென்றடைந்தது. அந்த நூலின் தொடர்ச்சியாக அவர் எழுதியது தான், அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு எனும் நூல். ‘பொருளாதார அடியாட்கள், ரகசிய உளவாளிகள் மற்றும் உலகளாவிய ஊழல் குறித்த உண்மைகள்’ என்று கொடுக்கப்பட்டிருக்கும் துணைத் … அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு-ஐ படிப்பதைத் தொடரவும்.