முன்குறிப்பு: திமுகவின் ஊதுகுழல் என்பது தொடங்கி இன்னும் பலவிதமாக பட்டம் வழங்கப்போகும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் வாதங்களை முறையான மறுப்பை வழங்கிய பின் உங்கள் பட்டங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீண்ட நாட்களாக பேசப்பட்டுவந்த சேதி இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதயநிதி அமைச்சராக்கப்பட்டார். எதிர்பார்த்தது போலவே விமர்சனங்களும் தூள் பறந்து கொண்டிருக்கின்றன. அதைப் போலவே முட்டுக் கொடுத்தல்களும். இந்த வழமைச் சகதிகளுக்கு அப்பாற்பட்டு வாரிசு அரசியல் என்பதைப் பார்க்கலாம். முதலில், வாரிசு அரசியல் என்ற … வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகுப்பு: கட்டுரை
மோடி பேச்சின் நஞ்சு
உலகின் எந்த ஒரு தலைவருக்குமே கிடைக்காத சிறப்பு பிரதமராக இருக்கும் மோடிக்கு உண்டு. மோடியின் பொய்கள் என்று அவர் கூறிய பொய்களை மட்டுமே தொகுத்து நூலாக கொண்டு வந்திருக்கிறார்கள். உலகின் எந்த தலைவருக்கு இது போன்ற சிறப்பு கிடைத்திருக்கிறது? மோடியின் பேச்சில் நஞ்சு கலந்திருக்கிறதா? அல்லது மோடியின் பேச்சே நஞ்சு தானா? இதை பட்டிமன்ற தலைப்பாக வைக்கலாம். அந்த அளவுக்கு அவர் பேச்சு நஞ்சூறிப் போய் இருக்கும். எடுத்துக் காட்டாக குஜராத் முதல்வராக இருந்த போது அவர் … மோடி பேச்சின் நஞ்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பாஜகவின் அதிகார போதை சட்டங்கள்
எதிர்வரும் அக்டோபர் 30ம் தேதியுடன் செய்தி தொடர்பு சட்ட வரைவின் மீது உங்கள் கருத்தைக் கூறும் நாள் முடிவடைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது அப்படி ஒரு சட்ட வரைவு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்றாவது தெரியுமா? இந்தியாவில் ஊடகங்கள் என்று சொன்னாலே, அது எந்த வித நெறிகளும் இல்லாத, ஒழிவு மறைவின்றி பார்ப்பன மேலாதிக்க ஆதரவு கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். பார்ப்பன மேலாதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் க்காக பாடுபடுவதில் சளைக்காதவை என்பதும் அனைவருக்கும் தெரியும். … பாஜகவின் அதிகார போதை சட்டங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஃபீலிங்கு
சிறிது காலத்துக்கு முன்பு நானும் கோவையைச் சேர்ந்த ஒரு தோழரும் இணைந்து அதிகளவாக பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடுவது போன்ற தலைப்புசார்ந்த காணொளிகளை எடுத்து வெளியிடலாம் என்று திட்டமிட்டோம். அதற்கு சில வரையறைகளையும் ஏற்படுத்திக் கொண்டோம். அழகியல், திரைமொழி, காட்சிப்பாட்டை என எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. கம்யூனிசம் தான் கருவாக இருக்க வேண்டும், ஆனால் கம்யூனிச கலைச் சொற்கள் எதையும் பயன்படுத்தி விடக் கூடாது. எளிமையாக மக்கள் வாழ்வில் இருக்கும் கேள்விகளை எடுத்துக் கொண்டு, … ஃபீலிங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.
நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா 2
‘தி வயர்’ இணைய இதழுக்காக கரண் தாப்பர், தமிழ்நாட்டு நிதியமைச்சர் ப.தியாகராஜன் அவர்களுடன் எடுத்த நேர்காணலின் தமிழ்ப்படுத்தப்பட்ட இரண்டாவது பகுதி. முதல் பகுதியைப் படிக்க கரண் தாப்பர்: நீங்கள் ஒரு மிக முக்கியமான கருத்தை முன்வைக்கிறீர்கள். நமது அரசியலமைப்பு கூட்டாட்சி அதிகாரப் பகிர்வுக்கு உறுதியளிக்கிறது என்ற உண்மை இருந்தபோதிலும், தற்போது மாநிலங்கள் விரும்புது போன்ற உண்மையான அதிகாரப் பகிர்வு என்பது மிகக் குறைவாகவே உள்ளது. நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோதும், இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கும்போதும் … நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா
தி வயர் இணைய இதழுக்காக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை கரண் தாப்பர் எடுத்த நேர்காணலின் தமிழ் வடிவம்.
தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்
1947 ஆகஸ்ட் 15ல் கிடைத்தது விடுதலை அல்ல, அதுவொரு ஆட்சி மாற்றமே என்று கம்யூனிஸ்டுகள் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறார்கள். அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய அனைத்திலுமே ஒரு சிறு கூட்டத்துக்கு மட்டுமே விடுதலை கிடைத்துள்ளது, ஏனைய எவருக்கும் இல்லை. இது தான் கடந்த 75 ஆண்டு கால வரலாறு. ஆனால் இந்த நாளின் மீது மிகைப்படுத்தப்பட்ட புனிதத்தை ஏற்றி வைத்திருப்பதால் அனைவரையும் உள்ளடக்க முடிகிறது. அதில் ஒன்று தான் தேசியக் கொடி. அது நாட்டைக் குறிக்கும் கொடி … தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மின்சார தூக்குக் கயிறு
அண்மையில் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தது. இதற்கு மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர், ஒன்றிய அரசு மின் கட்டண உயர்வை அறிவிக்கச் சொல்லி எங்களை கட்டாயப்படுத்துகிறது என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் சொல்வது உண்மை தான் என்று கடந்த எட்டாம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மின்சாரத் திருத்தச் சட்டம் 2022 வெளிப்படையாக அறிவித்து விட்டது. தற்போது மின் பகிர்மானம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை தனியாருக்கு மாற்றுவதை … மின்சார தூக்குக் கயிறு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள்
மார்க்சிய பேராசான் எங்கெல்ஸின் 127 வது நினைவு நாள் இன்று. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் முந்தைய தத்துவஞானிகள் இந்த உலகைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்த தருணத்தில், இவர்கள் இந்த உலகை மாற்றுவதற்கான தத்துவத்தைப் படைத்தனர். மார்க்சின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மார்க்சியம் என்பது மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரண்டு ஆளுமைகளின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்சியம் எனும் சமூக ஆய்வுமுறையை உருவாக்குவதிலும், அதனை சமகாலத்திய முதலாளித்துவ சமூகத்தின் மீது பிரயோகித்து பாட்டாளி வர்க்கத்துக்கான சித்தாந்தத்தை படைப்பதிலும் இருவரின் … பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்
எங்கெல்ஸ் எழுதிய “லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற நூலை நான் பல முறைப் படித்துள்ளேன். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் 25 தடவைக்கு மேல் படித்திருக்கிறேன். சோவியத் நாட்டில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்த போது இந்த நூல் 50 பைசாவுக்கு விற்றனர். இந்த நூலை நான் 100க்கு மேலான படிகளை வாங்கி பலருக்கு இலவசமாக கொடுத்துள்ளேன். இந்த நூலோடு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, டூரிங்குக்கு மறுப்பு ஆகிய மூன்று நூல்களை எனது … லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்-ஐ படிப்பதைத் தொடரவும்.