வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்

முன்குறிப்பு: திமுகவின் ஊதுகுழல் என்பது தொடங்கி இன்னும் பலவிதமாக பட்டம் வழங்கப்போகும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் வாதங்களை முறையான மறுப்பை வழங்கிய பின் உங்கள் பட்டங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீண்ட நாட்களாக பேசப்பட்டுவந்த சேதி இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதயநிதி அமைச்சராக்கப்பட்டார். எதிர்பார்த்தது போலவே விமர்சனங்களும் தூள் பறந்து கொண்டிருக்கின்றன. அதைப் போலவே முட்டுக் கொடுத்தல்களும். இந்த வழமைச் சகதிகளுக்கு அப்பாற்பட்டு வாரிசு அரசியல் என்பதைப் பார்க்கலாம். முதலில், வாரிசு அரசியல் என்ற … வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாஜகவின் அதிகார போதை சட்டங்கள்

எதிர்வரும் அக்டோபர் 30ம் தேதியுடன் செய்தி தொடர்பு சட்ட வரைவின் மீது உங்கள் கருத்தைக் கூறும் நாள் முடிவடைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது அப்படி ஒரு சட்ட வரைவு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்றாவது தெரியுமா? இந்தியாவில் ஊடகங்கள் என்று சொன்னாலே, அது எந்த வித நெறிகளும் இல்லாத, ஒழிவு மறைவின்றி பார்ப்பன மேலாதிக்க ஆதரவு கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். பார்ப்பன மேலாதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் க்காக பாடுபடுவதில் சளைக்காதவை என்பதும் அனைவருக்கும் தெரியும். … பாஜகவின் அதிகார போதை சட்டங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாகிஸ்தானில் நடந்தது என்ன?

நிலைகுலைக்கப்படும் தெற்காசியா! பகுதி 2 உக்ரைன் போரை அடுத்து ரஷ்யாவின் மீது ஏவப்பட்ட பொருளாதாரத்தடை எனும் நிதிய - அணு ஆயுத ஏவுகணை ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்க என எல்லா கண்டத்தினரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் கோதுமை, எரிபொருள், உரங்கள், உலோகங்கள் உலக வர்த்தகத்தில் இருந்து நீக்கப்பட்டால் அது உற்பத்தியை பாதித்து உணவுப்பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வைக் கொண்டுவரும் என்பதை நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த அமெரிக்காவின் மிகைடாலர் அச்சடிப்பால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு … பாகிஸ்தானில் நடந்தது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேனீர் விருந்தில் புறக்கணிப்பு சர்க்கரை

கடந்த சித்திரை முதல் தேதியன்று ஆளுனர் தமிழ்நாட்டு அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேனிர் விருந்து ஒன்றை அளித்தார். அந்தத் தேனீர் விருந்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கிடக்கையை வெளிப்படுத்தும் குறியீடாக அமைந்தது. பொதுவாக ஆளுனர் எனும் பதவியின் அதிகார வரம்பு என்ன? என்பது இங்கு எப்போதும் பேசு பொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆட்டுக்கு தாடி எதற்கு? எனும் கேள்வி மக்களை ஈர்த்த கேள்வியாக இங்கு உலவியதுண்டு. அண்மையில் மத்திய அரசா? ஒன்றிய அரசா? எது சரியான சொல் … தேனீர் விருந்தில் புறக்கணிப்பு சர்க்கரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

இளம் கம்யூனிஸ்ட் கழகம் – ஆய்வுப் பணி என்ற செயல்தந்திரம்

தமிழ்நாட்டு நிலைமை: தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 10 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சிக்குப் பிறகு, குறிப்பாக 2016 முதல் பா.ஜ.கவின் பினாமியாக அ.தி.மு.க ஆட்சி நடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க ஆட்சி அமைத்துள்ளது. இது அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் ஒரு விதமான ஆறுதலைத் தந்துள்ளது என்று கூறலாம். ஆனால், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அ.தி.மு.க கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. … இளம் கம்யூனிஸ்ட் கழகம் – ஆய்வுப் பணி என்ற செயல்தந்திரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாறும் எம்.ஜி.ஆர்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 பரப்புரைகள் முடிந்து விட்டன. நாளை வாக்குப் பதிவு. இந்த பரப்புரையில் சங்கிகளை ஒத்த அதிமுகவினரிடம் இருந்து எதிர்கொண்ட முதன்மையான ஒரு கேள்வி, “எங்களால் கருணாநிதியை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியும், உங்களால் எம்ஜிஆரை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியுமா?” என்பது. உண்மை தான். நடைமுறையில் அப்படி ஒரு தடை இருக்கத்தான் செய்கிறது. எளிய மக்கள் மத்தியில் எம்ஜியாருக்கு இருக்கும் செல்வாக்கு அப்படி. கலைஞர் ஆட்சியையும் எம்ஜிஆர் ஆட்சியையும், நிர்வாக … நாறும் எம்.ஜி.ஆர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நெல்லையில் சமூக நீதி மாநாடு

அன்புமிக்க நண்பர்களே வணக்கம். தந்தை பெரியார் 1920 நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 26 வது மாநாட்டில் முதன்முதலாக சமூகநீதிக்கான குரலை எழுப்பினார். அதிலிருந்து அவரது சமூக நீதிக்கான பயணம் தொடங்குகிறது. 1920-2020 நூற்றாண்டு கால சமூகநீதி வரலாற்றை இன்றைய இளைஞர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் 2020 டிசம்பர் 27 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை முழுநாள் சமூகநீதி மாநாட்டை நெல்லையில் நடத்துகிறோம். கொரோனா பிரச்சனையால் முன்பதிவு செய்த பிரதிநிதிகளை மட்டும் வைத்து … நெல்லையில் சமூக நீதி மாநாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

லட்சுமி விலாஸ் அரிசியும், டிபிஎஸ் உமியும்

லட்சுமி விலாஸ் வங்கியின் சிக்கல் தனிப்பட்ட ஒன்றல்ல, எல்லா வங்கிகளும் வாராக்கடன் பிரச்சையில் சிக்கித் தவிப்பது போலவே லட்சுமி விலாஸ் வங்கியும் வாராக்கடன் சிக்கலில் சிக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் வாராக்கடனின் எல்லை உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்த வாரக்கடன்களுக்கும் சேமவங்கியின் கொள்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூற முடியுமா? எனவே, இந்த விதயத்தில், லட்சுமி விலாஸ் வங்கி தனிப்பட்ட முறையில் செய்த தவறுகளை சேமவங்கி தலையிட்டு சரி செய்ய முயல்கிறது எனும் புரிதலே பிழையானது.

விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுப்போம்

அடாவடியாக, எந்த பாராளுமன்ற மரபுகளையும் மதிக்காமல், விவாதம் நடத்தாமல் நிறைவேற்றப்பட்ட, விவசயிகளுக்கு மட்டுமன்றி, மக்கள் அனைவருக்கும் எதிரான, வேளாண் சட்டங்களை நீக்கு எனும் கோரிக்கையோடு பத்து நாட்களைக் கடந்தும் தில்லி முற்றுகைப் போராட்டம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சற்றேறக் குறைய 500க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் இப் போராட்டத்தில் ஒருங்கிணைந்து இருக்கின்றன, ஒருங்கிணைத்து வருகின்றன. போராட்டக் களத்திலிருந்து கிடைக்கும் செய்திகளெல்லாம் பெரும் உவகையை தருகின்றன. ஒரு லட்சத்துக்கு பக்கத்தில் உழவு வண்டிகள், இரண்டு மாதங்களுக்கு போதுமான உணவுப் … விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

CAA: முள்வேலி தடுப்பு கொட்டடிகள்

சட்டவிரோத குடியேறியவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பெங்களூருக்கு வெளியே 40 கி.மீ தூரத்தில் கட்டப்பட்ட கர்நாடக அரசாங்கத்தின் தடுப்பு முகாம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் விசா காலாவதியான ஒரு சூடான் நாட்டவர் இங்கு தடுத்து வைக்கப்பட்ட முதல் நபராகிவிட்டார். பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் நெலமங்கலாவுக்கு அருகிலுள்ள சோண்டேகோப்பா கிராமத்தில் அமைந்துள்ளது இந்த தடுப்பு முகாம். இது இந்த மாநிலத்தில் திறக்கப்பட்ட முதல் தடுப்பு முகாமாகும். இதன் கட்டுமானம் முடிவடைந்து ஒரு வருடம் கழித்து, இந்த அக்டோபர் … CAA: முள்வேலி தடுப்பு கொட்டடிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.