ஃபீலிங்கு

சிறிது காலத்துக்கு முன்பு நானும் கோவையைச் சேர்ந்த ஒரு தோழரும் இணைந்து அதிகளவாக பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடுவது போன்ற தலைப்புசார்ந்த காணொளிகளை எடுத்து வெளியிடலாம் என்று திட்டமிட்டோம். அதற்கு சில வரையறைகளையும் ஏற்படுத்திக் கொண்டோம். அழகியல், திரைமொழி, காட்சிப்பாட்டை என எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. கம்யூனிசம் தான் கருவாக இருக்க வேண்டும், ஆனால் கம்யூனிச கலைச் சொற்கள் எதையும் பயன்படுத்தி விடக் கூடாது. எளிமையாக மக்கள் வாழ்வில் இருக்கும் கேள்விகளை எடுத்துக் கொண்டு, … ஃபீலிங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்

எங்கெல்ஸ் எழுதிய “லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” என்ற நூலை நான் பல முறைப் படித்துள்ளேன். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் 25 தடவைக்கு மேல் படித்திருக்கிறேன். சோவியத் நாட்டில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வந்த போது இந்த நூல் 50 பைசாவுக்கு விற்றனர். இந்த நூலை நான் 100க்கு மேலான படிகளை வாங்கி பலருக்கு இலவசமாக கொடுத்துள்ளேன். இந்த நூலோடு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, டூரிங்குக்கு மறுப்பு ஆகிய மூன்று நூல்களை எனது … லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்

அண்மையில் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை ஒரு நிகழ்வில் பேசும் போது, ‘காவியும் ஆன்மீகமும் கலந்தது தான் இந்தியா’ என்று கூறியிருந்தார். ஓரிரு மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டு ஆளுனர் ரவி, ‘சனாதனத்தினால் தான் இந்தியா உருவானது’ என்று கூறியிருந்தார். இப்படி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தங்களுக்கு தேவையான பொய்களையும் வரலாற்றுத் திரிவுகளையும் கூச்சமே இல்லாமல் கூவித் திரிவது பார்ப்பனர்களின் வேலைத் திட்டம். அதேநேரம், இதற்கு எதிராக வரலாற்றுத் தளத்தில் யாரேனும் கேள்வி எழுப்பினால் பக்தி இயக்க காலத்தை புறந்தள்ள … இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்

இன்று ரஷ்யப் புரட்சி நாள். தோழர் லெனின் தலைமையில் பரந்துபட்ட நாட்டில், பல்வேறு கட்சி அமைப்புகளை ஒன்றுபடுத்தி, எஃகுறுதியான கட்சியைக் கட்டி, பாட்டாளி மக்களின் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். நூறாண்டுகளைக் கடந்த பின்பும், நினைக்குந்தோறும் அந்தப் பெருமிதம் நம் நெஞ்சை நிறைத்து வழிகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் யாராலும் உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த அந்த நாளை, உழைக்கும் மக்களின் உவகை ஊற்றெடுத்த அந்த நாளை மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அதேநேரம் இந்த … நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜார்ஜ் பிளாய்ட்: கற்பித்தது என்ன?

கடந்த வாரம் மே 25ம் தேதி, அமெரிக்காவின் மின்னாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் எனும் கருப்பினத்தவர் அமெரிக்க காவல் துறையினரால் ஐயத்தின் பேரால் கைது செய்யும் போது மிருகத் தனமாக முழங்காலால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்படுகிறார். அவர் கடைசியாக பேசிய எனக்கு மூச்சு முட்டுகிறது எனும் வாக்கியத்தை முழக்கமாகக் கொண்டு அமெரிக்காவே போராட்டத்தால் பற்றி எரிகிறது. உலகிலேயே பாதுகாப்பு மிகுந்ததாக கருதப்படுகிற வெள்ளை மாளிகைக்குள்ளேயே போராட்டக்காரர்கள் நுழைந்திருக்கிறார்கள். உலகிலேயே மிகவும் ஆற்றலும் அதிகாரமும் கொண்டவராக கருதப்படும் … ஜார்ஜ் பிளாய்ட்: கற்பித்தது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியமும் இலக்கியமும்

வறுமையின் தத்துவம் என்ற தலைப்பில் ஒரு நூலை புருதோன் எழுதினார். மார்க்ஸ் இதை மறுத்து விளக்கி எழுதிய நூலுக்கு வைத்த தலைப்பு தத்துவத்தின் வறுமை. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுதிய போது ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டுகிறது, கம்யூனிசம் எனும் பூதம் என்று எழுதினார்கள். இப்படி மார்க்சிய எழுத்துகளில் ஊடாடிக் கிடக்கும் அழகியலை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு படைப்பின் இலக்கிய மதிப்பு எங்கிருந்து வருகிறது? சொற்கோர்ப்பால் உண்டாகும் அழகியலில் இருந்து மட்டுமா? … மார்க்சியமும் இலக்கியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்

கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும் அடக்கம். ஆனால் இன்று உலகின் எந்த மூலையிலும் மேதினப் பேரணி நடைபெறப் போவதில்லை. கொரோனா அச்சத்துக்கு கம்யூனிஸ்டுகள் … கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

உலகின் கொரோனாக்களுக்கு ஒரே தடுப்பூசி

இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1870ல் இதே நாளில் (ஏப்ரல் 22) ரஷ்யாவில் ஓடும் வால்கா ஆற்றின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யானவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு விளாடிமிர் இலீச் உல்யானவ் என்று பெயரிட்டனர் பெற்றோர். பின்னர் அந்தக் குழந்தை வளர்ந்து தனக்குத் தானே ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டது. உலகத் தொழிலாளர்களின் ஒப்புயர்வற்ற தலைவனும், மார்க்சிய கோட்பாடுகளை செழுமைப்படுத்தியதோடு மட்டுமன்றி, சோவியத் புரட்சி … உலகின் கொரோனாக்களுக்கு ஒரே தடுப்பூசி-ஐ படிப்பதைத் தொடரவும்.