தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்

1947 ஆகஸ்ட் 15ல் கிடைத்தது விடுதலை அல்ல, அதுவொரு ஆட்சி மாற்றமே என்று கம்யூனிஸ்டுகள் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறார்கள். அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய அனைத்திலுமே ஒரு சிறு கூட்டத்துக்கு மட்டுமே விடுதலை கிடைத்துள்ளது, ஏனைய எவருக்கும் இல்லை. இது தான் கடந்த 75 ஆண்டு கால வரலாறு. ஆனால் இந்த நாளின் மீது மிகைப்படுத்தப்பட்ட புனிதத்தை ஏற்றி வைத்திருப்பதால் அனைவரையும் உள்ளடக்க முடிகிறது. அதில் ஒன்று தான் தேசியக் கொடி. அது நாட்டைக் குறிக்கும் கொடி … தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள்

மார்க்சிய பேராசான் எங்கெல்ஸின் 127 வது நினைவு நாள் இன்று. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவருக்கும் முந்தைய தத்துவஞானிகள் இந்த உலகைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்த தருணத்தில், இவர்கள் இந்த உலகை மாற்றுவதற்கான தத்துவத்தைப் படைத்தனர். மார்க்சின் பெயரைத் தாங்கியிருந்தாலும் மார்க்சியம் என்பது மார்க்ஸ், எங்கெல்ஸ் என்ற இரண்டு ஆளுமைகளின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்சியம் எனும் சமூக ஆய்வுமுறையை உருவாக்குவதிலும், அதனை சமகாலத்திய முதலாளித்துவ சமூகத்தின் மீது பிரயோகித்து பாட்டாளி வர்க்கத்துக்கான சித்தாந்தத்தை படைப்பதிலும் இருவரின் … பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிபிஐ எனும் ஸ்டெர்லைட்

பத்திரிக்கை செய்தி: மே.19, 2022: மோடி அரசின் நண்பர் அனில் அகர்வாலின் ஏவல்படையாக செயல்பட்ட காவல்துறையினரைக் காப்பாற்றும் சிபிஐ விசாரணையை கண்டிக்கிறோம்! நிராகரிக்கிறோம்! நீதி வேண்டும்! உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறு விசாரணை வேண்டும்! **************************************************** மே 22, 2018 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின் தனது மூன்றாவது இறுதி குற்றப் பத்திரிகையை மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்திருக்கிறது. ஸ்டெர்லைட் நிர்வாகம், காவல்துறை வருவாய்த்துறை … சிபிஐ எனும் ஸ்டெர்லைட்-ஐ படிப்பதைத் தொடரவும்.

உலகப் பேராசான்

மார்க்ஸைப் படி மார்க்ஸே படி

மே நாள் வாழ்த்து கூற அஞ்சுகிறேன்

‘மே தின வாழ்த்துகள் தோழர்’ ஒரு சடங்கைப் போல் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது இந்தச் சொற்றொடர். இது கொண்டாட்ட நாளல்ல. அன்னையர் தினம், ஒன்று விட்ட சித்தப்பா தினம் போல இது ஒரு ‘தினம்’ அல்ல. இனிப்பு, புது சட்டை எடுத்து பரிமாற்றிக் கொள்ளும் முதலாளித்துவ பண்டிகை அல்ல. மாறாக, எட்டு மணி நேர உழைப்பு எனும் மெய்யறிவை நம்மோடு, நாம் வாழும் சூழலோடு, நாம் ஆளப்படும் சூழலோடு பொருத்திப் பார்த்து, நம்மையும், உலகையும் மாற்றியமைக்கும் வழியில் … மே நாள் வாழ்த்து கூற அஞ்சுகிறேன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தை தான் தமிழ்ப் புத்தாண்டு

தமிழர்களின் புத்தாண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்ற ஒரு வழக்காடல் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. அது தொடர்பான ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைகின்றது. முதலில் தமிழர்களிடம்  ஆண்டு  என்றொரு  காலக்கணிப்பு முறை இருந்ததா?  எனப் பார்ப்போம். ‘யாண்டு’ என்ற பழந்தமிழ்ச் சொல்லே மருவி ஆண்டு என வழங்கலாயிற்று. யாண்டு என்ற சொல்லானது தொல்காப்பியத்தின் முதற்பொருளான நிலம், பொழுது ஆகிய இரண்டையும் குறிக்கும். ‘யாண்டு’ என்ற சொல் இடம்பெற்ற சில பாடல்களைப் பார்ப்போம். “வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல.” (குறள் 4) … தை தான் தமிழ்ப் புத்தாண்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.

நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்

இன்று ரஷ்யப் புரட்சி நாள். தோழர் லெனின் தலைமையில் பரந்துபட்ட நாட்டில், பல்வேறு கட்சி அமைப்புகளை ஒன்றுபடுத்தி, எஃகுறுதியான கட்சியைக் கட்டி, பாட்டாளி மக்களின் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். நூறாண்டுகளைக் கடந்த பின்பும், நினைக்குந்தோறும் அந்தப் பெருமிதம் நம் நெஞ்சை நிறைத்து வழிகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் யாராலும் உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த அந்த நாளை, உழைக்கும் மக்களின் உவகை ஊற்றெடுத்த அந்த நாளை மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அதேநேரம் இந்த … நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்ஸின்றி அமையாது உலகு

தெளிவான விஞ்ஞானபூர்வமான பொருள் புரிதலின்றிச் சமூக நீதி குறித்து மொந்தையாகப் பொதுப்பட பேசுவது என்பது இன்றைக்கு ஒரு நாகரீகமாகிவிட்டது.  சமூகச் சமத்தன்மை மற்றும் சமூக நீதி என்பது எப்போதும் மனிதர்களின் பெருமுயற்சியின் விளைவாக இருக்கிறது. தாங்கள் படும் துன்பங்களுக்குத் தீர்வு காண மனிதர்கள் உலகியல் வழியில் போராடவும் வானத்துத் தேவர்களிடம் வேண்டவும் செய்கிறார்கள். சமூக வரலாறு நெடுக அநீதிகளும், சமத்துவமின்மையும் பெரிதும் காணப்படுகின்றன. இன்று முரண்பாடுகள் முற்றி நிலைமையை மோசமாக்க, குறிப்பாக நமது தேசத்தில், சமூக நீதி … மார்க்ஸின்றி அமையாது உலகு-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவில் மே நாள்

கடந்த ஆண்டின் மே நாளில் வெளியான கட்டுரையின் மீள்பதிவே இது. சூழலும் தேவையும் மாறிவிடவில்லை என்பதால் .. கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும் … கொரோனாவில் மே நாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியார் 142

கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 76 வருடங்களுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது. இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய‌ தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது.. "போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்" "கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்" "உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்" … பெரியார் 142-ஐ படிப்பதைத் தொடரவும்.