நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா 2

‘தி வயர்’ இணைய இதழுக்காக கரண் தாப்பர், தமிழ்நாட்டு நிதியமைச்சர் ப.தியாகராஜன் அவர்களுடன் எடுத்த நேர்காணலின் தமிழ்ப்படுத்தப்பட்ட இரண்டாவது பகுதி. முதல் பகுதியைப் படிக்க கரண் தாப்பர்: நீங்கள் ஒரு மிக முக்கியமான கருத்தை முன்வைக்கிறீர்கள். நமது அரசியலமைப்பு கூட்டாட்சி அதிகாரப் பகிர்வுக்கு உறுதியளிக்கிறது என்ற உண்மை இருந்தபோதிலும், தற்போது மாநிலங்கள் விரும்புது போன்ற  உண்மையான அதிகாரப் பகிர்வு  என்பது மிகக் குறைவாகவே உள்ளது. நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோதும், இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கும்போதும் … நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா

தி வயர் இணைய இதழுக்காக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை கரண் தாப்பர் எடுத்த நேர்காணலின் தமிழ் வடிவம்.

ஆசியபாணி உற்பத்தி முறை, சாதி, இந்திய கம்யூனிசம்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி நூறாண்டுகள் ஆகின்ற போதும் ஏன் புரட்சியை நோக்கி முகம் திருப்பக் கூட முடியவில்லை? என்றொரு கேள்வியை கம்யூனிஸ்டுகளிடம் எழுப்பினால் .. .. .. கிடைக்கும் பதிலை இரண்டாக பிரிக்கலாம். ஆசிய பாணி உற்பத்தி முறைசாதி முறை குறித்த போதாமை. இந்த இரண்டையும் குறித்து தத்துவத் தளத்தில் விவாதிக்கிறார் பேராசிரியர் முர்ஸ்பன் ஜல். இவர் புனேவின் இந்திய கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பொருளாதார மற்றும் அரசியல் வாராந்தரி - ஈ.பி.டபிள்யூ இதழில் - … ஆசியபாணி உற்பத்தி முறை, சாதி, இந்திய கம்யூனிசம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்

இரண்டாவது முறையாக மோடி ஒன்றிய அரசாங்கத்தின் தலைமை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எல்லாம் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. காஷ்மீரின் 370ம் பிரிவு நீக்கம், குடியுரிமை சட்டத் திருத்தம், புதிய கல்விக் கொள்கை, புதிய வேளாண் கொள்கை, புதிய தொழிலாளர் கொள்கை, அயோத்தி கோவில் உள்ளிட்டு பல திருத்தங்களும், கொள்கை முடிவுகளும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரதத்தை நோக்கியும், கார்ப்பரேட்டுகளின் கேள்வி கணக்கற்ற சுரண்டலை நோக்கியும் நாலுகால் பாய்ச்சலில் விரைந்து கொண்டிருக்கிறது. இந்த விரைதலுக்கான அடிப்படை 2019 தேர்தலில் … 2019 தேர்தல்: தொடரும் ஐயங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மோடி சொன்னால் உண்மை இருக்குமா?

ஜூலை 27 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, "கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது" என்று கூறினார், இது தனக்கு வசதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தரவு அடிப்படையில் ஒப்பீடுகளைச் செய்யும் அவரது போக்கை பிரதிபலிக்கிறது. தொடர்ச்சியான ஊரடங்குகள் COVID-19 பாதிப்பு வரைபடத்தை தட்டையாக்குவதற்கு பதிலாக வீங்கச் செய்திருக்கிறது. அரசாங்கத்தில் உள்ள மற்றவர்களைப் போலவே (தொற்றுநோயின் வளர்ச்சியைக் குறைப்பதில் இந்தியாவின் ஊரடங்கின் தாக்கம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய நிதி ஆயோக் உறுப்பினர் … மோடி சொன்னால் உண்மை இருக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாய்களா நாங்கள்? குமுறும் தொழிலாளர்கள், பேரழிவில் இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவுக்கு வெளியே உள்ள பரபாங்கி நெடுஞ்சாலையில் ஒரு வசந்த காலையில் இரண்டு ஆண்கள் ஒரு மரத்தின் கீழ் தூங்குகிறார்கள். அவற்றில் ஒருவன் வண்ணமயமான கோடுகளுடன் உள்ள கருப்பு விரிப்பில் படுத்திருக்கிறான்; மற்றொறுவன் பைகள் இணைக்கப்பட்ட மிதிவண்டிகளுக்கு அருகில் தூக்கிப் போடப்பட்ட வெள்ளை சாக்கில் படுத்திருக்கிறான். இதேபோன்ற ஏற்பாடுகளில் மேலும் மூன்று ஆண்கள் சிறிது தூரம் தொலைவில் தூங்குகிறார்கள். அவர்களின் உடைகளும், தலையும் அழுக்கடைந்துள்ளது, பயணத்தின் அழுக்கு மற்றும் வியர்வை அவர்களின் … நாய்களா நாங்கள்? குமுறும் தொழிலாளர்கள், பேரழிவில் இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.

நுண்ணுயிர் தேற்றம் – ஆந்தொய்னே பீச்சாம்ப்

இன்றைய போதில் கொரோனா அச்சம் மக்களிடம் பரப்பப்பட்டு, அதன் உச்சத்தை எட்டி நிற்கிறது. எவ்வாறெனில், உலக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அச்சப்பட்டு மாதக்கணக்கில் தங்களை வீடுகளுக்குள்ளேயே அடைத்துக் கொள்ள எண்ணும் அளவை எட்டியிருக்கிறது. இந்த பயம் தேவையா? தேவயில்லையா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உலகின் மக்கள் அந்த பயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனும் போது, அதற்கு எதிராக பேசுவது, அதற்கான உண்மையை உணர்வதிலிருந்து விலகும் இடத்துக்கு மக்களை கொண்டு சென்று விடக் கூடாது. … நுண்ணுயிர் தேற்றம் – ஆந்தொய்னே பீச்சாம்ப்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வெள்ளையர்களிடமிருந்து கொள்ளையர்களுக்கு

  எகானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி எனும் ஆங்கில இதழ் தன்னுடைய இணைய தளத்தில் தற்போது தமிழிலும் கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தருகிறது. மார்க்சிய சொல்லாடல்களை தாங்கி ஏராளமான கட்டுரைகளைத் தந்திருக்கிறது என்றாலும், இது மார்க்சிய இதழல்ல. இந்தக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ஆய்வுரையும், அதன் புள்ளி விவரங்களும் முதலாளித்துவ விழுமியங்களை தாங்கிக் கொண்டிருப்பவை தான்.  அந்த ஆய்வுரையை எழுதியவர்களுக்கும், அதை கட்டுரையாக எழுதிய இ.பி.டபிள்யு இதழுக்கும் ஏதேனும் உள்நோக்கம் இருந்திருக்கக் கூடும். இவை எல்லாவற்றையும் மீறி இந்தக் … வெள்ளையர்களிடமிருந்து கொள்ளையர்களுக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஓராண்டுகளுக்குப் பிறகும் பதிலில்லாமல் தொடர்கிறது தாத்ரி

பொதுவாக நான் ஆங்கிலக் கட்டுரைகளை வாசிக்க முயல்வதில்லை. ஏனென்றால் என் ஆங்கிலப் புலமையின் உயரம் அவ்வளவு தான். தேவை ஏற்படும் போது மொழிபெயர்ப்புகளை நாடுவதும், கிடைக்காவிட்டால் மொழிபெயர்ப்பு கருவிகளை நாடுவதும் தான் என் வழக்கம். மொழிபெயர்ப்புக் கருவிகள் வழியாக புரிந்து கொள்ள முயல்வது என்பது இடியாப்ப இழைகளை நேர்படுத்தும் திறமையை ஒத்தது. அண்மையில் ஒரு மொழி பெயர்ப்புக் கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். படித்து முடிக்க முடியாத அளவுக்கு எரிச்சல் வந்தது. அந்த அளவுக்கு மனம்போனபடி, கட்டுரையின் கருத்தை … ஓராண்டுகளுக்குப் பிறகும் பதிலில்லாமல் தொடர்கிறது தாத்ரி-ஐ படிப்பதைத் தொடரவும்.