விடுதலைப் புலிகளும் கம்யூனிஸ்டுகளும்

விடுதலைப் புலிகளையும் கம்யூனிஸ்டுகளையும் ஒப்பிட்டு பலரும், பல போதுகளில், பல்வேறு விதங்களில் பேசி வந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பிறகும் கூட இந்த ஒப்பீடுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்று இலங்கையின் நிலை வேறு. இன்று இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் மக்களின் எழுச்சிக்கு பலரும் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் கொன்றளித்ததன் வினை என்று பொழிப்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் வழியே விடுதலைப் புலிகள் குறித்த பெருமிதம் மீண்டும் உருவாக்கப்படுகிறது. இந்த சூழலில் ஓரிரு ஆண்டுகள் பழமையான … விடுதலைப் புலிகளும் கம்யூனிஸ்டுகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரும் அம்பேத்கரும் இன்று

ஆ. ராசாவை ஒரு அரசியல்வாதியாக மட்டுமே தெரிந்த பலர் இருக்கிறார்கள். துணிச்சலாக தன் வாதங்களை எடுத்துவைக்கக் கூடியவராக 2ஜி வழக்கிலும், அண்மையில் ஜெயலலிதா குறித்த பிரச்சனையிலும் ஊடாக சிலர் தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இவைகளுக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு சிறந்த திராவிடவியல் பேச்சாளர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இந்த சிறு நூலை படிப்பவர்கள் அதை தெரிந்து கொள்ளலாம். 2008 பிப்ரவரி 22ம் தேதியன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து … பெரியாரும் அம்பேத்கரும் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.

கற்க கசடற விற்க அதற்குத் தக

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கிடையாது, அனைவருக்கும் தேர்ச்சி என அரசு அறிவித்திருப்பதை தொடர்ந்து, எல்லோரும் தங்கள் உவகையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த கொரோனா அச்சத்திலும் தேர்வை நடத்தியே தீர்வது என்று அரசு கடைசி வரை முயன்றது. இதற்கு மேலும் இழுத்துப் பிடித்தால் இருக்கும் கொஞ்ச மதிப்பையும் இழக்க நேரிடலாம் என்பதால் வேறு வழியின்றியே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. இதற்குப் பின்னால் தனியார் கல்வி நிறுவனங்களின் வேட்டை எனும் காரணம் இருக்கிறது. மறுபக்கம், புதிய கல்விக் கொள்கை என்பதன் … கற்க கசடற விற்க அதற்குத் தக-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியமும் இலக்கியமும்

வறுமையின் தத்துவம் என்ற தலைப்பில் ஒரு நூலை புருதோன் எழுதினார். மார்க்ஸ் இதை மறுத்து விளக்கி எழுதிய நூலுக்கு வைத்த தலைப்பு தத்துவத்தின் வறுமை. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுதிய போது ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டுகிறது, கம்யூனிசம் எனும் பூதம் என்று எழுதினார்கள். இப்படி மார்க்சிய எழுத்துகளில் ஊடாடிக் கிடக்கும் அழகியலை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு படைப்பின் இலக்கிய மதிப்பு எங்கிருந்து வருகிறது? சொற்கோர்ப்பால் உண்டாகும் அழகியலில் இருந்து மட்டுமா? … மார்க்சியமும் இலக்கியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமிய வெறுப்பு எனும் இரண்டாம் கொரானா

இந்துத்துவ காவி பாசிஸ்ட்டுகளால் அப்பாவி இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போலியான செய்திகளும், தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்துத்துவ பாசிஸ்ட்டுகள் உருவாக்க முயலும் இஸ்லாமிய வெறுப்புணர்வு எவ்வாறு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்குகிறார் - உளவியல் ஆற்றுப்படுத்துனர், தோழர் வில்லவன் ராமதாஸ். Villavan Ramadoss பாருங்கள், பரப்புங்கள். https://www.youtube.com/watch?v=zB4dFfaeTXE

ஊரடங்கு: பரிதவிக்கும் மக்கள்

தொடரும் ஊரடங்கு, பரிதவிக்கும் மக்கள், அரசு கட்டமைப்பு செய்யத் தவறுவது என்ன? என்ற தலைப்பில் தோழர் வழக்குரைஞர் சுரேசு சக்தி முருகன், அவர்கள் மக்கள் அதிகாரம் சார்பில் முகநூல் வாயிலான இணையக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் கேட்பொலி வடிவம். கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் விசயத்தில் அரசு பல இடங்களில் கோட்டை விட்டிருப்பது பலருக்கும் புரிந்தே இருக்கிறது. ஆனால் குறிப்பாக என்ன செய்திருக்கலாம், என்ன செய்திருந்தால் மக்களின் பரிதவிப்பை போக்கி இருக்கலாம். அதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல … ஊரடங்கு: பரிதவிக்கும் மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவை விட கொடூரம்

பீலா ராஜேஷ். இது இடுகுறிப்பெயரா? காரணப் பெயரா? தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஊரடங்கின் பிறகு அது மட்டுப்பட்டிருக்கிறதா? என்பது இனிமேல் தான் தெரிய வேண்டும். இது குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தினமும் ஊடகங்களுக்கு அளித்து வருகிறார். முன்னர் ஊடகங்களுக்கு விவரம் அளிப்பதை அந்தத் துறையின் அமைச்சர் விஜய பாஸ்கர் தான் செய்து வந்தார். இவர் மாறி அவர் வந்ததும் தில்லி தப்லீக் மாநாடு குறி … கொரோனாவை விட கொடூரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

புத்தகங்களே துணை

இது 24.11.2017 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தகங்களே துணை எனும் தலைப்பில் ஆற்றிய சிறப்புரை. நூல்களை வாசிப்பது, நூல்களை நேசிப்பது, நூல்களை சுவாசிப்பது என்று படிப்படியாக நூல்களுக்குள் நுழைவதை ஒரு அழகியல் ஒழுங்கோடு புதிய வாசகனுக்கு எப்படி பரிமாறுவது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஆம் என்றால் இது நீங்கள் கேட்க வேண்டிய ஓர் உரை. இந்த உரையைக் கேட்கும் யாருக்கும் நாமும் நூல்களை வாசிக்க … புத்தகங்களே துணை-ஐ படிப்பதைத் தொடரவும்.

புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் – நெல்லை CCCE அரங்கக் கூட்டம்

நண்பர்களே! வணக்கம். இந்தியாவில் இப்போது இருக்கின்ற கல்விமுறை சரியானது தானா?…. இல்லை எனில் இந்த கல்விமுறை மாற்றப்பட வேண்டுமா?…. ஆம். அதைத் தானே மத்திய அரசு புதிய தேசியக் கல்வி கொள்கை – 2019 வரைவு அறிக்கையாக்கியிருக்கிறது! அல்ல. அல்ல என்றால்? புதிதாக வருவது இருப்பதை விட மோசமானது! இந்தியாவில் பெரும்பான்மை மக்களை முட்டாள்களாக்கும் மோசடித்திட்டம்! எப்படி? கள நிலவரங்களை ஆராயவில்லை.மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்கவில்லை.மாநிலங்களிடையே காணப்படும் மொழி, பண்பாடு, கலாச்சாரம், அறவியல், பொருளியல் சார்ந்த விசயங்களைக் கண்டு கொள்ளவில்லை.ஆர்.எஸ்.எஸ். … புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் – நெல்லை CCCE அரங்கக் கூட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.