மீண்டும் மீண்டும் ஆபத்து

காலக் கணக்கை கொரோனாவுக்கு முன் கொரோவுக்கு பின் என பிரிக்க வேண்டும் போலிருக்கிறது. ஒரு தொற்று நோயாக தொடங்கிய கொரோனா, நாட்டின் நிதி நெருக்கடி தொடங்கி எளிய மக்களின் அன்றாட வாழ்வில் தலையிட்டு மாற்றியமைத்தது வரை வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் தன்னுடைய பாதிப்பை நிகழ்த்தி இருக்கிறது. ஆனால் உலகையே மாற்றியமைத்த இந்த அனைத்து சுமைகளையும் கொரோனா கிருமியின் தலையில் ஏற்றி வைத்தால் அது குருவி தலையில் இமயமலையை ஏற்றி வைத்தது போலாகும். கொரோனாவின் பெயரால் இவை அனைத்தையும் … மீண்டும் மீண்டும் ஆபத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.

தடுப்பூசி அறிவாளிகளும், கட்டாய எதிர்ப்பு அறிவிலிகளும்

கட்டாயாமாக திணிக்கப்படும் தடுப்பூசி மருத்துவத்துக்கு எதிராக உலகமெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான ஓர் இயக்கமே இயங்கி வருகிறது. கட்டாயத் தடுப்பூசி எனும் நிலை, நேரடியாகவோ மறைமுகமாகவோ உலகின் எந்த நாட்டிலும் இல்லை. என்றாலும் கூட கட்டாயத் தடுப்பூசி என்று அவ்வப்போது அரசுகள் பூச்சாண்டி காட்டுவதும், மக்கள் அதற்கு எதிராக போராடுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. உலகமெங்கும் இருக்கும் இந்தப் போக்கு தற்போது இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் தொடங்கி இருக்கிறது. கொரோனாவுக்கு … தடுப்பூசி அறிவாளிகளும், கட்டாய எதிர்ப்பு அறிவிலிகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கட்டாயத் தடுப்பூசி: ஒரு விவாதம்

கொரொனா எனும் பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அலோபதி மருத்துவத்துக்கு எதிராக நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். அரசின் பெருந்தொற்று நடவடிக்கைகளின் உச்சகட்டமாக தடுப்புசி போடாதவர்கள் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்க வேண்டும் எனும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்று அறிவிக்கிறார்கள். கேரளாவிலோ முதல்வரே அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடாதவர்களுக்கு இடமில்லை என்று அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நேற்று தடுப்பூசி நோயைத் தடுக்கவா மக்களைத் தடுக்கவா? என்றொரு பதிவை … கட்டாயத் தடுப்பூசி: ஒரு விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நோயை தடுக்கும் ஊசியா? மக்களை தடுக்கும் ஊசியா?

செய்தி: பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள்,மார்க்கெட், விளையாட்டு மைதானங்கள், மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை கடந்த நவம்பர் 19ஆம் தேதி உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலான பிறகு தற்போதுதான் அதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதற்கு ஒமிக்ரான் வைரஸ் அச்சமும் ஒரு காரணம். முதலில் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும். இல்லையென்றால் கடுமையான … நோயை தடுக்கும் ஊசியா? மக்களை தடுக்கும் ஊசியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊரடங்கு எனும் நிதித் தொற்று

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஊரடங்கு எனும் கரிய இருட்டு எளிய மக்களின் வாழ்வை கவ்விக் கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்று தொற்றிவிடாதிருக்க ஊரடங்கு தான் ஒரே வழி என்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஊரடங்கு என்பது, இரண்டு வாரம் ஊரடங்கு இரண்டு நாள் தளர்வு மீண்டும் ஊரடங்கு என்று போய்க் கொண்டிருக்கிறது. அதாவது என்ன காரணத்துக்காக ஊரடங்கை நடைமுறைப் படுத்துகிறார்களோ அதற்கு நேர் எதிரான விதத்தில் … ஊரடங்கு எனும் நிதித் தொற்று-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாங்கள் தூக்கில் தொங்கி விடட்டுமா தோழர்களே,

“சித்தா வெறியர்ஸ்” பிரபல பதிவராக இருக்கும், எதையும் உளவியல் ரீதியாக அணுகும், கம்யூனிசத்தில் அக்கரை கொண்ட தோழர் ஒருவரின் சொற்கள் இவை. ஏன் இவ்வளவு வன்மம். தொடர்ந்து இப்படியான சொற்களும், முத்திரை குத்தல்களும் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதோ ஓரிரு எடுத்துக்காட்டுகள். “சித்தம், ஓமியோபதி, இயற்கை சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. கொஞ்சம் விஞ்ஞானத்தின் குரலை கொஞ்சம் கேளுங்கள்” இது இன்னொரு நண்பர். அதாவது அலோபதி தவிர வேறு … நாங்கள் தூக்கில் தொங்கி விடட்டுமா தோழர்களே,-ஐ படிப்பதைத் தொடரவும்.

மரண வியாபாரி

"உங்களது மாமன்னன் ஒரு அயோக்கியக் கொலைகாரன் என்றால், அவனுக்கு முட்டுக் கொடுக்கும் நீங்கள் அதை விடக் கொடூரமான ஈவு இரக்கமற்றக் கொலைகாரர்கள். அதை மறவாதீர்கள்.ஒருவேளை நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம்." ******** இந்தியா கோவிட்டின் மரணக் கிணறாக மாறி வருகிறது. முற்றிலும் செயலற்ற ஒரு பிரதமரும் அவரைச் சுற்றி இருக்கும் அமைச்சர்களும் எந்தக் குற்றவுணர்வும் இன்றி அடுத்து இந்தியாவின் எந்தப் பொதுத்துறை நிறுவனத்தை அம்பானிக்கும் அதானிக்கும் விற்கலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தெற்கு பரவாயில்லை. … மரண வியாபாரி-ஐ படிப்பதைத் தொடரவும்.

தடுப்பூசியை காட்டி கொள்ளையிடலாமா?

தடுப்பூசி குறித்து ஏதேனும் கேள்வி எழுப்பி விட்டால் போதும், உடனேயே அது அறிவியலுக்கு எதிரான பார்வை என்று ஒரேயடியாக முத்திரை குத்திவிடும் போக்கு தற்போது பரவலாக இருக்கிறது. இந்த தடுப்பூசிக்கு பிரச்சார முகவர்களாக செயல்படும் அலோபதி மருத்துவர்கள், தடுப்பூசியை சுற்றி நிகழும் எது குறித்தும் நாங்கள் அக்கரைப்படமாட்டோம் என்று வாய் மூடி இருப்பார்களானால் தடுப்பூசி குறித்து பிரச்சாரம் செய்யும் உரிமை மட்டும் அவர்களுக்கு எங்கிருந்து வரும்? தடுப்பூசிகளின் பின்னுள்ள அரசியலையையும், கொள்ளையையும் விளக்குகிறார் தோழர் கலையரசன். பாருங்கள் … தடுப்பூசியை காட்டி கொள்ளையிடலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இவ்வளவும் ஸ்டெர்லைட்டை திறக்கத்தானா?

ஆக்சிஜனை விலைக்கு வாங்குங்கள் அல்லது கடனுக்கு வாங்குங்கள், உற்பத்தி செய்யுங்கள் அல்லது இறக்குமதி செய்யுங்கள், திருடுங்கள், கொள்ளையடியுங்கள் அல்லது பிச்சை எடுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், ஆக்சிஜனை வழங்கி விடுங்கள். என்று பதறுகிறார் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி. ஆக்சிஜன் கிடைப்பதற்கு தடையாக இருந்தால் அவரை தூக்கில் போடவும் தயங்க மாட்டோம் என ஆவேசப்படுகிறார் இன்னொரு நீதிபதி. இன்னும் சில மணி நேரத்துக்குத் தான் ஆக்சிஜன் இருப்பு தாக்குப்பிடிக்கும் என்று கதறுகின்றன மருத்துவமனைகள். ஆக்சிஜன் கிடைக்கவில்லையென்றால் தில்லியே … இவ்வளவும் ஸ்டெர்லைட்டை திறக்கத்தானா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா பாதிப்பு: ஏன் இந்த கொல வெறி?

செய்தி: கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 74,383 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 70,53,807 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 918 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,08,334 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60,77,977 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,67,496 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். … கொரோனா பாதிப்பு: ஏன் இந்த கொல வெறி?-ஐ படிப்பதைத் தொடரவும்.