சாத்திர, சம்பிரதாயங்கள் யாருக்காக?

தீண்டாமைக் கொடூரங்கள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பொதுப்புத்தியோ, “இப்பெல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?” என்றிருக்கிறது. அண்மையில் மனு சுமிரிதி குறித்து சச்சரவு எழுந்த போது அதே பொதுப்புத்தி, “மனு சுமிரிதி பழம் பஞ்சாங்கம் சார். யாரும் இப்ப அதெல்லாம் படிக்கிறதும் இல்லை, அதன்படி நடக்குறதும் இல்லை” என்று குழைகிறது. ஆனால் மக்களின் வாழ்வில் அவை எப்படி நுழைத்து சிந்தையை கைப்பற்றுகின்றன என விளக்குகிறார், பேரா. கருணானந்தன்.

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை தரமறுப்பது ஏன்?

செய்தி: சரக்குகள், சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்றத்தின் 42-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு கடன் பெற்றுமாநிலங்களுக்கு வழங்குவது சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது. கடந்த வாரம் தமிழகத்துக்கு இழப்பீடாக ரூ.1,483 கோடி வழங்கியதற்கு நன்றி. தமிழகத்துக்கு கடந்த ஜூலை வரையிலான இழப்பீட்டுத் தொகை ரூ.10,774 கோடியே 98 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும். 2017-18 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த … ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை தரமறுப்பது ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நியாயவிலைக் கடையும் திண்டாடும் மக்களும்

செய்தி: பயோ மெட்ரிக் முறை கடந்த 1-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அதனால் சில சிக்கல்களும் ஏற்பட்டுள்ளது. அதாவது சிலரின் கைரேகைப் பதிவு ஆதார் அட்டையுடன் உள்ள கைரேகையுடன் ஒத்துப் போகாமல் பொருள்கள் மறுக்கப்படுகின்றன. பயோ மெட்ரிக் முறையில் கைரேகை ஒத்துப் போகாத நபா்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசியக் குறியீடு எண் (ஓ.டி.பி.) அனுப்பப்படும். அதனைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டையுடன் … நியாயவிலைக் கடையும் திண்டாடும் மக்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பசுக் குண்டர்களின் அடுத்த கட்டம்

செய்தி: மத்திய அரசு இந்தியப் பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு குழுவினை அமைத்துள்ளது. இக்குழு தற்காலத்திலிருந்து 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான இந்திய கலாச்சாரம் குறித்தும் அதன் தொடக்கம் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். இந்தக் குழுவில் பண்டைய கலாச்சாரம் பெருமை படைத்துள்ள தமிழகத்திலிருந்தோ, தென்னிந்தியாவிலிருந்தோ, வடகிழக்கு மாநிலங்களிலிருந்தோ … பசுக் குண்டர்களின் அடுத்த கட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியை திணிக்காமல் விடமாட்டோம்

செய்தி: திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர அனுமதி கேட்டு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை ஏதேனும் அனுப்பப்பட்டுள்ளதா? அவ்வாறு அனுப்பியிருந்தால் அதற்கு மத்திய அரசின் பதில் என்ன என்று மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள கல்வி அமைச்சகம், “தமிழக அரசு எழுதிய கடிதம் எங்களுக்கு கிடைத்தது. 1968ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையானது, பின்னா் 1986 மற்றும் 92ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் போதும் தொடா்ந்தது. புதிய … இந்தியை திணிக்காமல் விடமாட்டோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஐபிஎஸ் என்றால் ஆர்.எஸ்.எஸ் என்று பொருளா?

செய்தி: பணியில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு உள்ள விதிகளில், அவர்கள் பொது வெளியில் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கக் கூடாது என்பதும் ஒன்றாகும். மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை பாதுகாப்பதே அவர்களுக்குள்ள கடமை. தமிழக அரசின் கீழ் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் சந்தீப் மிட்டல் தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ச்சியாக மத்திய ஆளும் கட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆளும் கட்சி சார்பு இயக்கங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். … ஐபிஎஸ் என்றால் ஆர்.எஸ்.எஸ் என்று பொருளா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘நீட்’டா .. ? ‘தீட்’டா .. ?

செய்தி: எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான 'நீட்' எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதி துர்கா, தருமபுரி மாணவர் ஆதித்யா ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு மாணவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் … ‘நீட்’டா .. ? ‘தீட்’டா .. ?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கேவலப்படுத்தாதீங்க என்று சொன்னதுக்கு கைதா?

செய்தி: கோவை ஹோப்காலேஜை சேர்தவர் இளவரசன். மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி, தட்டியால் அடைத்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று மாநகராட்சி நிர்வாகம் பேனர் வைத்தது. மாநகராட்சி பேனர் வைத்த பின்னர், இளவரசன் குடும்பத்தினர் தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் தங்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்திருப்பதாக கூறி, எங்களை அசிங்கப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் என்று பேனர் வைத்திருந்தார். இதையடுத்து இளவரனுக்கு மாநகராட்சி … கேவலப்படுத்தாதீங்க என்று சொன்னதுக்கு கைதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மன் கி பாத்: மங்கி பாத்

செய்தி: மோடியின் 68வது மன் கி பாத் உரையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தலையாட்டி பொம்மைகள் குறித்தும், ராஜபாளையம் நாய்கள் போன்ற இந்திய நாய்களை அதிகம் வாங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், நாம் அடுத்தடுத்து பல சவால்களை சந்தித்து வருகிறோம். இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தன் உரையில் குறிப்பிட்டார். மோடியின் உரையை பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்தது. அந்தப் பக்கத்தை சுமார் 30 லட்சம் … மன் கி பாத்: மங்கி பாத்-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகநூலா? பாஜகவின் பின்வாயா?

செய்தி: இந்தியாவில் ஃபேஸ்புக் பாஜகவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்குத் தனது வெறுப்பு பேச்சுக் கட்டுப்பாட்டு விதிகளைப் பயன்படுத்துவதில்லை என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்ட செய்திதான், இன்று இந்திய அரசியலை சூடாக்கிக் கொண்டிருக்கிறது. பாஜகவைச் சேர்ந்தவர்களின் மீறல்களைத் தண்டிப்பதால் இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வணிக வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்பதால், அவற்றை கண்டுகொள்ள வேண்டாம் என ஃபேஸ்புக்கின் தற்போதைய மற்றும் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது. ஃபேஸ்புக் பாஜகவுக்கு … முகநூலா? பாஜகவின் பின்வாயா?-ஐ படிப்பதைத் தொடரவும்.