நடுவுல ‘U’ வந்துடுச்சா ரவி?

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுனர் ரவி செய்தது சரியா? ஏன் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுனர்கள் நிர்வாகத்துக்கு எதிராக இயங்குகிறார்கள்? இது போன்ற மீறல்களை எதிர்கொள்வது எப்படி போன்ற கேள்விகளை அலசும் காணொளி. காணொளியை யூடியூபில் பார்க்க

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலமும் நீதி மன்றமும்

செய்தி வாசிப்பு: இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு மற்றும் டி.ஜி.பி. தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, ''தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 24 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் உள் அரங்கில் கூட்டம் நடத்தலாம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 … ஆர்.எஸ்.எஸ் ஊர்வலமும் நீதி மன்றமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கோவையும் சில குரங்குகளும்

தீபாவளிக்கு முதல் நாள் கோவையில் ஒரு வண்டியின் எரிவாயு உருளை வெடித்தது. அதில் அந்த வண்டியில் இருந்த முபீன் என்பவர் இறந்து போனார். மட்டுமல்லாது அந்த வெடிப்பில் ஆணிகளும், கோலிக் குண்டுகளும் சிதறின. வெடித்த இடம் ஒரு கோவிலுக்கு முன்னால். இவை எல்லாம் சேர்ந்து ஒருவித ஐயத்தை ஏற்படுத்தவே காவல்துறை விரைந்து செயல்பட்டது. இறந்தது யார் என அடையாளம் காணப்பட்டது. இறந்தவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டவர் என்று தெரிந்ததும் தொடர்புடையவர்கள் … கோவையும் சில குரங்குகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆர்.எஸ்.எஸ் இந்திய நாஜிகளே

எழுத்தாளர் ஜெயகாந்தன், 'கல்பனா’ மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது, 'எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ்' என்ற தலைப்பில், அந்த சஞ்சிகையின் 1980 ஜனவரி இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது. ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்’ என்ற இந்தப் பெயர் எனது இளமைப் பருவ காலத்தில் மிகப் பிரபலமாயிருந்தது. 1945, 46, 47-ஆம் ஆண்டுகளில் நான் பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்தில் தஞ்சையிலும், கடலூரிலும், விழுப்புரத்திலும் வாழ்ந்தபோது அங்கெல்லாம் இந்த இயக்கம் என்னை விடாமல் தொடர்ந்து வருவது … ஆர்.எஸ்.எஸ் இந்திய நாஜிகளே-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெட்ரோல் குண்டில் சிக்சர் அடிப்பாரா ஸ்டாலின்?

கடந்த ஒரு வாரமாகவே கோவை கலவர பூமியாக திட்டமிட்டு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாஜக அலுவலகங்களிலும், பாஜகவினரின் வீடுகள் சிலவற்றிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில். வெடிகுண்டு வரலாற்றிலிருந்து பார்ப்பதாக இருந்தால் நட்டின் எந்த மூலையில் வெடிகுண்டு வெடித்தாலும் ஆர்.எஸ்.எஸ் ஐ தான் முதலில் ஐயப்பட வேண்டும். நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ்ன் கை இருக்கிறது என்பது மாலேகான் … பெட்ரோல் குண்டில் சிக்சர் அடிப்பாரா ஸ்டாலின்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு

இந்துக்களின் பாதுகாவலன் என்று தன்னைத் தானே விளம்பிக் கொள்ளும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனியத்தின் அறுவெறுப்பான பரப்பல்களை முறியடித்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. அவர்கள் ஏதோ அடுக்கடுக்கான சான்றுகளுடன் புதிது புதிதான விவாதங்களைச் செய்கிறார்கள். அதற்கு உடனடியாக நாம் மறுப்பு தெரிவித்து வெளிக்காட்ட வேண்டும் எனும் பொருளில் இதைக் கூறவில்லை. அவர்கள் சொல்வதெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் எத்தனை முறை கன்னத்தில் அறைந்தாலும் இளித்துக் கொண்டே சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் மனநிலை பிறழ்ந்தவன் … வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது பயங்கரவாத இயக்கம்?

நேற்று, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (SDPI) அலுவலகங்கள், நிர்வாகிகளைக் குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை (NIA) நாடெங்கிலும் 13 மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது. இது மிகுந்த பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. ஊடகங்கள் இதனை பரபரப்புச் செய்தியாக்க, அது முஸ்லீம்களின் மீது மீண்டும் ஒருமுறை தீவிரவாத, பயங்கரவாத முத்திரை குத்த ஏதுவாகியது. ஏன் இந்த தேடுதல் வேட்டை? இதற்கு கூறப்படும் காரணங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்ன? பன்னாட்டு தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், … எது பயங்கரவாத இயக்கம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்

1947 ஆகஸ்ட் 15ல் கிடைத்தது விடுதலை அல்ல, அதுவொரு ஆட்சி மாற்றமே என்று கம்யூனிஸ்டுகள் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறார்கள். அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய அனைத்திலுமே ஒரு சிறு கூட்டத்துக்கு மட்டுமே விடுதலை கிடைத்துள்ளது, ஏனைய எவருக்கும் இல்லை. இது தான் கடந்த 75 ஆண்டு கால வரலாறு. ஆனால் இந்த நாளின் மீது மிகைப்படுத்தப்பட்ட புனிதத்தை ஏற்றி வைத்திருப்பதால் அனைவரையும் உள்ளடக்க முடிகிறது. அதில் ஒன்று தான் தேசியக் கொடி. அது நாட்டைக் குறிக்கும் கொடி … தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆளுனரின் கட்டுப்பாட்டில் காவல்துறை

மாநில அரசாங்கங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிப்பதை திட்டமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஒன்றிய அரசாங்கம். மாநில நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காவல் துறையை ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருப்பதை தொடர்ந்த நிகழ்வுகள் மூலம் சிந்திப்பவர்கள் கண்டுணரலாம். தமிழ்நாட்டில் இது இன்னும் துலக்கமாக வெளிப்படத் தொடங்கி இருக்கிறது. ஆளுனராக ரவி நியமிக்கப்பட்டவுடன் காவல்துறை உயரலுவலர்களை அழைத்து கூட்டம் நடத்தியதை அரசியல் உணர்வுள்ளவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. அன்றிந்து இன்று வரை காவல்துறை அப்பட்டமான பக்கச் சார்புடன் … ஆளுனரின் கட்டுப்பாட்டில் காவல்துறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

ராம நவமி: எங்கு திட்டமிடப்பட்டது?

ராம நவமி வன்முறை குறித்து பொதுவான கண்ணோட்டம் எப்படி இருக்கிறது என்றால், 1. ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரத திட்டத்தின் படி இஸ்லாமியர்கலை இரண்டாம் தர குடி மக்களாக ஆக்க, இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய திட்டமிடுகிறார்கள். 2. நிர்வாகத் தோல்வி, விவசாயத்துக்கு எதிரான, தொழிலாளர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான திட்டங்களால் வாழ்வாதாரம் இழக்கும் மக்களை திசை திருப்புவதற்காக மதவெறியை தூண்டுகிறார்கள். ஆனால் இவைகளை விட முதன்மையான செய்தி என்னவென்றால், இஸ்லாமிய வெறுப்பை இன்னும் குறிப்பாகச் சொன்னால் சாதியப் படிநிலையின் … ராம நவமி: எங்கு திட்டமிடப்பட்டது?-ஐ படிப்பதைத் தொடரவும்.