இவர்களை எதால் அடிப்பது என்று கேட்பதை விட நம்மை எதால் அடித்துக் கொள்வது என்று கேட்டுக் கொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் ஊடகங்கள் என்ற பெயரில் அவர்களின் கருத்தை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணிப்பதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. அதன் விளைவுகளை இன்று அறுவடை செய்ய வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். அவர்கள் எதை தீர்மானிக்கிறார்களோ அது மட்டுமே நமக்குச் செய்தி. விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் குறித்து எந்த ஊடகமாவது … இவர்களை எதால் அடிப்பது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகுப்பு: ஊடகம்
எல்லை தாண்டும் பொய்கள்
பாஜக எனும் பாசிசக் கூட்டத்துக்கும் பொய்களுக்கும் இடையிலான நெருக்கம் அவ்வளவு எளிதில் இற்று விடக் கூடியது அல்ல. இந்தியாவை மத அடிப்படையில் இரண்டாக பிரிக்க ஆவன செய்து விட்டு, ஜின்னா நாட்டை துண்டாடுகிறார் என பரப்பியதில் தொடங்கிய பொய்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். என்றாலும் தற்போது அது புதிய உச்சங்களை எட்டி வருகிறது என்பது கவனத்துக்கு உரியது. இந்தியாவில் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதும் எல்லோருக்கும் தெரிந்த கமுக்க(இரகசிய)ச் செய்தி … எல்லை தாண்டும் பொய்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.