தேவையற்றவனின் அடிமையே வா

சில நாடகளுக்கு முன் முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். எந்தவித தயக்கமோ கூச்சமோ இல்லாமல் நாத்திக கோமாளிகள் என தொடக்கத்திலேயே விளித்திருந்தார் அந்த பதிவர். அந்த சொல்லினால் உந்தப்பட்டு அவருக்கு பதிலளித்தேன். அது ஒரு விவாதமாக நீண்டது. ஒரு கட்டத்துக்குப் பிறகு வழக்கம் போல பதில் வரவில்லை. அதையே ஒரு பதிவாக்கி முகநூலில் பகிர்ந்தேன். அவரைக் குறித்த பதிவுக்கு அவருக்கு தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல எனும் எண்ணத்தில் அதில் அவரையும் கோர்த்திருந்தேன். அதற்கு அவர் வினையாற்றி இருந்தார். … தேவையற்றவனின் அடிமையே வா-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே

அண்மைக்காலமாக முகநூலில் இஸ்லாமிய பரப்புரைப் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாத்திகர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு அவர்கள் இடும் பதிவுகள் நகைப்பை வரவழைக்கின்றன. எடுத்துக்காட்டாக புர்கா கலாச்சாரத்தை எதிர்க்கிறோம் என்றால் பெண்களை ஆடையில்லாமல் அலையச் சொல்கிறோம் என்று அவர்களாகவே பொருள் கொண்டு அதற்கு விளக்கம் அளித்து புளகமடைந்து கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு முகநூல் பக்கத்தை இப்படி தொடங்கி இருக்கிறார்கள்.  “நாத்திகர்கள் இஸ்லாத்தை நோக்கி பல கேள்விகளையும் அவதூறுகளையும் முன்வைப்பர். முஸ்லிம்கள் பதில்களை மட்டுமே அளிப்பர். இங்கு … கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீண்டும் ஒரு விவாதம்

கடவுள் யார்? அணமையில் நண்பர் ஒருவர் ’இஸ்லாம் vs நாத்திகம் தத்துவார்த்த உரையாடல்’ என்ற முகநூல் பக்கத்துக்கான இணைப்பை அனுப்பி இந்த பக்கத்தை சென்று பாருங்கள். அதன் பதிவுகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் சென்று பார்த்த போது கிடைத்த முதல் பதிவு தான் ’கடவுள் யார்?’ எனும் இந்தப் பதிவு. கடவுள் இல்லை என்பவர்கள் கடவுள் என்றால் என்ன, எந்தக் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டும். சிவன் இல்லை என்பதா, … மீண்டும் ஒரு விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.