நடுவுல ‘U’ வந்துடுச்சா ரவி?

இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுனர் ரவி செய்தது சரியா? ஏன் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுனர்கள் நிர்வாகத்துக்கு எதிராக இயங்குகிறார்கள்? இது போன்ற மீறல்களை எதிர்கொள்வது எப்படி போன்ற கேள்விகளை அலசும் காணொளி. காணொளியை யூடியூபில் பார்க்க

வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்

முன்குறிப்பு: திமுகவின் ஊதுகுழல் என்பது தொடங்கி இன்னும் பலவிதமாக பட்டம் வழங்கப்போகும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் வாதங்களை முறையான மறுப்பை வழங்கிய பின் உங்கள் பட்டங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீண்ட நாட்களாக பேசப்பட்டுவந்த சேதி இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதயநிதி அமைச்சராக்கப்பட்டார். எதிர்பார்த்தது போலவே விமர்சனங்களும் தூள் பறந்து கொண்டிருக்கின்றன. அதைப் போலவே முட்டுக் கொடுத்தல்களும். இந்த வழமைச் சகதிகளுக்கு அப்பாற்பட்டு வாரிசு அரசியல் என்பதைப் பார்க்கலாம். முதலில், வாரிசு அரசியல் என்ற … வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா 2

‘தி வயர்’ இணைய இதழுக்காக கரண் தாப்பர், தமிழ்நாட்டு நிதியமைச்சர் ப.தியாகராஜன் அவர்களுடன் எடுத்த நேர்காணலின் தமிழ்ப்படுத்தப்பட்ட இரண்டாவது பகுதி. முதல் பகுதியைப் படிக்க கரண் தாப்பர்: நீங்கள் ஒரு மிக முக்கியமான கருத்தை முன்வைக்கிறீர்கள். நமது அரசியலமைப்பு கூட்டாட்சி அதிகாரப் பகிர்வுக்கு உறுதியளிக்கிறது என்ற உண்மை இருந்தபோதிலும், தற்போது மாநிலங்கள் விரும்புது போன்ற  உண்மையான அதிகாரப் பகிர்வு  என்பது மிகக் குறைவாகவே உள்ளது. நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோதும், இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கும்போதும் … நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

நெருக்கடிக்குள் இன்றைய விந்தை இந்தியா

தி வயர் இணைய இதழுக்காக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை கரண் தாப்பர் எடுத்த நேர்காணலின் தமிழ் வடிவம்.

திமுகவின் திராவிடம் ஆரியமா?

கடந்த ஓராண்டாய் ஆட்சித் தலைமை ஏற்றிருக்கும் திமுக ஒப்பீட்டளவில் அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றிருப்பதாக கருதப்பட்டது. ஆனால் அதன் அண்மை நடவடிக்கைகளில் சில கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. நேரடியாக அந்தந்த நடவடிக்கைகளுக்கான எதிர்வினைகளை தாண்டி, கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்த அனைவரும் இதற்கொரு பதிலை கூறியாக வேண்டும் எனும் அழுத்தமாக சிலர் இந்த விமர்சனங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆர்.ஏ புரம் ஆக்கிரமிப்பு அகற்றம், பல்லக்கு ஏற தடை பின்பு அனுமதி, ஆம்பூர் மாட்டுக்கறி பிரியாணி தடை, … திமுகவின் திராவிடம் ஆரியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரும் அம்பேத்கரும் இன்று

ஆ. ராசாவை ஒரு அரசியல்வாதியாக மட்டுமே தெரிந்த பலர் இருக்கிறார்கள். துணிச்சலாக தன் வாதங்களை எடுத்துவைக்கக் கூடியவராக 2ஜி வழக்கிலும், அண்மையில் ஜெயலலிதா குறித்த பிரச்சனையிலும் ஊடாக சிலர் தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இவைகளுக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு சிறந்த திராவிடவியல் பேச்சாளர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இந்த சிறு நூலை படிப்பவர்கள் அதை தெரிந்து கொள்ளலாம். 2008 பிப்ரவரி 22ம் தேதியன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து … பெரியாரும் அம்பேத்கரும் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்

கம்யூனிஸ்ட் எனும் அடிப்படையில் நான் ஒரு சர்வதேசியவாதி. வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையைத் தாண்டி, இனம், தேசியம் குறித்தெல்லாம் எனக்கு மயக்கங்கள் எதுவும் இல்லை. என்றாலும், நடப்பில் நடந்து கொண்டிருக்கும் விவாதம் என்ற விதத்தில், பார்ப்பனியத்துக்கு எதிர்க் கருத்தியல் என்ற முறையிலும், மக்களை மயக்கும் புதிய தமிழ்த்தேசியர்களுக்கு எதிர்க்கருத்தியல் எனும் முறையிலும், இதை உவந்து இங்கே பதிகிறேன். “நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்” WE BELONG TO DRAVIDIAN STOCK கரோனா என்னும் பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், … நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை

தமிழ்நாட்டின் 2021 சட்ட்மன்ற தேர்தல், திமுக, அதிமுக வுக்கு இடையே நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய அளவில் ஓர் இன்றியமையாத திருப்புமுனையைக் கொண்டிருக்கும் தேர்தல். பாஜகவின் இறுதி இலக்கை நோக்கிய பயணம், அதை தடுக்கும் வாய்ப்பில் குறைந்த அளவிலேனும் தகுதியும் ஆற்றலும் கொண்டிருக்கும் அமைப்பு எது? இது தேர்தலுடன் முடிந்து போகும் ஒரு விதயமல்ல போன்ற பலவற்றை விளக்குகிறார் தோழர் மருதையன். ஜீவசகாப்தனின் லிபர்டி தமிழ் யூடியூப் வலையோடைக்கு அளித்த செவ்வி இது. பாருங்கள் .. புரிந்து … திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை-ஐ படிப்பதைத் தொடரவும்.

திராவிடத்தால் எழுந்தோம்

‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு இது. தமிழ் சூழலிலிருந்தும், அரசியலிலிருந்தும் பெரியாரை அப்புறப்படுத்தியே தீர்வது என வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பார்ப்பனியத்தின் குற்றச்சாட்டு இது. அன்றிலிருந்து இன்று வரை இதற்கு பதிலளிக்கப்பட்டு வந்தாலும், மீண்டும் மீண்டும் எழுப்பபட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ் தேசியர்களும் இதற்கு விலக்கல்ல. தமிழர்கள் யார் என்பதற்கு சான்றிதழ் தரும் கடமை தமக்கே இருக்கிறது என்று குரலையும் கையையும் மேடையில் உயர்த்துவோரை சிரித்துக் கொண்டே கடந்து விடலாம். என்றாலும், இது தேர்தல் … திராவிடத்தால் எழுந்தோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.