தமிழ்நாட்டு me too தொடரட்டும்

சில ஆண்டுகளுக்கு முன் மீடூ எனும் ஒரு இயக்கம், பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு, பாலியல் தாக்குதல்களுக்கு ஆளக்கப்படுதை உலக அளவில் பெரும் விவாதமாக்கியது. அவைகளில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது மிகமிகக் குறைவு என்றாலும், அவ்வாறான பொறுக்கிகளை அம்பலப்படுத்துவதில், எச்சரிக்கை செய்வதில், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மீடூ பெரும் பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது. சற்றேறக்குறைய அதேபோன்ற ஓர் இயக்கம் தமிழ்நாடு அளவில் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. பத்மா சேசாத்திரி பள்ளியில் ராஜகோபால் எனும் ஆசிரியர் நடத்திய பாலியல்…

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

பத்மா சேசாத்திரி பள்ளி மாணவிகளுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் இவ்வாறான கொடுமைகள் அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டே இருக்கின்றன. சில வெளியில் தெரிகிறது, பல தெரியாமல் மறைக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் மட்டுமோ, அல்லது பள்ளிகளில் மட்டுமோ அல்ல, சமூகம் முழுவதுமே பெண்ணை தனக்கு கீழானவளாக, பாலியல் பண்டமாக, ஆணாதிக்கத்துடன் பார்க்கும் பார்வை நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்த ஆணாதிக்கப் போக்கு சமூகத்தில் இருக்கும் வரை இது போன்ற…

நான் ஒரு பெண்

அண்மையில் “The Indian Kitchen” எனும் மலையாளப் படம் வெளிவந்த பின்னிலிருந்து சமூக தளங்களில் பெண்ணியம் சார்ந்து பலரும் பதிவுகள் இட்டு வருகிறார்கள். இது ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், சமையல் குறித்து மட்டுமே பேசுவது, ஒரு விதத்தில் பெண்ணை இழிவுபடுத்துகிறதோ என்றும் தோன்றுகிறது. ஏனென்றால், வரலாற்றில் மிக நீண்ட காலம் மனித குலத்துக்கு தலைமை தாங்கி, சமூகத்தை வழிநடத்தியவள் பெண். மருத்துவம், விவசாயம், கட்டடக்கலை என பல துறைகளையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி சமூகத்தை வளர்த்தெடுத்தவள் பெண்….