இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுனர் ரவி செய்தது சரியா? ஏன் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுனர்கள் நிர்வாகத்துக்கு எதிராக இயங்குகிறார்கள்? இது போன்ற மீறல்களை எதிர்கொள்வது எப்படி போன்ற கேள்விகளை அலசும் காணொளி. காணொளியை யூடியூபில் பார்க்க
பகுப்பு: மாநில உரிமை
பாஜகவின் அதிகார போதை சட்டங்கள்
எதிர்வரும் அக்டோபர் 30ம் தேதியுடன் செய்தி தொடர்பு சட்ட வரைவின் மீது உங்கள் கருத்தைக் கூறும் நாள் முடிவடைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது அப்படி ஒரு சட்ட வரைவு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்றாவது தெரியுமா? இந்தியாவில் ஊடகங்கள் என்று சொன்னாலே, அது எந்த வித நெறிகளும் இல்லாத, ஒழிவு மறைவின்றி பார்ப்பன மேலாதிக்க ஆதரவு கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். பார்ப்பன மேலாதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் க்காக பாடுபடுவதில் சளைக்காதவை என்பதும் அனைவருக்கும் தெரியும். … பாஜகவின் அதிகார போதை சட்டங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தேனீர் விருந்தில் புறக்கணிப்பு சர்க்கரை
கடந்த சித்திரை முதல் தேதியன்று ஆளுனர் தமிழ்நாட்டு அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேனிர் விருந்து ஒன்றை அளித்தார். அந்தத் தேனீர் விருந்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கிடக்கையை வெளிப்படுத்தும் குறியீடாக அமைந்தது. பொதுவாக ஆளுனர் எனும் பதவியின் அதிகார வரம்பு என்ன? என்பது இங்கு எப்போதும் பேசு பொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆட்டுக்கு தாடி எதற்கு? எனும் கேள்வி மக்களை ஈர்த்த கேள்வியாக இங்கு உலவியதுண்டு. அண்மையில் மத்திய அரசா? ஒன்றிய அரசா? எது சரியான சொல் … தேனீர் விருந்தில் புறக்கணிப்பு சர்க்கரை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடியரசு தினத்தை புறக்கணிப்போம்
இந்த தலைப்பைப் பார்த்ததும், குடியரசு தினத்தை ஏற்றுக் கொள்கிறோமா என்றொரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. அது அரசியல் நிலைப்பாடு சார்ந்தது. பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களின் கட்டாய ஒப்பத்தங்களுக்கு ஏற்பவும், உள்நாட்டு தரகு முதலாளிகள் அல்லது வளர்ந்து வரும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் வாய்ப்புகளுக்கு ஏற்பவும் மனப்பூர்வமாக உழைக்கும் ஒரு அரசை, இறையாண்மையுள்ள குடியரசு என்று ஏற்க முடியாது. அது ஒருபுறம் இருக்கட்டும். இது மாநில அரசுகளின் உரிமை சார்ந்தது. ஒன்றிய அரசின் அத்துமீறல் சார்ந்தது. எதிர்வரும் ஜனவரி … குடியரசு தினத்தை புறக்கணிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.