வேளாண் மசோதாக்கள் என்ற பெயரில் மூன்று கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்த மோடி அரசாங்கம் இன்று ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அந்த கருப்புச் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் இன்று ஆறு மாதங்களை நிறைவு செய்கிறார்கள். இந்த இரண்டையும் இணைத்து போராடும் விவசாயிகளும், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பவர்களும், பொது மக்களும் இந்த நாளை கருப்பு நாளாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று மக்களுக்கு காட்டுவதற்காகவும், தங்கள் ஒற்றுமையை அடையாளப்படுத்தவும் … இன்று கருப்பு நாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகுப்பு: விவசாயிகள் போராட்டம்
கேள்விக்கென்ன பதில்?
செய்தி: ஜனவரி 27 ஆம் தேதி இரவு டெல்லி-சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் செய்தியாளர் கூட்டத்தில் மூத்த பஞ்சாப் விவசாயிகள் சங்க தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் பேசினார். “ஒப்புக் கொள்ளப்பட்ட அணிவகுப்பு வழியிலிருந்து விலகி செங்கோட்டையை நோக்கி செல்ல விவசாயிகளை தொழிற்சங்கத் தலைவர்கள் தூண்டியதாக டெல்லி போலீஸார் கூறுவது தவறு. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய மற்றும் அணிவகுப்புகளுக்கான நிபந்தனைகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பல விவசாய … கேள்விக்கென்ன பதில்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடியரசு .. .. .. (!)
நீதிமன்றம் அனுமதி தந்த போராட்டம் என்றாலும் தடுப்போம். ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) போராடும் விவசாயிகளை அடித்துத் துவைப்பது எங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) கண்டெய்னரை வைத்துக் கூட நாங்கள் தடுப்போம். ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) நடப்பவர்களின் மாடிப்பாதையில் நின்று கண்ணீர்புகை குண்டுகளை வீசுவோம். ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) போராட்டத்தை தடுக்க … குடியரசு .. .. .. (!)-ஐ படிப்பதைத் தொடரவும்.
விவசாயிகளை அப்புறப்படுத்த சதி நடக்கிறது
தில்லியில் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக, கடுங்குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளும், விவசாய அமைப்பினரும், இன்னும் பலரும் போராடி வருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் நீக்குவதை தவிர வேறெதையும் ஏற்க முடியாது என்று உறுதியுடன் போராடி வருகிறார்கள். அரசு நடத்தும் பேச்சுவார்த்தை நாடகங்கள் எடுபடாமல் போய்க் கொண்டிருக்கின்றன. விவசாயிகளின் போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று அரசு சிந்திப்பதன் அடுத்த கட்டமாக நீதி மன்றம் களத்தில் குதித்திருக்கிறது. போராடும் மக்களை நேரடியாக மிரட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் நீதி … விவசாயிகளை அப்புறப்படுத்த சதி நடக்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.