போராட்டக் களத்தில்

ஸ்டெர்லைட் முதல் தே.பா.சட்டம் வரை பகுதி 3 இந்தப் போராட்டத்தின் இலக்கே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மனு கொடுப்பது தான். இதை போராட்ட நாளுக்கு பல நாட்களுக்கு முன்பே போராட்டக் குழு வெளிப்படையாக அறிவித்து உள்ளது. ‘லட்சம் பேர் கூடுவோம், ஸ்டெர்லைட்டை மூடுவோம்’ என்பது போராட்டத்தின் முழக்கம். ஆனால் போரட்டத்தில் லட்சத்துக்கும் அதிகமானோர் கூடி இருந்தனர். துல்லியமான எண்ணிக்கை தெரியாமல் போனாலும் இவ்வளவு அதிகமானவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்பது முன்கூட்டியே … போராட்டக் களத்தில்-ஐ படிப்பதைத் தொடரவும்.

1. போராட்டம் மகிழ்ச்சிகரமானது

ஸ்டெர்லைட் முதல் தே.பா.சட்டம் வரை பகுதி 2 முன் குறிப்பு: இதை தொடராக எழுதலாம் எனும் திட்டத்தில் கடந்த ஆண்டில் இதே நாளில் தொடங்கினேன். ஆனால் பல காரணங்களால் தொடர முடியவில்லை. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளேன். இனி இது தொடர்ந்து வெளிவரும். போராட்டம் என்பது ஒரு கொண்டாட்டம் போன்றது என்று மார்க்ஸ் கூறியதை சொந்த அனுபவத்தில் முழுமையாக உணர்ந்த நாள் அன்று. அன்றைக்கு முன் பல போராட்டங்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒரு கருத்தாக மனதில் இருக்குமே … 1. போராட்டம் மகிழ்ச்சிகரமானது-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீள் தொடக்கம்

மக்களியம் - பகுதி 2 வாழ வேண்டும். உயிர் வாழ வேண்டும் இது மட்டுமே அனைத்து உயிர்களையும் உந்தும் ஒரே உள்ளாற்றல். இன்னும் அதிக காலம் உயிர் வாழ்வது எப்படி எனும் கேள்வியே அனைத்து உயிர்களையும், குறிப்பாக மனிதர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த அனைத்துக்கும் இது தான் உள்ளடக்கமாக இருந்திருக்கிறது. மனிதனின் தொடக்க காலங்களை எடுத்துக் கொண்டால், ‘உண்ணு, உண்ணப்படாமலிரு’ என்பது தான் ஒரே இலக்கு. அந்த ஒற்றை இலக்கிலிருந்து மனிதன் வெகு தூரம் கடந்து … மீள் தொடக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் 5

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 10 இந்தப் புதிய செல்வம் யாருடைய உடைமையாக இருந்தது? சந்தேகமின்றி, ஆரம்பத்தில் அது குலத்தின் உடைமையாக இருந்த்து. ஆனால் மந்தைகளின் மீது தனியுடைமை என்பது மிகவும் ஆரம்பக் கட்ட்த்திலேயே வளர்ந்திருக்க வேண்டும். மோஸசின் முதல் நூல் என்று கூறப்படுகின்ற புத்தகத்தில் தந்தை ஆப்ரஹாம் ஒரு குடும்பச் சமூகத்தின் தலைவர் என்ற முறையில் கால்நடை மந்தைக்கு உடைமையாளராக இருந்தாரா அல்லது ஒரு குலத்தின் உண்மையான பரம்பரைத் தலைவர் என்ற அந்தஸ்தினால் … குடும்பம் 5-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஸ்டெர்லைட் முதல் தேசிய பாதுகாப்புச் சட்டம் வரை

முன்னுரை இந்தியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. எண்ணிக்கையில் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலும், வீரியத்திலும் ஒப்பீட்டளவில் இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு என்பது மிகையான கூற்றல்ல. அவைகளில் குறிப்பிடத் தகுந்த போராட்டங்களில் ஒன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் 22 மே 2018 அன்று நடத்திய வீரஞ்செரிந்த போராட்டம். இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய மட்டுமல்லாது உற்பத்தியையே நடத்த முடியாத அளவுக்கு மக்களால் தடுத்து நிறுத்த முடியும் என … ஸ்டெர்லைட் முதல் தேசிய பாதுகாப்புச் சட்டம் வரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

உடல் எனும் பொதுவுடமை சமூகம்

கொரோனா எனும் தொற்று நோய் அச்ச உணர்வு எனும் ஆயுதம் கொண்டு உலகை ஆண்டு கொண்டிருக்கும் காலகட்டம் இது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளில் பெரும்பாலானவை ஊரடங்கு எனும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சமூகத்தை பார்க்காமல் அல்லது பார்க்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அனைத்துக்கும், இந்த ஆறு மாத காலங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு ஆட்பட்டிருப்பதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து போனதும் காரணமாக இருக்கிறது. இந்த நோய்க்கு … உடல் எனும் பொதுவுடமை சமூகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.