1. போராட்டம் மகிழ்ச்சிகரமானது

ஸ்டெர்லைட் முதல் தே.பா.சட்டம் வரை பகுதி 2 முன் குறிப்பு: இதை தொடராக எழுதலாம் எனும் திட்டத்தில் கடந்த ஆண்டில் இதே நாளில் தொடங்கினேன். ஆனால் பல காரணங்களால் தொடர முடியவில்லை. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளேன். இனி இது தொடர்ந்து வெளிவரும். போராட்டம் என்பது ஒரு கொண்டாட்டம் போன்றது என்று மார்க்ஸ் கூறியதை சொந்த அனுபவத்தில் முழுமையாக உணர்ந்த நாள் அன்று. அன்றைக்கு முன் பல போராட்டங்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒரு கருத்தாக மனதில் இருக்குமே…

ஸ்டெர்லைட் முதல் தேசிய பாதுகாப்புச் சட்டம் வரை

முன்னுரை இந்தியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. எண்ணிக்கையில் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலும், வீரியத்திலும் ஒப்பீட்டளவில் இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு என்பது மிகையான கூற்றல்ல. அவைகளில் குறிப்பிடத் தகுந்த போராட்டங்களில் ஒன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் 22 மே 2018 அன்று நடத்திய வீரஞ்செரிந்த போராட்டம். இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய மட்டுமல்லாது உற்பத்தியையே நடத்த முடியாத அளவுக்கு மக்களால் தடுத்து நிறுத்த முடியும் என…