“அதெல்லாம் இருக்கட்டும், ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சி பற்றி இன்றுவரை ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம்? …” “அது சரி …புரட்சிக் கட்சிக்கு தேர்தலில் என்ன வேலை? …” “ம்ஹுக்கும் … கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் சங்கங்களில் பிற்போக்கானவர்கள் இருக்கிறார்களே?” “சமரசமில்லாமல் போராட வேண்டாமா?” போகிற போக்கில், இப்படி ஏராளமான ‘புரட்சிகர‘ கேள்விகள் நம்மை நோக்கி வீசப்படுகின்றன. இவைகளெல்லாம் இங்கு மட்டும்தான் எழுப்பப்படுகின்றனவா?… உலகெங்கிலும் இப்படி வீராவேசம் பேசுவோரால் நடந்தது என்ன? என்ன செய்துவிட முடியும்? என்பதைத்தான் ‘இடதுசாரி கம்யூனிசம் – இளம்பருவக் கோளாறு’ புத்தகத்தில் தோழர் வி.இ.லெனின் விமர்சனப்பூர்வ ஆய்வுக்கு உட்படுத்துகிறார். படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள் மின்னூலாக (பிடிஎஃப்) பதிவிறக்க
பகுப்பு: நூல்கள்/வெளியீடுகள்
இந்தியத் துணைக்கண்டத்தின் உற்பத்தி முறை
(தைமூர் ரஹ்மான் ஒரு பாகிஸ்தானிய கல்வியாளர், இசைக்கலைஞர் மற்றும் சோசலிச அரசியல் ஆர்வலர். இவர் பாகிஸ்தானின் மஸ்தூர் கிசான் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். அவர் முன்னணி கித்தார் கலைஞராகவும், லால் என்ற முற்போக்கான இசைக் குழுவின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். அவர் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிக்கிறார்) பாகிஸ்தானின் வர்க்க கட்டமைப்பு என்ற நூலின் ஆசிரியர் தைமூர் ரஹ்மான் நியூஸ்கிளிக் என்ற ஊடகத்திற்கு இந்நூல் பற்றி YOUTUBE இல் அழைத்த வாய்வழி அறிமுகத்தின் தமிழாக்கமே … இந்தியத் துணைக்கண்டத்தின் உற்பத்தி முறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 2
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 30 சுதந்திரமான மனிதன் அடிமை என்ற வேறுபாட்டுடன். பணக்காரன் ஏழை எனும் வேறுபாடும் சேர்ந்து கொண்டது. புதிய உழைப்புப் பிரிவினையுடன் சேர்ந்து வர்க்கங்களின் அடிப்படையில் சமுதாயத்தில் புதிய பிரிவினை ஏற்பட்டது. பல்வேறு குடும்பத் தலைவர்களின் செல்வத்தில் ஏற்பட்ட வேறுபாடுகள் பொதுவுடமை வீட்டுச் சமூகங்களை – அவை எங்கெல்லாம் இனியும் இருந்தனவோ அங்கே – அழிந்து போகச் செய்தன. இது சமூகத்தின் சாதனங்களின் அடிப்படையில் நிலத்தை பொதுவில் பயிரிடுவதை முடிவுக்குக் … அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு
ஒரே நூலில் உலகப் புகழ் பெற முடியுமா? என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கு விடையாக ஜான் பெர்கின்ஸ்சை சொல்லலாம். ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்’ எனும் அவரின் முதல் நூல் உலகம் முழுவதும் அரசியல் நூல்களை வாசிக்கும் அனைவரையும் சென்றடைந்தது. அந்த நூலின் தொடர்ச்சியாக அவர் எழுதியது தான், அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு எனும் நூல். ‘பொருளாதார அடியாட்கள், ரகசிய உளவாளிகள் மற்றும் உலகளாவிய ஊழல் குறித்த உண்மைகள்’ என்று கொடுக்கப்பட்டிருக்கும் துணைத் … அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு-ஐ படிப்பதைத் தொடரவும்.
அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 1
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 29 மாபெரும் தனித்தனி உதாரணங்களான கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய உதாரணங்களிலே குல அமைப்பு கலைந்து மறைந்து போனதை அடையாளங் கண்டு கூறினோம். முடிவாக, அநாகரீக நிலையின் தலைக்கட்டத்தில் ஏற்கனவே சமுதாயத்தின் குல அமைப்பை பலவீனப்படுத்தி வந்த, நாகரீக நிலை தோன்றியதும் முழுமையாக ஒழித்தும் விட்ட பொதுவான பொருளாதார நிலைமைகளை பரிசீலிப்போம். இதற்கு மார்கன் எழுதிய நூல் தேவைப்படுகின்ற அளவுக்கு மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலும் தேவைப்படும். குலம் என்பது … அநாகரீக நிலையும் நாகரீக நிலையும் – 1-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 2
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 28 நமக்குக் கிடைத்திருக்கும் செய்திகளில் மிகப் பெரும்பான்மை கோல் பற்றியவையே. அங்கே கொலோன்களுக்குப் பக்கத்திலேயே சுதந்திரமுள்ள சிறு விவசாயிகளும் இன்னும் இருந்தார்கள். அதிகாரிகள், நீதிபதிகள், கந்துவட்டிக்காரர்கள் ஆகியவர்களின் கொடுமையான கட்டாய வசூல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் அதிகாரத்திலிருந்த நபர்களின் பாதுகாப்பிலும் ஆதரவிலும் பெரும்பாலும் ஒட்டிக் கொண்டனர். அவர்கள் தனித்தனியாக மட்டுமல்ல, முழு கூட்டுச் சமூகங்களாக இப்படி செய்தார்கள். 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சக்கரவர்த்திகள் இந்தச் செயலைத் தடை … ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 1
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 27 டாசிட்டஸ் கூறுகிறபடி, ஜெர்மானியர்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாக இருந்தார்கள். வெவ்வேறு ஜெர்மன் மக்களினங்களின் தொகையைப் பற்றி சீஸர் உத்தேசமான கணக்கைத் தந்திருக்கிறார். ரைன் நதியின் இடது கரையில் தோன்றிய உசிபேதன்கள், தென்க்தெரன்களின் எண்ணிக்கை (பெண்கள், குழந்தைகள் உட்பட) 1,80,000 என்று அவர் கூறுகிறார். ஆக, ஒரே மக்களினத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் [கோல் நாட்டின் கெல்டுகள் குறித்து டியாடோரஸ் நூலில் உள்ள ஒரு பகுதி இந்த … ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 1-ஐ படிப்பதைத் தொடரவும்.
கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 3
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 26 டாசிட்டஸ் காலத்தைச் சேர்ந்த ஜெர்மானியர்கள் ஏற்கெனவே விளை நிலங்களை முடிவாகப் பங்கீடு செய்திருந்தார்களா, இல்லையா, அது சம்பந்தப்பட்ட நூல் பகுதிகளின் சரியான அர்த்தம் என்ன என்பவற்றைப் பற்றி நடைபெற்ற உணர்ச்சிகரமான, இடைவிடாத சர்ச்சை இப்பொழுது பழைய சங்கதியாகி விட்டது. அநேகமாக எல்லா மக்களினங்களிலும் விளை நிலங்கள் குலங்களினால் பொதுவில் உழுது பயிர் செய்யப்பட்டன, பிற்காலத்தில் பொதுவுடைமைக் குடும்பச் சமூகங்களினால் பொதுவில் உழுது பயிர் செய்யப்பட்டன (இந்த வழக்கம் … கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 3-ஐ படிப்பதைத் தொடரவும்.
கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 2
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 25 மக்களினங்கள் குடிபெயர்ந்து சென்ற வரைக்கும் ஜெர்மானியர்கள் குலங்களில் அமைக்கப்பட்டிருந்தார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். அவர்கள் கிறிஸ்ததுவ சகாப்தம் தொடங்குவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னால்தான் டான்யூப், ரைன், விஸ்லா ஆகிய நதிகளுக்கு வடக்குக் கடல்களுக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பில் குடியேறினார்கள் என்பது வெளிப்படை. கிம்பிரிகளும் டியூட்டானிகளும், கூட்டமாக இடம் பெயர்ந்து செல்வதில் இன்னும் ஈடுபட்டிருந்தார்கள். மேலும், சுயேவிகளோ, சீஸரது காலம் வரை எங்கும் குடியேறவில்லை. அவர்கள் குலங்களாகவும் இரத்த … கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 1
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 24 பலவகைப்பட்ட காட்டுமிராண்டி மற்றும் அநாகரிக மக்களினங்களிடம் கிட்டதட்ட தூய்மையான வடிவத்தில் இன்னும் இருக்க்கின்ற குல அமைப்புகளைப் பற்றிக் கூறுவதற்கு இங்கே இடமில்லை. ஆசியாவைச் சேர்ந்த நாகரிக மக்களினங்களின் பண்டைக்கால வரலாற்றில் காணப்ப்படுகின்ற இப்படிப்பட்ட அமைப்புகளின் அடையாளங்கள் விஷயத்திலும் அப்படியே. இரண்டையும் எங்குமே காண முடியும். சில உதாரணங்கள் போதுமானவையாக இருக்கும். குலத்தை அடையாளங்கண்டு கொள்ளவதற்கு முன்பே, அதைத் தவறாகப் புரிந்து கொள்ள மிகப் பெரிய முயற்சி செய்த … கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 1-ஐ படிப்பதைத் தொடரவும்.