புரட்சிக்கு முன்னோடி ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௮


நான் பூகூவை அடைந்ததும் மீண்டும் ஒரு செப்புக்காசும் இல்லாதவனாக ஆகினேன். பயணச்சீட்டும் இருக்கவில்லை. எனக்கு கடனாகத்தர ஒருவரிடமும் பணம் இருக்கவில்லை. இந்த நகரத்தைவிட்டு வெளிக்கிளம்ப எனக்கு ஒரு வழிடியும் புரியவில்லை. இதிலும் மோசமான துக்ககரமான நிகழ்ச்சியாக என்னிடம் இருந்த ஒரே சோடி சப்பாத்தையும் ஒரு கள்ளன் திருடிக்கொண்டான். ஆனால் மீண்டும் அதேகதை சொர்க்கம் ஒரு பயணியை தாமதிக்க விடாது. ரயில்வே நிலையத்திற்கு வெளியே ஹூனானை சேர்ந்த ஒரு பழைய நண்பனை சந்தித்தேன். அவன் எனக்கு ஒரு சப்பாத்துச்சோடி வாங்கவும், ஷாங்காய்க்கு பயணச்சீட்டு வாங்குவதற்கும் போதுமான பணத்தை வழங்கினான். இதன் மூலம் பாதுகாப்பாக எனது பயணத்தை நிறைவேற்றினேன். எனது புதிய சப்பாத்துகளில் ஒரு கண்பார்வையை எப்போதும் வைத்துக்கொண்டேன். பிரான்சுக்கு இந்த மாணவர்களை அனுப்புவதற்காக கணிசமான பணம் ஷாங்காயில் சேகரிக்கப் பட்டிருந்தது. நான் ஹூனானுக்கு திரும்புவதற்கு ஒரு படித்தொகை வழங்கப்பட்டது. நான் எனது நண்பர்களை நீராவிக்கப்பலில் வழியனுப்பிவிட்டு மீண்டும் ஷாங் ஷாவிற்கு திரும்புவதற்கு பயணப்பட்டேன். வடபகுதிக்கு நான் மேற்கொண்ட பயணத்தில் கீழ்கண்ட உல்லாசப் பயணங்களை மேற்கொண்டமை எனது நினைவில் உள்ளது.

ருங் ரிங் ஏரியை சுற்றி நடந்தேன். பாவோரிங் பூ சுற்று மதிலை சுற்றி நடந்தேன். பெய் ஹாய் விரிகுடாவின் பனிக்கட்டியில் நடைபயின்றேன். சான் குவாவில் புகழ்பெற்ற நான்கிங் மதிலைச்சுற்றியும் நடந்தேன். இறுதியாக ரான் சாய் மலையில் ஏறினேன். கண்பூசியசின் சமாதியை பார்த்தேன். அப்போது துணிகரப் பயணங்கள் ஹூனானில் நான் மேற்கொண்ட நடைப்பயணத்தோடு சேர்க்கக்கூடிய பெறுமதி மிக்க சாதனைகளாக இவற்றைக் கருதினேன்.

நான் ஷாங் ஷா திரும்பிய போது அரசியலில் மேலும் கூடுதலான நேரடிப் பணிகளை கையேற்றேன். மே 4ம் திகதி இயக்கத்தின் பின்பு (‘இரண்டாவது புரட்சியின்’ தொடக்கம் என்றும் நவீன சீனத் தேசியவாதத் தொடக்கம் என்றும் கருதப்பட்டது) எனது வாழ்க்கையை மாணவர் அரசியல் நடவடிக்கைகளுக்கு அர்ப்பநித்திருந்தேன். ஹூனான் மாணவர்களின் பத்திரிக்கையான சியாங் நிவர் நெவ்யூ என்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தேன். தென்சீனாவில் இருந்த மாணவர் இயக்கத்திலேயே இது மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தது. ஷாங் ஷாவில் வென் ஹுவா ஷூஹூய் (கலாச்சார புத்தக சங்கம்) சங்கத்தை உருவாக்குவதில் நான் உதவினேன். இது நவீன கலாச்சார அரசியல் போக்குகளை பயிலும் ஒரு சங்கமாகும். இந்தச்சங்கமும் விசேடமாக சின் மின் ஷூ ஹுய் சங்கமும், அச்சமயம் ஹூனானின் ருச்சுன் ஆக இருந்த சாங் சிங் யாவ்வை கடுமையாக எதிர்த்தன. இந்த ஆள் ஒரு கொடூரமான பேர்வழி. சாங்கை பதவி விலகக்கோரி நாங்கள் ஒரு போது மாணவர் வேளை நிறுத்தத்தை மேற்கொண்டோம். இவருக்கு எதிரான கிளர்ச்சிக்கு உதவுமாறு அப்போது தென்மேற்குப் பகுதியில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த சன் யாட் சென்னுக்கும், பீக்கிங்கிற்கும் நாங்கள் தூதுக்குழுக்களை அனுப்பினோம். மாணவர்களுடைய எதிர்ப்பிற்கு பதிலடியாய் சாங் சிங் யாவ், சியாங் நிவர் நெவ்யூ சஞ்சிகையை அடக்கினார்.

இதன் பின்பு புதிய மக்கள் ஆய்வுச்சங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக நான் பீக்கிங் சென்றேன். அத்தோடு அங்கு ராணுவ எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்குசெய்வதும் எனது நோக்கமாக இருந்தது. இந்தச்சங்கம் சாங் சிங் யாவ்வுக்கு எதிரான போராட்டத்தை ஒரு பொதுவான ராணுவ எதிர்ப்பு போராட்டமாக விரிவுபடுத்தியது. இந்தக் கடமையை முன்னெடுப்பதற்கான ஒரு செய்தி அமைப்புக்கு நான் தலைவனானேன். ஹூனானில் இந்த இயக்கத்திற்கு சில வெற்றிகள் கிடைத்தன. சாவ சிங் யாவ் ராவ் யென் காய்யால் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு ஷாங் ஷாவில் ஒரு புதிய ஆட்சி நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. இதே சமயத்தில் இந்தச்சங்கம் இரண்டு பிரிவுகளாகியது. ஒன்று வலதுசாரி மற்றது இடதுசாரி. கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களுக்கான திட்டத்தை இடதுசாரிப் பிரிவினர் வலியுறுத்தினர்.

1919ம் ஆண்டு நான் ஷாங்காய்க்கு மீண்டும் சென்றேன். இங்கு நான் மீண்டும் சென் ரூ சியூவை (சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னூடி அமைப்பாளர்) சந்தித்தேன். அவரை முதன்முதலில் பீக்கிங்கில் நான் பீக்கிங் தேசிய பல்கலைக் கழகத்தில் இருந்தபோது முதற்தடவையாக சந்தித்திருந்தேன். சேறு எவரையும்விட அவர் என்னில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அந்த நாட்களில் ஹூ ஷீ யையும் சந்தித்தேன். ஹூனான் மாணவர் போராட்டத்திற்கு அவரது ஆதரவை கோருவதற்காக அவரைச் சந்தித்தேன். ஷாங்காயில் சென் ரீ சியூவுடன் ஹூனானை மீளக் கூட்டமைப்பதற்கான சபை ஒன்றுபற்றிய எங்களுடைய திட்டங்களை விவாதித்தேன். பின்பு நான் ஷாங் ஷா திரும்பி அதை உருவாக்கத் தொடங்கினேன். அங்கு நான் ஒரு ஆசிரியர் வேலையை பொறுப் பேற்றுக்கொண்டு அதே வேளையில் எனது நவீன மக்கள் ஆய்வுச் சங்கத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்தேன். ஹூனானின் சுதந்திரத்திற்கான திட்டம் ஒன்று இந்தச் சங்கத்திடம் அப்போது இருந்தது. இது உண்மையில் சுயாட்சியையே குறிக்கும். வடபகுதி அரசோடு ஏற்பட்ட வெறுப்பு காரணமாகவும், பீக்கிங்கிலிருந்து தொடர்பை அறுத்துக்கொண்டால் ஹூனானை விரைவாக நவீனப்படுத்த முடியும் என்பதாலும் எங்களுடைய குழு பிரிவினைக்காக போராடியது. அப்போது நான் அமெரிக்காவின் மன்றோ கோட்பாட்டுக்கும், திறந்த பொருளாதாரக் கொள்கைக்கும் ஆதரவாளனாக இருந்தேன்.

சாங் ஹெங் ரீ என்ற ஒரு ரானுவத்துவவாதியால் ரான் யென் காய் பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டான். இந்த சாங் ஹூனான் சுதந்திர இயக்கத்தை தனது நன்மைக்காக பயன்படுத்திக் கொண்டான். இதற்கு ஆதரவு தருவது போல் அவன் நடித்தான். சீன ஐக்கிய சுயாட்சி மாநிலங்கள் என்ற கருத்தை முன்மொழிந்தான். ஆனால் பதவிக்கு வந்தவுடனேயே ஜனநாயக இயக்கங்களை அவன் கடுமையாக அடக்கி ஒடுக்கினான். எங்கள் சங்கம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை கோரியது. மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசு ஒன்றை கோரியது. பொதுவாக ஒரு பூர்ஷுவா ஜனநாயகத்திற்கான கட்டமைப்பை ஏற்றுக் கொண்டிருந்தது. எங்கள் பத்திரிக்கையான நவீன ஹூனானில் இந்தக் கோரிக்கைகளை வெளிப்படையாகவே நாங்கள் முன்வைத்தோம். நாங்கள் மாகாணப் பாராளுமன்றத்தின் மீது ஒரு தாக்குதலுக்கு வழிவகுத்தோம். இந்த மன்றத்தில் பெரும்பாலானவர்கள் நிலா உடமையாளர்களாகவும் பிரபுக்களாகவும் இருந்தனர். அவர்கள் ரானுவத்துவவாதிகளால் நியமிக்கப்பட்டிருந்தனர். அர்த்தமற்ற பயனற்ற சொற்களைக் கொண்டிருந்த கொடிகளையும் ஓலைச்சுவடிகளையும் நாங்கள் அடித்து நொறுக்குவதில் எங்கள் போராட்டம் முடிவுற்றது.


பாராளுமன்றம் மீதான தாக்குதல் ஹூனானில் ஒரு பெரிய நிகழ்வாக கருதப்பட்டதோடு ஆட்சியாளர்களை திகிலடையவும் வைத்தது. இருப்பினும் சாவ் ஹெங் ரீ ஆட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போது, தான் ஆதரித்த அனைத்துக் கருத்துகளுக்கும் மாறாக நடந்தான். விசேடமாக ஜனநாயகத்திற்கான அனைத்து கோரிக்கைகளையும் கொடூரமாக அடக்கி ஒடுக்கினான். ஆகவே எங்களுடைய சங்கம், போராட்டத்தை அவனுக்கு எதிராக திருப்பியது. 1920ல் இடம்பெற்ற சம்பவம் ஒன்று, அந்த வருடத்தில் சின் மின் ஹுய் சங்கம் மகா அக்டோபர் புரட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவைக் கொண்டாட  ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஒழுங்கு செய்தது, இது காவல் துறையால் அடக்கப்பட்டது. அந்தக்கூட்டத்தில் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் செமபதாகையை உயர்த்த முயன்றனர். காவல்துறை தடுத்தமையால் அவ்வாறு செய்யமுடியவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தின் 12வது சரத்தின்படி மக்கள் கூட, கூட்டங்களை ஒழுங்கு செய்ய, சொற்பொழிவாற்ற உரிமையுடையவர்களாக இருக்கிறார்கள் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். காவல்துறையினர் இதை கருத்தில் கொள்ளவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை கற்றுக்கொள்வதற்காக தாங்கள் அங்கு வரவில்லை என்றும் ஆளுநர் சாங் ஹெங் ரீ யின் கட்டளையை நிறைவேற்றவே வந்துள்ளதாக காவல்துறையினர் பதிலளித்தனர். மக்களின் நடவடிக்கை மூலம் பெறப்படும் மக்கள் அரசியல் அதிகாரம் மட்டும்தான் உத்வேகமான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தும் என்பதில் இந்த நேரத்திலிருந்து மேலும் மேலும் நம்பிக்கையுறுதி கொள்ளத் தொடங்கினேன்.

1920ம் மாரிக்காலத்தில் நான் முதன் முறையாக அரசியல் ரீதியில் தொழிலாளர்களை ஒழுங்குமுறைப் படுத்த தொடங்கினேன். இந்த விடயத்தில் மார்க்சிசத்தினதும் ரஷ்யப் புரட்சியினதும் வழிநடக்கலானேன்.  பீக்கிங்கிற்கு நான் இரண்டாவது முறை சென்றபோது ரஷ்யாவில் இடம்பெறும் சம்பவங்களைப் பற்றி அதிகம் படித்திருந்தேன். அப்போது சீன மொழியில் கிடைக்கக் கூடிய மிகக் குறைவான கம்யூனிஸ்ட் இலக்கியங்களையும் ஆவலோடு தேடினேன். மூன்று புத்தகங்கள் விசேடமாக ஏன் மனதை கவர்ந்தன. அத்தோடு என் மனதில் இப்புத்தகங்கள் மார்க்சியம் மீதான நம்பிக்கையை உருவாக்கின. வரலாற்றின் சரியான விளக்கம் என்று ஒரு முறை இதை நான் ஏற்றுக்கொண்ட பின்பு அந்த நிலையில் இருந்து வழுவவில்லை. சீன மொழியில் முதன்முதலாக செங் லாங் ராவ்வினால் மொழிபெயர்க்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை இதில் ஒன்றாகும். காவுட்ஸ்கியின் வர்க்கப்போராட்டம், சோசலிச வரலாறு என்ற ஜோக்கப்பால் எழுதப்பட்ட நூல் ஏனையவையாகும். 1920ம் ஆண்டு கோடை காலத்தில் நான் ஓரளவுக்கு சிந்தனையிலும் செயல்பாட்டிலும் ஒரு மார்க்சியவாதியாக கருதத்தொடங்கினேன். இதே வருடத்தில் நான் யாங்காய் ஹூய்யை திருமணம் செய்துகொண்டேன். (யாங்காய் ஹூய்யுடனான தனது வாழ்க்கை பற்றி, மாவோ பின்பு அவர் கொல்லப்பட்டதை தவிர வேறெதுவும் கூறவில்லை. அவர் பீக்கிங் தேசிய பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவியாக இருந்தார். பின்பு மகா புரட்சியின் போது ஒரு இளைஞர் தலைவியானார். அத்தோடு ஒரு தீவிர பெண்கம்யூனிஸ்டும் ஆனார். ஹூனாநிலுள்ள தீவிரவாத இளைஞர்களிடையே அவர்களது திருமணம் ஒரு கொள்கைத் திருமணமாக கொண்டாடப்பட்டது)

இந் நூலின் முந்திய பகுதிகள்


பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

மாவோவின் குழந்தைப் பருவம் ௨

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௧

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௨

புரட்சிக்கு முன்னோடி ௧

புரட்சிக்கு முன்னோடி ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௭


மாவோ தனது கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்தும்போது, இதில் ஆர்வம காட்டிய மற்றொரு ஆய்வாளரும் அங்கு இருந்தார். மாவோவின் மனைவி ஹோ த்சு சென் தான் அவர். மாவோ தன்னைப்பற்றியும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பற்றியும்  கூறிய உண்மைகளை அவர் முன்பு ஒருபோதும் கேட்டதில்லை என்பது வெளிப்படையாகத்தெரிந்தது. பாவோ ஆண்னில் இருந்த மாவோவின் பல தோழர்களின் நிலையும் அதுதான். நான் ஏனைய கம்யூனிஸ்ட் தலைவர்களின் சுயவாழ்க்கைக் குறிப்புகளை எடுத்தபோது, அவர்களது தோழர்கள் உடனடியாக குழுமி நின்று, ஆர்வத்தோடு இந்த வரலாறுகளை முதற் தடவையாக கேட்டார்கள். வருடக்கணக்காக அவர்கள் ஒருங்கிணைந்த யுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோதும் அவர்கள் கம்யூனிஸ்டுகளாக மாறுவதற்கு முந்தைய நாட்களைப் பற்றிய விடயங்கள் பற்றி மற்றொருவருக்கும் சிறிதளவும் தெரியாது. அவர்கள் அந்தக் காலகட்டத்தை ஒரு இருண்ட காலமாக கருதினார்கள். ஒருவருடைய உண்மையான வாழ்க்கை ஒருவர் கம்யூனிஸ்டாக ஆகிய பின்புதான் தொடங்குகிறது என்பது அவர்கள் கருத்து.

இது மற்றுமொரு இரவு மாவோ கால்களை குறுக்காகப் போட்டுக்கொண்டு தனது கடிதப்பெட்டியின் முன்பாக இருந்தார். ஒரு மெழுகுதிரியின் ஒளியில் முதல் நாள் நான் வேலை முடித்த இடத்திலிருந்து கதையாடலை தொடங்கினார்.

ஷாங் ஷாவில் நான் முறைமைப் பாடசாலையில் படித்த வருடங்களில் மொத்தமாக 160 டாலர்கள் மட்டுமே செலவிட்டிருந்தேன். இதில் எனது பல்வேறு கல்லூரி பதிவுக்கட்டணங்களும் அடங்கும். இந்தத் தொகையில் மூன்றில் ஒரு பங்கை நான் செய்தித்தால்களுக்கு செலவிட்டிருப்பேன். ஏனென்றால் ஒழுங்குமுறையான சந்தாப்பணமாக மாதம் ஒரு டாலர் இதற்கு செலவாகிறது. அத்தோடு நான் அடிக்கடி புத்தகசாலைகளில் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் வாங்கினேன். எனது அப்பா என்னை இதற்காக கண்டித்தார். காகிதத்திற்கு செலவழிக்கப்படும் வீணான பணம் என்று அவர் கூறுவார். ஆனால் நான் செய்தித்தாள் படிக்கும் வழக்கத்தை ஒரு பழக்கமாக்கிக் கொண்டேன். 1911ல் இருந்து 1927 வரை அதாவது நான் சிங் காங் ஷான் செல்லும் வரை ஹூனான், ஷாங்காய், பீக்கிங் செய்தி நாளிதழ்களை படிக்க நான் ஒருபோதும் தவறியதில்லை.

எனது பாடசாலை இறுதி வருடத்தின் போது எனது தாயார் காலமானார். முன்பு எப்போதைக்காட்டிலும் தற்போது வீடு திரும்பும் ஆர்வம் என்னில் குறைந்தது. பீக்கிங் செல்ல நான் முடிவு செய்தேன். ஹூனானில் பல மாணவர்கள் பிரான்சுக்கு செல்ல திட்டங்கள் தீட்டிக்கொண்டிருந்தார்கள். முதலாவது உலக யுத்தத்தில் தனக்கு சார்பான சீன இளைஞர்களை திரட்டுவதற்காக பிரான்ஸ் பயன்படுத்திய வேலை செய்து கொண்டே கல்வி பயிலும் திட்டத்தின் கீழ் கல்வி பயிலவே அவர்கள் பிரான்ஸ் செல்லவிருந்தார்கள். சீனாவை விட்டு வெளியேறுமுன்னர் அவர்கள் பீக்கிங்கில் பிரெஞ்சு மொழி பயிலத் திட்டமிட்டனர். இந்த இயக்கத்தை ஒழுங்குபடுத்த நான் உதவினேன். வெளிநாட்டுக்கு சென்ற இந்தக் குழுக்களில் ஹூனான் முறைமைப் பாடசாலை மாணவர்கள் பலர் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பிற்காலத்தில் புகழ்பெற்ற தீவிரவாதிகள் ஆயினர். ஸூ டேலியும் இந்த இயக்கத்தால் கவரப்பட்டவரே. அவர் நாற்பது வயதை கடந்த பின்பு ஹூனான் முறைமைப் பாடசாலையில் தனது பேராசிரியர் பதவியை துறந்துவிட்டு பிரான்சுக்கு சென்றார். ஆயினும் 1927ம் ஆண்டுவரை இவர் ஒரு கம்யூனிஸ்டாக ஆகவில்லை.

ஹூனான் மாணவர்கள் சிலருடன் நான் பீக்கிங்கிற்குச் சென்றேன். இந்த இயக்கத்தை ஒழுங்கு செய்வதற்கு நான் உதவியிருந்த போதிலும், சின் மின் நு ஹுய் இயக்கத்தின் ஆதரவை இந்த இயக்கம் பெற்றிருந்த போதிலும் நான் ஐரோப்பா செல்ல விரும்பவில்லை. எனது நாட்டைப் பற்றியே நான் சரியாக அறிந்து கொண்டிருக்கவில்லை என்று நான் கருதினேன். அத்தோடு எனது வாழ்க்கையை பயனுள்ள முறையில் சீனாவில் கழிக்க முடியும் என்றும் கருதினேன்.பிரான்ஸ் செல்லவிருந்த அந்த மாணவர்கள் லீ ஷீத் செங் என்பவரிடம் பிரான்சு மொழி பயின்றார்கள். இவர் தற்போது சீன பிரஞ்சு பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கின்றார். நான் பிரஞ்சு மொழி பயிலவில்லை. என்னிடம் வேறு திட்டங்கள் இருந்தன.

என்னைப் பொருத்தவரை பீக்கிங்கில் வாழ்வது செலவு பிடிக்கக்கூடிய வாழ்க்கையாக இருந்தது. எனது நண்பர்களிடம் கடன்பட்டுத்தான் நான் தலைநகருக்கு வந்தேன். நான் உடனேயே வேலை ஒன்றில் சேர்வதற்கு முயற்சி செய்யலானேன். முறைமைப் பாடசாலையில் முன்பு எனது ஆசிரியராக இருந்த யாங் சிங் ஸி அப்போது பீக்கிங் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆகியிருந்தார். எனக்கு ஒரு வேலை பெற்றுத்தர உதவுமாறு அவரிடம் கோரினேன். பல்கலைக்கழகத்தின் நூலகப் பொறுப்பாளருக்கு அவர் என்னை அறிமுகம் செய்துவைத்தார். அவரது பெயர் லீ ரா சாவோ. அவர் பிற்காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர், பின்பு அவர் சாங் த்சோ லின் (மஞ்சூரியாவில் ராணுவ சர்வாதிகாரியாக இருந்து 1928ல் ஜப்பானியரால் கொல்லப்பட்டவர்) என்பவரால் கொல்லப்பட்டார். லீ ரா சாவோ எனக்கு நூலக துணைப் பொறுப்பாளர் வேலையை தந்தார். எனக்கு சம்பளமாக ஒரு தாராளமான தொகையான மாதம் ஒன்றுக்கு எட்டு டாலர் தரப்பட்டது.

எனது பனி ஒரு சிறிய பணியாக இருந்ததால் மக்கள் என்னை சந்திப்பதை தவிர்த்தனர். செய்தித்தாள்கள் படிக்க வருவோரின் பெயர்களை எழுதுவது எனது பணிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் அங்கு வந்த பல பேருக்கு நான் ஒரு மனிதனாகவே படவில்லை. அங்கு படிக்க வந்தோரிடையே மறுமலர்ச்சி இயக்கத்தின் புகழ்பெற்ற பல தலைவர்களின் பெயர்களை என்னால் அறியமுடிந்தது. புசு நியன், லோ சியா லூன் மற்றும் பலர் அவர்களில் அடங்கியிருந்தனர். இவர்களில் நான் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டேன். அவர்களுடன் அரசியல் கலாச்சார விடயங்களில் கலந்துரையாட முயன்றேன். ஆனால் அவர்கள் ஓய்வு ஒழிச்சலற்ற சுறுசுறுப்பான மனிதர்கள், தென்பகுதி உச்சரிப்பில் பேசுகின்ற ஒரு துணை நூலகரிடம் அளவளாவுவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.

ஆனால் நான் நம்பிக்கை இழக்கவில்லை. தத்துவ இயல் சங்கத்தில் சேர்ந்தேன். பத்திரிக்கைத்துறை சங்கத்திலும் உறுப்பினரானேன். இதன் மூலம் பல்கலைக்கழக வகுப்புகளில் பங்குபெற வழி சமைத்தேன். பத்திரிக்கைத்துறை சங்கத்தில் சென் குங் போன்ற சக மாணவர்களை சந்தித்தேன். அவர் தற்போது நான்சிங்கில் ஒரு உயர் அதிகாரியாக உள்ளார். அத்தோடு ராங் பிங் ஷான், (இவர் பின்பு கம்யூனிஸ்ட் ஆகினார், அதற்கும் பின்பு மூன்றாவது கட்சி என்று அழைக்கப்பட்ட ஒரு கட்சியில் உறுப்பினரானார்) சாவ் பியாங் பிங் ஆகியோரையும் இங்கு சந்தித்தேன். இவர்களில் விசேடமாக சாவ் பியாங் பிங் எனக்கு மிகவும் உதவி புரிந்தார். இவர் பத்திரிகைத் துறை சங்கத்தில் விரிவுரையாளராக இருந்தார். அவர் ஒரு மிதவாதி, நல்ல பண்பாலருமாவார். அவர் 1926ல் சாங் த்சோ லின்னால் கொல்லப்பட்டார்.

நூல்நிலையத்தில் வேலை செய்யும்போது நான் சான் குவோ ராவோவைச் சந்தித்தேன். இவர் தற்போது சீன சோவியத் அரசின் உதவித்தலைவராக உள்ளார். காங் பெய் சென் (பின்பு கலிபோர்னியாவில் குக் குளூக்ஸ் கிளான் குழுவில் சேர்ந்தவர்) துவா ஸி பெங் (நாங்கிங்கில் கல்வி உதவி அமைச்சராக உள்ளார்) ஆகியோரையும் இங்கு தான் சந்தித்தேன். இங்கு தான் நான் யாங்காய் ஹுய் யை சந்தித்து அவள் மீது காதல் கொண்டேன். இவள் எனது முன்னால் நீதிசாஸ்திர ஆசிரியர் யாங் சாவ ஸி யின் மகள் ஆவார்.  இந்த ஆசிரியர் எனது இளமைக்காலத்தில் என்மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். பிற்காலத்தில் பீக்கிங்கில் எனது உண்மையான நண்பனாக இருந்தார்.

எனது அரசியல் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே வந்தது. எனது சிந்தனை மேலும் மேலும் தீவிரவாத உணர்வுகளைக் கொண்டதாக ஆகிவந்தது. இதற்கான பின்னணியை நான் உங்களிடம் கூறியுள்ளேன். ஆனால் தற்சமயம் நான் இன்னும் குழப்ப நிலையிலேயே இருந்தேன். நாங்கள் கூறுமாப் போல் ஒரு மார்க்கத்தை தேடிக்கொண்டிருந்தோம். அராஜகவாதம் பற்றிய சில துண்டுப் பிரசுரங்களை நான் படித்தேன். இது என்மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னிடம் அடிக்கடி வருகை தரும் சுசுன் பெய் என்ற மாணவனுடன் இது பற்றியும் இதுபோன்ற சித்தாந்தம் சீனாவில் உருவாகக் கூடிய சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆராய்ந்தோம். அந்த நேரத்தில் அந்தக் கோட்பாட்டின் பல முன்மொழிதல்களை நான் ஆதரித்தேன்.

பீக்கிங்கில் எனது ஜீவிய நிலைமை வெகுமோசமானதாக இருந்தது. அதற்கு மாறாக இந்த பழைய நகரின் அழகு எனக்கு விரிவான உயிரோட்டமுள்ள ஒரு மாற்றீடாக இருந்தது. அங்கு சான் யென் சிங் (மூன்று கண்கள் கிணறு) என்ற இடத்தில் நான் தங்கியிருந்தேன். அங்கு ஒரு சிறிய அரை அதில் ஏழு பேருடன் தங்கியிருந்தேன். சூட்டுப் படுக்கையில் எல்லோரும் ஏறிப்படுத்தால் எனக்கு மூச்சு விடக்கூட இடம் இருக்காது. நான் ஒரு பக்கம் திரும்பிப் படுக்கும் போது எனது இருமருங்கிலும் படுப்போரை நான் எச்சரித்து விட்டே படுப்பேன். ஆனால் பூங்காக்களிலும், பழைய அரச மாளிகை மைதானத்திலும் வடபகுதிக்கு சிறிது முந்தியே வந்துவிடும் வசந்த காலத்தை அனுபவித்தேன். பெய் ஹெய் (வடக்குக் கடல் முற்காலத்தில் வெளியார் நுழைய முடியாத நகரத்திலுள்ள செயற்கை ஏரிகள்) முழுமையாகப் பணியால் மூடப்பட்டிருக்கும் போதே வெள்ளை மலர்கள் பூத்துக்குலுங்குவதைக் கண்டேன். பெய் ஹெய் அருகே வில்லோ மரங்களில் பனிக்கட்டித்துகள்கள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டேன். கவிஞன் ராங் சென் சாங் இந்தக் காட்சியை  பெய் ஹெய்யின் வெள்ளி நகை அணிந்த மரங்களைப் பற்றி பத்தாயிரம் பீச் மரங்கள் பூத்துக் குலுங்குவது போல என்று வர்நித்ததை நினைவு கூர்ந்தேன். பீக்கிங் நகரின் எண்ணிலடங்கா மரங்கள் எனக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தின.

1919ம் ஆண்டு முற்பகுதியில் பிரான்சுக்கு செல்லும் மாணவர்களுடன் ஷாங்காய்க்கு சென்றேன். ரியன்ட்ஸ் ரின் போவதற்கு மட்டுமே என்னிடம் பயணச்சீட்டு இருந்தது. அதற்கு அப்பால் போவதற்கு எனக்கு வழிவகை இருக்கவில்லை. சொர்க்கம் ஒரு பயணியை தாமதிக்க வைக்காது என்று ஒரு சீனப் பழமொழி சொல்லுவது போல பீக்கிங்கிலுள்ள ஒகச்டே கொம்டே பாடசாலையை சேர்ந்த ஒரு சக மாணவன் வழங்கிய பத்து யுவான் கடன் மூலம் பூகூ வரை செல்வதற்கு பயணச்சீட்டை என்னால் வாங்கமுடிந்தது. நாங்கிங் போகும் வழியில் சூ ழூ வில் இறங்கி கண்பூஷியசின் சமாதிக்கு சென்றேன். கண்பூஷியசின் சீடர்கள் கால்களைக் கழுவும் ஒரு சிறிய நீரோடையை பார்த்தேன். அவர் குழந்தையாக இருந்தபோது வாழ்ந்த சிறிய நகரத்தை பார்த்தேன். அவருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கோவிலுக்கு அருகே அவர் ஒரு மரத்தை நட்டதாக கூறப்படுக்கிறது, அந்த மரத்தையும் பார்த்தேன். கண்பூஷியசின் புகழ்பெற்ற சீடர்களில் ஒருவரான யென் ஹூள் வாழ்ந்த இடத்திலுள்ள ஒரு ஆறு அருகேயும் சென்றேன். ஷான் துங்கிலுள்ள புனித மலையாகிய ராய் ஷான் மலையில் ஏறினேன். இங்கு தான் ஜெனரல் பெங் யூ சியாங் ஓய்வு பெற்ற பிறகு தனது நாட்டுப்பற்று மிக்க ஓலைச்சுவடிகளை எழுதினர்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

மாவோவின் குழந்தைப் பருவம் ௨

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௧

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௨

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௬

பத்திரிகைகளில் விளம்பரங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது பல பாடசாலைகள் திறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. புதிய மாணவர்களைக் கவர்ந்திழுக்க அவை இந்த விளம்பர முறையையே பயன்படுத்தின. பாடசாலைகளின் தராதரங்களை மதிப்பீடு செய்ய என்னிடம் எந்தவித அளவுகோலும் இருக்கவில்லை. காவல்துறைப் பாடசாலை ஒன்றின் விளம்பரம் என் கருத்தைக் கவர்ந்தது. அதில் நுழைவுத் தகுதித்தேர்வை எழுதும் முன்பு சவுக்கார உற்பத்திப் பாடசாலை பற்றிய விளம்பரம் ஒன்றை படித்தேன். இதற்கு போதனை எதுவும் தேவையாக இருக்கவில்லை. உணவும் தங்கும் வசதியும் வழங்கப்பட்டது, ஒரு சிறு சம்பளத்திற்கும் வாக்களிக்கப்பட்டது. இது ஒரு கவர்ச்சியூட்டும் எழுச்சியான விளம்பரமாக இருந்தது. சவுக்கார உற்பத்தியின் பாரிய நன்மைகளை அது எடுத்துக்கூறியது, அத்தோடு அது எவ்வாறு நாட்டையும் மக்களையும் வளமுள்ளதாக்கும் என்றும் எடுத்துக்கூறியது. நான் காவல்துறை பாடசாலை மீதான என் கவனத்தை விட்டுவிட்டு ஒரு சவுக்கார உற்பத்தியாளனாகத் தீர்மானித்தேன். இதற்கு எனது பதிவுக்காட்டணமாக ஒரு டாலரை செலுத்தினேன். இதற்கிடையில் எனது நண்பனொருவன் சட்டக்கல்லூரி மாணவனாயிருந்தான். அவன் என்னைத் தனது பாடசாலையில் சேருமாறு வற்புறுத்தினான். இந்த சட்டப்பாடசாலை பற்றியும் கவர்ந்திழுக்கும் விளம்பரம் ஒன்றை நான் படித்திருந்தேன். பல அற்புதமான விடயங்களுக்கான வாக்குறுதிகளை அந்த விளம்பரம் அளித்திருந்தது. அது மூன்று ஆண்டுகளுக்குள் சட்டம் பற்றிய சகலத்தையும் மாணவர்களுக்கு கற்றுத்தருவதாக விளம்பரப்படுத்தியிருந்தது, அத்தோடு இந்த கல்விக்காலகட்டம் முடிந்து அவர்கள் உறுதியாக அரசு அதிகாரிகளாக வரமுடியும் என்று உறுதியும் அளித்திருந்தது. இந்தப் பாடசாலை பற்றி தொடர்ந்து என் நண்பன் புகழ்ந்து கொண்டே இருந்தான். இந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை எல்லாம் குறிப்பிட்டு எனது கல்விக்கட்டனத்தை அனுப்பும்படி கேட்டு இறுதியாக எனது குடும்பத்தினருக்கு கடிதம் எழுதினேன். ஒரு ஜூரியாக அல்லது அரசு அதிகாரியாக திகழப்போகும் எனது வருங்காலத்தைப் பற்றி அவர்களுக்கு ஒரு ஒளிமயமான  தோற்றத்தை உருவாக்கியிருந்தேன். பின்பு சட்டப்பாடசாலையில் பதிவுக்கட்டணமாக ஒரு டாலர் செலுத்திவிட்டு எனது பெற்றோரின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ஒரு வர்த்தகப் பாடசாலையின் விளம்பரம் மீண்டும் என் முடிவில் குறுக்கிட்டது. நாடு தற்போது ஒரு பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. ஆகவே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய பொருளாதார நிபுணர்களே நாட்டுக்குத் தேவை என்று மற்றொரு நண்பன் எனக்கு ஆலோசனை வழங்கினான். எனது இந்த நண்பனின் யோசனை மேலாதிக்கம் பெற்றது. அதன் விளைவாக இந்த வர்த்தக நடுத்தரப் பாடசாலையில் பதிவு செய்வதற்காக நான் மேலும் ஒரு டாலரைச் செலுத்தினேன்.  நான் உண்மையில் அந்தப் பாடசாலையில் சேர்ந்துகொண்டேன், அத்தோடு கல்விகற்க அவர்களால் ஏற்றுக்கொள்ளவும் பட்டேன். இதனிடையே நான் தொடர்ந்து விளம்பரங்களைப் படித்துவந்தேன். ஒருநாள் ஒரு உயர்தர வர்த்தகப் பாடசாலையின் வாய்ப்பு வளங்களைப் பற்றிய மற்றொரு விளம்பரத்தைப் படித்தேன். இது அரசினால் நடத்தப்பட்டது. பரந்துபட்ட கற்கை நெறிகளை அது வழங்கியது. அதோடு அதன் போதனாசிரியர்கள் அனைவரும் மிகுந்த திறமைசாலிகள் என்பதையும் நான் அறிந்து கொண்டேன். அந்தப்பாடசாலையில் சேர்ந்து ஒரு வர்த்தக நிபுனனாக வருவது என்று நான் தீர்மானித்தேன். இதற்கும் ஒரு டாலர் செலுத்தி எனது பெயரை பதிவுசெய்துகொண்டு எனது தீர்மானம் பற்றி எனது தந்தையாருக்கு எழுதினேன். அவர் மகிழ்ச்சியடைந்தார். வர்த்தக ரீதியான கல்வியறிவின் வாய்ப்பு வளங்களையிட்டு, அவர் உடனடியாக என்னைப் பாராட்டினார். நான் இந்தப் பாடசாலையில் சேர்ந்து ஒருமாதம் கல்விகற்றேன்.

இந்தப்பாடசாலையில் இருந்த பிரச்சனை என்னவென்றால், இங்குள்ள கற்கை நெறிகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே போதிக்கப்பட்டன. அங்கு கற்ற ஏனைய மாணவர்களைப் போலவே எனக்கும் சிறிதளவு ஆங்கிலமே தெரியும். உண்மையில் ஆங்கில எழுத்துகளை விட அதிகமாக ஒன்றும் தெரியாது. இதில் மற்றுமொரு இடையூறு என்னவென்றால், இப்பாடசாலையில் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களே இருக்கவில்லை. இந்த நிலைமையால் விரக்தியுற்ற நான் மாதக்கடைசியில் அந்தப் பாடசாலையை விட்டுவிலகி மீண்டும் விளம்பரங்களை படிக்கத்தொடங்கினேன்.

முதலாவது மாகாண நடுத்தரப் பாடசாலையில் எனது அடுத்த முயற்சி தொடங்கியது. நான் ஒரு டாலர் கொடுத்து பதிவு செய்து கொண்டேன். நுழைவுத்தேர்வில் முதல் ஆளாக வந்தேன். அது பலதரப்பட்ட மாணவர்களைக் கொண்ட பெரிய பாடசாலை. அதன் பட்டதாரிகள் எண்ணிலடங்காதவர்கள். அங்கு கற்பித்த ஒரு சீன ஆசிரியர் எனக்கு மிகவும் உதவி புரிந்தார். எனது இலக்கிய ஆர்வப்போக்கு காரணமாகவே என்னால் அவர் கவரப்பட்டார். இவர் யூ பி துங் சியென்(சாம்ராஜ்ய விமர்சனங்களின் வரலாற்றுத் தொகுப்பு) என்ற நூலை எனக்கு வாசிக்கத்தந்தார். இதில் சாம்ராஜ்ய சட்டங்களும், சி யென் லூங்கின் (1736ல் அரியணை ஏறிய மஞ்சு அல்லது சிங் அரச வம்சத்தின் திறமையான நான்காவது சக்கரவர்த்தி) விமர்சனங்களும் அடங்கியிருந்தன. இந்தக் காலகட்டத்தில் ஷாங் ஷாவில் இருந்த அரசின் படைக்கல வெடிமருந்து சாலை ஒன்று வெடித்தது. அங்கு பெரியதொரு தீ ஏற்பட்டது. மாணவர்களாகிய எதிரிகளுக்கு இது ருசிகரமாக இருந்தது. டன் கணக்கான ரவைகளும் வெடிகளும் வெடித்து சிதறின, வெடிமருந்துப்பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்தன. இதற்கு ஒரு மாதத்திற்குப் பின் ரான் யென் காய், யுவான் ஷூ காய்யால் விரட்டி அடிக்கப்பட்டார். குடியரசின் அரசியல் நிர்வாக எந்திரத்தின் கட்டுப்பாடு தற்போது யுவான் கையிலேயே இருந்தது. ரான் யென் காய்யின் இடத்திற்கு ராங் சியாங் மிங் மாற்றீடு செய்யப்பட்டார். யுவானை அரியணையில் அமர்த்த ராங் சியாங் ஒழுங்குகளைச் செய்யலானார். (மீண்டும் அரசவம்ச ஆட்சி முறையை கொண்டுவர எடுக்கப்பட்ட இந்த முயற்சி விரைவாகத் தோல்வியில் முடிந்தது.)

முதலாவது மாகாண நடுத்தரப் பாடசாலையை நான் விரும்பவில்லை. அதன் கற்கை நெறி வரையறைக்கு உட்பட்டதாக இருந்தது. அதன் சட்டதிட்டங்கள் ஆட்செபத்திற்கு உரியவையாக இருந்தன. யூ பி துங் சி யென் நூலைப் படித்தபின்பு நான் தனியாகவே கற்றுத்தெளிவது நன்மை பயக்கும் என்று முடிவுக்கு வந்தேன். ஏழு மாதங்களின் பின்பு நான் பாடசாலையை விட்டு வெளியேறினேன். எனது சொந்தக்கல்விக்கான நேரத்தை ஒழுங்கு செய்துகொண்டேன். ஒவ்வொரு நாளும் ஹூனான் மாகாண நூல்நிலையத்தில் வாசிப்பதும் இதில் அடங்கும். இந்த விடயத்தில் நான் ஒழுங்காகவும் மனத்திட்பத்துடனும் இருந்தேன். இவ்வாறு நான் செலவழித்த அரை வருடத்தை எனது வாழ்க்கையில் பெறுமதி மிக்க ஒன்றாக நான் கருதுகிறேன். காலையில் நூப்ல்நிளையம் திறக்கும் போது அங்கு செல்வேன். மதிய வேளையில் உணவாக இரண்டு அரிசிப் பலகாரம் உண்ணும நேரம் தான் எனக்கு இடைவேளை. நூல்நிலையத்தில் ஒவ்வொரு நாளும் அது மூடப்படும் வரை நான் அங்கு படித்தேன்.

இந்த சுயகல்வி காலகட்டத்தில் நான் பல புத்தகங்களைப் படித்தேன். உலகப்புவியியல் அமைப்புகள், உலக வரலாறு ஆகியவற்றை அங்கு நான் படித்தேன். முதல்தடவையாக ஒரு உலகப்படத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து அதை பயின்றேன். ஆடம் ஸ்மித்தின் வெல்த் ஆப் நேஷன்ஸ், டார்வினின் ஒரிஜின் ஆப் ஸ்பெசிஸ், உயிரினங்களின் தோற்றம் ஜோன் ஸ்டூவர்ட் மில்லியன் ஒழுக்க நெறி பற்றிய நூல், ரூசோவின் படைப்புகள், ஸ்பென்சரின் லாஜிக், மெண்டஸ்க்யூ எழுதிய சட்ட நூல் ஒன்று ஆகியவற்றைப் படித்தேன். கவிதைகள், வீர காவியங்கள், பண்டைய கிரேக்கக் கதைகள் ஆகியவற்றையும், ரஷ்யா, அமேரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் வேறுபல நாடுகளின் புவியியல் வரலாறுகளையும் ஆழ்ந்து படித்தேன்.

சியாங் சியாங் மாவட்ட வாசிகளுக்கான விடுதியில்  வசித்துவந்தேன். அங்கு பல படைவீரர்களும் இருந்தனர். இவர்கள் படையிலிருந்து விலகிய அல்லது படை கலைக்கப்பட்டதினால் வெளியேறிய படை வீரர்களாக இருந்தனர். அவர்களிடம் ஜீவனோபாயத்திற்கான தொழிலோ பணமோ இருக்கவில்லை. இந்த விடுதியில் மாணவர்களும் படைவீரர்களும் எப்போதும் சச்சரவில் ஈடுபட்டு வந்தனர். ஒரு நாள் இந்தப்பிரச்சனை அடிதடியாக உருவெடுத்தது. படைவீரர்கள் மானவர்களைத்தாக்கி அவர்களைக் கொள்ள முயன்றனர். நான் குளியலறைக்கு ஓடி சண்டை முடியும் வரை ஒளிந்திருந்து தப்பினேன்.

அப்போது என்னிடம் பணம் இல்லை. நான் பாடசாலை எதிலாவது சேர்ந்தால் தவிர எனக்கு ஆதரவு வழங்க எனது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். நான் தொடர்ந்து விடுதியில் தங்க முடியாமல் போனதால் தங்குவதற்கு ஒரு புதிய இடம் தேடத்தொடங்கினேன். இதனிடையே நான் எனது வருங்காலத் தொழில் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கத்தொடங்கியிருந்தேன். நான் ஆசிரியத்தொழிலுக்கே அதிகம் பொருத்தமானவன் என்று தீர்மானித்துக்கொண்டேன். மீண்டும் நான் விளம்பரங்களை படித்துக்கொண்டிருந்தேன். ஹூனான் முறைமைப் பாடசாலையில் ஒரு கவர்ச்சிகரமான விளம்பரம் எனது கவனத்திற்கு வந்தது. அதன் வாய்ப்பு வளங்களைப் பற்றி ஆர்வத்துடன் படித்தேன். போதனைக்கான கட்டணம் இல்லை, மலிவான கட்டணத்தில் உணவும் தங்குமிடமும் வழங்கப்படும் என்று இருந்தது. எனது நண்பர்களில் இருவர் இதில் சேருமாறு என்னை வற்புறுத்தினர். நுழைவுத்தேர்வுகளுக்கான கட்டுரைகளை தயாரிப்பதில் அவர்கள் என் உதவியை நாடினர். எனது நோக்கத்தை எனது குடும்ப்பத்தினருக்கு எழுதி அவர்களின் சம்மதத்தையும் பெற்றேன். எனக்காகவும், எனது இரண்டு நண்பர்களுக்காகவும் நானே கட்டுரைகளை தயாரித்தேன். அனைவரும் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டோம். உண்மையில் சொல்லப்போனால் நான் மூன்றுமுறை அனுமதிக்கப்பட்டேன். எனது நண்பர்களுக்காக நான் கட்டுரை எழுதிய செயற்பாட்டை பிழியானது என்று நான் அப்போது கருதவில்லை. அது வேறும் நட்புறவோடு சம்பந்தப்பட்ட விடயம்.

இந்த முறைமைப் பாடசாலையில் நான் ஐந்து வருடங்கள் மாணவனாக இருந்தேன். பின்பு வெளியான விளம்பரங்களின் வேண்டுகோள்களை தவிர்த்துக்கொல்வதில் வெற்றி பெற்றேன். இறுதியாக நான் எனது பட்டத்தைப் பெற்றேன். ஹூனான் மாகாண முதலாவது முறைமை ஆசிரியர் பயிற்சி பாடசாலையில் நான் பயிலும்போது இடம்பெற்ற நிகழ்வுகள் பல. அத்தோடு இந்தக் காலகட்டத்தில் எனது அரசியல் கருத்துகள் உருப்பெறத் தொடங்கின. சமூக செயல்பாட்டில் பெறப்படும் முதல் அனுபவங்களையும் இங்கு நான் பெற்றுக்கொண்டேன்.

புதிய பாடசாலையில் பல சட்ட நடைமுறைகள் இருந்தன. அவற்றில் சிலவே எனக்கு ஏற்புடையதாக இருந்தது. இயற்கை அறிவியல் கற்கை நெறியை கட்டாயம் பயிலவேண்டும் என்பதை நான் எதிர்த்தேன். நான் சமூக அறிவியலை விசேட கற்கை நெறியாக கற்க விரும்பினேன். இயற்கை அறிவியல் எனக்கு விசேடமான ஆர்வத்தை தூண்டவில்லை. நான் அதைப் படிக்கவும் விரும்பவில்லை. இந்தக் கற்கைநெறியில் நான் குறைந்த மதிப்பெண்களே பெற்றேன்.உயிரினங்களின் தோற்றத்தை ஓவியமாக வரையும் கட்டாய கற்கை நெறியை நான் வெறுத்தேன், முட்டாள்தனமான கற்கைநெறியாக கருதினேன். வரைவதற்கு இலகுவான, எளிமையானவைகளைப் பற்றி சிந்தித்து அதை விரைவாக வரைந்துவிட்டு வகுப்பை விட்டு வெளியேறுவதையே வழக்கமாக கொண்டிருந்தேன். அறிவியல் கற்கைநெறியில் நான் பெற்ற அதி சிறப்பான மதிப்பெண்கள் ஏனைய பாடங்களில் நான் பெற்ற குறைவான மதிப்பெண்களை ஈடு செய்தன.

பெருந்தாடி யுவான் என்று மாணவர்களால் பட்டப்பெயர் சூட்டப்பட்டிருந்த ஒரு சீன ஆசிரியர் எனது படைப்புகளை ஒரு பத்திரிகையாளனின் படைப்பைப் போன்று இருப்பதாக கேலி செய்தார். நான் முன்மாதிரியாக கருதிய லியாங் சி சால்வை அவர் இகழ்ந்ததோடு அவரை ஒரு அரை அறிவிலி என்றும் கருதினார். நான் ஹான யூன் அவர்களின் படைப்புகளைப் படித்தேன்.  அத்தோடு பழைய இலக்கிய பாணியில் சொற்றொடர்களை எழுதும் முறையில் தேர்ச்சிபெற்றேன். இதன் விளைவாக இன்னும் கூட தேர்ச்சிபெற்ற இலக்கியபாணியிலான கட்டுரை ஒன்றை தேவை ஏற்பட்டால் என்னால் எழுத முடியும். இதற்கு நான் பெருந்தாடி யுவானுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

என்மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர் இங்கிலாந்தில் கல்வி கற்றுத்திரும்பிய யாங் சாங் சி ஆவார்.இவருடைய வாழ்வோடு எனது வாழ்வு பிற்காலத்தில் வெகு நெருங்கிய உறவை கொண்டிருக்கப் போகிறது. அவர் நீதிநெறி பாடத்தை போதித்தார். அவர் ஒரு யதார்த்தவாதி, உயரிய நீதிநெறியாளர். அவர் தனது நீதி நீரிகளில் மிகுந்த பற்றுறுதி கொண்டிருந்தார். சமூகத்திற்கு பயன்படக்கூடிய நேர்மையான, நீதியான, நற்பன்பாடு உள்ள மனிதனாக வரவேண்டும் என்ற ஆசையை மாணவர்கள் மனதில் பதியவைக்க அவர் முயன்றார். அவரது செல்வாக்கின் கீழ் த்சை யுவான் பெய் மொழிபெயர்த்த ஒரு நீதிநூலை நான் படித்தேன். இதன் காரணமாக ஒரு கட்டுரை எழுத ஊக்கம் பெற்றேன். இதற்கு ‘எண்ணத்தின் சக்தி’ என்று தலைப்பிட்டேன். அப்போது நான் ஒரு கற்பனாவாதியாக இருந்தேன். எனது கட்டுரை பேராசிரியர் யாங் சாங் சி அவர்களால் அவரது கற்பனாவாத நோக்கின் அடிப்படையில் வெகுவாக பாராட்டப்பட்டது. அதற்கு அவர் 100 மதிப்பெண்கள் வழங்கினார்.

ராங் என்ற பெயருடைய ஒரு ஆசிரியர் எனக்கு மின்பாவோ சஞ்சிகையின் பழைய பிரதிகளை வழங்கினார். மிகுந்த ஆர்வத்தோடு அவற்றை நான் படித்தேன். இவற்றிலிருந்து ருங் பெங் ஹுய் அவர்களின் செயற்பாடுகளையும் நடவடிக்கைத் திட்டங்களையும் நான் அறிந்தேன். இரண்டு மாணவர்கள் சீனாவின் ஊடாகப் பயணம் மேற்கொண்டிருப்பதையும் அவர்கள் திபெத் எல்லையிலுள்ள தட்சியன்லூ என்ற இடத்தை அடைந்து விட்டததையும் பற்றி எழுதப்பட்டிருந்த கட்டுரை ஒன்றையும் நான் மின்பாவோ இதழில் நான் படித்தேன். இது எனக்கு மிகுந்த எழுச்சியூட்டியது. இவர்களது உதாரணத்தை பின்பற்ற விரும்பினேன். ஆனால் என்னிடம் பணம் இருக்கவில்லை. முதலில் நான் ஹூனானுக்கு பயணம் மேற்கொள்ள முயலவேண்டும் என்று எண்ணினேன்.

அடுத்த கோடை காலத்தின்போது நான் இந்த மாகாணத்தின் குறுக்காக கால்நடையாக எனது பயணத்தை தொடங்கினேன். ஐந்து மாவட்டங்களினூடாக நடந்து சென்றேன். சியாங் யூ என்ற மாணவரும் உடன் வந்தார். இந்த ஐந்து மாவட்டங்களினூடாகவும் ஒரு செப்புக்காசும் செலவு செய்யாமல் பயணம் செய்தோம். விவசாயிகள் எங்களுக்கு உணவும் உறங்க இடமும் தந்தார்கள். நாங்கள் சென்ற எல்லா இடங்களிளும் அன்புடன் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டோம். எனது பயண சகபாடியான சியாங் யூ பின்னாளில் யி பி சியின் கீழ் நாங்கிங்கில் ஒரு கோமிண்டாங் அதிகாரியாக வந்தார். அப்போது ஹூனான் முறைமைப் பாடசாலையில் தலைவராக இருந்த யி பி சி நாங்கிங்க்கில் பெரிய அதிகாரியாக வந்தார்.அவர் சியாங் யூவை பிகிங் அரச மாளிகை அருங்க்காட்சியத்தின் பாதுகாவலர் பதவிக்கு நியமித்தார். இந்த அருங்காட்சியகத்தின் பெறுமதிமிக்க அரும்பெரும் செல்வங்களை விற்றுவிட்டு அந்தப் பணத்துடன் 1934ம் ஆண்டில் தலைமறைவாகிவிட்டார்.

உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரமான மனோநிலையும் சில நெருங்கிய நண்பர்களுக்கான தேவையும் ஏற்பட்டதால் தாய்நாட்டுக்கான சேவையில் ஆர்வமுள்ள இளைஞர்களை என்னுடன் தொடர்பு கொள்ளும்படி சாங்கா பத்திரிகை ஒன்றில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டேன். உடலிலும் உள்ளத்திலும் உறுதிவாய்ந்த தாய்நாட்டுக்காக எவ்வித தியாகங்களையும் செய்யக்கூடிய இளைஞர்களே தேவை என்று அதில் விசேடமாக குறிப்பிட்டிருந்தேன். இதற்கு எனக்கு மூன்று முழுக் கடிதங்களும் ஒரு அரைக்கடிதமும் கிடைத்தன. ஒன்று லு சியாங் லவ் என்பவரிடமிருந்து வந்திருந்தது. இவர் பின்னாளில் கம்யூனிசத் கட்சியில் சேர்ந்து பின்பு அதை காட்டிக்கொடுக்க இருந்தார். ஏனைய இரண்டு கடிதங்கள் இரண்டு இளைஞர்களிடமிருந்து வந்திருந்தது. அவர்கள் பிற்பாடு தீவிர பிற்போக்குவாதிகளாக மாறினர். அந்த அரைக்கடிதம் ஈடுபாடு காட்டாத லிலிசான் என்ற இளைஞரிடமிருந்து வந்திருந்தது. நான் கூறிய அனைத்தையும் கேட்ட லி எவ்வித மறுமொழியும் கூறாமலேயே வெளியேறினார். அதன்பின் எங்கள் நட்பு வளரவில்லை. (லிலிசான் பின்பு சீனக் கம்யூனிசத் கட்சியின் லிலிசான் கோட்பாட்டு வழிக்கு பொறுப்பாக இருந்தார். இதை மாவோ கடுமையாக எதிர்த்தார்)

ஆனால் படிப்படியாக என்னைச்சுற்றி ஒரு மாணவர் குழுவை உண்டாக்கினேன். பின்பு ஒரு சங்கமாக (புதிய மக்கள் ஆய்வு சங்கம்) உருவெடுத்த ஒரு அணிக்கு இந்தக்குழு ஆணிவேராக அமைந்தது. இது பிற்காலத்தில் சீனாவின் பிரச்சனைகளிலும் அதன் விதியிலும் பரந்துபட்ட செல்வாக்கை கொண்டிருக்கப்போகிறது. இது ஒரு கடுமையான, தீவிரமான எண்ணங்களைக் கொண்ட மனிதர்களின் ஒரு சிறிய குழு. அவர்களுக்கு சில்லறை விடயங்களைப் பற்றியெல்லாம் விவாதிக்க நேரமிருக்கவில்லை. அவர்கள் கூறியவை, செய்தவை அனைத்திலும் ஒரு நோக்கம் கட்டாயம் இருக்கும். காதலிக்கவோ வேறு காரியங்களில் ஈடுபடவோ நேரம் இருக்கவில்லை. காலம் மிகவும் இக்கட்டாக இருப்பதையும், அறிவைப்பெறுவது அவசர காரியம் என்பதையும் அறிந்திருந்தனர். அவர்கள் பெண்களைப் பற்றியோ தனிப்பட்ட விடயங்களையோ நினைத்தும் பார்க்கவில்லை. நான் பெண்கள் விடயத்தில் அக்கறை கொள்ளவில்லை. எனது பெற்றோர் எனக்கு 14வயதாக இருக்கும்போது 20வயதுப் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்திருந்தனர். ஆனால் அந்தப்பென்னோடு நான் ஒருபோதும் வாழவில்லை. அந்தப் பெண்ணை எனது மனைவியாக நான் கருதவில்லை. இந்த நேரத்தில் அந்தப் பெண்மீது நான் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. இந்தக்காலகட்டத்து இளைஞர்களின் வாழ்வில் வழமையாக முக்கியப்பங்கு வகித்த பெண்களின் அழகுக் கவர்ச்சி பற்றி இரகசியமாக விவாதிப்பதைவிட, அன்றாட வாழ்க்கையின் சாதாரண விடயங்களை பற்றிக் கதைப்பதைக்கூட எனது சகபாடிகள் தவிர்த்திருந்தது நினைவில் உள்ளது. எனது நண்பர்களும் நானும் பெரிய விடயங்களைப் பற்றி கதைக்கவே விரும்பினோம். மனிதர்களின் இயல்புகள், பிரபஞ்சம், உலகம், சீன மக்கள் சமூகம் ஆகியவை பற்றியே கதைத்தோம்.

நாங்கள் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களாகவும் மாறினோம். மாரிக்கால விடுமுறையின் போது நாங்கள் வயல்களினூடாக நடந்து திரிந்தோம், மலைகளில் ஏறி இறங்கினோம்,நகர சுற்று மதில்களில் ஏறினோம், ஆறுகள் நீரோடைகளை நீந்திக் கடந்தோம். மழை பெய்தால் எங்களது மேலாடைகளை களைந்து விட்டு மழையில் நனைந்தோம், இதை மழைக்குளிப்பு என்று அழைத்தோம். வெயில் எரிக்கும் போதும் எங்களின் மேலாடைகளை கழற்றிவிட்டு அதை வெப்பக்குளிப்பு என்று அழைத்தோம். வசந்தகாலக் காற்று வீசும் போது காற்றுக்குளிப்பு என்றும் புது விளையாட்டு என்றும் கத்துவோம். பனித்துளிகள் விழும்போது கூட வெளியிலேயே படுத்தோம். நவம்பர் மாதத்தில் கூட குளிர்ந்த ஆறுகளில் நீந்தினோம். உடற்பயிற்சி என்ற பெயரில் இவை அனைத்தும் நடந்தேறின. உடற்கட்டமைப்பை உறுதியாக்கிக்கொள்ள பெருமளவுக்கு இது உதவியது. பிற்காலத்தில் தென்சீனாவின் ஊடாக பல நடைபயணங்கள் மேற்கொள்ளவும், கியாங்ஸியிலிருந்து வடமேற்குப் பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட நெடும் பயணத்தின் போதும் இவை எனக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கப்போகின்றன.

ஏனைய நகரங்களிலும் மாநகரங்களிலும் உள்ள பல மாகானங்கலோடும், நண்பர்களோடும் பரந்த அடிப்படையில் கடிதத்தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டேன். நன்கு நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் அவசியத்தை நான் படிப்படியாக உணரலாளேன். 1917ல் சீன நண்பர்களுடன் சேர்ந்து சின் மின் ஷூ ஹுய் அமைப்பை நிறுவ நான் உதவினேன். இதில் 70, 80 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் பலரின் பெயர்கள் பிற்காலத்தில் சீனக் கம்யூனிச உலகிலும் சீனப்புரட்சியின் வரலாற்றிலும் புகழ் பெற்ற பெயர்களாக இருக்கப் போகின்றன. இந்த அமைப்பில் இருந்த நன்கு அறிமுகமான கம்யூனிஸ்டுகளில் லோமான் (லீ வெய் ஹான்)இவர் தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புக்குழுவில் உறுப்பினராக இருக்கிறார். ஸி யாசி தற்போது இரண்டாவது முன்னணி செம்படையில் இருக்கிறார். ஹோ ஷூ ஹெங் மத்திய சீன சோவியத் பிராந்தியத்தின் உச்சநீதி மன்றத்தின் நீதிபதியாக ஆனவர். பின்பு இவர் ஷியாங் காய் ஷேக்கால் 1935ல் கொல்லப்பட்டார். ஷியாங் ஹூ ஷாங் ஒரு எழுத்தாளராக சோவியத் ரஷ்யாவில் வாழ்கிறார்.த்சை ஹோ சென் கம்யூனிட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், 1927ல் ஷியாங் காய் ஷேக்கால்  கொல்லப்பட்டார். யே லீ யுன் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக வந்தார், பின்பு கோமிண்டாங் கட்சிக்கு காட்டிக்கொடுத்தார், அதோடு முதலாளித்துவ தொழிற்சங்கத்தின் அமைப்பாளரானார். ஸி யாவோ சென் கம்யூனிஸ்ட் கட்சியை அமைப்பதற்கான மூல உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஆறு பேர்களில் ஒருவர். சமீபத்தில் சுகவீனமுற்று இறந்தார். 1927ல் இடம்பெற்ற எதிர்புரட்சியில் சின் மின் ஷூ ஹுய் அமைப்பின் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் கொல்லப்பட்டனர்.

சின் மின் ஷூ ஹுய் அமைப்பை ஒத்ததாக இதே காலத்தில் அமைக்கப்பட்ட மற்றொரு சங்கம் தான் சமூக நல வாழ்வு சங்கம் ஆகும். இது ஹூ பேயில் அமைக்கப்பட்டது. இதன் உருப்பினர்களிலும் பலர் பின்பு கம்யூனிஸ்டுகள் ஆக்கினார்கள். ஷியாங் காய் ஷேக்கின் எதிர்ப்புரட்சியின் போது கொலை செய்யப்பட்ட யுன் ராய் யிங்கும் இவர்களில் அடங்குவார். தற்போது செம்படை பல்கலைக் கழகத்தின் தலைவராக இருக்கும் லின பிய்யாவ்வும் இதன் உறுப்பினரே. தற்போது வெள்ளை துருப்புகளுக்கான (செம்படையினரால் கைது செய்யப்பட்ட துருப்புகள்) வேலைகளுக்கு பொறுப்பாக இருக்கும் சாங் ஹால்வும் இதன் உறுப்பினரே. ஹூசே என்று ஒரு அமைப்பு பீகிங்கில் இருந்தது. இந்த அமைப்பின் சில உறுப்பினர்களும்  பின்னாளில் கம்யூனிஸ்டுகள் ஆயினர். சீனாவின் வேறு இடங்களில் குறிப்பாக ஷாங்காய், ஷாங் செள, ஹான் கௌ ரியன்சிசின் சில தீவிரவாத இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளை நிறுவினார்கள். ரியன்சிசினில் நிறுவப்பட்ட விழிப்புணர்வூட்டும் சங்கத்தில் ஸூ யென் லாய் நிருவன உறுப்பினர்களில் ஒருவர். ரெங் யிங் சாவோ (திருமதி ஸூ யென் லாய்) மாசுண் 1927ல் பீகிங்க்கில் மரணதண்டனைக்கு உள்ளானவர், சன் ஷியா சிங் ஆகியோரும் இதில் உறுப்பினராக இருந்தனர்.

பெரும்பாலான சங்கங்கள் சின் சிங் நியேன்(புதிய இளைஞர்) என்ற புகழ் பெற்ற இலக்கிய எழுச்சி சஞ்சிகையின் செல்வாக்கின் கீழ் உருவாக்கப்பட்டவை. இதன் ஆசிரியர் சென் ரூ சியு ஆவார். நான் முறைமைப் பாடசாலையின் மாணவனாக இருக்கும் போதே இந்த சஞ்சிகையை படிக்கத் தொடங்கியிருந்தேன். ஹூ சி, சென் ரூ சியு ஆகியோரின் படைப்புகளை நான் வியந்து போற்றினேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவை எனது முன்மாதிரியாக இருந்தன. அவை நான் ஏற்கனவே கழித்து விட்டிருந்த லியாங் ஸி சாவ் காங் யூ வேய் ஆகியோரின் படைப்புகளை மாற்றீடு செய்தன.

இந்தக்காலகட்டத்தில் எனது சிந்தனை மிதவாதம் ஜனநாயக மறுமலர்ச்சி வாதம், சோசலிச வாதம் ஆகியவற்றின் ஆச்சரியமான கலப்பாக இருந்தது. 19ம் நூற்றாண்டு ஜனநாயகம், கற்பனைவாதம், பழைய பாணியிலான மிதவாதம் ஆகியவை மீது ஒரு தெளிவற்ற விருப்பம் இருந்தது. அத்தோடு நான் ரானுவமையப்படுத்தல் ஏகாதிபத்தியம் ஆகியவற்றிற்கு நிச்சயமாக எதிர்ப்பாளனாக இருந்தேன்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

மாவோவின் குழந்தைப் பருவம் ௨

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் ௧

ஷாங் ஷா வில் வாழ்ந்த நாட்கள் – ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௫

நான் ஷாங் ஷா செல்வதற்கு விருப்பம் கொள்ளத் தொடங்கினேன். மாகாணத் தலைநகரான இந்தப் பெருநகரம் எனது ஊரிலிருந்து 120லி தூரத்தில் இருந்தது. இது ஒரு மாபெரும் நகரம், பெருமளவிலான மக்களையும் பாட சாலைகளையும் ஆளுநரின் ஆட்சிப் பணிமனைகளையும் தன்னகத்தே கொண்டது. இந்த நேரத்தில் அங்கு சென்று சியாங் சியாங் மக்களுக்கான நடுத்தரப் பாடசாலையில் சேர்ந்துகொள்ள நான் பெருவிருப்பமுடையவனாக இருந்தேன். அந்த மாரிக்காலத்தில் உயர் ஆரம்பப் பாடசாலையில் உள்ள ஒரு ஆசிரியரிடம் என்னை அங்கு அறிமுகப்படுத்துமாறு வேண்டினேன். அதற்கு அந்த ஆசிரியர் ஒத்துக்கொண்டார். மிகுந்த உற்சாகத்தோடு ஷாங் ஷா வுக்கு நடந்தே சென்றேன். இந்தப் பெரிய பாடசாலையில்  எனக்கு அனுமதி கிடைக்காமல் போகலாம் என்ற பயத்துடனும், அந்தப் பாடசாலையில் மாணவனாகும் வாய்ப்புக்கிட்டும் எனும் நம்பிக்கை இல்லாமலும்தான் அங்கு சென்றேன். ஆச்சரியத்திற்குரிய வகையில் எவ்வித சிரமமுமின்றி நான் அப் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டேன். ஆனால் அரசியல் நிகழ்வுகள் விரைவாக நகர்ந்து கொண்டிருந்தன. அந்த பாடசாலையில் நான் ஆறு மாதங்கள் மட்டுமே கல்வி பயின்றேன்.

ஷாங் ஷாவில் ஒரு செய்தித்தாளை முதன்முறையாக படித்தேன். மின் லி பாவோ(மக்கள் பலம்) என்ற இந்த தேசிய புரட்சிகர சஞ்சிகை, மஞ்சு அரச வம்சத்திற்கு எதிராக நடைபெற்ற காண்டான் எழுச்சி பற்றியும் ஹீவாங் சிங் என்ற ஹூனான்வாசியின் தலைமையில் 72 மாவீரர்கள் இறந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியால் நான் வெகுவாகக் கவரப்பட்டேன், அத்துடன் மில் யூ யென் (பின்பு ஒரு புகழ் பெற்ற கோமிண்டாங் தலைவரானவர்). இதே காலத்தில் நான் சுன் யாட் சென்னைப் பற்றியும் ருங் மென் ஹுய் திட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். (ருங் மென் ஹுய் என்பது ஒரு ரகசியக்குழு. சுன் யாட் சென்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக்குழு தான் கோமிண்டாங் கட்சிக்கான முன்னோடி. இதன் பெரும்பாலான உறுப்பினர்கள் நாடு கடத்தப்பட்டவர்களாக ஜப்பானில் வாழ்ந்தார்கள். சீர்திருத்த அரச வம்ச கட்சியின் தலைவர்களான சி சாவ், காங் யூ வெய் ஆகியோருக்கு எதிராக  இவர்கள் ஜப்பானில் இருந்துகொண்டு பேனா முறையில் கடும் யுத்தம் நடத்தினார்கள்) நாடு முதலாவது புரட்சிக்கு தயாரான நிலையில் இருந்தது. எனக்கு ஏற்ப்பட்ட மனக்குமுறல் காரணமாக நான் ஒரு கட்டுரை எழுதினேன். அதை பாடசாலை சுவரில் ஓட்டினேன். ஒரு அரசியல் கருத்து(நோக்கு) பற்றிய எனது முதல் வெளிப்பாடு அதுதான். ஆனால் அந்தக் கட்டுரை ஒரு குழப்பமானதாக இருந்தது. நான் அப்போதும் லியாங் சி சாவ், காங் யூ வெய் ஆகியோர் மீதான வியந்து போற்றுதலைக் கைவிடவில்லை. அவர்களிடையே உள்ள வித்தியாசங்களை நான் தெளிவாக விளங்கிக்கொள்ளவில்லை. ஆகவே எனது கட்டுரையில் சுன் யாட் சென் ஜப்பானிலிருந்து புதிய அரசின் ஜனாதிபதியாக்கப்பட வேண்டும், காங் யூ வெய் பிரதமராக்கப்பட வேண்டும், லியாங் சி சாவ் வெளிநாட்டரசராக்கப்பட வேண்டும் என்று நான் முன்மொழிந்திருந்தேன். இது ஒரு பொருத்தமற்ற கூட்டணி, காங்கும் லியாங்கும் முடியாட்சி ஆதரவாளர்கள், சுன் யாட் சென் முடியாட்சி எதிர்ப்பாளர்.

சிச்சுவான் ஹான் கௌ ரயில்வே கட்டமைப்பு சம்மந்தமான அந்நிய முதலீட்டு எதிர்ப்பு இயக்கமும், ஒரு பாராளுமன்றத்தை அமைக்குமாறு  எழுந்த பொதுமக்களின் கோரிக்கையையும் பரவலான முறையில் எழுந்தது. இதற்கான பதிலாக, ஒரு ஆலோசனைக்குழு அமைக்க மட்டுமே பேரரசர் ஆணையிட்டார். எனது பாடசாலை மாணவர்கள் மேலும் மேலும் தீவிர விவாதங்களில் ஈடுபட்டனர். தங்களின் தலைமயிர்ப் பின்னலுக்கு எதிராக ஒரு புரட்சியை நடத்தியதன் மூலம் தங்களுடைய மஞ்சு எதிர்ப்பு உணர்ச்சிகளை மாணவர்கள் வெளிக்காட்டினர். ஒரு நண்பரும் நானும் எங்களுடைய பின்னல்களை வெட்டிவிட்டோம். ஆனால் அவ்வாறு வெட்டுவதாக முன்பு உறுதியளித்திருந்த ஏனைய மாணவர்கள், பிற்பாடு தங்களுடைய வாக்குறுதியை காப்பாற்றத் தவறிவிட்டனர். எனது நண்பனும் நானும் அவர்களை ரகசியமாகத் தாக்கி அவர்களுடைய பின்னல்களை வலுக்கட்டாயமாக வெட்டினோம். எங்களுடைய கத்திரிக்கோலுக்கு பத்திற்கும் மேற்பட்ட பின்னல்கள் பலியாயின.

இதன் மூலம் ஒரு குறுகிய காலத்திற்குள் ‘போலி வெளிநாட்டுப் பிசாசின்’ போலிப்பின்னல்களை கேலி செய்வதிலிருந்து பின்னல்களை பொதுவாகவே ஒளிக்கவேண்டுமேன்று கோருமளவிற்கு நான் முன்னேறியிருந்தேன். ஒரு அரசியல் சிந்தனை ஒரு எண்ணக்கருத்தை எவ்வாறு மாற்றமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு இது.

சட்டக்கல்லூரியில் பயின்ற ஒரு நண்பனுடன் இந்த பின்னல் விடயத்தில் நான் பிரச்சனைப்பட்டேன். இந்த விடயத்தில் நாங்கள் இருவரும் எதிரெதிர் கோட்பாடுகளை முன்வைத்தோம். உடல், தோல், நகங்கள் ஆகியவை ஒவ்வொருவரது பெற்றோராலும் வழங்கப்பட்ட ஒரு பரம்பரை சொத்து. ஆகவே அவை அழிக்கப்படக்கூடாது என்று புராதன இலக்கிய நூலை உதாரணம் காட்டி தனது வாதத்தை வென்றெடுக்க அந்த சட்ட மாணவன் முயன்றான். ஆனால் நானும் பின்னல் எதிர்ப்பாளர்களும் மஞ்சு எதிர்ப்பு அரசியல் அடிப்படையில் ஒரு எதிர்க்கோட்பாட்டை உருவாக்கி அவனை முழுமையாக வாயடைக்க வைத்தோம்.

வியுவான் ஹாங் தலைமையில் சாகன் கிளர்ச்சி நடைபெற்றதும் (1911ஆம் ஆண்டு மஞ்சு முடியாட்சியை தூக்கியெறிந்த புரட்சியின் தொடக்கம்) ஹூனானில் ரானுவச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அரசியல் சூழ்நிலை விரைவாக மாறியது. ஒரு நாள் ஒரு புரட்சிவாதி நடுத்தரப் பாடசாலையில் தோன்றி பாடசாலை அதிபரின் அனுமதியுடன் ஒரு கிளர்ச்சியான சொற்பொழிவை நிகழ்த்தினார். இந்தக்கூட்டத்தில் இருந்த ஏழு அல்லது எட்டு மாணவர்கள் ஆட்சியை கடுமையாக தாக்கினார்கள். அத்தோடு குடியரசை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்கள். அனைவரும் முழுமையான கவனத்தோடு சொற்பொழிவை கேட்டார்கள். கிளற்சியுற்றிருந்த மாணவர்கள் முன்னால் வியுவான் ஹாங்கின் அதிகாரிகளில் ஒருவரான அந்த புரட்சிச்சொற்பொழிவாளர் உரையாற்றியபோது ஒரு சிறு ஓசையும் எழவில்லை.

இந்த சொற்பொழிவைக் கேட்டு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குப் பின்பு லி யுவான் ஹாங்கின் புரட்சிகர ராணுவத்தில் சேர நான் உறுதிபூண்டேன். வேறுபல மாணவர்களோடு ஹன் கோவுக்கு செல்ல நான் முடிவு செய்தேன். வகுப்புத்தோழர்களிடமிருந்து சிறிதளவு பணத்தை நாங்கள் சேகரித்தோம். ஹன் கோவின் வீதிகள் மிகுந்த ஈரமானவை என்றும் மழைக்கால சப்பாத்துகள் அங்கு அவசியம் என்றும் கேள்விப்பட்டு, நகரத்திற்கு வெளியே தங்கியிருந்த ராணுவத்தில் உள்ள ஒரு நண்பனிடம் சில சப்பாத்துகள் கடனாக பெறச்சென்றேன். ராணுவத்தின் கொத்தளக்காவலர்களால் நான் தடுத்து நிருத்தப்பட்டேன். இந்த இடம் சந்தடிமிக்கதாக இருந்தது. முதற்தடவையாக துருப்புகளுக்கு துப்பாக்கிக்குண்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்கள் தெருக்களுக்குள் பெரும் எண்ணிக்கையில் நுழைந்துகொண்டிருந்தனர்.

காண்டான் ஹன்கோ ரயில் பாதையினூடாக புரட்சியாளர்கள் நகரத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். சண்டை அங்கு தொடங்கிவிட்டது. ஷாங் ஷாவின் நகர மதில்களுக்கு அப்பால் ஒரு பெரிய சமர் இடம்பெற்றுள்ளது. அதேவேளை நகரினுள்ளே ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது, அத்தோடு நகர வாயிற்கதவுகள் தாக்கப்பட்டு சீனத்தொழிலாளர்களால் கைப்பற்றப்பட்டன. இந்தக் கதவுகளில் ஒன்றின் வழியாக நான் நகரினுள் நுழைந்தேன். பின்பு ஒரு உயரமான இடத்தில் நின்று சமரை அவதானித்தேன். இறுதியாக ஆளுநரின் அரசுப் பணிமனையின் மீது ஹான் கொடி ஏற்றப்படுவது வரையில் இருந்தேன். அதில் ஹான் என்ற எழுத்து இருந்தது. நான் பாடசாலைக்கு திரும்பினேன், அது ரானுவக்காவலர்களினால் காவல் காக்கப்பட்டிருந்தது.

அடுத்த நாள் ஒரு ராணுவ அரசு நிறுவப்பட்டது (டுட்டு என்பது ராணுவ ஆளுனரைக் குறிக்கும்) கீ வாவோ ஹுய்(மூத்த சகோதரர் சங்கம்) சங்கத்தை சேர்ந்த பிரபல இரண்டு உறுப்பினர்கள் ஆளுனர்களாகவும், சென் சோ சிங் உதவி ஆளுனராகவும் பதவியேற்றனர். மாகாண ஆலோசனைக்குழுவில் முன்னைய கட்டிடத்தில் புதிய அரசு நிறுவப்பட்டது. இதன் தலைவராக இருந்த ரான் யென் காய் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த ஆலோசனைக்குழுவும் கலைக்கப்பட்டது. புரட்சிவாதிகளால் கண்டுபிடிக்கப்பட்ட மஞ்சு ஆவணங்களிடையே  பாராளுமன்றம் ஒன்றை திறக்குமாறு கோரும் ஒரு கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் காணப்பட்டன. இதன் மூலப்பிரதி சுடேலியினால் இரத்தத்தில் எழுதப்பட்டிருந்தது. அவர் தற்போது சீன சோவியத் அரசின் கல்வி ஆணையாளராக கடமையாற்றுகிறார். தனது உறுதிப்பாட்டையும் நேர்மையையும் எடுத்துக்காட்டும் விதமாக தனது கை விரலின் முன்பகுதியை வெட்டித்தான் இக்கடிதத்தை எழுதினர். அவரது கோரிக்கைக்கடிதம் பாராளுமன்றம் திறக்கப்படவேண்டுமேன்று கோரி, எனது விரலை வெட்டுவதுடன் நான் விடைபெறுகிறேன் (பீகிங்கின் மாகாணப் பிரதிநிதிகளிடம்) என்று முடிந்திருந்தது.

புதிய ராணுவ ஆளுநர்களும் உதவி ஆளுநரும் நீண்ட நாட்கள் இருக்கவில்லை. அவர்கள் கெட்ட மனிதர்கள் அல்ல, அத்தோடு அவர்களுக்கு புரட்சிகர நோக்குகளும் இருந்தன. ஆனால் அவர்கள் ஏழைகள் அத்தோடு அடக்கப்பட்டவர்களின் நலன்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். நில உடமையாளர்களும் வர்த்தகர்களும் இவர்களோடு அதிருப்தி கொண்டிருந்தனர். சில நாட்களுக்குள் நான் ஒரு நண்பனைக் காணச்சென்றபோது வீதியிலே அவர்களது சடலங்களைப் பார்த்தேன். ரான் யென் காய், ஹூனான் நில உடைமையாளர்கள், ராணுவத்தினரின் பிரதிநிதியாய் செயல்பட்டு அவர்களுக்கெதிராக ஒரு கிளர்ச்சியை ஏற்பாடு செய்திருந்தான்.

தற்போது பல மாணவர்கள் ராணுவத்தில் செர்ந்துகொண்டிருந்தார்கள். ஒரு மாணவ ராணுவம் நிறுவப்பட்டிருந்தது. இந்த மாணவர்களிடையே ராங்  செங் சியும் இருந்தார் (1972 இல் வாங் சிவ் வெய்யின், ஷகான் அரசினுடைய தேசியவாதிகளின் ரானுவத்தினுடைய கமாண்டராக பின்பு ராங் செங் சி இருந்தார். அவர் வாங்கையும் கம்யூனிஸ்டுகளையும் காட்டிக்கொடுத்து ஹூனானின் விவசாயப்படுகொலையை தொடங்கினார்) நான் மாணவ ராணுவத்தை விரும்பவில்லை. இந்தக்கட்டமைப்பின் அத்திவாரம் குழப்பமானதாக இருப்பதை நான் உணர்ந்தேன். இதற்கு மாறாக மரபுமுறை ராணுவத்தில் சேர நான் விரும்பினேன். அதன் மூலம் புரட்சியை முழுமையாக்க நினைத்தேன். சிங் பேரரசர் இன்னும் பதவி துறக்கவில்லை. அத்தோடு போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

எனது சம்பளம் மாதத்திற்கு ஏழு யுவானாக இருந்தது, இருப்பினும் அது தற்போது நான் செஞ்சசேனையில் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகும். நான் இப்பனத்தில் உணவுக்காக மாதம் ஒன்றுக்கு இரண்டு யுவான் செலவழித்தேன். தண்ணீரையும் விலை கொடுத்தே வாங்கவேண்டியதிருந்தது. படைவீரர்கள் நகருக்கு வெளியிலிருந்தே தண்ணீர் எடுத்து வந்துகொண்டிருந்தார்கள். நான் மாணவனாக இருந்தபடியால் தண்ணீரை அவ்வாறு கொண்டுவர முடியவில்லை. தண்ணீர் விற்பவர்களிடம் வாங்கினேன். எனது சம்பளத்தில் மிகுதிப்பணம் செய்தித்தாள் வாங்குவதில் செலவழிந்தது. நான் செய்தித்தாள் வாசிப்பதில் பற்றுள்ள வாசகனாகினேன். அப்போது புரட்சியோடு தொடர்புடைய சஞ்சிகைகளில் சியாங் சியாங் ஜிபவோ (சியாங் நதி தினச்செய்தி) இருந்தது. அதில் சோசலிசம் பற்றி விவாதிக்கப்பட்டது, இதிலிருந்த செய்திப்பத்திகளில் தான் சோசலிசம் எனும் சொல்லை நான் அறிந்துகொண்டேன். நானும் சோசலிசத்தைப் பற்றி விவாதித்தேன். உண்மையில் சமூக சீர்திருத்தம் பற்றிய விடயத்தை ஏனைய மாணவர்களுடனும், படைவீரர்களுடனும் விவாதித்தேன். சோசலிசம் பற்றியும் அதன் கொள்கைகள் பற்றியும் சியாங் காங் ஹூ எழுதிய சில துண்டுப் பிரசுரங்களையும் நான் படித்தேன். இந்த விடயம் குறித்து எனது வகுப்பு மாணவர்களில் பலருக்கு உற்சாகத்துடன் எழுதினேன். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும்தான் எனக்கு ஆதரவாக விடையளித்தார்.

எனது குழுவில் ஒரு ஹூனான் சுரங்கத்தொழிலாளியும், ஒரு இரும்பு வேலைத் தொழிலாளியும் இருந்தனர். அவர்களை நான் மிகவும் நேசித்தேன். ஏனையோர் வெகு சாதாரணமானவர்கள், அவர்களில் ஒருவன் கெட்டவன். மேலும் இரண்டு மாணவர்களை நான் ராணுவத்தில் சேர தூண்டினேன். எனது பிளாட்டூன் கமாண்டருடனும் பெரும்பாலான படைவீரர்களுடனும் நான் நட்புவைத்திருந்தேன். என்னால் எழுத முடியும் அத்தோடு புத்தகங்களைப்பற்றி எனக்கு சிறிது அறிவு இருந்தது. எனது ‘மகத்தான கல்வியை’ அவர்கள் கௌரவித்தார்கள். அவர்களுக்கு கடிதங்கள் எழுதி உதவுவதிலும் அது போன்ற வேறு பணிகளிலும் என்னால் உதவ முடிந்தது.

புரட்சியின் பெறுபேறு இன்னமும் தீர்க்கமாக முடிவுசெய்யப்படாத நிலையில் இருந்தது. தலைமைத்துவம் சம்பந்தமாக இன்னமும் கோமிண்டாங் கட்சிக்குள் வேறுபாடுகள் இருந்தன. அதேவேளை சிங்(பேரரசர்) தனது அதிகாரத்தை முழுமையாக கைவிட்டுவிடவுமில்லை. மேலும் போர் நடப்பது சாத்தியமே என்று ஹூனானில் கூறப்பட்டது. மஞ்சு ஆட்சியினருக்கும் யுவான் ஷூ காய்க்கும் எதிராக பல ரானுவங்கள் திரட்டப்பட்டன.

(யுவான் ஷூ காய் மஞ்சு ஆட்சியாளர்களின் ராணுவத்தின் பிரதம தளபதியாக இருந்தவர். 1911ம் ஆண்டு மஞ்சு ஆட்சியாளர்களை பதவியிறங்க வைத்தவர்) இதில் ஹூனான் படை நடவடிக்கையில் இறங்குவதற்கு தயாராகிக்கொண்டிருந்தபோது சுன் யாட் சென்னும் யுவான் ஷூ காயும் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். ஏற்பட இருந்த யுத்தம் இதனால் தவிர்க்கப்பட்டது. வடக்கும் தெற்கும் இணைக்கப்பட்டன. நான்கிங் அரசு கலைக்கப்பட்டது. புரட்சி முடிந்துவிட்டதாக எண்ணிய நான், ராணுவத்திலிருந்து விலகி எனது கற்கை நெறிக்கு திரும்பத் தீர்மானித்தேன். நான் ஆறு மாதங்கள் படைவீரனாக இருந்தேன்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

மாவோவின் குழந்தைப் பருவம் ௨

மாவோவின் குழந்தைப்பருவம் ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௪


இறுதியாக எனக்கு 13 வயதாக இருக்கும்போது நான் ஆரம்ப பாடசாலையை விட்டு நீங்கினேன். கூலிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளிக்கு உதவியாக நீண்ட நேரம் எங்கள் பண்ணையில் நான் வேலை செய்யத்தொடங்கினேன். பகலில் ஒரு தொழிலாளியின் முழு அளவு வேலையையும் இரவில் தந்தையாரின் கணக்குப்புத்தகம் எழுதும் வேலையையும் செய்தேன். புராதன இலக்கிய நூலைத்தவிர கிடைக்கக்கூடிய அனைத்து நூல்களையும் விரும்பிப்பயின்றேன். இது எனது தந்தையாருக்கு கவலையூட்டியது, அவர் புராதன இலக்கிய நூலில் நான் சிறந்த ஆளூமை பெறவேண்டும் என விரும்பினார். சீன நீதிமன்றம் ஒன்றில் இவர் தொடுத்திருந்த வழக்கொன்றில், இவரது எதிரி புராதன இலக்கியத்திலிருந்து ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டைக் கூறி வழக்கில் இவரை தோற்கடித்திருந்தான்.

இதனால் தான் விசேடமாக நான் புராதன இலக்கியம் படிக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். பின்னிரவுகளில் நான் படிப்பதை எனது தந்தையார் பார்க்காமல் இருப்பதற்காக அறையில் ஜன்னல் கண்ணாடிகலை மூடி இருப்பதாக செய்துவிடுவேன். இந்த வழிமுறையில் ஷென்ஷெ வெய் யென் (எச்சரிக்கை வார்த்தைகள்) என்ற நூலைப்படித்தேன். (இந்த நூல் சுங் குவாங் யிங் அவர்களால் எழுதப்பட்டது. இது பல ஜனநாயக சீர்திருத்தங்களை ஆதரித்தது. பாராளுமன்ற அரசு, புதிய கல்விமுறை, தொலைத்தொடர்புகள் ஆகியவற்றையும் வலியுறுத்தியது. துயரார்ந்த முறையில் முடிவுற்ற, 100 நாட்கள் சீர்திருத்தம், கிளர்ச்சி நடந்த1898 ஆம் ஆண்டு இந்த நூல் பிரசுரிக்கப்பட்டபோது, அமோக ஆதரவையும் செல்வாக்கையும் பெற்றது) இந்த நூலை நான் மிகவும் விரும்பினேன். பழைய சீர்திருத்த அறிவியலாளர்களில் ஒருவரான இந்த நூலாசிரியர் சீனாவின் பலவீனம் மேற்கத்திய நவீன உபகரணங்களை பெற்றுக்கொள்ளாமையிலேயே தங்கியிருக்கிறது என்று கருதினார். ரயில் பாதைகள், டெலிபோன்கள், தந்தி சாதனங்கள், நீராவிக்கப்பல்கள் ஆகியவற்றை நாட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். இத்தகைய புத்தகங்களைப் படிப்பது காலத்தை பாழாக்குவதாகும் என்று தந்தையார் கருதினார். நடைமுறை விடயங்களைக்கொண்டிருக்கும் புராதன இலக்கியம் போன்ற நூல்களை நான் படிக்க வேண்டும் என்று அப்பா விரும்பினார். இது அவர் தொடுக்கும் வழக்குகளை வெல்வதற்காவது பயன்படும்.

இந்தப் பண்டைய வீர வரலாறுகளையும் சீன இலக்கியங்களையும் நான் தொடர்ந்து படித்துவந்தேன். இத்தகைய கதைகளில் வினோதமாக இருக்கும் ஒரு விடயம், ஒரு நாள் எனக்கு தெரியவந்தது. நிலத்தை உழும் விவசாயிகள் எவரும் இக்கதைகளில் இடம்பெறாமையே எனது கருத்தை ஈர்த்த விடயமாகும். கதாபாத்திரங்கள் அனைவரும் போர் வீரர்களாகவும் அதிகாரிகளாகவும் அறிவியலாளர்களாகவுமே இருந்தனர். அவர்களில் ஒரு விவசாயி கூட கதாநாயகனாக இருக்கவில்லை. இது பற்றி இரண்டு வருடங்கள் வரை நான் யோசித்தேன். பின்பு இந்தக்கதைகளின் சாராம்சங்களை நான் ஆய்வு செய்தேன். அக்கதைகள் அனைத்தும் ஆயுதம் தரித்தவர்களையும், மக்களை ஆளுமை செய்யும் ஆட்சியாளர்களையும் மையப்படுத்தியிருந்தது. இவர்கள் வயல் வேலை எதையும் செய்யவில்லை. ஏனென்றால் அவர்கள் இந்தக்கணிகளை தங்கள் உடமையாக தங்கள் கட்டுப்பாட்டினுள்ளும் வைத்திருந்தனர். அத்தோடு இவர்கள் காணிகளில் தங்களுக்காக வேலை செய்வதற்கு விவசாயிகளை வைத்துக்கொண்டவர்கள் என்பது வெளிப்படையாகியது.

எந்து தந்தையார் எனது இளம்பருவத்திலும் மத்திய வயதிலும் இறை நம்பிக்கையற்றவராக இருந்தார். ஆனால் எனது தாயார் மிகுந்த ஈடுபாட்டோடு புத்தரை வணங்கினார். அவர் தனது குழந்தைகளுக்கு சமய போதனை செய்தார். எங்கள் தந்தையார் ஒரு இறை நம்பிக்கையற்றவர் என்பதையறிந்து நாங்கள் அனைவரும் வருந்தினோம். எனக்கு 9 வயதாக இருக்கும்போது எனது தந்தையாரின் பக்தியற்ற தன்மை குறித்து எனது தாயாரோடு தீவிரமாக கலந்துரையாடினேன். அவரை சமயத்திற்கு மாற்ற அப்போதும் பின்பும் பல முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். அவர் எங்களை ஏச மட்டுமே செய்தார், அவரது தாக்குதல்களால் தோற்கடிக்கப்பட்டு புதிய திட்டங்களை உருவாக்குவதற்காகப் பின்வாங்கினோம். ஆனால் அவர் கடவுளைப்பற்றி எவ்வித அக்கரையும் காட்டவில்லை.

எனது நூல் வாசிப்பு படிப்படியாக என்னை ஆளுமைப்படுத்த ஆரம்பித்தது, நானே இறை நம்பிக்கையற்றவனாக ஆகத்தொடங்கியிருந்தேன். எனது தாயார் என்மீது கவலைப்படத்தொடங்கினார் இறை நம்பிக்கைக்கான தேவைகள் பற்றிய எனது அறிவீனத்தினால் அவர் என்னை ஏசத்தொடங்கினார். ஆனால் இது பற்றி எனது தந்தையார் ஒன்றும் கூறவில்லை. பின்பு ஒருநாள் யாரிடமோ பணம் வாங்குவதற்காக வெளியில் சென்றார் வரும் வழியில் அவர் ஒரு புலியை எதிர்கொண்டார், ஆச்சிரியமாக அந்தப்புலி ஓடி மறைந்தது. எனது தந்தையார் அதைக்காட்டிலும் ஆச்சரியமடைந்தார். அவர் ஆச்சரியமான முறையில் தப்பிப்பிழைத்தது பற்றி அதிகரித்த அளவிலான வெளிப்பாடுகளைக் காட்டினார். தான் கடவுளர்களுக்கு பிழை செய்து விட்டேனா என எண்ணத்தொடங்கினார். அன்று தொடக்கம் அவர் புத்த சமயத்திற்கு கூடுதல் மதிப்பளிக்கத்தொடங்கினார். இதற்கிடையே சாம்பிராணிக்குச்சி கொளுத்தவும் ஆரம்பித்தார். இருப்பினும் சமய நம்பிக்கைகளில் தலையிடவில்லை, கஷ்டங்கள் ஏற்படும்போது மட்டும்தான் அவர் கடவுளை வணங்கினார்.

ஷெங்ஷி வெய் யென் என்ற நூல் எனது கல்வியை தொடருவதற்கான உத்வேகத்தை என்னுள் ஏற்படுத்தியது. அத்தோடு பண்ணையில் எனது உழைப்பின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. இயல்பாகவே இதை எனது தந்தையார் எதிர்த்தார். இது பற்றி நாங்கள் இருவருமே பிரச்சனைப்பட்டோம். இறுதியில் நான் வீட்டை விட்டு ஓடினேன், ஒரு வேலையற்ற சட்ட மாணவனின் வீட்டுக்குச்சென்றேன். அங்கு ஆறு மாதங்கள் கல்வி கற்றேன். அதன் பின்பு ஒரு முதிய கல்விமானிடம் புராதன இலக்கிய நூலை மேலும் பயின்றேன். அத்தோடு பல சமகாலக் கட்டுரைகளையும் சில புத்தகங்களையும் படித்தேன்.

இந்த நேரத்தில் ஹூனானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி என் முழு வாழ்க்கையிலும் செல்வாக்கை ஏற்படுத்தியது. நான் படித்த ஒரு சிறிய சீனப்பாடசாலைக்கு வெளியே பல வியாபாரிகள் சாங்காவில் இருந்து திரும்பி வருவதை மாணவர்களாகிய நாங்கள் அவதானித்தோம். அவர்கள் அனைவரும் ஏன் திரும்பிச்சென்றார்கள் என்று நாங்கள் அவர்களைக் கேட்டோம். நகரில் ஒரு பெரிய கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக  அவர்கள் கூறினார்கள். அந்த வருடம் ஒரு கடுமையான பஞ்சம் ஏற்பட்டிருந்தது சாங்காவில் பல்லாயிரக்கணக்கானோர் உண்ண உணவின்றி இருந்தனர். பட்டினி கிடந்தோர் உதவி கேட்டு ஒரு பிரதிநிதிக்குழுவை குடிசார் ஆளுனருக்கு அனுப்பினர்.

ஏன் உங்களிடம் உணவு இல்லை, நகரில் உணவு ஏராளமாக உள்ளது, என்னிடம் எப்போதும் ஏராளமாக உள்ளது என்று அந்த ஆளுனர் இறுமாப்புடன் கூறினார். ஆளுனரின் பதில் மக்களுக்கு கூறப்பட்டபோது அவர்கள் கடுமையாக ஆத்திரமுற்றனர். அவர்கள் பொதுக்கூட்டங்களை ஒழுங்கு செய்து ஒரு ஆர்ப்பாட்டத்தையும் ஒழுங்கு செய்தனர். அவர்கள் ஆளுனரின் அரச பணிமனையைத் தாக்கினர் அரசின் அடையாளச் சின்னமான கொடிக்கம்பத்தை வெட்டினார்கள், ஆளுனரை துரத்தியடித்தார்கள். இதனையடுத்து சாங் என்ற உள்ளூர் விவகார ஆணையாளர் தனது குதிரையில் வெளியே வந்து அவர்களுக்கு உதவு முகமாக  நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று மக்களிடம் கூறினார். இந்த வாக்குறுதிகளை வழங்கியதில் சாங் நேர்மையாக இருந்துள்ளார் என்பது வெளிப்படை ஆனால் சக்கரவர்த்தி இவரை வெறுத்ததோடு, இந்த மக்கள் கும்பலோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக இவர்மீது குற்றமும் சாட்டினார். இவர் பதவி விலக்கப்பட்டு ஒரு புதிய ஆளுனர் வந்து சேர்ந்தார். அவர் உடனடியாக இந்தக் கிளர்ச்சியின் தலைவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். இவர்களில் பெரும்பாலானவர்களின் தலை துண்டிக்கப்பட்டு அவர்களது தலைகள் எதிர்கால புரட்சியாளர்களுக்கு எச்சரிக்கையாக கம்பங்களில் குத்தப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. எங்களுடைய பாடசாலையில் இந்த நிகழ்ச்சி பல நாட்களாக விவாதிக்கப்பட்டது. இது என் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனைய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கிளர்ச்சியாளர்களுக்கு அனுதாபம் காட்டினர். ஆனால் இது ஒரு பார்வையாளரின் நோக்கிலேயே அமைந்தது. தங்களுடைய சொந்த உயிரோடு வாழ்க்கையோடு ஏதாவது தொடர்புடையதாக இந்த நிகழ்ச்சி இருக்கிறதா என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இதையொரு புரட்சியூட்டும் நிகழ்ச்சியாகவே அவர்கள் ஆர்வம் காட்டினர். இந்த நிகழ்ச்சியை ஒருபோதும் மறக்கவில்லை, புரட்சியாளர்கள் எனது குடும்பத்தைப்போலவே சாதாரண மக்கள் தான் என்பதை நான் உணர்ந்தேன். அவர்களுக்கு வழங்கப்பட்ட அநீதியால் நான் ஆழமாக ஆத்திரமுற்றேன்.

சில நாட்களுக்குப்பிறகு சாவோசான் என்ற இடத்திலே ஓர் ரகசிய சங்கமான கெலாவோ ஹூய் உறுப்பினர்களுக்கும்(ஹோ லுங் உறுப்பினராக இருந்த அதே சமயம்) ஒரு உள்ளூர் நில உரிமையாளர்களுக்குமிடையே ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அவர் இந்தச் சங்கதினர் மீது வழக்கு தொடர்ந்தார். அவர் ஒரு சக்திமிக்க நில உடைமையாளராக இருந்தபடியால் தனக்கு சாதகமாக ஒரு தீர்ப்பை அங்கு சுலபமாகப் பெற்றர். கெலாவோ உறுப்பினர்கள்  தோற்றுப்போயினர். ஆனால் அவர்கள் அடிபணிவதற்க்குப்பதிலாக அரசுக்கும் அந்த நில உடைமையாளருக்கும் எதிராக கிளர்ச்சி செய்தனர். லியூ ஷான் என்ற ஒரு உள்ளூரிலிருந்து மலைக்கு அவர்கள் பின்வாங்கி அங்கு ஒரு கோட்டையை அமைத்தனர். அவர்களுக்கு எதிராக துருப்புகள் அனுப்பப்பட்டன. கிளர்ச்சிக்காரர்கள் கிளர்ச்சிக்கான பதாகையை தூக்கியபோது ஒரு குழந்தையை பலி கொடுத்ததாக ஒரு கதையை பரப்பிவிட்டனர்.  அந்தப்புரட்சியாளர்களின் தலைவர் மாவரைக்கும் கல் செய்யும் பாங் என்று அழைக்கப்பட்டார். புரட்சியாளர்கள் இறுதியாக அடக்கப்பட்டனர். பாங் ஓடித்தப்ப வேண்டியேற்பட்டது. இறுதியில் அவர் கைது செய்யப்பட்டு தலை துண்டிக்கப்பட்டார். இருப்பினும் மாணவர்கள் கண்களில் அவர் ஒரு மாவீரனாக மிளிர்ந்தார், ஏனென்றால் இந்தப்புரட்சிக்கு அனைவரும் அனுதாபம் காட்டினர்.

அடுத்தவருடம் புதிய நெல் அறுவடை செய்யப்படாமல் இருந்தபோது மாரிக்காலத்திலேயே கையிருப்பு முடிந்து விட்டிருந்தது. இதனால் எங்கள் மாவட்டத்தில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டது. ஏழைகள் பணக்கார விவசாயிகளிடம் உதவி கேட்டனர். காசு இல்லாமலேயே சோறு சப்பிடுங்கள் என்று ஒரு இயக்கத்தை அவர்கள் தொடங்கினார்கள். இதன் பொருள் பெரிய வீட்டில் அதாவது நில உடைமையாளர்களின் களஞ்சியத்தில் இருந்து உணவைப்பெறுவோம் என்பதே. எனது அப்பா ஒரு அரிசி வியாபாரியாக இருந்ததோடு எங்கள் மாவட்டத்தில் இருந்து நகரத்திற்கு அரிசி ஏற்றுமதி செய்பவராகவும் இருந்தார். இத்தட்டுப்பாட்டின் போதும் அப்படியே செய்துவந்தார். இவ்வாறு அனுப்பப்பட்ட ஒரு தொகுதி நெல் ஏழைகளால் கைப்பற்றப்பட்டது. இதனால் அவர் கோபம் எல்லை கடந்ததாயிற்று. இதற்காக அவர்மீது நான் அனுதாபப்படவில்லை.

ஒரு முற்போக்குத் தீவிரவாத ஆசிரியர் கற்பித்த ஒரு உள்ளூர் ஆரம்பப்பாடசாலையில் நான் இருந்தமையும் இந்தக்காலத்தில் என் மீது செல்வாக்கை ஏற்படுத்தியது. அவர் ஒரு முற்போக்குவாதியாக கருதப்பட்டமை, அவர் புத்த சமயத்திற்கு எதிராக இருந்தமையாலும் கடவுளர்களை அகற்ற அவர் முயன்றமையாலுமேயாகும். கடவுளர் இல்லங்களை பாடசாலைகளாக மாற்றும்படி அவர் மக்களைக் கோரினார். பலரால் பலவாறாக விவாதிக்கப்பட்ட மனிதராக அவர் இருந்தார். அவரை நான் வியந்து பாராட்டினேன், அத்தோடு அவரது கருத்துக்களை நானும் ஏற்றுக்கொண்டேன்.

ஏற்கனவே புரட்சிக்குணம் கொன்டிருந்த  எனது இளம் மனதில் அடுத்தடுத்து நிகந்த இந்த நிகழ்ச்சிகள் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தக்காலகட்டத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு அரசியல் உணர்வை நான் பெற்றுக்கொள்ளத்தொடங்கினேன். விசேடமாக சீனா துண்டாடப்பட்டதை அறிவிக்கும் ஒரு துண்டுப்பிரசுரத்தை படித்த பின்பு  இந்த உணர்வுகள் என்னை ஆட்கொண்டன. கீழ்காணும் வசனங்களோடு தான் அந்த துண்டுப்பிரசுரம் தொடங்கியிருந்தது. இது என் மனதில் இன்னும் பதிந்துள்ளது. அந்தோ சீனா அடிமைப்படுத்தப்படப்போகின்றது என்பதே அந்த வசனம். கொரியா தைவான் ஆகியவற்றை ஜப்பான் ஆக்கிரமித்துள்ளதையும் இந்தோசீனா பர்மா மற்றும் வேறு இடங்களில் இருந்த சீன ஆளுமைப்பிரதேசங்கள் இழக்கப்பட்டிருப்பதையும் இந்தப்பிரசுரம் எடுத்துக்காட்டியது. இதைப் படித்தபின்பு எனது நாட்டின் எதிர்காலம் பற்றி நான் மனம் தளர்ந்து போனேன். நாட்டைக் காப்பாற்றுவது அனைவரது கடமை என்பதை நான் உணரலானேன்.

சியா ரான் என்ற இடத்தில் இருந்த ஒரு அரிசிக்கடையில் பயிலுனர் வேலைக்கு அனுப்ப ஆசிரியர் முடிவு செய்தார். இக்கடையில் அவருக்கு தொடர்புகள் இருந்தன, ஆரம்பத்தில் இதை நான் எதிர்க்கவில்லை. ஏனென்றால் இந்த வேலை ரசிக்கக்கூடியதாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் இதே வேளை ஒரு மாறுபாடான ஒரு புதிய பாடசாலையை பற்றி கேள்விப்பட்டேன். அதில் சேர்வது என்று உறுதி பூண்டேன். எனது தாயாரின் குடும்பம் வாழ்ந்த சியாங் சியாங் சீ யென் கிராமத்தில் இந்தப்பாடசாலை இருந்தது. அங்கு கல்வி பயின்ற எனது மைத்துனன் இந்தப்புதிய பாடசாலையைப் பற்றியும் நவீன கல்வி முறையில் ஏற்பட்டுவரும் மாற்றமான நிலைமைகளைப் பற்றியும் எனக்கு எடுத்துக்கூறினார். அங்கு புராதன இலக்கிய நூலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. மேற்கு நாடுகளின் புதிய அறிவு விடயங்கள் பற்றி அதிகமாக போதிக்கப்பட்டதோடு, கல்வி முறைகளும் மிகுந்த முற்போக்கு தன்மை கொண்டவையாக இருந்தன. நான் மைத்துனரோடு சென்று பாடசாலையில் பெயர் பதிவு செய்துகொண்டேன். நான் சியாங் சியாங் கிராமத்தவன் என்றே என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ஏனெனில் அந்த பாடசாலை சியாங் சியாங் பகுதி மக்களுக்கு மட்டுமே கல்வி போதிக்கின்ற ஒரு பாடசாலை என்று கேள்விப்பட்டிருந்தேன். அந்தப்பாடசாலையில் எந்தப்பகுதியினரும் கல்வி பயிலலாம் என்று தெரிந்து கொண்ட பின்பு என்னை சியாங் ரான் ஊரவனாக அடையாளம் காட்டிக்கொண்டேன். எனது 5 மாதக்கல்விக்கான அனைத்துப்பொருட்களும் தங்கும் இடம் உணவு வசதிக்கும் 1400 செம்புக்காசுகளை நான் செலுத்தினேன். எனது வருவாயை பெருக்கும் சக்தியை இந்த உயர்தரக் கல்வி அதிகரிக்கும் என்று எனது நண்பர்கள் எனது தந்தையாரிடம் விவாதித்த பின்பு இறுதியாக இந்தக்கல்வியை தொடர்வதற்கு எனது தந்தையார் அனுமதித்தார். எனது வீட்டிலிருந்து 50 வி தூரத்திற்கு அப்பால்  நான் இருப்பது இதுவே முதற்தடவை. அப்போது எனக்கு வயது 16. இந்தப் புதமிய பாடசாலையில் இயற்கை விஞ்ஞானத்தையும் மேற்கத்திய புதிய பாடங்களையும் என்னால் படிக்க முடிந்தது. இந்தக்கல்லூரியில் கற்பித்த ஆசிரியரொருவர் ஜப்பானில் கல்வி பயின்றவராக இருந்தமை இங்கு மற்றொரு குறிப்பிடத்தகுந்த விடயமாகும். அவர் தனது தலைமயிர் பின்னல்களில் போலி முடி அணிந்திருந்தார் அவரது பின்னல் செயற்கை முடியால் ஆனது என்பதை இலகுவாக கூறமுடியும். அனைவரும் அவரைப்பார்த்து நகைத்ததோடு போலி வெளிநாட்டுப் பிசாசு என்று அழைத்தனர். நான் இதற்கு முன்பு இத்தனை அதிக எண்ணிக்கையிலான பிள்ளைகளை ஒருசேரப் பார்த்ததில்லை. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் நில உடைமையாளர்களின் ஆண் மக்கள். அவர்கள் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்திருந்தார்கள். அத்தகைய பாடசாலைக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப  வெகுசில விவசாயிகளாலேயே முடியும். ஏனையவர்களை காட்டிலும் நான் மோசமான ஆடைகளை அணிந்திருந்தேன். என்னிடம் ஒரே ஒரு அழுக்கான சூட் மட்டும் தான் இருந்தது. கவுண்கள் மாணவர்களால் அணியப்படுவதில்லை, இதை ஆசிரியர்களே அணிந்தனர். வெளிநாட்டுப் பிசாசுகள் மட்டும்தான் அன்னிய ஆடைகளை அணிந்திருந்தனர். பணக்கார மாணவர்களில் பலர் எனது கந்தல் ஆடைக்காக என்னை வெறுத்தனர். இருப்பினும் அவர்களிடையே எனக்கு நண்பர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் எனது நல்ல தோழர்கள், அவர்களில் ஒருவர் தற்போது எழுத்தாளர். அவர் தற்போது சோவியத் ரஷ்யாவில் வாழ்கிறார். அவர் பெயர் சீயே சான் (எமிசியாவ்)

சியாங் சியாங் பகுதியை சேராதவன் என்பதால் நான் வெறுக்கப்பட்டேன்.சியாங் சியாங் கை சேர்ந்தவனாகவும் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தை சேர்ந்தவனாகவும் இருப்பது மிக முக்கியம். அங்கு ஒரு கீழ் மேல் மத்திய மாவட்டங்கள் இருந்தன. இவர்கள் பிராந்திய அடிப்படையில் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இன்னொரு பகுதி இருக்கிறது  என்ற விடயத்தில் இரு பகுதியினருமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்தப்பெயரில் நான் நடு நிலமை வகித்தேன். ஏனென்றால் நான் இந்தப்பகுதியைச் சார்ந்தவன் அல்லவே. இதன் விளைவாக மூன்று பகுதியினர் என்னை வெறுத்தனர். இதனால் நான் உளரீதியாக மனவருத்தம் அடைந்தேன். ஆசிரியர்கள் என்னை விரும்பினர். விசேடமாக புராதன இலக்கியம் படிப்பித்த ஆசிரியர்கள்  என்னை நேசித்தனர்.  ஏனென்றால் நான் இத்துறையில்  கட்டுரைகளை இலக்கிய நயத்தோடு எழுதினேன். ஆனால் எனது மனம் புராதன இலக்கிய நூலில் நாட்டம் கொள்ளவில்லை. எனது மைத்துனன் அனுப்பிய 2 நூலகளை நான் படித்துக்கொண்டிருந்தேன். ஒன்று காங் யூ வெய்யின் சீர்திருத்த இயக்கம் பற்றியதாகும் மற்றது சின் மின் சுங் பாயோ(நவீன மக்களின் பல்வேறு விடயங்களின் தொகுப்பு) இது லியாங் சீ ஷாவ் எழுதியது( லியாங் சீ ஷாவ் மஞ்சு ஆட்சிக்காலதின் இறுதியில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கட்டுரையாளர். இவர் ஒரு சீர்திருத்த இயக்கத்திற்கு தலைவராக இருந்ததன் விளைவாக நாடுகடந்து வாழ வேண்டி ஏற்பட்டது. 1911ல் இடம்பெற்ற முதலாவது புரட்சியின் அறிவியல் தந்தையர்களாக இவரும் காங் யூ வெய்யும் இருந்தனர்)

இந்தப்புத்தகங்களை அவற்றின் விடயங்கள் அனைத்தும் மனதில் பதியும் வரை நான் மீண்டும் மீண்டும் படித்தேன். காங் யூ வெய்யையும், லியாங் சீ ஷாவ்வையும் போற்றிப் பணிந்தேன். இதற்காக எனது மைத்துனருக்கு நான் மிகுந்த நன்றியுடையவானாகின்றேன். அப்போது இவரை ஒரு சிறந்த முற்போக்குவாதி என்று கருதினேன், பின்னரோ அவர் ஒரு எதிர்ப்புரட்சியாளராகவும் பிரபுத்துவக் குடும்ப உறுப்பினராகவும் இருந்ததோடு 1925 1927 இல் இடம்பெற்ற  மகத்தான் புரட்சிக்காலத்தில் அவர் பிற்போக்குவாதிகளோடு இணைந்து கொண்டார்.

பெரும்பாலான மாணவர்கள் போலி வெளிநாட்டுப் பிசாசை அவரது போலியான தலை மயிருக்காக வெறுத்தனர். ஆனால் நான் அவர் ஜப்பானை பற்றி அவர் கூறுவதை விரும்பினேன். அவர் இசையும் ஆங்கிலமும் படிப்பித்தார் அவரது ஜப்பானியப்பாடலொன்று மஞ்சள் கடல் சமர் என்று அழைக்கப்பட்டது. அந்தப்பாடலின் சில அழகான வரிகளை நான் தற்போதும் நினைவில் வைத்துள்ளேன்.

பாட்டுப்பாடும் சிட்டுக்குருவி ஆட்டம் ஆடும்

வானம் பாடி

வசந்தத்தின் இனிய பசும் வெளிகள்

செம்மை நிறத்தில் மாதுளை மலர்கள்

பச்சை வண்ண வில்லோ மரங்கள்

புரியுது! இது ஒரு புதிய காட்சி!

அப்போது ஜப்பானின் அழகை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. ரஷ்யா மீதான அதன் வெற்றியில் ஜப்பானின் பெருமையும் பலத்தையும் பற்றி இந்தப்பாடலிலிருந்து சிறிது என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. (ஜப்பானிய ரஷ்யப்போர் முடிவுற்றதையடுத்து பாரிய போர்ட்ஸ் மௌத் ஒப்பந்தம் ஜப்பானில் ஏற்படுத்திய  பாரிய மகிழ்சிப்பிரவாகத்தையும் இந்தப்பாட்டு எடுத்துக்கூறுகிறது) இன்று எங்களுக்குத்தெரிகின்ற ஒரு மிருகத்தனமான ஜப்பான் ஒன்று இருக்கிறது என்ற விடயம் அப்போது எனக்குத் தெரியாது.

இந்தப்போலி வெளிநாட்டுப் பிசாசிடம் நான் கற்றவை எவ்வளவோ, இந்தக்காலகட்டத்தில் தான் நான் முதலாவது பேரரசரும் ஆட்சி அதிகாரம் பெற்று பேரரசி டவாகர் (சுசி) ஆகிய இருவரும் இறங்துவிட்டதாக  கேள்விப்பாட்டேன். புதிய பேரரசர் சுவான் துவ் ஏற்கனவே இரண்டு வருடங்களாக நாட்டை ஆண்டுகொண்டிருந்த போதிலும் எனக்கு மேற்கூறிய விடயம் அப்போது தான் தெரியும். நான் இன்னும் பேரரசர் ஆட்சி முறைக்கு எதிரானவனாக மாறவில்லை. உண்மையில் நான் பேரரசரையும் பெரும்பாலான அரச அதிகாரங்கலைட்யும் நேர்மையான நல்ல விவேகமான மனிதர்கள் என்றே கருதினேன். காவ் யூ வெய்யின் சீர்திருத்தங்களின் உதவி மட்டுமே அவர்களுக்குத் தேவை. பண்டைய சீன ஆட்சியாளர்களின் சாதனைகளால் நான் பெரிதும் கவரப்பட்டேன். குறிப்பாக யா வோ ஷூன், சீன் ஷீஹ்வாங் டி, காள் வூரி ஆகியோரைப்பற்றிய பல புத்தகங்களை படித்திருந்தேன்.

யாவ் ஷூன் ஆகியோர் ஓரளவு இதிகாசப்ப்புகழ் படைத்த சீனாவின் முதல் பேரரசர்கள், வெய் மஞ்சள் ஆறுகளின் சமவெளிகளில் சீன சமுதாயத்தை உருவாக்கியமை, வெள்ளத்தை கட்டுப்படுத்தியமை (ஆறுகளின் பக்கவாட்டில் கட்டப்பட்ட பாதுகாப்பு அணைகள், கால்வாய்கள் மூலம்) ஆகியவற்றிற்கான  பெருமை இவர்களையே சாரும்.சின் ஷீ க்வாங் டி சீனப்பேரரசை ஒருங்கிணைத்தமை, சீனப்பெருங்சுவரை கட்டிமுடித்தவை ஆகியவற்றிற்கான பெருமையை பெருகிறார். ஹான் வூரி, ஹான் அரச வம்சத்தின் அத்திவாரங்களை உறுதிப்படுத்திய சிறப்பை பெற்றிருக்கின்றனர். சின் அரச வம்சத்தை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இந்த அரச வம்சம்(பின்பு வந்த வராண் ஆட்சிக்காலத்தையும் சேர்த்து சீனவை 426 வருடங்கள் ஆட்சி செய்தது)

இந்தக்காலத்தில் வெளிநாட்டு வரலாறுகள் சிலவற்றையும் புவியியலையும் நான் கற்றேன். அமெரிக்கப்புரட்சியைப் பற்றி எடுத்துக்கூறிய  ஒரு கட்டுரையை படித்தபோதே நான் முதன் முதலில் அமெரிக்காவைப் பற்றி கேள்விப்பட்டேன். அக்கட்டுரையில் ஒரு சொற்றொடர் இவ்வாறு இருந்தது. எட்டு வருட இடர் மிகுந்த ஒரு போரின் பின்பு வாஷிங்டன் வெற்றி பெற்று தனது நாட்டை கட்டி எழுப்பினார். உலகின் மாவீரர்கள் என்ற புத்தகத்தில் தான் நெப்போலியன், ரஷ்யாவின் காத்ரினா, மகா பீட்டர் வெலிங்டொன், கிளாஸ்ட்ரோன்  ரூசோ மொன்டெச்க்க்யூ, லிங்கன்  ஆகியோரைப்பற்றி படித்தேன்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

முகவுரை

மாவோவின் குழந்தைப் பருவம் ௧

மாவோவின் குழந்தைப்பருவம் ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௩


பல்வேறு விசயங்கள் சம்பந்தமாக நான் ஒப்படைத்த ஐந்து அல்லது ஆறு தொகுதி கேள்விகளைப்பற்றி, தலைவர் மாவோ 12 இரவுகள் வரை என்னுடன் கதைத்திருக்கிறார். ஆனால் அதில் குறிப்பிட்ட சில சம்பவங்களில் தனது சொந்தக்கடமைகள் பற்றி அல்லது தன்னைப்பற்றி அவர் ஒருபோதும் குறிப்பிட்டதில்லை. அத்தகைய தகவல்களை அவர் எனக்கு தருவார் என்று நான் எதிர்பார்ப்பது பயனற்றது என்று நான் நினைக்கத் தொடங்கியிருந்தேன். தனிப்பட்டவர்கள் அல்லது அவர்களின் செயற்பாடுகள் வெகு முக்கியத்துவம் குறைந்தவை என்று அவர் வெளிப்படையாகவே கருதினார். நான் சந்தித்த ஏனைய கம்யூனிஸ்டுகளைப்போலவே குழுக்கள் நிறுவனங்கள், படைகள், தீர்மானங்கள் சமர்கள், தந்திரோபாயங்கள், வழிவகைகள் மேலும் பற்பல விசயங்கள் பற்றி கதைப்பதையே அவர் வழிமுறையாக கொண்டிருந்தார். தனிப்பட்ட அனுபவங்களைப்பற்றி அவர் ஒருபோதும் கதைத்ததில்லை.

இலக்கு தழுவாத விடயங்களைக்கூட விரித்துரைப்பதில் அவர் காட்டிய தயக்கமும், தனிப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவரது தோழர்களது அருஞ்சாதனைகளைப்பற்றி கூறுவதில் காட்டிய தயக்கமும் தன்னடக்கம் காரணமாகவோ அல்லது என்னைப்பற்றிய பயம் அல்லது சந்தேகம் காரணமாகவோ அல்லது இந்த மனிதர்களில் பெரும்பாலானோர்களின் உயிர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த பணய விலை பற்றிய உணர்வு காரணமாகவோ ஏற்பட்டிருக்கலாம் என்று நான் சில காலமாக நினைத்தேன். இதற்கான காரணங்கள் நான் மேற்குறிப்பிட்ட விடயங்களல்ல, கம்யூனிஸ்டுகளில் பெரும்பாலானவர்கள் உண்மையாகவே தங்கள் தனிப்பட்ட சாதனைகள் பற்றிய விடயங்களை ஞாபகத்தில் கொண்டிருக்கவில்லை என்பதை நான் பிற்காலத்திலேயே உணர்ந்தேன். நான் தனிப்பட்டவர்களின்வாழ்க்கை வரலாறுகளை தொகுக்கத்தொடங்கியபோது இந்தக் கம்யூனிஸ்டுகள் , தங்கள் இளமையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பற்றிச் சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் என்ற போதிலும் செங்சேனையின் வீரர்களாக தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றை எங்கோ மறந்துவிட்டார்கள் என்பதை நான் மீண்டும் கேள்விகள் கேட்டாலொழிய அவர்களைப்பற்றி ஒருவரும் ஒன்றும் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் ரணுவம் சோவியத் அமைப்புகள் கட்சி ஆகியவை பற்றிய விடயங்களே அவர்களிடமிருந்து வெளிவந்தன. சமர்கள் பற்றிய திகதிகள், சூழ்நிலைகள் இதுவரை கேள்விப்பட்டிராத ஆயிரம் இடங்கலிலிருந்து மேற்கொள்ளப்பட்ட நகர்வுகள் பற்றி இந்த மனிதர்கள் காலவரையறையற்ற முறையில் கதைப்பார்கள். ஆனால் இந்த நிகழ்வுகள் கூட்டு முயற்சி என்ற அடிப்படையிலேயே அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுபோல் தோற்றமளிக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர்கள் அந்த இடத்தில் வரலாறு படைத்திருந்தார்கள் என்பதால் அல்லது செஞ்சேனை அந்த இடத்தில் களிச்சாதனை புரிந்திருந்தது என்பதினால் தான் அவர்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அத்தோடு ஒரு கோட்டின் முழுமையான அடிப்[படை உந்து சக்தியின் பிரதிநிதிகளாக அவர்கள் சண்டையிட்டிருந்தார்கள் என்னைப்பொருத்தமட்டில் இது ஒரு ருசிகரமான கண்டுபிடிப்பு. ஆனால் எனது தகவல் சேகரித்து வெளியிடும் பணியில் இது ஒரு சிரமமான விடயம்.

ஏனைய கேள்விகள் அனைத்திற்கும் திருப்திகரமான முறையில் பதில்கள் வழங்கப்பட்ட பின்பு ஓர் இரவில் நான் தனிப்பட்ட வரலாறு என்று தலைப்பிட்டிருந்த பட்டியலை தலைவர் மாவோ பார்த்தார். அதில் ஒரு கேள்வியை பார்த்துவிட்டு புன்முறுவல் பூத்தார். நீங்கள் எத்தனை முறை திருமணம் செய்துள்ளீர்கள்? நான் தலைவர் மாவோவிடம் உங்களுக்கு எத்தனை மனைவிகள் உண்டு என்று கேட்டதாக ஒரு வதந்தி பின்பு பரவியது. இருப்பினும் ஒரு சுய வாழ்க்கை வரலாற்றுத்தொகுப்பிற்கான விடயங்களை வழங்குவதன் அவசியத்தையிட்டு அவர் பற்றுறுதி அற்றவராக காணப்பட்டார். ஆனால் அது ஒரு வகையில் ஏனைய விடயங்கள் பற்றிய தகவல்களை காட்டிலும் அதிகரித்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நான் வாதிட்டேன். நீங்கள் எத்தகைய மனிதர் என்று மக்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். நீங்கள் கூறுவதை அவர்கள் படிக்கும்போது உங்களைப்பற்றிக்கூறப்படும் சில பிழையான வதந்திகளையும் உங்களால் தவிர்க்கமுடியும் என்று நான் அவரிடம் கூறினேன்.

அவர் இறந்துவிட்டார் என்று கூறப்படும் பல்வேறு தகவல்களை அவருக்கு ஞபகமூட்டினேன். அவர் ஆற்றொழுக்காகபிரெஞ்சு மொழி பேசக்கூடியவர் என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் அவர் ஒரு படிப்பறிவற்ற விவசாயி என்று கூறுகின்றனர். அரை உயிரோடு உள்ள ஒரு காசநோயாளி என்று வேறொரு அறிக்கை கூறுகிறது. வேறு சிலர் அவர் ஒரு பைத்தியக்கார தீவிரவாதி என்று கூறுகின்றனர், என்றெல்லாம் அவருக்கு நான் ஞாபகப்படுத்தினேன். தன்னைப்பற்றிய விடயங்களையிட்டு விவாதிப்பதில் மக்கள் ஏன் தங்கள் காலத்தை வீணாக்கவேண்டும் என்பது குறித்து ஓரளவு ஆச்சிரியப்பட்டவர் போன்று அவர் காணப்பட்டார். தன்னைப்பற்றிய இந்த தகவல்கள் திருத்தப்படவேண்டும் என்று அவர் ஒத்துக்கொண்டார். பின்பு நான் எழுதிக்கொடுத்த வரிசையின் படி அந்த விடயங்கலை மீண்டும் ஒருமுறை பார்த்தார்.

சரி நான் உமது கேள்விகள் அனைத்தையும் வெறுமனே ஒதுக்கிவிடுகிறேன். அதற்க்குப்பதிலாக என்னுடைய வாழ்க்கை பற்றிய பொதுவான தோற்றத்தை தருகிறேன். இது சிறிதளவு கூடுதலக்க விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அத்தோடு இறுதியில் உமது அனைத்துக்கேள்விகளுக்கும் பதில்கள் வழங்கப்பட்டும் இருக்கும். தொடர்ந்து இரவுகளில் இடம்பெற்ற பேட்டிகளில் நாங்கள் ஒரு வகை சூழ்ச்சிக்காரர்கள் போலவே தோற்றமளித்தோம். அந்தக்குகையினுள்ளே சிவப்புத்துணி விரிக்கப்பட்டிருந்த ஒரு மேசையில் எங்களிருவருக்குமிடையே ஒளிவிடு மெழுகுதிரிகளின் வெளிச்சத்தில் முடங்கியபடி எங்கள் கடமையில் ஈடுபட்டோம். எனக்கு நித்திரை வரும்வரை நான் எழுதிக்கொண்டிருந்தேன். எனக்கருகிலேயே வூ லியாவ் பிங் இருந்துகொண்டு மென்மையான தென் பகுதிப்பேச்சு வழக்கு மொழியில் மாவோ எனக்கு கூறியவற்றை விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார். வடபகுதிப்பேச்சு வழக்கு மொழியிலிருந்து அது வினோதமான பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. மாவோ அவரது நினைவிலிருந்த அனைத்து விடயங்களையும் கூறினார். அவர் பேசப்பேச நான் எழுதிகொண்டிருந்தேன். இவை மீள மொழிபெயர்க்கப்பட்டு திருத்தப்பட்டு அதன் விளைவாகத்தான் இந்த வரலாற்றுத்தொகுப்பு உருவாயிற்று. பொறுமை வாய்ந்த வூ அவர்களின் சொற்றொடர் அமைப்பில் மேற்கொண்ட சில அவசியமான திருத்தங்களைத்தவிர இந்தத்தொகுப்பிற்கு இலக்கிய நயம் ஊட்டும் எந்த முயற்சியையும் நான் மேற்கொள்ளவில்லை.

சியாங் தான் மாவட்டத்திலுள்ள ஷாங் ஷாங் என்ற ஊரில் நான் பிறந்தேன். ஹூனான் மாகாணத்திலுள்ள இந்த ஊரில் நான் 1893ஆம் ஆண்டு பிறந்தேன். எனது தந்தையார் பெயர் மாவோ ஜென் ஷெங், திருமணமாகும் முன்பு என் தாயாரின் கன்னிப்பெயர் லென் சி மென்.

எனது தந்தையார் ஒரு ஏழை விவசாயி. அவர் இள வயதிலேயே கடுமையான கடன் தொல்லை காரணமாக ராணுவத்தில் சேரவேண்டி ஏற்பட்டது. அவர் பல வருடங்கள் ராணுவ வீரனாக கடமை புரிந்தார். பின்பு அவர் ஊர் திரும்பினார். அங்கு நான் பிறந்தேன். கவனமாக சேமிப்பதன் மூலமும் சிறு வர்த்தகங்கள் மூலமும் ஏனைய முயற்சிகள் மூலம் சிறிது பணத்தை சேர்த்தெடுத்து அவரால் தனது நிலங்களை மீள வாங்கிக்கொள்ள முடிந்தது.

நடுத்தர விவசாயிகளாக இருந்த எங்கள் குடும்பம் அப்போது 15 மு (ஒரு ஹெக்டேருக்கு சமம்) நிலப்பரப்புள்ள காணியை கொண்டிருந்தது. இந்தக்காணியிலிருந்து 60 ரான் (ஒரு ரான் என்பது 133 ராத்தலுக்குச்சமம்) அரிசியை அவர்கலால் உற்பத்தி செய்ய முடிந்தது. எங்கள் குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்களும் 35 ரான் அரிசியை உணவாகக்கொண்டனர். அதாவது ஒருவருக்கு 7 ரான் அரிசி. இதன் மூலம் வருடாந்தரம் 25 ரான் அரிசி மேலதிகமாக மிகுந்திருந்தது. இந்த மேலதிகமான வருவாயை பாவித்து எனது தந்தையார் ஒரு சிறிய மூலதனத்தை செர்த்தெடுத்தார். காலப்போக்கில் மேலும் 7 மு பரப்புக்கொண்ட காணியை வாங்கினார். இது எங்கள் குடும்பத்திற்கு பணக்கார விவசாயிகள் தகு நிலையை கொடுத்தது. அப்போது எங்களால் 84 ரான் அரிசியை உற்பத்தி செய்து கொள்ள முடிந்தது.

எனது அப்பா ஒரு நடுத்தர விவசாயியாக இருந்த சமயம் தானிய போக்குவரத்து விற்பனை முயற்சிகளிலும் ஈடுபட்டார். இதன் மூலம் அவர் சிறிது பணத்தை சேர்த்துக்கொண்டார். அவர் பணக்கார விவசாயியாக வந்த பின்பு தனது நேரத்தில் பெரும்பகுதியை மேற்படி வியாபாரத்தில் செலவிட்டார். அவர் ஒரு முழு நேர பண்ணைத் தொழிலாளியை வேலைக்கமர்த்திக் கொண்டதோடு தனது மனைவியையும் மக்களையும் பண்ணை வேலையில் ஈடுபடுத்தினார். பண்ணைக்கடமைகளில் நான் ஆறு வயதாக இருக்கும் போது ஈடுபடத்தொடங்கினேன். எனது தந்தையாரின் வியாபாரத்திற்கென்று கடை எதுவும் இருக்கவில்லை. அவர் ஏழை விவசாயிகலிடமிருந்து தானியங்கலை வாங்கி நகர்ப்புற விcவசாயிகளுக்கு அவற்றை விற்றர். அங்கு அவற்றிற்கு சிறிய கூடிய விலை கிடைத்தது. அரிசி மாவாக அறைக்கப்படும் மாரிக்காலத்தில், பண்ணை வேலைக்காக மேலும் ஒரு தொழிலாளியை வேலைக்கமர்த்திக்கொண்டார். ஆகவே அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தில் ஏழு பேருக்கு உணவு வழங்க வேண்டியிருந்தது. எனது குடும்பம் சிக்கனமாகவே உணவுப்பொருட்களை பயன்படுத்தியது. ஆனால் எப்போதும் அவை எங்களுக்கு போதுமான அளவாக இருந்தது.

எனக்கு எட்டு வயதான போது நான் ஒரு உள்ளூர் ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயின்றேன். 13 வயது வரை அங்கேயே தொடர்ந்து கல்வி பயின்றேன். அதிகாலையிலும் இரவிலும் நான் பண்ணையில் வேலை செய்தேன். பகலில் நான் கன்பூஷியன் அனலெக்ற்ஸ், நான்கு புராதன் இலக்கியங்கள் ஆகியவற்றை படித்தேன். எனது சீன ஆசிரியர் கடுமையான கட்டுப்பாட்டைப் பேணும் வகுப்பைச்சார்ந்தவர். வெகு கடுமையானவர். அவர் மாணவர்கலை அடிக்கடி அடிப்பார். இதன் காரணமாக, எனக்கு 10 வயதாக இருக்கும்போது நான் பாடசாலையை விட்டு ஓடிப்போனேன். வீட்டிலும் நான் அடிவாங்க வேண்டி வரும் என்பதால் நான் வீட்டிற்கு திரும்புவதற்கு பயப்பட்டேன். எங்கோ ஒரு சமவெளிப்பகுதியில் இருக்கும் என்று நான் நினைத்திருந்த நகரத்தை நோக்கி நான் நடங்தேன். அவ்வாறு மூன்று நாட்கள் அலைந்து திரிந்தேன். இறுதியில் எனது குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டேன். எனது பயணத்தின்போது ஒரு சுற்று வட்டப்பாதையில் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தேன் என்பதையும் வீட்டிலிருந்து ஒரு 8 லீ அளவுதான் எனது பயணம் முன்னேறியிருந்தது என்பதையும் பிற்பாடு அறிந்து கொண்டேன்.

நான் வீட்டுக்கு திரும்பிய பின்பு ஆச்சரியத்திற்குறிய வகையில் நிலைமைகள் ஓரளவு முன்னேற்றமடைந்தன. எனது தந்தையார் ஓரளவு புரிந்துணர்வோடு நடந்து கொண்ட அதேவேளை எனது ஆசிரியரும் சிறிது கட்டுப்பாடாக நடந்து கொண்டார். எனது ஆட்சேப நடவடிக்கையின் பெறுபேறு என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு வெற்றிகரமான வேலை நிறுத்தமாக அமைந்தது.

நான் சிறிதளவு கல்வியை பெற்றவுடனேயே குடும்பத்தின் கணக்குப்புத்தகங்களை நான் எழுதத்தொடங்கவேண்டும் என்று எனது தந்தையார் விரும்பினார். கணிதமானியை பயன்படுத்துவதற்கும் நான் பழகவேண்டும் என்றும் அவர் விரும்பினார். இதை எனது தந்தையார் வலியுறுத்தியமையால் இந்தக்கணக்குகளை இரவில் நான் செய்யத்தொடங்கினேன். அவர் ஒரு கடுமையான வேலை வாங்குபவர், நான் சோம்பியிருப்பதை அவர் வெறுத்தார். கணக்கு வேலைகள் ஒன்றும் இல்லாவிட்டால், பண்ணைக்கடமைகளில் என்னை அவர் ஈடுபடுத்தினார். அவர் ஒரு முன்கோபக்காரர், அவர் என்னையும் எனது சகோதரனையும் அடிக்கடி அடிப்பார். அவர் எங்களுக்கு எவ்வித பணத்தையும் தரமாட்டார். ஒவ்வொரு மாதம் 15ம் திகதியும் தனது தொழிலாளர்களுக்கு சலுகையாக அரிசியோடு முட்டையும் வழங்குவார், ஆனால் ஒருபோதும் இறைச்சி கொடுக்கமாட்டார். என்னைப்பொருத்தவரை எனக்கு முட்டையும் தரமாட்டார், இறைச்சியும் தரமாட்டார்.

எனது தாயார் ஒரு கருணை நிறம்பிய பெண்மணி, தாராள குணமும் இரக்க சிந்தனையும் கொண்டவர். தன்னிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராக இருப்பார். அவர் ஏழைகளுக்காக இரக்கப்பட்டார். பஞ்ச காலங்களின் போது யாராவது அரிசி கேட்டுவந்தால், அவர்களுக்கு அவறை வழங்குவதை வழமையாக கொண்டிருந்தார். ஆனால் எனது தந்தையின் முன்னிலையில் அவ்வாறு அவரால் செய்ய முடியாது, அவர் தான தருமங்களை அனுமதிக்கவும் மாட்டார். இந்த விடயத்தில் எங்கள் வீட்டில் நாங்கள் பல தடவை சண்டை பிடித்திருக்கிறோம்.

எங்கள் குடும்பத்தில் இரண்டு குழுக்கள் இருந்தன, ஒரு கட்சியில் வீட்டு ஆளுனரான அப்பா இருந்தார். எதிர்க்குழுவில் நான் அம்மா தம்பி சில வேளைகளில் வீட்டு தொழிலாளியும் இருந்தோம். இந்த எதிர்க்கட்சியின் கூட்டு முன்னணியில் கருத்து வேறுபாடு ஒன்று இருந்தது. எனது தாயார் மறைமுகமான தாக்குதலை ஆதரித்தார். உணர்ச்சிகளை வெளிப்படையாகக்காட்டுவதையும் வெளிப்படையான புரட்சி முறைகளையும் கண்டித்தார். இதை சீன பண்பாட்டு முறை என்று அவர் கூறுவார்.

எனக்கு 13 வயதாக இருந்தபோது தந்தையாருடன் விவாதிப்பதற்கான, ஒரு வலிமைமிக்க எனது சொந்த விவாதக்கருப்பொருளை நான் கண்டுபிடித்தேன். அவரது பாணியிலேயே புராதன இலக்கிய நூலிலிருந்து நான் அவற்றை உணர்ந்திருந்தேன். என் மீதான என் தந்தையாரின் விருப்பமான குற்றச்சாட்டுகள், எனது பெற்றோர் மீது நான் காட்டும் அவமரியாதை, சோம்பேறித்தனம் ஆகியவையாகும். இதற்குப் பதிலுரையாக புராதன இலக்கிய நூலிலிருந்து நான் சில எடுத்துக்காட்டுகளைக் கூறினேன். அதில் மூத்தவர்கள் அன்பும் பாசமும் காட்டவேண்டும் என கூறப்பட்டிருந்தது. நான் சோம்பேறி என்ற குற்றச்சாட்டுக்கு பதிலுரையாக இளையவர்களைக்காட்டிலும் பெரியவர்கள் கூடுதலாக வேலை செய்யவேண்டும் என்றிருந்ததை எடுத்துக்காட்டி கூறினேன். அதோடு எனது தந்தையார் என்னைக்காட்டிலும் 3 மடங்கு வயது கூடியவர், ஆகையால் அவர் கூடுதலாக வேலை செய்யவேண்டும் என்று நான் கூறினேன். நான் அவரது வயதை அடையும் போது அவரைக்காட்டிலும் மேலும் உத்வேகத்துடன் பணியாற்றுவேன் என்று பிரகடனம் செய்தேன்.

தகப்பனார் தொடர்ந்து செல்வத்தைச் சேர்த்தார். அந்தச் சிறிய கிராமத்தில் அது ஒரு பெரிய பொக்கிசமாக கருதப்பட்டது. அவர் தானக மேலும் பல காணிகளை வாங்கவில்லை, ஆனால் அவர் ஏனைய மக்களுடைய காணிகளின் மீதான பல கடன் ஈடுகளைச்செலுத்தி அக்காணிகளைக் கையேற்றார். அவரது மூலதனம் 2000 அல்லது 3000 சீன டொலர்களாக உயர்ந்தது. (மாவோ சீனப்பணமான யுவான் என்ற சொல்லையே பயன்படுத்தினார். இந்தச்சொல் பெரும்பாலும் சீன டொலர் என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் சீனாவின் கிராமப்புறத்தில் 1000 யுவான் காசாகக் கையிறுப்பானது ஒரு பெருந்தொகையாகக் கருதப்பட்டது)

எனது அதிருப்தி அதிகரித்தது. எங்கள் குடும்பத்தில் எழுந்த இச்சொற் போராட்டம் தொடர்ந்து விருத்தியடைந்தது. (மேலே குறிப்பிட்ட அரசியல் கலைச்சொற்களை தனது விளக்கங்களில் மாவோ நகைச்சுவையாக பயன்படுத்தினார். இந்த நிகழ்சிகளை நினைவுகூறும் போது சிரித்துக்கொண்டே கூறினார்) ஒரு நிகழ்ச்சி எனக்கு விசேடமாக நினைவிலிருக்கிறது. எனக்கு வயது 13ஆக இருந்தபோது எனது தந்தையார் பல விருந்தினர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார். அவர்கள் அங்கு இருக்கும்போது எனக்கும் தந்தையாருக்கும் இடையே ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அவர்கள் அனைவர் முன்னிலையிலும் என்னை சோம்பேறி பிரயோசனம் இல்லாதவன் என்று அப்பா ஏசினார்.இது எனக்கு கோபமூட்டியது நானும் அவரை ஏசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். அம்மா என்பின்னால் ஓடி வந்து என்னை வீட்டுக்கு திரும்புமாறு இணங்கவைக்க முயன்றார். நான் குளத்தின் விளிப்பிற்குச்சென்று யாரவது என்னை நெருங்க முயன்றால் குளத்தில் குதிக்கப்போவதாக அவரை அச்சுறுத்தினேன். இந்த சூழ்நிலையில் கோரிக்கைகளும் எதிர்கோரிக்கைகளும் உள்நாட்டு உத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விடுக்கப்பட்டன. நான் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் நிலத்தில் விழுந்து வணங்கவேண்டும் என்றும் அப்பா வலியுறுத்தினார் நான் முழங்காலை தாழ்த்தி வணங்குவதாகக் கூறினேன். அதுவும் அப்பா என்னை அடிக்கக்கூடாது என்று உறுதியளித்தால் தான் அவ்வாறு செய்வதாகக் கூறினேன். இதன் மூலம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இவ்வாறு நான் வெளிப்படையான கிளர்ச்சி மூலம் எனது உரிமைகளை பாதுகாக்க முனையும் போது அவர் விட்டுக்கொடுத்தார், ஆனால் நான் பல்கீனமாகவும் கீழ்படிவாகவும் நடந்தால் என்னை அவர் ஏசவும் கூடுதலாக அடிக்கவுமே செய்தார்.

இதன் பிரதிபலனாக அப்பாவின் கடுமை இறுதியில் அவரைத்தோற்கடித்தது. நான் அவரை வெறுக்கத்தொடங்கினேன். நாங்கள் அவருக்கு எதிராக ஒரு உண்மையான ஐக்கிய முன்னணீயை உருவாக்கினோம். அந்த வேளை இது எனக்கு பெரும்பாலும் நன்மையாகவே முடிந்தது. இது என்னை எனது வேலைகளில் மிகவும் கவனமும் திறமையும் உள்ளவனாக்கியது. அவர் என்னை குறைகூறி தண்டிப்பதற்கு இடம்தராத வகையில் எனது கணக்குப்புத்தகங்களை கவனமாக எழுதவைத்தது. எனது தந்தையார் இரண்டு வருடம் பாடசாலையில் பயின்றிருந்தார், அத்துடன் கணக்குப்புத்தகங்கள் எழுதுவதற்குப் போதுமான கல்வியும் கற்றிருந்தார். எனது தாயார் முழுமையான கல்வியறிவு இல்லாதவர். நான் புராதன இலக்கிய நூல்களை படித்துள்லேன் ஆனால் அவறை வெறுத்தேன். பண்டைய சீன கற்பனைக்கதைகளையே நெஆன் விரும்பிப்படித்தேன். விசேடமாக புரட்சிகள் பற்றிய கதைகளை விரும்பினேன். யோ பெய் சுவான் (யோ பெய்யின் வரலாற்றுத்தொகுப்பு) சுய் ஹூ சுவான் (தண்ணீர் விளிம்பு) பான் ராங் (ராங்கிற்கு எதிரான புரட்சி) சான் குவோ (மூன்று முடியாட்சிகள்) சி யூன் சீ (மேற்குப்பகுதியில் பயணங்கள்) ஆகிய நூல்களை நான் படித்தேன். வெகு இளமையிலேயே இந்த தடை செய்யப்பட்ட புத்தகங்களை தீய புத்தகங்கள் என்று வெறுத்த எனது முதிய ஆசிரியரின் தீவிர கண்காணிப்பின் மத்தியிலும் இவற்றை நான் படித்தேன். இவற்றை நான் பாடசாலை நேரங்களிலும் படித்தேன். ஆசிரியர் என்னைக் கடந்து செல்லும் போது அவற்றை புராதன இலக்கிய நூலால் உருமறைப்பு செய்து கொள்வேன். இதுபோன்றே எனது பாடசாலை நண்பர்களும் படித்தார்கள். நாங்கள் இந்தக்கதைகளை மனதில் இருத்தக்கூடிய அளவிற்கு படித்தோம். இவற்றைப்பற்றி பல தடவைகள் விவாதித்தோம். கிராமத்தில் உள்ள முதியவர்களைக்காட்டிலும், இந்த நூல்களை நாங்கள் அதிகம் படித்திருந்தோம். அந்த முதியவர்களும் இந்தக்கதைகளை விரும்பினார்கள். அத்தோடு இந்தக்கதைகளை அவர்கள் எங்களோடு பகிர்ந்து கொள்வதுமுண்டு. மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வயதில் படித்த இந்த நூல்களினால் நான் வெகுவாக ஆளுமைப்படுத்தப்பட்டேன் என்று நம்புகிறேன்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

முகவுரை

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் முகவுரை

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௨

முகவுரை

சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் உன்னதத் தலைவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றவர்களுக்கு அடுத்தபடியாக விளங்கிய தலைவரான மாவோ அவர்களின் நூறாவது ஜனன தினமாகிய 1993 டிசம்பர் 26ம் தேதியை நினைவு கூறுமுகமாக மாவோவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் உங்களுக்குத்தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். மாவோவை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய வெளியீடுகள் பெருமளவில் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள போதிலும் தமிழில் அவ்வாறான வெளியீடுகள் வந்தனவா என்பது கேள்விக்குறியே. தேசியப்பத்திரிக்கைகள் என்று கூறிக்கொள்ளும் தமிழ்ப்பத்திரிக்கைகளில் வெளிவந்த, வெளிவரும் கட்டுரைகள், செய்திகள் பெரும்பாலானவை மாவோவின் சாதனைகளை கொச்சைப்படுத்துபவையாகவும் திரிபுபடுத்துபவையாகவும் இருக்கின்றன. தலைவர் மாவோவை நினைவு கூறும்போது அவர் சாதித்தவை எவை, அவர் எத்தகைய சூழ்நிலைகளில் இவற்றை சாதித்தார். அவர் சீன மக்களுக்கும், உலக மக்களுக்கும் காட்டிச்சென்ற பாதை என்ன என்பவற்றை நாம் கற்றுணர்ந்தால் மட்டுமே நமது நாட்டிலும் ஒரு சுரண்டலற்ற, இன அடக்குமுறை இனப்பாகுபாடு அற்ற சகல மக்களுக்கும் சமத்துவமான  சுபீட்சமான மக்கள் சமுதாயமொன்றை கட்டியெழுப்பும் பணியில் முன்னேறுவதற்கு அடித்தளம் அமைத்தவர்களாவோம்.

ஏனைய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் தலைவர் மாவோ அவர்கள் மார்க்சிய லெனினிசத்தை மிகவும் இலகுவான முறையில் சீனாவிற்கும் உலகிற்கும் விளக்கினார். சீனாவில் ஒரு சக்திமிகு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி, அதன் தலைமையில் ஒரு கட்டுப்பாடான விடுதலைப்படையை உருவாக்கி, பல்வேறு கருத்துகளையும் கொள்கைகளையும் கொண்டிருந்த மக்களையும் கட்சிகளையும் பொது எதிரிக்கு எதிராக ஒரு பரந்த ஐக்கிய முன்னணி மூலம் அணிதிரட்டி  ஏகாதிபத்தியத்தையும், பிரபுத்துவத்தையும், தரகு முதலாளித்துவத்தையும் இறுதியில் தோற்கடித்தமை ஓர் அளப்பறிய சாதனையாகும்.

ஒரு நீண்ட மக்கள் யுத்தத்திற்கு தேவையான மூல உபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுத்து கிராமங்களை முதலில் விடுவித்து இறுதியில் நகரங்களை கைப்பற்றி முழுத்தேசத்தையும் விடுதலை செய்து மக்கள் ஜனநாயகத்தை ஏற்படுத்தியது மற்றுமொரு சாதனையாகும்.

அரைக்காலனித்துவ, அரை நிலப்பிரபுத்துவ நாடொன்றில் சகல ஏகாதிபத்திய விரோத சக்திகளையும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலமையின் கீழ் ஐக்கியப்படுத்தி ஜனநாயகப்புரட்சியை வென்றெடுத்து, அதன் அடுத்தகட்டமான சோசலிசத்தை ஏற்படுத்த வழிவகுத்தமை விடுதலைக்காக போராடும் அனைத்துலக மக்களுக்கும் ஒரு பாடமாக அமைகிறது.

சீனாவை சுயசார்பின் மூலம் ஒரு பலம் மிக்க சோசலிச நாடாக்க நடவடிக்கை எடுத்தமை, சோவியத் யூனியன் தலமையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் உருவெடுத்த நவீன திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தமை என்பன மூலம் மாக்சிய லெனினியத்தையும், புரட்சிகர இயக்கங்களையும் வளர்த்தெடுத்து உலகின் அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக மாவோ விளங்கினார்.

இலங்கை வாழ் தமிழ் மக்கள் என்றும் இல்லாத இன ஒடுக்கு முறைக்கு ஆளாக்கப்பட்டு பேரினவாதப் போக்கு அதன் உச்சகட்டத்தை அடைந்துள்ள இவ்வேளையில் இந்த நாட்டு மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வுக்கு என்ன வழியென்பதை மாவோ அவர்கள் காட்டிய பாதை மூலமே கற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் வடக்கு கிழக்கிற்கு சுயாட்சி அமைப்பு வழங்குவதன் மூலமே சாத்தியமென புதிய ஜனநாயக கட்சியும் அதன் முன்னோடியான கம்யூனிஸ்ட் கட்சியும் 1955 இல் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளன. இனங்கள் யாவும் சமமானவை என்ற நிலைபாட்டிலேயே  தீர்வு ஒன்று அமையவேண்டும்.

சீனாவில் அரசியல் அமைப்பின் முகவுரையிலேயே சீனா பல இனங்களைக்கொண்ட ஒரு நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இனங்கள் யாவும் சமமானவை என்றும் ஓர் இனம் வேறு ஓர் இனத்தை அடக்கக்கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சிறுபான்மை இனத்தவர்கள் முழுச்சனத்தொகையில் 8.04 வீதமானவர்கள் மட்டுமே. இந்த 8.04 வீதத்தினருள் 55 இனங்கள் உள்ளன. பெரும்பானமை இனத்தைச் சேர்ந்த  மாவோ அவர்கள் பெரும்பான்மை ஹான் இனத்தின் தலைவராக மட்டுமல்லாமல் சீனாவின் சகல இன மக்களின் ஒப்பற்ற தலைவராகவும், உலகின் சகல அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராகவும் விளங்கினார்.

சீனாவின் யதார்த்தத்திற்கு ஏற்ற வகையில் சிறுபான்மை இனங்களுக்கான சுயநிர்ணய உரிமையை உத்திரவாதப்படுத்தும் வகையில் சுயாட்சி அமைப்புகளை உருவாக்கியதன் மூலம் இனங்களுக்கிடையேயான ஐக்கியத்திற்கு வழி சமைக்கப்பட்டது.

சீனாவில் சிறுபான்மை இனத்தவர்கள் சனத்தொகையில் 8.04 வீதம் மட்டுமே என்ற போதிலும் சுயாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பிரதேசங்களின் நிலப்பரப்பானது 62 மூ (அறுபத்தியிரண்டு வீதம்) என்பது குறிப்பிடத்தக்கதாகும். வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சிக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் பித்தலாட்டக்காரர்கள் சீனாவைப்பார்த்து தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்களா?

சீனாவின் சிறுபான்மை இனங்களை கிண்டல் செய்யும் அவமானம் செய்யும் முகவரிகள், இடப்பெயர்கள், குறியீடுகள் யாவும் முழுச்சீனாவிலிருந்தும் அகற்றப்படவேண்டுமென்ற கட்டளையை சீன மத்திய அரசாங்கம் 1951ம் ஆண்டிலேயே விடுத்திருந்தது. சகல அரசாங்க அமைப்புகளிலும் சகல சிறுபான்மை இனப்பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். ஆகச்சிறிய சிறுபான்மை இனமான ஷெஷான் (சுமார் இரண்டாயிரம் பேர்) தேசிய மக்கள் காங்கிரசில்  ஒரு பிரதிநிதியை கொண்டிருக்கிறது.

சீனா முழுமையாக விடுதலையடையுமுன்பே உள்மங்கோலிய சுயாட்சிப்பிரதேசம் 1947 மே மாதம் 1ம் தேதியே நிறுவப்பட்டது இங்கு கவனிக்கத்தக்கது. சீனாவின் சிறுபான்மை இனங்கள் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பால் கொண்டிருந்த நம்பிக்கையை இது காட்டுகிறது. கிங்கியாங் உய்குர் சுயாட்சிப்பிரதேசம் பதினாறு லட்சம் கிலோமீட்டர் பரப்புடையது. அதாவது சீனாவின் நிலப்பரப்பில் ஆறில் ஒன்று, சனத்தொகை ஒன்றரைக்கோடி அளவேயாகும். திபெத் சுயாட்சிப்பிரதேசத்தின் நிலப்பரப்பு பன்னிரண்டு லட்சம் சதுர கிலோமீட்டராகும், இது சீனாவின் நிலப்பரப்பில் எட்டில் ஒன்றாகும், அதன் சனத்தொகையோ சுமார் இரண்டு கோடியாகும். சீனாவில் ஐந்து சுயாட்சிப்பிரதேசங்கள் உள்ளன. அவற்றிற்கு வெளியேயும் குறிப்பிட்ட ஐந்து இனங்களும் பரந்து வாழ்கிறார்கள். அங்கும் கூட இவர்களுக்கு சுயாட்சி அமைப்புகள் உள்ளன. இது தான் சோசலிசத்திற்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும் இடையேயான வித்தியாசம்.

எனவே சீனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம் உள்ளது. மாவோவின் வழிகாட்டலில் சீனக்கம்யூனிஸ்ட் தலைமையில் உருவாக்கப்பட்ட சுயாட்சி அமைப்புக்கான சட்டத்தை நாம் கற்றறிந்து நமது நாட்டின் சூழலுக்கு ஏற்ற வகையில் நமது நாட்டின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வது நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஐக்கியத்திற்கும் வழிவகுக்கும்.

நா. சிறி மனோகரன்

இலங்கை சீன நட்புச்சங்கம்.

இந் நூலின் முந்திய பகுதிகள்

பதிப்புரை

%d bloggers like this: