இன்று தீபாவளித் திருநாளாம், வழக்கமான உற்சாகம் இல்லாமலும், வெடிச்சத்தம் குறைவாகவும் இருக்கிறது. இதற்கு சமூகம், பொருளாதரம் உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம். போகட்டும். தீபாவளி கொண்டடலாமா? கூடாதா? தமிழ்நாட்டில் பெரியாரியவாதிகள் தொடங்கி இடதுசாரிகள் வரை தீபாவளி கொண்டாடுவதில்லை. காரணம் அது பொங்கலைப் போலன்றி இந்து மதத்தின் திருநாளாக இருப்பதால் தான். இந்து மதத்தின் திருநாட்கள் கொண்டாட்டத்துக்கு உரியவைகள் அல்ல. ஏனென்றால் இந்து மதம் என்பதே பார்ப்பன மேலாதிக்கத்தின் திணிப்பு. ஆகவே, அவை கொண்டாட்டத்திற்கு உரியவையல்ல. இதையும் மீறி தீபாவளியின் … தீபாவளியை என்ன செய்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகுப்பு: பண்பாடு
சாத்திர, சம்பிரதாயங்கள் யாருக்காக?
தீண்டாமைக் கொடூரங்கள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பொதுப்புத்தியோ, “இப்பெல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?” என்றிருக்கிறது. அண்மையில் மனு சுமிரிதி குறித்து சச்சரவு எழுந்த போது அதே பொதுப்புத்தி, “மனு சுமிரிதி பழம் பஞ்சாங்கம் சார். யாரும் இப்ப அதெல்லாம் படிக்கிறதும் இல்லை, அதன்படி நடக்குறதும் இல்லை” என்று குழைகிறது. ஆனால் மக்களின் வாழ்வில் அவை எப்படி நுழைத்து சிந்தையை கைப்பற்றுகின்றன என விளக்குகிறார், பேரா. கருணானந்தன்.
மீளும் வரலாறு: அறியப்படாத நந்தன் கதை
நந்தன் யார்? என்றொரு கேள்வியை எழுப்பினால் தில்லை நடராஜர் கோவிலோடு இணைத்து ஒரு பெரிய கதை சொல்லப்படும். இந்தக் கதைக்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், அப்படி எதுவும் கிடைக்காது. சேக்கிழாரின் திருத் தொண்ட புராணத்திலிருந்து தொடங்குகிறது இங்கு வழங்கப்படும் நந்தனின் கதை. ஆனால் நந்தன் ஒரு மன்னன். அந்தனை மன்னனை சூழ்ச்சி செய்து கொன்ற வரலாறு, தமிழ்நாட்டில் பௌத்த சமண மதங்களின் அழிவினோடும், சைவ மத மேலோங்கலோடும் தொடர்புடையது. இதை விளக்குவது தான் இரவிகுமாரின் இந்த … மீளும் வரலாறு: அறியப்படாத நந்தன் கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.
பசுக் குண்டர்களின் அடுத்த கட்டம்
செய்தி: மத்திய அரசு இந்தியப் பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு குழுவினை அமைத்துள்ளது. இக்குழு தற்காலத்திலிருந்து 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான இந்திய கலாச்சாரம் குறித்தும் அதன் தொடக்கம் குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். இந்தக் குழுவில் பண்டைய கலாச்சாரம் பெருமை படைத்துள்ள தமிழகத்திலிருந்தோ, தென்னிந்தியாவிலிருந்தோ, வடகிழக்கு மாநிலங்களிலிருந்தோ … பசுக் குண்டர்களின் அடுத்த கட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.