கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே

அண்மைக்காலமாக முகநூலில் இஸ்லாமிய பரப்புரைப் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாத்திகர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு அவர்கள் இடும் பதிவுகள் நகைப்பை வரவழைக்கின்றன. எடுத்துக்காட்டாக புர்கா கலாச்சாரத்தை எதிர்க்கிறோம் என்றால் பெண்களை ஆடையில்லாமல் அலையச் சொல்கிறோம் என்று அவர்களாகவே பொருள் கொண்டு அதற்கு விளக்கம் அளித்து புளகமடைந்து கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு முகநூல் பக்கத்தை இப்படி தொடங்கி இருக்கிறார்கள்.  “நாத்திகர்கள் இஸ்லாத்தை நோக்கி பல கேள்விகளையும் அவதூறுகளையும் முன்வைப்பர். முஸ்லிம்கள் பதில்களை மட்டுமே அளிப்பர். இங்கு … கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஹிஜாப்: இந்தியாவும் ஈரானும்

இந்த ஆண்டின் தொடக்க மாதங்களில் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை போராட்டமாக மாறியது. அப்போது பலரும் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக நின்றனர், குறிப்பாக இடதுசாரிகள். ஒரு மதப் பழக்கத்தை இடதுசாரிகள் ஆதரிக்கலாமா? என்று அந்த நிலைப்பாடு அப்போது விவாதத்துக்கு உள்ளாகியது. கர்நாடக கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணியலாமா கூடாதா அந்த வழக்கில் நீதிமன்றமே இருவேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. அந்த வழக்கு தற்போது உச்ச நீதி மன்றத்தில் உள்ளது. கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணியலாமா எனும் கேள்வி மதப் பழக்கம் எனும் … ஹிஜாப்: இந்தியாவும் ஈரானும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீண்டும் ஒரு விவாதம்

கடவுள் யார்? அணமையில் நண்பர் ஒருவர் ’இஸ்லாம் vs நாத்திகம் தத்துவார்த்த உரையாடல்’ என்ற முகநூல் பக்கத்துக்கான இணைப்பை அனுப்பி இந்த பக்கத்தை சென்று பாருங்கள். அதன் பதிவுகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் சென்று பார்த்த போது கிடைத்த முதல் பதிவு தான் ’கடவுள் யார்?’ எனும் இந்தப் பதிவு. கடவுள் இல்லை என்பவர்கள் கடவுள் என்றால் என்ன, எந்தக் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டும். சிவன் இல்லை என்பதா, … மீண்டும் ஒரு விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாத்தில் ‘மனு’வாதிகள்

இஸ்லாத்தில் சாதியப் படிநிலை உண்டா? என்றொரு கேள்வியை எழுப்பினால், இரண்டு விதமான பதில்கள் நமக்கு கிடைக்கும். வேத உபநிடதங்களில் இல்லை இஸ்லாமியர்களிடையே இருக்கிறது என்று கொஞ்சம் நேர்மையான பதிலும், இஸ்லாத்தில் இல்லை, இஸ்லாமியர்களிடம் இருக்கிறது என்றால் அவர்கள் இஸ்லாமியர்களே இல்லை எனவே, இஸ்லாத்தில் சாதி இல்லை எனும் மதவாதப் பதிலும் கிடைக்கும். இந்த பதில்கள் கூறுவது போலல்லாமல் இஸ்லாத்தின் அடிப்படைகளிலேயே சாதிய மனோநிலை இருக்கிறது என்பதை மெய்ப்பிக்க முடியும். ஆனால் இந்தியாவில் இருக்கும் அதே வடிவத்தில் இஸ்லாமிய … இஸ்லாத்தில் ‘மனு’வாதிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்

ரஹ்மத்நிசா செந்தில் குமார் திருமணம் கடந்த வெள்ளியன்று (03.062022) கடையநல்லூரில் சிறப்புத் தொழுகை (ஜும்ஆ) முடிந்த பிறகு நோட்டீஸ் ஒன்று கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்கள் என்ற பெயரில் விளம்பப்பட்டது. (அந்த அறிவித்தாள்(நோட்டீசு) கீழே இணைக்கப்பட்டுள்ளது) இது போன்ற பரப்புதல்கள் செய்யப்படுவது இது முதல் முறையல்ல. பலமுறை இது போல் விளம்பப்படுவதும் விவாதிக்கப்படுவதும் நடந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் பெண்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. புரிதலற்று, சமூகக் காரணங்களை ஆராயாமல், மேலெழுந்தவாரியாக பிதற்றுவது தான் இது போன்ற அறிவித்தாள்களின் … கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாஜகவும் அரபுகளும் யோக்கியர்களா?

அரபு நாடுகளில் மீண்டும் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் முன்னிலைக்கு வந்திருக்கின்றன. இந்தியப் பொருட்களை புறக்கணியுங்கள் என்கிறார்கள். தூதர்களை அழைத்து கண்டனம் தெரிவிக்கிறார்கள், விளக்கம் கோருகிறார்கள். இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார்கள். குப்பைத் தொட்டிகளில் செருப்பாலடித்த மோடியின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறார்கள். தோஹா சென்றிருக்கும் இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுடன் கத்தர் அரசு நடத்தவிருந்த இரவு விருந்து ரத்து செய்யப்படுகிறது. இவைகளெல்லாம் நுபுல் சர்மா எனும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஒரு தொலைக்காட்சி … பாஜகவும் அரபுகளும் யோக்கியர்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அனீஸ் கைதை முன்னிட்டு .. ..

கடந்த திசம்பர் 29 ம் தேதி கோவையில், இஸ்லாமியராகப் பிறந்த நாத்திகரான அனீஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இஸ்லாம் மதத்தை விமர்சித்து சமூக வலை தளங்களில் மீம்ஸ் போட்டது தொடர்பாக இவர்  கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வரை பிணை மறுக்கப்பட்டு சிறையில் உள்ளார். கருத்துரிமைக்கு எதிரான கைதாக இதை பலரும் கண்டித்து வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் முஸ்லீம்கள் என்ற பெயரில் இயங்குவோர்கள் இந்த கைதுக்கு எதிராக தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள். கருத்துரிமை என்பது இந்தியாவைப் பொருத்தவரை ஏட்டுச் … அனீஸ் கைதை முன்னிட்டு .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக

பிஜேபி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் அவர்கள் கடந்த தேர்தலில் திமுகவை நம்பும்படி கட்டாயப் படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு வேறு எந்த மாற்றுமே இருக்கவில்லை. 'அதிமுக பிஜேபியின் பினாமியாக மாறிவிட்டது. அதனால் முஸ்லிம்கள் கண்டிப்பாக திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாட்டில் அதிமுக மூலம் பிஜேபி அதிகாரத்துக்கு வந்துவிடும்' என பல முற்போக்கு இயக்கங்களும் தீவிரமாகப் பரப்புரை செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்கே பெரும்பாலும் விழும்படி செய்தன. முஸ்லிம்களின் தயவில் திமுகவும் வெற்றி … முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே, இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் கட்டுரைத் தொடரை 2008ல் தொடங்கினேன். மிகுந்த வரவேற்பையும், பெரும் விவாதங்களையும் கிளப்பிய தொடர் அது. பின்னர் அத்தொடர் சூழல் கருதி முடிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டது. அதை முழுமைப்படுத்தி நூலாக கொண்டுவர வேண்டும் எனும் ஆவல் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், இரண்டு காரணங்கள் அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன. இஸ்லாம் எனும் மதத்தை விமர்சித்து எழுதப்பட்ட இதை பிற மதவாதிகள் தங்களுடைய வெறுப்பு அரசியலுக்கு … இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

கலீபாக்கள் ஆட்சி .. .. .. (!)

எது சைத்தானின் படை? பகுதி 3 எது சைத்தானின் படை? எனும் தொடரின் மூன்றாம் பகுதியான இது, ரஷாதிய கலீபாக்களின் ஆட்சி குறித்த விளக்கங்களைக் கொண்டிருக்கிறது. ‘தாவா ஃபார் முஸ்லீம்ஸ்’ன் அந்த காணொளியில் ரஷாதிய கலீபாக்களின் ஆட்சியில் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தனர் எனும் பொருளில் கூறப்பட்டிருந்தது. அதாவது, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகும் கம்யூனிசத்தை நடைமுறைப் படுத்த முடியவில்லை. ஆனால் இஸ்லாமிய ஆட்சி அமைந்ததும் முகம்மது நபியும் ரஷாதிய கலீபாக்களும் தங்கள் … கலீபாக்கள் ஆட்சி .. .. .. (!)-ஐ படிப்பதைத் தொடரவும்.