இளம் கம்யூனிஸ்ட் கழகம் – ஆய்வுப் பணி என்ற செயல்தந்திரம்

தமிழ்நாட்டு நிலைமை: தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 10 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சிக்குப் பிறகு, குறிப்பாக 2016 முதல் பா.ஜ.கவின் பினாமியாக அ.தி.மு.க ஆட்சி நடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க ஆட்சி அமைத்துள்ளது. இது அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் ஒரு விதமான ஆறுதலைத் தந்துள்ளது என்று கூறலாம். ஆனால், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அ.தி.மு.க கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது….

வதைபடும் நாடாளுமன்றம்

வரலாறு காணாத வகையில் வதைபடும் நாடாளுமன்ற ஜனநாயகம்..! ”விவாதிக்க வேண்டுமா..? – முடியாது!” ”பேச வேண்டுமா – அனுமதி கிடையாது!” ”இவை அநீதியான சட்டங்கள் மக்கள் பாதிக்கப்படுவார்களே” ”நீங்கள் பேசிய எதுவும் சபை குறிப்பில் இடம் பெறாது..” ”நாங்க பேசும் எதையும் காதில் வாங்க மாட்டீர்களா..? அப்ப எதுக்கு சபை?” ”உட்காருங்க, நீங்க சபை விதிகளை மீறுகிறீர்கள்!” ”மக்கள் விரோத சட்டங்களை தனி நபர்கள் ஆதாயத்திற்காக கொண்டு வருகிறீர்கள்! பிரதமரும், உள் துறை அமைச்சரும் ஏன் சபைக்கு…

கலீபாக்கள் ஆட்சி .. .. .. (!)

எது சைத்தானின் படை? பகுதி 3 எது சைத்தானின் படை? எனும் தொடரின் மூன்றாம் பகுதியான இது, ரஷாதிய கலீபாக்களின் ஆட்சி குறித்த விளக்கங்களைக் கொண்டிருக்கிறது. ‘தாவா ஃபார் முஸ்லீம்ஸ்’ன் அந்த காணொளியில் ரஷாதிய கலீபாக்களின் ஆட்சியில் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தனர் எனும் பொருளில் கூறப்பட்டிருந்தது. அதாவது, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகும் கம்யூனிசத்தை நடைமுறைப் படுத்த முடியவில்லை. ஆனால் இஸ்லாமிய ஆட்சி அமைந்ததும் முகம்மது நபியும் ரஷாதிய கலீபாக்களும் தங்கள்…

இதிலிருந்து படிப்பினை பெறலாமா?

எது சைத்தானின் படை? பகுதி 2 ‘தாவா ஃபார் முஸ்லீம்ஸ்’ எனும் இஸ்லாமிய பரப்புரை வலையொளி கம்யூனிஸத்தையும் இஸ்லாத்தையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. மட்டுமல்லாமல், அதில் இஸ்லாம் தான் உயர்ந்தது என கூறப்பட்டிருந்தது என்பதையும் பார்த்தோம். அதற்கு மறுப்பாக கடந்த பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பதிவான இதில், “உழைக்காதவர்கள் உண்ணத் தகுதியில்லாதவர்கள் என்றால், உழைக்க இயலாதவர்கள் என்ன செய்வார்கள்?” என்று அவர்கள் எழுப்பிய கேள்விக்கான பதில் குறித்து விரிவாக பார்க்கலாம். மேலோட்டமாக பார்த்தால்…

எது சைத்தானின் படை? 1

கம்யூனிசமும் இஸ்லாமும் ஓர் ஒப்பீடு செங்கொடி வலையொளி தொடங்கிய பின்னர் நண்பர் ஒருவர் ஒரு யூடியூப் வலையொளிப் பதிவு ஒன்றை சுட்டிக் காட்டினார். அது ஒரு மத பரப்புரை வலையொளி. இஸ்லாமிய மத பரப்புரை பதிவுகள் பலநூறு வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்றாலும், இது வெறுமனே பரப்புரையை மட்டும் செய்யாமல், கம்யூனிசத்தையும் இஸ்லாத்தையும் ஒப்பு நோக்குகிறது. இஸ்லாம் எனும் மதத்துக்கு எதிராக பல தலைப்புகளில் செங்கொடியில் விவாதங்கள் நடந்துள்ளன. மட்டுமல்லாமல், ‘உணர்வு’ இதழில் இஸ்லாத்தை நோக்கி வா தோழா…

இன்று கருப்பு நாள்

வேளாண் மசோதாக்கள் என்ற பெயரில் மூன்று கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்த மோடி அரசாங்கம் இன்று ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அந்த கருப்புச் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் இன்று ஆறு மாதங்களை நிறைவு செய்கிறார்கள். இந்த இரண்டையும் இணைத்து போராடும் விவசாயிகளும், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பவர்களும், பொது மக்களும் இந்த நாளை கருப்பு நாளாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று மக்களுக்கு காட்டுவதற்காகவும், தங்கள் ஒற்றுமையை அடையாளப்படுத்தவும்…

இவர்களை எதால் அடிப்பது?

இவர்களை எதால் அடிப்பது என்று கேட்பதை விட நம்மை எதால் அடித்துக் கொள்வது என்று கேட்டுக் கொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் ஊடகங்கள் என்ற பெயரில் அவர்களின் கருத்தை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணிப்பதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. அதன் விளைவுகளை இன்று அறுவடை செய்ய வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். அவர்கள் எதை தீர்மானிக்கிறார்களோ அது மட்டுமே நமக்குச் செய்தி. விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் குறித்து எந்த ஊடகமாவது…

கலைஞர் கடந்த தடங்கள்

74 ஆண்டுகால சுதந்திர இந்திய ஒன்றியத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 19 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சி செய்த தலைவர் கலைஞர், நவீன தமிழ்நாட்டின் தந்தை என்று ஏன் அழைக்கப்படுகிறார். மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப்படுத்தினால், அது ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும். காற்று, தண்ணீர், உணவு, உடை, உறைவிடம், மொழி, மருத்துவம், கல்வி, பாதுகாப்பு, சாலைவசதி, மின்சாரம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொழிற்சாலை, தொலைத் தொடர்பு. தண்ணீர் / Water 1. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது…

நாறும் எம்.ஜி.ஆர்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 பரப்புரைகள் முடிந்து விட்டன. நாளை வாக்குப் பதிவு. இந்த பரப்புரையில் சங்கிகளை ஒத்த அதிமுகவினரிடம் இருந்து எதிர்கொண்ட முதன்மையான ஒரு கேள்வி, “எங்களால் கருணாநிதியை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியும், உங்களால் எம்ஜிஆரை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியுமா?” என்பது. உண்மை தான். நடைமுறையில் அப்படி ஒரு தடை இருக்கத்தான் செய்கிறது. எளிய மக்கள் மத்தியில் எம்ஜியாருக்கு இருக்கும் செல்வாக்கு அப்படி. கலைஞர் ஆட்சியையும் எம்ஜிஆர் ஆட்சியையும், நிர்வாக…

திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை

தமிழ்நாட்டின் 2021 சட்ட்மன்ற தேர்தல், திமுக, அதிமுக வுக்கு இடையே நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய அளவில் ஓர் இன்றியமையாத திருப்புமுனையைக் கொண்டிருக்கும் தேர்தல். பாஜகவின் இறுதி இலக்கை நோக்கிய பயணம், அதை தடுக்கும் வாய்ப்பில் குறைந்த அளவிலேனும் தகுதியும் ஆற்றலும் கொண்டிருக்கும் அமைப்பு எது? இது தேர்தலுடன் முடிந்து போகும் ஒரு விதயமல்ல போன்ற பலவற்றை விளக்குகிறார் தோழர் மருதையன். ஜீவசகாப்தனின் லிபர்டி தமிழ் யூடியூப் வலையோடைக்கு அளித்த செவ்வி இது. பாருங்கள் .. புரிந்து…