கோவையும் சில குரங்குகளும்

தீபாவளிக்கு முதல் நாள் கோவையில் ஒரு வண்டியின் எரிவாயு உருளை வெடித்தது. அதில் அந்த வண்டியில் இருந்த முபீன் என்பவர் இறந்து போனார். மட்டுமல்லாது அந்த வெடிப்பில் ஆணிகளும், கோலிக் குண்டுகளும் சிதறின. வெடித்த இடம் ஒரு கோவிலுக்கு முன்னால். இவை எல்லாம் சேர்ந்து ஒருவித ஐயத்தை ஏற்படுத்தவே காவல்துறை விரைந்து செயல்பட்டது. இறந்தது யார் என அடையாளம் காணப்பட்டது. இறந்தவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டவர் என்று தெரிந்ததும் தொடர்புடையவர்கள் … கோவையும் சில குரங்குகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கிறது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது மீண்டும் பெரும் படைகளை அனுப்பவிருக்கிறது. இந்த போர் குறித்தான செய்திகள் பல வண்ணங்களில், பல வகைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. போர் குறித்த செய்திகளும், காணொளிகளும் புகைப்படங்களும் ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த செய்திகளின், புகைப்படங்களின், காணொளிகளின் தன்மை எப்படி இருக்கின்றன என்றால் உக்ரைன் அப்பாவியான, நோஞ்சானான, நியாயமான தன்மைகளுடன் செய்வதறியாமல் திகைத்து நிற்பது போலவும், ரஷ்யா கொடூரமான, மிருக பலத்துடன், … உக்ரைன்: யாருடைய களிமண் பொம்மை?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்

இன்று ரஷ்யப் புரட்சி நாள். தோழர் லெனின் தலைமையில் பரந்துபட்ட நாட்டில், பல்வேறு கட்சி அமைப்புகளை ஒன்றுபடுத்தி, எஃகுறுதியான கட்சியைக் கட்டி, பாட்டாளி மக்களின் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். நூறாண்டுகளைக் கடந்த பின்பும், நினைக்குந்தோறும் அந்தப் பெருமிதம் நம் நெஞ்சை நிறைத்து வழிகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் யாராலும் உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த அந்த நாளை, உழைக்கும் மக்களின் உவகை ஊற்றெடுத்த அந்த நாளை மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அதேநேரம் இந்த … நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியா பாக்கிஸ்தான் போர் பீதியின் பின்னால்….

      இந்தியாவின் வர்த்தக தலைந‌கரான மும்பையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை முன்னிட்டு இந்தியா பாக்கிஸ்தான் இடையே மீண்டும் போர் பீதி ஏற்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் பாக்கிஸ்தானியர்கள், பாக்கிஸ்தானில் தான் திட்டம் தீட்டப்பட்டது என்றும், ஆதாரங்களை ஒப்படைத்துவிட்டோம் என்றும், ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கெடு விதித்து இந்தியாவும்; தாக்குதல் நடத்தியதில் பாக்கிஸ்தானின் தொடர்பு இல்லையென்றும், ஆதாரம் போதாது என்றும், இந்தியா கொடுத்துள்ள பட்டியலில் இருக்கும் இருபது பேரை இந்தியாவிடம் ஒப்படைக்கத்தேவையில்லை என்று பாக்கிஸ்தானும் மாறிமாறி … இந்தியா பாக்கிஸ்தான் போர் பீதியின் பின்னால்….-ஐ படிப்பதைத் தொடரவும்.