கம்யூனிஸ்ட் எனும் அடிப்படையில் நான் ஒரு சர்வதேசியவாதி. வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையைத் தாண்டி, இனம், தேசியம் குறித்தெல்லாம் எனக்கு மயக்கங்கள் எதுவும் இல்லை. என்றாலும், நடப்பில் நடந்து கொண்டிருக்கும் விவாதம் என்ற விதத்தில், பார்ப்பனியத்துக்கு எதிர்க் கருத்தியல் என்ற முறையிலும், மக்களை மயக்கும் புதிய தமிழ்த்தேசியர்களுக்கு எதிர்க்கருத்தியல் எனும் முறையிலும், இதை உவந்து இங்கே பதிகிறேன். “நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்” WE BELONG TO DRAVIDIAN STOCK கரோனா என்னும் பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், … நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகுப்பு: பகிரி (வாட்ஸாப்)
கறுப்பர் கூட்டமும் குண்டர் சட்டமும்
தேசப் பாதுகாப்புச் சட்டம் (NSA), குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களுக்கான அறிவுரைக் கழகத்தில் (Advisory Board) நேர்நின்று வாதிடுவது எனக்குப் புதிதன்று. நேற்று கறுப்பர் கூட்டம் தோழர்கள் நாத்திகன் சுரேந்திரனுக்காகவும், செந்தில்வாசனுக்காகவும் வாதிடச் சென்றேன். அவர்களைப் புழல் சிறையிலிருந்து அழைத்து வருவார்கள் என்று வழக்கறிஞர் துரை அருண் சொல்லியிருந்தார். ஆனால் கொரோனா அச்சத்தைக் காட்டி அவர்களைக் கொண்டுவரவில்லை. காணொலி வாயிலாக அவர்கள் முறையிட்டிருக்கக் கூடும். சிறையில் அவர்களிடம் கடுமையான கெடுபிடி காட்டப்படுவதாகத் தெரிந்து கொண்டேன். … கறுப்பர் கூட்டமும் குண்டர் சட்டமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.