தமிழ்நாட்டின் 2021 சட்ட்மன்ற தேர்தல், திமுக, அதிமுக வுக்கு இடையே நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய அளவில் ஓர் இன்றியமையாத திருப்புமுனையைக் கொண்டிருக்கும் தேர்தல். பாஜகவின் இறுதி இலக்கை நோக்கிய பயணம், அதை தடுக்கும் வாய்ப்பில் குறைந்த அளவிலேனும் தகுதியும் ஆற்றலும் கொண்டிருக்கும் அமைப்பு எது? இது தேர்தலுடன் முடிந்து போகும் ஒரு விதயமல்ல போன்ற பலவற்றை விளக்குகிறார் தோழர் மருதையன். ஜீவசகாப்தனின் லிபர்டி தமிழ் யூடியூப் வலையோடைக்கு அளித்த செவ்வி இது. பாருங்கள் .. புரிந்து … திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகுப்பு: மருதையன்
போராடுவோருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?
விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் என்ன நடந்தது? இது பற்றி இன்று வெவ்வேறு நாளிதழ்களும் வெளியிட்டிருக்கும் தலைப்புகள், உண்மையில் நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களைப் பிரதிபலிப்பனவாக இல்லை. காலிஸ்தானி, மாவோயிஸ்டு, காங்கிரஸ், பாக்-சீனா தூண்டுதல்… என்று சங்கிகள் செய்த எந்த அவதூறும் எடுபடாத நிலையில், அவர்கள் உச்ச நீதிமன்றத்தைச் சரண் புகுந்திருக்கிறார்கள். National Capital Territory ஐச் சேர்ந்த 20 லட்சம் குடிமக்கள், குறிப்பாக நொய்டா – குர்கான் பகுதிகளைச் சேர்ந்த மிடில் … போராடுவோருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தூத்துக்குடி மக்களால் தலைநிமிர்ந்த தமிழ்நாடு
மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பதே அரிதான இந்த இருண்ட நாட்களில், ஒரு சிறிய ஒளிக்கீற்று போல வந்திருக்கிறது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. உலகெங்கும் தனது குற்ற நடவடிக்கைகளால் இழிபுகழ் பெற்ற கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தாவுக்கு எதிராகப் பெற்றிருக்கும் இந்த வெற்றிக்காக, தமிழகம் திமிருடன் தலை நிமிர்ந்து நிற்கலாம். போராட்டம் நடைபெற்ற அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அன்று மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திளைத்திருந்தபோது, தூத்துக்குடியில் மெரினாவைப் போன்ற ஒரு மக்கள் திரள் கூடி … தூத்துக்குடி மக்களால் தலைநிமிர்ந்த தமிழ்நாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பட்டினியால் சாவதை விட கொரோனாவால் சாவதே மேல்
எந்த வர்க்கத்தினரின் உயிரை கொரோனாவிடமிருந்து பாதுகாப்பதற்காக, எந்த வர்க்கத்தினர் சாக வேண்டும்? மும்பை – பாந்த்ராவில் நேற்று நடைபெற்றிருக்கும் தடியடி, சிதறிக் கிடக்கும் செருப்புகள், ஏழைத் தொழிலாளிகளின் கண்ணீர் – இவற்றைக் காணச் சகிக்கவில்லை. “யாரோ ஒருவர் சோறுபோடுவார் என்று நாங்கள் எப்படி கையேந்தி நிற்க முடியும்?” என்று கேட்கிறார் ஒரு தொழிலாளி. “சோறு போட வக்கில்லாத அரசுக்கு எங்களைத் தடுத்து வைக்க என்ன உரிமை இருக்கிறது?” என்று அந்த அப்பாவி மக்களுக்கு கேட்கத் தெரியவில்லை. எல்லோருக்கும் … பட்டினியால் சாவதை விட கொரோனாவால் சாவதே மேல்-ஐ படிப்பதைத் தொடரவும்.