கேள்வி பதில்

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே,

இது புதிய பகுதி. கேள்வி பதில் பகுதி.

கடந்த இரண்டு நாட்களாக எனக்கு நானே கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறேன். “இவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள் கேள்வி மட்டுமே கேட்பார்கள் நாம் தான் பதில் சொல்லியே களைத்துப்போகவேண்டும்” எனும் பொருள்பட ஒருவர் பின்னூட்டியதும், அதன் உந்துதலால், “பதில் கூற நான் தயார் கேள்வி கேட்க நீங்கள் தயாரா?” எனக் கேட்டேன். ஆனால் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டுமென்றால் அனுபவமும், அறிவும், சிந்தனைத்திறனும் மிகுவாக வாய்க்கப்பெற்றிருத்தல் வேண்டும். இது போன்ற தகுதிகள் எனக்கு இருக்கிறது என எனக்கு நானே சொல்லிக்கொண்டால் அது உயர்வு நவிற்சியாகவும், தற்பெருமையுமாகவே இருக்கும். எனவே அறிவித்தபடி கேள்வி பதில் பகுதியைத் தொடங்குவதா?, இல்லை உணர்ச்சிவேகத்தில் செய்த அறிவிப்பு என்று வருத்தம் தெரிவித்து விலகிவிடுவதா? என்று தடுமாறிக்கொண்டிருந்தேன்.

ஆனால் இதை ஏன் நாம் விபரம் தெரிந்து கொள்வதற்கும், தேடிக் கற்றுக்கொள்வதற்கும், அறிவைப் பெருக்கிக்கொள்வதற்கும் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது எனும் எண்ணமும் தொடர்ந்துகொண்டே இருந்தது. கேள்விகள் கேட்கப்படப்பட அதற்கான பதிலைத் தேடி நம்மை விசாலப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொள்ள முடிந்தால் அந்த வாய்ப்பை வீணாக்கக் கூடாதல்லவா? ஆக துணிந்துவிட்டேன்.

கேள்வி பதில் பகுதி என்று தொடங்கியவுடன் கேள்விகள் குவிந்துவிடும் என்றோ, கேள்விகளாலே நம்மை மூழ்கடித்துவிடுவார்கள் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய அச்சமெல்லாம் யாருமே கேள்வி கேட்காமல் சத்தமின்றி இந்தப்பகுதியை நீக்கிவிடும் நிலை வந்துவிடக்கூடாதே என்பது தான்.

இந்தப் பகுதிக்கு கேள்விகளை பதிவு செய்ய விரும்புபவர்கள் தங்கள் கேள்விகளை மதம் என்ற ஒன்றுக்குள் மட்டுமே முடித்துவிடாமல் எல்லாத் திசைகளிலும், எல்லா வகைகளிலும் அறிவியல், ஆன்மீகம், அரசியல், சமூகம், கலை, கற்பிதங்கள் என எதுகுறித்து வேண்டுமானாலும் கேட்கலாம். முடிந்தவரை தாமதமின்றி பதில்கூற முனைகிறேன். பிற தளங்களின் இடுகைகளுக்கு பதில் கூற வேண்டும் என விரும்புபவர்கள் சுட்டி கொடுத்து இதற்கு உங்கள் பதில் என்ன எனக் கேட்காமல் அதை அவர்களின் கேள்வியாக கேட்க வேண்டும் எனக் கோருகிறேன். விருப்பப்பட்டால் விவாதமாக வேண்டுமென்றாலும் தொடரலாம். ஆனால் அது பிற கேள்விகளுக்கு ஊறு தராமல் போதிய இடைவெளியில் இருத்தல் வேண்டும். தொடர்ச்சியாக கேட்க விரும்பும் பட்சத்தில் ஒரு கேள்விக்கு பதில் தரப்பட்டிருக்காத நிலையில் அடுத்த கேள்வியை தொடுக்கவேண்டாம். கேள்விகளை தனியாக என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டாம் என்றும் இந்தப் பகுதியிலேயே பதிதல் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

கேட்கப்படும் கேள்விகள் எப்படியானவைகளாக இருந்தாலும் உகந்த பொறுமையுடன், தகுந்த வீரியத்துடன் பதில் தருவேன் என உறுதியளிக்கிறேன். அதேநேரம் என்னுடைய பதில்கள் சரியில்லாமல் இருந்தாலோ, தவறாக இருந்தாலோ அதை சுட்டிக்காட்டி திருத்தும் கடமை உங்கள் அனைவருக்கும் உண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி உங்கள் கேள்விகளை எதிர்நோக்கி…….

தோழமையுடன்

செங்கொடி

518 thoughts on “கேள்வி பதில்

  1. முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம் என நினைக்கிறேன். நான் ஏன் இன்னும் இஸ்லாமியப் பெயரைத் தாங்கியிருக்கிறேன்? நான் இஸ்லாமியப் பெயரில் இருப்பதோ, கடவச்சீட்டில் முஸ்லீம் என்று இருப்பதோ ஏதேனும் சலுகைகளை எதிர்பார்த்தோ, பலன்களுக்காகவோ அல்ல. ஒரு இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்தவன் எனும் அடிப்படையில் எனது பெயர், அடையாளங்கள் இஸ்லாத்தின் நிழலில்தான் வைக்கப்பட்டது, அடையாளப்படுத்தப்பட்டது. மதக் கொள்கைகள் சரியில்லாதவை, மதம் மனிதனுக்கு மதம் என்பதை உணர்வதற்குள் என் கல்வி முடிந்துவிட்டிருந்தது. மதம் எனும் மாயக்கசடுகளை என்னிலிருந்து நீக்கிவிடுவது என்று துணிவதற்குள் நான் வேலை செய்யத் தொடங்கியிருந்தேன். அதாவது வெளிநாட்டு பயண ஏற்படுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்நிலையில் என் பெயர், மதம் மாற்ற வேண்டுமென்றால் அதன் நடைமுறை மலைப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தது.

    தமிழ்நாடு அரசு கெஜட் அலுவலகத்துக்கு முறையாக என்னுடைய பெயர் மற்றும் மதம், ஜாதி போன்றவற்றிலிருந்து விலகி வேறு பெயர் வைப்பதற்கு விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஏற்புக்கடிதம் வந்ததும் மாவட்ட நீதிமன்றத்தில் அந்தக் கடிதத்தை சமர்ப்பித்து, அதற்கு ஒத்திசைவாக என்மீது குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என உள்ளூர் காவல் நிலையத்தில் சான்றிதழ் பெற்று அதையும் நீதிமன்றம் தரும் முத்திரையும் உடனிணைத்து பள்ளிக்கல்வி அலுவலகத்திற்கு என்னுடைய சான்றிதழ்களை மாற்றம் செய்யுமாறு விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் அதை குறுக்காய்வு செய்து எனது பெயரையும் மதத்தையும் நீக்கி புதுப்பெயரில் எனது சான்றிதழ்களை மாற்றித் தருவார்கள். அவைகளையும் கிராம அலுவலகத்தில் பெற்ற சாதிச்சான்றிதழையும் (சாதியற்ற சான்றிதழையும்) மீண்டும் கெஜட் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும். அவர்கள் ஒப்புதல் தந்ததும் அதை நாளிதழ்களில் விளம்பரமாக அறிவிக்க வேண்டும். நாளிதழில் விளம்பரம் வெளிவந்த பதினைந்தாவது நாளில் முறைப்படி எனது பெயர் மாற்றப்படும்.

    இந்த அலுப்பூட்டும் நீண்ட நடைமுறைக்கு ஆட்பட்டு என்னுடைய பெயரை மாற்றிக்கொண்டால் மட்டுமே நான் மதத்தை விட்டு நீங்கியவனாவேன் என்பதற்கு எந்த அவசியமும் இல்லை. மனதளவில் எப்போது நான் கடவுள் இல்லை என உணர்ந்தேனோ அக்கணமே நான் மதங்களை விட்டு வெளியேறிவிட்டேன் என்பதல்லவா உண்மை. நான் என்பது என் சான்றிதழ்களில் இருக்கும் என் பெயரோ மதமோ அல்ல. அவைகள் வெறும் அடையாளம் மட்டுமே. என்ன செய்கிறேன்?, எப்படி செயல்படுகிறேன்?, என்னவிதமாய் சிந்திக்கிறேன்? என்பவைகள் மட்டுமே நான் என்பதை தீர்மானிக்கும். அந்த வகையில் நான் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க முயற்சித்துக்கொண்டிருப்பவன். நான் பிறந்த மதம் உட்பட எந்த மதத்தின் சாயலும் என்னுடைய செயலில் தென்பட்டுவிடாதிருக்க மிகுந்த முனைப்பெடுத்துக் கொண்டிருக்கிறேன். மட்டுமன்றி என்னுடைய செயலில் சாரமற்று மதத்தின் சாய்ம் ஒட்டிக்கொண்டிருப்பதாக யாரேனும் சுட்டிக்காட்டினால் அதை மாற்றிக்கொள்ள அக்கணம் முதல் ஆயத்தமாயிருக்கிறேன்.

    மதம் சார்ந்த எந்த சலுகைகளும் எனக்கு அவசியமில்லை, அதை ஏற்றுக்கொள்ள நான் சித்தமாயில்லை என்பதை வெளிப்படுத்த ஒரு சிறிய எடுத்துக்காட்டு தரலாம் என எண்ணுகிறேன். இங்கு சௌதியில் நோன்பு மாதம் முழுவதும் முஸ்லீம்களுக்கு ஆறு மணிநேர வேலையும் ஏனையோருக்கு எட்டுமணிநேர வேலையும் என்பது விதி. ஆனால் நான் ஏனையோரைப்போல எட்டுமணிநேரம் வேலை பார்த்து வருகிறேன் என்பதும் அந்த இரண்டு மணி நேர வேலைக்கு ஓவர்டைம் வேண்டாம் என எழுதிக்கொடுத்திருக்கிறேன் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    இதன் மூலம் என் பெயரில் மதம் ஒட்டியிருப்பதற்கு நடைமுறை சார்ந்த காரணத்தைத் தவிர சலுகைகளோ பலன்களோ காரணமல்ல என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். இதற்குப்பிறகும் தகுந்த காரணமின்றி நான் சலுகைகளுக்காகவோ, பலன்களுக்காகவோ தான் பெயர் மாற்றாமலிருக்கிறேன் எனக்கூறுவோரை அலட்சியம் செய்கிறேன்.

    என் செயல்பாடுகளில் மதம் இல்லை என ஐயமற தெரிந்த பின்னும் பெயர் குறித்து கேள்வி எழுப்புபவர்களின் அரசியல் என்ன? பெயர்தாங்கி முஸ்லீம்கள் என்றொரு சொல்லாடலை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதன் பொருள் செயலால் முஸ்லீமாக இல்லாமல் வெறும் பெயரால் மட்டுமே முஸ்லீமாக இருப்பவர்கள் என்பது அதன் பொருள். இதன் மூலம் பெயரில் ஒன்றுமில்லை செயல்பாடுகளிலே மதம் தங்கியிருக்கிறது என்பதை இவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள். பின் ஏன் பெயருக்கு முதன்மை கொடுக்கவேண்டும்? யாருக்கு பதில்கூற முடிகிறதோ அவர்களை விமர்சித்து பெயர்தாங்கி முஸ்லீம்கள் என்கிறார்கள். யாருக்கு பதில் கூற முடியவில்லையோ அவர்களிடம் பெயரை விமர்சிக்கிறார்கள். இதைத்தவிர வேறு ஒன்றும் காரணமிருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

    தோழமையுடன்
    செங்கொடி

  2. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //தமிழ்நாடு அரசு கெஜட் அலுவலகத்துக்கு முறையாக என்னுடைய பெயர் மற்றும் மதம், ஜாதி போன்றவற்றிலிருந்து விலகி வேறு பெயர் வைப்பதற்கு விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஏற்புக்கடிதம் வந்ததும் மாவட்ட நீதிமன்றத்தில் அந்தக் கடிதத்தை சமர்ப்பித்து, அதற்கு ஒத்திசைவாக என்மீது குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என உள்ளூர் காவல் நிலையத்தில் சான்றிதழ் பெற்று அதையும் நீதிமன்றம் தரும் முத்திரையும் உடனிணைத்து பள்ளிக்கல்வி அலுவலகத்திற்கு என்னுடைய சான்றிதழ்களை மாற்றம் செய்யுமாறு விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் அதை குறுக்காய்வு செய்து எனது பெயரையும் மதத்தையும் நீக்கி புதுப்பெயரில் எனது சான்றிதழ்களை மாற்றித் தருவார்கள். அவைகளையும் கிராம அலுவலகத்தில் பெற்ற சாதிச்சான்றிதழையும் (சாதியற்ற சான்றிதழையும்) மீண்டும் கெஜட் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும். அவர்கள் ஒப்புதல் தந்ததும் அதை நாளிதழ்களில் விளம்பரமாக அறிவிக்க வேண்டும். நாளிதழில் விளம்பரம் வெளிவந்த பதினைந்தாவது நாளில் முறைப்படி எனது பெயர் மாற்றப்படும்//

    இவ‌ர் எந்த‌ அளவுக்கு பொய் என்று என‌க்கு தெரிய‌வில்லை ஏனென்றால் என் அண்ண‌ண் ஒரு பெண்ணை காத‌லித்தார் அவ்ள் ஒரு ஹிந்து ஆத‌லால் என் பெற்றோர் என் அண்ண‌ணிட‌ம் ஒன்று அவ‌ர் இஸுலாத்தை விட்டு வெளியே போக‌ வேண்டும் இல்லை அந்த‌ பெண் இஸுலாத்தை ஏற்க‌ வேண்டும் என்று க‌ண்டிப்பாக‌ சொல்லி விட்டார் அத‌ற்கு அந்த‌ பெண் இஸுலாத்துக்கு இனைவ‌தாக‌ சொன்னார் இத‌னால் அந்த‌ பெண் வீட்டிலிருந்து துர‌த்த‌ப்ப‌ட்டு எங்க‌ள் வீட்டில் வ‌ந்து த‌ங்கினார் ஆனால் திரும‌ண‌ம் ஆகாம‌ல் வீட்டில் தங்க‌ வைக்க‌கூடாதே என்று அவ‌ர்க‌ளுக்கு விரைவாக‌ திரும‌ண‌ம் ந‌டைபெற்றது இதை ஏன் சொல்கிரேன் என்றால் என் த‌ந்தை அந்த‌ பெண் முறைப்ப‌டி ம‌த‌ம் மாறுவ‌த‌ற்கு ஏற்பாடு செய்தார் அவ‌ரும் அது ஒன்றும் மிக‌வும் க‌டின‌மான‌ வேலை என்று சொல்ல‌வில்லை 3‍-4 நாளில் முடிந்து விட்ட‌தாக‌ கூரினார்!!!?? ஆனால் செங்கொடியோ ஏதோ மிக‌வும் க‌டின‌மான‌ காரிய‌ம் என்று மாயயை ஏற்ப‌டுத்துகிறார்!!!!????

    //மதம் எனும் மாயக்கசடுகளை என்னிலிருந்து நீக்கிவிடுவது என்று துணிவதற்குள் நான் வேலை செய்யத் தொடங்கியிருந்தேன். அதாவது வெளிநாட்டு பயண ஏற்படுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்நிலையில் என் பெயர், மதம் மாற்ற வேண்டுமென்றால் அதன் நடைமுறை மலைப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்தது// கொள்கை வாதியான செங்கொடி கூறும் ச‌ப்பைக்க‌ட்டுக‌ள் கொள்கைன்னு வந்துட்டா அளுப்பு வருமாங்கோ!!??!!!!!!!!!

    நாங்க‌ள் ஒன்றும் த‌ங்க‌ளின் பெய‌ரை மாற்ற சொல்ல‌வில்லை வீசாவில் மதம் என்னும் இட‌த்தில் என்ன‌ குறிப்பிடிருந்தீர்க‌ள்? ஏனென்றால் நீங்க‌ள் என்ன‌ குறிப்பிட்டிருந்தாலும் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளிட‌ம் ஆதார‌த்தை கேட்க‌போவ‌தில்லை அத‌ற்காக‌த்தான் நான் கேட்டேன் அடுத்த‌ முறை ச‌வூதி வ‌ரும்போது நான் முசுலீம் என்று இடாம‌ல் காஃபிர்/கோடு என்று குறிப்பிட்டு வ‌ர‌வா என்று?

    //ஆனால் நான் ஏனையோரைப்போல எட்டுமணிநேரம் வேலை பார்த்து வருகிறேன் என்பதும் அந்த இரண்டு மணி நேர வேலைக்கு ஓவர்டைம் வேண்டாம் என எழுதிக்கொடுத்திருக்கிறேன் என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்// யாரு க‌ண்டா?

    // யாருக்கு பதில் கூற முடியவில்லையோ அவர்களிடம் பெயரை விமர்சிக்கிறார்கள். இதைத்தவிர வேறு ஒன்றும் காரணமிருப்பதாய் எனக்குத் தெரியவில்லை// ரிலேடிவிடி விதி எனக்கு படம் போட்டு விளக்கி விட்டீர்களா? இல்லை வாய்ச்சவாடல் விட்டீர்களா

  3. இப்போதுதான் வினவு கொஞ்சம் கொஞ்சமாக நாறி வருகிறதே. முதலில் புனைவு என்றார்கள், இன்று ஆள்கடத்தலிலெல்லாம் அவர்கள் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. நல்ல வளர்ச்சி இதற்கென்ன சொல்கிறீர்கள்?

  4. நண்பர் பெயரிலி(!)

    உங்கள் கேள்வியின் வார்த்தைகளுக்கு இடையில் ஒரு வித குரூர மகிழ்ச்சி தொக்கி நிற்கிறது. ஆனால் பாவம் அந்த மகிழ்ச்சியே நாங்கள் சரியான நிலையில் நிற்கிறோம் என்பதற்கான குறியீடாக இருக்கிறது என்பது உங்களுக்கு விளங்கவில்லை.

    குற்றச்சாட்டாக எதையும் வைக்கமுடியாத, விமர்சனம் கூட செய்யஇயலாத உங்கள் இயலாமைக்காக நாங்கள் பரிதாபப்படுகிறோம்.

  5. மதங்கள் யாவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அவ‌சிய‌ம் ப‌ற்றி மிகைப்படுத்தி கூறுவ‌து ஒரு நாட்டிற்கு வ‌ளர்ச்சியா வீழ்ச்சியா?

  6. பொதுவாக மதங்கள், அவை தோன்றிய காலகட்டங்களின் உற்பத்தி உறவுகளின் பொருளியல் கூறுகளிலிருந்து விடுபட்டவைகள் அல்ல என்றாலும்; மதக்கோட்பாடுகளுக்கு நிபந்தனையற்ற கீழ்ப்படிதலை கோருவதால், ஒடுக்கப்பட்டவர்களின், சுரண்டப்படுபவர்களின் கோபங்களிலிருந்து ஆற்றுப்படுத்தும் நோக்கில், எல்லா நிலைக்கு நானே காரணம், நானின்றி எதுவுமில்லை, பழுத்த இலை உதிர்வது கூட கடவுளின்றி நடக்காது என்பன போன்ற மாயையான சமாதானங்கள் வேண்டியதிருக்கின்றன. அந்த வழியில் ஒருவன் ஏழையாக இருப்பதும் பணக்காரனாக இருப்பதும் அவனுடைய ஊழ்வினைப் பயன், தீர்க்க தரிசனம், ஏட்டில் எழுதிவைக்கப்பட்டது என பொருளாதாரம் ஆன்மீகத்தோடு வஞ்சகமாக பின்னப்படுகிறது. ஆனால் நடப்பில் ஒருவன் பணக்காரனாக இருப்பதும் ஏழையாக இருப்பதும் வர்க்கம் சார்ந்து அவன் சுரண்டுபவனாக இருக்கிறானா? சுரண்டப்படுபவனாக இருக்கிறானா? எனபதைப் பொருத்தது.

    ஒரு நாட்டின் ஏழை பணக்கார விகிதம் தற்போதைய சமுதாய அமைப்பில் எப்போதும் நீச்ச உச்சமாகவே இருக்கும். பலர் வாட சிலர் கொழுக்கும் நிலையை அன்றைய அறிவியல் சாதனங்களின் உற்பத்தியைக் கொண்டு நாட்டின் முன்னேற்றமாக காட்டப்படும். ஆனால் நாடு என்பது சாராம்சத்தில் ஆளும் வர்க்கத்தைக் குறிப்பதாகவே இருக்கிறது. நாடு என்பது அதன் மக்கள் எனும் உண்மையான பொருளில் நோக்கினால் முன்னேற்றம் என்பது மாயையாகவே இருக்கும்.

    ஆக இன்றைய சமூக அமைப்பான முதலாளித்துவம் ஏற்படுத்தும் மாயையும்; ஆன்மீக அமைப்புகளான மதங்கள் ஏற்படுத்தும் மாயையும் சந்திக்கும் புள்ளி ஒன்றுதான். அவற்றின் இருப்பும் தேவையும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. இந்த இரண்டிலிருந்தும் மக்கள் விடுபடவேண்டும், அதுதான் இன்றியமையாதது.

  7. உபரி வேலை நேரத்தில் செய்யப்படும் உழைப்பில் இருந்து தானே உபரி மதிப்பு வருகிறது. ஒரு நிருவனத்தில் எல்லா வேலைகளையும் ரோபோக்களே(ROBOT)செய்தாலும் லாபம் வரத்தானே செய்யும்.அந்த லாபம் எப்படி வருகிறது தோழர்?

  8. தோழர் ஸ்பார்டகஸ்,

    உழைப்பில் இருந்துதான் உற்பத்தியும், உபரி மதிப்பும் பிறக்கிறது. ஆனால் உபரி வேலைநேரத்தில் செய்யப்படும் உழைப்பில் இருந்து உபரி மதிப்பு வருகிறது என்பது மாத்திரைக்குறைவாய் தெரிகிறது. உழைப்பின் பலனாய் கிடைக்கும் உற்பத்தியின் மதிப்பிற்கு உகந்தாற்போல் உழைப்பிற்கான கூலி வழங்கப்படுவதில்லை. கூலி என்பது சாராம்சத்தில் உற்பத்தியில் ஈடுபடுவதினால் இழந்த உழைப்புத்திறனை மீளப் பெறுவதற்கான ஊட்டம் எனக்கொள்லலாம். ஆனால் இழக்கும் உழைப்புத்திறனை மதிப்பிட்டு உற்பத்திக்கான மதிப்பு அளவிடப்படுவதில்லை. உற்பத்திப்பொருளின் மதிப்பு சந்தையைப் பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது. சந்தையில் பொருளுக்கு இருக்கும் தேவை உழைப்புத்திறனை மீளப்பெறுவதில் ஒருவிதத்தில் தொடர்புடையதாய் இருக்கும். இதை குறுக்குவெட்டாகப் பார்த்தால், உழைப்புத்திறனை மீளப்பெறுவதற்காக நுகரும் பொருட்களின் மதிப்பு, அந்தப் பொருளைப் உற்பத்தி செய்வதற்காக செலுத்தப்படும் உழைப்பு அதிகமானதாக இருக்கிறது. இதனால் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்புக்கு உகந்தாற்போல் உழைப்புக்கான கூலி வழங்கப்படுவதில்லை என்றாகிற‌து. இப்படி அதிகமாகப் பெறப்படும் உழைப்பு தான் முதலாளிகளிடம் லாபமாக சேருகிறது. சேகரமாகும் லாபம் ஒன்றுதிரண்டு மூலதனமாகிறது. ஆக முதலாளிகளிடம் இருக்கும் மூலதனம் உழைத்துச் சேர்த்ததல்ல சுரண்டிச் சேர்த்தது.

    இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம், ஒரு தொழிற்சாலையில் அல்லது நிறுவனத்தில் முழுக்க முழுக்க இயந்திரங்களாலேயே உற்பத்தியை செய்துவிட முடியுமா? (ரோபோ என்பதும் இயந்திரம் தான். சுயமாக சிந்தித்து காரியமாற்றமுடியாத எதுவும் இயந்திரம் தான்) முடியாது. அந்த இயந்திரன்களை இயக்கவும் பராமரிக்கவும் தொழிலாளர்கள் தேவை. ஆனால் தொழிலாளர்களின் எண்ணிக்கையை இயந்திரன்கள் குறைக்க முடியும். அதைத்தான் தொழில்நுட்பம் செய்துகொண்டிருக்கிறது. இயந்திரங்களை இயக்கவும், பராமரிக்கவும் ஆகும் செலவுகள் கூலியைப் போன்றதுதான். இங்கும் இயக்கவும் பராமரிக்கவும் ஆகும் செலவுகளைவிட உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு அதிகமாகவே நிர்ணயிக்கப்படுகிறது, அதிலிருந்தே லாபமும் வருகிறது. ஆனால் தொழிலாளர்களைவிட இயந்திரங்களை வைத்திருப்பதும் கையாள்வதும் முதலாளிக்கு வசதியாக இருக்கும். சரி, அதிஉயர் தொழில்நுட்ப அறிவால் தொழிலாளர்களே தேவைப்படாத இயந்திரங்களை உருவாக்கிவிட முடியாதா? அப்படி ஒரு நிலை ஏற்படும் சாத்தியமில்லை. எப்படி என்றால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன? நுகர்வதற்குத்தானே. பொருட்களை நுகரவேண்டுமென்றால் தொழிலாளர்களுக்கு கூலி கொடுத்தே ஆகவேண்டும். தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கவேண்டுமென்றால் வேலை கொடுத்தே ஆகவேண்டும். இதுதான் முதலாளித்துவ சமுதாயத்தின் உள்ளுறை முரண்பாடாக இருக்கிறது.

  9. முதலாலித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளும் என்று மார்க்ஸ் சொல்வதை விவரமாக விளக்குங்கள் தோழர்.

  10. தோழர் ஸ்பார்டகஸ்,

    முதலாளித்துவம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய அதன் வளர்ந்து செல்லும் திசை சோசலிசத்தினை நோக்கி இருக்கும். ஏனென்றால் முதலாளித்துவ உற்பத்திமுறையின் அடிப்படை உழைப்பிற்காக கூட்டுச் சேர்வதாகவும் அந்த உழைப்பின் பலன்கள் தனி ஒருவனுக்காகவும் இருக்கிறது. இது முதலில் மேலோட்டமாக முதலாளிகளுக்குள் கூட்டை ஏற்படுத்தி தொழில்நிறுவனங்கள், ஆலைகள் போன்றவற்றை ஒருங்கமைக்கும். அதேநேரம் முதலாளிகளுக்குள் போட்டியும் இருக்கும். இப்படி தொழிற்கூடங்கள் ஒருங்கமைக்கப்பட்டு உற்பத்திக்கு திட்டமிடப்படுவதால் நவீன கருவிகளும் இயந்திரங்களும் வடிவமைக்கப்படுகின்றன. இந்த நவீன கருவிகளும், இயந்திரங்களும் தொழிலாளர்கள் அதிக கல்வியறிவு பெற்றவர்களாகவும், விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் இருக்கவேண்டியுள்ளதை முன்நிபந்தனையாக்குகிறது. இது ஒருபக்கம் என்றால் மறுபக்கம் முதலாளிகளுக்குள் இருக்கும் மேலோட்டமான ஒற்றுமை அவர்களை தொழிலாளர்களிடமிருந்து அதிகபட்ச உழைப்பை குறைந்தபட்ச இழப்புடன் பெறுவதை நோக்கி தள்ளுகிறது. இதன் விளைவாகவே அடக்குமுறைச்சட்டங்கள் வருகின்றன. ஆக முதலாளித்துவம் அதன் வளர்ச்சியின் போக்கில் தொழிலாளர்கள் மீது இரண்டுவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒன்று அவர்களை கல்விஅறிவுள்ளவர்களாகவும் விழிப்புணர்வு உள்ள‌வர்களாகவும் ஆக்குகிறது; இரண்டு, அவர்களுக்குள் ஒற்றுமையையும் ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகளையும் தாண்டி முதலாளித்துவ உற்பத்திமுறை மேலும் வள‌ர்கிறபோது தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு ஆளாகிறார்கள். உற்பத்தியின் பலன்கள் முதலாளிகளிடம் சொத்துக்களாக மூலதனமாக குவியக் குவிய அதன் எதிர்விளைவாக வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரிக்கிறது. ஆக முதலாளித்துவ வளர்ச்சி உதிரிப் பாட்டாளிகளாக கல்வி அறிவற்றவர்களாக இருந்த தொழிலாளர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு கல்வி அறிவூட்டி முடிந்தவரை கறந்துவிட்டு வேலையில்லாதவர்களாக வெளித்தள்ளுறது. ஆனால் பாட்டாளிவர்க்கம் உயிர்வாழ்வதற்காக வேலையும் உணவும் பெற்றே தீரவேண்டியிருப்பதால், அது அவர்களை போராட்டத்தை நோக்கித் தள்ளுகிறது. முதலாளித்துவ வள‌ர்ச்சியே தனக்கெதிரான போராட்டத்திற்கு தூண்டுகோலாக இருக்கிறது எனும் இந்தப் போக்கே முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக்கொள்ளும் என்ப‌து.

  11. மக்காவில் உள்ள கஃபா பூமியின் மையப்பகுதியில் அமைந்திருப்பதாக அதை அல்லாவின் தனிச்சிறப்பாக கூறிவருவது உண்மையா? ஆதாரம் ஏதேனும் உண்டா? இருந்தால் தெளிவு படுத்தவும்.

  12. மரண தண்டணை குறித்து தாங்கள் கருத்து என்ன

  13. உலகில் உள்ள நாடுகளை மேற்கு நாடுகள் அல்லது மேலை நாடுகள், கிழக்கு நாடுகள் அல்லது கீழை நாடுகள், மத்திய நாடுகள் என அழைப்பது வழக்கில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எந்த நாட்டை அடிப்படையாக வைத்து மேற்கு கிழக்கு என பிரிக்கிறார்கள்? இஸ்ரேல். இஸ்ரேலுக்கு மேற்கே இருப்பவை மேற்கு நாடுகளாகவும், கிழக்கே இருப்பவை கிழக்கு நாடுகளாகவும், இஸ்ரேலின் பிராந்தியத்தில் இருக்கும் நாடுகள் மத்திய நாடுகள் எனவும் வழங்கப்படுவதுதான் மரபு. ஆனால் கோளமான பூமியில் இந்த நிலப்பரப்பு தான் மையமானது என கூறுவது பொருத்தமானது அல்ல. பூமியின் மையம் என்றால் இன்னர் கோர் எனப்படும் மையம் தான். கோளத்தின் வெளிப்பரப்பில் மையம் என்று எந்தப்பகுதியையும் கூறவியலாது. சுழலும் கோளத்திற்கு துருவங்கள் தான் உண்டு, அவை தென் வட துருவங்கள். அரேபியா மட்டுமல்ல இஸ்ரேலும் உலகத்தின் மையமான நாடல்ல.

  14. நண்பர் ஹாஜா,

    மரண தண்டனை எனும் உயிர்க்கொலை கூடாது என்பது தங்களை முற்போக்குவாதிகளாக காட்டிக்கொள்ள விரும்புபவர்கள் முன்வைக்கும் இரக்க சிந்தனை. தண்டனை என்பது குற்றத்தைப் பொருத்ததாக அமையவேண்டும். கொலைகளைச் செய்தவனுக்கு இரக்கம் என்ற பெயரில் வாழ அனுமதி கொடுப்பது அவன் எந்த நோக்கில் அக்கொலைகளைச் செய்தான் எனும் அடிப்படையில் இருக்கவேண்டும். ஹம்முராபியின் சட்டங்களைப்போல கொலை செய்தால் கொலை என்பதும் கூடாது. கொலைகளைச் செய்தாலும் தண்டனை என்பது திருந்துவதற்கான வாய்ப்பாக இருக்கவேண்டும் எனும் பெயரில் ஆயுள் தண்டனையாக்குவதும் கூடாது. பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணமடையவும், லட்சக்கணக்கானவர்கள் கடும் பாதிப்படையவும் காரணமான வாரன் ஆண்டர்சன் கொல்லப்படவேண்டியவன். தன்னை வன்புணர்ச்சி செய்யவந்த ஆணை கொன்ற பெண் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்படவேண்டியவள். கொலை என்று எல்லாவற்றையும் ஒரே தட்டில்வைத்து சமப்படுத்திப் பார்க்க முடியாது.

    அதேநேரம் குற்றம் என்பது முழுக்கமுழுக்க தனிமனிதன் சார்ந்ததல்ல, அதில் சமூகத்திற்கும் பங்கிருக்கிறது. தண்டனைகளின் மூலம் மட்டுமே குற்றங்களை குறைத்துவிடவோ கட்டுப்படுத்திவிடவோ முடியாது. சமூகத்தை புரட்சிகரமாக மாற்றுவதன் மூலம் மட்டுமே குற்றங்களைக் குறைக்க முடியும். ஏற்றத் தாழ்வான இந்த சமூகத்தை அப்படியே தக்கவைத்துக்கொண்டு தண்டனைகளால் குற்றங்களை குறைத்துவிட முடியும் என்பது அபத்தம். ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் தினம் தினம் பட்டினிச்சாவுகள் நடந்துகொண்டிருக்கும் உலகில் குற்றவாளி ஒருவனை அவன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்று உணவு தந்து பாதுகாப்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம்.

  15. கடல் எல்லைகள் எல்லாம் மனிதர்கள் உருவாக்கியது தான். ஆனால் சில க‌டல் பகுதிகளில் கடலின் எல்லை, தன்மை ரீதியாக மாறுபடுகிறதே. இந்த சுட்டியை பார்க்கவும். http://scienceislam.com/quran_seas_rivers.php குரான் கூறும் கட்ல்களுக்கு மத்தியிலான திரை இது தான் என்று ஏன் எடுத்துக்கொள்ள கூடாது தோழர்.

  16. கம்யூனிஸ அமைப்பில் கார்கள் இருக்குமா?

    கார்கள் இருக்கும் என்றால், கார்களை ஓட்ட சாலைகள் வேண்டும். கார்களை ஓட்ட சாலைகள் இருந்தால், கார்கள் இடது புறம் போகவேண்டுமா வலது புறம் போகவேண்டுமா என்பது போன்ற சட்டங்கள் இயற்றப்படவேண்டும். சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என்றால், யாராவது அவற்றை இயற்றவேண்டும். (மக்களோ மக்கள் பிரதிநிதிகளோ) இது சட்டசபையாக (எந்த வடிவத்திலோ) வந்துவிடும்.சாலைகள் இருந்தால் விபத்துகள் இருக்கும். விபத்துகள் இருந்தால், யாருடைய குற்றம் என்று விசாரிக்க நீதிமன்றம் வேண்டும். குற்றம் என்று வந்துவிட்டால் தண்டனை என்பதும் வேண்டும். தண்டனையை நிறைவேற்ற போலீஸ், ஜெயில் எல்லாம் வேண்டும்.கார் ரிப்பேர் ஆகிவிட்டால் கார் ரிப்பேர் பண்ண ஆள் வேண்டும். கார் மெக்கானிக் எல்லோரும் ஒரே மாதிரியான திறமை உடையவர்கள் அல்ல. ஒரு கார் மெக்கானிக்குக்கு மவுஸ் ஜாஸ்தி ஆகும். அவருக்கு ஏராளமாக வரும் ஆர்டரை எல்லாம் அவரே ரிப்பேர் பண்ண முடியாது. ஆனால், அவர்தான் ரிப்பேர் பண்ணவேண்டும் என்று மக்கள் கேட்டால், “எல்லோரும் எல்லாமும் பெறக்கூடிய கம்யூனிஸம்” எங்கே இருக்கும்?

  17. தோழருக்கு வணக்கம்.
    தற்போது பெருகி வரும் சாதி அமைப்புகள் குறித்து…

  18. தோழர் ஸ்பார்டகஸ்,

    முதலில், கடல்களுக்கிடையில் எல்லை என்ற ஒன்று இல்லை. அட்லாண்டிக் பெருங்கடல், ப‌ஸிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் இந்த மூன்று பெருங்கடல்களும் புவியின் பெரும்பகுதியில் பரவிக்கிடக்கின்றன. இவைகளை பிரிக்கும் எல்லை எது என்று சுட்டிக்காட்ட முடியுமா? எல்லை என்ற ஒன்றே இல்லாதபோது அவைகளுக்கிடையில் தடுப்பு என்பது எப்படி சாத்தியம்? வெவ்வேறு பகுதிகளின் கடல்நீர் ஒரேமாதிரி இருப்பதில்லை, அந்தந்த இடங்களின் சூழல்களுக்கு ஏற்ப கடல்நீரின் தன்மை மாறுபடும். இதை தடுப்பு என்றெல்லாம் குறிப்பிட இயலாது. ஒவ்வொரு கடலும் தன்மையில் வெவேறாக இருக்கிறது என்பது குறை உண்மை. பொய்யைவிட குறை உண்மைகள் ஆபத்தானவை. வெவேறு கடல்கள் வெவேறு தன்மையில் இருக்கின்றன என்பதைவிட, வெவ்வேறு இடங்களில் கடல்நீர் வெவேறு தன்மையில் இருக்கிறது என்பதே சரியானது. ஒரே கடலிலேயே வெவேறு தன்மைகள் இருக்கின்றன. இதை குரான் வசனங்களுடன் முடிச்சுப்போடுவது கலப்படமற்ற மதவாதமேயன்றி அறிவியலல்ல. விரிவாக விளங்கிக்கொள்ள இந்தக் கட்டுரையை படிக்கலாம்.
    https://senkodi.wordpress.com/2009/12/22/sea-and-waves/

  19. நண்பர் நேசன்,

    சோசலிச காலகட்டத்தில் தனிப்போக்குவரத்தைவிட பொதுப்போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தனிப்போக்குவரத்து என்பது தேவைகருதி மட்டுமே நீடிக்கும். தேவையான விதிமுறைகளை மக்களே முன்வந்து பின்பற்றி நடக்கும் அளவுக்கு சோசலிசத்தில் சமூக மாற்றத்தினூடாக மக்களுக்கு பயிற்சியும் இருக்கும். நீங்கள் காலையில் எழுந்ததும் பல்துலக்கவேண்டும் என்பதை யாரும் சட்டம்போட்டா நிறைவேற்றுகிறீர்கள்? அதுபோன்றே நுகர்வுக்கலாச்சாரத்தின் தீமைகள் படிப்படியாய் விலக்கப்பட விலக்கப்பட அதன் விளைவாய் மக்களிடம் குடிகொண்டிருந்த போட்டி, பொறாமை, அழுக்காறுகள் நீங்கும். அந்த இடத்தில் நற்சிந்தனைகள் சேரும்படி கல்விமுறை இருக்கும். எனவே தனிப்போக்குவரத்தில் நீடிக்கும் மக்கள் கூட விதிமுறைகளை விலகாது கடைப்பிடிப்பர். விபத்து பழுதுகளின் போது அரசின் பணிமனைகளே வேண்டியவற்றை செய்யும். குறுந்தொழிலின் அடிப்படையில் இயங்கும் பணிமனைகள் கூட லாபம் கொண்டு இயங்காமல் விளம்பரத்தின் அவசியமின்றி இயங்கும் என்பதால் ஓரிடத்தில் குவிதலும் பிரிதொரு இடத்தில் இல்லாமலும் ஏற்படும் நிலை தோன்றாது. இவைகளெல்லாம் சோசலிசத்திலேயே நிகழ்பவைகள். இதில் அரசுக்கும், நிர்வாக அமைப்புக்கும் பங்கிருக்கும். கம்யூனிசத்திற்குள் கடக்கும் போதுதான் அரசு அமைப்புகள் செயலிழந்து உதிரத்தொடங்கும். கம்யூனிசம் குறித்து கற்றுக்கொள்ள‌ முன்வாருங்கள் அது உங்களை விசாலப்படுத்தும்.

  20. வண‌க்கம் நண்பர் ஹாஜா,

    தற்போது ஜாதி, மத அமைப்புகள் பெருகுகின்றன. பரவலாக செயல்படுகின்றன. இந்த சமூக அமைப்பின் மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தின் வெளிப்பாடுதான் அது. நிலவும் முதலாளித்துவ அமைப்பின் பிடியில் அதன் சுரண்டலில் சிக்குண்டு அனைத்துத்தரப்பு மக்களும் தங்களின் நிம்மதியை இழ‌க்கின்றார்கள், எதிர்காலம் மீதான பொருளாதார பயங்கள் அவர்களை அச்சுறுத்துகின்றன. விலைவாசி தொடங்கி அனைத்தின் போக்குகளும் அவர்களுக்கு எதிராகவே இருக்கின்றன. இதிலிருந்து விடுபட்டு ஒரு தற்காலிக ஆறுதலை ஆன்மீகம் அவர்களுக்கு வழங்குகிறது. இரக்கமில்லாத சமூகத்தின் இதயமாக மதம் செயலாற்றுகிறது. காலையிலிருந்து இரவு வரை உழைத்தே தேய்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் அவனின் கடும் உழைப்பு ஏன் அவன் வாழ்விற்கு போதுமானதாக இருக்கவில்லை எனும் பொருளாதார சூத்திரங்கள் அவனுக்கு அயர்ச்சியைத்தரும் அதேநேரம் இவ்வுலகில் நீபடும் துயரங்களுக்கான பரிசாக இன்னொரு உலகில் உனக்கு சொர்க்கத்தைப் பரிசளிப்பேன் என்பது அவனுக்கு ஆறுதலாகவும் கவரக் கூடியதாகவும் இருக்கிறது. இதனால்தான் ஜாதி மத அமைப்புகள் செல்வாக்குப் பெருகின்றன.

    இதை நடைமுறை செயல்பாடுகளின் விளைவுகளால் உரசிப்பார்க்கும் போதுதான் இந்த ஜாதி மத அமைப்புகள் எதை நமக்குப் போதிக்கின்றன? எதைச் செய்ய நம்மைத் தூண்டுகின்றன? அவற்றின் விளைவுகள் என்ன? என்பவை புலப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்புகளாகத் தோன்றிய தலித்திய அமைப்புகள் அந்த மக்களுக்கு செய்தது என்ன? கிருஷ்ணசாமி, திருமாவளவன் உட்பட அனைத்து தலித்திய அமைப்புகளும் அவர்களை ஒடுக்கியவர்களுடன் கூட்டுச் சேர தயங்கியதேயில்லை. மேலவளவுகளும், திண்ணியங்களும் தம் அமைப்புக்குள் மக்களை தக்கவைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமேய‌ன்றி, அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான அணிதிரட்டலுக்கு பயன்படுத்தப்படாது. மத அமைப்புகளும் இதில் விதிவிலக்கல்ல, டிசம்பர் ஆறையும், குஜராத் இனப்படுகொலைகளையும் உணர்ச்சி ததும்பப் பயன்படுத்துபவர்கள், நிபந்தனையின்றி மோடியை ஆதரிக்கும் ஜெயலலிதாவுடன் கைகோர்க்க மறுக்கமாட்டார்கள். சில அமைப்புகள் வெளிப்படையாக‌ சொந்த நலன்களைப் பேணி அம்பலப்பட்டுப் போகும். இன்னும் சில அமைப்புகளோ சமுதாய் நலன் எனும் போர்வைக்கும் தங்களை மறைத்துக்கொண்டு வெற்றிகரமாக வலம் வரும். ஆனால் எத்தகைய அமைப்பாக ஆனாலும் அவற்றின் அடிப்படையாய் இருக்கும் ஆன்மீகமே தங்களை இதே நிலையில் தக்கவைக்கக்கூடிய உள்ளீடுகளைக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணரும் போது இந்த அமைப்புகளும், ஆன்மீகமும் செல்லாக் காசாகிவிடும். இதை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளும், பரப்புரைகளுமே தற்போது முதன்மையானதாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது.

  21. என்னைப்பற்றி சொல்வதற்கு குறிப்பிடும்படியாய் எதுவுமில்லை. பொதுவுடமை தத்துவத்தில் ஈர்ப்பு உண்டு. உலக மக்களை அறியாமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும், சுரண்டல்களிலிருந்தும் விடுவிப்பதற்கு மாக்சியமே ஒரே தீர்வு. அதனால் மகஇக எனும் மாக்சிய லெனினிய இயக்கத்தில் செயல்படுபவன்.‌

    நீங்கள் சொல்லும் அறியாமை,துன்பம்,அடக்குமுறை,சுரண்டல், இவற்றுக்கு இஸ்லாம் எவ்வகையில் உடன்பாடாக இருந்தது?என்பதற்கான ஆதாரமும் இவற்றுக்கு மார்க்சியமே தீர்வு என்பதற்கு முன்னுதாரணமும்தாருங்கள்

  22. http://thamizmani.blogspot.com/2009/08/blog-post_25.html
    இந்த கட்டுரைக்கு தங்களுடைய பதில் என்ன?

    ***********************************************

    பிற தளங்களின் இடுகைகளுக்கு பதில் கூற வேண்டும் என விரும்புபவர்கள் சுட்டி கொடுத்து இதற்கு உங்கள் பதில் என்ன எனக் கேட்காமல் அதை அவர்களின் கேள்வியாக கேட்க வேண்டும்

  23. நண்பர் இப்ராஹீம்,

    இஸ்லாம் மட்டுமல்ல எல்லா மதங்களும் இதில் ஒன்றுகின்றன. இவ்வுலகின் துன்ப துயரங்களுக்கு பெரிதும் காரணமாய் இருப்பது சுரண்டலும் அதன் விளைவான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும். தனிச்சொத்துடமை தோன்றியதிலிருந்து சக மனிதனின் உழைப்பு திருடப்பட்டே வந்திருக்கிறது. இதன் விளைவாகவே தற்போதைய அமைப்பில் சீர்படுத்த இயலாத அளவுக்கு உள்ளானுக்கும் இல்லானுக்கும் இடையிலான இடைவெளி நீண்டிருக்கிறது. இதில் இல்லாதவனின் துன்பங்களுக்கான காரணம் தெரிய வேண்டுமானால் அவன் வரலாற்றறிவும், சொத்துடமையின் பின்னுள்ள சுரண்டல் குறித்தும் தெளிவு பெற்றாக வேண்டும். இதிலிருந்து விடுதலை பெற இதை தக்கவைக்கும் அமைப்பின் மீது கோபம் கொள்ள வேண்டும். இந்த அறிதலை பெறவிடாமல், விடுதலைக்கான கோபத்தை கொள்ளவிடாமல் பணக்காரனுக்கு செல்வத்தைக் கொடுப்பதும் நானே, ஏழைக்கு அதனை இல்லாமல் செய்வதும் நானே என்று தடுப்பதும், திரிப்பதும்; இந்த உலகில் ஏழையாய் இருந்தாலும் செத்தபிறகு நீ பணக்காரனாகலாம் என்று அவனை ஆற்றுப்படுத்துவதும் மதங்கள் தான், இஸ்லாம்தான்.

    இதற்கு மாறாக மார்க்சியம் தன்னுடைய வரலாற்றியல், இயங்கியல் பார்வையின் மூலம் உலகை மாற்றியமைக்க விளைகிறது. சிற்றுச் சீர்திருத்தங்கள் மூலமன்றி, இந்த அமைப்பை புரட்சிகரமாக மாற்றுவதன் மூலமே உலகின் பெரும்பான்மை மக்களுக்கான அமைப்பை கட்டியமைக்க முடியும் என்கிறது.

    இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள நூலகம் பகுதியில் விவாதம் எனும் தலைப்பில் ஏழ்மையும் அதன் காரணமும் எனும் தொகுப்பை படித்துப்பாருங்கள்.

  24. வணக்கம் நண்பரே!
    சமுதாயத்தில் ஏற்படும் திருட்டு பற்றி….

  25. வணக்கம் நண்பர் ஹாஜா,

    சமுதாயத்தில் ஏற்படும் திருட்டு என்றால்..? இரண்டுவகைத் திருட்டுகள் நடக்கின்றன. முதலாவது உழைப்புத்திருட்டு, பல்வேறு வடிவங்களில் இது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இரண்டாவது பொருட் திருட்டு. நாம் உணரவேண்டியதும், உணர்த்தப்படவேண்டியதும் உழைப்புத்திருட்டு எனும் சுரண்டலை. ஆனால் பொருட் திருட்டை நாம் உணர்ந்துகொண்ட அளவுக்கு உழைப்புத்திருட்டை உணர்ந்துகொள்ளவில்லை. அனைத்துவகை ஊடகங்களும் பொருட்திருட்டையே முதன்மைப் படுத்துகின்றன. அரசோ உழைப்புத்திருட்டை சட்டரீதியாக அங்கீகரித்து அதற்கு வேண்டிய அனைத்து சலுகைகளையும் வசதிகளையும் செய்து கொடுத்துக்கொண்டே பொருட்திருட்டை தடுக்க சட்டம் தீட்டி செயல்படுகிறது. உழைப்புத்திருட்டுடன் ஒப்பிடுகையில் பொருட்திருட்டு மதிப்பிழந்துபோகும். சமூகத்தில் உழைப்புத்திருட்டு இருக்கும்வரை பொருட்திருட்டை தடுக்கவோ, குறைத்துவிடவோ முடியாது.

  26. இஸ்லாம் மட்டுமல்ல எல்லா மதங்களும் இதில் ஒன்றுகின்றன. இவ்வுலகின் துன்ப துயரங்களுக்கு பெரிதும் காரணமாய் இருப்பது சுரண்டலும் அதன் விளைவான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும். தனிச்சொத்துடமை தோன்றியதிலிருந்து சக மனிதனின் உழைப்பு திருடப்பட்டே வந்திருக்கிறது. இதன் விளைவாகவே தற்போதைய அமைப்பில் சீர்படுத்த இயலாத அளவுக்கு உள்ளானுக்கும் இல்லானுக்கும் இடையிலான இடைவெளி நீண்டிருக்கிறது.
    இஸ்லாம் இதி உடன்படுகிறது என்பதற்கான ஆதாரத்தை உங்களால் தர முடியவில்லை.இஸ்லாம் எந்தவகையில் சுரண்டலுக்கு உடன்படுகிறது? இஸ்லாமை கற்பனைகோட்டை என்று கண்ணாடியில் உங்களை பார்த்துக்கொண்டு சொல்லுகிறீர்கள் என நினைக்கின்றேன்.பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாமை,தனி சொத்துடைமை இல்லாமை என்பது புரிய வில்லை.இதை நடைமுறைப்படுத்த முதலில் உங்களது ம.க.இ.க.வினர் அனைவரும் உங்களது பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் ம.க.இ.க.வுக்கு உடைமையாக்குங்கள்.உங்கள்,மற்றும் உங்களது குடும்பத்தாரின் பெயரில் ஒரு துண்டு நிலமும் ,வங்கி கணக்குகளில் ஒருபைசாவும் இருக்கக்கூடாது.உங்களது அனைவரின் வருமானமும் ம.க.இ.க.வுக்கு அனுப்பப்பட்டு உயர் மட்டத்தில் வேலை செய்பவனுக்கும் ,குப்பை கூட்டும் தொழிலாளிக்கும் மாதவருமானத்தை சமமாக பிரித்து கொடுக்கவேண்டும்.
    இதன் விளைவாகவே தற்போதைய அமைப்பில் சீர்படுத்த இயலாத அளவுக்கு உள்ளானுக்கும் இல்லானுக்கும் இடையிலான இடைவெளி நீண்டிருக்கிறது.
    மற்றவர்களைப்பற்றி கவலைப்படாமல் ,முதலில் முன்மாதிரியாக நீங்கள் செயல் படுத்தி காட்டுங்கள்.ஜனநாயகத்தில் உள்ள அத்தனை சுக போகத்தையும் அனுபவித்துக்கொண்டு ,பொவுடைமை பேசாதீர்கள்.உங்கள் பொது உடைமையை நீங்கள் நடைமுறை படுத்தி காண்பித்தால்தான் மற்றவர்களுக்கு உங்கள் கொள்கைமீது நம்பிக்கை வரும்.
    பணக்காரனுக்கு செல்வத்தைக் கொடுப்பதும் நானே, ஏழைக்கு அதனை இல்லாமல் செய்வதும் நானே என்று தடுப்பதும், திரிப்பதும்; இந்த உலகில் ஏழையாய் இருந்தாலும் செத்தபிறகு நீ பணக்காரனாகலாம் என்று அவனை ஆற்றுப்படுத்துவதும் மதங்கள் தான், இஸ்லாம்தான்.
    இஸ்லாம் உலகம் இயங்கவே இப்படி சொல்லுகிறது.அனைவரும் ஒரே நிலையில் இருந்தால் குப்பை அள்ளுவது யார்?சுமை தூக்குவது யார்?ஆட்சி அதிகாரம் பண்ணுவது யார்? மேலும் இஸ்லாம் சக்காத்தை அறிமுகப்படுத்தி மக்களின் ஏழ்மையை போக்க வழிகண்டுள்ளது.ஏழை,பணக்காரன் என்பதும் நிரந்தரம் இலை. ஏழை ஆறுதலே படுத்துகிறது.அவன் பணக்காரன் ஆக முயற்ச்சியை தடுப்பதில்லை.இஸ்லாம் சுரண்டலை அனுமதிப்பதையும் துன்பத்தை வேடிக்கை பார்ப்பதையும் ஆதாரத்தோடு நிருபியுங்கள்.பலமுள்ளவனும் நோஞ்சானும் சமமாகுவான?அறிவுடைவனும் முட்டாளும் சமமா? ஊனமுடைவர்களை மற்றவர்களைப்போல் ஊனமற்றவர்களாக்கி சமநிலை அடைய வைப்பீர்களா? பெண்களில் அழகுள்ளவர்களியும் அது இல்லாதவர்களையும் சமநிலையில் வைத்து திருமணம் செய்வீர்களா?நீங்கள் சொல்லும் சமநிலை கொண்டுவர உருண்டையாக இருக்கும் பூமியை தட்டையாக மாற்றினால் பூமியும் சமம்.மக்களும் சமம்.என்ற உங்களது கற்பனை கோட்டையை நனவாக்கிவிடலாம். இன்னும் உங்களது மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் கேட்டிருந்தேன்.நீங்கள் பதில் தரவில்லை.அறியாமை,அடக்குமுறை ,துன்பம்,சுரண்டல்.இவைகளுக்கு இஸ்லாம் இணக்கமாக உள்ளது என்பதற்கு உங்களால் ஆதாரம் தரமுடிய வில்லை நீங்கள் இஸ்லாமிய ஆட்சி முகம்மதுநபி[ஸல்]காலத்தில், உமர்[ரலி]காலத்தில் எவ்வாறு நடைபெற்றதை படித்தால் உண்மை அறிந்திருப்பீர்கள்.

  27. முதலில் அனுப்பியதில் சிறு சிறு பிழைகள் உள்ளதால் பிழைகள் திருத்திய கருத்தை அனுப்பினேன் நீங்கள் பிழைகள் இல்லாததை நீக்கிவிட்டு பிழைகள் உள்ளதை வெளியிட்டுள்ளீர்கள்..

  28. 150.கோடிமக்களால் மதிக்கப்படுகிற,உலகில் சிறந்த நூறு மனிதர்களில் முதலாவதாக மதிக்கப்படுகிற எங்கள் தலைவரை ஒரு பொறுக்கி பைத்தியக்காரன் என்று எழுதுகிறான் சென்கொடியே நீவிர் அதை வெளியிட்டுள்ளீர்கள்.அசல் பித்து பிடித்த நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனை கோட்டையின் நாயகரை பித்தர் என்றால் உடன் நீக்கிவிடுவீர்.இதுதான் நீங்கள் கண்ட நாகரீகமா?

  29. இப்ராஹிம்,

    ஏழ்மையும் அதன் காரணமும் எனும் விவாதத்தொகுப்பை முழுமையாக படித்துப்பாருங்கள் உங்கள் கேள்விகளுக்கு அதில் விளக்கமிருக்கிறது. அதிலிருப்பவை உங்களுக்கு திருப்தியளிக்கவில்லையென்றால், அதை மறுத்து உங்கள் கேள்விகளை நிருவுங்கள் பின்னர் பதிலளிக்கிறேன்.

    உங்கள் விதந்தோதல்கள் புனிதங்கள் எல்லாம் உங்களோடுதான், எங்கள் மீது திணிக்கவேண்டாம். பித்தன் என்பதெல்லாம் பின்னூட்டத்தை நீக்கப் போதிய காரணமல்ல, அதைவிட மோசமான பின்னூட்டங்களெல்லாம் இங்கு இருக்கின்றன. ஒரே பின்னூட்டத்தை பத்து இடங்களில் ஒட்டினால் பத்தையும் அனுமதிக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

  30. வணக்கம் நண்பரே!
    இட ஒதுக்கீடு முறையில் தாகூர் (மன்னிக்கவும் முழுப் பெயர் தெரியவில்லை) முறை எந்த அளவுக்கு பயன் தரும்? அல்லது மண்டல் கமிஷன் முறை முழுமையான பலன் தருமா?

  31. //”ஏழ்மையும் அதன் காரணமும் எனும் விவாதத்தொகுப்பை முழுமையாக படித்துப்பாருங்கள் உங்கள் கேள்விகளுக்கு அதில் விளக்கமிருக்கிறது.//”செங்கொடியோனே. |’ எனக்கு அதை முழுமையாக படிக்க நேரமில்லை .எனது கேள்விக்கான விளக்கத்தை மட்டும் அதிலிருந்து சுருக்கமாக தாருங்கள்.
    மேலும் இஸ்லாத்தின் மீது உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தாருங்கள்.

  32. இப்ராஹிம்,

    அந்த விவாதத்தொகுப்பை உங்களை படிக்கச் சொல்வதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஏற்கனவே கூறப்பட்ட ஒன்றை மீண்டும் கூறுவதை தவிர்க்கலாம். இரண்டு இது விரிவாக விளக்கமளிக்கப்படவேண்டிய விசயம். ஆனால் நீங்கள் அதையெல்லாம் படித்துக்கொண்டிருக்க நேரமில்லை என்கிறீர்கள். ஒரு விசயத்தில் தெளிவடைய வேண்டுமென்றால் கொஞ்சம் நேரம் ஒதுக்கலாம் தவறில்லை. போகட்டும்.

    இஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் என்கிறீர்கள், ஏழ்மைக்கான காரணம் வேறாக இருக்க நானே காரணம் என்பதின் மூலம் உண்மைக் காரணத்தை மறைக்கிறது, என்பது ஒன்றே போதுமான ஆதாரமாகும். இதை நீங்கள் மறுக்கிறீர்களா? மறுத்தீர்களென்றால் குரான் வசன எண்ணைக் கூறலாம் ஆதாரமாக. அடுத்து அதை எந்த வழியில் நீக்குவது? லாபக் கோட்பாட்டை ஆதரிப்பதன் மூலம்; ஏற்றத்தாழ்வான இந்த சமூக அமைப்பைப்பின் மூலம் தான் உலகம் இயங்கும் என்று இந்த அமைப்பை தக்கவைப்பதன் மூலம் சுரண்டலுக்கு ஆதரவாய் நிற்கிறது. இவைகளை நீங்கள் மறுத்தீர்களென்றால் அந்த வசன எண்களைக் கூறலாம் ஆதாரமாக. நீங்கள் கூறலாம் வட்டியை தடுத்திருக்கிறது, அளவு நிறுவைகளில் மோசடி செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது என்றெல்லாம். இவைகளெல்லாம் சின்னச்சின்ன சீர்திருத்தங்கள், ஒட்டுமொத்த அளவில் இஸ்லாம் இந்த ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பை ஆதரிக்கிறது, அங்கீகரிக்கிறது.

    மனிதர்கள் அனைவரும் சமம். மனிதர்கள் அனைவரும் சமமான வாய்ப்பும் சமமான வசதிகளும் பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்றால், உங்களுக்கு பலசாலி நோஞ்சான், ஆராக்கியமானவன் ஊனமானவன், அழகானவள் அழகில்லாதவள் என்பதெல்லாம் ஞாபகம் வந்துவிடுகிறது. அனைவரும் சமமானவர்களாக இருக்க வேண்டும் என்றால் உயரமாக இருப்பவர்களின் அங்கங்களை வெட்டியெறிந்து சமாக்கிவிடுவீர்கள் போலிருக்கிறது. ஐயா, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதன் மூலம் படிப்படியாக வேறுபாடில்லாத சமூகத்தை அமைக்கவேண்டும், ஏனென்றால் புராதன பொதுவுடமை சமூகத்திலிருந்து பொருள் ஆதார வசப்படுத்தல்களின் மூலம்தான் இவ்வுலகம் சீரின்மையை நோக்கி பயணித்தது என்பதுதான் மனிதகுல வரலாறு.

    உலகம் ஏற்றத்தாழ்வாக இருந்தால்தான் குப்பை அள்ள ஆள்கிடைக்கும் என்பதெல்லாம் மோசடியான கருத்து. நிர்வாகியாகப் பணி செய்வது மதிப்புவாய்ந்தது, குப்பை அள்ளுவது கேவலமானது எனும் மறைமுக தீண்டாமையை முகமூடி போட்டு உலவவிடும் கருத்து. தன்மையில் வேறுபட்டதாக இருந்தாலும் இரண்டும் வேலைதான் இரண்டிலும் கேவலமில்லை எனும் எண்ணம் வந்தால் எல்லா வேலையும் ஒன்றுதான். ஏழ்மையைப் போக்க சக்காத்தை அருளியிருக்கிறது என்று அனைவரும் ஆரோகணம் செய்கிறார்கள். சக்காத் எப்படி ஏழ்மையைப் போக்கும் என்றால் யாரிடமும் பதிலிருக்காது. சக்காத் என்பது பணக்காரர்களிடமிருந்து பெறும் 2.5 விழுக்காடு வரி. இதைக்கொண்டு எப்படி ஏழ்மையைப் போக்க முடியும்? ஏழ்மை என்றால் என்னவென்றே அறியாமல், அரசு என்றால் என்னவென்றே அறியாமல் ஏழ்மையைப் போக்குவது எப்படி?

    நான் இஸ்லாத்தை விமர்சிக்கிறேன் என்றால் அதைப் பற்றி நான் அறிந்திருக்கிறேன், படிக்கிறேன், தெரிந்துகொள்கிறேன், தேடுகிறேன். ஆனால் கம்யூனிசத்தைப் பற்றி கருத்துக்கூறுமுன் அதுபற்றி கொஞ்சமேனும் நீங்கள் அறிந்திருக்கவேண்டும். நீங்கள் சொத்துக்களை கொடுத்துவிடவேண்டும் வங்கிக்கணக்கை ஒப்படைத்துவிடவேண்டும் என்று எழுதியிருப்பதில் உங்களின் கம்யூனிசம் குறித்த தேடல்(!) தெரிகிறது. தனிஒரு நாட்டிலேயே பொதுவுடமையை அமல்படுத்த முடியாது எனும்போது தனியான மனிதர்களை அமல்படுத்தச் சொல்கிறீர்கள், வேடிக்கை தான். முதலில் கம்யூனிசம் என்றால் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்.

    மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் சோசலிசம் அமலில் இருந்த காலத்தைய ரஷ்ய, சீன சமூகங்களைப் பாருங்கள்.

    நீங்கள் உடனேயே இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதொன்றும் அவசியமில்லை. நிதானமாக அந்த தொகுப்பை படித்து உள்வாங்கிக்கொண்டு வாருங்கள். தொடர்ந்து இதுகுறித்து விவாதிக்க விரும்பினால் தனியாக ஒரு விவாதப் பகுதியை ஏற்படுத்திக்கொண்டு அதில் விவாதிக்கலாம்.

    செங்கொடி.

    பின்குறிப்பு: நீங்கள் தமிழ் பயின்றவராக இருக்க வேண்டும் என கருதுகிறேன். சில பத்தாண்டுகளுக்குமுன் இரட்டை பொருள் கொண்ட சொற்கள் வெகுவாக சிலாகிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தன. ஆடவரலாம், தங்கச்சிவந்தியா (ஆடவரலாம் = ஆடவர் எல்லாம், ஆட வரலாம்; தங்கச்சிவந்தியா = தங்கச் சிவந்தியா, தங்கச்சி வந்தியா) போன்று. அதன்பிறகு இப்போது அதுபோன்ற சொற்பாவனையை உங்களிடம் கண்டு ஒரு விதத்தில் மகிழ்கிறேன். \\செங்கொடியோனே// உங்களின் இந்த நயத்தை ரசித்தேன்.

  33. வணக்கம் நண்பர் ஹாஜா,

    இடஒதுக்கீட்டில் தாகூர்முறை, மண்டல் முறை என்றெல்லாம் இருக்கிறதா? தெரியவில்லை. அதிலும் மண்டல் தெரிகிறது, தாகூர்….? காங்கிரஸ் எம்பி பிரபா தாகூரைக் கூறுகிறீர்களா? அவர்தான் இடஒதுக்கீடைப்பற்றி தற்போது அதிகம் பேசியவர்(பாராளுமன்றத்தில் பெண்களுக்கான 33வீத இடஒதுக்கீடு குறித்து).

    தனது ஆட்சிக்கு பெரும்பான்மைப் பிரிவினரிடமிருந்து ஆபத்து வந்துவிடக்கூடாதே எனும் நோக்கத்தில் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தியது இடஒதுக்கீடு. 1947க்கு பிறக்கான இடஒதுக்கீடு முறைமைகளில் ஒரு சீர்திருத்தம் எனும் அளவில், வெகுசில மாற்றங்களை ஏற்படுத்தியதில் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும், அதன் பயனாளிகள் யார் என்பதில் சிக்கல் இருக்கிறது. ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்ட பிரிவினரைவிட, அவர்களை ஒடுக்கிய பிரிவினரே அதிகம் பலனடைந்திருக்கிறார்கள். இதன் பொருள் நோக்கம் சிறப்பானது, பயன்படுத்திய முறை தவறு என்பதல்ல. இடஒதுக்கீட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டதே ஒடுக்கியவர்கள் தாங்கள் பலனடைய வேண்டும் என்பதற்காகத்தான். அதை நிறைவேற்றுவதற்காக பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்களும் ஒடுக்கப்பட்டோம் என்று மெய்யாக ஒடுக்கப்பட்டவர்களோடு இணைந்து கொண்டார்கள். ஆக பிற்படுத்தப்பட்டவர்களின் கோரிக்கையாக எழுந்து பிற்படுத்தப்பட்டவர்களையே பலனடைய வைத்திருக்கும் இடஒதுக்கீடு சாராம்சத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான நிவாரணமாக முன்னிருத்தப்படுகிறது. ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களா? ஒடுக்கியவர்களா? என்பதுதான் முக்கியமான கேள்வி.

    மண்டல் கமிசன் விபி சிங் ஆட்சியில் பிற்படுத்தவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கும் பரிந்துரைகளுடன் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இது இடஒதுக்கீட்டு முறை என்பது சரியா? பொதுவாக இடஒதுகீடு அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக மக்கள் சமூகத்தில் நீடித்திருக்கும்வரை நீடித்திருக்கும் தேவை இருக்கிறது. ஆனால் அதில் பலனடைவது அவர்களில்லை. இடஒதுக்கீடு சரியான பலனைத் தரவேண்டுமென்றால் அதில் பயனடையவேண்டியவர்கள் யார் என்பது, ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டுவந்தவர்கள் யார் எனும் ஆய்வின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவேண்டும்.

    பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு, மக்கள் தொகை அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பதெல்லாம் அந்தந்த ஜாதிப்பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தும், செல்வாக்கோடு இருக்கும் ஆட்களுக்கத்தான் பயன்படுமேயன்றி, தேவைப்படும் ஆட்களுக்கு பயன்படாது. இதையே கிருஸ்தவ, இஸ்லாமிய மத அடிப்படையிலான ஒதுக்கீடாக கொண்டாலும் கிருஸ்தவர்கள், முஸ்லீம்கள் மதத்தில் பிரிவு இல்லை எனும் பெயரில் ஆதிக்கவாதிகளே அனுபவிப்பர். தலித் கிருஸ்தவர்களோ, தலித் முஸ்லீகளோ பலனடைய மாட்டார்கள்.

  34. நண்பருக்கு வணக்கம்.
    விடுதலை புலி அமைப்பு ஒழித்து விட்டோம் என்று கூறிய பின்னர் அந்த அமைப்பை இந்திய அரசு தடை செய்வதும், தடையை நீக்ககோரி வை.கோ.,
    பழ.நெடுமாறன் போன்றோர் வேண்டுவதும் முரணாக தெரிகிறது விளக்கவும்

  35. வணக்கம் நண்பர் ஹாஜா,

    இலங்கையைப் பொருத்தவரையில் விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டனர். விடுதலைப்புலிகளின் ஒழிப்பில் இந்தியாவின் பங்கும் தேவையும் முதன்மையானது. இந்தியாவின் பிராந்திய நலன்களும், பொருளாதார நலன்களுமே விடுதலைப்புலிகள் விசயத்தில் இந்தியாவை நடத்தியது. ஆனால் இந்தியாவிலுள்ள தமிழினவாதிகள் முக்கியமான இந்த விசயத்தை ஏற்றுக்கொள்ளாததுடன், மறைக்கவும் முயல்கின்றனர். அவர்களைப் பொருத்தவரை விடுதலைப்புலிகளை ஒழித்ததற்கும், தடை செய்யப்படுவதற்கும் ராஜீவ் காந்தி கொலையும் அதனைத்தொடர்ந்த சோனியாவின் கோபம், மலையாள அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல் போன்றவையே காரணம். அப்படியானால் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் தடை அவசியமற்றது. அதனால்தான் வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் தடையை நீக்கவேண்டும் தொடரக்கூடாது என வாதிடுகின்றனர். அதேநேரம் விடுதலைப்புலிகளுக்கான தடையும், தொடர்ந்து அதை நீட்டிப்பதும் ஒரு சடங்குதான் என்பது நீக்கக்கோரி வாதாடும் அவர்களுக்குத் தெரியாததல்ல.

    விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும் விடுதலைப்புலிகள் மீதான தடை இந்தியாவுக்கு ஏன் அவசியப்படுகிறது? ஏனென்றால் விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது விடுதலைப்புலிகளை மட்டும் குறித்ததல்ல. காஷ்மீரில் செய்யப்படும் ராணுவ அத்துமீறல், வடகிழக்கு மாநிலங்களில் செய்யப்படும் கொடூரங்கள், பயங்கரவாத பீதி, அடக்குமுறைச் சட்டங்களின் மூலம் மக்களை ஒடுக்குவது, அகதிகளாக இருப்பவர்களை அச்சுறுத்துவது போன்ற எல்லாவற்றுக்கும் மூலகாரணமாய் இருப்பது இந்தியாவின் பிராந்திய ஆதிக்க எண்ணம். நேபாளப் புரட்சியைத்தடுப்பதில் தொடங்கி, பூட்டான், திபெத்தில் தலையிடுவது, இலங்கையை கட்டுக்குள் வைத்திருப்பது வரை அனைத்தையும் நியாயப்படுத்த பயங்கரவாதம் தொடர்ந்து நீடித்திருப்பதாக மக்களை நம்பவைப்பது அவசியமாக இருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் மட்டுமே போதுமானதல்ல. இந்தியாவின் பார்வையில் இங்கு தங்கியிருக்கும் ஈழத்தமிழர்களும், புலம் பெயர்ந்திருப்பவர்களும்கூட விடுதலைப்புலிகள் தாம். அதனால் விடுதலைப்புலிகள் இல்லாமல் போனபின்பும் விடுதலிப்புலிகளுக்கான தடை அவசியப்படுகிறது. இதை அமபலப்படுத்தவோ, எதிர்த்துக் குரல் கொடுக்கவோ வைகோ, நெடுமாறன் கும்பல்களால் முடியாது. ஏனென்றால் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திற்கு அவர்களும் உடன்படுகிறார்கள். தனி ஈழத்துக்கு குரல்கொடுக்கும் இவர்கள் ஒருகாலமும் தனி காஷ்மீரை ஆதரிக்க மாட்டார்கள், வடகிழக்கு மாநிலங்களை துப்பாக்கி முனையில் நிருத்திவைத்திருப்பதை கண்டித்து மூச்சுக்கூட விடமாட்டார்கள். பிராந்திய ஆதிக்கத்தை மறைக்க இந்தியாவுக்கு விடுதலைப்புலிகள் தேவைப்படுவதைப்போலவே, தமிழினவாதிகளுக்கு தங்களின் துரோகத்தை மறைக்கவும், மக்களை ஏமாற்றவும் ராஜிவ்காந்தி கொலையும், விடுதலைப்புலிகளின் தடையை எதிர்ப்பதும் தேவைப்படுகிறது.

    இதில் முரண்நிலை ஒன்றுமில்லை. கதையை திறம்பட நகர்த்திச் செல்லவேண்டுமென்றால் கதாநாயகன் பாத்திரத்தைப்போலவே, வில்லன் பாத்திரமும் அவசியம் தான்.

  36. இப்ராஹிம்,

    நீங்கள் இந்தப்பகுதியில் வைத்த அனைத்து பின்னூட்டங்களையும் தடுத்து வைத்திருக்கிறேன். இந்த கேள்வி பதில் பகுதியை தாண்டி நீங்கள் விவாதிக்க விரும்புவது தெரிகிறது. உங்களுக்கு ஆமோதிப்பு இருக்கும்பட்சத்தில் அதை தெரிவியுங்கள் விவாதத்திற்கென்று தனிப்பகுதியை உருவாக்கி அதில் விவாதிக்கலாம். இந்தப்பகுதியில் நான் எழுதியதை வெட்டி ஒட்டாமல் உங்கள் கேள்வியை மட்டும் ஒவ்வொன்றாய் கேளுங்கள். (ஒன்றுக்கு பதில் கூறிய பின் அடுத்தது) புரிதலுடன் கூடிய ஒத்துழைப்பை உங்களிடம் எதிர்நோக்குகிறேன்.

  37. செங்கொடியின் கூற்றுக்கு நான் பச்சை கொடி காட்டுகிறேன்.விவாதிக்க வாருங்கள்.

  38. நன்றி இப்ராஹிம்,

    என்ன தலைப்பில் விவதிக்க விரும்புகிறீர்கள். விவாதத்தை நடத்துவது குறித்து நீங்கள் கூற விரும்பும் கருத்துக்கள் விதிமுறைகள் போன்றவைகுறித்து விளக்கமாக ஒரு பின்னூட்டமிடுங்கள். அதன் பிறகு விவாதத்திற்கென்று தனிப்பகுதி தொடங்கி அதில் நாம் தொடரலாம்

  39. வாழ்வதற்கு நடைமுறை சாத்தியம் இஸ்லாம் மட்டுமே ‘என்பது தலைப்பாக வைத்துக்கொள்வோம் விதிமுறைகள் பற்றி நீங்கள் கூறுங்கள்..

  40. ##வாழ்வதற்கு நடைமுறை சாத்தியம் இஸ்லாம் மட்டுமே ‘என்பது தலைப்பாக வைத்துக்கொள்வோம்##
    இந்த விவாதத்தில் முடிந்தவரை நானும் கலந்துகொள்கிறேன். உங்கள் கூற்று தவறு எனபது குறித்து எனது விவாதம் இருக்கும்.

  41. வணக்கம் நண்பரே.
    சீன பிரதமர் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுகையில் அங்குள்ள மக்களுக்கு
    தனி விசா வழங்க வேண்டும் என்று குறிப்பட்டதற்கு இங்குள்ள காங்கிரஸ்,மற்றும் போலி தேசியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தற்கு காரணம் என்ன?

  42. விவாதம் என்பது ஒரு விசயத்தைப்பற்றி நேர்மறையிலும் எதிர்மறையிலும் தர்கம் செய்துகொள்வதே. அப்படி என்றால் இபுராகிம் விவாதத்திற்கு வைத்துள்ள தலைப்பு தவறு.

    இஸ்லாம் வாழ்வதற்கு நடைமுறை சாத்தியம் உள்ள மதமா? இல்லையா? என்பதே சரியான தலைப்பாக இருக்கமுடியும்.

  43. தி.மு அவர்களின் மென்மையான கவனத்திற்கு

    ஹெட்லியை பாகிஸ்தானுக்கு யு.எஸ். அனுப்பியது

    First Published : 09 Nov 2010 12:00:00 AM IST

    நியூயார்க், நவ.8: மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியை உளவாளியாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது அம்பலமாகியுள்ளது.
    ஹெட்லிக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்பிருப்பது தெரிந்தும் அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாகிஸ்தானில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ரகசியத் தகவல்களை திரட்டுவதற்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார் என்று அமெரிக்கப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
    கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டிருந்த ஹெட்லியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக அவரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
    2001-ல் பாகிஸ்தானுக்குச் சென்ற ஹெட்லி, போதைப் பொருள் கடத்தல் குறித்து ரகசியத் தகவல் திரட்டியதாகத் தெரியவில்லை. மாறாக, அவர் அங்கு பயங்கரவாதப் பயிற்சியில் ஈடுபட்டதாகவே தெரியவந்துள்ளது

  44. நண்பர் இப்ராஹிம்,

    \\வாழ்வதற்கு நடைமுறை சாத்தியம் இஸ்லாம் மட்டுமே// எனும் உங்கள் தலைப்பில் நீங்கள் வாதிக்க விரும்பும் பொருள் என்ன என்பது கூர்மையாக புலப்படவில்லை. இஸ்லாம் கடைப்பிடிப்பதற்கு எளிமையானது என்பது உங்கள் பொருளா? என்றால் அதில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை. எந்த ஒரு மதத்தையும் விட கம்யூனிசம் கடைப்பிடிக்க கடினமானதுதான். நடைமுறையில் நாம் கொண்டிருக்கும் அனைத்தையும் இயங்கியலுடன் உரசி உரசி எரித்து கம்யூனிசத்திற்கு உயர்வது மதங்களைப் பின்பற்றுவதுபோல் அத்தனை எளிதல்ல. ஆனால் நிகழ் உலகில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அதுவே சரியானது என்பதில்தான் விசயம் இருக்கிறது. ஒரு கொள்கை பின்பற்றுவதற்கு எளிதானதாக இருக்கிறதா என்பதைவிட சரியானதாக இருக்கிறதா என்பதே முதன்மையானது. இதையேதான் நீங்களும் குறிப்பிடுகிறீர்களா? என்றால் அதை விளக்கமாக சொல்லிவிடுங்கள்.

    விதிமுறைகள் குறித்து நான் புதிதாக குறிப்பிட ஒன்றுமில்லை. மண்ணுக்கேற்ற மார்க்கம் எது? எனும் தலைப்பில் தொடங்கிய விவாதத்தில் நான் குறிப்பிட்டவைகளில் மாற்றமொன்றுமில்லை. நீங்கள் விரும்புபவற்றை குறிப்பிடலாம்.

    செங்கொடி

  45. நிகழ் உலகில் நிலவும் பிரச்னைகளுக்கு இஸ்லாமே தீர்வானது..
    .இதையே தலைப்பு ஆகக்கொள்வோம் உங்களது முந்தைய விவாதத்தில் உள்ள விதிமுறைகளை நான் படிக்கவில்லை.

  46. வணக்கம் நண்பர் ஹாஜா,

    காஷ்மீருக்கு சீனா தனி விசா வழங்குகிறது என ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் இதுபற்றி கூறும் செய்திகளை நுணுகிப்பார்த்தால் விசாவை பாஸ்போர்டில் அச்சிடாமல் தனி தாளில் தருவதாகவே இருக்கிறது. அண்மைக்காலங்களில் சீனாவுக்கு எதிரான தூண்டல் மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. இதன் காரணங்களில் ஒன்றாக‌ இந்திய இராணுவச் செலவை அதிகரிப்பதற்கு ஆதரவான மனோநிலையை மக்களிடம் ஏற்படுத்துவது எனும் திட்டம் இருக்கிறது. இந்தப் பின்னணியில் தான் இந்த விசா பிரச்சனையை பார்க்க வேண்டும். சீனாவும் 2008லிருந்து இந்த நடைமுறையை பின்பற்றி வருவதாக குறிப்பிட்டிருக்கிறது. இது இரண்டு நாடுகளுக்கிடையேயான சிறிய பிரச்சனை, ஊடகங்கள் கூறும் அளவிற்கு இதில் ஒன்றுமில்லை என முன்னாள் வெளியுறவு இணையமைச்சர் சரி தரூர் கூறியிருக்கிறார். முன்னர் காஷ்மீர் அருணாச்சலப் பிரதேசத்தில் சீனப் படைகள் ஊடுருவல் எனும் பரபரப்பிலும் இந்திய வெளியுறவு அமைச்சகத்திலிருந்தும், பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்தும் மாறுபட்ட கருத்துகள் வெளிப்பட்டன. விசா பிரச்சனை குறித்து குறிப்பிடும் எந்தச் செய்தியிலும் காஷ்மீரை தனி நாடாக அங்கீகரித்து தனி விசா வழங்குவதாக இல்லை, மாறாக தனித்தாளில் வழங்குவதாகத்தான் குறிப்பிடுகின்றன. வழங்கப்படும் விசாவும் இந்திய பாஸ்போர்டுக்கு இணைப்பாகத்தான் வழங்கப்படுகிறதேயன்றி, இந்திய பாஸ்போர்டை நிராகரிக்கவில்லை. காஷ்மீருக்கு மட்டும்தான் தனித்தாளில் வழங்குகிறார்கள், ஏனைய பகுதியிலிருந்து செல்வோருக்கு பாஸ்போர்டிலேயே அச்சடித்துத்தருகிறார்கள் என எந்தச் செய்தியிலும் குறிப்பிடவில்லை. ஆக இது சீனாவுக்கு எதிரான மனோநிலையை வள‌ர்ப்பதற்காக செய்யப்படும் ஊடகப் பரப்புரை. சீனா தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என கூறிவரும் திபெத்தை இந்தியா தனி நாடாக அங்கீகரித்துள்ளது என்பதையும், சௌதியிலிருந்து விடுப்பில் ஊர் செல்பவர்களுக்கு தற்போது தனித்தாளில் தான் விசா அடித்துத்தருகிறார்கள் என்பதையும் இதனுடன் இணைத்துப்பாருங்கள்.

    காஷ்மீரில் நடப்பது பிரிவினைவாதம் தான், விடுதலைப்போராட்டமல்ல என்பதுதான் போலி கம்யூனிஸ்டுகள் உட்பட அனைத்து ஓட்டுக் கட்சிகளின் நிலைபாடு. இவர்களைப் பொருத்தவரை ஆளும்வர்க்கத்திற்கு ஆதரவான அனைத்தும் தேசியவாத கண் கொண்டே பார்க்கப்படும், அது சரியா தவறா என்பது ஒரு பொருட்டே அல்ல. இந்த அடிப்படையில் தான் சீனாவின் காஷ்மீர் நடவடிக்கைகளுக்கு இந்தியக் கட்சிகள் தெரிவிக்கும் எதிர்ப்பு அடங்குகிறது.

    அதேநேரம் சீனா கொண்டிருக்கும் காஷ்மீர் நிலைப்பாடும், காஷ்மீரில் நடப்பது விடுதலைப்போராட்டம், அதை நாம் ஆதரிக்க வேண்டும் எனும் அடிப்படையில் அமைந்ததல்ல. சீனாவின் ஆளும்வர்க்க, பிராந்திய ஆதிக்க நலன்களே காஷ்மீர் கொள்கையை தீர்மானிக்கின்றன. அண்டை நாடுகளின் விடுதலைக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவளிப்பது ஒரு சோசலிச நாட்டின் கடமை என்பதோடு சீனாவின் காஷ்மீர் நடவடிக்கைகளை முடிச்சுப் போடக் கூடாது. ஏனென்றால் சீனா சோசலிச நாடு அல்ல.

  47. நண்பர் இப்ராஹிம்,

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தலைப்பையே எடுத்துக்கொள்வோம். நிகழ் உலகில் இருக்கும் பலவாறான பிரச்சனைகளில் எதை முதலில் எடுத்துக்கொள்வது என்பதை குறிப்பிடுங்கள். அல்லது அதை நான் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்றால் அதில் உங்களுக்கு மறுப்பில்லை என்பதையும் குறிப்பிடுங்கள். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விவாதத்திற்கான தனிப்பகுதியை தொடங்குகிறேன். நாம் தொடரலாம்.

  48. >>>மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் சோசலிசம் அமலில் இருந்த காலத்தைய ரஷ்ய, சீன சமூகங்களைப் பாரு<<>>அண்டை நாடுகளின் விடுதலைக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் ஆதரவளிப்பது ஒரு சோசலிச நாட்டின் கடமை என்பதோடு சீனாவின் காஷ்மீர் நடவடிக்கைகளை முடிச்சுப் போடக் கூடாது. ஏனென்றால் சீனா சோசலிச நாடு அல்ல.<<<nov13

    நவம்பர் 2 கருத்தும் நவம்பர் 13 கருத்தும் முரணாகத் தெரிகிறதே.. உங்களது இரண்டாம் தேதிய கருத்து சீனாவையும் உள்ளடக்கியதா ?அவ்வாறெனின் இப்போது சீனாவில் என்ன இசம் ஓடிக்கொண்டிருக்கிறது.

  49. நீங்களே பிரச்னை தேர்ந்தெடுங்கள்.பழைய விவாத விதிமுறைகளை பற்றி பேசினீர்களே.

  50. தோழர் வணக்கம்
    பொது உடைமைக் கொள்கை மீது வைக்கப் படும் சில குற்றச் சாட்டுகள் அவையாவன .
    1. உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட தொழிலாளர்களின் நலனுக்காக உண்டாக்கப்பட்ட நல்லதொரு கோட்பாடு கம்யூனிசம்.
    இந்த காலத்திற்கு பொருந்தாது. கால்த்திற்கு ஏற்றவாரு மாற்றப் படவேண்டும்.ஆனால் கம்யூனிசக் கொள்கைகளும் மாறாது அப்படியே இருக்கிறது.

    2.கம்யுனிசம் தோன்றிய நாடுகளிலேயே அது இப்போது ஏற்றுக் கொள்ளப் படவில்லை.ஆகவே அதற்கு எதிர்காலம் இல்லை.

    இது குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்

  51. வணக்கம் சங்கர்,

    கம்யூனிசத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஹிட்லர் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டன, முதலாளித்துவம் முற்றுமுழுதாக துடைக்கப்படும்வரை தொடரும்.

    உலகில் பெரும்பான்மையோர் உடலுழைப்பைச் செலுத்தும் பாட்டாளி மக்களாகவே இருக்கின்றனர். அந்த வகையில் தொழிலாளிகள், விவசாயிகள் நலனை முன்னிருத்துவதுதான் சரியானதாகவும் இருக்கும். கம்யூனிசம் மக்களை அடக்கியாளும் ஆளும்வர்க்கத்திற்கு எதிராக எழுந்த சித்தாந்தம் என்றாலும் அது ஒரு கொள்கை, கட்சி என்ற அளவில் நின்றுவிடவில்லை. அது இயங்கியல் பொருள்முதல் வாதம், வரலாற்றியல் பொருள்முதல் வாதம் எனும் சமூக அறிவியலின் பார்வையில் உலகை மாற்றியமைக்கக் கோருகிறது. அதனால் கம்யூனிசம் என்பது ஒரு தத்துவமோ கோட்பாடோ அல்ல, அது சமூக அறிவியல். இந்த அடிப்படை குறித்த புரிதல் இல்லாததால்தான் நீங்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

    காலத்திற்கேற்ப மாறாது, மாறக்கூடாதது என்பது மதங்களுக்குத்தான் பொருந்தும். காலத்திற்கேற்பவும், இடத்திற்கேற்பவும் கம்யூனிசத்தில் மாறுதல்கள் செய்யப்பட்டே வந்திருக்கின்றன. மார்க்சியம் தோழர் லெனினினுடைய முன்னெடுப்புகளைச் சேர்த்து லெனினியம் என்றும், தோழர் மாவோவின் முன்னெடுப்புகளைச் சேர்த்து மாவோவியம் என்றும் அழைக்கப்படுகிறது. முதன்மையானது இயங்கியல் பார்வை, இந்தப் பார்வைக்கு உட்பட்டு கம்யூனிசம் லெனினியம் மாவோயியம் என முன்னேறிக்கொண்டே வந்திருக்கிறது. அதற்கான வாய்ப்புகளை உள்ளடக்கியது தான் கம்யூனிசம்.

    கம்யூனிசம் தோன்றிய நாடுகளிலே அது இல்லை என நீங்கள் குறிப்பிடுவது அது ஆட்சியில் இருப்பதைக் குறிக்கிறது. கம்யூனிச‌ இயக்கங்களின் எதிர்காலம் மக்களின் போராட்ட வீரியத்தில் இருக்கிறது. அந்தப் போராட்ட வீரியம் உலக அளவில் உயர்ந்துகொண்டே செல்கிறது. உலகம் கடந்த கால வரலாறுகளில் சந்தித்திராத பெரும் போராட்டங்களையெல்லாம் நிகழ் உலகில் சந்தித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் இந்த முதலாளித்துவ அமைப்புகளுக்கு எதிராக போராடுவதே சரியான பாதை என்பதை தங்கள் சொந்த அனுபவங்களின் ஊடாக தெரிந்துகொண்டு வருகிறார்கள். அவர்கள் அந்தப் போராட்டத்தில் சோசலிசத்தைச் சமைப்பார்கள். இதற்கு அண்மை எடுத்துக்காட்டு நேபாளம். எனவே எதிர்காலம் இல்லை என்பது எதிர்காலம் இருந்துவிடக் கூடாது என அச்சப்படுபவர்களின் பிதற்றல்.

  52. இப்ராஹிம்,

    உங்கள் மேற்கோளிலேயே உங்கள் கேள்விக்கான பதிலும் இருக்கிறது \\மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் “சோசலிசம் அமலில் இருந்த காலத்தைய” ரஷ்ய, சீன சமூகங்களைப் பாருங்கள்// தற்போது சீனவில் ஓடிக்கொண்டிருக்கும் இசம் கேப்பிடலிசம்தான் என்பதில் சீன ஆட்சியாளர்களுகே சந்தேகம் வந்ததில்லை, உங்களுக்கு எப்படி வந்தது?

  53. உலகம் தோற்றம் மற்றும் மனித தோற்றம் குறித்து உங்கள் கருத்து என்ன?

  54. நீங்கள் இஸ்லாதை விட்டு வெளியேற காரணம் என்ன? ஏதேனும் குறிப்பிட்ட சம்பவமுள்ளாத?

    கமுநிசத்திற்க்கும் பெரியரிசததிற்க்கும் உள்ள வேறு பாடு என்ன?

  55. நண்பர் ஷாஹுல்,

    உலக, மனித தோற்றங்கள் குறித்து அறிவியல் கொண்டிருக்கும் கருத்து தான் என்னுடையதும். பிரபஞ்ச தோற்றத்தை அறிவியல் பெருவெடிப்புக் கொள்கை மூலம் விளக்குகிறது. அது ஒரு அறிவியல் யூகம் தான் என்றாலும், தற்போதைய சாத்தியக் கூறுகளின்படி, இருக்கும் துணை ஆதாரங்களின்படி அதுதான் சரியானது. அதேபோல மனித தோற்றம் குறித்தும் பரிணாமம் கூறும் வழிமுறையே சரியானது.

    நான் இஸ்லாத்தை விட்டு வெளியேறியதற்கு தனிப்பட்ட சம்பவம் என்று எதையும் கூறவியலாது. பலவிதமான கல்வி கேள்விகளின் ஒருங்கிணைந்த விளைவு. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் குரானை ஆழமாக படித்தது. ஒரு வேதத்தை ஆழமாக கற்கும் எவரும் அந்த வேதத்தை விட்டு வெளியேறிவிடுவது இயல்பானது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் பெரும்பாலானோர் அதை நம்பிக்கையோடு ஓதுகிறார்களேயன்றி, மீளாய்வுக்கு உட்படுத்துவதில்லை, படிப்பதில்லை, கற்பதில்லை. அதுதான் பிரச்சனையே.

    கம்யூனிசத்திற்கும் பெரியாரியத்திற்கும் உள்ள வேறுபாடு வர்க்கத்தன்மை. பெரியாரியம் வர்க்கத்தன்மையோடு பிரச்சனைகளை ஆய்வதில்லை. ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னே வர்க்கம் இருக்கிறது என்பது கம்யூனிசத்தின் பார்வை. மதக் கொடுமைகளுக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தீண்டாமைக் கொடுமைகளை அகற்றுவதற்காக கிளர்ந்தெழுந்த இயக்கம் பெரியாரியம். உலகின் அனைத்துவித அடக்குமுறைகளையும், அதிகாரவர்க்கங்களையும் எதிர்த்து உலகை மாற்றியமைக்க, அனைவருக்கும் சமவசதி சமவாய்ப்பை வழங்க புரட்சிகரமாக முற்படும் இயக்கம் கம்யூனிசம். வேறுவேறு இயக்கமாக இருந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை பெரியாரியத்தை கம்யூனிசத்தின் ஒரு பகுதி என்று கொள்ளலாம்.

  56. தோழருக்கு வணக்கம். “The history of all hitherto existing society is the history of class struggle.” என்று ஆரம்பம் ஆகிறது கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை. ஆனால் ஆதிப்பொதுவுடைமை சமூகத்தில் வர்க்கங்கள் இல்லை தானே. பிறகு ஏன் “all hitherto existing society” என்று சொல்ல படுகிறது.

  57. தோழர் ஸ்பார்டகஸ்,

    “இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும்” என்றுதான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தொடங்குகிறது. ஆனால் புராதனப் பொதுவுடமைச் சமுதாயத்தில் வர்க்கங்கள் இருந்திருக்கவில்லை.

    1847 ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவரும் போது புராதனப் பொதுவுடமை சமுதாயம் குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை. அதன்பிறகுதான் பிரஷ்யாவைச் சேர்ந்த வரலாற்றாய்வாளர் ஹாக்ஸ்த் ஹாவுஸன் தான் முதன்முதலாக தன்னுடைய நூலில் புராதனப் பொதுவுடமைச் சமுதாயம் இருந்தது குறித்த புரிதலை முன்வைக்கிறார். பின்னர் மௌரர் எனும் ஜெர்மானிய அறிஞர் அதை உறுதிப்படுத்துகிறார். ஹாவுஸன், மௌரர் ஆகியோருக்கு முன் புராதனப் பொதுவுடமைச் சமுதாயம் குறித்த புரிதல் எதுவும் இல்லாததால், அதுவரை தொகுக்கப்பட்ட வரலாறுகள் அனைத்தும் பகை வர்க்கங்களின் போராட்ட வரலாறே என மார்க்ஸும், ஏங்கல்ஸும் தொடங்குகிறார்கள்.

    இந்த விபரக்குறிப்புகள் அனைத்தும் அந்த நூலிலேயே இருக்கின்றன.

  58. தோழர் வண‌க்கம் ,
    இப்போது இணையத்தில் அதிகமாக விவாதிக்கப் படும் சேர்ந்து வாழ்தல் பற்றிய மார்க்சிய புரிதல் என்ன?

    இதனால் ஏற்படும் சமூக பதிப்புகள் என்ன?

  59. நண்பர் ஷாஹுல்,

    வர்க்கம் என்பது கம்யூனிசம் குறித்த கல்விக்கு அடிப்படையான ஒரு கலைச் சொல். எளிமையாக விளங்க வேண்டுமென்றால் ஒருவிதமான மக்கட்பிரிவு. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையை நடத்த உழைத்தாக வேண்டும். அப்படி உழைக்கும் ஒருவன், சமூக உற்பத்தியில் தன்னுடைய உழைப்பின் மூலம் என்னவிதமான பங்களிப்பைச் செலுத்துகிறான், அவனுடைய உழைப்பின் கருவிகளுக்கும் அவனுக்கும் இடையிலான உறவு என்ன? என்பதைப் பொருத்து ஒருவனுடைய வர்க்கம் தீர்மானிக்கப்படுகிறது. இன்னும் எளிமையாக பொதுமைப்படுத்திச் சொல்லவேண்டுமென்றால், மரச்சாமான்கள் செய்யும் ஒரு தொழிற்சாலை இருப்பதாகக் கொள்வோம், இந்த தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் நாற்காலி, சட்டம் முதலான மரச்சாமான்கள். இந்த உற்பத்தியில் ஒரு தொழிலாளியும், முதலாளியும் அவரவர்களின் பங்களிப்பைச் செய்கிறார்கள். இதில் உழைப்பைச் செலுத்துவதற்கான கருவிகள் (மரம், வாள், இயந்திரங்கள், இழைப்புக்கருவி போன்றவை) யாருடைய உடமையாக இருக்கிறது? தொழிலாளி தனக்குச் சொந்தமில்லாத கருவிகளைக் கொண்டு தன்னுடைய உழைப்பைச் செலுத்துகிறான். முதலாளியோ நேரடியாக உழைப்பைச் செலுத்தவில்லை ஆனால் உழைப்புக் கருவிகள் அவனுக்கு சொந்தமாக இருக்கின்றன. எனவே இருவரும் வேறு வேறு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகிறார்கள். இப்படி பல்வேறு வார்க்கத்தை கொண்டதே ஒரு சமூகம். ஒவ்வொரு வர்க்கத்திற்கும் அதற்கேயுறிய தன்மைகள் இருக்கின்றன. முதலாளி என்றால் சுரண்டும் வர்க்கம், தொழிலாளி என்றால் சுரண்டப்படும் வர்க்கம். இதை உங்களின் புரிதலுக்கேற்ப மாறுபட்ட நிலைகளில் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள். சமூகத்தில் நிலவும் இந்த வர்க்கங்கள் அனைத்தையும் ஒழித்து வர்க்கமற்ற‌ நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே கம்யூனிசத்தின் நோக்கம்.

  60. நண்பர் சங்கர்,

    லிவிங் டுகதர் எனும் சேர்ந்து வாழ்தல் கலாச்சாரம் மாநகர்களில் பரவிவருகிறது. இது தோற்றத்தில் முற்போக்கானதாக தோன்றினாலும் உள்ளீட்டில் விகாரங்கள் இருக்கின்றன. ஆகவே இது ஏற்கத்தக்கதல்ல.

    நாம் திருமணம் செய்து உறவு கொள்ளும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். திருமணம் என்பது ஆணாதிக்க வடிவமே என்றாலும், ஆணாதிக்கத்தை எதிர்த்து ஏற்பட்ட சமரசம் எனலாம். சமூகத்தில் பெண்களின் பங்களிப்பும், முதன்மைத்தனமும் பறிக்கப்பட்டு பெண் அடிமைப்படுத்தப்பட்ட போது, ஆண்களின் பலதார வேட்கையினால் பெண்கள் சிதைக்கப்பட்டனர். இந்த பலதார வேட்கை ஒவ்வொரு சமூக மாற்றத்திலும் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இதை எதிர்த்து போராடிய பெண்களின் தெரிவாகத்தான் காதலும், திருமணமும் வருகின்றன. ஆணாதிக்க வடிவமாக இருந்தாலும் பெண்களின் தெரிவாக இருப்பதால் அது மீறப்பட்டே வந்திருக்கிறது, மீறும் வாய்ப்பை தொடர்ந்து எதிர்நோக்கிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சேர்ந்து வாழ்தல் என்பது பலதார வேட்கையை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. அதேநேரம் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் தாக்கம், சேர்ந்து வாழ்தலில் பெண்களுக்கும் அந்த உரிமையை வழங்குவதுபோல் தோற்றம் காட்டுகிறது. இந்த அடிப்படையிலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவாய்ப்பை வழங்குவதுபோல உருவகித்துக்கொண்டு முற்போக்காக முன்தள்ளுகிறார்கள்.

    நடப்பு ஆணாதிக்க உலகில் பெண்களுக்கென்று எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலையில் சேர்ந்து வாழ்தல் எனும் வடிவம் பெண்களுக்கு எந்த பயனையும் தந்துவிடாது, மாறாக பாதிப்புகளையே ஏற்படுத்தும். ஆண் பெண் ஈர்ப்பு என்பது ஆணாதிக்க, முதலாளித்துவ விழுமியங்களிலேயே இன்னும் தங்கியிருக்கிறது. சமூகமும், சூழலும் ஆணும் பெண்ணும் சமம் எனும் மதிப்பிற்கு வந்துவிடவில்லை. இத்தகைய சூழலில் பெண்ணுக்கு சற்று பாதுகாப்பை வழங்கும் திருமண வடிவத்தை உதறுவது ஆண்களுக்கே சாதகமான ஒன்றாக அமையும்.

    அதேநேரம், ஆணாதிக்க வடிவமாகிய திருமண முறை அப்படியே தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கவும் முடியாது. உள்ளீடுகளை நீக்கிவிட்டு வடிவத்தை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டால் ஒப்பீட்டளவில் திருமண முறையை விட சேர்ந்து வாழ்தல் முறை முற்போக்கானதுதான். ஆனால் சேர்ந்து வாழ்தல் முறை சாராம்சத்தில் இருபாலருக்கும் சரியான பலனில் நடப்பிற்கு வரவேண்டுமென்றால் குறைந்தபட்சம் இரண்டு அம்சங்கள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ௧) ஆணாதிக்கம் நீக்கப்பட்டு ஆணும் பெண்ணும் சமம் எனும் நிலை ஏற்பட்டிருக்க வேண்டும், ௨) குழந்தைகளை வளர்ப்பதும், பராமரிப்பதும் பெற்றோரின் கடமை என்பதிலிருந்து விடுபட்டு அரசின் கடமை என்றாக வேண்டும். இந்த இரண்டும் முதலாளித்துவ அமைப்பான இன்றைய உலகில் சாத்தியமில்லை என்பதால் லிவிங் டுகதர் எனும் சேர்ந்து வாழ்தல் ஏற்கத்தக்கதல்ல.

  61. நன்றி தோழர் இன்னும் ஒரு கேள்வி.

    குரானில் தூதர்(ரசூல்) என்பதும் தீர்க்க தரிசி ( நபி அதாவது prophet) என்ற வார்த்தைகளை எப்படி பொருள் கொளவது? .இரண்டும் ஒன்றா? அல்லது வெவ்வேறு அர்த்தத்தில் கூறப்படுவதா?.

  62. வணக்கம் நண்பரே
    ஜம்ஜம் தண்ணீர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.கடந்த 1400 வருடங்களாக
    அந்த ஊற்றிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இது கடவுளின்
    அருளா? இது பற்றி அறிவியல் கூறுவதென்ன

  63. வண‌க்கம் தோழர் ,
    முரண்பாடு‍‍‍‍‍‍ – எதிர்மறை என்ன வேறுபாடு. மெய்யியல் ரீதியாக விளக்கவும்.

  64. வணக்கம் சங்கர்,

    தூதர், தீர்க்கதரிசி என மக்களிடையே வழங்கப்படும் சொற்களின் பொருள் இறையியலை இணைத்தே வழக்கத்தில் இருக்கிறது. சற்றேறக்குறைய எல்லா மதங்களிலும் ‘இறைவனிடமிருந்து பெற்று அறிவிப்பவர்’ எனும் பொருளிலான‌ சொல்லாடல்கள் கலாச்சாரம் சார்ந்து இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில் நீங்கள் கூறிய இரண்டு சொற்களும் ஆப்ரஹாமிய மதங்களில் பயன்படுத்தப்படுபவை. குரானில் இடம்பெற்றிருக்கும் இந்தச் சொற்களுக்கு பொருள் மாறுபாடு இருக்கிறது எனவும், இல்லை எனவும் இருவேறுவிதமாய் நிலைபடுகிறார்கள். வேதம் கொடுக்கப்பட்டவர், வழிகாட்டுதலுடன் அனுப்பப்பட்டவர் என்பன போன்ற நுண்ணிய விகிதங்களை பொருட்படுத்தும் அளவுக்கு “இறைவனிடமிருந்து” எனும் அவர்களின் உள்ளீட்டில் எனக்கு உடன்பாடில்லாததால், அவற்றை பெரிதாக எண்ணுவதில்லை.

  65. வணக்கம் ஹாஜா,

    ‘ஜம் ஜம்’ நீரூற்று குறித்து முஸ்லீம்களிடைய மிகுந்த பெருமிதம் உண்டு. 1400 ஆண்டுகளல்ல அதற்கும் முன்பு இப்ராஹிம் காலத்திலிருந்தே இந்த ஊற்று இருப்பதாக குறிப்பிடுகின்றனர். உலகின் பழமையான நீரூற்றுகள் பல இருக்கின்றன. ஆனால் இவ்வளவு பழைய நீரூற்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஊற்று பழமையானதுதான் ஆனால் அவர்கள் குறிப்பிடும் புனிதம் இருக்கிறதா என்பதுதான் பிரச்சனை.

    நீரூற்று என்றால், பூமியின் அடியில் சேகரமாகியிருக்கும் நீர் இடுக்குகளின் வழியே கசிந்து மேற்பரப்புக்கு வருவது என்பதுதான் அறிவியல் பார்வை. அது கடவுளின் மகத்துவம் என்பதற்கு எந்த காரணமும் இல்லை. ஏனென்றால், ஒரு நிரூற்றின் வற்றாத தன்மை அது நிலத்தின் அடியில் கொண்டிருக்கும் நீர்ச்சேக‌ரத்தில் இருக்கிறது. தொடர்ந்து அதற்கு தண்ணீர்கிடைக்கும் ஆதாரங்களில் இருக்கிறது. மாறாக ஒரு குழந்தைநபி நிலத்தை காலால் அடித்து அழுததால் பீரிட்ட ஊற்று, அல்லது வான‌வர்கள் தம் இறக்கைகளால் அடித்து உண்டாக்கிய ஊற்று என்பதால்தான் அது வற்றாமலிருக்கிறது என்பதெல்லாம் ஈர்ப்புக்கவர்ச்சிக்காக சேர்க்கப்பட்ட கதைகள்.

  66. வற்றாத தண்ணீர் என்றால் ஜம்ஜம் தண்ணீர் கொண்டு சவுதி முழுவதும் அல்லது அரபு தேசம் முழுவதும் ஜம்ஜம் தண்ணீர் சப்ளை கொடுக்கலாமே! ஏன் கடல் நீரை பயன்ப்படுத்துகிறார்கள். ஒரு கேன் தண்ணீர் எடுத்தால் குறையாமல் இருக்கலாம். அதிகம் எடுத்தால் ஆபத்து. இந்தியாவில் உள்ள தண்ணீர் வளத்தை பார்த்தும் மனிதனுக்கு இந்த பாலைவன தண்ணீர் மோகம் வரக்கூடாது. நாகப்பட்டினம் பெரியகோவிலில் உள்ள கிணற்றில் சுத்த, நல்ல தண்ணீர் 24 மணி நேரமும் வருகிறது. வேறு எங்கு தோண்டினாலும் உப்பு தண்ணீர் தான். போய் சோதித்து பாருங்கள். எங்கள் ஊரில் உள்ள அனைத்து கிணறு வறண்டாலும், என் பக்கத்துக்கு வீட்டுக்காரர் கிணறு வறண்டதில்லை. எவ்வளவு எடுத்தாலும் குறையாது. எங்கள் ஊருக்கே ஏப்ரல், மே மாதத்தில் தண்ணீர் கொடுக்கும் ஜீவகிணறு. ஜம்ஜம் தண்ணீரை விட சுவையானது. (நான் ஜம்ஜம் தண்ணீரை குடித்தேன். சுவையில்லை. மண்வாசனை. ஒரு கப்புக்கு மேல் குடிக்க முடியாது)

  67. நண்பர் தில்லுதுரை,

    வற்றாத நீரூற்று என்றால் தொடர்ந்து வந்துகொண்டிருப்பது என்பதுதானேயன்றி எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதல்ல.

  68. //ஒரு வேதத்தை ஆழமாக கற்கும் எவரும் அந்த வேதத்தை விட்டு வெளியேறிவிடுவது இயல்பானது//

    அது எப்படி?

    1. அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

    2. அந்த வேதத்தில் உண்மை இல்லை.

    சரிதானா ருஷ்யதமிழரே?

  69. தோழர் செங்கொடி,

    நீரூற்று என்பது பாறைகளுக்கிடையே கசியும் ஓர் இயற்கை நிகழ்வு.சிறிது காலத்திற்குப் பின் ஊற்றுக் கண் மூடிவிடும்.அப்படியே தொடர்ந்து ஊறினாலும் பல லட்சம் பேர்களுக்கு வினியோகிக்கும் அளவிலா நீர் பெருக்கெடுத்து ஓடும்? ஏன் பம்பு செட் மூலமாக நீர் உறிஞ்சப்பட்டு தேக்கிவைத்து பின் வினியோகம் செய்து கொண்டிருக்கக்கூடாது?

  70. தோழரே

    இன்னும் ஒரு சந்தேக‌ம், காஃபா பழுதுபார்க்க‌ப்ப‌ட்ட‌ பிற‌கு துணியால் போர்த்தி வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து அத‌ன் உள்ளே ஒன்றும் இல்லை ச‌ரியே. ஒரு மூலையில் வாச‌னை வ‌ர‌க்கூடிய‌ க‌ல்லொன்று ப‌திக்க‌ப்ப‌ட்டு வெளிப்ப‌டையாக‌ இருக்கிற‌து அதுவும் ச‌ரியே.அதுபோல் நீர் ஊற்று க‌சிந்த‌ இட‌ம் ப‌ழைய‌ நிலையிலேயே,அதாவ‌து பாறைக‌ளின் இடைவெளியை அப்ப‌டியே காண்பிக்க‌ப்ப‌டாம‌ல் ம‌றைக்க‌ப்ப‌ட்டுள்ள‌தே ஏன்? க‌சியும் அந்த‌ ஒரிஜின‌ல் ஊற்றுக் க‌ண்ணை யாரேனும் பார்த்த‌வ‌ர் உண்டா?

  71. அது எப்படி?
    1. அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை.
    2. அந்த வேதத்தில் உண்மை இல்லை.
    //அது எப்படி?
    1. அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை.
    2. அந்த வேதத்தில் உண்மை இல்லை.//
    __________________

    வேதம் என்பது என்ன?

    இறைவனால் கொடுக்கப் பட்ட‌ என்று மக்களால் நம்படுகிற ஒரு புத்தகம். எல்லா மத்த்தினரும் ஒன்று அல்லது அத்ற்கு மேற்பட்ட வெதங்களை வைத்து உள்ளனர்..
    _________________

    வேதததை ஆழ்ந்து படிப்பது என்றால் என்ன?

    ____________________________

    அ) வேதத்தை பற்றி மட்டும்

    1.ஒரு வேதத்தின் பழைய பிரதி எங்கே உள்ளது?

    2.அந்த பழைய பிரதிக்கும் வேதம் வழங்கப் பட்ட காலத்திற்கும் எவ்வளவு வருட இடைவெளி?

    3.அது எந்த கால கட்ட்த்தில் தொகுக்கப் பட்டது?

    4.அக்கால அரசியல் சூழ்நிலை என்ன?

    5.சமகால குறிப்புகள் மதவாதிகளால் சொல்லப்படும் சமகால நிகழ்வுகளை உறுதி செய்கின்றனவா?.

    6.ஒரு வேதத்தின் விளக்கங்கங்கள் கால போக்கிற்கு ஏற்ப மாறுகிறதா?.

    7.மதப் பிரிவுகள் ஏற்பட்ட வரலாறு

    8.மதப் பிரிவுகள் ஒரெ வேதத்தை ஒரெ விதமாக விளங்கி கொள்கிறார்களா?.

    9.மொழி பெயர்ப்பு வரலாறு

    10 இந்த மொழி பெயர்ப்புகளை தரப் படுத்தும் ஏதாவது அமைப்பு இருக்கிறதா?

    11.பல்வேறு மொழி பெயர்ப்புகளும் ஒரே அர்த்தம் தருகிறதா?.

    12.வேத்தில் மொழி பெயர்க்க முடியாத பகுதிகள் இருக்கிறதா?

    13.இந்த வேதத்தை ஆர்ரய்சி செயயும் நிறுவனங்கள் என்னென்ன‌?
    _______________________

    ஆ) வேதத்தில் குறிப்பிடப் பட்டுள்ள மனிதர்களும் சம்பவங்களும்

    1.வேத்த்தில் குறிப்பிடப்பட்ட மனிதர்களின் காலம்,இடம் ஆகியவற்றை வரலாற்றில் காட்ட முடியுமா?

    2.இயற்கை பேரழிவுகள் ,அத்தாட்சிகள் என்று குறிப்பிடப் பட்டவை இன்னும் இருக்கிறதா.

    3.அறிவியலுக்கு விரோதமான சம்பவங்கள் உண்டா

    4.நடக்கப் போவதாக கூறப்படும் சம்பவங்கள் என்ன?

    5.அப்படி கூறியவைகளௌல் நடந்தவை, நடக்காதது உண்டா?
    ________________________
    இ) சமூகம் சார்ந்த ஆய்வுகள்

    1.வேதம் ஆண் பெண்களை சமமாக நடத்துகிறதா

    2. பெண்களுக்கு கல்வி,அரசியல்,மத,சொத்து விவகாரங்களில் சம உரிமை அளிக்கப் படுகிறதா?

    3.உணவு ,உடை பழக்க வழக்கங்கள்

    இதில் ஏதாவது ஒன்று சரியில்லை என்றாலும் அது தவறானது இதை நம்ப மாட்டேன் என்று கூற ஒருவருக்கு உரிமை உண்டு.

    ஆனால் சரியென்று நம்புபவர்கள் இது எல்லாவற்றையும் சோதித்து பார்த்து மட்டுமே உறுதியாக சொல்லலாம்.

  72. அன்பு நண்பரே

    வேதம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு அறிவு என்று பொருள்.

    இப்போது சரியாக வாசிக்கவும்.

    1. அவருக்கு அறிவில்லை.(சரியாக புரிந்து கொள்ள)

    2. அதில் அறிவு இல்லை.(அது பொய்)

    quranist@aol.com

  73. Senkodi said:

    //ஒரு வேதத்தை ஆழமாக கற்கும் எவரும் அந்த வேதத்தை விட்டு வெளியேறிவிடுவது இயல்பானது//

    After replacing the word ” வேதத்தை ”

    //ஒரு அறிவைஆழமாக கற்கும் எவரும் அந்த அறிவை விட்டு வெளியேறிவிடுவது இயல்பானது//

  74. அன்பு சங்கரே,

    உங்கள் பட்டியல்படி சரிபார்க்க, நிருபிக்க‌ வேதம் என யார் எதை

    கூறுகிறாரோ அவரிடம் தான் கேட்கவேண்டும்.

    நான் அப்படி ஒன்றும் வைத்திருக்கவில்லை.

    quranist@aol.com

  75. தோழரே,

    இப்பிரபஞ்சம் தானே உருவானது
    .ஒழுங்கு நியதி இல்லாதது.
    இப்பிரபஞ்ச மூலகங்களால் ஆனவையே அனைத்தும் மனிதன் விலங்கு உள்பட.
    அப்படி இருக்க மனிதன் மற்ற உயிர்/உயிரற்றவற்றை போல் SURVIVAL OF THE FITTEST theory படி தான்தோன்றியாகவே அவன் போக்கில் (conscience) வாழ விடாமல்அவனை ஒரு சித்தாந்தத முறைப்படி ஏன் அவனை கட்டியமைக்கவேண்டும்.

    இது நம் இருவருக்கும் பொது கேள்வி.

    இருவரும் பதில் தருவோம் விரும்பின் மற்றவரும்,

    அறிவு பெறுவோம்

    quranist@aol.com

  76. தோழர் செங்கொடி,

    இஸ்லாம் ஆண் பெண்களை சமமாக நடத்துகிறதா…?

  77. அன்பு நண்பரே

    ஆண் தனித்தோ(அ)ஆணும் ஆணும் உறவு கொண்டோ(அ)பெண் தனித்தோ(அ)பெண்ணும் பெண்ணும் உறவு கொண்டோ குட்டி ஈன்றால் இரு பாலாரும் சமம் ஆகலாம் அன்பரே

  78. அன்பு குரானியவாதி(மொழி பெயர்ப்பு சரியா?)

    //ஒரு அறிவைஆழமாக கற்கும் எவரும் அந்த அறிவை விட்டு வெளியேறிவிடுவது இயல்பானது//

    அறிவு என்பது கற்றுக் கொள்வதா?.

    ஒரு கருத்தை,கொள்கையை சீர் துக்கிப் பார்த்து ஏற்றுக் கொள்ளும்/ஒதுக்கி விடும் முறைமையாகும்.

    இது கொஞ்சம் கொஞ்ச‌மாகவே மற்றவர்களின் கருத்தை கேட்கும் போது,புத்தகங்கள் படிக்கும் போதும்,ஏற்கெனவே மனதில் உள்ள கருத்துகளுடன் ஒப்பிட்டு சரியாக ப்டும் விஷயங்களை சேகரிக்கிறது.இதனை அறிவு வளர்ச்சி என்று சொல்லலாம்.மற்றவர்களை பாதிக்காத , சமுகத்தில் ஏற்கப்படாத செயல்களை செய்யாத வண்னம் அறிவை வளர்ப்பதுவும் முக்கியம்.

    ஒரு அறிவு என்பதை கருத்து என்று கூறினால் அக்கருத்து உஙளின் அறிவுக்கு தவறாக படும் பட்சத்தில் நீங்கள் அத‌னை ஏற்றுக் கொள்ள தேவையில்லை. சரி என்று படும் பட்சத்தில் ஏற்றுக் கொள்ளலாம்.

    ஏற்கெனவே நான் சோந்து போல் ஒரு மத்த்தை ஆராய்சி செய்யும் போது அதில் உள்ள விஷயங்கள் உங்கள் அறிவுக்கு ஒவ்வாமல் போனால் மதத்தை விட்டு வெளியேறுவதும் இயல்பானதே.

    உங்களுக்கு பொது உடமை கொள்கை அறிவுக்கு ஒவ்வாததாக தெரிந்து ஜனநாயகமோ,முதலாலித்துவமோ சரியாக தெரிந்தாலும் தவறில்லை.

    ஏற்றுக் கொள்வதோ /ஒதுக்கி விடுவதோ ஏன் என்பதற்கு உங்களிடம் காரணம் இருக்க வேண்டும்.

    //ஒரு கருத்தைஆழமாக கற்கும் எவரும் அந்த கருத்தை விட்டு ஏற்றுக் கொள்வதோ அல்லது வெளியேறிவிடுவதோ இயல்பானது//

    __________________

    //நான் அப்படி ஒன்றும் வைத்திருக்கவில்லை//

    அப்படியா .மகிழ்ச்சி
    _________________________

    //அப்படி இருக்க மனிதன் மற்ற உயிர்/உயிரற்றவற்றை போல் SURVIVAL OF THE FITTEST theory படி தான்தோன்றியாகவே அவன் போக்கில் (conscience) வாழ விடாமல்அவனை ஒரு சித்தாந்தத முறைப்படி ஏன் அவனை கட்டியமைக்கவேண்டும்//

    மனிதன் மட்டுமல்ல விலங்குகள் கூட ஒரு கட்டுப்ப்பாடான வாழ்க்கையையே வாஅழ்கின்றன.
    சில விலங்குகள் குளிர்காலம் வரும் முன் உணவை சேமித்து வைக்கும். கூட்டமாக வாழ்வதும். இனப்பெருக்கத்திற்கால இடம் பெயர்வதும் சில எடுத்துக்காட்டுகளாகும்.

    அறிவின் அளவு மனிதனுக்கும் விலங்குக்கும் வேறுபடுகிறது.இபோது உள்ள விலங்குகளைல் உயர்ந்த பரிணாம் வளைர்ச்சி உள்ளவன் மனிதன்.

    மனிதன் செய்வது எல்லாம் அவன் விரும்பி செய்தன அல்ல.அவனுடைய வாழ்க்கை சூழ்நிலையின் கட்டாயத்தினால்தான்.தட்ப வெப்ப நிலைக்காக ஆடை அணிந்தான்.

    முதலில் நாடோடிகளாக திரிந்த மனிதன் வேட்டையாடி வாழ்ந்தான்.
    பிறகு ஆற்றுப் பகுதிகளில் விவசாயம் செய்தான். பல வேலைகளை செய்யவும் ஒரு ஒரு ஒழுங்கு முறை தெவை பட்டது.தலைவன்,வேலையாட்கள் என்றெல்லாம் ஏற்படுத்தினான்.தகவல் பரிமாணத்திற்காக மொழி உருவானது.

    மனித சமுதாயம் எப்போதும் தனக்கு முன்னேற்றம் தரக்கூடிய பாதையையே தேர்ந்தெடுத்து செல்கிறது.பழையன் கழிதலௌம்,புதியன புகுதலும் இயல்பானது.

    ஆகவே அடிமை முறை,பிரபுதவம்,முதலாஅளிதுவம்,பொது உடமை தத்டுவம்,ஜன நாயகம் என்று பல ஆட்சி முறை சித்தாங்களை உருவாக்கினான்.

    அனைவரும் பலன் பெறும்படி இன்னும் ஒரு சித்தாந்தை வடிவமைப்பான்.

    “You are always growing either in positive or negative direction”

  79. ராபி

    கற்பணைக் கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதியில் உங்கள் கருத்துக்களைபடித்தபோது எனது நன்பன் ராபி என்றுதான்உங்களை நினைத்தேன் வசனத்தை கையாண்ட விதம் அப்படி இருந்தது மதவாதிகளுடன் எப்படித் தாக்குப் பிடிக்கின்றீh;கள்?

    நிசாம்

  80. செங்கொடி அவர்
    உலகில் மத நம்பிக்கையற்றவா;கள்25 சதவீதத்திற்கும் அதிகம் என்று பீ பீ சி யில் கேட்டதாக ஜாபகம். மதப்பிரிவூகள் எண்ணிக்கை அதணை நம்புபவர்கள் மதநம்பிக்கையற்றௌh;கள் எண்ணிக்கை போன்றவற்றை அண்ணளவாகவேனும் அறிந்து கொள்ள முடியூமா?

    நிசாம்

  81. //ஆண் தனித்தோ(அ)ஆணும் ஆணும் உறவு கொண்டோ(அ)பெண் தனித்தோ(அ)பெண்ணும் பெண்ணும் உறவு கொண்டோ குட்டி ஈன்றால் இரு பாலாரும் சமம் ஆகலாம் அன்பரே//
    அல்லா என்பது இஸ்லாமுக்கு முந்திய அரபியர்களால் வணங்கப்பட்ட சந்திரக் கடவுள்.
    அவருக்கு மூண்று மகள்கள் அல்லாத்,உஜ்ஜா, மற்றும் மனாத் என்றும் அக்கால அரபிக்கள் நம்பி வந்தனர்.இதனி குரான் 53:19 ம் உறுதி செய்கிறது.
    அரபிக்களின் அல்லா மனைவி பற்றி ஒன்றும் தெரியவில்லை.

    அல்லா ஆணாகவோ பெண்ணாகவோ அவர்கள் நினைத்து இருக்கலாம்.

    http://en.wikipedia.org/wiki/All%C4%81t

    ஆண் தனித்தோஅல்லது பெண் தனித்தோ‍ இதனை உதாரணமாக கூறலாம்.

    அல்லா ஆதம்,ஹவ்வா படைத்தது கூட ஆண் தனித்துதான்.

    ஆனும் தனித்து: கிறித்தவர்களின் நம்பிக்கைபடி அல்லாவும் இயேசு(ஈசா)வும்
    தந்தை மகன்.

    பெண் தனித்து:மியமிற்கு ஈசா ஆண் தொடர்பின்றி பிறந்தார் என்று இஸ்லாமிய,கிறித்தவர்கள் நம்புகின்றனர்.

    ஆண் ஆண் தொடர்பில் பிறந்தவர் ஐயப்பன்(இந்துக்களின் நம்பிக்கைப்படி).

    பெண்,பெண்: குளோனிங் முறைபடி ஆண் இல்லாமலேயே குழந்தை உருவாகும்.

    கடைசியாக சொன்னது தவிர்த்து அனைத்தும் கற்பனை கதைகள்.

    ஆண் இல்லாமலேயே பெண் ஒரு வாரிசு உருவாக முடியும் என்றால் பெண்ணை சம்மாக நடத்துவதில் என்ன தவறு?

    http://www.environmentalgraffiti.com/sciencetech/men-no-longer-necessary-for-sperm-production/750

  82. sankar///ஆண் இல்லாமலேயே பெண் ஒரு வாரிசு உருவாக முடியும் என்றால் பெண்ணை சம்மாக நடத்துவதில் என்ன தவறு?///
    சங்கர் ,பெண்களை சமமாக நடத்துவது என்றால் நீங்கள் சொல்லும் ‘சமம்’எது?
    இப்போதைக்கு இஸ்லாம் சொல்லும் சமம் போதும் ஆண் இல்லாமலே பெண் வாரிசுகளை உருவாக்கட்டும் . உருவாக்கப்பட்ட வாரிசுகள் வேண்டுமானால் நீங்கள் சொல்லும் சமம்’ கோட்பாட்டை பின்பற்றசெயயட்டும்

  83. சங்கர் ///பெண்,பெண்: குளோனிங் முறைபடி ஆண் இல்லாமலேயே குழந்தை உருவாகும்.///
    விஞ்ஞானம் தோன்றா காலத்து இறைவன் தந்த உலகில் முதல் குளோனிங் குழந்தை ஈசா [அலை]அவர்கள்.

  84. //சங்கர் ,பெண்களை சமமாக நடத்துவது என்றால் நீங்கள் சொல்லும் ‘சமம்’எது?//

    ஒரு ஆண் தனக்கு சட்டப்படி,சமூக நியத்ப் படி நியாயமான உரிமைகள் என்று எதையெல்லாம் கோருகின்றானோ(அதற்கு ஆயிரம் வேதம் காரணம் சொல்லட்டும்) பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்பது தெரியும் .சொல்லுங்கள்.

    //விஞ்ஞானம் தோன்றா காலத்து இறைவன் தந்த உலகில் முதல் குளோனிங் குழந்தை ஈசா [அலை]அவர்கள்//

    இது நம்ம பி ஜே அவர்களின் கண்டுபிடிப்புதான்.அதை சொல்லுங்க முதலில்.
    ___________

    1.இந்த ஈசா(இயெசு) என்பவர் உண்மையிலேலே இருந்தாரா என்று ஒரு சர்ச்சை.

    2.பிறந்தவர் எப்படி இறந்தார் என்று ஒரு சர்ச்சை.

    3.இறந்தவர் உயிரோடு வந்தாரா என்று ஒரு சர்ச்சை.

    4.அவ‌ர் திரும்ப வருவாரா என்று ஒரு சர்ச்சை

    5. இல்லை ஏற்கெனவே வந்து விட்டார் என்று ஒரு சர்ச்சை.

    6. இவர் காஷ்மீர் வந்தார் என்றும் ஒரு சர்ச்சை

    7.கல்யாணம் கட்டிக்கிட்டார் என்று ஒரு சர்ச்சை.

    8. ஒரு மதம்(இஸ்லாம்) நபி என்கிறது. யூதர்கள் திருடன் என்கிறார்கள்.கிறித்தவர்கள் கடவுள் மற்றும் கடவுளின் மகன்(இது ரொம்ப குழபமான விஷயம்)என்கிறார்கள்.

    இவர் சர்ச்சைகளின் நாயகனாக இருப்பதால்தான் சர்ச் கட்டி கும்பிடுராங்களா?

    இவர்(இயேசு) அழைக்கிறார்ர், நேசிக்கிறார்,பிடிக்கிறார், அழுகிறார், விடுவிக்கிறார்,பார்க்கிறார், நினைக்கிறார், பேசுகிறார்தெரிகிறார்,குணமாக்குகிறார்,வருகிறார்(ஏதாவது விட்டு போச்சா?) என்று பல கோஷ்டிகள் கல்லா கட்டுது.இந்த கோஷ்டிகள் கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும்.புள்ளை புடிகிறவனுங்க,புடிச்சிட்டு போயிடுவாங்க.

  85. நண்பருக்கு வணக்கம்
    இறந்து போன ஒருவர் ஆவியாக உருவெடுத்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவரின் உடலில் புகுந்து (இறந்து போனவரின் குரலிலேயே)பேசுவது எப்படி?இது பற்றி அறிவியல் கூறுவது என்ன

  86. வணக்கம் ஹாஜா,

    மரணம் என்பது ஒரு மனிதனின் மூளை மீளமுடியாத அளவுக்கு தன்னுடைய செயல்பாட்டை நிருத்திக்கொள்வது. ஆவி, ஆன்மா, பேய், மறு ஜென்மம், மறுமை, கூடுவிட்டு கூடுபாய்வது என்பனவெல்லாம், மனிதன் அவ்வளவுதானா என்பதை ஏற்க ஒப்பாதவர்களின் ஈர்க்கத்தக்க கற்பனைகள். அறிவியலில் இவைகளுக்கு இடமில்லை. மூளை என்பது தன் நினைவகங்களில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை இருமடி முறையில் அலசிப்பார்த்து உகந்த தீர்மானத்தைச் செய்யும், தீர்மானம் செய்ததை செயல்படுத்த உறுப்புகளைத் தூண்டி கட்டுப்படுத்தும் ஒரு கணிணி. இதில் மரணம் நிகழ்ந்தபிறகு எது அந்த உடலை விட்டு நீங்கி இன்னொரு உடலில் புகுவது?

    இறந்து போன அவருடைய குரலிலேயே இவர் பேசினார் என்று பலர் கூறுவதை கேட்டிருக்கலாம். இதுபோன்ற நிகழ்வுகளை அல்லது அந்தக் குரலை பதிவு செய்து வேறொரு நேரத்தில் கேட்டுப்பார்த்தால் இரண்டு குரலுக்கும் வித்தியாசம் இருப்பதை கண்டறியலாம். ஒருவர் குறித்த நினைவுகள் கிளர்ந்திருக்கும் உணர்ச்சி பூர்வமான நேரத்தில், அன்னாருடைய குரலின் சாயலில் பேசினால் கூட மூளை அதை அவருடைய குரலாகவே உருவகப்படுத்திக்கொள்ளும். அப்படி உருவகப்படுத்திக்கொள்ள நாம் விரும்புகிறோம். பிறந்த குழந்தையை அப்பா சாயல், அம்மா சாயல், தாத்தா சாயல் என்று கூறிக் கொள்வதில்லையா அதுபோல. தவிரவும், மிக அரிதான நிகழ்வாக மனப் பிற‌ழ்தலிலும் இது நேரலாம். என்றோ மறந்து போன ஒரு நிகழ்வின் தீற்றலான ஞாபகங்கள் மூளையின் சுய கட்டுப்பாட்டை மீறி ஒரு அனிச்சைச் செயல்போல மீள வந்தால், அதை மூளையின் நடப்பு நினைவுகள் குறிப்பிட்ட ஒருவரோடு தொடர்புபடுத்தி இரண்டையும் கலந்து வெளிப்படுத்தும் போது; அந்த குறிப்பிட்ட ஒருவர் சுற்றி இருப்பவர்களுக்கு பொதுவாக விருபமானவராக இருந்து அவர் செத்துப்போனவராகவும் இருந்துவிட்டால் நூறு ஆண்டுகளுக்கு முன் இறந்து போன பாட்டி கூட கொள்ளுப்பேரனின் உடலில் வந்துவிடுவது சாத்தியம் தான்.

  87. தோழர், December1, 2010 at 8:50 மாலை கேட்கப்பட்ட கேள்வி பதில் தரப்படாமலேயே இருக்கிறது. “முரண்பாடு‍‍‍‍‍‍ – எதிர்மறை என்ன வேறுபாடு. மெய்யியல் ரீதியாக விளக்கவும்.”

  88. தோழர் ஸ்பார்டகஸ்,

    உங்கள் கேள்வியை கவனிக்காமல் இருந்ததற்காக வருந்துகிறேன். இனி அவ்வாறு நேராமல் கவனம் கொள்வேன் என உறுதியளிக்கிறேன்.

    முரண்பாடு, எதிர்மறை இவைகளை சொற்கள் அடிப்படையில் பார்த்தால் இருவேறு தன்மை கொண்ட பொருட்களை எதிர்மறை என்றும் அவையிரண்டும் வினைபுரியும் முறைமையை முரண்பாடு எனவும் கூறலாம். ஆனால் இயங்கு மெய்யியலில் இதன் பொருள் மிகவும் ஆழமானது.

    ஒரு பொருளின் வளர்ச்சிக்கும் மாறுபாட்டிற்கும் புறவிசையைக் காட்டிலும் அகவிசை இன்றியமையாததாகும். ஆனால் பிற மெய்யியல்வாதிகள் புறவிசையின் தூண்டுதலே பொருளின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். இந்த அடிப்படையில் தான் பேரண்டம் முதல் அனைத்தின் வளர்ச்சியும் மாறுதலும் கடவுள் எனும் புறவிசையின் தீர்மானத்தின், தூண்டுதலின் காரணமாகவே நடக்கின்றன என்கிறார்கள். ஆனால் இயங்கியல் இதை மறுக்கிறது. ஒரு பொருளின் வளர்ச்சி அந்தப் பொருளின் உள்ளிருக்கும் ஆற்றலின் காரணமாகவே நடக்கிறது. இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு பொருளின் உள்ளிருக்கும் மாறுபட்ட கூறுகளின் போராட்டம் தான் அந்தப் பொருளின் வளர்ச்சிக்கும் மாறுபாட்டிற்கும் காரணமாய் அமைகிறது. எந்த ஒரு பொருளை எடுத்துக்கொண்டாலும் அதனுள் மாறுபட்ட எதிர்மறையான தன்மைகள் இருக்கும். இந்த எதிர்மறையான இரண்டு கூறுகளும் முரண்பட்டு போராடுவதுதான் அந்தப் பொருளின் வளர்ச்சி எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக முட்டையைக் கொண்டால், அதனுள் வெள்ளைக் கரு, மஞ்சள்கரு எனும் எதிர்மறையான‌ இரண்டு தன்மைகள் இருக்கிறது. இவையிரண்டின் முரண்பாடுதான் முட்டையை குஞ்சு எனும் நிலைக்கு உயர்த்துகிறது. இரண்டும் முரண்பட்டு வினைபுரிவது முதலில் அளவு மாற்றத்தையும், தொடர்ந்த அளவு மாற்றத்தின் முடிவில் பண்பு மாற்றத்தையும் அடைகிறது. இதற்கு புறக்காரணிகளின் துணையும் அவசியம்தான் என்றாலும் அகக்காரணியே முக்கியமானது.

  89. குரானிஸ்ட்,

    இப்பேரண்டத்தில் காணப்படும் அனைத்தும், மனிதன், விலங்குகள், தாவரம் உட்பட அனைத்தும் தனிமங்களின் கூட்டிணைவால் உருவானவைதான். இந்த அடிப்படையில் மனிதனும், மிருகமும் ஒன்றுதான். கொல்வதும் கொல்லப்படாமல் தற்காத்துக்கொள்வதுமே வாழ்க்கை. ஆனால் தன்னுடைய சமூக வாழ்வின் மூலம் விலங்குகளைவிட மேம்பட்ட சிந்தனைத்திறனை மனிதன் பெற்றிருக்கிறான். இந்த அடிப்படையில் மனிதன் விலங்குகளைவிட ஒரு படி உயர்ந்தவனாகிறான். ஆகவே கொல், கொல்லப்படாமலிரு என்பது மனிதனுக்கு போதுமானதாக இல்லாமல்போகிறது. ஏனென்றால், சமூகவயப்பட்ட மனிதர்களின் தேவை அதைவிட அதிகமானதாய் இருக்கிறது. தாய்மை உணர்ச்சி என்பது விலங்குகளுக்கு இருப்பதைவிட அதிகமாய் இரக்கமாய், பரிவாய் சமூக வாழ்வில் மனிதன் பெற்றுவிட்டான். அந்த அடிப்படையில் அடக்குமுறைகளை, அடிமைத்தனங்களை எதிர்த்துப்போராடுவதும் அவசியமாகிறது. இந்த வழியில் இருப்பதை அனைவருக்கும் சமமாகக்கொள்ளும் பொதுவுடமை இயல்பாகிறது. ஆனால் இந்த இயல்பை மீறி மனிதன் ஆக்கிரமிப்பாளனாக, அடிமைப்படுத்துபவனாக விலங்குகளைவிட சீரழிவாகத்தான் தன் சொந்த இனத்தையே கொல்பவனாக மாறியிருக்கிறான். எனவே இதை எதிர்த்துப் போராடுவதும் அவசியமானது தான்.

  90. நண்பர் தங்கப்பா,

    இஸ்லாம் ஆண், பெண்ணை சமமாக நடத்தவில்லை. அது ஓர் ஆணாதிக்கக் கோட்பாடு. சில இடங்களில் ஆணைவிட பெண்ணை உயர்வாகவும், சில இடங்களில் பெண்ணை விட ஆணை உயர்வாகவும் கொண்டிருப்பதாக மதவாதிகள் கூறுவதெல்லாம் பசப்பல்கள்தான். சாராம்சத்தில் ஆணின் தேவைகளுக்காகத்தான் பெண் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.

  91. நண்பர்களே,

    இந்த கேள்விபதில் பகுதியை உங்களுடைய கேள்விகளை பதிவதற்கு மட்டுமே பயன்படுத்துமாறு கோருகிறேன். என்னுடைய பதில்களின் தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம், விமர்சனம் இருந்தால் குறிப்பிடலாம். இவைகளுக்கு வெளியே உங்கள் கருத்துகளை பதிவதற்கு இந்த கேள்வி பதில் பகுதியை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    செங்கொடி

  92. மார்க்ஸியம் என்று கூறுகிறோம், எங்கெல்ஸியம் என்று கூறுவதில்லை.லெனினியம் என்று கூறுகிறோம், ஸ்டாலினியம் என்று கூறுவதில்லை. ஒரு சிந்தனையை இயம்/இசம் என்று கூறுவதற்கு ஏதேனும் வரையரைகள் உண்டா? பெரியார் சிந்தனையா? பெரியாரியமா? எது சரி?

  93. நண்பர் நிசாம்,

    மத நம்பிக்கையற்றவர்கள் குறித்தான கணக்கெடுப்புகளை செய்வதை எந்த நாடும் ஏற்பதில்லை. ஆனாலும் உலகில் கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்களை அடுத்து கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மூன்றாவது இடத்தில் வருகிறார்கள் என நானும் செவியுற்றிருக்கிறேன். உறுதியாகச் சொல்வதற்கில்லை.

  94. தோழர் ஸ்பார்டகஸ்,

    மார்க்ஸியம் என்பதை ஏங்கலியம் என்று அழைப்பதில் பொருட்பிழை ஒன்றுமில்லை, அப்படி சிலர் அழைக்கவும் செய்கிறார்கள். ஆனால் ஆசான் ஏங்கல்ஸ் அப்படி அழைக்கப்படுவதை விரும்பவில்லை, மார்க்ஸியம் என அழைக்கப்படுவதையே முன்மொழிந்திருக்கிறார். அதனால் தான் ஏங்கலியம் என அழைப்பது வழக்கில் இல்லை.

    சிந்தனை என்பதற்கும் இஸம் என்பதற்கும் சிறிய வேறுபாடு உண்டு. ஒரு கோட்பாட்டில் புதிய விசயங்களை சேர்த்து உரமூட்டுவதை இஸம் எனலாம். சிந்தனை என்பது ஏற்கனவே இருக்கும் விசயத்தை செழுமைப்படுத்தி மெருகூட்டுவது. அந்த அடிப்படையில் தான் லெனினியம் என அழைக்கப்படுகிறது, ஸ்டாலினியம் என அழைக்கப்படுவதில்லை.

    ஆனால் பெரியார் விசயத்தில் இது சற்று மாறுபடுகிறது. கடவுள் மறுப்பு என்பதையும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பதையும் பெரியாருக்கு முன்பே செய்திருக்கிறார்கள். அதேநேரம் இதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக பெரியாருக்கு முன் உலகில் யாரும் நடத்தியதுமில்லை, வெற்றிகண்டதுமில்லை. எனவே பெரியார் சிந்தனை, பெரியாரியம் இரண்டும் பொருத்தமானது தான்.

  95. நண்பர் ஷாஹுல்,

    உங்கள் கேள்விகளை தமிழில் வைப்பது நல்லது.

    தமிழ்நாட்டு அரசியல் குறித்து இங்கு பல கட்டுரைகள் உள்ளன. தேர்தல் குறித்து எங்களுடைய கருத்துக்கு நூலகம் பகுதியில், வெளியீடுகள் எனும் தலைப்பில் இருக்கும் ‘ஓட்டுப்போடாதே புரட்சி செய்’ எனும் வெளியீட்டை தரவிறக்கி படித்துப்பாருங்கள்.

  96. தோழர், ஒரு கம்யூனிஸ்ட், தேச பக்தனாக இருக்க முடியுமா.

  97. தோழர் ஸ்பார்டகஸ்,

    ஏன் முடியாது? தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கம்யூனிஸ்டால் தான் சரியான தேசபக்தனாக இருக்க முடியும். ஆனால் தேசப்பற்று என்பது என்ன? என்பதில் தான் பேதம் இருக்கிறது.

    தேசம் என்பது எல்ல விதத்திலும் அதன் மக்களே. மக்களை நேசித்தால் அவர்களின் வளமான வாழ்வுக்கு எதிராக இருக்கும், செயல்படும் அனைத்தையும் எதிர்த்து போராடியாக‌ வேண்டும். ஆனால் நடப்பில் உணரப்படும் தேசப்பற்று என்பது மக்களை விலக்கியதாக இருக்கிறது. தேசம் என்பதை ஒரு உருவகமாக, புனிதமானதாக, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக மக்களிடம் ஏற்றுகிறார்கள். இதை எதிர்ப்பதும் தேசப்பற்றுதான். மெய்யான தேசப்பற்று.

    அதேநேரம் ஒரு கம்யூனிஸ்ட் தேசம், நாடு எனும் குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே சிந்திக்க முடியாது. ஒரு பொருளில் தொழிற்படும் தாக்கத்தை உள்ளூர் விளைவுகளால் மட்டுமல்ல, சர்வதேச காரணிகளாலும் அளக்க வேண்டும். பக்கத்து வீட்டில் வசிக்கும் தொழிலாளிக்கு ஏற்படும் பிரச்சனையும், வேறு எங்கோ வசிக்கும் ஒரு தொழிலாளிக்கு ஏற்படும் பிரச்சனையும் புறக்காரணிகளைத் தவிர்த்து அகக் காரணிகளில் பேதம் ஒன்றுமில்லை. எனவே ஒரு கம்யூனிஸ்ட் சரியான தேசப்பற்றாளனாக இருக்கும்போதே ஒரு சர்வதேசியவாதியாகவும் இருக்கிறான்.

  98. தோழர், ஒருவரை சந்திக்கும் போது வணக்கம் என்று சொல்கிறோமே, இந்த சொல்லின் பொருள் என்ன?

  99. தோழர் ஸ்பார்டகஸ்,

    வணக்கம் எனும் சொல் இறையியலுடனே தொடர்புபடுத்தி பொருள் கொள்ளப்படுகிறது. இறையியலை விலக்கி இச்சொல்லுக்கு பொருள் கொள்ளமுடியாது எனும் அளவுக்கு இச்சொல் கடவுள் தன்மையோடு பிணைக்கப்பட்டுவிட்டது. கடவுளுக்கு முற்றிலுமாக கீழ்படிந்த நிலையை வெளிப்படுத்துதல் என்பதுதான் வணக்கம் என்பதன் பொருளாக இருக்கிறது. ஆனால் வளைதல், விட்டுக்கொடுத்தல் என்பதுதான் அதன் மெய்யான பொருள். திராவிட இயக்கங்கள் அரசியல் செல்வாக்கு பெரும்வரை இச்சொல்லின் மெய்யான பொருளில் பயன்படுத்தப்படவில்லை. மட்டுமல்லாது, தீண்டாமையின் குறியீடாகவும் பயன்படுத்தபட்டது. திராவிட அரசியல் செல்வாக்கு பெற்ற பிறகுதான் ஒரு முகமன் சொல்லாக வணக்கம் என்பது பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது. அதே நேரம் காலை வணக்கம், மாலை வணக்கம் என்றெல்லாம் (குட் மாணிங் ன் பாதிப்பு) பயன்படுத்த வேண்டியதில்லை வணக்கம் மட்டுமே போதுமானது. ஒருவரைக் கண்டு வணக்கம் என முகமன் கூறுவதன் மூலம் உனக்கு நான் விட்டுக்கொடுக்க ஆயத்தமாக இருக்கிறேன், அதாவது நான் உன் நண்பனே, விரோதியல்ல என்பதை ஒரு குறியீடாக தெரிவிக்கிறோம்.

  100. இந்துவாக

    தன்னை இருத்திக்கொண்ட

    அறிவுப்பூர்வமான பதில்!!!

    பேஷ்!! பேஷ் !

  101. பார்ப்பனியத்துக்கும் முதலாலித்துவத்துக்கும் இடையில் நிலவும் பகை முரண்பாடு என்று எதை சொல்லலாம் தோழர்?

  102. வணக்கம் நண்பரே
    தற்போது இருக்கும் சட்டத்தில் இரண்டு விதமான தீர்ப்புகள் உள்ளன.
    உதாரணமாக, ஒருவர் சைக்கிளை திருடிவிட்டார் என்றால்,அவருக்கு 500 ரூபாய் அபதாரம், அல்லது மூன்று மாதம் சிறை தணடணை.இதில் என்வென்றால் பணம் உள்ளவர் சிறை தண்டணையிலிருந்து தப்பிவிடுகிறார். கம்யூனிச ஆட்சியில் இவ்வாறு இருக்குமா

  103. தோழர் ஸ்பார்டகஸ்,

    பார்ப்பனியமும், முதலாளியமும் ஒத்திசைவாக அதிகார‌வர்க்க நலனை அடிப்படையாகக் கொண்டவை, உழைக்கும் மக்களுக்கு எதிரானவை என்றாலும், பார்ப்பனியம் நிலப்பிரபுத்துவ, பண்ணையடிமை காலகட்டத்தின் சாரமான சாதிய முறையை தன் சாரமாக கொண்டுள்ளது. ஆனால் இதற்கு எதிராக முதலாளித்துவம் தன் கூலியடிமைகளை, உழைப்பாளிகளை சாதியம் போன்ற பிரிவினைகளுக்கு எதிராக ஒருங்கிணைக்கிறது. இது பார்ப்பனியத்திற்கும் முதலாளியத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடான அம்சம். இதில் முதலாளியம் பார்ப்பனியத்திற்கு எதிராக இருந்தாலும் நோக்கத்தில் இரண்டுமே உழைக்கும் மக்களுக்கு எதிரான் செயல்பாட்டைக் கொண்டிருப்பதால் ஒன்றையொன்று எதிர்க்காமல் சமரசம் செய்துகொள்கிறது. அதன் மூலம் பார்ப்பனியம் சாதியத்தை காத்துக்கொள்கிறது.

  104. வணக்கம் ஹாஜா,

    நடப்பிலிருக்கும் குற்றவியல் சட்டங்களில், அது எந்த நாட்டினுடையதாக இருந்தாலும் பரிகாரம் என்பது தன்னுடைய நலனுக்கு சாதகமானவர்களைக் காத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒன்று தான். ஏனென்றால் அரசு என்பது எல்லா வர்க்கத்தினரிடையே சமநீதியை ஏற்படுத்துவதற்காக ஏற்பட்ட அமைப்பு அல்ல. பகைவர்க்கங்களை அடக்குவதற்காக ஆளும்வர்க்கங்களின் கையிலிருக்கும் கருவிதான் அரசு என்பது. எனவே பரிகாரவிலக்கை ஏற்படுத்தி வைத்திருப்பது தன்னைச் சார்ந்தவர்களை காப்பதற்காகத்தான். இதே ரீதியான சாதகத்தன்மை சோசலிச அரசிலும் இருக்கும். ஆனால் சோசலிச அரசில் ஆளும் வர்க்கமாக உழைக்கும் வர்க்கம் இருப்பதால் பண ரீதியிலான விலக்கு ஆளும்வர்க்கத்திற்கு அதாவது உழைக்கும் வர்க்கத்திற்கு சாதகமாக இல்லாமல் பகை வர்க்கத்திற்கு சாதகமானதாக இருக்கும் என்பதால் அதை நீக்குவதே சோசலிச ஆளும்வர்க்கத்திற்கான சலுகையாக இருக்கும். சோசலிச சமூகத்திலேயே இது போன்ற குற்றங்கள் வெகுவாக குறையத்தொடங்கும் என்பதால் கம்யூனிச சமூகம் வரை இது நீளாது. மட்டுமல்லாது, கம்யூனிச சமூகத்தில் அரசு எனும் அமைப்பே உதிர்ந்துபோயிருக்கும்.

  105. SYNDICATE எனும் சொல், சில கடல் கொள்ளையர்களின் பெயர்களுடைய முதல் எழுத்துக்களிலிருந்து தான் உருவானது என்பது உண்மையா தோழர்?

  106. கம்யூனிச ஆட்சி முறை என்பது சர்வாதிகார முறையா? மற்றும் சுதந்திர உணர்வும்,சுயமரியாதைக்கான அடையாளங்களும் உள்ளனவா நண்பரே?

  107. தோழர் ஸ்பார்டகஸ்,

    சிண்டிகேட் எனும் சொல்லுக்கு கிரேக்க, பிரென்ச் மொழிகளில் வேர்ச்சொற்கள் இருக்கின்றன. ஒரு அமைப்பினுள் உருவாகும் குழு என பொருள் தருவதாக இருந்தாலும் சட்டவிரோத செயல்களுக்கான குழுக்களை குறிப்பதற்காகவே இச்சொல் அதிகம் பயன்படுவதாக இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது நீங்கள் குறிப்பிடுவதுபோல் இருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் உறுதியாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

  108. ரபி,

    சோசலிச ஆட்சிமுறை என்பது பாட்டளி வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சி முறையே. சர்வாதிகாரம் என்றதும் அதை தீங்கானது என கற்பனை செய்யவேண்டியதில்லை.

    உலகின் எந்த வடிவிலான ஆட்சிமுறையும் எல்லா வர்க்கத்தினருக்கும் சமமான நீதியை வழங்கும் ஆட்சியாக இருக்கமுடியாது. ஏனென்றால் அரசு என்பதன் நோக்கமே பகை வர்க்கத்தை அடக்குவது தான். இதுவரை உலகம் கண்ட அனைத்து ஆட்சிமுறைகளும் சர்வாதிகார வடிவங்களே. மன்னராட்சி முறையாக இருந்தாலும், காலனித்துவ ஆட்சிமுறையாக இருந்தாலும், ஜனநாயகம் என்றுகூறப்படும் தற்போதைய முதலாளித்துவ ஆட்சிமுறையாக இருந்தாலும் அவை ஒரு வர்க்கத்தை பிரதிபலிக்கும் ஆட்சிமுறையாகத்தான் இருக்கும். அந்தந்த ஆட்சிமுறையின் நீதி ஆளும்வர்க்கத்திற்கு சாதகமாகவும் அதன் பகைவர்க்கத்திற்கு பாதகமாகவும் இருப்பதுதான் இயல்பு. அந்தவகையில், ஆளும் வர்க்கத்திற்கு ஜனநாயக‌த்தையும் பகை வர்க்கத்திற்கு சர்வாதிகாரத்தையும் காண்பிப்பதுதான் அரசின் இலக்கணம்.

    உலகின் இதுவரையான ஆட்சிமுறைகளில் ஆளும் வர்க்கங்களாக சிறுபான்மை வர்க்கங்களே இருந்திருக்கின்றன. உலகின் பெரும்பான்மை வர்க்கமாகிய உழைக்கும் மக்களின் பாட்டாளி வர்க்கம் ஆளும் வர்க்கமாக இருந்ததில்லை. இதன் பொருள் உலகின் ஆகக் குறைந்த மக்கள் பிரிவினர் ஆளும் வர்க்கமாக ஜனநாயகத்தை அனுபவித்துக்கொண்டு பெரும்பான்மை மக்களாகிய உழைக்கும் மக்களை சர்வாதிகாரமாக நடத்தினர். எனவே இதுவரையிலான அனைத்து ஆட்சிமுறைகளுமே சர்வாதிகார ஆட்சி முறைகளே, எப்படியென்றால் உலகின் பெரும்பான்மை மக்கள் சர்வாதிகாரத்தின்கீழ் தான் அடக்கப்பட்டிருக்கின்றனர்.

    ஆனால் முதன்முறையாக சோசலிச ஆட்சிமுறையில் உலகின் பெரும்பான்மை வர்க்கமான பாட்டாளிவர்க்கம் ஆளும் வர்க்கமாகிறது முதலாளி வர்க்கம் பகை வர்க்கமாகிறது. அந்த வகையில் உலகின் பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கும் ஆட்சி சோசலிச ஆட்சி. ஜனநாயக ஆட்சி என பெயரிட்டு அழைத்தாலும் சாராம்சத்தில் முதலாளித்துவ ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக இருக்கிறது. அதேநேரம், சர்வாதிகார ஆட்சி என பெயரிட்டு அழைத்தாலும் சாராம்சத்தில் சோசலிச ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்கிறது.

  109. எது உண்மை? எது அழகு? எது நீதி?

  110. தோழர் ஸ்பார்டகஸ்,

    உண்மை, அழகு, நீதி போன்றவற்றை நிலையானதாக வரையறுக்க முடியாது. நோக்கர்களைப் பொருத்து மாறுதலுக்கு உள்ளாகக் கூடியது.

    ஒரு பொருளின் இருத்தலையே துகளாகவும் ஆற்றலாகவும் மாறுபட்டுப்பார்க்கிறது குவாண்டம் அறிவியல். கால அளவுகளிலேயே அவைகளின் தன்மை தங்கியிருக்கிறது. சூரியன் இருப்பது தூலமான உண்மைதான் ஆனால் இன்னும் முன்னூறு கோடி ஆண்டுகளின் பிறகு அது உண்மையாக இருக்கமுடியாது.

    இவைகளை எது என்று வரையறுக்க வேண்டுமென்றால் அது கால சூழ்வெளிகளைக் கொண்டே முடியும். ஆண்டான் அடிமை காலகட்ட நீதி முதலாளிய காலகட்டத்தில் என்ன மதிப்பைப் பெறும்? ஆணாதிக்கப் பொறுக்கிக்கு ஐஸ்வர்யா அழகு என்றால் கம்யூனிஸ்டுக்கு உழைப்பே அழகு. இவைகளுக்கு வெளியே தனிப்பட்டு வரையறை செய்யமுடியாது.

  111. அறிவியல் முலாம் பூசி வேதங்கள் ஓதும் வேதாளக் கட்டுக் கதைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க,மற்ற மத புத்தகங்கள் அனைத்தையும் தங்கள் பதிவில் தோலுறித்துக் காட்ட வேண்டும் என்பது என் வேண்டுகோள். அது பற்றி ஏதும் எண்ணம் உண்டா?

  112. ரபி,

    தங்களின் வேதத்தை இஸ்லாமிய மதவாதிகளைப் போல வேறெந்த மதவாதிகளும் அறிவியல் என்று பீஜப்படுத்திக்காட்டுவதில்லை. அப்படி காட்டப்படுவதையும் கூட இஸ்லாமியர்களைப் போல வேறெந்த மதங்களைப் பின்பற்றுபவர்களும் அப்படியே ஏற்றுக் கொள்வதுமில்லை. மட்டுமல்லாது, கிருஸ்தவ, பார்ப்பனிய மதங்களை பலரும் பல ஊடகங்களில் அம்பலப் படுத்தியிருக்கிறார்கள், படுத்திக்கொண்டிருக்கிறார்கள். தேவை கருதி வாய்ப்புள்ள போதுகளில் இங்கும் அம்பலப்படுத்தப்படும், பட்டிருக்கிறது. ஆனாலும் தொடராக எழுதும் உத்தேசம் ஏதும் இப்போதைக்கு இல்லை.

  113. வணக்கம் நண்பரே
    தற்போது நடைபெற்ற ஆலய முற்றுகை போராட்டம் நடத்திய மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்கை நீங்கள் சார்ந்திருக்கும்
    இயக்கம் ஆதரிக்கிறதா? ஆதாரித்தால் அதற்க்கான காரணத்தை விளக்கவும்.இல்லையென்றால் அதற்க்கான காரணத்தையும் விளக்கவும்.

  114. வணக்கம் ஹாஜா,

    உத்தப்புரம் முத்தரம்மன் கோவில் நுழைவுப்போராட்டம் என்றபெயரில் மார்சிஸ்ட் போலிகள் நடத்திய போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஏனென்றால் அவர்களின் போராட்டத்தில் உள்ளடக்கம் பார்ப்பனிய எதிர்ப்பாக இல்லாமல் வெறும் ஓட்டுக் கட்சிகளின் தளத்திலேயே இருந்தது. கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தப்படவேண்டியவைதான். ஆனால் அவை உள்ளீடற்று சடங்காக நடத்தப்படக் கூடாது. அவர்களிடம் பார்ப்பனிய எதிர்ப்பு கொஞ்சமும் இல்லை என்பதற்கு, சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரிப் பிரச்சனை, ஒடுக்கப்பட்ட மாணவர் விடுதி சாலைமறியல் உள்ளிட்ட பிரச்சனைகளில் அவர்கள் என்ன நிலை எடுத்தார்கள் என்பது போதிய சான்றாகும். பார்ப்பனிய எதிர்ப்பை விடுங்கள், தில்லை கோவில் போராட்டத்தில் பார்ப்பனிய எனும் வார்த்தையையே பயன்படுத்தக்கூடாது என்றார்கள்.

    இதை நாங்கள் அவர்களை போலிகள் என்பதால் மறுக்கிறோம் என்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தில்லை போராட்டத்தில் பாமக எம்எல்ஏ வையும் இணைத்துக்கொண்டு போராட்டங்கள் நடத்தப்பட்டது. அண்மையில் மார்சிஸ்ட் போலிகளின் தொழிற்சங்கமான சிஐடியு நடத்திய தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டோம்.

    ஆக யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதையல்ல, என்ன உள்ளீட்டுடன் எவ்வாறு போராட்டத்தை நடத்துகிறார்கள் என்பது தான் முதன்மையானது. இஸ்லாமியர்களும் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள், கம்யூனிஸ்டுகளும் அமெரிக்காவை எதிர்க்கிறார்கள். இரண்டும் அமெரிக்க எதிர்ப்பு என்பதால் இரண்டும் ஒன்றாகிவிடுமா?

  115. செங்கொடி அவர்களுக்கு,
    நான் தஜ்ஜால், இத்தளத்திற்குப் புதியவன். ஆழ்நிலை உறக்கத்திலிருக்கும் (almost dead?!) இஸ்லாமியர்களின் பகுத்தறிவை விழிக்கச் செய்யும் உங்களது இப்பணி பாரட்டுக்குரியது. உங்களது ஒரு பதிலில் ///குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் குரானை ஆழமாக படித்தது. ஒரு வேதத்தை ஆழமாக கற்கும் எவரும் அந்த வேதத்தை விட்டு வெளியேறிவிடுவது இயல்பானது./// என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது எனது வாழ்வில் 100% அனுபவப்பூர்வமான உண்மை. எனது அனுபவம் சற்று சுருக்கமாக,
    PJ அவர்களின் பயானின் உதவியால் கலீபாக்களின் பதவிச்சண்டையை அறிந்ததும் துவங்கிய வெறுப்பு ஆயிஷாவின் திருமண வயதையும், அவர் பாலுறவு கொள்ளப்பட்ட வயதையும் கூறும் புகாரி ஹதீஸ்களைப் படித்ததும் உச்சநிலையை அடைந்தது. அக்கணமே என் மனம், வரமாக, உயிராக, வாழ்வாக, எல்லாமுமாக நான் நினைத்துக் கொண்டிருந்த இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டது. இது நிகழ்ந்தது 2006ரமளானில் ஒரு நோன்பைத் திறப்பதற்கு (முடிப்பதற்கு) பதினைந்து நிமிடங்களுக்குமுன் என்பது குறிப்பிடத்தக்கது. (அல்லாஹ், ஷைத்தானுக்கு விலங்கிடப்படவில்லை போலும்…!)
    அன்றைய மஃரிபு தொழுகையில் என்னால் எதுவும் ஓத முடியவில்லை. என் மனதிலிருந்த கோபத்தை தகாத வார்த்தைகளால் முஹம்மதின் மீது வசைமாரியாக பொழிந்தேன். (அந்தவருட நோன்பு முஹம்மதிற்கு வசைமாரி பொழிவதிலேயே கடந்தது) அன்றிலிருந்து துவங்கியது எனது ஆராய்ச்சி, குர்ஆனையும், ஹதீஸ்களையும், தப்ஸீர்களையும் பகுத்தறிவுடன் அணுகக் கூறியது. அது, இஸ்லாம் என்ற காகிதக் கோட்டையையும், அதன் நாயகர் முஹம்மதைப்பற்றியும் பல நிர்வாண உண்மைகளைக் கூறியது. எனது அனுபவத்தை “ஆரம்பத்தை நோக்கி…” என்ற பெயரில் தொகுத்து ஏறக்குறைய அனைத்து தமிழ் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் அனுப்பினேன். இன்றுவரை எந்தச் சலனமுமில்லை. உங்களது “கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” செல்லும் வரை, நான் பெரிதாக ஏதோ தொகுத்து விட்டதாக (கர்வத்துடன்) எண்ணிக் கொண்டிருந்தேன். மனதார மகிழ்வுடன் கூறுகிறேன், செங்கொடியாரே உங்களது அறிவின்ஆழம் என்னை வியக்க வைக்கிறது. -மென்மேலும் வலுவடைய வாழ்த்துக்கள்
    ///ஆனால் பிரச்சனை என்னவென்றால் பெரும்பாலானோர் அதை நம்பிக்கையோடு ஓதுகிறார்களேயன்றி, மீளாய்வுக்கு உட்படுத்துவதில்லை, படிப்பதில்லை, கற்பதில்லை. அதுதான் பிரச்சனையே.////இதுவும் மறுக்கஇயலாத உண்மையே…!
    தங்களது மதத்தை மீளாய்வுக்கு உட்படுத்தும் எவராலும் மேற்கூறிய முடிவை அடைவதும் உண்மைதான். மனநோயாளி முஹம்மதின் வார்த்தைகளில் மீது குருட்டுத்தனமான நம்பிக்கையும், அவர் இஸ்லாமிர்களின் மனதில் பதியவைத்துள்ள இறுதிஅழிவுநாள்-விசாரணை-நரகம் என்ற பேய்க்கதைகள் உள்ளவரை அவர்களால் உண்மையை உணரவும் முடியாது அப்படி ஒருவேளை உணர்ந்தாலும் ஏற்றுக்கொள்ளவும்முடியாது. (தற்பொழுது நிகழ்ந்த சுனாமி பேரழிவு அப்பாவிகளை அச்சமூட்டிட மதவாதிகளுக்கு வசதியாய் அமைந்துவிட்டது)
    ஜிஹாதை ஆதரிக்கக்கூடியவர்கள் நிறைந்துள்ள எனது குடும்பத்தில் நான் மட்டுமே இஸ்லாமின் கொள்கைகளை விமர்சிக்கிறேன். மனதால், இஸ்லாமிய நம்பிக்கைகளிலிருந்துவெளியேறி ஆண்டுகள் நான்கு கடந்தும், மதநம்பிக்கையும் அப்பாவித்தனமும் மிகுந்த எனது அன்பான பெற்றோர்கள், மனைவி, எனதுயிரான குழந்தைகளுக்காகவும் இரட்டைவேடத்தைத் தொடர வேண்டியுள்ளது என்பது எனது இயலாமையன்றிவேறில்லை.

    எனது கேள்வி :
    மனிதன் ஒரு சமுதாய விலங்கு. இஸ்லாம் போன்ற வன்முறை கோட்பாடுடைய ஒரு சமுதாயத்தை எதிர்த்து நம்மைப் போன்ற வெகுசிலரால் என்ன செய்ய முடியும்? ஆதாரமாக குர்ஆனையும், நம்பகமான ஹதீஸ்களின் துணையிருந்தும், இஸ்லாம் பற்றிய உண்மைகளை துணிவுடன் பகிரங்கமாக வெளிப்படுத்த முடியவில்லை இவ்வுண்மைகளை அப்பாவி முஸ்லீம்களைச் சென்றடையச் செய்யமுடியவில்லையே? பிறப்பு முதல் இறப்புவரை திருமணம், மரணம் என பல நடைமுறைகளுக்கும் சமுதாயத்தின் உதவி அவசியமாகிறது ஏனெனில் நமது வேர்கள் அங்கே அல்லவா உள்ளது?

    என்றும் அன்புடன்
    தஜ்ஜால்

  116. வணக்கம் தோழரே,
    சோசலிசத்திற்கும் , கம்யுநிசதிற்க்குமான வேறுபாடுகள் என்ன என்று கூற முடியுமா.? நன்றி.

  117. நண்பர் தஜ்ஜால்,

    மனிதன் ஒரு சமூக விலங்கு தான். சமூகத்தில் நடப்பில் இருக்கும் எதை விமர்சித்தாலும் அதற்கு எதிர்ப்பு ஏற்படுவது இயல்புதான். ஆனால் செய்யும் விமர்சனத்தில் அவ்வெதிர்ப்பை எதிர்கொண்டு நீடிக்கும் உள்ளொளி உள்ளதா என்பதுதான் எதிர்ப்புக்கான ஆயுளைத் தீர்மானிக்கும். சமூகத்தோடு கலந்துதான் வாழவேண்டும் என்பதால் உண்மையை ஊனப்படுத்தவும் கூடாது. அதேநேரம் உண்மையின் பலன் சமூகத்திற்கு என்பதால், சமூகத்தை விட‌ உண்மை மதிப்பு மிக்கதும் அல்ல. சமூகத்தோடு இயைந்தே உண்மையின் பலன் பயணப்பட வேண்டும்.

    ஒரு நாத்தீகனாக இஸ்லாத்தை எதிர்க்கும் உங்கள் நோக்கம் என்ன? என்பது முக்கியமான கேள்வி. கடவுளின் இருப்பு அறிவியல் பூர்வமானது அல்ல எனவே அதை எதிர்க்கிறேன் என்பது உள்ளீடற்றது. நம்புகிறேன் அதனால் இஸ்லாமியனாக இருக்கிறேன் என்பதற்கும்; அறிவியல் பூர்வமானது அல்ல அதனால் இஸ்லாத்தை எதிர்க்கிறேன் என்பதற்கும் இடையில் பாரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. இஸ்லாமோ அல்லது மதங்களோ இருப்பதினால் சமூகத்திற்கு என்ன பாதகம்? இஸ்லாத்தை மதங்களை விலக்குவதால் மக்களுக்கு என்ன சாதகம் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். செய்யப்படும் விமர்சனம் சமூகத்தை எதிரொலிக்கிறதா? என்பதே முதன்மையானது. அப்படி எதிரொலிக்கும் போது அதுவே எதிர்ப்புகளை தாங்கி நிற்கும் வல்லமையைத் தரும், உறவுகளும் சுற்றமும் யார் எனும் தீர்மானத்தையும் ஏற்படுத்தும்.

    உங்களுடைய ‘ஆரம்பத்தை நோக்கி’ தொகுப்பை இயன்றால் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பித்தாருங்கள்.

  118. வணக்கம் மது,

    உலகம் வர்க்கமாய் பிரிந்து கிடக்கிறது. உலகின் அனைத்துவித மோதல்களும் வர்க்கப் பகைமையின் விளைவுகளே. வர்க்கம் நீங்கிய உலகை ஏற்படுத்துவதே கம்யூனிசம். ஆனால், உலகின் அனைத்து செயல்பாடுகளிலும் வர்க்கம் தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென்று பொத்தானை அழுத்தி வர்க்கங்களை நீக்கிவிட முடியுமா? எனவே எந்த வர்க்கம் ஆளும் வர்க்கமாக இருக்கிறது, எந்த வர்க்கம் அடிமை வர்க்கமாக இருக்கிறது என்பதை உணர்ந்து, இதுவரை ஆளும் வர்க்கமாக இல்லாமலும் அதேநேரம் உலகின் பெரும்பான்மை வர்க்கமாகவும் இருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அதிகாரத்தை வென்றெடுத்து, வர்க்கப்பகைமையினால் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை படிப்படியாக நீக்குவதன் மூலம் வர்க்கங்களுக்கிடையேயான பகைமையை அகற்றி அதன் மூலம் வர்கமற்ற உலகிற்கு வழிசமைக்கும் அமைப்பே சோசலிசம் என்பது. உலக நாடுகள் முழுவதும் சோசலிசம் ஏற்பட்டபின் அது படிப்படியாக கம்யூனிசத்தை நோக்கிப் பயணிக்கும். கம்யூனிசத்திற்கான பாதைதான் சோசலிசம் என்றாலும் கம்யூனிச நடைமுறைக்கும் சோசலிச நடைமுறைக்கும் வித்தியாசம் உண்டு. எடுத்துக்காட்டாக, சோசலிசத்தில் திறமைக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். கம்யூனிசத்தில் திறமைக்கேற்ற வேலை, தேவைக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். சுருக்கமாக கூறுவதென்றால் இன்றைய முதலாளித்துவ உலகம் கீழ்த்தளம் என்றால் கம்யூனிசம் மேல் தளம் கீழ்தளத்திலிருந்து மேல் தளத்திற்கு செல்ல உதவும் படிக்கட்டுகளே சோசலிசம்.

  119. sengodi ///இன்றைய முதலாளித்துவ உலகம் கீழ்த்தளம் என்றால் கம்யூனிசம் மேல் தளம் கீழ்தளத்திலிருந்து மேல் தளத்திற்கு செல்ல உதவும் படிக்கட்டுகளே சோசலிசம்.////
    முதலாளித்துவம் எனும் கீழ் தளத்திலிருந்து சோஷலிச படிகள் மூலம் கம்யுனிசம் என்னும் மேல்தளத்துக்கு சென்ற பிறகு முதலாளித்துவம் என்னும் கீழ்த்தளம் இருக்குமா?

  120. தோழர், சீமானை “பாசிஸ்ட்” என்று வரையறுப்பது சரியா?

  121. இடதுசாரி முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம்.) மரிச்ஜாப்பி சுந்தர்பான் படுகொலைகள் குறித்து???

  122. தோழர் ஸ்பார்டகஸ்,

    சீமானின் அடையாளம் தமிழ் தேசியம், விடுதலைப்புலிகள் எனும் இரண்டு புள்ளிகளுக்கிடையில் தான் இருக்கிறது, அதற்கு வெளியில் சீமான் என்பவர் ஒரு திரைப்பட இயக்குனர் அவ்வளவு தான். தமிழ் தேசிய நிலைப்பாட்டிலும், விடுதலைப்புலிகள் குறித்தும் அவர் கொண்டிருக்கும் கருத்துக்கள் பரிசீலனைக்கு அப்பாற்பட்டதாகவே அவரிடம் குடிகொண்டிருக்கின்றன. தவிரவும் சுய ஜாதிஅபிமானம் கொண்டவராகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். மட்டுமல்லாது நாம் தமிழர் இயக்கத்திலும் ஓட்டுக்கட்சிகளுக்கேயுறிய பிழைப்புவாத செயல்பாடுகள் தான் நிரல்களாக இருக்கின்றன. எனவே அவரை சந்தர்ப்பவாத ஓட்டுப்பொறுக்கிகளுடன் சேர்த்து விமர்சிக்கலாம். என்றாலும், ‘பாஸிஸ்ட்’ என்று கூறுமளவிற்கு அவருடைய செயல்பாடுகள் இல்லை என்றே கருதுகிறேன்.

  123. தோழர் ஸ்பார்டகஸ்,

    இதுவரை இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கெல்லாம் குறைந்தபட்சம் ஒரு கண்துடைப்பு விசாரணையாவது நடைபெற்றிருக்கும். ஆனால் 31 ஆண்டுகளுக்கு முன் மேற்கு வங்கம் மரிச்ஜாப்பியில் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று கூறிக்கொண்ட போலிகள் தோராயமாக 17 ஆயிரம் ஒடுக்கப்பட்ட மக்களை கொன்று குவித்ததற்கு இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மறக்கடிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். சற்றேறக்குறைய நக்சல்பாரி இயக்கம் மேற்கு வங்கத்தில் தோன்றி போராடிய அதே காலகட்டத்தில் தான் மரிச்ஜாப்பி படுகொலைகளும் நடந்துள்ளன என்றாலும் இது பெரிய அளவில் பேசப்படவில்லை, திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன.

  124. //அதே காலகட்டத்தில் தான் மாரிச்ஜாப்பி படுகொலைகளும் நடந்துள்ளன என்றாலும் இது பெரிய அளவில் பேசப்படவில்லை, திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன.//
    அது பற்றிய ஒரு பதிவு.
    http://keetru.com/index.php?option=com_content&view=article&id=13809:2011-03-27-18-04-17&catid=1287:2011&Itemid=545

  125. வணக்கம் சங்கர்,

    அமிதவ் கோஷ் எழுதிய ‘ஹங்ரி டைட்’ நாவல் குறித்தும், துஷார் பட்டாச்சார்யாவின் ஆவணப்படம் குறித்தும் விபரங்கள் கிடைக்குமா? அல்லது இவை குறித்து நீங்கள் ஒரு கட்டுரை எழுதலாமா?

  126. என்னவோ திருக்குர்ஆனை பெரிய ஆராய்ச்சி செய்ததாய் நினைத்துக்கொண்டிருக்கும் செங்கொடிசங்கருக்கு, ஆண்டவன் இல்லை என நிரூபிக்க அந்தர்பல்டி அடித்துக்கொண்டிருக்கிறீர். ஆத்திகனானாலும், நாத்திகனானாலும் துன்பம் என்றால் எதாவது சக்தி வந்து அந்த துன்பத்திலிருந்து நம்மை மீட்காதா என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. ஆண்டவன் இல்லாமல் இந்த எண்ணம் எப்படி ஏற்பட முடியும்?

    கேள்விகள் தொடரும்.

  127. //துன்பம் என்றால் எதாவது சக்தி வந்து அந்த துன்பத்திலிருந்து நம்மை மீட்காதா என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. //
    நணப்ர் அப்துல் காதர்
    ரொம்ப கஷ்டப் பட்டிருப்பீங்க போல இருக்கு.கஷ்டத்தில் வந்து காத்த கடவுளின் திருவிளையாடல கதையை கூறவும்.

  128. வணக்கம் தோழர்

    மார்க்சியத்தை தற்போது கற்று வருகிறேன். அதில் எனக்கு ஒரு சந்தேகம்.

    இயங்கியல் பொருள்முதல்வாதத்தை பற்றி படித்தால் புரிகிறது. அதேபோல

    பொருள் உற்பத்தி மற்றும் உபரி மதிப்பு ஆகியவற்றை பற்றி படித்தாலும் புரிகிறது. ஆனால்

    இரண்டிற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை…

    இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவம் எந்த வகையில் பொருள் உற்பத்தி மற்றும் பாட்டாளி வர்க்கத்தை தொடர்பு கொள்கிறது.

    இயங்கியல் பொருள்முதல்வாதம் x நடைமுறை = இதுதான் எனக்கு புரியவில்லை

    உங்களால் உதவ முடியுமா தோழர்!

    நன்றி

    பா.பூபதி

  129. வணக்கம் தோழர்,

    இரண்டுக்குமான தொடர்பை சுருக்கமாக கூறினால் பொருள்முதல்வாதம் என்பது தத்துவம், அந்த தத்துவத்தின் யதார்த்த நடைமுறை உற்பத்திமுறை. இயங்கியல் பொருள்முதல்வாதத்தில் அளவு மாற்றம் பண்பு மாற்றம் தொடர்பான விதியை படித்திருப்பீர்கள். ஒரு பருப்பொருளின் உள்ளே நிகழும் அளவுமாற்றம் படிப்படியாக நிகழ்ந்து ஒரு பாய்ச்சல் மூலம் பண்புமாற்றமாக வளர்ச்சியடைகிறது. இதையே சமூகத்திற்கும் பொருத்திப் பாருங்கள். சமூகத்தில் மக்களின் வாழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களை அளவு மாற்றமாகக் கொண்டால் புரட்சியின் மூலம் ஏற்படும் புதிய சமூகம் பண்புமாற்றமாகிறது.

    சமூகத்தில் அளவு மாற்றம் எப்படி ஏற்படுகிறது? ஒரு சமூகத்தின் இயக்கம் என்றால் அது உற்பத்தி முறையைத்தான் குறிக்கும். ஒவ்வொரு சமூகமும் தனக்கேயுறிய உற்பத்திமுறையை கொண்டிருக்கும். உற்பத்தியின் உபரி மதிப்பு எவ்வாறு பங்கிடப்படுகிறது என்பதைக் கொண்டே அச்சமூகத்தின் உறவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. என்றால் அநீதமான முறையில் செய்யப்படும் பங்கீடு சமூகத்தில் நிகழ்த்தும் தாக்கம் தான் அளவு மாற்றத்தை ஏற்படுத்துகிறது அல்லவா? என்றால் இந்த அளவுமாற்றம் பண்பு மாற்றத்தை நோக்கியே நகரும் அல்லவா? எனவே உற்பத்தி முறை யதார்த்த நடைமுறை என்றால் இயங்கியல் பொருள்முதல்வாதம் அதன் சாரம். இதுமட்டுமல்ல இயங்கியலின் எந்த ஒரு விதியையும் எடுத்துக்கொண்டு சமூகத்துடன் பொருத்திப்பார்க்கலாம். தொடர்ந்து படியுங்கள்.

  130. எனது பெயர் சனுஸ் செங்கொடியில் கேள்வி பதிலிளுக்கு நான் தயார் நீங்கள் தயாரா
    முதல் முதலில் விண்வெளிக்கு சென்றவர் எங்கள் நபி முகம்மது

  131. வணக்கம் தோழர்

    மார்க்சிய சிந்தனையின் அடிப்படையில் பங்குச்சந்தையை எந்த வகையில் சேர்க்கிறார்கள்!

    பங்குச்சந்தையும் ஒரு தொழில்தான் என்கிறார்களா! அல்லது பங்குச்சந்தை ஓர் சுதாட்டம் என்கிறார்களா! அல்லது முதலாளித்துவத்தின் மறு உருவம் என்கிறார்களா!

    பங்குச்சந்தையை பற்றி மார்க்ஸ் எதாவது சொல்லியிருக்கிறாரா!

    நன்றி

    பா.பூபதி

  132. சென்கொடியாருக்கு வாழ்த்துக்கள் , எனக்கு ஒரு கேள்வி ? நீங்கள் என் முதலாளித்துவ முறையில் வளர்ந்த இந்த வலைதளங்களின் மூலம் உங்கள் பொதுவுடைமை சிந்தனையை வளர்க்கிறீர்களே ? இந்த வலைதள வளர்ச்சி முதலாளித்துவ முறை மூலம் பலம் பெற்றதுதானே ? தாங்கள் உபயோகபடுத்தும் வோர்ட்பிரஸ் கூட அதில் ஒரு கூட்டாளி தானே? விளக்கவும். நன்றி!!

  133. தோழர்,பரிணாமம் குறித்து ஆழமாக கற்பதற்கு புத்தகங்கள் ஏதேனும் தமிழில் இருந்தால் சொல்லுங்கள்.

  134. //எனக்கு ஒரு கேள்வி ? நீங்கள் என் முதலாளித்துவ முறையில் வளர்ந்த இந்த வலைதளங்களின் மூலம் உங்கள் பொதுவுடைமை சிந்தனையை வளர்க்கிறீர்களே ? இந்த வலைதள வளர்ச்சி முதலாளித்துவ முறை மூலம் பலம் பெற்றதுதானே ? தாங்கள் உபயோகபடுத்தும் வோர்ட்பிரஸ் கூட அதில் ஒரு கூட்டாளி தானே? விளக்கவும். நன்றி!!//

    ஆமா இவரு டைப் பன்னுன கீ போர்டும்
    கம்பீட்டரும் கம்னியூஸ்ட் நாட்டுல செஞ்சது

  135. இந்த பொதுவுடைமை எதிராளர்,இஸ்லாமிய எதிராளர் பழைய தில்லுமுல்லு ,நிலா,இப்ப காதர்

  136. வணக்கம் தோழர்,

    பங்குச்சந்தை என்பது வர்த்தகமோ தொழிலோ அல்ல, அது அப்படி குறிப்பிடப்படும் போதும் சூதாட்டம் என்பதே சரி. முதலாளித்துவ சுரண்டலை தீவிரப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு வடிவம். மக்களிடமிருந்தே முதலீட்டை திரட்டி அதன் பலனை சொற்ப அளவில் முதலீடு வழங்கிய மக்களுக்கு வழங்கிவிட்டு மொத்தத்தையும் சுருட்டிக்கொள்ளும் ஒரு ஏற்பாடு. முதலீடு என்பதே உபரி உழைப்பின் குவிப்பு. இந்த முதலீட்டின் காரணமாகவே முதலாளிகள் உற்பத்தியின் பலனில் பெரும்பகுதியை தமதாக்கிக் கொள்கின்றனர். ஆனால் பகுதியளவிலான பங்கை தன்னிடம் வைத்திருக்கும் ஒரு முதலாளி பெரும்பகுதி பங்கை உதிரிகளாக வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு உரிய பங்கை பகிர்ந்தளிக்காமல் குறைந்த அளவிலான மதிப்பையே பகிர்ந்தளிக்கிறான். இதையும் கூட திருட்டுத்தனமாக ஏற்றியும் இறக்கியும் காண்பிப்பதற்கு அதன் விதிமுறைகளில் சந்துபொந்துகள் திட்டமிட்டு உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஒட்டுமொத்தமாக தங்களின் சேமிப்பை முதலீடுகளாக செய்யும் மக்களுக்கு சற்று லாபத்தை வழங்குவதாலும், இதற்கென்று தனிப்பட்ட உழைப்பு எதையும் செய்யவேண்டிய தேவையில்லாதிருப்பதாலும் மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. மொத்தமாக பார்த்தால் இது மக்களுக்கு இழப்பையே கொண்டுவருகிறது

  137. நண்பர் காதர்,

    இந்த உலகம் முதலாளித்துவ உலகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவுடமை பேசுபவர்கள் முதலாளித்துவத்தின் விளைவுகளை பயன்படுத்தக்கூடாது என்றால், அவர்கள் உலகில் வாழவே கூடாது என்பதுதான் பொருளாக வரும். இன்றைய தொழில்நுட்பம் தொடங்கி, அறிவியல் கண்டுபிடிப்புகள், கருவிகள், வாய்ப்புகள் வரை அனைத்திலும் முதலாளித்துவத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை தவிர்க்க முடியாது. மட்டுமல்லாது, அதை தவிர்க்க வேண்டுமென்பது தேவையுமல்ல. புதிய சமூகம் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்திற்குள்ளிருந்து தான் கிளைத்து வரும் என்பது தான் மார்க்சியத்தின் வரையறை. முதலாளித்துவமேகூட அதற்கு முன்பிருந்த சமூகத்தின் தோளில் ஏறி நின்று தான் இந்த வளர்ச்சிகளை சாதித்தது. எனவே முதலாளித்துவ விளைவுகளை பயன்படுத்தாமல்தான் பொதுவுடமை பேசவேண்டும் என்பது வறட்டுவாதம்.

  138. வணக்கம் தோழர் ஸ்பார்டகஸ்,

    பரிணாமம் குறித்த சிறந்த அறிமுகத்தை சு.கி. ஜெயகரன் எழுதிய “மூதாதையர்களைத் தேடி” எனும் நூல் தரும், படித்துப்பாருங்கள். ஆனால் ஆழமாக கற்கவேண்டுமென்றால்…… அப்படி ஒரு தமிழ் நூலை நானும் தேடிக்கொண்டிருக்கிறேன், எனக்கு முன்னதாக உங்களுக்கு கிடைத்தால் த‌கவல் தாருங்கள்

  139. ஏன்டா முட்டாள் ஹைதர் ,
    நான் communistunu எப்போ வாது சொன்னனா ? ஏன்டா உன்னோட முட்டாள் தனத்தை இங்கேயும் காட்றே ?
    சரி, உன் கேள்விக்கு வருவோம் , டைப் பன்னுன கீ போர்டும்
    கம்பீட்டரும் கம்னியூஸ்ட் நாட்டுல செஞ்சது இல்ல தான் , ஒத்துக்குறேன் .
    உன் அல்லாவா வானத்துல இருந்து எறக்கி வெச்சானா ?
    இல்ல உன் தூதர் வரம் வாங்கி வந்ததா ?
    இல்ல மூஸாவுக்கு மானுசல்வா சோறு போட்டா மாதிரி , உனக்கு தினமும் வானத்துல இருந்து இறக்குறானா ?
    இனி தொடர வேற பகுதிக்கு வா , இது கேள்வி பதில் பகுதி !!!

  140. எப்பா இபுராஹிமு,

    “இந்த பொதுவுடைமை எதிராளர்,இஸ்லாமிய எதிராளர் பழைய தில்லுமுல்லு ,நிலா,இப்ப காதர் .”

    என்ன ஒரு கண்டு பிடிப்பு , என்ன ரூம் போட்டு யோசிசீங்களா காக்கா !!! நான் நீங்கள் சுரிப்பிடும் யாரும் இல்லை. அல்லா வழி கெடுத்தவர்களில் நானும் ஒருவன் 🙂

    But they were deceptive, and Allah was deceptive, for Allah is the best of deceivers (Wamakaroo wamakara Allahu waAllahu khayru al-makireena)! S. 3:54; cf. 8:30

  141. சென்கொடியாரே ,
    ரிச்சர்ட் டாகின்ஸ் , கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ் , சாம் ஹாரிசன் , டேனியல் தந்நெட் போன்ற நாத்திக அறிவியல் அறிஞர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன ??
    நீங்கள் கம்முயுநிசத்தை நிறுவ மதங்களை எதிர்கிறீர்களா ?
    இல்லை அதன் போலி தன்மையை எதிர்கிறீர்களா ?

  142. தோழர் காதர்

    பொதுவாகவே அறிவியல் அறிஞர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாகவே இருந்திருக்கின்றனர். அதேநேரம் அவர்களிடம் வர்க்கக் கண்ணோட்டம் இருப்பது அரிது. அவர்களின் அறிவியல் தெளிவு கடவுள் கற்பிதமாகத்தான் இருக்க முடியும் எனும் தெளிவை அவர்களுள் ஏற்படுத்தியிருக்கும், ஆனால் அவர்களுக்கு சமூகம் குறித்த தேடல் குறைவாக இருப்பதால் அவர்களின் கடவுள் மறுப்பு முழுமையடையாமல் இருக்கும்.

    சமூகப் பார்வையற்ற, வர்க்கக் கண்ணோட்டமில்லாத கடவுள் மறுப்பு என்பது முழுமையான பலனை தருவதில்லை. கடவுள் மறுப்பு ஒரு பகுதி மட்டுமே. கம்யூனிசத்தை நிறுவ மதங்களை எதிர்க்க வேண்டியதில்லை. கடவுள் மதம் என்பதெல்லாம் காயத்தின் மீது காய்ந்திருக்கும் பொருக்கைப் போன்றவை, சமூகத்தில் கடவுளின் தேவை தீர்ந்ததும் தானாகவே உதிர்ந்துவிடும். எனவே மதங்களை எதிர்ப்பது கம்யூனிசத்தை நிறுவுவதற்கான முன்நிபந்தனையல்ல. ஆனால் அனைத்துவித அடக்குமுறைகளுக்கும் எதிரான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது கட்டாயத் தேவை எனும் அடிப்படையில் மதங்களுக்கு எதிராக செயல்படவேண்டியதும் அவசியமானது தான்.

  143. தோழரே,

    ஆஸ்திகரோ (அ) நாஸ்திகரோ கம்யூனிஸ/மார்க்ஸிய குஷ்டரோஹ‌ம் பிடிக்காத காரல்மார்க்ஸின் கிளினிக்கில் த‌த்துவ‌ உறுப்புமாற்று அறுவைச்சிகிச்சை பெறாத எந்த இதயமும் செங்கொடி குழுமத்தில் பட்டறை போட‌முடியாது.செங்கொடிக்கு சகலமும் வர்க்கமயம்.

    ஏற்றத்தாழ்வை போதிக்கும் சாதீயத்தை/வர்னாஸ்ர தர்மத்தை ஒழிக்க வழிகூறுவதாகப்புறப்பட்ட சிகப்புகொடியினர் வர்க்கசாதியத்தை வளர்த்து மக்களிடையே பிரிவினையைத்தூண்டுவது கம்யூநிஸத்தின் மீதான காதல் அல்ல.மக்களை ஏழை பணக்காரனாகப்பிரித்து அவர்களின் மோதலில் அரசியல் நடத்தவே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    எந்த அடிப்படையிலும் மக்களிடையே பிரிவினை பிளவு கூடாது.அப்படிப்பிரிந்துவிட்ட எந்தக்கட்சி இயக்கம்/பிரிவிலும் மனிதன் கூட்டுசேர‌க்கூடாது.

    சமூகத்திற்கு அறிவியல்:

    42:13.You shall uphold this system, and do not divide in it.

    06:159.Those who have divided their system and become sects/political parties, you are not with them in anything.

    மனிதநேயமற்ற எக்கொடி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும் வர்க்கமோதல் தலைதூக்கும்.

    28;4. became mighty in the land, and he turned its people into factions, he oppressed a group of them by killing their children and raping their women. He was of those who corrupted.

    quranist@aol.com

  144. கடவுள்இல்லை உலகம் இயற்கையாக படைக்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் உண்டா

  145. உண்டு. ஒன்றல்ல அனேகம். ஆனால், “இயற்கையாக படைக்கப்பட்டது” எனும் மனோநிலைதான் பிரச்சனையாக இருக்கிறது. படைப்பு எனும் நிலையிலிருந்து வாதத்திற்காகக்கூட எதிர்நிலை எடுக்க முடியாத, எடுப்பதை தவிர்க்க எண்ணும் மனோநிலைதான் அந்த ஆதாரங்களை பரிசீலிக்கிறது. அதனால் தான் ஆதாரம் உண்டா என இன்னும் கேள்வியெழுப்பத் தோன்றுகிறது.

  146. நான் செங்கொடி தளத்திடம் கேட்கும் முக்கிய கேள்வி இதுதான்
    எந்த மார்க்கம் இல்லை மதங்கள் இலலை என்று சொல்கிறார்கள் அப்படியன்டால்
    இஸ்லாம் மார்க்கத்தை பற்றி பாருங்கள் எவ்வளவு தெளிவு அல்குர்ஆன் சில விடையங்கள் தற்க்கால உலக விடையத்திற்கு சார்ந்து போகிறது இதை பற்றி உங்கள் கருத்து என்ன எனக்கு உண்மையை சொல்லுங்கள் நான் இரண்டு வருடங்களாக ஒன்றும் விளங்காமல் கஸ்டப்படுகின்றேன் மற்றும் வைத்தியர் சாகிர் நாயக் அவருடைய பிரச்சாரத்தை கேட்டு எந்தனையோ பேர்கள் இஸ்லாத்தை எற்கிறார்கள் ஆனால் வேறு மதத்தில் இப்படி இல்லை நீங்கள் தெளிவாக செல்லுங்கள் நான் எதை நம்பிக்கை கொள்ள

  147. கடவுள் யார் ?

    பகுத்தறிய சில‌ வாசகங்களை சிந்தனை அமிலத்திலிட்டு பகுப்போம்.

    18:18. And We turn them on the right-side and on the left-side,

    மனிதன் உறங்குகிறான்.தூக்கத்தின்போது வலப்புறமும் இடப்புறமும் உருளவும் திரும்பவும்(Tossing and Turning) செய்கிறான். அவன் தன்னிச்சையாக செய்யவில்லை. இயற்கையில் அநிச்சையாக அச்செயல் நடைபெறுகிறது.இங்கு இயற்கைதான் கடவுள் என அறியலாம்.

    16:79. Did they not look to the birds held in the atmosphere of the sky No one holds them up except God.

    பறவை தன் இறக்கை துணைகொண்டு பறக்கிறது.புவீஈர்ப்புவிசைக்கு மாறாகவும் காற்றின் அழுத்த‌ம் அதன் திசைவேகத்திற்கு ஏற்ப பறவை (Aerodynamics)பறக்கும் இயற்பியல் விதியே கடவுள்.

    20:53. He brought down water from the sky, so We brought out with it pairs of vegetation of all types.

    நீர் ஆவியாக்கப்பட்டு(liquid precipitaion) மேகங்களாகவும் அவற்றிலிருந்து(condensation) நீர் மழையாகவும்(water drops) பொழிகிறது.இந்த இயற்கை நிகழ்வு இயற்பியல் விதியே கடவுள்.

    quranist@aol.com

  148. நண்பர் ஆர்மி சர் சம்பத் அவர்களுக்கு,
    /// உலகம் இயற்கையாக படைக்கப்பட்டது/////
    இங்கு தான் பிரச்னை ஆரம்பம். படைத்தல் என்பது ஒரு படைப்பவர் தனது திறமையை பயன்படுத்தி ஒரு புதிய பொருளை உருவாக்குவது.
    நிகழ்தல் என்பது தன்னிச்சையாக எந்த முன் நிபந்தனைகளும் இன்றி நிகழ்வது.
    நிகழ்தலுக்கு படைப்பாளி தேவை இல்லை , உதாரணம் ஒரு பூ மலர்வது, கோழி முட்டை போடுவது , மேகம் தவழ்ந்து செல்வது , காற்று வீசுவது , உலகம் சுழல்வது இன்ன பிற.,
    படைத்தல் என்பது மனிதன் என்ற ஒரு உயிரினம் மட்டுமே செய்யும் செயல்.
    வேறு எந்த உயிரினமும் படைப்பது இல்லை.
    எனவே மனிதன் உருவாக்கிய கடவுளுக்கு “படைப்பு” என்ற ஒரு தன்மையை மனிதன் புகுத்தி விட்டான்.
    இந்த பிரபஞ்சம் மிக விசாலமானது , உதாரணதிற்கு நமது பூமியில் இருந்து பிரபஞ்ச எல்லையில் உள்ள ஒரு “கலாக்ஸ்சி”யின் அல்லது ஒரு நட்சத்திரத்தின் தொலைவு 4000 கோடி ஒளி ஆண்டுகள்.
    ஒரு பொருளோ அல்லது மனிதனோ 4000 கோடி ஆண்டுகள் நொடிக்கு 300000 மைல் வேகத்தில் சென்றால் தான் அதனை தொட முடியும்.
    அதுவும்”எல்லை இல்லை” ஏன் என்றால் அதற்க்கு பின்னே வேறு பல கோடி பிரபஞ்சங்களே ( Multiverse ) இருக்கலாம்.
    இவ்வளவு பெரிய விரிந்த பிரபஞ்சம் படைக்க பட்டது என்று நினைப்பதே மனித அறிவின் அல்லது மனித புரிதலின் அபத்தம் !!

  149. காது+அர் //இந்த பிரபஞ்சம் மிக விசாலமானது , உதாரணதிற்கு நமது பூமியில் இருந்து பிரபஞ்ச எல்லையில் உள்ள ஒரு “கலாக்ஸ்சி”யின் அல்லது ஒரு நட்சத்திரத்தின் தொலைவு 4000 கோடி ஒளி ஆண்டுகள்.
    ஒரு பொருளோ அல்லது மனிதனோ 4000 கோடி ஆண்டுகள் நொடிக்கு 300000 மைல் வேகத்தில் சென்றால் தான் அதனை தொட முடியும்.////
    கடவுளை கண்டது யார் என்று கேட்பவர்கள் ,நட்சத்திர தொலைவு தூரம் சரிதான் என்பதை கண்டது யார்?
    ///ஏன் என்றால் அதற்க்கு பின்னே வேறு பல கோடி பிரபஞ்சங்களே ( Multiverse ) இருக்கலாம்.///
    ஏன் என்றால் அதற்கு பின்னே இறைவன் இருக்கலாம்.

  150. செ.கொடி ,கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் இயற்கைக்கு ஆதாரம் இல்லாத நிலையில் கேட்பவரின் மனநிலையை சுரண்டிவிட்டு தப்ப நினைப்பது சரியன்று.

  151. இப்பு , அஸ்ஸாமு அலைக்கும் ,
    ////கடவுளை கண்டது யார் என்று கேட்பவர்கள் ,நட்சத்திர தொலைவு தூரம் சரிதான் என்பதை கண்டது யார்?////
    உனக்கு அடிப்படை இயற்பியல் தெரிந்தால் நீ இந்த கேள்வியை கேட்க மாட்டாய். எனவே உனக்கு “c ” என்ற ஒளி வேகத்தின் தன்மையை புரிய வைக்க வேண்டும்.
    இது ஒரு வெற்றிடத்தில் ஒளியை பாய்ச்சி ஆய்ந்து அறியப்பட்ட உண்மை.
    உன் அல்லாவை போல புரியாத புதிரோ அல்லது ஆறாம் நூற்றாண்டு அராபிய பொய்யோ இல்லை.
    இந்த ஒளிவேக அளவீடு வானியல் கோள் மற்றும் நட்சத்திர அளவீடு , பிஜ்ஜியோ லீனின் ஒளி பாய்தலுக்கான வரைமுறை, Cavity Resonance , மின்காந்த அதிவலை மானி போன்ற அறிவிக்கு புலப்படக்கூடிய செயல் விதிமுறைகளால் நிருபனமான உண்மை !!
    மேலும் நட்சத்திர தொலைவு தூரம் என்பது “பராலாக்ஸ்” (Parallax ) என்ற வானியல் அளவீடு மூலமே கண்டறிய படுகிறது.
    இந்த அறிவியல் முறைமைகள் எல்லாம் முஹம்மது சொன்னது போன்ற மாய கனவுகளோ, இல்லை ஆண்ட ஆகாச புளுகு மூட்டைகளோ இல்லை என்பதை ஆழ்ந்த வருத்ததோடு தெரிவிக்கிறேன். 🙂

    ///ஏன் என்றால் அதற்கு பின்னே இறைவன் இருக்கலாம்.////
    உங்கள் யூகத்திற்கு நன்றி , ஏனெனில் உங்கள் “இருக்கலாம்” என்ற சந்தேக மற்றும் ஆராய்ச்சி உணர்வை வரவேற்கிறேன், ஆக நீங்கள் அல்லாஹ்வை நம்ப வில்லை யூகம் மட்டுமே செய்கிறீர்கள். நாளைக்கே அறிவியல் multiverse என்னும் கருத்து இயற்பியல் விதிகளுக்கு மாறுபட்டால் அந்த யூகத்தை தூக்கி குப்பையில் போடுவோம். நீங்கள் அதனையே உங்கள் யூகத்திற்கு செய்ய தயாரா ?
    இஸ்லாமிய கொள்கை படி அல்லாஹ்வை யூகிக்க கூடாது , நம்ப வேண்டும்.
    எனவே நீங்கள் முஸ்லீமா என்பதை மீளாய்வு செய்யுங்கள்.

  152. குழம்பி போன குரானிஸ்ட் அவர்களுக்கு,
    நீங்கள் சொன்ன மூன்று விசயங்களும் கண்ணுக்கு தெரிந்த உண்மைகள் , ஆனால் இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.

    பறவை எப்படி பறக்கிறது என்ற விசயத்தை புரியாத அரேபியன் அதனை அல்லா செய்வதாக சொன்னான் , மழை பொழிந்து உயிர்கள் மண்ணில் தழைப்பதை விளக்க முடியாத அவனே அதனையும் அல்லாஹ்வுக்கு உரிதாகினான்.
    இப்படி இயற்கை நிகழ்வுகளை கட்டமைக்க பட்ட கருத்துக்களாக விளக்க முடியாத மக்கள் கூட்டம் அதனை வானத்தின் கடவுளருக்கு உரிதாகினான்.

    20:53. He brought down water from the sky .
    இங்கு “அவன் ” என்று குறிப்பிடுவது அல்லாஹ்வா , வருண பகவானா , இல்லை ஏசுவா , ஒலிம்பசா ?

  153. இங்கே காதற் என்று வருபவர் ஒரு மனிதர் என்று மட்டுமே எனக்கு தெரியும்.அவர் ஆணா பெண்ணா,செங்கொடியா,தில்லு முல்லா, மாற்றுதிறனாலியா,லூசா என்பதெல்லாம் இப்போது நான் இருக்கும் நிலையில் எனக்கு தெரியாது.நட்சத்திரம் இருக்கும்தூரம் என்பது புவியளாரின் யூகம் மட்டுமே .அது சரியான தூரம்தான் என்று நிறுபித்தது யார்?[இது எனது கேள்வி ] கடவுளை கண்டது யார்?[இது உங்களது கேள்வி]

  154. முதல் பகுதியில் ஒருமையிலும் ,பின்னர் பன்மையிலும் விளித்துள்ள காதற் ரொம்பவுமே குழம்பியுள்ளார்.பல கோடி பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்ற உங்கள் யூகத்திற்கு ஏற்றவாறு உங்கள் கருத்தாகவே இறைவனும் இருக்கலாம் என்று கூறியுள்ளேன்.

  155. நட்சத்திரம், சூரியன், தூரம், சார்பியல், பரிணாமம் இவற்றினிலிருந்தெல்லாம் இறைவன் இருக்கிறானா? இல்லையா? என தேடுவது வீண்.
    நம்பிக்கையாளர்களே என்னிடமே இறைஞ்சுங்கள் உங்களுக்கு வேண்டியவற்றை நான் எனது அருட்கொடையிலிருந்து வழங்குகிறேன் என்று பலமுறை கூறியிருக்கிறார் அல்லா. மேலும், இன்னின்ன சூராக்களை ஓதிக்கொண்டால் இன்னின்ன வியாதிகளும் கஷ்டங்களும் நீங்கிடும் என முஹம்மது நபியும் கூறியிருக்கிறார். எனவே, இறை நம்பிக்கையாளர்களே! இக்கூற்றுக்களை நீங்கள் நிருபித்துக்காட்டுங்கள்., நான் மக்கா வரை நடந்து சென்றே ஹஜ்ஜை நிறைவேற்றுகிறேன்.

  156. அல்பல்சபியா ///நான் மக்கா வரை நடந்து சென்றே ஹஜ்ஜை நிறைவேற்றுகிறேன்./// இதிலும் உங்கள் அறை வேக்காட்டுத்தனம் பளிச்சிடுகிறது .இஸ்லாத்தினைப் பற்றி தெரிந்து இருந்தால் நீங்கள் இப்படி கூறியிருக்க் மாட்டீர்கள் .
    ///நம்பிக்கையாளர்களே என்னிடமே இறைஞ்சுங்கள் உங்களுக்கு வேண்டியவற்றை நான் எனது அருட்கொடையிலிருந்து வழங்குகிறேன் /// இவ்வாறு கூறிய இறைவன் அதை தான் நாடியவருக்கே வழங்குகிறான்.என்பதை மனதிற் கொள்க .எல்லோருமே இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று இறைஞ்சினால் அதில் ஒருவருக்குத்தான் இறைவான் நாடுவான் அவனுக்கு மட்டுமே இறைவன் அருள் புரிவான்.ஆகவே சிந்தனை குறுகிடமல் விசலாமாக்கி பாருங்கள்.

  157. இப்பு முட்டாளே ,
    ///இங்கே காதற் என்று வருபவர் ஒரு மனிதர் என்று மட்டுமே எனக்கு தெரியும்///
    ஓஹோ நான் மனிதன்னு கண்டுபுடிசிடிய்யா ? அறிவாளியா நீ ? முட்டாளே !!!

    //// இப்போது நான் இருக்கும் நிலையில் எனக்கு தெரியாது.////
    தெரியாதுன்னா மூடிட்டு போ !!

    ////.நட்சத்திரம் இருக்கும்தூரம் என்பது புவியளாரின் யூகம் மட்டுமே .///
    மட பயலே , அது புவியியலாளர் ( Geologist ) அல்ல , வானியலாளர். ( Astronomer ). 🙂
    யூகம் அல்ல , அது பல்வேறு அறிவியல் செயல்பாடுகளால் நிரூபணம் ஆனது.
    இந்த ஒளிவேக அளவீடு வானியல் கோள் மற்றும் நட்சத்திர அளவீடு , பிஜ்ஜியோ லீனின் ஒளி பாய்தலுக்கான வரைமுறை, Cavity Resonance , மின்காந்த அதிவலை மானி போன்ற அறிவிக்கு புலப்படக்கூடிய செயல் விதிமுறைகளால் நிருபனமான உண்மை !!
    மேலும் நட்சத்திர தொலைவு தூரம் என்பது “பராலாக்ஸ்” (Parallax ) என்ற வானியல் அளவீடு மூலமே கண்டறிய படுகிறது.

    ////அது சரியான தூரம்தான் என்று நிறுபித்தது யார்?////
    ஆய்வு முடிவு தான் நிரூபணமே , நீ சொல்றத பார்த்த ஆக்சிஜன கண்டு புடிச்சவன் அத பாத்தன்னு கேப்ப போல ….
    அத பாக்க முடியாது நிருபிக்க தான் முடியும் .
    உன் செல் போன் சிக்னல நீ என்ன பாத்தா நிரூபிக்கிறே ? இல்ல அத கண்டுபுடிச்சவன் பாத்தானா? டவர்ல இருந்து செல் ரீச் ஆனாலே அது நிரூபணம் தானே ?
    உனக்கு அடிப்படை அறிவியல் தெரியவில்லை , நீ ஒரு கூமுட்டை .

    ////[இது எனது கேள்வி ] கடவுளை கண்டது யார்?///
    நீ கண்டியா , ஏன் வக்காலத்து வாங்குறே ?
    நீயே பாக்காத ஒன்ன நான் என் நம்பனும்? உனக்கே புரியாத ஒன்ன மத்தவங்களுக்கு என் விளக்குற ? முட்டாளே !!

    ////முதல் பகுதியில் ஒருமையிலும் ,பின்னர் பன்மையிலும் விளித்துள்ள காதற் ரொம்பவுமே குழம்பியுள்ளார்.////
    குழம்பியது நான் அல்ல உனது அல்லாஹ். அவன்தான் நாம் , அவன் , இவன் , நம்மை , என்று எல்லா தன்மையும் சொல்கிறான்.

    42:48 இனியும் இந்த மக்கள் புறக்கணிக்கின்றார்களெனில், (நபியே!) இவர்களைப் பாதுகாப்பவராய் உம்மை நாம் அனுப்பி வைக்கவில்லை.

    இங்கு நாம் யார் ?
    அவனா ? இவனா ?

    குரான் 42:6 எவர்கள் “அவனை” விடுத்து தமக்கு வேறு சில பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளனரோ அவர்களை அல்லாஹ்வே கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.

    “அவனை” விடுத்து – எவனை விடுத்து.

    42:8 அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் கொண்டவன் ஆவான்.

    எவன் அந்த அவன் , அவன் இவன் என்றால் இங்கு சொல்பவன் யார் ?

  158. இறைவனின் பெயரை வைத்துகொண்டு அவனை விமர்சிக்கும் உங்களைப் போன்ற புத்திசாலிகளை நான் பார்த்ததில்லை. அறிவாளிகள் என்பது அறிவியலில் மட்டுமல்ல.பண்பாடுகளில் தான். அறிவியல் இல்லாமல் உலகம் ஜீவிக்கும் பண்பாடு இல்லைஎன்றால் உலகம் அழிந்துவிடும்.பல அறிவியலார்கள் குணத்தில் அயோக்கியர்களாக இருந்திருக்கிறார்கள்.முதலில் ஆணவம் அகற்றி அடக்கமாக பேச கற்று கொள்ளுங்கள்.
    ஆக்சிஜன் நிரப்பாத பாட்டிலையும் பின் அதில் ஆக்சிஜனை நிரப்பி எடை போட்டு ஆக்சிஜனை மடையனும் அறிந்து கொள்வான்.
    ///டவர்ல இருந்து செல் ரீச் ஆனாலே அது நிரூபணம் தானே ?///
    இந்த விசயத்தை சதரனமானவனும் அறிவான் .நட்சத்திர தூரம் என்பது யூகமே ஒழிய நிருபணம் இல்லை.
    ///அதுவும்”எல்லை இல்லை” ஏன் என்றால் அதற்க்கு பின்னே வேறு பல கோடி பிரபஞ்சங்களே ( Multiverse ) இருக்கலாம்////
    இது எப்படி யூகமோ அது போன்று நட்சத்திரதூரமும் யூகம்தான் .

    {///[இது எனது கேள்வி ] கடவுளை கண்டது யார்?///
    நீ கண்டியா , ஏன் வக்காலத்து வாங்குறே ?
    நீயே பாக்காத ஒன்ன நான் என் நம்பனும்? உனக்கே புரியாத ஒன்ன மத்தவங்களுக்கு என் விளக்குற ? முட்டாளே !!////
    இதே போன்று நட்சத்திர தூரத்தை கண்டது யார்? நீ கண்டியா? இல்லை தொண்டியா ?என்று நானும் கேட்கலாம்.
    42;8 42;9 வசனங்கள் தனைகளை போன்று குழப்பாமல் தெளிவாகவே உள்ளன. குழம்பியுள்ள தங்களுக்கு அது போன்று தோன்றலாம்.அந்த வசனங்கள் நபி[ஸல்] அவர்களுக்கு கூறப்பட்டு அவர் மக்களுக்கு சொல்லுவது போல் இன்டைரக்ட் ஸ்பீசில் உள்ளது
    முதல் பத்தியில் ஒருமையிலும் அடுத்த பத்தியில் பணமையிலும் விளித்துள்ள உங்களது தவறை முதலில் ஒத்துக்கொள்வதே மாமேதையான தங்களுக்கு உகந்த செயல்.

  159. இப்ராஹீம் அவர்களே !!

    ///இறைவனின் பெயரை வைத்துகொண்டு அவனை விமர்சிக்கும் உங்களைப் போன்ற புத்திசாலிகளை நான் பார்த்ததில்லை.////
    இறைவன் என்ற ஒன்று இல்லை என்பதே நாத்திக வாதம் , அதில் எப்படி இறைவனை விமர்சிக்காமல் இருப்பது.
    முஹம்மதே கூட பண்டைய 360 அராபிய தெய்வங்களை , கடவுள்களை ( சின் , ஹுபெல் , இலுமஃஉஹ் , லாத் ,உஸ்ஸா , அம்மாத்……. ) விமர்சித்துதானே தனது ஓரிறை கோட்பாட்டை பரப்பினார்.
    முஹம்மத் எப்படி மக்கள் வணங்கும் மதிக்கும் தெய்வங்களை விமர்சித்தாரோ , அதே நோக்கிலே தான் அல்லாஹ்வை விமர்சிக்கிறோம்.
    முஸ்லீம்களுக்கு முருகனோ, சிவனோ , ஹனுமனோ எப்படியோ அப்படியே நாத்திகனுக்கு அல்லாஹ்.

    ///பண்பாடு இல்லைஎன்றால் உலகம் அழிந்துவிடும்.////
    எது உங்கள் பண்பாடு ,
    6 வயது குழந்தையை திருமண பந்தத்தில் சேர்ப்பதா ? ( ஆயிஷா )
    9 வயது குழந்தையோடு பாலியல் உறவு கொள்வதா ? ( ஆயிஷா )
    11 மனைவிகளும் , 2 வைப்பாட்டிகளும் , 10 க்கும் மேல் ஒப்பு கொடுத்த பெண்களுடன் கூடி மகிழ்வதா ?
    அடுத்தவன் மனைவியை அவனை கொன்ற இரவிலேயே உறவு கொள்வதா ? ( சபியா )
    சொகுசு வாழ்க்கைக்காக தன்னை விட 15 வயது மூத்தவளை திருமணம் செய்வதா?
    சரண் அடைந்த பனுகுளிரா இனத்தை சேர்ந்த 900 பேரை சிர சேதம் செய்வதா ?
    ஒன்றாய் இருந்த இனத்தின் மத்தியில் சண்டை மூட்டி விடுவதா ?
    உங்கள் நபியின் பண்பாட்டு லட்சணம் இப்படி நாறும் போது , நீங்கள் எந்த பண்பாடு கூறுகிறீர்.

    ///முதலில் ஆணவம் அகற்றி அடக்கமாக பேச கற்று கொள்ளுங்கள்./////
    இதிலும் உங்கள் அறை வேக்காட்டுத்தனம் பளிச்சிடுகிறது . – இது உங்கள் இடுகை.
    எப்படி நீங்கள் ஒரு அடுத்த பெண்ணை அரைவேக்காடு என்று சொல்லலாம். அவரின் தகுதி , திறமை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? இது தான் உங்கள் அடக்கமா ?

    ///இது எப்படி யூகமோ அது போன்று நட்சத்திரதூரமும் யூகம்தான் .////
    உங்கள் கணக்கு படி எது நிரூபிக்க படவில்லையோ அது யூகம் , ஆமோதிக்கிறேன் .
    ஆக அல்லாஹ்வும் யூகம் என்று சொல்ல நீங்கள் தயாரா ?
    யூகமான அல்லாஹ்வை நாங்கள் ஏற்றால் இதையும் ஏற்கவேண்டும்.

    ////இதே போன்று நட்சத்திர தூரத்தை கண்டது யார்? நீ கண்டியா? இல்லை தொண்டியா ?என்று நானும் கேட்கலாம்./////
    கேட்க வேண்டியது தானே ? நீங்கள் கேட்க மாட்டீர்கள் ஏனென்றால் அந்த கேள்வி உங்கள் இறைவனை பதம் பார்த்து அதன் கொள்கையை நிர்மூலம் ஆக்கிவிடும்.

    ////.அந்த வசனங்கள் நபி[ஸல்] அவர்களுக்கு கூறப்பட்டு அவர் மக்களுக்கு சொல்லுவது போல் இன்டைரக்ட் ஸ்பீசில் உள்ளது/////
    “43:3 நாம் இதனை அரபி மொழியிலுள்ள குர்ஆனாக அமைத்துள்ளோம்.
    நம்மிடம் உயர் அந்தஸ்துடையதும் ஞானம் நிறைந்ததுமான வேதமாகும் அது!”
    இங்கே ஏன் இன்டைரக்ட் ஸ்பீசில் பேச வில்லை.
    42;8 42;9 வசனங்கள் மட்டும் ஏன் இன்டைரக்ட் ஸ்பீசில் உள்ளது ?
    இது மன மாறுபாடு , குழப்பம் , பதபதைப்பு , சுத்த பேத்தல் .!!

  160. தேசிய முதலாளி தொழிலாளியை சுரண்டுவதை நீங்கள் எப்படி நியாப்படுத்துவீர்கள்?

    2 .குட்டி முதலாளிகளை ஓன்று சேர்க்கும் நீங்கள் குட்டி பூர்ஷ்வா கட்சி தானே அவர்கள் நலன்களுக்காக தானே குரல் கொடுப்பீர்கள்?

    ( பெரிய முதாளிகளின் கட்சிகள் திமுக பெரிய முதலாளிகளை பாதுகாக்கிறது. அது போல )

    3 .விவசாயமுறை இங்கு நவீனமாயா மாகிவிட்டபோதும் நீங்கள் ராஜராஜன் காலத்திலையே இருக்கிறீர்களே அது ஏன்?

    4 . ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை சுரண்டி வாழும் சரவணா கடை அதிபர் உங்களுக்கு தோழன் கூலி வேலை செய்யும் பிராமணன் உங்கள் எதிரி அப்படி என்ன இன்று சோற்றுக்கு லாட்டரி அடிக்கும் பிரமாணன் மேல் கோபம்?

    5.நேபாளத்திலையே மாவோ பார்முலாவை மாவோயிஸ்டுகள் கைவிட்டுவிட்டார்கள் ஏன் ?

    6.நீங்கள் ஏன் ஜாதி வேறுபாடு பார்க்கிரீர்கள் தொழிலாளியை சாதிவாரியாக பிரிக்கிறீர்கள்?

    7.ஏன் அனைவரையும் கண்ணை மூடிக்கொண்டு திட்டுகிறீர்கள்?

    8.அம்பானியை தரகு முதலாளி என்கிறீர்கள் அம்பானி தான் உலகிலையே அதிக சொத்து வைத்திருப்பவர் என்று சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. அவர் யாருக்கு தரகு பார்கிறார் என்று சொல்ல முடியுமா? அப்பானியை பார்த்து நீங்கள் தரகு முதலாளிதானே என்று சொல்ல உங்களுக்கு தையிரியம் இருக்கிறதா?

    9.நீங்கள் தேசிய முதாலாளிகள் கொள்ளை அடிப்பதை பற்றி பேச முடியாமல் தான் பார்ப்பனர்கள் மேல் பாய்கிறீர்கள் என்று சொல்லலாமா ?

    10.கம்யூனிஸ்ட்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு உழைப்பார்கள் நீங்கள் மத்திய தரவர்கத்திற்கும் , சிறு , தேசிய முதலாளிகளுக்கும் உழைக்கிறீர்கள் அப்புறம் எப்படி நீங்கள் கம்யூனிஸ்ட் ஆவீர்கள் நீங்களும் முதலாளித்தவத்தின் கட்சி தானே.?

    11.கருணாநிதி பார்பான் என்று அடிக்கடி சொல்வார் நீங்களும் அதையே சொல்கிறீர்கள் அப்படி என்ன கருணாநிதியோடு தொடர்பு?

    12.தோழரே கோபப்படாமல் நிதானமாக இதற்கு பதில் தரலாம் தருவீர்கள் என்று நினைக்கிறேன்.உணமையான கம்யூனிஸ்ட் சுயவிமர்சனத்திற்கு உட்பட வேண்டும்.விமர்சனகளுக்கு பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டும். அப்பா நீங்க உணமையான கம்யூனிஸ்டா

  161. நண்பர் மதன்,

    கேள்விகளாக அடுக்கிவிட்டீர்களே. ஒவ்வொன்றாக கேட்டால் பதில் கூறுவதற்கும், புரிந்து கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.
    பொதுவாக உங்கள் கேள்விகள் அனைத்துமே தவறான புரிதலிலிருந்து எழுந்தவைகளாகவே இருக்கின்றன. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து அறிந்து கொண்டு அதன் பின் உங்கள் ஐயங்களை ஒவ்வொன்றாக கேளுங்கள் விரிவாக பதிலளிக்கிறேன்.

  162. மாசேதுங்-கிங் முரண்பாடு பற்றி என்ற புத்தகத்தில் “பருண்மை” என்ற வார்த்தை வருகிறது அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று விளக்க முடியுமா தோழர்

  163. வணக்கம் தோழர்,

    நீங்கள் குறிப்பிடும் மாசேதுங்-கிங் முரண்பாடு பற்றி எனும் நூலை நான் படித்திருக்கவில்லை. ஒருவேளை அந்நூல் உங்களிடம் மின்னூலாக இருக்குமானால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தரலாமா?

    பருண்மை எனும் சொல்லுக்கு அனைத்து வாய்ப்புகளையும் உள்ளடக்கிய என்று பொருள். எடுத்துக்காட்டாக ஒரு விமர்சனக் கட்டுரையை பருண்மையான விமர்சனம் எனக் குறிப்பிட்டால்; அந்தக் கட்டுரை என்ன தலைப்பில் எழுதப்பட்டுள்ளதோ அந்தத் தலைப்பின் எல்லா அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு விரிவாகவும் விளக்கமாகவும் எழுதப்பட்டுள்ளது என்பதாக பொருள்படும்.

  164. Mr. Senkodi, Why do intellectual writers like Sujatha (even he died) never try to explore the religious faiths? -Mohammed Rafi of SriLanka

  165. நண்பர் முகம்மது ரஃபி,

    எவரும், எதை முன்னெடுக்க விரும்புகிறார்களோ அதைத்தான் செய்ய விரும்புவார்கள். இதில் எழுத்தாளர்கள் மட்டும் விலக்காக இருக்க முடியுமா, என்ன?

    சுஜாதாவைப் பொருத்தவரை, அவர் அறிவியல் பார்வையுடன் பார்ப்பனிய கருத்துக்களை திணிப்பதில் கை தேர்ந்தவர். இதை அவரது எழுத்துகளில் கண்டுணரலாம்.

    சிவன் நாரதர் ஓடிப்போன கதையில் கூட சார்பியல் கோட்பாட்டை தேடிக்கண்டு பிடித்துக் கூறியவர், மத நம்பிக்கைகளை எதிர்த்து எழுதுவார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

  166. தோழரே,
    தேசங்கள் மற்றும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை கம்யுனிச சமூகம் எவ்வாறு நோக்க வேண்டும் என்பதை சற்று விளக்குங்களேன்.

  167. Mr. Senkodi, thanks for your answer. If so, could you tell me in detail why do those writers hide the real
    facts in their articles?( Sorry I have no tamil fonts yet.)

  168. நண்பர் விபின்,

    சமூகத்தில் நிலவும் எந்த ஒரு பிரச்சனையுயும் வர்க்கக் கண்ணோட்டத்துடன் புரட்சியை நோக்கிய திசைவழியிலேயே அணுக வேண்டும். அந்த வகையில் பார்த்தால், ஒடுக்கப்படும் தேசிய இனத்திற்கு ஆதரவாக பாட்டாளி வர்க்கம் போராடும் அதேநேரம் ஜனநாயகமற்ற தனி உரிமைகளை எதிர்த்து போராடவும் வேண்டும். இதை நுணுக்கமாக உணர்ந்து அடையாளம் கண்டு கொள்ளாதவரை தேசியக் கோரிக்கை என்பது முதலாளியக் கோரிக்கையாகவே இருக்கும். முதலாளிய தேசியக் கோரிக்கையும், பாட்டாளிவர்க்க சர்வதேசியமும் முரண்பாடான தன்மை கொண்டவை. இதைத் தீர்ப்பதற்காகத்தான் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை எனும் கோரிக்கை முன்னெழுப்பப்படுகிறது.

    சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போகும் உரிமையை மட்டுமே உள்ளடக்கிய ஒரு தனியுரிமை அல்ல. அது தேசிய இனங்களின் உளப்பூர்வமான ஒற்றுமையை கவனத்தில் கொண்டுள்ளதாகவும். குறுகிய தேசிய இன மனப்பான்மைக்கு எதிரானதாகவும் இருக்கும்.
    ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்திடம் தங்கள் கோரிக்கையின் நியாயங்களை புரியவைத்து வென்றெடுக்காமல் சுய நிர்ணய உரிமை முழுமையடையாது. வர்க்கப் பார்வையற்ற ஒடுக்கும் இனத்தின் பாட்டாளிகளையும் பகைவர்க்கமாக பார்ப்பது, தேசிய இனக் கோரிக்கை முதலாளிகளின் கரங்களில் இருக்கிறது என்பதன் அடையாளமாகும்.

    இது குறித்து இன்னும் விளக்கமாகவும் விரிவாகவும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்தக் கேள்வியை வினவு தளத்தில் கேளுங்கள்.

  169. தோழர் செங்கொடிக்கு வந்தனங்கள்!
    தங்களது பார்வையில் எங்கள் இலங்கைத்தீவில்இதுவரை நிகழ்ந்த தமிழர்களின் சுயநிர்ணயஉரிமைப் போராட்ட வரலாறு பற்றியூம் இன்று அது செல்லும் திசை பற்றியூம் என்ன நினைக்கின்றீர்கள்?

  170. நண்பர் ரஃபி,

    இதுகுறித்து ஏற்கனவே பல கட்டுரைகள் வினவு தளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. அவைகளை படித்துப் பாருங்கள்.

    நூலகம் பகுதியில் இருக்கும் “துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால்”

    http://www.vinavu.com/2009/05/19/eelam-war-is-not-over/

    http://www.vinavu.com/2009/11/21/maruthaiyan-radio-discussion/

  171. தோழரே,
    கடன்பத்திரங்கள் என்றால் என்ன? அவை எவ்விதம் உருவாகின்றன? உலகளவில் எவ்விதம் செயல்படுகின்றன?

  172. நண்பர் விபின்,

    கடன் பத்திரங்கள் என்பது நிதிச் சூதாடிகளின் ஒப்பனை முகம். உங்களிடம் நூறு ரூபாய் இருந்தால் பிராய்லர் கடையில் ஒரு கிலோ கோழிக்கறி வாங்கலாம். இதுவே அந்தக் கடையை வாங்க வேண்டுமென்றால் சில லட்சங்கள் பணமாக தேவைப்படும். இன்னும், பிராய்லர் நடத்தும் நிறுவனத்தை மொத்தமாக வாங்க வேண்மென்றால் பல கோடிகள் பணமாக தேவைப்படும். இது போன்ற பல நிறுவனங்களை வாங்க வேண்டுமென்றால் …..? அந்த பரிவர்த்தனையை பணமாக நடத்துவது சாத்தியமாகுமா? இங்கு தான் கடன் பத்திரங்களின் பாத்திரம் வருகிறது. பணத்தைப் போலவே கடன் பத்திரங்களும் மதிப்பு தான். ஆனால் அதன் மதிப்பு பல ஆயிரம் கோடிகளில் இருக்கும்.

    சிறிதளவு சேமிப்பு வைத்திருப்பவர்கள் அதை ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்வார்கள். இன்னும் அதிகமாக வைத்திருப்பவர்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வார்கள். ஊரை அடித்து வைத்திருப்பவர்கள் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். ஆனால் கடன் பத்திரங்கள் சாதாரண சந்தைகளில் நடமாடாது, நிதிச் சந்தைகளில் மட்டுமே உலாவரும். ரியல் எஸ்டேட் தரகர்கள் தங்களிடம் வரும் பரிமாற்றங்களின் மூலம் செயற்கையாக விலையை ஏற்றி கொள்ளையடிப்பதைப் போல நிதிச் சந்தைகளில் முதலாளிகள் செய்யும் தில்லுமுல்லுகள், மொள்ளமாறித் தனங்கள், முடிச்சவிக்கித் தனங்கள் கணக்கிட முடியாதவை. இது போன்ற திருட்டுத்தனங்களை செய்வதற்கான யோசனைகளைச் சொல்வதற்கென்றே ஆட்களை அமர்த்தியிருப்பார்கள். கண்ணியமாக அவர்களுக்கு பொருளாதாரம் படித்த நிதி ஆலோசகர்கள் என்று பெயர். இப்படி இவர்கள் கொள்ளையடிக்கும் பணம் உழைக்கும் மக்களுடையது என்பதே உண்மை.

    இதை விளங்குவதற்கு அண்மையில் உலகை கலங்கடித்த அமெரிக்க சப் பிரைம் கடன் நெருக்கடியை பார்க்கலாம். பணமோ, கடன் பத்திரங்களோ பெட்டியில் பூட்டி வைத்திருந்தால் மதிப்பேது, அதை மக்களிடம் புழக்கத்திற்கு விட்டால்தானே பணம் பண்ண முடியும். இதற்காக புதிய புதிய இலக்குகளைக் கண்டு பிடிக்கிறார்கள். அமெரிக்காவில் கீழ் மத்தியதர மக்களைக் குறிவைத்து வீடு கட்டித்தரும் திட்டத்தைத் தொடங்கினார்கள். இவர்கள் கட்டும் வீடுகளை வாங்குவதற்கு அரசும் வங்கிகளும் கடன்களை வாரி வழங்கின. தொலைக்காட்சி முதல் அத்தனை ஊடகங்களிலும் சுலபத்தவணை கடன்கள் விளம்பரப்படுத்தப்பட்டன. அதற்கும் மசியாதவர்களை தொலைபேசி,மூலம், தரகர்கள் மூலம் வளைத்துப் பிடித்தார்கள். வீடுகள் விற்கப்பட விற்கப்பட ஒரே ஆண்டில் வீட்டின் மதிப்பு பத்து லட்சம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. வங்கிகள் கடனை எப்படிக் கொடுத்தன? கடன் பெறுபவர்களிடமிருந்து பெறப்பட்ட பத்திரங்கள் நிதிச்சந்தையில் விற்று பணமாக்கப்பட்டது. அதுவே மீண்டும் கடனாக கொடுக்கப்பட்டது. நிதிக் கம்பெனிகளும், இன்சூரன்சு நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் கூட்டணி அமைத்து ரியல் எஸ்டேட் சந்தையைச் சுறுசுறுப்பாக்கி விலைகளை இருமடங்கு, மும்மடங்காக ஏற்றினார்கள் வீட்டின் உண்மையான மதிப்பைவிட பல மடங்கு உயர்த்தப்பட்ட தவணையைக் கட்டமுடியாமல் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். தவணை முறையாக வராததினால் வங்கிகள் திவாலாயின. மக்கள் தவணை கட்டிய பணத்தை நிதிச் சந்தை கடன்பத்திரங்கள் மூலம் முதலாளிகள் சுருட்டிக் கொண்டுவிட, வங்கிகளைக் கைதூக்கிவிட அரசு எழுபதாயிரம் கோடி டாலர் மக்கள் வரிப்பணத்தைத் தூக்கிக் கொடுத்தது. மக்களோ வங்கிகளின் குப்பைக் காகிதங்களைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுத்தாயே, இதோ எங்கள் வீட்டு குப்பைகளையும் வைத்துக் கொண்டு பணம் தாருங்கள் என்று போராடினார்கள். முடிவில் தகுதியில்லாதவர்களுக்கு கடன் கொடுத்ததால் தான் இந்த நெருக்கடி என்று முதலாளித்துவ அறிஞர்களால்(!) தீர்ப்பெழுதப்பட்டு மூடப்பட்டது. ஆனால் மக்களோ வீட்டின் மதிப்பை விட அதிகமாக பணம் கட்டிய பின்னரும் தொடர்ந்து கட்ட முடியாமல் வீட்டையே விட்டுவிட்டு போயிருக்கிறார்கள். இதில் அவர்கள் தவறு என்ன? அவர்கள் பணத்தையும் இழந்து வீட்டையும் இழந்திருக்கிறார்கள். ஆனால் முதலாளிகள் தங்களின் இழப்பாக காட்டப்பட்டவற்றுக்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து அரசு இழப்பீடாக கொட்டிக் கொடுத்தது. இந்த சப் பிரைம் கடன் பத்திரங்களை முதலீடு என்ற பெயரில் ஐரோப்பிய, உலக நாடுகளின் நிறுவனங்களும், வங்கிகளும் வாங்கியிருந்தன. அதனால் தான் அவைகளும் சீட்டுக்கட்டு கோபுரம் போல் சரிந்து, அமெரிக்க நெருக்கடி உலக நெருக்கடியாகியது.

    அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவின் பல திட்டங்களில் கூட இதுபோல் நிதிச்சந்தை சூதாடிகளின் இரத்தக்கவிச்சு வாடையை மூக்கிருப்பவர்களால் நுகர்ந்து கொள்ள முடியும்.

  173. அனைத்து அரசுகளின் கரன்ஸி நோட்டுகளும் (காகிதப் பணமும் உலோக நாணயமும்) அவ்வரசின் குடிமக்களை சுரண்டத்தானே ?

  174. தோழரே, இஸ்லாமிய மதத்தில் உள்ள ஐந்து கடமைகளில் ஸகாத் எனும் கடமையை சரிவர நிறைவேற்றாத விரும்பாமல் (நிறைவேற்றப்போனால் தங்கள் காசு பணம் போய்விடும் என்று பயந்து கொண்டு) இருப்பவர்கள் நோன்பு தொழுகைகளை மட்டும் விழுந்து விழுந்த நிறைவேற்றுவதன் மர்மம்தான் என்ன?

  175. மார்க்சியத்தை புரிந்து கொள்ள அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் எவை…?

  176. நண்பர் ரஃபி,

    இந்தக் கேள்வியை நீங்கள் முகவரி மாற்றி கேட்டுவிட்டீர்கள் என எண்ணுகிறேன். பிஜே தளத்தில் கேட்டிருந்தால் விரிவாக ஹதீஸ்களுடன் சேர்த்து பதில் கூறியிருப்பார்கள்.

    பொதுவாக மதச்சடங்குகள் அனைத்துமே, தன்னை பக்திமானாக முன்னிருத்திக் கொள்ளும் உத்தியுடன் தான் நடத்தப்படுகின்றன. தங்களுடைய மதம் செய்யக்க்கூடாது என்று கூறியவற்றையெல்லாம் செய்து கொண்டிருக்கும் ஒருவர் வெளியில் தான் அவ்வாறு செய்பவனல்ல எனக் காட்டிக் கொள்ளவே விரும்புவார். காரணம் கடவுளின் மீதுள்ள பயம் அல்ல, அப்படி ஒரு பயம் தனக்கு இருப்பதாக காட்டிக் கொள்வதே. சடங்குகளை நீக்கிவிட்டு மதங்களைப் பார்த்தால் எல்லோரும் நாத்திகவாதிகளே. எல்லா மதங்களும் (ஒப்புக்காகவேனும்) நல்லவனாக இருங்கள் என்று தான் கூறுகின்றன. அதன்படி பார்த்தால் உலகம் அடக்குமுறைகளற்று சீரானதாகவல்லவா இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்பதிலிருந்தே மதத்தை பின்பற்றுவதாக கூறிக்கொள்பவர்கள் அதை பின்பற்றுவதில்லை என்றாகிறது. எனவே காட்டிக் கொள்வதற்கு சடங்குகள் வேண்டும். அந்த சடங்குகளில் எது எளிதாக பாதிப்புகளற்று இருக்கிறதோ அதைச் செய்து கொள்கிறார்கள். அவ்வளவு தான்.

  177. நண்பர் அபி,

    அடக்குமுறைகள் எந்த வடிவில் வந்தாலும் அதை ஏற்காமல் மறுப்பது, எதிர்த்துப் போராடுவது எனும் எண்ணம் உங்களுக்கு வந்துவிட்டாலே நீங்கள் மார்க்சியத்தை புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டீர்கள் என்று தான் பொருள். நடப்பு உலகின் செயல்பாடுகளில் எது அடக்குமுறை என்பதை தெரிந்து கொள்வதற்கு தான் நீங்கள் கொஞ்சம் கற்க வேண்டியதிருக்கும்.

    அடிப்படையானவற்றை எளிமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அஷ்வகோஷின் கடவுள் என்றால் என்ன? தியாகுவின் மார்க்சியம் ஆனா ஆவன்னா போன்ற நூல்களைப் படிக்கலாம்.

  178. ஆமாம் தோழரே,

    அஸ்வகோஸின் “கடவுள் என்றால் என்ன?” – அற்புதம்.

    அறிவியல் பூர்வமாக அனைத்தையும் விளக்கும் இதுபோன்ற ஒன்றை, எந்தப் பாட நூலிலும் நான் கண்டதில்லை.

    அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையாக உள்ள இந்நூலை உயிருள்ளவரை கூடவே இருக்குமாறு பார்த்துக் கொள்வேன்.

  179. தோழரே,
    கடவூள் என்று ஒன்று இல்லை… மதம் என்ற ஒன்று தேவையில்லை என்று எல்லோரும் அறிந்து விட்டால் தம்மைக் கண்காணித்துக் கொண்டிருப்பதாகக் கருதியாவது பயந்து பாவச் செயல்களில் ஈடுபடாமலோ அல்லது குறைந்தளவோ ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களெல்லாம் பயம் விட்டுப் போய் பகிரங்கமாகவே பாதகங்களில் இறங்கி விட மாட்டார்களா?

  180. பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல் என்ற தலைப்பில் நாத்திக மடையர்களுக்கு சூடு வைத்திருக்கிறேன். உங்களது மனம் அப்போதாவது திருந்தி இஸ்லாமை பின்பற்றுமா என்று சிந்தியுங்கள்

  181. இஸ்லாம் அமைதி மார்க்கமா? தாவா செய்பவர்களுக்கு சிறு விளக்கம் என்ற பெயரில் சகோதரர்களுக்கு சிலவற்றை விளக்க முயன்றுள்ளேன்.

    சகோதர்கள் (குஃப்பார் பேசும் செங்கொடி போன்றோர் படிக்க வேண்டாம்) படித்து உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாய் அழைக்கிறேன்.

  182. தோழரே செங்கொடி!
    கமல் சத்தியராஜ் போன்ற பிரபலமானவர்களும் நாத்திகம் பேசுகின்றனர். அதேவேளை இயங்கியல் பொருள் முதல்வாதம் பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. மூடநம்பிக்கைகளுக்குப் பேர் போன திரைப்படத்துறையில் கமல் தானொரு புதிய தேடல் தாகம் கொண்ட கலைஞனாகவே தன்னை வெளிப்படுத்தி வருகின்றார். அவருக்குக் கூட தான் பின்பற்றும் நாத்திகவாதத்துக்குள் ஒரு குறுகிய இலாப நோக்கு இருக்குமா? அப்படி ஒரு இலாப நோக்கு இருக்குமாயின்; அவர் தனது நண்பர் ரஜினியைப் போல ஆத்திகனாக இருந்து அதை மேலும் சுலபமாகவும் அபரிமிதமாகவும் பெற்றிருக்கலாமல்லவா? தயவு செய்து இந்த முரண்பாட்டை விளக்கவும்.

  183. நண்பர் ரஃபி,

    கமலும் சத்தியராஜும் ஒரேவகை நாத்திகம் பேசுவதில்லை. சத்யராஜ் பெரியாரிய நாத்திகம் என்றால் கமல் பார்ப்பனிய நாத்திகம். கமலின் தேடல் தாகம், அறிவிஜீவித்தனம் எல்லாம் துறைசார்ந்தது. தன்னுடைய தொழிலான திரைத்துறைக்கு அறிவியலை எப்படி பயன்படுத்திக் கொள்லலாம் என்பது தான் அவருடைய தாகம். அதை மக்களுக்காக எப்படி பயன்படுத்துவது எனும் எல்லையில் தான் இயங்கியல் பொருள்முதல் வாதம் எழும். மற்றப்படி நீங்கள் குறிப்பிடுவது போல் அங்கு முரண்பாடு எதுவும் இல்லை. நாத்திகராக இருப்பதும் ஆத்திகராக இருப்பதும் முரண்பாடான விசயங்கள் அல்ல, இரண்டுக்குமான அடிப்படை சுய சொரிதலாக இருக்கும் வரை. (தாமதத்திற்கு மன்னிக்கவும்)

  184. நண்பர் சர்ஃப்ராஸ்,

    அண்டம் படைக்கப்பட்டது என்பதே தவறான கருத்து. அண்டம் உருவானது. அது எப்படி என்றால், பெருவெடிப்பு என்றொரு நிகழ்விலிருந்து தான் காலமும், வெளியும் தோன்றியது என்பது அறிவியலின் பார்வை காலமும், வெளியும் அதனின் பருப்பொருட்களும் இணைந்தது தான் அண்டம். அந்த பெருவெடிப்புக்கு முன்னர், அதற்கான காரணி போன்றவற்றையெல்லாம் அறிவியல் இன்னும் தெளிவிக்க வில்லை.

  185. மூமீன்கள் தாவாப்பணி செய்ய சில எளிய வழிமுறைகள்
    இஸ்லாம் எளிய மார்க்கமா? அல்லது நின்றுகொண்டு தண்ணீர் குடித்தல்

    **********************************

    நண்பரே, கேள்வி பதில் பகுதியில் கேள்வியல்லாத வேறெதையும் பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

  186. செங்கொடி
    மன்னிக்கவும். மேலே உள்ள இடுகையை நீக்கிவிடவும்.
    நன்றி

  187. நண்பர் ரஃபி,

    உங்களுக்கு பதில் கூறிவிட்டேன் எனும் எண்ணத்திலேயே இருந்துவிட்டேன். நீங்கள் நினைவூட்டிய பிறகே பதில் கூறவில்லை என்பதை அறிந்தேன், தவறாக கொள்ள வேண்டாம்.

    மனிதன் ஒழுக்கமாக வாழ பாதகங்களைச் செய்யாமலிருக்க மதம் எனும் கண்காணிப்பு அவசியமா? நிச்சயமாக இல்லை என்பதே பதில். தவறு செய்வோர்கள், குற்றவாளிகள், சுயநலனுக்காக எதையும் செய்யத் துணிவோர், லஞ்ச லாவண்யங்களில் திளைப்போர் என அத்தனை பேரையும் கேட்டுப் பாருங்கள். ஏதோ ஒரு விதத்தில் அவர்களிடம் கடவுள் நம்பிக்கை இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கின்ற, கடவுள் தண்டிப்பார் என நம்புகின்ற மக்கள் எவ்வாறு குற்றங்களை செய்கின்றனர்? ஆழமாகப் பார்த்தால் குற்றம் என்பது சமூகத்தில் இருக்கிறது. ஒரு குற்றத்திற்கான சூழல் சமூகத்தில் இருத்தி வைக்கப் பட்டிருக்கும் போது கடவுள் நம்பிக்கையோ அல்லது கடவுள் தண்டிப்பார் எனும் பயமோ மனிதர்களை குற்றம் செய்வதிலிருந்து தடுத்து விடாது. சமூகத்திலிருந்து அத்தகைய சூழலை நீக்கி விட்டால் எந்தக் கடவுளின் தேவையுமின்றி குற்றம் நீங்கிவிடும். குறிப்பாகச் சொன்னால் மதங்களின் கடவுள்களின் இருப்பு இந்த இடத்திலேயே அவசியப் படுகிறது. சமூகத்தின் பொறுப்பை தனிமனிதர்கள் மீது சுமத்துகிறது. மனிதர்களின் வாழ்வும், தாழ்வும்; ஏற்றமும் வீழ்ச்சியும் தனித்தனியான மனிதர்களின் பாற்பட்ட ஒன்றாக காட்டுவதே தெளிவாகச் சொன்னால் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட கடவுளர்களின் திருவிளையாடல்களாக காட்டுவதன் மூலம் சமூகத்தில் நிகழும் அனைத்துவகை சுரண்டல்களையும் இது மறைக்கிறது. அந்த விதத்தில் குற்றங்கள் நிகழ்வதற்கே காரணமாகிறது.

    குற்றம் செய்யாதிருக்கும் மக்கள் கடவுளின் மீதான பயத்தினாலேயே அவ்வறு இருக்கிறார்கள் என்று. அதுவும் உண்மையல்ல. சட்டத்தின் மிதான பயத்தினால், சமூகத்தின் மீதான பயத்தினால், சமூகத்தின் இயல்பான நேர்மை அவர்கள் மீது செலுத்தும் தாக்கத்தினால் குற்றம் செய்யாமல் இருக்கிறார்கள். ஆக மனிதர்கள் குற்றம் செய்கிறார்களா? செய்யாமலிருக்கிறார்களா? என்பது சமூகத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் உறவைப் பொருத்ததே அன்றி, மதங்களின் கடிவாளத்தால் அல்ல.

  188. நீங்கள் சொல்வதெல்லாம் சரியாகத்தான் தெரிகிறது. ஆனால் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களே,அதுதான் சகிக்க முடியவில்லை.

  189. நண்பர் சந்திரன்,

    நாங்கள் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம் என்பது உண்மையல்ல. சில நிபந்தனைகளுடன் ஏற்கிறோம் என்பதே உண்மை. இடஒதுக்கீடு சமூகத்தில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும் என்பதைப் போல் விதந்தோதப்படுவதை புறந்தள்ளுகிறோம். அது ஒரு சீர்திருத்த நடவடிக்கை, அவ்வளவு தான். அதை ஆதரிப்பவர்களைப்போல் அட்டியின்றி ஆதரிப்பதில்லை. அதில் இருக்கும் பிரச்சனைகளை கேள்விகளாக எழுப்பியிருக்கிறோம். அவைகளை எதிர்கொள்ள‌த் திறனற்றவர்கள் நாங்கள் எதிர்ப்பதாக புற‌ம்பேசித் திரிகிறார்கள். இடஒதுக்கிட்டுக்கு தகுதியானவர்கள் யார்? என்பதை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பதே எங்கள் நிலை. இப்போது அதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் அதற்கு தகுதியில்லாதவர்கள். இது குறித்து விரிவாக பல கட்டுரைகள், வெளியீடுகள் வந்திருக்கின்றன. படித்துப்பாருங்கள்.

  190. மக்களின் உழைப்பே மிகச்சிறந்த மூலதனம். அப்படியிருக்கையில், ஒரு நாட்டின் எல்லைக்கு வெளியில் இருக்கும் இன்னொரு நாடு, அதன் பொருளாதார நிலையில் தலையிட்டு, அதை எப்படி சீர்குலைக்க முடியும் என்பதை எளிய உதாரணத்துடன் புரிய வையுங்களேன்.

  191. நண்பரே,

    சோசலிச சமுதாய அமைப்பில் உள்ள மிகப்பிரதான குறைபாடாகச் சொல்லப்படுவது தனிமனித சுதந்திரமின்மை. இது ஓரளவேனும் உண்மையா இல்லையா? சோவியத் ரஷ;யாவின் உடைவுக்கும் கியுபா சீனா பொன்ற நாடுகளில் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளுக்கு மக்கள் இடம்பெயரத் துடிப்பதற்கும் இதுவும் ஒரு காரணமா?

  192. Dear Sengodi!
    “ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் தினம் தினம் பட்டினிச்சாவுகள் நடந்துகொண்டிருக்கும் உலகில் குற்றவாளி ஒருவனை அவன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்று உணவு தந்து பாதுகாப்பது அந்த மக்களுக்குச் செய்யும் துரோகம்.”

    மிக்கச் சரியாகச் சொன்னீர்கள்! எனது கருத்தும் அதுவே! ஊக்குவித்தல்’ ‘தண்டனை’ என்ற இரண்டு கரணியங்கள் இல்லாமல் உலகை ஒருபோதும் நிர்வகிக்க இயலாதே! ஒரு சில கொடும் குற்றவாளிகளை (சுய நல காரணங்களுக்காக மனம் போன படி குழந்தைகளிடம் வயதானவர்களிடம் கொடுங்குற்றம் செய்பவர்களைக்) கூட தூக்கில் இடக் கூடாது என்பது வெறும் அபத்தம். தண்டனை என்ற பயமில்லாமல் ஒழுங்கை நிலை நாட்ட வாய்ப்பில்லை. ஒழுக்கமில்லாதவர்கள் தான் தண்டனை குறித்து அஞ்சவேண்டும். இதில் பகத் சிங் போன்ற ஏதோ தான் நம்பும் ஒரு தேசிய நலனுக்காக செயலாற்றுபவர்களை இங்கு நான் உட்படுத்தவில்லை. உங்கள் கட்டுரைகள் அருமை. தொடரட்டும் உங்கள் எழுத்துப் போர்!

    Mohan Balakrishna
    (yozenbalki)
    Senior Counseling psychologist
    http://www.yozenmind.com

  193. நண்பர் விபின்,

    மக்கள் உழைப்பின் ஒருபகுதி தான் மூலதனமாக மாறுகிறது. ஆனால் யாருக்கு? மக்கள் உழைப்பில் ஈடுசெய்யப்படாத ஒருபகுதி முதலாளிகளின் கைகளில் மூலதனமாக சேருகிறது. ஆனால் உங்கள் கேள்வியில் நீங்கள் கூறியிருக்கும் ’சிறந்த மூலதனம்’ என்பதை நீங்கள் இந்த பொருளில் ஆளவில்லை எனக் கருதுகிறேன். முதலாளித்துவம் முதலில் தேசிய முதலாளிகளை ஊக்குவித்து அவர்களை கொழுக்கச் செய்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் மேலும் கொழுப்பதற்கு நாடுகளின் எல்லை தடையாக மாறியது. எனவே உலக வர்த்தக கழகங்கள் போன்ற சர்வதேச அமைப்புகளை ஏற்படுத்தி ஒப்பந்தங்களின் மூலம் எல்லைக் கோடுகளை மறையச் செய்து விட்டார்கள். நாடு கடந்த வர்த்தகங்கள் அனைத்துமே சுரண்டலுக்கு சாதகமாக அந்தந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பன தாம். மட்டுமல்லாது பொருளாதார சீர்குலைவையும் தாண்டி கலாச்சாரம், பண்பாடு போன்றவைகளிலும் பாரிய மாற்றங்களைச் செய்கிறது.

    இந்தியாவில் லட்சக் கணக்கான சிறு வியாபாரிகள் இருக்கிறார்கள். இந்திய வேலை வாய்ப்பில் குறிப்பிடத்தக்க பங்கை சில்லரை வணிகர்கள் நிறைவேற்றுகின்றனர். ஆனால் வால் மார்ட் போன்ற பன்னாட்டு வர்த்தகக் கழகங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிறு நகரத்தில் மக்களின் தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி வந்த நூற்றுக் கணக்கான சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை ஓரிரு பெருவர்த்தக சில்லரைக் கடைகள் பறித்துக் கொண்டன. இது தனிப்பட்ட ஒரு நிகவல்ல. அரசின் ஒட்டுமொத்த கொள்கையின் ஒரு கண்ணி. விவசாயம், தொழிற் சட்டங்கள் என மக்கள் அவர்களுக்கு பழக்கப்பட்ட, வாழ்வளித்துக் கொண்டிருக்கும் தொழில்களிலிருந்து வெளித் தள்ளப்படுகிறார்கள். அதாவது பரந்துபட்ட அளவில் மக்கள் சார்ந்து இருந்த பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றும்போது அவர்களுக்கு மட்டுமே சாதகமானதாக ஒரு நாட்டின் பொருளாதாரம் மாறிப் போகிறது. இதை அரசே செய்வதால் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைவதாக புள்ளிவிபரங்கள் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிக் கொண்டிருக்கிறோம் என்று பெருமிதமாக அறிவித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஒரு நாளுக்கு 25 ரூபாய் இருந்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேலே இருப்பதாகவும் அறிவிக்கிறது. முரண்பாடான இந்த அறிவிப்புகள் தான் பொருளாதாரம் சீரழிக்கப் பட்டிருப்பதற்கான ஆதாரம்.

  194. நண்பர் ரஃபி

    நிச்சயமாக இல்லை. தனிமனித சுதந்திரம் என்றால் என்ன? காலையில் தூக்கத்திலிருந்து எழுவதில் தொடங்கி மறுநாள் எழுவது வரை சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் எந்த மனிதனும் எதையும் செய்துவிட முடியாது. சமூகத்தோடு பிரிக்கமுடியாதபடி பிணைந்திருக்கும் ஒரு தனி மனிதனுக்கு, தனிமனித சுதந்திரம் என்பது எதுவரை இருக்கமுடியும்? சமூகத்தை பாதிக்காத வரை தான் தனிமனித சுதந்திரம். சமூகத்தை பாதிக்காத எந்த ஒரு தனிமனித சுதந்திரமும் சோசலிச நாடுகளில் தடுக்கப்படவில்லை. அவ்வாறு கூறுபவர்கள் எதை தனி மனித சுதந்திரம் என்கிறார்கள்? எது தடை செய்யப்பட்டது? எப்போது தடை செய்யப்பட்டது? என்பனவற்றை சிந்தித்துப் பார்த்தால், தனிமனித சுதந்திரமின்மை என்று எதற்காக கூறுகிறார்கள் என்பது விளங்கும்.

    சரி, நடப்பு முதலாளித்துவ உலகில் தனிமனித சுதந்திரம் இருக்கிறதா? வணிக நலனுக்கு ஏற்றதாக இருப்பவைதான் தனிமனித சுதந்திரமாக அங்கீகரிக்கப்படும். அதற்கு எதிரானவைகள் மக்களின் அடிப்படி உரிமையாக இருந்தாலும் மறுக்கப்படும். ஆக எது தனி மனித சுதந்திரம் என்பதற்கு முதலாளித்துவச் சுரண்டல் தான் அளவுகோல். அதை மீறி எதுவும் தனிமனித சுதந்திரத்தில் சேராது. சோசலிச சமுகங்களில் இந்த அளவுகோல் மக்கள் நலனாக, சமூக நலனாக இருக்கும்.

    சோவியத் யூனியன் உடைவின் போதும், இப்போதைய சீனாவிலும் சோசலிசம் இல்லை. கியூபா சோசலிச பாதைக்கு வர முயன்று கொண்டிருக்கும் ஒரு நாடு. இந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் கம்யூனிஸ்டுகள் அல்லர். முதலாளித்துவத்தை ஆராதிக்கும், அது வழங்கும் சொகுசில் மோகம் கொள்ளும் மக்கள் அந்த நாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களுக்கு உகந்த நாட்டுக்கு செல்கிறார்கள். இருக்கும்வரை சமூக உழைப்பின் பலனை அனுபவித்துவிட்டு வாய்ப்பு கிடைத்தான் தன் சொந்த சொகுசுக்கு முன்னுரிமை கொடுத்து இடம்பெயர்பவர்களின் செயல் சாராம்சத்தில் தவறு. இதை சரியா தவறா என்ற கோணத்தில் தான் அணுக முடியுமேயன்றி அவதூறுகளுக்காக பயன்படுத்த முடியாது.

  195. தயவு செய்து இஸ்லாமிய ஹதீஸ்களில் உள்ள மூட நம்பிக்கைகளை பதிவு செய்யுங்க….

  196. நண்பரே

    தமிழ் மொழியில் அறிஞன், புலவன், தூதன், இறைவன் கவிஞன் (கவிதாயினி சரியா) போன்ற சொற்களுக்குரிய பெண்பாற் சொற்கள் இல்லாது அல்லது இன்னும் உருவாக்ககப்படாதிருப்பதற்குரிய காரணம் ஆணாதிக்க சமூகத்தின் விளைவான பெண்ணடிமைத்தனம்தானா? அல்லது வேறு காரணங்களும் உண்டா?

  197. நண்பர் ரஃபி,

    நடப்பு உலகம் ஆணாதிக்க உலகமாக இருக்கிறது என்பதில் ஐயமொன்றுமில்லை. இன்றைய நிலையில் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதற்கு ஆணாதிக்கம் தவிர்த்த காரணம் வெறொன்று இல்லை என்பதிலும் ஐயமொன்றுமில்லை. ஆனால் ஆணாதிக்கம் குறித்த விழிப்புணர்வு இன்றிருக்கும் அளவுக்கு முந்திய காலங்களில் இல்லை. விதிவிலக்குகள் சில இருந்தாலும், எல்லா துறைகளிலும் ஆண்களே கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில் நீங்கள் குறிப்பிடும் அறிஞன், புலவன், தூதன், இறைவன், கவிஞன்  போன்ற சொற்களெல்லாம் ஆண்களை மட்டுமே குறித்தன. ஏனென்றால் பெண்களின் பங்களிப்பு அப்போது இல்லை. பின்னாளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியதும் பெண்களைக் குறிக்க தனிச் சொற்கள் தேவைப்பட்டன. எனவே இது போன்ற சொற்களில் பால் சுட்டும் விகுதிகள் சேர்க்கப்பட்டன. மட்டுமல்லாது மரியாதைக் குறிக்கும் ‘ர்’ விகுதி தமிழில் பிற்காலத்தில் இணைக்கப்பட்டதே. தொன்னூறுகளின் முற்பகுதிகளில் அனள் எனும் விகுதியை சேர்த்து பயன்படுத்தும் முறை புழக்கத்தில் இருந்தது, அறிஞனள், புலவனள், கவிஞனள் போன்ற சொற்கள் பின்னர் வழக்கொழிந்தன.

    ஆனால் இது போன்ற சொற்களை பால்சுட்டும் விகுதிகளைச் சேர்த்து தனித்தனியாக பயன்படுத்துவதை விட ‘ர்’ விகுதி சேர்த்து பொதுச் சொல்லாக பயன்படுத்துவதே சரி என்பதே என்னுடைய கருத்து. பெண்கள் ஆணாதிக்கத்தை எதிர்த்து எழுதத் தொடங்கிய காலங்களில் பெண்களை சிறப்பித்துக் குறிக்க அந்த விகுதிகள் தேவைப்பட்டிருந்தன. ஆனால் அந்த விகுதிகளைக் கொண்டே பெண்களை தனியாக ஒதுக்க அந்தச் சொற்கள் பயன்பட்டுவிடக் கூடாது. ஆண்களால் மட்டுமே அந்த தகுதிகளுடன் (அறிஞனாக, கவிஞனாக) இருக்க முடியும் என்பது சற்றேறக்குறைய தகர்ந்துவிட்டது. ஆணாக பெண்ணாக இருந்தாக வேண்டிய இடங்களைத்தவிர ஏனைய இடங்களில் பால் வித்தியாசங்களை முனைந்து காட்ட வேண்டியதில்லை. இதன் பொருள் ஆணாதிக்கம் ஒழிந்து விட்டது, எனவே பெண்கள் தனிப்பெயர்களை விட்டுவிடவேண்டும் என்பதல்ல. தனிப்பெயர்களை விட பொதுப் பெயர்களை ஆணாதிக்கத்திற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பதே. நண்பர், தோழர் என்பன போன்ற சொற்களையும் பொதுச் சொற்களாக பயன்படுத்தலாம்.

  198. நண்பர் செங்கொடி,

    இன்றைய முதலாளித்துவ அரசும் சுரண்டல் சமூகமும் என்றாவது ஒருநாள் வீழ்ச்சியடையப்போவதும் அதன் பின்பு புதிய சமூக அமைப்பு ஒன்று மலரப்போவதும் உறுதி என்பதுதான் சோசலிசத்தை விரும்புபவரின் எதிர்பார்ப்பு. ஆனால் நாம் வெறுமனே இது நடக்கும் என்று பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பதால் துரிதமாக நடந்து விடப் போகின்றதா என்ன? அல்லது பேசாதிருப்பதால் தாமதிக்கத்தான் போகின்றதா…இந்த ரீதியில் சிந்தித்துப் பார்க்கும்போது ஏனோ சலிப்பு மேலிடுகின்றதே..?

    “ஒரு நல்லவனுக்கும் யோக்கியமானவனுக்கும் கிடைக்கின்ற எல்லா மரியாதையும் அயோக்கியனுக்கும் கிடைத்து விடுகின்றதே!” என்று மகாநதியில் ஒரு சராசரித் தகப்பனாய், மனிதனாய் கமலின் ஆதங்கம்தான் எங்களுக்கும் ஏற்படுகின்றது இது ஏன்?

  199. நண்பர் ரஃபி,

    எந்த ஒன்றையும் நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் அதற்கான விளைவும் அடங்கியிருக்கும். சரியான ஒன்றை அது சரியானது தான் என ஒப்புக் கொள்வதற்கும், அதை ஏற்றுக் கொள்வதற்கும் இடையே பாரிய‌ வித்தியாசம் உண்டு. முதலாளித்துவ கோரங்களை உணரும் யாரும், அது சுரண்டலினால் மக்களை எந்த எல்லைக்கு தள்ளியிருக்கிறது என்பதை சிந்திக்கும் யாரும், இதை தீர்க்கும் வழி என்ன? என்பதை ஆலோசிப்பது தான் அடுத்த கட்டமாக இருக்கும். ஆனால் அதில் எந்தவிதமான பங்களிப்பையும் செய்ய முன்வராமல், அதாவது தன்னுடைய சொகுசுகளை எதன்பொருட்டும் இழக்க விரும்பாமல் இருக்கும் போது தான் சலிப்பும், ஆயாசமும் தோன்றுகின்றன.

    பலவிதமான பொருட்களை பாவிப்பதும், உழைக்காமல் இருப்பதுமே மகிழ்ச்சி எனும் கசடுகளை கழித்து “மகிழ்ச்சி என்பது போராட்டம்” என்பதன் முழுமையான பொருளை உணரும் போது தான், சோசலிசம் என்பது திண்ணை நியாயமல்ல என்பது புரியும். உலகில் இதுவரையான இசங்கள் அனைத்தும் உலகை வியாக்கியானம் மட்டுமே செய்தன. ஆனால் தேவையோ உலகை தலைகீழாய் மாற்றியமைப்பது. இதுதான் கம்யூனிஸ்டுகளின் தலையாய பணி. பேசுவதோடும், எழுதுவதோடும் அவர்கள் முடங்கிவிடுவதில்லை.

    தனக்கு துன்பம் நேரும் போது நொந்து கொள்வதும், தத்துவம் பேசுவதும் தான் மகாந‌தி கிருஷ்ணசாமிகளின் வேலை. அது ஏன் நேருகிறது? அதிலிருந்து மக்களை மீட்பது எப்படி? என்று செயல்படத் தொடங்கும் போது நொந்து கொள்ளும் அவசியம் நேராது. மாறாக, அதுவே வேலை செய்வதற்கான உற்சாகத்தைத் தரும்.

  200. நண்பர் செங்கொடி,

    பார்ப்பனியம் அல்லது பிராமணியம் பற்றி நீங்கள் உங்கள் பதில்களில் குறிப்பிட்ட வண்ணமுள்ளீர்கள். அந்தச் சொல்லுக்குரிய அர்த்தம் தவிர -இலங்கையில் பிறந்து வளர்ந்தவன் என்பதாலோ என்னவோ- அதுபற்றி விரிவாகவோ முழுமையாகவோ எனக்குத் தெரியவில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். இதுபற்றி சுருக்கமாகவேனும் விளக்குவீர்களா?

    அதுமட்டுமன்றி ஒருவர் எவ்வளவுதான் அறிவாளியாகவும் மக்களுக்கு பயன்தருபவராகவுமிருந்தாலும் பார்ப்பானியச் சிந்தனை உள்ளவர் என்ற காரணத்துக்காக அவரை நிராகரிப்பது சரியாக இருக்குமா?

  201. நண்பர் ரஃபி,

    பாப்பான் என்பதும் பிராமணன் என்பதும் ஒரே பொருள் கொண்ட சொல்லாகவே வழமையில் கையாளப்படுகிறது. உடலின் வேறுபட்ட இடங்களிலிருந்து பிறந்ததாகவும், இழிபிறப்பாகவும் பகுத்து வைத்திருக்கும் மக்களில் தான் மட்டும் உயர்ந்தவன், ஏனைய அனைவரும் தமக்கு ஊழியம் செய்ய பிறப்பெடுத்தவர்கள் எனும் பொருளில் தங்களை பிராமணன் என அழைத்துக் கொள்கிறார்கள். இப்படியான சிந்தனை கொண்டவர்களின் அந்த சிந்தனைக்கு துணை செய்பவர்களின் பொதுப்பெயராக பாப்பான் என்பது இருக்கிறது.

    இந்து என்பது சாரம்சத்தில் ஒரு மதமல்ல. அடக்குமுறைச் சட்டங்களின் தொகுப்பு. தன்னுடைய மேலாதிக்கத்திற்கான அந்த சட்டத் தொகுப்பைக் கொண்டு சிந்தனையாலும் செயலாலும் மக்களை வதைப்பதே பார்ப்பனியம். இது பிராமணன் என தம்மை பெருமையாக அழைத்துக் கொள்ளும் ஒரு கும்பலை மட்டும் குறிப்பதல்ல. ஆனால் அவர்களை சிறப்பாக குறிக்கிறது என்பது வேறு விசயம். அதேநேரம் அங்கு பிறந்திருந்தாலும், அந்த நச்சுச் சிந்தனை தவறு என்று தூக்கி எரிந்தவர்களை பாப்பானாக சுட்டப்படவேண்டிய அவசியமில்லை. அடிப்படயில் பிராமணன் என அழைப்பதே தவறானது. ஏனென்றால் அந்தப் பெயர், அந்த பகுப்பை ஏற்றுக் கொண்டதான ஓர் ஒப்புதல் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. எனவே நாங்கள் பிராமணன் எனும் சொல்லைப் பயன்படுத்துவதில்லை.

    ஒருவர் அறிவாளியாக இருக்கிறாரா என்பதை விட மக்களுக்கு எந்த அளவுக்கு பயன்படக்கூடியவராக இருக்கிறார் என்பதே அவரை அளக்கும் அளவுகோலாக இருக்க வேண்டும். பார்பனியச் சிந்தனை கொண்ட யாரும் மக்களுக்கு பயன்படுபவராக, சமூக உயர்வைச் சிந்திப்பவராக இருக்க முடியாது. ஆனால் அப்படி இருப்பதாக தோற்றம் காட்டலாம்.

    சிறுபான்மை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அப்துல் கலாமை நாங்கள் பார்ப்பனியவாதியாக அழைக்கிறோம். அவர் அறிவியலாளர் தான். கனவு காணுங்கள் என்று ஊரெங்கும் பேசி, இந்திய இளைஞர்களின் உயர்மாதிரியாக தூக்கிப் பிடிக்கப்படுபவர்தான். குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள மயிலுக்கு அடிபட்டபோது, அதற்கு மருத்துவம் செய்து அழைத்து வரும் வரையில் உண்ணமாட்டேன் என அடம்பிடித்த அப்துல் கலாம், தன்னுடைய காலத்தில் நடைபெற்ற குஜராத் படுகொலைகளைப் பற்றி இன்றுவரை மூச்சு விடவில்லை. எதைக் கொண்டு இவரை மதிப்பிடுவது?

  202. இஸ்லாமியர்கள் இஸ்லாமியன் என்ற அடையாளத்தை இழந்து அடுத்த மதத்தவர் என்றாலும் அவர்களுடன் வர்க்க ரீதியாக ஒன்றிணைய அழைப்பு விடுப்பது எனக்கு புரிகிறது….இந்துத்வா சக்திகள் இணைய விட மாட்டார்களே……அந்த நிலையை எப்படி அடைவது?

  203. நண்பர் செந்தமிழ் செல்வன்,

    இந்துத்துவா சக்திகள் மட்டுமல்ல, இஸ்லாமிய மதவாதிகள் மட்டுமல்ல, முதலாளித்துவ சக்திகளும் மக்கள் வர்க்க அடிப்படையில் இணைவதை விரும்புவதில்லை. மக்கள் வர்க்க அடிப்படையில் இணையத் தொடங்கிவிட்டால் உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் அனைத்து அமைப்புகளும் இற்று வீழ்ந்துவிடும். மதங்கள் உட்பட அனைத்து சுரண்டல் அமைப்புகளும் மக்களை பிரித்து வைத்திருப்பதன் மூலமே தங்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்கின்றன. எனவே தான் எல்லா விதங்களிலும் வர்க்க ரீதியான இணைவை தடுக்கின்றன, தடுக்க முயல்கின்றன. ஆனால் மக்களின் சமத்துவமான வாழ்விற்கு வர்க்க அடிப்படையிலான ஒன்றிணைவைத் தவிர வேறு வழியில்லை.

    இந்த நிலையை எப்படி அடைவது? அரசியல் சமூக விழிப்புணர்வின் மூலமே இதை அடைய முடியும். மதங்களும் சுரண்டல் அமைப்புகளும் மக்களின் சிந்தனைக்கான அனைத்து வழிகளையும் ஆக்கிரமித்திருப்பதால் அதிக பொறுப்பும், உழைப்பும் தேவைப்படும் பணியாக இது இருக்கிறது. கண்மூடித்தனமாக மதங்களைப் பின்பற்றுவது, சமூகப் பின்புலங்களை உணராமல் மதங்களை வெற்றாக எதிர்ப்பது இந்த இரண்டையும் விலக்கி ஒவ்வொரு வினையின் புன்புலத்திலும் தொழிற்படும் வர்க்க காரணங்களை தேட முற்படும்போது மட்டுமே சரியான விழிப்புணர்வினை பெறமுடியும். இந்த விழிப்புணர்வை இலக்காகக் கொண்டே நாங்கள் செயல்படுகிறோம். அதை பெற முயல்பவர்களை ஒன்றிணைக்க முற்படுகிறோம். இந்த வழியில்தான் வர்க்க ஒற்றுமையை அடைய முடியும்.

  204. (முந்தைய கேள்விகள் வரை, பதிலளித்தமைக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்)

    மக்களை வர்க்கமாக ஒருங்கிணைப்பதில் அவர்களிடையே உள்ள மொழிகள் எந்த அளவு தடையாக அமைந்திருக்கின்றன?
    அனைத்து மக்களும் ஒரே மொழியைப் பயன்படுத்தினால், அது புரட்சிக்கு எந்த அளவு வரை உதவ முடியும்?

  205. தோழரே,

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்துக்குகளுக்கு மட்டும் வருமான வரி விளக்கு குறிப்பிட்ட அளவு அளிக்கபடுகிறதாமே?அது ஏன்?அதாவது முஸ்லிம்களுக்கு திருமணம்,ஜீவனாம்சம் வழங்குவது போன்றவற்றில் வழங்கப்படும் சலுகைகளை போல…

  206. நண்பர் விபின்,

    இந்தியா போன்ற பல்தேசிய நாடுகளில் வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்கு மொழி தடைபோல தோற்றமளிக்கிறது. என்றாலும், பாரிய அளவில் தடையாக இருப்பதில்லை. ஒற்றைத் தேசிய நாடுகளையும் பல்தேசிய நாடுகளையும் ஒப்பிட்டு நாடு முழுவதும் ஒத்த கருத்தை உருவாக்குவதில் ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக் காட்டி இதை முன்வைக்கிறார்கள். ஆனால் தேவையின் அழுத்தம் இருந்தால் எந்த மொழியையும் மனிதன் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக வடகிழக்கு இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் பரவலில் பெரும் பங்களிப்பை செய்திருப்பது ஆந்திரத்தின் மக்கள் யுத்தக் குழுவினர் தான். நிதிமூலதனங்களின் சுரண்டல் தன்மை சாரம்சத்தில் எல்லா இடங்களிலும் பொதுவாக இருப்பதால் மொழி உள்ளிட்ட வேறுபாடுகள் பெரும் பொருட்டல்ல. வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்காக போராடுபவர்கள் யதார்த்தத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவற்றில் மொழியும் குறிப்பிடத்தக்க ஒன்று, அவ்வளவு தான்.

    அனைத்துமக்களும் ஒரே மொழியைப் பயன்படுத்துவது சாத்தியமும் அல்ல, சரியானதும் அல்ல. கல்வி உள்ளிட்டு அனைத்தும் அவரவர் தாய் மொழியிலேயே இருப்பதுதான் மக்களின் வளர்ச்சிக்கு உகந்தது. ஒரு பல்தேசிய நாட்டில் சரியான வளற்சியற்ற மொழியை ஏனைய மொழிகளின் உயரத்திற்கு வளர்த்தெடுப்பது ஒரு சோசலிச அரசின் கடமைகளில் உள்ளதாகும்.

  207. நண்பர் செந்தமிழ்ச் செல்வன்,

    சிறுபான்மை மதப் பிரிவுகளுக்கு நீங்கள் குறிப்பிடுவது போல் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. சீக்கியர்களுக்கு குறுவாள் வைத்திருக்கும் அனுமதி போன்று மதச் சடங்குகளுக்கு இசைவாக அந்த சலுகைகள் இருக்கும். அதாவது இந்திய குற்றவியல், குடும்பவியல் சட்டங்கள் குறிப்பிட்ட மதப்பிரிவினரின் மரபுகளுக்கு எதிராக இருக்கும் போது அதை ஒரு சலுகையாக அந்த மதத்தினருக்கு அளித்திருக்கிறார்கள். ஆனால் இது பொருளியல் நோக்கில் இருக்க முடியாது. வருமானவரிச் சலுகைகள் என்று இந்து மதத்தினருக்கு இருப்பதாக தெரியவில்லை. அதேநேரம் இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருப்பதால், நீதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் பார்ப்பன மயமாக இருப்பதால் அலுவலுக்கு அப்பாற்பட்டு பல வாய்ப்புகளை அவர்கள் பெற்று வருகிறார்கள்.

    ஆனால், வருமான வரி உள்ளிட்ட பொருளாதார ரீதியான பல சலுகைகள் மதம் கடந்து முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் இந்திய அரசு முதலாளிகளுக்கு நிதிநிலை அறிக்கைகளில் அறிவித்துக் கொடுத்த சலுகைகள் மட்டுமே ஐந்து லட்சம் கோடிக்கு மேல். வெளிப்படையாக அறிவிக்காமல் கொடுக்கப்படுவதை கணக்கிடவே முடியாது. முக்கியமாக மக்கள் கவனிக்க வேண்டியதும் போராட வேண்டியதும் இதற்கு எதிராகத்தான். மாறாக மக்களின் கவனம் பிசாத்து மதச் சலுகைகளில் குவிக்கப்படுகிறது. இதுவும் ஒருவகையில் பொருளாதார சலுகைகள் வழங்கப்படுவதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் உத்தி தான்.

  208. தோழரே,

    கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் அமர்ந்தால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி இருக்காது என்று என் நண்பன் கூறுகிறான் அது மட்டுமில்லாமல் அதுதான் பொதுவான எண்ணமாக மக்களிடையே இருக்கிறது.இதற்கு காரணம் கம்யுனிச கொள்கைகளைப் பற்றிப் புரிதல் இல்லாததா?இல்லை ஓரளவு உண்மை இருக்கிறதா?

  209. நண்பர் செந்தமிழ்ச் செல்வன்,

    மக்களிடையே கம்யூனிசம் குறித்த எதிர்மறையான எண்ணங்களும் அவதூறுகளும் விரவிக் கிடக்கின்றன. எல்லாவிதமான செய்தி ஊடகங்களும் முதலாளித்துவ சிந்தனையாளர்களிடம் சிக்கியிருப்பதன் விளைவு இது. மட்டுமல்லாது, ஒருவிதத்தில் கம்யூனிசம் குறித்து அந்த சிந்தனையாளர்கள் எந்த அளவுக்கு பயந்து கிடக்கிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது. கம்யூனிச நாடு என்றாலே ரஷ்யாவையும் சீனாவையும் தான் எடுத்துக் காட்டுவார்கள். இப்போது அவை சோசலிச நாடுகளாக இல்லையென்றாலும் சோசலிசம் வருவதற்கு முன் அந்த நாடுகளின் பொருளாதாரம் எப்படி இருந்தது? சோசலிசத்திற்குப் பிறகு அந்த நாடுகளின் பொருளாதாரம் எப்படி மாறியது? என்பதை கவனித்துப் பார்த்தாலே போதும். உங்கள் நண்பரின் கூற்று எந்த அளவுக்கு பொய்யானது என்பது விளங்கும்.

  210. தோழரே,

    1.”ஒரு ஆண் உறவுக்கு அழைத்து என்ன காரணமிருந்தாலும் மனைவியானவள் மறுத்தால் அவள் விடியும்வரை கடவுளின் உதவியாளர்களால் சபிக்கப்படுகிறாள்”

    2.”பிணக்கு வந்து பிரியும் நிலை வந்தால் குழந்தைகள் மீது பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை, பால் கொடுப்பதற்குக்கூட விலை கொடுக்க வேண்டும்”

    இவ்வாறு நல்லூர் முழக்கம் தளத்தில் மேற்கோள் காட்டியுள்ள நீங்கள் ஹதீத் எண்ணை கூறவும்….

  211. நண்பர் செந்தமிழ்ச் செல்வன்,

    நீங்கள் குறிப்பிட்டிருப்பதில் முதலாவது கருத்து புஹாரியில் ஹதீஸ் எண் 3237 ல் இருக்கிறது. இரண்டாவது குரானில் தலாக் எனும் 65 வது அத்தியாயத்தில் ஆறாவது வசனமாக இருக்கிறது.

  212. 1.http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/neerukul_pirasavam/

    2.http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/314/

    இந்த லிங்கில் நகைக்ககூடிய அளவில் விளக்கம் கொடுத்துள்ளார் திரு பி ஜே அவர்கள்.அதிலும் கரு வளர்ச்சி குறித்து நீங்கள் கூறியவற்றுக்கு நேர் எதிராக விளக்கம் கொடுத்துள்ளதால் நீங்கள் பி ஜே-வின் முரண்பாட்டை விளக்குவது அவரின் உண்மை முகத்தை முஸ்லிம்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு நல்ல வாய்ப்பென்றும் நான் கருதுகிறேன்…

  213. இந்திய விடுதலைப்போரில் முஸ்லிம்களின் நோக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கபட்டதா?இல்லை சுதந்திரம் ஒன்றே குறிக்கோள் என்று துவங்கியதா?இந்திய விடுதலைப்போரில் முஸ்லிம்களின் பங்கு பற்றி ஏதேனும் புத்தங்கங்கள் இருந்தால் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும்.நன்றி

  214. நண்பர் செந்தமிழ்ச் செல்வன்,

    மதவாதிகள் அப்படித்தான் விளக்கமளிப்பார்கள். முடிந்தால் சிரியுங்கள். அவ்வளவுதான்.

    இந்திய விடுதலைப்போரில் முஸ்லீம்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவே செய்தது. இது குறித்து அனேக நூல்கள் கிடைக்கின்றன. நானும் ஓரிரு நூல்களை படித்திருக்கிறேன். ஆனால் எதுவும் இருப்பில் இல்லை. கிடைத்தால் அனுப்புகிறேன்.

    விடுதலைப்போரில் பங்களிப்புச் செய்த முஸ்லீம்களிடம் விடுதலையே முதன்மையானதாக இருந்தது. ஆனால் ஜின்னா தலிமையிலான முஸ்லீம் லீக் பிரிவினையை நோக்கமாக கொண்டிருந்தது. ஆனாலும் பிரிவினைக் கோரிக்கை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதல்ல. இன்றைய ஆர்.எஸ்.எஸ் ன் தொடக்கமான சித்பவன பார்ப்பனர்களின் கோரிக்கையாகவே பிரிவினை இருந்தது. காங்கிரஸின் பாராமுகத்தால் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லீம் லீக், முதலில் சமஸ்டி கோரிக்கையைத்தான் வைத்தது. அது நிராகரிக்கப்பட்டதால் தான் பாகிஸ்தான் கோரிக்கையை முக்கியமான நிபந்தனையாக ஜின்னா முன்மொழிந்தார்.

  215. வணக்கம் தோழர்,
    எண்ண அலைகள்(Thought Waves) என்கிறார்களே, அது உண்மையா?

  216. ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சியில் திரைப்பட விமர்சகர் திரு மதன் அவர்கள் ஆவிகள் அல்லது பேய்கள் நான்கு வகைப்படும் என்றும் அவை அறிவியல் படி நிருபிக்கப்படுள்ளன என்றும் கூறுகிறார்..paranormal activity part-3 என்ற சினிமா விமர்சனத்தின் போது இக்கருத்தை கூறினார்.அந்த சினிமாவில் காண்பிக்ககூடிய ஆவிகள் போன்று இருப்பது நடைமுறையில் இருப்பது சாத்தியம் என்கிறார்.அந்த சினிமாவை விட்டுத்தள்ளுங்கள் இந்த விஞ்ஞான நவீன உலகிலும் இது போன்ற நம்பிக்கைகளும் அறிவியற்ப்பூர்வமாக நிருபிக்கப்படுள்ளன என்ற வாதமும் எந்த அளவிற்கு உண்மை..

  217. வணக்கம் தோழர் ஸ்பார்டகஸ்,

    எண்ண அலைகள் இருக்கிறதா என்றால், என்ன பொருளில்? எண்ணங்கள் அலையலையாய் தோன்றுகின்றன. எந்த எண்ணமும் இல்லாமல் ’வெற்றாய்’ இருப்பது கடினமானது. எண்ண அலைகள் என்பது எண்ணத்தின் தன்மை எனும் பொருளில் என்றால் ஆம் எண்ண அலைகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு அப்பாற்பட்டு கொடுக்கப்படும் விளக்கங்களின் படியான எண்ண அலைகள் என்றால் இல்லை.

    பொதுவாக நடைமுறைப் பேச்சில் குறிப்பிட்ட இருவருக்கு ஒரே அலைவரிசை இருப்பதாக பேசிக் கொள்வார்கள். அது ஒத்த கற்பனை, ஒத்த சிந்தனை தனிப்பட்ட இருவருக்கு ஒரே நேரத்தில் தோன்றுவதை குறிக்கும். அல்லது ஒரே விதமான விருப்பம், ஆசைகள், இலக்குகள் இருப்பதை குறிக்கும். இதை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி ஒரே விதமான சிந்தனைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியுமா? என்று யோசித்து இன்று கருத்து முதல் வாதத்தில் ஊடுருவி நிற்கிறார்கள். அதாவது ஒவ்வொரு விதமான சிந்தனைகளுக்கும் ஒருவித அலைவரிசை இருக்கிறது. அந்த அலைவரிசை பொருளை(மனிதனை) விட்டு கடந்து வெளியில் பயணிக்கிறது. பலகோடி மனிதர்கள், பலகோடி விதமான சிந்தனைகள் பூமி முழுதும் விரவிப் பரவுகிறது. இதில் நல்ல சிந்தனைகளின் அலைவரிசைகளின் எல்லைக்குள்ளே நாம் இருந்தால் நமக்கு கெட்ட சிந்தனைகள் தோன்றாது என்று ஜல்லியடிக்கிறார்கள். இதைத்தான் நீங்கள் எண்ண அலைகள் என குறிப்பிடுகிறீர்கள் என எண்ணுகிறேன்.

    முதலில், எண்ணம் என்றால் என்ன?மூளை என்னும் பொருள் தனக்கு கிடைத்த அனுபவங்களைத் தொகுத்து நடப்பு தேவைகளைப் பொருத்து,இருக்கும் வாய்ப்புகளின்படி ஒரு முடிவை வந்தடைகிறது. இதைத்தான் எண்ணம், சிந்தனை என்கிறோம். இந்த எண்ணம், சிந்தனை அந்தந்த மனிதர்களுக்கு மட்டுமேயானது. இது ஒரு மனிதனை விட்டு இன்னொரு மனிதனுக்கு தெரிய வேண்டுமென்றால், அதற்கு ஏதவது ஒரு ஊடகம் வேண்டும். மொழி முதன்மையான ஊடகம். எந்த ஊடகமும் இல்லாமல் சிந்தனை ஒரு மூளையிலிருந்து இன்னொரு மூளைக்கு பரவாது, பரவமுடியாது. அடுத்ததாக, சிந்தனை என்பது மூளையின் இருமடி (பைனரி) முறையிலான ஓர் இயங்கியல் செயல்பாடு. இந்த செயல் இன்னொரு மூளைக்குள் நுழைய வேண்டுமென்றால் அது அந்த மூளையின் அனுபவத்தின் வழியாகவே முடியும், வேறு வழியில்லை. அடுத்து, ஒரு சிந்தனை நல்ல சிந்தனையா? கெட்ட சிந்தனையா? என்பதெல்லாம் மூளைக்கு தெரியாது. சரியான சிந்தனை என்பது அந்த சிந்தனை சமூகத்தில் மக்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பொருத்தது. ஆனால் மூளையில் ஒரு சிந்தனை தோன்றிய கணத்திலேயே நல்ல சிந்தனைகளுக்கு ஒரு விதத்திலும் கெட்ட சிந்தனைகளுக்கு வேறு விதத்திலும் அலைவரிசையை ஒளிபரப்புகிறது என்றும், அது மனிதனைக் கடந்து வெளியில் பரவுகிறது என்றும் கற்பனை செய்வது உள்நோக்கம் கொண்டது.

    மனிதனை நானே செயல்படுத்த தூண்டுகிறேன், ஆவதும் அழிவதும் என்னாலே என்னும் கடவுட் கோட்பாட்டைக் கொண்ட மதங்கள் படிப்படியாக செயலிழந்து வருகின்றன. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக அறிவியல் ஆடை அணிந்து வரும் பரப்புரை உத்தி தான் எண்ண அலைகள். இதனை ஒருமுகப்படுத்திப் பார்த்தால், ஒரு மனிதன் நல்ல சிந்தனைகளை செய்தால் அது அலைவரிசைகளாக பரவி பிறருக்கும் பரவி நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சரியான எண்ண அலைகளை தேடிப்பிடித்து அந்த எல்லைக்குள் இருப்பது போல் பார்த்துக் கொண்டால் போதும், நீங்கள் படிப்படியாக நல்லவனாகிவிடலாம். ஆனால் இயங்கியலின்படி இது அபத்தம். ஏனென்றால் சிந்தனை என்பதே மனிதன் சமூகமாக இருப்பதன் விளைவு. ஆனால் இதையே வேறொரு விதத்தில்முதலாளித்துவ வாதிகள் செயல்படுத்தி வருகிறார்கள். கலை, பொழுது போக்கு, நாகரீகம், முன்னேற்றம், இலக்கியம் போன்றவற்றைப் பயன்படுத்தி நுகர்வுக் கலாச்சாரமே சரி எனும் எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

    அதேநேரம் டெலிபதி, ப்ரீகாஷன் போன்றவைகள் இதனுடன் சேர்க்க இயலாதவை. உலகில் எவ்வளவோ செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மனிதன் ஒவ்வொரு கணமும் சிந்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. தற்செயல் வாய்ப்பாக ஒரு மனிதனின் சிந்தனையும் அந்த மனிதனுக்கு அருகில் நிகழும் ஒரு செயலும் ஒரே மாதிரியாக இருந்துவிடும் வாய்ப்பு எற்படுவதுண்டு. அந்த ஒற்றுமை அந்த மனிதனுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டால், அது நீண்ட காலம் மனிதனின் ஞாபகத்தில் தங்கிவிடுகிறது. இது தான் டெலிபதி, ப்ரீகாஷன் போன்றவை.இவைகளும் கூட சமூக வயப்படலுக்கு வெளியே நீட்டித்துவிடுவது ஆபத்தானதே.

  218. நண்பர் செந்தமிழ்ச் செல்வன்,

    நீங்கள் குறிப்பிடும் திரைப்படத்தையோ, அதன் விமர்சனத்தையோ காணவில்லை. எனவே குறிப்பாக அது குறித்து தெரியவில்லை. ஆனால் பேய், பிசாசுகள் இருப்பது சாத்தியமில்லாதவை, அறிவியல் ரீதியாகவும் கூட. மனிதன் என்பது மூளை எனும் பொருளின் அனுபவத்தொகுப்பின் வழிகாட்டலின் ஊடாக உடலுறுப்புகளின் இயக்கங்களின் வழியே சாத்தியப்படும் ஒன்று. ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட குறைந்த காலத்தில் முடிந்து விடுபவனா மனிதன் என்பது தொடக்கத்திலிருந்தே மனிதனை காயப்படுத்தி வருகிறது. அதன் விளைவுகள் தான் கடவுள், மதம் முதலான பயங்காட்டல்களும்; பேய,பிசாசு முதலான பயங்களும்.ஒரு மனிதன் இறந்துவிட்டானென்றால், அவன் மூளை மீள முடியாமல் செயலிழந்து விடுகிறது. உடலுறுப்புகளோ புதைப்பதன் மூலமோ, எரிப்பதன் மூலமோ, வேறு வழிகளின் மூலமோ சீர்குலைந்து ஆற்றல் மாற்றம் நடைபெற்று விடுகிறது. இதன்பிறகு இவைகள் ஒன்று கூடி செயல்படுவதற்கு எந்த வடிவிலும் சாத்தியமில்லை.

  219. நண்பர் சாகித் எழுதிய “அடிமை இது அல்லாஹ்வின் ஆணை” என்ற தொடரின் இரண்டு பதிப்புகளையும் படிக்க ஆவலாக உள்ளேன்.அந்த பதிப்புகளை எங்கே வாங்குவது என்பது குறித்த தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்

  220. நண்பர் செந்தமிழ்ச் செல்வன்,

    கீழ்காணும் முகவரியில் கிடைக்கும்

    பறையோசை பதிப்பகம்
    1/171,கடைவீதி,
    பி. அழகாபுரி,
    கீழச் செவல் பட்டி – 630205
    சிவகங்கை மாவட்டம்

    அல்லது இந்த மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

    paraiyoasai@gmail.com

  221. நண்பர் செங்கொடி,

    கடாபியின் நிலை பற்றி உங்களது பார்வை என்ன?

  222. //சித்தார்த்தனின் அன்னையின் பெயர் மாயா தேவி, ஏசுவின் அன்னை மேரி. இருவருமே ஆண் துணையின்றி குழந்தையை ஈன்றனர். என்று கூறியுள்ளீர்கள்..//

    புத்தரின் தந்தை சுத்தோதனன் அல்லவா?

  223. நண்பர் ரஃபி,

    தற்கொலை செய்து கொள்வது அல்லது கோரமாக கொலை செய்யப்படுவது இதுதான் உலகின் பல சர்வாதிகாரிகளுக்கு, கொடுங்கோலர்களுக்கு நடந்திருக்கிறது. கடாஃபி இதில் விலக்கானவர் இல்லை. ஆனால் அவரைக் கொன்றவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதில் பிரச்சனை இருக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளாக லிபியாவை சர்வாதிகாரமாக அடக்குமுறை ஆட்சி புரிந்ததற்காக அவர் கொல்லப்படவில்லை. தொடக்கத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை லிபியாவில் எடுத்த போதிலும் கடைசியில் ஏகதிபத்திய ஆதரவு நிலையெடுத்து சலுகைகளை வழங்கினார். ஆனாலும் அவை ஏகாதிபத்தியங்களுக்கு போதுமானதாக இல்லை. லிபியாவின் வளங்களை யார் கொள்ளையடிப்பது? கடாஃபி குடும்பமா?, பன்னாட்டு நிறுவனங்களா? எனும் போட்டியில் பன்னாட்டு நிறுவனங்கள் வென்றிருக்கின்றன.

  224. நண்பர் செந்தமிழ்ச் செல்வன்,

    புத்தருக்கு பெற்றோர்கள் இருந்தனர். ஆனால் மாயாதேவி ஆணின் துணையின்றியே சித்தார்த்தனை ஈன்றதாகவே பௌத்த நூல்கள் கூறுகின்றன.

  225. வணக்கம் தோழர்,
    “மக்களை சுரண்டும் முதலாளித்துவம் தன்னை தானே அம்பலபடுத்திகொண்டு கம்மியுநிசத்தை நோக்கி நகரும்” என்பதை வரலாற்றின் அடிப்படையில் எளிய உதாரணங்களின் மூலமாக விளக்கவும்.

  226. வணக்கம் மது,

    நான்காவது (தோழர் ஸ்பார்டகஸ் – தனக்கான சவக்ககுழியை தானே தோண்டிக் கொள்ளும் முதலாளித்துவம்) கேள்விக்கான பதிலை பாருங்கள்.

  227. தோழரே ,
    இஸ்லாமிய ஷரியா சட்டப்படி,ஒரு சுதந்திரமானவன் இன்னொரு சுதந்திரமானவனின் அடிமையை கொன்று விட்டால் அவனுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்.

  228. நண்பர் செந்தமிழ்ச் செல்வன்,

    எத்தனையோ இஸ்லாமிய தளங்கள் இருக்கும் போது இந்தக் கேள்வியை இங்கு கேட்கிறீர்களே, கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்.

    இதில் உங்களுக்கு இரண்டு வாய்ப்பு இருக்கிறது. உங்களுடைய அடிமையை யாரும் கொன்றுவிட்டால் அவருடைய அடிமையை நீங்கள் கொன்று விடுங்கள். இது 2:178ன் படி.

    கொல்லப்பட்டவரும் கொன்றவரும் முஸ்லீமாக இருந்தால் ஒரு அடிமையை விடுதலை செய்து கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு நட்ட ஈடும் கொடுக்க வேண்டும். கொல்லப்பட்டவர் முஸ்லீமாக இல்லையென்றால் அடிமையை விடுதலை செய்தால் மட்டும் போதுமானது. இது 4:92ன் படி.

    இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்பது, உங்களுக்கு விளக்கம் சொல்லும் திறமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொருத்தது.

  229. முஹம்மது நபியை கல்கி அவதாரம் என்றும் அவர் பற்றிய முன்னறிவிப்புகள் பகவத் கீதையில் உள்ளது என்றும் கல்கியின் தாய் தந்தை பெயர்கள் கூட நபியின் தாய் தந்தை பெயர்களோடு ஒத்துள்ளது என்றும் திரு சாகிர் நாயக் அவர்கள் கூறுவது எந்த அளவுக்கு உண்மை….

  230. நண்பர்,எத்தனையோ ஹிந்த் தளங்கள் இருக்கும்போது ,இந்த்த கேள்வியை இங்கு கேகிரீர்கள் ,கோபித்துக் கொள்ளப்போகிறார்கள்
    எல்லாம் செட்டப் கேள்விகள் ,பதில்கள்

  231. நண்பர் செந்தமிழ்ச் செல்வன்,

    வைத் பிரகாஷ் என்பவர் வங்கத்தில் எழுதிய “பிரபஞ்ச இறுதித்தூதின் வழிகாட்டி” எனும் நூலில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அதன் பிறகு எல்லா இஸ்லாமிய பரப்புரையாளர்களும் இதைப் பற்றி விதந்து கூறிவிட்டார்கள். ஜாகிர் நாயக் மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா?

    இது போன்றவைகளெல்லாம் நல்ல ஜோக்காக எடுத்துக் கொள்ளுங்கள். சீரியஸாக எடுத்துக் கொண்டால் குழப்பம் தான் மிஞ்சும்.

  232. Nee unmaiyalaraga irrunthal vevathathu ku redy ya nenjil thuniu irrunthal tntj jamathudan neruku ner vevathathu ku. va athai vettu vettu kozaithanama quran patari poi karuthukalai sollathay.

    nee vevathathu ku redy ya illa kozaiya. kozai na odi po. nenjil thunivu irruntal vevathathu ku va http://www.onlinepj.com yedru netil potu. first page last la saval vettuirrukom athulla poi un contact ah koduthu vevathathu ku va. parkalam

  233. Thanks Abdullah! You are really helping us indirectly.
    Yes, we can understand how Senkodi does his writings correctly & genuinely through the angrer of people like you.
    Don’t be foolish to call him for a debate. First of all keep your bloody mind flexible to access different opinions. Then try to throw mud other people. Be honest & mind your words! Ok?

  234. விவாதத்தில் புதிதாக என்ன உளறப் போகிறார்கள்? அதுதான் ஏற்கெனவே அவர்களின் முன்னோர்கள் உளறி வைத்திருக்கிறார்களே! அதைத்தானே செங்கொடி இங்கே பிய்த்துக் கொண்டிருக்கிறார்.

    ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. கோழையா கோழையா என்று கொக்கரிக்கும் இந்தக் கோழைகளின் தூக்கத்தைத்தான் இந்தத் தளம் கெடுத்துக் கொண்டிருக்கிறது.

  235. வணக்கம் தோழர்,
    “வை திஸ் கொலைவெறி” பாடலின் வெற்றி சமூகத்தின் மனநிலை குறித்து எதை நமக்கு உணர்த்துகிறது?

  236. வணக்கம் தோழர் ஸ்பார்டகஸ்,

    சமூகத்தின் மனநிலையை பார்ப்பதற்கு ‘வொய் திஸ் கொலவெறி’ பாடல் ஒரு குறியீடா? இந்தப் பாடல் பெற்ற வரவேற்புக்கு தனிப்பட்ட சமூகத் தாக்கங்கள் ஏதும் இருக்கின்றனவா? இல்லை. புதிதாக வெளியாகும் பாடல்களில் ஒன்றிரண்டு அதிக வரவேற்பை பெறுவது வழக்கமானது தான். சோனி நிறுவனத்தில் பங்களிப்பும் விளம்பரமும் இந்தப் பாடலின் ரசிகப் பரப்பை சற்று விரிவடைய வைத்திருக்கிறது. எகிப்தில் கூட இந்தப் பாடல் ரசிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. நாடு கடந்து, மொழி கடந்து ரசிக்கப்படும் அளவிற்கு இந்தப் பாடலில் என்ன உள்ளடக்கம் இருக்கிறது? மக்கள் கலை வடிவத்தை விட்டுவிடலாம், முதலாளித்துவ விழுமியங்களாவது வடிவ நேர்த்தியுடன் வெளிப்பட்டிருக்கிறதா? என்றால், யூடியூபில் பல கோடி ஹிட்டுகள், நாடு கடந்த வரவேற்பு என்பதெல்லாம் உண்மைகளா?, உருவாக்கப்பட்டவைகளா? இங்கு சந்தை தான் பிரதானம், சந்தையை பிடிப்பதற்கு செய்யப்படும் எத்தனங்கள் தான் இவைகளெல்லாம்.

    ஆனால், சற்று மாறுபட்டு இருந்தால், பலரால் ரசிக்கப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினால் தானும் அதை ரசிக்க வேண்டும் எனும் நுகர்வு மனோநிலை தான் நம் கவனத்திற்கு உரியது. தன்முன்னே கொண்டுவரப்படும் எதையும் தன்னுடைய மதிப்பீடுகளிலிருந்து சீர்தூக்கிப் பார்க்கும் பழக்கம் திட்டமிட்டு துடைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறதே அது தான் நம் கவனத்திற்கு உரியது. கால வெள்ளத்தில் இந்தப்பாடல் கசடாய் தூக்கி வீசப்பட்டுவிடும், அந்த இடத்தில் வேறொரு பாடல். இதில் தனிப்பட்ட பாடலை அல்ல, இதுபோன்ற பாடல்கள் ரசிக்க பயன்படும் விகிதங்களை மாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது தான் முதன்மையான கேள்வி.

  237. ///வைத் பிரகாஷ் என்பவர் வங்கத்தில் எழுதிய “பிரபஞ்ச இறுதித்தூதின் வழிகாட்டி” எனும் நூலில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அதன் பிறகு எல்லா இஸ்லாமிய பரப்புரையாளர்களும் இதைப் பற்றி விதந்து கூறிவிட்டார்கள். ஜாகிர் நாயக் மட்டும் விதிவிலக்காகிவிட முடியுமா?
    இது போன்றவைகளெல்லாம் நல்ல ஜோக்காக எடுத்துக் கொள்ளுங்கள். சீரியஸாக எடுத்துக் கொண்டால் குழப்பம் தான் மிஞ்சும்.///
    சீரியஸாக எடுத்துக் கொண்டால் குழப்பம்தான் மிஞ்சும் .மிஞ்சிய குழப்பத்திற்கு இஸ்லாமே தீர்வாக இருக்கும் .ஜோக்காக எடுத்துக் கொண்டால் கம்யுனிசத்தை காப்பாற்ற முடியும் …ஆக எவ்வித தொடர்பும் இல்லாத பகவத் கீதைக்கும் இஸ்லாத்திற்கும் ஏன் இந்த ஒற்றுமை என்பதற்கு விளக்கம் தசரா இயலாமல் ஜோக்காக கதை போகிறது

  238. தோழர் செங்கொடி அவர்களே, இந்த பூமி தொடங்கியதிலிருந்து இன்று வரை ஒரே எடையில்தான் இருக்கிறதா?. இவ்வளவு மக்கள் இங்கு தோன்றிய பின்னும் பூமியின் எடை கூடவோ, குறையவோ இல்லை அது உண்மையா? இதனால் இஸ்லாம் சொல்வது போல் மனிதன் மண்ணில் இருந்து தோன்றியதுதான் காரணம் என்று என் நண்பர் என்னிடம் விவாதிக்கிறார். இதற்கு உங்கள் பதிலை பதிவு செய்யவும்.

  239. நண்பர் செந்தணல்,

    ஆம். பூமி ஒரே எடையில் தான் இருந்து கொண்டிருக்கிறது. மனிதர்கள் உட்பட பூமியில் தோன்றும் எதுவும் பூமியின் பொருட்களிலிருந்தே தோன்றுவதால் பூமியின் எடையில் மாற்றம் ஒன்றுமில்லை. அதாவது இத்தனை வகை உயிரினங்கள் தோன்றி மறைந்தாலும் அது பூமியின் அடிப்படையை கூட்டவோ குறைக்கவோ இல்லை. வடிவத்திலும் தன்மையிலும் மட்டுமே மாற்றம் நேர்ந்திருக்கிறது. அதனால் பூமியின் ஒருங்கிணைந்த‌ எடையில் கூடுதலை குறைவோ ஏற்படவேன்டிய அவசியமில்லை.

    ஆனால், இந்த அறிவியலுக்கும் மதத்திற்கும் வேதத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அறிவியலை அறிந்த பின்பு குரான் வசனங்களை திரித்துப் புரட்டுவது தான் இஸ்லாமியர்கள் செய்வது. இஸ்லாமிய அடிப்படையில் முதல் மனிதன் வேறு ஏதோ ஒரு கோளில் படைக்கப்பட்டு பூமியில் தூக்கி வீசப்பட்டவன். இந்த அடிப்படையில் பார்த்தால் சில கிலோக்களாவது பூமியின் எடை அதிகரித்திருக்க வேண்டும். இதை ஏற்கிறார்களா என்று அந்த மதவாதிகளிடம் திருப்பிக் கேழுங்கள்.

  240. நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

    இறைவனே எல்லாம் அறிந்தவன்(&).

  241. நண்பர் சேட்,

    வெறுமனே வெட்டி ஒட்டுவதற்கு பதிலாக உங்கள் கேள்வி என்ன என்று கூறியிருக்கலாமே.

    ஒரு நாத்திகர் நாத்திகத்தை மறுத்து விட்டார் என்றால் அது நாத்திகத்தின் குறை என்றால், இஸ்லாத்திலிருந்து விலகிய பலரை என்னால் காட்ட முடியும். அப்போது அதை இஸ்லாத்தின் குறை என்று ஒப்புக் கொள்வீர்களா?

  242. தஜ்ஜால் அவர்களின் மன நிலையே எனக்கும் பல வருடங்களாக

  243. நண்பர் செங்கொடி,

    ஒரு சிறுகதையையோ அல்லது கவிதை போன்ற ஆக்கங்களையோ நாம் படைக்கும்போது அவற்றிலே இயல்பாகவே நம்மைப் பாதிக்கும் முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றோம். அதனை சில பத்திரிகைகள் பிரச்சார நெடி என்று ஒதுக்குவதேன்?

    ஒரு ஆக்கத்தினை எதுவித சமூக அவலங்களையும் இல்லாமல் எழுதவேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்களா அல்லது அவ்வாறானவை யாரையும் சிந்திக்க வைக்குமளவுக்கு இருந்துவிடக்கூடாதது என்று விரும்புகின்றார்களா?

  244. நண்பர் ரஃபி,

    கலை, இலக்கியம் என்பவை ஒரு கருத்தை பிறருக்கு சொல்லும் வடிவம் தான். தன்னிடம் இருக்கும் கருத்தை பிறருக்கு கூறுவது, புரியவைப்பது எனும்போது அங்கு பிரச்சாரம் தவிர்க்க முடியாதது. இது எல்லா வகை மாதிரி இலக்கியங்களுக்கும் பொருந்தும். ஆனால் எல்லாவற்றையும் பிரச்சாரம் என்று நடைமுறையில் கூறுவதில்லை. என்றால் பிரச்சார நெடி என்று கூறப்படுபவைகள் எந்த அடிப்படையிலிருந்து கூறப்படுகின்றன?

    கலைக்கு, பொழுதுபோக்கிற்கு, மக்களுக்கு என்று நோக்கத்தைக் கொண்டு மூன்றாக பிரித்தாலும் இரண்டு அம்சங்கள் தான் அவற்றின் அடிப்படையாக இருக்கின்றன. மக்களுக்கானது, மக்களிடம் திணிக்கப்படுவது. பிரச்சார நெடி என்று முத்திரை குத்தப்படும் எழுத்துகளையெல்லாம் எடுத்துப் பார்த்தால் அவை மக்களுக்கான இலக்கியமாகவே இருக்கும். தெளிவாகச் சொன்னால் பிரச்சார நெடி என்று முத்திரை குத்துவது அரசியல் தானேயன்றி இலக்கிய விமர்சனம் அல்ல.

    எந்த ஒரு நேர்த்தியான யதார்த்தமான எழுத்தையும் அதன் மையக் கருவைப் பார்த்தால் அது குறிப்பிட்ட ஒரு நடைமுறையை, கலாச்சாரத்தை, புரிதலை வாசிப்பவனிடம் அறிமுகப்படுத்துவதாக, தூண்டுவதாக மட்டுமே இருக்கும். இது பிரச்சாரமாக வகைப்படுத்தப்படுவதில்லை. காரணம், அது நுகர்வுப்பண்பாட்டை, நடப்பு சமூகத்தை அப்படியே தக்க வைப்பதை நோக்கமாக கொண்டிருக்கும். இது யதார்த்தமாக இருப்பதால் பிரச்சாரம் என்று முத்திரை குத்தப்படுவதில்லை. அதுவே நடப்பிலிருக்கும் சுரண்டலை எதிர்கொண்டு சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டிருந்தால் அது பிராச்சாரமாக முத்திரை குத்தப்படுகிறது. மெய்யாகவே அது செழு நேர்த்தியுடன் வடிக்கப்பட்டிருந்தாலும் கூட

    அதாவது உள்ளடக்கத்தில் அனைத்துமே பிரச்சாரமாக இருந்தாலும் கூட அரசியல் பார்வையில் எதிர் தன்மை கொண்டிருப்பவைகள் பிரச்சாரம் என வகைப்படுத்தப்படுகிறது. அதேநேரம் கவனமாக அது வடிவம் குறித்த விமர்சனமாகவே முன்வைக்கப்படுகிறது. தெளிவாகச் சொன்னால் எதிர் அரசியலை உள்ளடக்கமாக கொண்டிருப்பவை -உள்ளடக்கத்தை விமர்சிப்பதாக கூறினால் அம்பலப்பட நேரும் என்பதால்- வடிவத்தில் பிரச்சாரம் என முத்திரை குத்தப்படுகிறது. பிரச்சாரம் என முத்திரை குத்தப்படும் அநேக இலக்கியங்கள் வடிவத்தில் யதார்த்த அழகியலோடும் உள்ளடக்கத்தில் செம்மையாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். ரஷ்ய, சீன நெடுங்கதைகளை படித்துப் பாருங்கள் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்பதையும் தாண்டி அதன் நடையும் கருவும் உங்களை ஈர்க்கும். மற்றப்படி நேர்மையற்ற விமர்சனங்களை புறந்தள்ளுங்கள்.

  245. ஒரு நலம் விரும்பி,
    ஒரு சின்ன இடைச்செருகல் விளக்கம்!
    பொதுவாக, தனிப்பட்ட ஒருவரின் எண்ணப்படி, ‘கடல் நீர் முழுவதும் அசுத்தமானது’ என்றே வைத்துக்கொள்வோம்.அதை முழுவதும் ஒரு வாளியையோ,குவளையையோ கொண்டு,தனிப்பட்ட ஒருவராகவே நின்று இறைத்து இறைத்து விட்டு வெளியேற்றி விடலாம் என எண்ணுவது அறிவுக்கு உகந்த செயலா? அதற்காக,அதோடு கலந்து தானும் அசுத்தமடைந்து விடும்படி சொல்லவில்லை! Atleast விலகியாவது நின்று கொள்ளலாம் அல்லவா? நன்றி!

  246. நலம் விரும்பும் நண்பரே,

    கடலை இறைத்து சுத்தப்படுத்துவது என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பொதுவாக ஒருவரிடம் சமூக அரசியல் விமர்சனங்களை எடுத்து வைத்து போராட முன்வருமாறு அழைப்பு விடுத்தால், “நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் தனி ஒரு ஆளாக நின்று என்ன செய்ய முடியும்?” என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கும். இதன் பொருள் சமூக மாற்றங்களுக்கான போராட்டங்கள் சரிதான், தேவைதான். ஆனால் அதை யாரவது செய்யட்டும், நான் ஆதரிப்பதாக கூறிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறேன் என்பது தான். தெளிவாகச் சொன்னால் தான் சரி என ஏற்றுக் கொள்ளும் ஒன்றிற்காக போராடவோ, எதையாவது இழப்பதையோ விரும்பாதது தான். தன்னுடைய சொகுசை எதன் பொருட்டும் குறைத்துக் கொள்ளத் தயாராக இல்லாதது தான். அற்பமான விசயங்கள் கூட, எதையும் இழக்காமல் பெற முடியாது எனும் இன்றைய சூழலில் சமூகத்தை மாற்றியமைக்கும் போராட்டங்கள் மட்டும் எதையும், யாரும் இழக்காமல் பெற்றுவிட வேண்டும் என்பது சாத்தியமா? சாக்கடை என்று தெரிந்து விட்ட பின்பு யாரும் முயலாமல் அதை சுத்தப்படுத்த முடியாது. இதை நீங்களோ நானோ முதலாக தொடங்க வேண்டியதில்லை. ஏற்கனவே பல்லாயிரக் கணக்கானோர் செய்து கொண்டிருக்கிறார்கள். வேண்டியதெல்லாம் ஒரு கை கொடுப்பது தான். வாருங்கள். கை கோர்த்துக் கொள்ளுங்கள்.

  247. செங்கொடி தளத்திடம் நான் கேட்கும் விடையம் என்ன வெண்றால் இஸ்லாத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு நான் திர்வு அழிக்கின்றேன்

  248. அன்புள்ள செங்கொடி

    (அ) பல எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பதால் அவர்களின் கருத்தாக்கம் மற்றும் மொழிநடை நமது எழுத்துக்களிலும் வந்துவிடுவதற்கான சாத்தியம் உள்ளது அல்லவா? பிறரின் பாதிப்புகளின்றி நாமே சுயமான மொழிநடையில் எழுதவிரும்பினால் என்ன செய்வது? வாசிப்பை விடுவதா அல்லது வேறு ஏதும் உத்திகள் உள்ளனவா கூறுங்கள்.

    (ஆ) நமக்குப் பிடித்த ஒரு படைப்பாளியின் மொழிநடை நமக்கு பொருத்தமாகவும் கருத்தைக் கூறுவதற்கு வசதியாகவும் இருக்குமானால் அதைப் பயன்படுத்துவதிலே தவறு ஒன்றுமில்லையே? இன்னொருவரை அப்படியே பிரதி பண்ணுகின்றாரே என்ற கேலிக்குள்ளாவதை பொருட்படுத்த வேண்டியதில்லைதானே?

  249. உலகில் எவ்வளவு விடையங்கள் உள்ளன அப்படி இருக்க பெண்களை செங்கொடிக்குள் இணைத்து யாரும் ஒரு முடிவு எடுக்க முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை அப்படி இருக்க ஒரு சிலா் பெண்களை இன்ப்பெருக்க தொகுதியாகத்தான் நினைக்கிறார்கள்

  250. வணக்கம் ரஃபி,

    நம்மை ஈர்க்கும் எழுத்து நடையின் சாயல் நம்மிடம் வெளிப்படுவது சாத்தியமே. இதில் பாரிய பிழை இருப்பதாகவோ தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றோ கருத வேண்டிய அவசியமில்லை. இயல்பாக எப்படி வெளிப்படுகிறதோ அப்படி இருப்பது தான் தான் சிறப்பு அது ஏற்கனவே உள்ள ஒருவரின் நடையை உள்வாங்கியதாயிருந்தாலும் சரியே.

    ஆனால், வடிவத்தை விட உள்ளடக்கமே கவனத்திற்கு உரியது. அந்த உள்ளடக்கத்தை நாம் யாருக்கு கூற விரும்புகிறோமோ அவர்களுக்கு பிறழ்தலில்லாமல் கொண்டு சேர்க்கும் விதத்தில் வடிவம் இருக்கிறதா என்பது தான் கவனத்திற்கு உரியது. இந்த இரண்டுக்கு வெளியே வடிவம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

    பிறரின் கேலி என்றால் விமர்சனமா? நோக்கத்தை செழுமைப்படுத்த உதவுவது தான் விமர்சனம், இதை யாரும் செய்யலாம். ஆனால் அதை எப்படி செய்வது என்பது விமர்சனம் செய்பவருக்கும் விமர்சிக்கப்படுபவருக்குமான உறவைப் பொருத்தது. இந்த எல்லையை தாண்டி இருந்தால் அதற்கு நான் எந்த மதிப்பையும் அளிக்க மாட்டேன்.

  251. அன்புள்ள செங்கொடி

    …இஸ்லாம் பெண்களின் மனித உரிமைகளை நசுக்குகின்றது என்று கூப்பாடு போடும் மேற்கத்திய சிந்தனையாளர்கள், முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவை மனித உரிமைகளோடு இணைக்கின்ற அளவுக்கு ஏறக்குறைய அதை ஒத்த வடிவிலான உடையையே கிறிஸ்தவ பெண் மதகுருமார்கள் அணிகின்றார்கள் என்ற உண்மையைக் கண்டு கொள்வதில்லை….

    என்று “ஜனநாயகம் : வெள்ளைக் கிறிஸ்தவர்களின் அரசியல் முறைமை” என்ற தனது நூலிலே எழுதிக்கொண்டு செல்கிறார் எங்கள் நாட்டிலுள்ள ஒரு ஆய்வாளர். இதுபற்றி உங்கள் கருத்துதான் என்ன?

  252. நண்பர் செங்கொடி ,
    விதி பற்றிய என்னுடைய சந்தேகம் என்னவென்றால் எடுத்துக்காட்டாக ஒருவன் அதிக மதிப்பெண்களை வாங்கி ஒரு கல்லூரியில் படிக்க இடம் வேண்டி விண்ணப்பம் அனுப்புகிறான்.ஆனால் இதே மதிப்பெண்களுக்கு கடந்த வருடம் இடம் அளித்த அந்த கல்லூரி நிர்வாகம் இந்த வருட மதிப்பெண் விகித அடிப்படையில் அதிக மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றதால் எந்த வித பாகுபாடுமின்றி அவருக்கு இடம் அளிக்கவில்லை.இதனை அவரின் விதி என்றுதானே கொள்ள முடியும் ?

  253. நண்பர் ரஃபி,

    நீங்கள் குறிப்பிட்ட அந்த நூலை நான் படித்திருக்கவில்லை, நீங்கள் எழுதியதைக் கொண்டு மட்டும் கூறுவதாக இருந்தால், அந்த ஆய்வாளர் கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. எதை எதிர்க்கிறார்களோ அதே வடிவிலான ஆடை அணிவதை மத அடிப்படையில் சொந்த மதத்தில் ஏற்கும் போது, பிற மதத்தில் செயல்பாட்டை விமர்சிக்க அடிப்படையற்றுப் போகிறது. குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் என்று கிருஸ்தவமும், எல்லாப் பெண்களுக்கும் என்று இஸ்லாமும் கூறுவதைத் தவிர வேறு வேறுபாடுகள் இரண்டுக்குமிடையே இல்லை. ஆண்களை விட பெண்கள் அதிக அளவு ஆடை அணிய வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. அதை மதக் கட்டுப்பாடாக திணிப்பதன் நோக்கம் என்ன? அது சமூக நோக்கில் சரியானதா? என்பது தான் அதை பரிசீலிக்கும் போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைகள். இந்த அடிப்படையில் நின்றுதான் புர்கா குறித்த என்னுடைய விமர்சனத்தை கற்பனைக் கோட்டை .. தொடரில் வைத்திருந்தேன். அந்த அடிப்படைகளை கவனத்தில் கொள்ளாமல் செய்யப்படும் விமர்சனங்களும், விளக்கங்களும் மாற்றுக் குறைவானவைகள் தாம்.

  254. நண்பர் சித்திக்,

    நீங்கள் கூறுவதை விதியில் வகைப்படுத்த முடியாது. கல்லூரியில் இடம் கிடைப்பது என்பது தனியார் கல்லூரிகளின் பெருக்கத்தைப் பொருத்தது. தனியார் கல்லூரிகளில் அதிக இடங்கள் காலியாக கிடந்தால் மதிப்பெண்கள் குறித்த கவலையின்றி கல்லூரிகளில் இடம் கிடைக்கும். கல்லூரிகளில் இடம் கிடைப்பது என்பது இருக்கும் இடங்களுக்கு ஏற்ப அதிகமான போட்டியாளர்களை வடிகட்டும் முறை. இன்றைய கல்வி முறையே முதலாளித்துவம் உற்பத்தி முறையின் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது தான். முதலாளிகளுக்கு கணிணி பொறியாளர்கள் தேவைப்படும் போது அதை பயிற்றுவிக்கும் கல்லூரிகள் அதிகரிக்கும். அதுவே சிறந்த படிப்பு என கல்வியாளர்கள் கட்டுரை தீட்டுவர். மாணவர்களின் விருப்பத்தேர்வு அதுவாக இருக்கும். போட்டி அதிகரிக்க அதிகரிக்க மதிப்பெண்களின் எல்லை உயரும். இதில் விதியின் பங்களிப்பு என்ன?

    பொதுவாக விதி என்று கூறப்படுவதன் ஆழமான பொருள் குறிப்பிட்ட ஒரு விணைக்கான காரணம் விளங்கவில்லை என்பது தான். காரணம் விளங்கி விட்டால் அதை யாரும் விதி என்று கொள்வதில்லை. நன்றாக தேர்வு எழுதியும் ஏன் ஒருவனால் தேர்ச்சி பெற முடியவில்லை எனும் கேள்வி எழுவதாக கொண்டால். பொதுத் தேர்வில் திருத்தியது யாரென்றே தெரியாது என்பதால் காரணம் புரியாமல் தலை விதி என்பார்கள். அதுவே, திருத்தியது உள்ளூர் ஆசிரியராக இருந்து விடைத்தாள் கையில் கிடைத்திருந்தால் சரியாக எழுதியிருந்தும் ஏன் தகுந்த மதிப்பெண் இடவில்லை என்ற கேள்வி எழும்பும். பதில் வேண்டி திருத்திய ஆசிரியரைப் பார்க்கலாம், தலைமை ஆசிரியரிடம் முறையிடலாம் என்பன போன்ற செயல்கள் முன்வந்துவிடும். விதியோ ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும். செயல் ஒன்று ஏன் நடைபெற்றது? அதன் காரணங்கள் என்ன? அது சரியா தவறா? அதை ஏற்பதா? மறுப்பதா? என்பன போன்ற கேள்விகள் ஒருவனுக்கு பிறக்குமாயின் அவன் ஒருபோதும் விதியின் கைகளில் பிடிபட மாட்டான்.

  255. //முதலில் ஒன்றை தெளிவுபடுத்தி விடலாம் என நினைக்கிறேன். நான் ஏன் இன்னும் இஸ்லாமியப் பெயரைத் தாங்கியிருக்கிறேன்? நான் இஸ்லாமியப் பெயரில் இருப்பதோ, கடவச்சீட்டில் முஸ்லீம் என்று இருப்பதோ ஏதேனும் சலுகைகளை எதிர்பார்த்தோ, பலன்களுக்காகவோ அல்ல//.ஆகவே யாரும் எனது சம்பாத்தியத்தை பலன் என்றோ சலுகை என்றோ கொள்ள வேண்டாம். இல்லையா செங்கொடி ?சரி இப்போதாவது பெயர் மாற்றப்பட்டு விட்டதா?

  256. தோழர் செங்கொடி அவர்களே! எனக்கு புரியாத விஷயம் இந்த பரிணாமம் பற்றி எப்படி ஒரு செல் உயிரி பல செல் உயிரியாக பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதை பற்றிய கட்டுரை அல்லது அதை பற்றிய ஏதாவது புக் இருந்தால் லிங்க் தரவும்.மேலும் எனக்குள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் சந்தேகம் கடவுள் பற்றியது நீங்கள் இஸ்லாமியனாக இருந்துகொண்டு எவ்வாறு இறைவனை பற்றி விமர்சிக்க முடிகிறது என்றால் ஏதாவது இஸ்லாமிய நுல்களை விட மற்ற நுல்கள் உங்களுடைய கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும் அந்த நுல்கள் எனக்கு அறிமுக படுத்துமாறு அன்புடன் கூறிக்கொண்டு மேலும் ஒரு கேள்வி இந்த விபச்சாரம் பற்றிய உங்கள் பார்வை என்ன அதை இஸ்லாம் மிகபெரிய தண்டனை என்று சொல்லி கல் போன்றவை எரிந்து மக்களை கொலை செய்கிறார்களே இது சரியா இதற்கு பொதுஉடமை கூறுவது அல்லது உங்கள் கருத்து என்ன இது பற்றிய ஒரு இடுகை இடுமாறு கேட்டுக்கொண்டு செல்கிறேன்.நன்றி!

  257. நான் ஸ்டாலினை பற்றி பின்னூட்டம் இட்டால் ஏன் தாங்கள் வெளியிட மறுக்குரீற்கள்??????????

  258. நண்பர்ஸ்டாலின் தாசன்,

    நீங்கள் ஸ்டாலின் பற்றி பின்னூட்டம் இட்டதனால் இங்கு மட்டுறுக்கப்படவில்லை. நீங்கள் அறியும் நோக்கத்துடன் தேடலில் இருந்தால் தாரளமாக உங்கள் கேள்விகலை பதிவு செய்யலாம். ஆனால் வெற்று அவதூறுகளுக்கும், வறட்டு கிண்டல்களுக்கும் இங்கு இடமில்லை.

  259. செங்கொடி,

    ஒவ்வொரு பொருட்களுக்குள்ளேயும் முரண்படு இருப்பதினால் மாறுதல் ஏற்படுவது போல இப்பொழுது இருக்கும் முதலாளித்துவ சமுதாயத்திலும் முரண்பாடு நிலவுவதால் அதன் நிலையை மறுத்து கம்யூனிசம் உருவாகும் என்பதாக கம்யூனிஸ்ட்கள் கூறுகிறார்கள். ஆனால் மனித வரலாறு தொடங்கிய காலத்தில் பொதுவுடைமை அமைப்பே நிலவியது, பின் எதன் காரணமாக அந்த சமுதாயத்தின் நிலைமறுத்து அடிமை சமுதாயம் தோன்றியது?

  260. அப்படியா மிக்க மகிழ்ச்சி “GULAG” forced labour camp பற்றிய தங்களின் கருத்து???

  261. நண்பர் யோஹன்,

    பரிணாமம் குறித்து குறிப்பான கேள்விகளை எழுப்பினால் பதில் தர முயல்கிறேன். செங்கொடி தளத்தில் முன்னர் பரிணாமம் குறித்து எழுதிய சில கட்டுரைகளின் சுட்டிகள் கீழே தந்திருக்கிறேன் படித்துப் பாருங்கள்.

    மனிதன் அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு

    பரிணாம அரிவியலும் நண்பர் சுவனப் பிரியனும்

    இஸ்லாமியனாக இருந்திருந்தால் கடவுளை விமர்சிக்கக் கூடாதா என்ன? எந்த மதத்தையும், அதன் வேத உபநிடதங்களையும் ஆழமாக படித்தார்கள் என்றால் அவர்கள் மதத்திலிருந்து வெளியேறுவதே முதலில் நடக்கும். அதேநேரம் நாத்திகம் என்பது முழுமையானது அல்ல. மக்கள் சமூக மேம்பாட்டு நோக்கில் ஒரு அம்சம் மட்டுமே. கம்யூனிசம் குறித்து அறிவதில் ஆர்வம் காட்டுங்கள். நிகழும் அத்தனையிலும் சமூக பயன்பாட்டு அம்சங்களை இனம் கண்டறிந்து, பொருத்திப் பார்த்து விளைவுகளை காண முயலுங்கள். உங்களுக்கு முன்னே புது உலகம் ஒன்று விரியும்.

    விபச்சாரம் ஏற்றுக் கொள்ள முடியாத, களைந்தாக வேண்டிய, மனித சாரத்திற்கு எதிரான பாலியல் வக்கிரம். ஆனால் அது சமூகத்தில் ஏன் தோன்றியது? எதற்காக தோன்றியது? எதனால் நீடிக்கிறது? என்பன போன்ற காரணங்களை அறிய முயலாமல் அதை தனி மனித தவறாக மட்டுமே பார்ப்பதும் தண்டிப்பதும் பலன் தரத் தக்கவை அல்ல.

    கற்பும், விபச்சாரமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பது ஆசான் ஏங்கல்ஸின் கூற்று. பாலியல் தேவை என்பது பொதுவானது, இயல்பானது. குடும்பம் என்பது தனிச் சொத்துரிமையை கட்டிக் காக்க ஏற்படுத்தப்பட்ட ஆணாதிக்க அமைப்பு. ஆனால் இயல்பான பாலியல் தேவை ஆணாதிக்க வக்கிரத்துடன் இணையும் போது குடும்ப அமைப்பைத் தாண்டி விரிகிறது. தனி மனிதனின் விருப்பமும், அவன் மீது விதிக்கப்பட்டிருக்கும் சமூக கட்டுப்பாடுகளும் வினைபுரிந்து தீவிரமானதொரு முரண்பாட்டை தோற்றுவிக்கிறது. இந்த முரண்பாட்டின் இரண்டு முனைகள் தான் கற்பும், விபச்சாரமும். கற்பு என்பது பெண்களின் மீது திணிக்கப்பட்டிருப்பது ஒழிக்கப்படாதவரை விபச்சாரத்தையும் ஒழிக்க முடியாது. பாலியல் தேவை வெறி கொண்டதாக இல்லாமல், இயல்பானதாக மாறும் வரை கற்பு பெண்கள் மீது திணிக்கப்பட்டிருப்பது தொடரத்தான் செய்யும்.

    ஆண்டான் அடிமை சமுதாயம் தொடங்கி இன்றைய முதலாளித்துவ உலகம் வரை ஆணும் பெண்ணும் பாலியல் ரீதியில் சமமாக மதிக்கப்பட்டதே இல்லை. அதிலும் இன்றைய முதலாளித்துவம் ஆணின் ஆணாதிக்கத்தை நுணுக்கமாக பண்பாட்டு, கலாச்சார தளங்களில் புகுத்தி அதை வெற்றிகரமாக தனது சுரண்டலுக்கு பயன்படுத்தி வருகிறது. இது தான் இன்று பாலியல் வக்கிரங்களை வெறி கொண்டு அரங்கேற்றுவதற்கு மூல வேராக இருந்து ஆற்றலளிக்கிறது. இந்த மூல வேரை முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை வெட்டிச் சாய்க்காதவரை ஆணின் பாலியல் வெறி தீரப் போவதில்லை.

    விபச்சாரத்திற்கு தண்டனை கொடுப்பது என்பது தனி மனித அடிப்படையில் நிகழ்ந்து விட்ட தவறுக்கான தண்டனையேயன்றி வேறொன்றுமில்லை. தண்டனைகளால் தவறுகளை ஒழித்துவிட முடியாது. இஸ்லாம் உட்பட அனைத்து மத, சட்ட அமைப்புகளும் இதை தனிமனித தவறாக பார்த்து தண்டனை கொடுப்பதோடு முடித்துக் கொண்டு, சமூகத்தில் அதன் தேவை நீடிப்பதற்கான அனைத்தையும் செய்கின்றன. விபச்சாரத்திற்கான களம், தேவை சமூகத்திலிருந்து அகற்றப்படும்போது மட்டுமே விபச்சாரம் ஒழியும். அதை மதங்களோ, நடப்பு சட்டங்களோ செய்ய முடியாது. சோசலிசம் மட்டுமே இந்த ஆழமான பார்வையைக் கொண்டிருப்பதால், அதால் மட்டுமே விபச்சாரம் போன்ற சமூக அவலங்களை வக்கிரங்களை ஒழிக்க முடியும்.

  262. நண்பர் மிச்சேல்,

    சமூக மாற்றத்திற்கு முக்கியமான நிபந்தனையே உற்பத்தி தேவைகளை மீறி வளர முடியாமல் தடைப்படுவது. சமூக உற்பத்தியின் பலன் தனி மனிதனுக்கு உடமையாக மாறும்போது தான் சமூக முரண்பாடுகளைச் சந்திக்கிறது. புராதன பொதுவுடமைச் சமூகத்தில் மனிதன் சிந்தனை மேம்பாட்டை அடையவில்லை. சமூகமும் போதிய வளர்ச்சியை எட்டவில்லை. உண், உண்ணப்படாமலிரு என்பது மட்டுமே அவனை வழி நடத்தியது. மட்டுமல்லாது புராதன பொதுவுடமைச் சமூகம் வர்க்கங்கள் தோன்றாச் சமூகம். ஆனால் இனி ஏற்படப்போகும் கம்யூனிச சமூகம் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்ட சமூகம். தன்னுடைய தேவையை தீர்த்துக் கொள்ள வழிகாணும் திறன் பெற்ற, சிந்தனை முறை மேம்பட்ட வளர்ச்சியடைந்த சமூகம். தொடக்கத்தில் இருந்தது உட்டோப்பியன் கம்யூனிசம், இனி ஏற்படப்போவது விஞ்ஞான கம்யூனிசம். புராதன பொதுவுடமை சமூகத்தில் வர்க்கங்கள் தோன்றுவதற்கான அடிப்படைகள் இருந்தன. இனி ஏற்படப் போகும் பொதுவுடமை சமூகத்தில் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு, அதன் இருப்புக்கு தேவையான அடிப்படைகள் நீக்கப்பட்டிருக்கும் என்பதால் புதிதாக வர்க்கங்கள் தோன்றும் சாத்தியமற்று இருக்கும்.

  263. நண்பர் ஸ்டாலின் தாசன்,

    தோழர் ஸ்டாலின் குறித்தும், சோவியத் ஒன்றியம் குறித்தும் செய்யப்படும் அவதூறுகள் புதிதானவை அல்ல. இணையப் பரப்பில் பரவிக் கிடக்கும் அவதூறுக் கட்டுரைகளும் நீங்கள் சுட்டி கொடுத்துத்தான் தெரிய வேண்டும் எனும் நிலையில், யாருக்கும் தெரியாததும் அல்ல. அதேநேரம் இதற்கான பதில்களும் மறுப்புகளும் கூட ஏராளம் கிடைக்கின்றன. இணையத்தில் தேடி சுட்டி கொடுத்து கொலை, கொடூரம் என்று அலறுபவர்கள் யாரும் அது சரியான செய்தியா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதில்லை, மீளாய்வு செய்வதில்லை. ஏனென்றால் அவ்வாறு செய்பவர்களின் நோக்கம் தவறை சுட்டிக் காட்டி சரிப்படுத்துவதோ, மெய்யாகவே அப்படித்தான் நடந்ததா? எனும் தேடலின் வழியிலோ இருப்பதில்லை. மாறாக அவர்களின் நிலைப்பாட்டிற்கு, விருப்பத்திற்கு உகந்ததாக இருக்கிறது என்பதாலேயே அவ்வாறான அவதூறுகளைப் பொழிகிறார்கள். இஸ்லாத்தை இவ்வளவு எழுதுகிறானே அதற்கு பதிலடியாக இதைச் செய்வோம் எனும் அடிப்படையிலேயே இதை அணுகுகிறார்கள். இதை நேரடியாக வசைச் சொற்களாக செய்தாலும், மென்மையாக இயல்பானது போல் ஐயம் எழுப்பினாலும் அதில் தொழிற்படுவது இந்த அம்சம் தான். இதனை விளக்கிக் கூறிவிடுவதால் நீங்கள் உங்கள் கருத்துகளை மாற்றிக் கொள்வீர்கள் என்றோ, பரிசீலனைக்கு ஆயத்தமாகி விடுவீர்கள் என்றோ கூறிவிட இயலாது. நேர்மையுடன் பரிசீலனை செய்து பார்க்கும் எண்ணமுடையவர்களின் பார்வைக்கானதே இவை. அல்லாமல், இப்படி கேள்வி எழுப்பும் யாரும் இதை நேர்மையுடன் பரிசீலிக்கத் தயாரா? எனும் கேள்வியை அவர்களின் முன்வைத்துவிட்டு பதிலுக்குள் கடக்கலாம்.

    ‘குலாக்’ எனும் சொல்லுக்கு கிராமப்புற விவசாய பண்ணையார் அல்லது முதலாளி என்று பொருள் கொள்ளலாம். சோசலிச கட்டமைப்பு ஏற்பட்டதும் உழைக்காமல் உண்ண யாருக்கும் அதிகாரமில்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. பெருமுதலாளிகள், குலாக்குகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. எல்லோரையும் போல் அவர்களும் உழைத்தாக வேண்டும் எனும் நிலை ஏற்படுத்தப்படுகிறது. உழைக்கும் எல்லோருக்கும் கிடைக்கும் சலுகைகள், வசதிகள் அவர்களுக்கும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இது ஒருபுறம்.

    மறுபுறம், கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கும் ஜனநாயகத் தன்மையைப் பயன்படுத்தி துரோகிகள், முதலாளித்துவ மீட்பர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் ஊடுறுவி விடுகிறார்கள். அனைத்துக்கும் மேலாக உலகின் முதல் சோசலிச ஆட்சியை சதித்தனங்களின் மூலம் கவிழ்த்து ஆட்சியதிகாரத்தை தாங்கள் கைப்பற்றிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இதை களைவதற்காக செய்யப்பட்ட நிர்வாக, காவல்துறை நடவடிக்கைகளிலும் அவர்கள் கலந்து விடுகிறார்கள். இதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. மக்களை சுரண்டிக் குவிக்கும் முதலாளித்துவத்திற்கு சாவு மணி அடித்த முதல் சோசலிச அரசைக் காக்க தோழர் ஸ்டாலின் துணிந்து சில நடவடிக்கைகளை எடுக்கிறார்.

    இன்னொரு புறம், உலகை தங்கள் காலனி நாடுகளாக்கி வைத்திருந்த ஏகாதிபத்திய நாடுகள் கொடுத்த நெருக்கடிகளாலும், போர்களாலும் நிலைகுலைந்து போயிருந்த பொருளாதாரத்தை சீர்படுத்த வேண்டிய அவசரக் கடமையும் இருந்தது. எனவே, உழைக்க மறுத்த குலாக்குகள், ஆயுள் அல்லது அதற்கும் குறைவான தண்டனை பெற்ற சதிகாரர்கள், ஏனைய குற்றவாளிகள் இவர்களை ஒருங்கிணைத்து குலாக் முகாம்கள் ஏற்படுத்தி கட்டாய வேலை வாங்கப்பட்டது. அதேநேரம் அவர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும், சலுகைகளும் வழங்கப்பட்டன. இன்று கொடூர சித்திரவதைகளையும், கொட்டடி மரணங்களையும், காரணமின்றி சிறவைப்பதையும் ஜனநாயகத்தின் பேரில் கண்டு கொண்டிருப்பவர்கள், அதாவது கண்டு கொள்ளாமலிருப்பவர்கள், அன்றைய குலாக் முகாம்களை சித்திரவதை, கொலை, கொடூரம் என்று அரற்றிக் கொண்டிருப்பது வரலாற்றின் முரண்நகை.

    ஒன்று தெரியுமா உங்களுக்கு, வாரத்தில் இரண்டு நாட்கள் கைதிகள் வீடுகளுக்கு சென்று வரலாம் என்று சிறைச்சாலைகளுக்கு விடுமுறை அளித்தது சோசலிச அரசு மட்டும் தான்.

    ஒன்று தெரியுமா உங்களுக்கு, கருவில் குழந்தை உருவாவது முதல், வயது உதிர்ந்து இறக்கும் வரை அனைத்து செலவுகளையும் அரசே பொறுப்பேற்றுக் கொண்டது உலகில் சோசலிச அரசு மட்டும் தான்.

    ஒன்று தெரியுமா உங்களுக்கு, ஒரு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றுமுழுதாக மக்களிடம் விவாதத்திற்கு வைத்து, மக்களின் விருப்பமறிந்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது உலகில் சோசலிச அரசு மட்டும் தான்.

    ஒன்று தெரியுமா உங்களுக்கு, இரண்டாம் உலகப் போரில் சாதாரண போர் வீரனாக பணிபுரிந்த தோழர் ஸ்டாலினின் மகன் ஹிட்லரால் கைது செய்யப்பட்டு, சோவியத் போர் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நாஜி தளபதிகளை விடுதலை செய்தால் உன் மகனை விடுதலை செய்யப் படுவான் என்று பேரம் பேசப்படுகிறது. சாதாரண ஒரு போர் வீரனுக்கு தளபதியை விடுதலை செய்ய முடியாது, மற்றொரு போர் வீரனை வேண்டுமானால் விடுதலை செய்யலாம். அதுவும் ஒருவனுக்கு பகரமாக ஒருவன் மட்டுமே விடுதலை செய்யப்படுவான் என்று கராராக கூறினார் தோழர் ஸ்டாலின். விளைவு தோழர் ஸ்டாலினின் மகன் கொல்லப்படுகிறான். இது போன்ற தியாக வரலாறு உலகில் வேறு எந்த அரசுத் தலைவருக்காவது உண்டா?

    இன்னொன்றையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களின் கடவுள் போலோ, தூதர்கள் போலோ எங்கள் ஆசான்களை நாங்கள் கருதுவதில்லை, புனிதப்படுத்துவதில்லை. தோழர் ஸ்டாலின் மீதும் விமர்சனம் இருக்கிறது. ஆனால் அது முதலாளித்துவவாதிகள் கயிறு திரிப்பதைப் போலல்ல. முதலாளித்துவ மீட்பர்களை கராறாக நடத்தியதால், கருணையுடன் நடத்தாததால் தோழர் ஸ்டாலின் மீது அவதூறு பொழிகிறார்கள். நாங்களோ கூட்டுப் பண்ணையாக்கலை, மக்கள் விரோதிகளை கண்டறிவதை மக்கள் திரள் மூலம் செய்யாமல் நிர்வாக ரீதியாக மேலிருந்து கீழாக செய்தார் என்பதனால் தோழர் ஸ்டாலினை விமர்சிக்கிறோம்.

    நிங்கள் கொண்டிருக்கும் குருட்டுத்தனமான பக்திக்கும், நாங்கள் கொண்டிருக்கும் விமர்சன ரீதியான அணுகுமுறைக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை சீர்தூக்கிப் பார்க்க முயலுங்கள். மெய்யாகவே உங்களுக்குள் தேடல் இருந்தால் நாம் தொடர்ந்து உரையாடலாம்.

    இஸ்லாத்தை நான் விமர்சிக்கிறேன் என்றால், அதை ஆராய்ந்து அதன் முரண் தகவல்களை, தவறுகளை என்னிலிருந்து எடுத்து வைத்து விமர்சிக்கிறேன். ஆனால் நான் விமர்சிக்கிறேன் என்பதால், இணையத்தில் தேடி சில சுட்டிகளை தந்துவிட்டு புளகமடைந்து கொள்வீர்கள் என்றால், உங்களைப் போன்றோரைக் கண்டு பரிதபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

  264. நன்றி! கம்யூனிசத்திற்கு அடுத்தக்கட்ட சமூகத்தையும் முன்னறிந்து சொல்லிவிட முடியுமா?

  265. நண்பர் மிச்சேல்,

    கம்யூனிசத்திற்கு அடுத்த கட்ட சமூகம் என்று இப்போதைக்கு ஒன்றும் இல்லை. வர்க்கங்கள் நீடித்திருப்பதற்கான தேவை தீர்ந்து போனபின் சமூக மாற்றத்திற்கான தேவையும் தீர்ந்து போகும்.

  266. // வர்க்கங்கள் நீடித்திருப்பதற்கான தேவை தீர்ந்து போனபின் சமூக மாற்றத்திற்கான தேவையும் தீர்ந்து போகும்.//

    செங்கொடி! இது உமது கைச்சரக்கா! அல்லது அறிவியலா! இதன்மூலம் நீங்கள் இயங்கியல் போக்கையே மறுப்பதாக அல்லவா இருக்கிறது?

  267. நண்பர் மிச்சேல்,

    இதில் இயங்கியல் மறுப்பு என்ன இருக்கிறது? சமூக மாற்றத்திற்கான தேவை தீர்ந்து போகும். ஆனால் முரண்பாடுகள் இருக்கும். பகை முரண்பாடுகளாக இல்லாமல் நட்பு முரண்பாடுகளாக நீடிக்கும். இயற்கை சக்திக்கும் மனித சக்திக்குமான முரண்பாடாக நீடிக்கும். இயற்கை குறித்து, அண்டம் குறித்து அதுவரை அறியப்படாத உண்மைகளை பாய்ச்சல் வேகத்தில் வெளிக் கொண்டுவரும் காலகட்டமாக அது இருக்கும். வர்க்கங்கள் தான் இருக்காதேயன்றி முரண்பாடுகள் இருக்கும் என்பதால் அது இயங்கியல் மறுப்பாகாது.

  268. செங்கொடி,

    நலமா?

    சிறிது காலமாக அலிசினா எனும் இறைமறுப்பாளர் ஒருவரின் இணையத்தளத்தை பார்த்து வருகின்றேன். அவர் உலகின் மதங்கள் அனைத்தையும் ஒரே தராசில் எடைபோடாமல் இஸ்லாத்தை சாத்தானின் மதம் என்கிறார். அதாவது இஸ்லாம் வெறுப்பின் மதம் என்றும் அது மட்டுமே தனது இருப்புக்காக ஏனைய மதங்களையும் அதனைப் பின்பற்றுவோரையும் மதம் மாற்ற நினைக்கின்றது. அது முடியாதபோது அழிக்கத் துடிக்கின்றது…என்பதற்கான ஆதாரங்களைத் தர்க்கரீதியாக முன்வைக்கின்றார்.

    அலிசினா தன்னை மதநம்பிக்கையற்றவர் என்று சொல்கின்றார். அதேவேளை ஏனைய மதங்களினால் மக்களுக்குள்ள ஆபத்தைவிட இஸ்லாமிய மதத்தினால் விளையும் ஆபத்துதான் பிரமாண்டமானது என்கின்றார். அதேவேளை அவர் கம்யுனிசத்தையும் மறுக்கின்றார். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள். முடிந்தால் அவரது தளத்தைப் பார்வையிடுங்கள். http://www.tamil.alisina.org.

  269. நண்பர் ரஃபி,

    நலமே, அலி சினாவின் சில கட்டுரைகளை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். அவர் முகம்மது குறித்து எழுதிய நூலை படித்துக் கொண்டிருகிறேன். ஈரான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவரான அவருடைய இஸ்லாமிய வெறுப்பு மேற்கத்திய கருத்தியலிலிருந்து தோன்றியிருக்கிறது. இஸ்லாம் நடப்பிலிருக்கும் ஏனைய மதங்களுடன் ஒப்பிட்டால் சிறப்பானதே, ஆனால் அது ஏனைய மதங்களைப் போலவே எப்போதோ காலவதியாகிவிட்டது. அலி சினாவின் எழுத்துகளைப் பார்க்கும் போது அவர் நாத்திகர் எனும் நிலையில் கூட இல்லாமல் இஸ்லாமிய வெறுப்பு எனும் நிலையில், வரட்டுத்தனத்தில் நிலை கொண்டிருப்பதாகவே தெரிகிறது. எடுத்துக்காட்டுகளாக, முகம்மது தம் வாழ்நாளின் பிற்பகுதியில் ஒருவித பாலியல் நோய்க்கு ஆட்பட்டிருந்தார், மரியா கிப்தியாவின் மகனுக்கு தந்தை யார்? போன்றவற்றில் அவரின் வாதங்களைக் குறிப்பிடலாம். ஆனால் இஸ்லாமிய வேத, உபனிடதங்களின் மூலை முடுக்குகளையெல்லாம் ஆய்ந்து தன் படைப்புகளை எழுதுகிறார் என்பதில் ஐயமொன்றுமில்லை.

    பொதுவாக நாத்திகம் என்பது முழுமையானதல்ல என்தை நான் அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறென். கடவுள் நம்பிக்கை, மத நிறுவனங்கள் எல்லாம் சுரண்டலின் வடிவங்கள். சுரண்டலைப் புரிந்து கொள்ளாமல், சுரண்டலை ஒழிப்பது பற்றி சிந்திக்காமல், அதற்கான வழிமுறைகளைக் காணாமல், அவற்றை நடைமுறைப்படுத்த முயலாமல் மதங்களை தங்களின் விருப்பத்தளத்திலிருந்து விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருப்பது குறைபாடுடையதே. நான் புரிந்து கொண்ட வகையில் அலிசினாவின் இஸ்லாமிய எதிர்ப்பு இந்த வகையானதாகவே இருக்கிறது. இதற்கு வெளியே சமூகப் பார்வை என்று அவருக்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

    அவரின் கம்யூனிச எதிர்ப்பு குறித்து சில கட்டுரைகளில் ஒரு சில சொற்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். சர்வாதிகாரம் எனும் பார்வையில் தான் அதுவும் இருக்கிறது. தன்னுடைய கம்யூனிசத்திற்கு எதிரான நிலைப்பாடு குறித்து அவர் விளக்கினால், ஏதும் கட்டுரை எழுதினால் தான் அதை தெரிந்து கொள்ளவும், சரியா? என அலசவும் முடியும்.

  270. தற்போது, சுப.உதயகுமார் தலைமையிலான “அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்” கூடங்குள அணுமின் நிலையத்தை மூடவேண்டும் என்ற போராட்டத்தைத் தொடங்கியது. இந்தப் போராட்டத்திற்கு கிருத்தவ திருச்சபைகளும், தொண்டு நிறுவனங்களும், தங்களை நக்சல்பாரிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள் உள்ளிட்ட ஒரு சில மா.லெ. இயக்கங்களும் ஆதரவளித்து வருகின்றன இதை பற்றிய தங்களின் கருத்து???.

  271. நண்பரே,

    உங்கள் கேள்வியின் நோக்கம் சரியாக புரியவில்லை. அணு உலை குறித்த கருத்தை எதிர்பார்க்கிறீர்களா? அல்லது அந்தப் போராட்டதை இயக்கங்கள் ஆதரிப்பது குறித்த கருத்தை எதிர்பார்க்கிறீர்களா?

    அணு உலை அமைக்கப்படுவதை எதிர்க்கிறோம், கூடங்குளத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும். இந்தியாவில் அது தொடங்கப்படும் நோக்கம் மின்சாரமல்ல, பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறியே அதில் முதன்மையானது. அரசியல், அடிமைத்தனம், ஆபத்து போன்றவைகளை உள்ளடக்கியே அணு உலைகள் அமைக்கப்படுவதை எதிர்க்கிறோம்.

    ஒரு போராட்டம் நடக்கிறது என்றால் அதை பலரும் பல நோக்கங்களுக்காக ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள். என்ன நோக்கத்திற்காக ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள் என்பதைப் பொருத்தே அவர்கள் நண்பர்களா? எதிரிகளா? துரோகிகளா? என்பதை முடிவு செய்ய முடியும்.

  272. வணக்கம் தோழர், ஆண்கள் விருத்தசேதனம் செய்து கொள்வது நன்மையே என்று சில மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். சிலர் தேவையற்ற செயல் என்று கண்டிக்கின்றனர். இதை பற்றிய தங்கள் கருத்து என்ன .?

  273. கமல்ஹாசன்,பாரதி போன்றோரை பார்ப்பன எண்ணம் கொண்டவர்கள் என்று சித்தரிப்பது ஏன்? அவர்கள் முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் பிராமணனாக பிறந்ததால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியா?அவர்கள் சுயஜாதி அபிமானம் கொண்டவர்கள் என்று எவ்வாறு குற்றம் சாட்டுகிறீர்கள்?

  274. வணக்கம் மது,

    விருத்த சேதனம் செய்வது நல்லதா அல்லதா என்று பொதுவாக கேட்டால் நல்லது என்றே கூறலாம். நகம் வெட்டுவது, அதில் அழுக்கு சேரும் என்பது போன்ற பயன்பாடு. ஆனால் அது ஒன்றும் பாலியல் ரீதியான நோய்களுக்கு நிவாரணியல்ல. விருத்த சேதனம் செய்வது நோய்களைத் தடுக்கவும் செய்யாது. அது மதச் சடங்காக இருப்பதனால் புனிதப்படுத்தப்பட்டு உயர்வாக கூறப்படுகிறது அவ்வளவு தான். அப்ரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மதச் சடங்காக செய்யப்பட்டு வந்தாலும் வட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் பழக்கம் தொடங்கியது. கிமு 2300லியே விருத்த சேதனப் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை எகிப்திலுள்ள குகை ஓவியங்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட சுகத்தை விட சமூக நலனே முதன்மையானது எனும் பொருளில் தொடங்கிய சடங்கானது இன்று மதச் சடங்காக எய்ட்ஸைக் கூட தடுக்கும் என்றெல்லாம் பொய்யாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் சாதாரண பாலியல் நோய்களைக் கூட இது தடுக்காது என்பதை மருத்துவர் வாலஸ்டைன் என்பவர் அறிவியல் ரீதியாக வெளிப்படுத்தினார்.

  275. நண்பர் செந்தமிழ் செல்வன்,

    கமல் பாரதி போன்றவர்களிடம் முற்போக்கு இருக்கிறதா என்பதை அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பத்தின் மூலம் எடை போட முடியாது. அவர்களின் படைப்புகளை சீர்தூக்கிப் பாருங்கள். அவர்களின் முற்போக்கு முகமூடி இற்றுப் போயிருப்பது அப்போது புரியும். வே. மதிமாறன் எழுதிய ‘பாரதீய ஜனதா பார்ட்டி’ படித்திருக்கிறீர்களா? பார்ப்பன ஜாதியில் பிறந்ததால் மட்டுமே ஒருவன் பார்ப்பானாகி விடுவதில்லை. பார்ப்பனீயத்தை யாரெல்லாம் தூக்கிப் பிடித்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் பாப்பான்கள் தாம், அவர்கள் எந்த ஜாதி, மதத்தில் பிறந்திருந்தாலும். அப்துல் கலாம் கூட ஒரு பாப்பான் தான். பிறப்பின் அடிப்படையில் தகுதியை தீர்மானிப்பது பார்ப்பனியத்தின் ஒரு பகுதி. பாரதி, கமல் போன்றவர்களை ‘முற்போக்கு’ கேட்டகிரியில் வகைப்படுத்தியே ஆகவேண்டும் என நீங்கள் விரும்பினால் பார்ப்பனிய முற்போக்கு என்று குறித்துக் கொள்ளுங்கள், பொருத்தமாக இருக்கும்.

  276. ஈழ தமிழர் விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக கம்யுனிச நாடுகள் ஐ நாவில் வாக்களித்தது ஏன்?ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் குடுக்காமல் பிராந்திய அரசியல் நலன்களை வைத்து மக்களை ஒடுக்குவதில் துணை புரிவதென்பது ஏகாதிபத்திய சர்வாதிகாரம் போல் நடந்து கொள்வது சரிதானா?

  277. நண்பர் செந்தமிழ்ச்செல்வன்,

    எதை நீங்கள் கம்யூனிச நாடுகள் எனக் குறிப்பிடுகிறீர்கள்? கியூபாவையா? முதலில் அது கம்யூனிச நாடல்ல. சர்வாதிகாரி பாடிஸ்டாவை எதிர்த்து நடைபெற்ற தேசியப் போராட்டத்தில் காஸ்ட்ரோ தலைமையில் வெற்றியை ஈட்டினார்கள். பின்னர் அவர்கள் எங்கள் ஆட்சி சோசலிசப் பாதையில் இருக்கும் என்று அறிவித்தார்கள். பெரும்பாலான விசயங்களில் சோசலிசத்தைப் பின்பற்றவும் செய்கிறார்கள். ஆனாலும் அது புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் அமைந்த சோசலிச நாடல்ல.

    இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்து கொண்ட எந்த ஒரு நாடும் மக்கள் நலனிலிருந்து செயல்படவில்லை என்பது தெளிவு. தத்தமது பிராந்திய நலன், தேசிய, தரகு முதலாளிகளின் நலன் ஆகியவற்றின் அடிப்படையிலும்; எதிரிக்கு எதிரி எனும் அடிப்படையிலும் இலங்கை அரசுக்கு ஆதரவான முடிவை எடுத்தன. இதில் கம்யூனிசத்திற்கு இடமில்லை.

  278. பாஸ், உங்க இணையதளம் என் வீட்டில் தெரிவது இல்லை. ஆனால் அலுவலகத்தில் தெரிகிறது. என்ன பிரச்சனையாக இருக்கும். I have wi5 broadband. Location is Gandhinagar, Gujarat

  279. தெரியலையே பாஸ்,

    எனக்கு தெரிஞ்ச ஒருத்தர்ட்ட கேட்டேன், அவருக்கும் தெரியல. தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லலாமே.

  280. தோழர்,
    பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது நடைமுறையில் ஒரு கட்சி ஆட்சி முறையில்தான் சாத்தியமா?

  281. வணக்கம் விபின்,

    ஆம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒரு கட்சி ஆட்சி முறையில் தான் முழுமையாக சாத்தியப்படும். ஆனால் சர்வாதிகாரம் என்ற சொல்லை தீண்டத்தகாதது போலவும் பலகட்சி ஜனநாயகம் என்ற சொல்லை மேன்மையான ஜனநாயக வடிவமாகவும் நடப்பில் பொருள் கொண்டு அந்த அடிப்படையிலிருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், ஒரு கட்சி ஆட்சி முறையையும் பார்க்கிறார்கள். இது தவறானது. முதலாளித்துவம் தந்த ஜனநாயகம் எனும் சொல்லின் பொருளே வர்க்க சர்வாதிகாரம் என்பது தான். நடப்பு உலகில் ஜனநாயகம் இருக்கிறது என்றால் அதன் பொருள், ஆளும் வர்க்கமான முதாளிகளுக்கு ஜனநாயகமாகவும் ஏனையவர்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கிறது என்பது தான். உலகில் 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு ஜனநாயகமாகவும் 90 நூற்றுமேனி இருக்கும் மக்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் ஒரு அரசு வடிவம் ஜனநாயகம் என்று போற்றப்படுகிறது. அதேநேரம் 90 நூற்றுமேனி இருக்கும் உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகமாகவும், 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் அரசு வடிவம் தூற்றப்படுகிறது.

    இதே விதம் தான் பலகட்சி ஆட்சிமுறையிலும் நடக்கிறது. ஒரு முதலாளித்துவ கட்சி செயல்படும் சுதந்திரத்துடன் பாட்டாளி வர்க்க கட்சி செயல்பட சுதந்திரம் உண்டா? அரசுக்கு எதிராக செயல்படும் கட்சியை தடை செய்கிறார்கள். என்றால் பலகட்சி ஆட்சிமுறை என்பதன் பொருள் தான் என்ன? முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொண்டு அதன் கீழ் இருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு, முதலாளித்துவ சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கட்சிகள் தீவிரவாத கட்சிகளாக அவதூறு செய்யப்படுகின்றன. சுவரொட்டி ஒட்டுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவது தான் இங்கு நடைமுறையாக இருக்கிறது. அதேநேரம் சோவியத் ரஷ்யாவில் பல கட்சிகள் செயல்பட்டும் இருக்கின்றன. போல்ஷ்விக் மென்ஷ்விக் என்றுஇரண்டு பிரிவுகளாக கட்சிகள் செயல்பட்டிருக்கின்றன. முதலாளித்துவத்தை பிரநிதித்துவப்படுத்தும் கட்சிக்குத்தான் அனுமதி இல்லை.

    சுருக்கமாகப் பார்த்தால் இன்று ஜனநாயம் என்று கூறப்படுவது சாராம்சத்தில் சர்வாதிகாரமாக இருக்கிறது, சர்வாதிகாரம் என்று தூற்றப்படுவது சாராம்சத்தில் ஜனநாயகமாக இருக்கிறது என்பதே உண்மை.

    இன்னொருமுனையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது வெறும் அரசு செயல்படும் வடிவம் மட்டுமல்ல. இதுவரையிலான அரசுகள் சுரண்டல் அரசுகளாய் இருந்ததினால் அதற்கு இசைவாகவே மக்களை மாற்றியமைத்திருக்கின்றன. இன்று மக்கள் சுயநலமிகளாய் இருப்பதன் காரணம் இதுவே. இதை சீராக்கி மக்களை உயர்ந்த பண்பாட்டை நோக்கி அழைத்துச் செல்லும் பணியும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளித்துவம் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை பின்னோக்கி இழுக்கும். கலாச்சாரப் புரட்சி உள்ளிட்டு வர்க்க வேறுபாடுகளை கழித்துக்கட்டும் பெரும்பணிகளுக்கும் முதலாளித்துவத்தை அதன் எச்சங்கள் கூட எழாமல் முறியடிக்க வேண்டியதிருப்பதால் ஒருகட்சி ஆட்சிமுறை மிக அவசியமானது.

  282. தோழர்,

    முதலாளித்துவத்தைக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததிராய் போன்ற அறிவுஜீவிகள் கம்யூனிசத்தை ஆதரிக்காதது ஏனோ?

  283. வணக்கம் விபின்,

    கம்யூனிசம் என்பது சமூக அறிவியல். முதலாளித்துவம் என்பது சமூக அவலம். சமூக அவலத்தை தம் அறிவால் கண்டு அதை எதிர்பவர்கள் எவரும் கம்யூனிசத்தை ஏற்பார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது. அருந்ததிராய் போன்றவர்கள் அடிப்படையில் மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள். கம்யூனிசம் என்பது பாட்டாளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், இதில் மேட்டுக்குடி வர்க்கத்தினர் இயல்பாகவே ஒன்ற முடிவதில்லை. அதற்கு ஆழ்ந்த சிந்தனையும், பரிசீலனையும் தேவைப்படுகிறது. அருந்ததிராய் போன்றோர் அவர்கள் பிறந்து வளர்ந்த சூழல் கல்வி போன்றவற்றால் ஜனநாயக அரசியலமைப்பு என்பதைத் தாண்டி அவர்களின் பரிசீலனை செல்வதில்லை. ஆனால் முதலாளித்துவ உலகமும் அதன் சுரண்டல் தன்மையும் நேர்மையாய் சிந்திப்பவர்கள் அனைவரையும் பாதிக்கவே செய்யும். இதிலிருந்து தான் அவர்களின் முதலாளித்துவ எதிர்ப்பு தொடங்குகிறது. இதற்கு மாற்று என்ன எனும் சிந்தனை தோன்றினால் தான்; எதிர்ப்பு மட்டுமே முழுமையானதில்லை என்பதை உணர்ந்தால் தான் கம்யூனிசத்திற்கான பாதை விரியும். ஆனால் பெரும்பாலானவர்கள் முதலாளித்துவ எதிர்ப்பை தாண்டி அடுத்த கட்டத்திற்கு நராமல் அப்படியே தேங்கி விடுகிறார்கள். அதனால் தான் முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆகிவிட முடிவதில்லை.

  284. சிலை வணக்கத்தை மூட நம்பிக்கை என்று கூறிய பெரியார் அவர்களுக்கே சிலை வைத்து மரியாதை செய்கிறார்கள் ஏன்னு வாதம் தாங்கள் அறிந்ததுதான். நாத்திகர்கள் அதற்கு நாங்கள் பெரியாரை வணங்கவில்லை என்று கூறினாலும் சிலைக்கு மாலையிடுவதன் மூலம் அவரை நினைவு கூர்வதும் யாரவது அச்சிலையை சேதப்படுத்தினால் கோபம் கொள்வதும் மதவாதிகள் சிலை மீது காட்டும் அக்கறையை போல் உள்ளதே….நாத்திகர்கள் சிலையின் ரூபத்தில் பெரியாரை காண்பதும் சிலை வணங்கிகள் கல்லில் கடவுளை காண்பதும் ஒன்று தானே ?

  285. அல்ல, நண்பர் பெரியாரியன்,

    சிலை வைப்பது அறவே கூடாது என்பது ஒரு மதத்தின் நிலைப்பாடு. ஆனால் போற்றுதலுக்குறியவர்களுக்கு சிலை வைப்பதும், நினைவு கூரப்படுவதும் உலகெங்கிலுமிருந்து வரும் வழக்கம். ஒரு மதம் கூறுகிறது என்பதற்காக அதை தவிர்க்க வேண்டும் என்பது அவசியமில்லை. தங்களின் மத நிலைப்பாடுகளை பொது உண்மை போல் சித்தரிப்பது மதவாதிகளின் உத்திகளில் ஒன்று. அந்த வகையில் தான் சிலை வைப்பதே தீதான காரியம் போல பேசுகிறார்கள். ஒரு சிலையை கடவுளாக உருவகப்படுத்தி வழிபடுவதும், ஒருவர் சமூகத்துக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் விதமாக சிலவைப்பதும் ஒன்றல்ல. அதுபோலவே சிலை குறித்து ஒரு ஆன்மீகவாதியின் உணர்வும், ஒரு பகுத்தறிவாளனின் உணர்வும் ஒன்றல்ல. சிலையை சேதப்படுத்தினால் இருவருமே கோபம் கொள்கிறார்கள் என்பது சிலை இருப்பதனால் ஏற்படும் உணர்வல்ல, சேதப்படுத்துபவர்கள் இரண்டு இடங்களிலுமே மதிப்பவர்களை அவமதிக்கிறார்கள் என்பது தான். அதேநேரம் சிலை வைத்தேதான் தீரவேண்டும் என்று கட்டாயம் ஒன்றுமில்லை. சிலை வைத்து நினைவுகூர்வதை விட சமூக முன்னேற்றத்துக்கான அவரின் பங்களிப்பு சரியாக இருக்குமாயின் அதை நடைமுறைப்படுத்துவதே சரியானது. சிலை வைப்பது அவசியமில்லை என்று கூற வேண்டுமாயின் அதை சரியான கண்ணோட்டத்திலிருந்து கூற வேண்டும். பெரியாருக்கு சிலை வைப்பதை விட அவர் கருத்துக்களை நடைமுறையில் கொண்டு வருவேண்டும் என்றால் ஏற்றுக் கொள்ளலாம். எங்கள் மதம் ஏற்றுக் கொள்ளாது எனவே சிலை கூடாது என்றால் அதை மறுப்பதில் தவறொன்றுமில்லை.

  286. நண்பரே,

    சிலை என்பது பின்னாளில் வழிபடுவதற்கு (கடவுளாக) ஒன்றானதாக ஆகிவிடாதா?

  287. நண்பர் அபு,

    மதவாதிகளின் கூற்றை எப்போதுமே ஐயப்படுங்கள், அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். சிலை வைப்பதினால் புதிதாக ஒரு கட்வுளோ, மதமோ தோன்றி விடுமா? சிலைகள் இல்லாவிட்டால் கடவுள் நம்பிக்கையோ, மதப்பிடிப்போ அற்றுப் போய் விடுமா? கடவுளும் மதமும் ஒரு சிலை வைத்ததினால் தோன்றியது என்று ஏதேனும் ஒரு வரலாற்று நூலில் படித்திருக்கிறீர்களா? அவைகளுக்கெல்லாம் சமூகப் பின்னணி வேண்டும். சமூகத் தேவைகளிலிருந்து தான் கடவுளோ மதமோ தோன்றியிருக்கிறதே ஒழிய, சிலையினாலோ, தனிப்பட்ட ஒரு செயலினாலோ தோன்றிவிடுவதில்லை. ஆண்டான் அடிமைக் காலகட்டத்தின் கொடூரங்களும், நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் வதைகளுமே கடவுளும் மதமும் தோன்றி வளர்வதற்கான தேவையைக் கொடுத்தன. என்று முதலாளித்துவம் தொடங்கியதோ அப்போதே கடவுளோ மதமோ தோன்றுவதற்கான சமூகத் தேவையை அது செரித்து விட்டது. இனி புதிதாக கடவுளோ, மதமோ தோன்றப் போவதில்லை. இப்போது இருக்கும் மதங்களும் கடவுளும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதற்காகவே தக்கவைக்கப் பட்டிருக்கின்றன. மதவாதிகளுக்கு என்றுமே வரலாற்று அறிவோ, சமூகப் புரிதலோ இருந்ததில்லை, இருக்கப் போவதில்லை. அதனால் தான் அவர்கள் ஒரு கற்சிலையால் புதிதாக போட்டிக்கு ஒரு மதம் தோன்றிவிடும் என்று பீதியூட்டுகிறார்கள். அவர்கள் கற்சிலை கூடாது என்கிறார்கள் என்றால் அதன் பொருள் அவர்களின் மதம் அதை தடுத்திருக்கிறது என்பதால் மட்டுமே, இன்னொரு கடவுளோ அதன் மூலம் மேலும் குழப்பங்களோ தோன்றிவிடக்கூடாதே எனும் அக்கரையினால் அல்ல. எப்போதுமே மீன்பிடிப்பவர்கள் முள்ளைக் காட்டி மீன் பிடிப்பதில்லை புழுவைக் காட்டித்தான் மீன் பிடிக்கிறார்கள். இன்னொரு கடவுள் தோன்றிவிடுவார் என்பது புழு. அந்தப் புழுவைக் காட்டி எதை பிடிக்க எண்ணுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அப்போது தான் நீங்கள் தூண்டிலில் மாட்டாமல் தப்பிக்க முடியும்.

  288. வணக்கம் தோழர்,
    குலாம் அவர்களுக்கு அளித்த பதிலில் “கம்யூனிசம் தனியொரு நாட்டில் ஏற்படவும் முடியாது.” என்று கூறியிருந்தீர்கள்.இதை பற்றி விரிவாக கூறமுடியுமா. ?

  289. கருத்து சுதந்திரம் என்பதின் வரையறை என்ன?ஆதாரம் இல்லாமல் கூட யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம் என்பதா?நடைமுறையில் விமர்சனத்திற்கு உள்ளாகிறவர்கள் எங்கள் மீது அவதூறு கூறுகிறார்கள் என்று கூறி கொண்டு வன்முறையில் இறங்கும் போது அவர்களை கண்டிக்கும் அனைவரும் தனது மனைவியின் நடத்தையையோ அல்லது தனது தாயின் நடத்தையையோ பற்றி ஒருவன் ஆதாரம் இல்லாமல் உளரும் போது அவனை அழைத்து விவாதிப்பதில்லையே?அவனை தாக்க தானே செய்கிறார்கள்?ஆக கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு தானே?இதை சற்று உதாரணங்களுடன் விளக்கவும்.

  290. வணக்கம் மது,

    கம்யூனிசம் என்பது ஆட்சி முறையைக் குறிக்கும் சொல்லல்ல, ஓர் உன்னதமான சமூகத்தைக் குறிக்கும் சொல். பொதுவில் சோவியத் யூனியன், சீனாவை கம்யூனிச நாடுகளாக குறிப்பிடுவர், அதன் பொருள் அந்த நாட்டின் மக்கள் கம்யூனிச சமூகத்தில் வாழ்ந்தார்கள் என்பதல்ல. சோசலிச ஆட்சிமுறை இருக்கும் நாடுகளைத்தான் கம்யூனிச நாடுகளாக குறிப்பிடுகின்றனர். இதுவரையிலான ஆட்சி முறைகளெல்லாம் வர்க்கத்தை நீடிக்க வைக்கும் அடிப்படையிலான ஆட்சி முறைகள், சோசலிசம் மட்டுமே வர்க்கங்களை படிப்படியாக நீக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறை. இந்த ஆட்சி முறை ஒவ்வொரு நாடாக ஏற்பட்டு படிப்படியாக வர்க்க வேறுபாடுகள் நீக்கப்பட்டு நாட்டு எல்லைகள் உட்பட மனித இனத்தின் மாபெரும் பாய்ச்சல் முன்னேற்றத்துக்கு எதிராக உள்ள அனைத்து பேதங்களும் மக்களிடமிருந்து நீங்கி, உச்சமான அறிவுடன், உயரிய வாழ்முறையுடன் இருக்கப்போகும் சமுதாயமே கம்யூனிச சமுதாயம். இது தனி ஒரு நாட்டில் ஏற்பட முடியுமா? சோசலிசமே தனியொரு நாட்டில் ஏற்படும், கம்யூனிசமல்ல. முதலாளித்துவ சமூகத்திலிருந்து கம்யூனிச சமுதாயத்துக்கு உயர்ந்து செல்லும் இடைக்கட்டம் தான் சோசலிசம்.

  291. வணக்கம் செந்தமிழ் செல்வன்,

    கருத்து சுதந்திரம் என்பது நினைத்ததை வெளிப்படுத்தும் உரிமை. அதன் எல்லை என்ன? தனி ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது சமூகத்தை மீறியதாக இருக்கக் கூடாது. சமூகத்தை மீறி யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது, கருத்துச் சுதந்திரம் உட்பட. ஆனால், அதை இன்னொரு மனிதனை பாதிப்பது என்பதாக சுருக்கிக் கொள்கிறார்கள். விமர்சனம் என்றாலே அது யாருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகிறதோ அவரை அவருடைய கருத்தை பாதிக்க வேண்டும். எதையும் பாதிக்காத விமர்சனம் என்று எதிவுமில்லை. உங்களுடைய பார்வை கோணலாக இருக்கிறது என்று கூறினால், கூறப்பட்டவரை அது பாதிக்கவில்லை என்றால் அங்கு பரிசீலனையே எழாது. ஆனால் விமர்சனங்களை எதிர் கொள்ளும் திராணியற்றவர்கள் விமர்சனங்களையே அவதூறு என்று அவதூறு செய்கிறார்கள். விமர்சனம் தனி மனிதன் மீதும் இருக்கலாம் பொதுவானதாகவும் இருக்கலாம் எதன் மீதும் இருக்கலாம். அதை பரிசீலித்தால் தான் அது அவதூறா? விமர்சனமா? என்பது விளங்கும். ஆனால் விமர்சனம் கூடாது எனக் கருதுபவர்கள், விமர்சனங்களை எதிர் கொள்ள முடியாதவர்கள் விமர்சனந்த்தையே அவதூறு என்பது தான் நடந்து கொண்டிருக்கிறது.

    நீங்கள் குறிப்பிடும் எடுத்துக்காட்டையே எடுத்துக் கொள்வோம். தனிப்பட்ட விசயங்களை யார் விமர்சனம் செய்ய முடியும்? தனிப்பட்ட விசயங்களை அந்த வட்டத்துக்கு உட்பட்டவர்கள் தாம் விமர்சனம் செய்ய முடியும். தாயையோ தாரத்தையோ மகனோ கணவனோ விமர்சனம் செய்தால் யாரும் கோபம் கொள்வதில்லையே பரிசீலனை தானே செய்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட வட்டத்துக்கு வெளியிலுள்ள யாரும் விமர்சனம் செய்தால் கோபம் வருகிறது. இதை பொதுவான மனிதர்களுக்கு நீட்ட முடியாது. ஒரு மனிதர் பொதுவானவராக, வழிகாட்டியாக கருதப்படுகிறார் என்றால் அவரை விமர்சிக்க எவருக்கும் உரிமையுண்டு. அந்த விமர்சனத்தை பரிசீலித்து அதை அவதூறு என்பதை விளக்க வேண்டும். தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கலாம். அதேநேரம் பொதுவான ஒருவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் கிடையாது. விமர்சனத்தை எதிர்கொள்ள மறுப்பவர்கள் தாம் பொதுவானதையும், தனிப்பட்டதையும் குழப்புவார்கள், விமர்சனத்தை தடுக்க வன்முறையைக் கையாள்வார்கள். ஒன்று விமர்சனமா அவதூறா என்பது விமர்சனத்தின் நோக்கம், ஆதாரம் உண்மைத்தன்மை ஆகியவற்றைப் பொருத்தது. இவைகளைப் பரிசீலிக்காமல் விமரசனங்களை முடக்க நினைத்தால் அவர்களை முடக்க வேண்டியது தான்.

  292. வணக்கம் செங்கொடி.
    திறமைக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம்- சோசியலியம்.
    திறமைக்கேற்ற வேலை, தேவைக்கேற்ற ஊதியம்- கம்யினிசம்.

    1.இதில் தேவை என்பதன் அளவு என்ன?
    யார் அதை நிர்ணைப்பது?

    2.ஒவ்வொரு தனி மனிதனின் தேவை வெவ்வேறாக இருக்கும்.பிறகு எப்படி பொதுவுடைமை சமுதாயத்தில் பொருளாதார வகையில் சமத்துவம் இருக்கும்?
    தயவுசெய்து விளக்கவும்.

  293. வணக்கம் ரமேஷ்,

    திறமைக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம்- சோசலிசம்.
    திறமைக்கேற்ற வேலை, தேவைக்கேற்ற ஊதியம்- கம்யூனிசம். இவைகளை ஐயமற புரிந்து கொள்ள வேண்டுமென்றால் சோசலிசம் கம்யூனிசம் குறித்த புரிதல்கள் அதிகரிக்க வேண்டும். சோசலிசம் பாட்டாளி வர்க்க ஆட்சிமுறை, கம்யூனிசம் அரசு எனும் அமைப்பே உதிர்ந்து போன நிலை. சோசலிச அரசு சுரண்டல் நோக்கமற்று உழைப்புக்கான ஊதியத்தை மக்களுக்கு வழங்கும். சோசலிச அரசு என்பது வெறுமனே ஒரு நிர்வாக அமைப்பாக இல்லாமல் அதுகாறும் மக்களிடம் இருந்த வர்க்கபேத, சுயநல, சுரண்டல் அமைப்புகள் திணித்து வைத்திருக்கும் அத்தனை மனிதகுல உயர்வுக்கு எதிரான சிந்தனைகளையும், பழக்க வழக்கங்களையும், நீதிகளையும் அடித்து நொறுக்கும் போராட்டமாகவும், முழுமையான மனிதகுல ஒற்றுமைக்கும், பாய்ச்சல் முன்னேற்றத்துக்கும் தேவையான அத்தனை அம்சங்களையும் உருவாக்கும் போராட்டமாகவும் இருக்கும். இந்த அடிப்படையில் ஒருவனின் திறமைக்கும், விருப்பத்துக்கும் ஏற்ற வேலையாகவும், அந்த வேலையின் மதிப்புக்கு ஏற்ப பால் பேதமின்றி சோவியத் அரசு நிர்ணயம் செய்யும் கூலி வழங்கப்படும். இதன் தொடர்ச்சியில் கம்யூனிச சமுதாயத்தின் போது முதலாளித்துவ சமூகம் உள்ளிட்ட அனைத்து சுரண்டல் அமைப்புகளும் திணித்து வைத்திருக்கும் நச்சு சிந்தனைகளும் நீங்கி மனிதர்கள் உயரிய சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். இங்கு தேவை என்பது அவரவர்கள் செய்யும் வேலையினால் இழக்கும் சக்தியை திரும்பப் பெறுவதற்கு தேவையான உணவு, ஓய்வு, உள்ளிட்ட இதர பயன்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும். உணவு குழந்தை வளர்ப்பு உள்ளிட்டவை தனிப் பொறுப்பாக இல்லாமல் பொதுப் பொறுப்பாக இருக்கும். இன்றைய முதலாளித்துவ சமூகச் சூழலில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏன் ஏற்றவற்றமான தேவைகள் இருக்கின்றன என்றால் இந்த சமூக அமைப்பே ஏற்ற வற்றமானது தான். கம்யூனிச சமூகத்தின் மனிதர்கள் அனைவரும் சமம் எனும் உணர்வு (கவனிக்கவும் சிந்தனை மட்டும் அல்ல) நிறைந்திருக்கும் என்பதால் ஏற்றவற்றத்தின் சுவடுகளே அங்கு இருக்காது. என்றால் தனித்தனியான மனிதர்களுக்கு தனித்தனியான தேவைகள் இருக்குமா? இன்றைய நிலையில் சாதாரண செல்லிடப்பேசியை பயன்படுத்தமுடியாத நிலையில் பல கோடிப்பேர் இருக்கும் உலகில்; அன்றைய தினம் புதிதாய் விளம்பரப்படுத்தப்பட்ட அதிநவீன செல்லிடப்பேசி சில மணி நேரங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதை பெருங்குறையாக கருதி கைசேதப்படும் மனிதர்களும் இருக்கிறார்கள். இந்த ஏற்றவற்றம் ஏகாதிபத்தியம் திட்டமிட்டு பரப்பிய நுகர்வுக் கலாச்சாரத்தின் விளைவுதானேயன்றி மனிதர்களின் இயல்பல்ல. இதை மனித இயல்பு என்று புரிந்திருப்பதால் தான் வெவ்வேறு தனி மனிதர்களின் தேவை வெவ்வேறாக இருக்கும் என்ற எண்ணம் பிறக்கிறது. தனக்கு எது தேவையோ அதை வாங்குவதற்கு உழைக்க வேண்டும் என்பதும்; அனைத்தும் பொதுவாக இருக்கும் உலகில் சமூக முன்னேற்றத்திற்காக தன்னுடைய உழைப்பை தந்து விட்டு தனக்கு தேவைப்படும் எதையும் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வது என்பதும் முற்றிலும் வேறுபாடான நடைமுறைகள். இந்த நடைமுறையின் ஆழம் புரியாததால் தான் ஒவ்வொரு மனிதர்களுகும் வெவ்வேறு தேவைகள் இருக்குமே எனும் சிந்தனை பிறக்கிறது. தெளிவாகச் சொன்னால் இது முதலாளித்துவ சிந்தனை முறையை அப்படியே பெயர்த்தெடுத்து கம்யூனிச சமூகத்துக்கு பொருத்திப் பார்ப்பது போன்றதாகும். ஒரே நோக்கம் கொண்ட வடிவத்தில் மட்டுமே வித்தியாசப்பட்ட இருவேறு சமூகங்களான நிலப்பிரபுத்துவ சமூகத்தின் சிந்தனிகளே முதலாளித்துவ சமூகத்துக்கு பொருந்தாதபோது; அடிப்படையில் நேரெதிர் மாற்றம் கொண்ட முதலாளித்துவ சிந்தனையை கம்யூனிச சமூகத்திற்கு பொருத்திப் பார்ப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? எனவே,
    திறமைக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம், திறமைக்கேற்ற வேலை, தேவைக்கேற்ற ஊதியம் என்பதை முதலாளித்துவ சிந்தனை முறையின் வெளிச்சத்திலிருந்து புரிந்து கொள்ள முயலக் கூடாது.

  294. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் செலவுக் கணக்குகளை தெரிந்துகொள்ள இந்த போலி ஜனநாயக அரசால் எப்படி அனுமதிக்க முடிகிறது?

  295. வணக்கம் விபின்,

    குடிமைப் பொருட்கள் வழங்கல் எனும் துறை மூலம் சற்றே குறைந்த விலையில் மக்களுக்குஉணவுப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள். ஒரு போலி ஜனநாயக அரசால் இதை எப்படி செய்ய முடிகிறது? பல்வேறு பொருட்களுக்கு மானியம் வழங்கி ஓரளவு மக்களின் சுமையைக் குறைக்கிறார்கள். ஒரு போலி ஜனநாயக அரசால் இதை எப்படி செய்ய முடிகிறது? இது போன்ற கேள்விகளுக்கு என்ன பதில் இருக்க முடியுமோ அது தான் உங்கள் கேள்விக்கான பதிலும். ஒரு மக்கள் ஜனநாயக அரசால் மக்களுக்கு விரோதமான எதையும் செய்ய முடியாது. ஒரு முதலாளித்துவ சர்வாதிகார அரசால் முதலாளிகளுக்கு விரோதமாக எதையும் செய்துவிட முடியாது. ஆனால் இந்திய அரசு புதிய ஜனநாயக அதாவது மக்கள் ஜனநாயக அரசு அல்ல, அதேநேரம் முதலாளித்துவ சர்வாதிகார அரசும் அல்ல. ஆனால் உள்ளடக்கத்தில் முதலாளித்துவ சர்வாதிகார அரசாகவும் உருவத்தில் ஜனநாயக அரசாகவும் தோற்றமளிக்கிறது. அதனால் தான் அதனை போலி ஜனநாயக அரசு என்கிறோம். முதலாளிகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து கடத்துவதற்கு வசதியாக கிராமப்புற சாலைகளை சீரமைத்துவிட்டு கிராம மக்களின் முன்னேற்றத்துக்காக உள்கட்டமைப்பு வசதியை பெருக்கியிருப்பதாக வெளியில் காட்டுவார்கள். இவர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் போகப்போக மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறது.மக்கள் வெறுப்படைகிறார்கள், கோபமடைகிறார்கள். இதற்கு எதிராக தாங்கள் ஜனநாயக அரசைத்தான் நடத்துகிறோம் என்று காட்டுவதற்காக அவ்வப்பொது எதையாவது செய்து தொலைக வேண்டிய நிர்ப்பந்தம் நேர்கிறது. அப்படியாக, நாங்கள் வெளிப்படையான நிர்வாகத்தை நடத்துகிறோம் என்று காட்டுவதற்காக கொண்டு வரப்பட்டது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். வெறும் தகவலை வைத்துக் கொண்டு உங்களால் ஒன்றும் செய்து விட முடியாது என்று அவர்களுக்கு தெரியும். எப்படி தகவல் கொடுப்பது, பிரச்சனை வந்தால் அந்த தகவல்களுக்குள்ளே எப்படியான சொல் விளையாட்டுகளை நடத்துவது என்பதும் அவர்களுக்குத் தெரியும். மட்டுமல்லாது இதில் ஏகப்பட்ட விலக்குகளும், நிர்வாக ரகசியம் என்ற பெயரில் தகவல் அளிப்பதிலிருந்து விலக்கும் இருக்கிறது. என்றாலும் இதன் மூலம் சில சாதகங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இந்த சட்டத்தின் சாதக பாதகங்களை அலசிப்பார்த்து ஆச்சிரியமைடைவதை விட இந்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்ட நோக்கம், இந்த சட்டத்தின் தன்மைகள் போன்றவற்றை அலசிப்பார்த்து தெளிவடைவது தான் தேவையானது.

  296. இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்-பற்றி உங்களின் கருத்து என்ன?

  297. மனித சங்கிலி போராட்டம் வீரியமிக்க
    போராட்ட வடிவமா?
    இது வரலாற்றில் எப்பொழுது துவங்கப்பட்டது?

  298. வணக்கம் ரமேஷ்,

    என்ன சொல்வது.. ..? போலிகள் உருவாக்கிய போலி அமைப்புகள். ஆனால் அதில் செயல்படும் அணிகள் மெய்யாகவே ஏதோ வகையில் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். போலிகலின் தவறான வழிகாட்டல்களினால் திரிந்து சென்று கொண்டிருப்பவர்கள். அவர்கள் படிக்க வேண்டும், தொடர்ந்து கற்க வேண்டும். கற்பவைகளை நடைமுறைகளோடு பொருத்தி, எழும் ஐயங்களை அவர்களின் தலைமைகளை நோக்கி கேள்விகளாக எழுப்ப வேண்டும். பதில்கள் வந்தால் .. .. .. அதை நேர்மையுடன் பரிசீலித்துப் பார்த்தால் .. .. .. போலிகளின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

  299. வணக்கம் வீரன்,

    மனிதச் சங்கிலிப் போராட்டம் என்பது போராட்ட வடிவமா என்பதிலேயே ஐயம் உண்டு, அதன் பிறகு தான் அதன் வீரியத்தை அளவிட வேண்டும். நடப்பிலிருக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்தில் எதையும் மனுப் போட்டு தேவைகளை நிறைவேற்றிக் கொள் என்பது தான் உள்ளீடான விருப்பம். ஆனால் ஜனநாயகம் என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறதே, அதற்காகத் தான் அந்த அமைப்பு முறையை ஒப்புக் கொண்டு, அதற்குள்ளிருந்து, அதை எள்ளளவும் மீறி விடாமல் நடத்தப்படும் போராட்ட வடிவங்களை அனுமதித்திருக்கின்றன.

    போராட்டம் என்பது, எதற்காக நடத்துகிறோமோ அதை சரி செய்யச் சொல்லி யாருக்கு எதிராக அல்லது எந்த அமைப்புக்கு எதிராக நடத்துகிறோமோ அவரை அல்லது அந்த அமைப்பைதை நிர்ப்பந்திக்க வேண்டும். அவ்வாறு நிர்ப்பந்தம் செய்யாத வடிவங்களை போராட்டமாக கருத முடியாது. எடுத்துக்காட்டாக, தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் மக்களுக்கு தொடர்ந்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறது அரசு. ஊரெங்கும் சாக்கடைகளை கொசு உற்பத்திக்கு கூடங்களாக அமைத்து வைத்துக்கொண்டு, மழை நீர் வடிவதற்கு வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நின்று தொல்லை தருவதை சரி செய்யாமல், அப்போதைக்கப்போது குப்பைகூளங்களை அகற்றாமல் நாட்கணக்காக கொட்டி வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அரசுக்கு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எங்களுக்கு அறிவுரை கூறும் யோக்கியதை எங்கிருந்து வந்தது என்று கிளர்ந்தெழுந்து மக்கள் நகராட்சி அலுவல்கங்களை, அரசு அலுவல்கங்களை முற்றுகையிட்டு விளக்கம் கோரினால் அது போராட்டம். அதுவே, ஊரிலுள்ள குப்பை, தேங்கிய நீர், சக்கடை அனைத்தையும் அள்ளி நகராட்சியின் முன், அரசு அலுவலகங்களின் முன் கொட்டி, ஊரை இப்படி வைத்துக்கொண்டு யாரை சுத்தம் செய்யச் சொல்கிறாய் என்று கேட்டால் அது புரட்சிகரமான போராட்டம் அல்லது வீரியமான போராட்டம். மாறாக, அசுத்தங்களை அகற்றுங்கள் என்று ஒரு மணி நேரம் மனிதச் சங்கிலியாக நின்றால் .. .. .. இது போராட்டமல்ல மனுக் கொடுப்பதையே வேறு வடிவில் செய்வது.

    பொதுக் கூட்டம் ஆர்ப்பாட்டம் போன்றவைகள் ஒரு பிரச்சனையை மக்களிடம் விளக்கி விழிப்புணர்வூட்டி போராட அழைப்பதை நோக்கமாக கொண்டிருக்கும். ஆனால் மனிதச் சங்கிலி மக்களுக்கு பிரச்சனையை விளக்கவும் செய்யாது, போராட அறைகூவல் விடவும் செய்யாது, மட்டுமல்லாது, பொதுப் பிரச்சனைக்காக நாம் போராடி விட்டோம் என்று மக்களை மயக்கம் கொள்ளவும் வைக்கும். அவ்வாறன்றி எங்காவது, ஏதாவது ஒரு பிரச்சனையில் அதை தீர்க்கக் கோரி உறியவர்களை மனிதச்சங்கிலி நிர்ப்பந்தம் செய்தால் அந்த இடத்தில் மட்டும் அதை பரிசீலிக்கலாம்.

    வரலாற்றில் இந்த வடிவம் எப்போது தொடங்கியது என்பது குறிப்பாக தெரியவில்லை. அதேநேரம் முதலாளித்துவ அமைப்பு அதிகாரத்திற்கு வந்த பிறகு தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

  300. வணக்கம் செங்கொடி
    1.உழைப்புக்கு தகுந்த கூலி எவ்வாறு நிர்ணைக்கப்படுகிறது? எவ்வாறு நிர்ணைக்கப்பட வேண்டும்?
    2.உழைப்புக்கு தகுந்த கூலி கொடுத்துவிட்டால் முதலாளித்துவ சமூகம் நீடிக்கலாமா?
    விளக்கவும்.

  301. வணக்கம் ரமேஷ்,

    உற்பத்தியைச் செய்வதற்கு மனிதன் செலவிடும் சொந்த ஆற்றல் தான் உழைப்பு எனப்படுகிறது. இன்றைய முதலாளித்துவ உலகில், உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பில் சொற்பமான ஒரு பகுதியை அந்த உற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளிக்கு கொடுப்பது தான் கூலி எனப்படுகிறது. இதை முதலாளியே தீர்மானித்துக் கொள்கிறான். மட்டுமல்லாது வேலையில்லாமல் வெளியில் இருக்கும் பட்டாளத்தைக் காட்டி கொடுக்கும் கூலியையும் படிப்படியாக குறைக்கிறான். இதற்கு மாறாக கூலி எவ்வாறு அளவிடப் பட வேண்டும் என்று கேட்டால், அதற்கு முன்னர் சில புரிதல்களுக்கு வருவது அவசியம்.

    உற்பத்தி என்பது இன்றைய உலகில் லாபத்திற்காக செய்யப்படுகிறது. ஆனால் தேவைக்காக செய்யப்பட வேண்டும். தேவைக்காக செய்யப்படும் போது; கூலி என்பது, உற்பத்தியை செய்வதற்கு எவ்வளவு ஆற்றலை அவன் இழந்தானோ அந்த ஆற்றலை மீளவும் பெறுவதற்கு அவன் எவற்றையெல்லாம் நுகர வேண்டும், எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும் போன்றவற்றை ஈடு செய்யக் கூடிய மதிப்பாக இருக்க வேண்டும். இதுவே லாபத்திற்காக உற்பத்தி செய்யப்படும் போது; கூலி என்பது, உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் சந்தை மதிப்பில் அந்தப் பொருளின் உற்பத்தி மதிப்பை கழித்தது போக மீதமிருக்கும் தொகையை உரிமையாளனும், தொழிலாளியும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

    இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு ஐயம் தோன்றலாம், முதலீடு போட்ட முதலாளியும், எதையுமே போடாத(!) தொழிலாளியும் சமமாக பிரித்துக் கொள்வது அநீதியான பங்கீடு என்று. இது அநீதியான பங்கீடல்ல என்றாலும் வேறொரு வகையில் அநீதியான பங்கீடு தான். ஒரு பொருளின் உற்பத்தி மதிப்பு என்பது என்ன? மூலப் பொருளின் விலை, கருவிகள் இயந்திரங்களின் தேய்மான மதிப்பு, போக்குவரத்து செலவினங்கள், உற்பத்தி செய்யப்படும் இடத்துக்கான வாடகை ஈவு, பராமரிப்புச் செலவு, தொழில்நுட்பச் செலவு, உற்பத்திக்கும் பரிமாற்றத்துக்கும் இடைப்பட்ட தேக்கத்தின் இழப்பு மதிப்பு, முதலீட்டுக்கான வட்டி, எதிர்கால உற்பத்திக்கான காப்புச் செலவு உள்ளிட்ட அனைத்தும் அடங்கியது தான் உற்பத்தி மதிப்பு. இந்த உற்பத்தி மதிப்பை விட மடங்குகளில் அதிகமாக அந்தப் பொருளின் சந்தை மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. இதில் தொழிலாளியும் முதலாளியும் மட்டுமே உயிர் மதிப்புகள் ஏனைய அனைத்தும் கணக்கீட்டு மதிப்புகள். ஆனால் முதலாளி தொழிலாளியையும் ஒரு கணக்கீட்டு மதிப்பாக கருதிக் கொண்டு சொற்பமான அளவை கூலியாக கொடுத்து விட்டு மீதமுள்ள பெரும்பகுதியை தானே எடுத்துக் கொள்கிறான். இது அநீதி அல்லவா? அதனால் தான் முதலாளியும் தொழிலாளியும் உற்பத்தி மதிப்பு போக ஏனையவற்றை சமமாக பிரித்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது.

    என்றாலும் இன்னொரு வகையில் இது அநீதியானது தான், எப்படி? பொருளின் உற்பத்தியில் தொழிலாளி தன் ஈடு இணையற்ற மனித ஆற்றலை செலவிடுகிறான். முதலாளி முதலீடு இடுகிறான். ஆனால், முதலாளி தான் இடும் முதலீட்டை ஒவ்வொரு பொருளின் உற்பத்தியிலிருந்தும் திரும்பப் பெற்றுக் கொள்கிறான். உற்பத்தி மதிப்பு கணக்கிடும் போதே முதலாளி தன்னுடைய முதலீட்டை எந்த அளவு இழக்கிறானோ அதை திரும்பப்பெறும் விதத்தில் தான் உற்பத்தி மதிப்பு கணக்கிடப் படுகிறது. அதாவது, ஒரு பொருளின் உற்பத்தியில், முதலீட்டின் இழப்பு அடங்கியிருக்கிறது. தெளிவாகச் சொன்னால், உற்பத்திமதிப்பு என்பது முதலாளியின் மொத்த முதலீட்டில் எவ்வளவை பயன்படுத்தி அந்தப் பொருள் உற்பத்தி செய்யப்பட்டதோ அது. இப்போது அந்தப் பொருளின் சந்தை மதிப்பை கவனியுங்கள், உற்பத்தி மதிப்பு + லாபம் அல்லவா? சந்தை மதிப்பிலிருந்து உற்பத்தி மதிப்பை கழித்து விட்டோமென்றாலே அங்கு முதலாளியின் முதலீடு அவனுக்கு திரும்பக் கிடைத்து விட்டது என்பதே பொருள். முதலாளிக்கு அவனுடைய முதலீடு திரும்பக் கிடைத்து விட்ட நிலையில் தொழிலாளிக்கு அவன் செலவிட்ட ஆற்றல் திரும்பக் கிடைக்கவில்லை. சந்தை மதிப்பிலிருந்து உற்பத்தி மதிப்பை கழித்து விட்டு சமமாக பங்கிடுகிறோம் எனும் போது அங்கு தன்னுடைய முதலீடு திரும்பக் கிடைத்த நிலையில் முதலாளியும், தான் செலவிட்ட ஆற்றல் திரும்பக் கிடைக்காத நிலையில் தொழிலாளியும் நிற்கிறார்கள். ஆக சமமில்லாத நிலையில் நிற்கும் இருவரிடையே சமமான பங்கீடு என்பது அநீதியல்லவா?

    இதை இன்னும் ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். அப்போது முதலாளியின் சொத்துகள் நட்ட ஈடின்றி பறிக்கப்பட வேண்டும் எனும் கூறியிலிருக்கும் உண்மை உங்களுக்கு பளீரென விளங்கும்.

    சரியான கூலி கொடுத்தால் முதலாளித்துவம் நீடிக்கலாமா? இது ஒரு முரண்பாடான கேள்வி. கூலி என்றாலே அது உற்பத்தியின் பலன் சமமாக பகிரப்படவில்லை என்பதையே குறிக்கும். சரியான கூலி என்றால் அங்கு லாபம் இருக்காது. லாபம் இல்லையென்றால் முதலாளித்துவம் உயிரோடிருக்க முடியாது. முதலாளித்துவம் என்பது இன்றைய நிலையில் சமூக அவலம். உலகின் மொத்த வளத்தை தனி நபரை நோக்கி குவிக்கும் இலக்குடன் இயங்குவது. தன் இயல்பில் ஒட்டுமொத்த மனிதகுல வளர்ச்சியை தடுக்கிறது. எனவே மக்கள் அதை தூக்கி வீசுவார்கள். இதை கூலிப் பிரச்சனையோடுமட்டுமே குறுக்கிவிட முடியாது.

  302. what is your opinion about the show ‘solvathu elaam unmai ‘ telecasted in the channel zee tamil tv ?

  303. வணக்கம் வீரன்,

    தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகள் எந்த அடிப்படையைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்று பார்த்தால் அதிக பார்வையாளர்களை ஈர்த்து டி.ஆர்.பி மதிப்பை அதிகப்படுத்திக் காட்டி அதன் மூலம் விளம்பர லாபங்கள் பெறுவது, இருக்கும் பலவிதமான சேனல்களில் தங்களுக்கான உயரிய இடத்தைப் பிடிக்கும் தொழில் போட்டி. இந்த இரண்டைத் தவிர வேறு எந்த காரணமும் நோக்கமும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்குக் கிடையாது. இதில் சமூக நோக்கு நிகழ்ச்சிகளாக காட்டப்படும் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகள் தொடங்கி முழுநேர செய்தி சேனல்கள் வரை அனைத்தும் அடக்கம். எதை காட்ட வேண்டும் என்பதில் மட்டுமல்ல, எதைக் காட்டக் கூடாது என்பதிலும் இந்த நிறுவனங்கள் அரசின் ஊது குழல்களாகவே செயல்படுகின்றன. இதற்கு வெளியே சமூக அக்கரையுடன் நிகழ்ச்சிகளை தயாரிப்பதாக கூறுவதெல்லாம் ‘உட்டாலக்கடி’ தான்.

    சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகள் ஒரு பிரச்சனையை எந்தக் கோணத்தில் அணுகுகின்றன? மனித உறவுகளினிடையே ஏற்படும் பிணக்குகள், சண்டைகள், சச்சரவுகள் எல்லாம் அந்தந்த மனிதர்களுக்குள்ளே இருந்து மட்டுமே தொடங்குகின்றன என்றால் உலகம் இன்னேரம் எல்லா பிணக்குகளும் நீங்கி மகிழ்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மனிதர்களிடையே ஏற்படும் பிணக்குகள் சமூகத்தில் இருக்கும் பிரச்சனையின் நுணிகள் தான். மறைந்திருக்கும் நூல்கண்டை வெளிக் கொண்டுவரும் விதத்தில் எந்த நிகழ்ச்சியும் அமைக்கப்படுவதில்லை. மாறாக நுணிகளில் இருக்கும் திருகல்களை சரி செய்ய முயல்வதாய் போக்கு காட்டுகின்றன.

    எடுத்துக்காட்டாய் நிலத்தகராறு காரணமாக அண்ணன் தம்பிக்குள் நடக்கும் வெட்டுக் குத்து நடந்தாய் எடுத்துக் கொள்வோம். விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்றானபின் ரியல் எஸ்டேட் முதலாளிகளிடம் விற்று லாபம் பார்க்கும் போட்டியாக அது தொடங்கியிருக்கும். இதை அந்த நிகழ்ச்சி, தவறு யாரிடம் அண்ணனிடமா தம்பியிடமா? யார் அதிகம் உணர்ச்சி வசப்பட்டது? என்று மட்டுமே பார்க்கும். மாறாக, விவசாயம் பொய்த்துப் போகாமல் இருந்திருந்தால் இருவரும் ஒற்றுமையாய் விவசாயம் செய்திருந்திருப்பார்களே, பலநூறு ஆண்டுகளாக அப்படி விவசாயம் பார்த்தவர்கள் தானே. அவர்களிடையே பிரிவினை எண்ணம் எந்த அடிப்படையிலிருந்து தொடங்கியது? ஏன் விவசாயத்துக்கு அரசுகள் உதவி செய்வதில்லை? ரியல் எஸ்டேட் தொழில் எப்படி அரசு உதவியுடன் படு வேகமாக விவசாய நிலங்களை விழுங்கி வருகிறது? வேறு என்னென்ன சமூகக் காரணிகள் இதில் தொழிற்படுகின்றன? போன்ற எதையும் அந்நிகழ்ச்சிகள் ஆராயாது. இதை இது போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல செய்திகளில் கூட இந்தப் போக்கை நீங்கள் பார்க்கலாம். ஒரு போராட்டச் செய்தியை காண்பித்தால் ஏன் போராடுகிறார்கள்? போராடுவதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? போராடுபவர்களின் நியாயங்கள் என்ன? அது சரியா தவறா? அது குறித்த அரசின் அணுகுமுறை சரியா? தொடர்புடைய துறை அதிகாரிகள் வராமல் ஏன் எல்லாவித போராட்டத்துக்கும் காவல்துறை வந்து கலைத்துவிட முற்படுகிறது? இது போன்ற கேள்விகள் எதையும் எழுப்பாமல் மேலோட்டமாய் இதற்காக போராடுகிறார்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு என்று பரபரப்பு காஅட்டுவார்கள்.

    தொலைக்காட்சிகள் மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து, அவர்கள் சமூகமாய் வர்க்கமாய் ஒன்றிணைவதை தடுத்து தனிமனிதர்களாய் அவர்களை சுருங்கச் செய்வதையே நோக்கமாய் கொண்டிருக்கின்றன. இதில் எந்த நிகழ்ச்சிக்கும் விதிவிலக்கு இல்லை.

  304. தோழர் செங்கொடி அவர்களுக்கு, இந்த கீழ்வரும் கட்டுரையை என் நண்பரின் ஃபேஸ் புக் தளத்தில் பார்த்தேன் சற்று அதிர்ந்து கூட போனேன். இதில் வரும் அறிவுறைகள் எதுவும் இவர்களோடு ஒட்டாமல் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. இதைப்பற்றி உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

    //டமிலில்ஃஉரன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( பாபநாசம் )
    நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.

    1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.

    2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?

    3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.

    4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!

    5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

    6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

    7. பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பறிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.

    8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.

    9. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் அறியட்டும்.

    10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.

    11. புத்தகம், நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.

    12. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.

    13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.

    14. இறைவேதமாம் திருக்குர் ஆனை பொருளறிந்து ஓதும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். நபிமார்களின்; அவர்கள்தம் மனைவிமார்களின் மற்றும் ஸஹாபிப்பெண்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளை அறிந்து கொள்ளும்படிச் செய்யுங்கள்.

    15. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்! மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்//

  305. நண்பரே, சௌதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் குறித்து உங்கள் கருத்து என்ன?

  306. சௌதியில் ஒரு குழந்தையை கொன்ற குற்றத்திற்காக ரிஸானா எனும் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் இங்குள்ள ஊடகங்களும் அறிவுத் துறையினரும் காட்டும் அதீத கவனம் தேவையற்றது என்பதே என் கருத்து. ஒரு நாடு விதிக்கும் மரண தண்டனைகள் அனைத்துமே சரியாகவும் நேர்மையாகவும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. சிலவோ, பலவோ அந்தந்த நேர மக்களின் உணர்வுகளுக்கும், ஆளும் வர்க்கங்களின் நலனுக்கும் உகந்தவாறே இருக்கும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் கூறலாம். நேரடியாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மரணதண்டனை விதிக்கிறோம் என்று போகிறது தீர்ப்பு. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? இதை விடுத்து சிறுமிக்கு மரண தண்டனை விதிப்பது கொடூரம், ரிஸானா கொலை செய்யவே இல்லை என்பன போன்ற வாதங்களுடன் இந்த பிரச்சனையை விவாதிப்பது சரியானதாக இருக்காது. ஆனால் இதில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் சௌதிக்கு செல்லும் பணிப் பெண்களின் பணிச் சூழல் இது போன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறதா என்பது தான். மெய்யாகவே சௌதியில் வீடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்கள் மிகக் கொடுமையாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ரிஸானா விவகாரம் சௌதியில் புதிதல்ல. இது போன்ற ஏராளமான நிகழ்வுகள் பணிப்பெண்களை தொடர்புபடுத்தி அங்கு நிகழ்ந்துள்ளன. விவாதிக்க வேண்டியதும், களைய்ப்பட வேண்டியதும் அந்த அடிப்படையைத் தான். கீழ்க்காணும் கட்டுரையைப் படித்துப் பாருங்கள் உங்களுக்கு புரியும்.

    சௌதி எனும் நரகத் தீயில் பெண் தொழிலாளர்கள்
    http://www.vinavu.com/2010/08/13/saudi-women-labours/

  307. செங்கொடி ஆசிரியருக்கு இயற்பியல் அறிவு இருந்தால் மட்டும் இதை படிக்கவும்

    இறைமறையின் காலம் பற்றிய செய்திகளையும்,.. .. .. ஆண்டுகளாகும்.

  308. தமிழ் ஈழ விசயத்தில் ம க இ கவின் நிலைப்பாடு என்ன ? சமீபத்தில் நடந்த மாணவ போராட்டம் விடுதலை புலிகளை ஆதரித்தும் ஈழ விடுதலை வேண்டியும் முன்னெடுத்து நடந்தது…..ஆனால் நீங்கள் விடுதலை புலிகளை எதிர்க்கிரீர்கள் ஒன்று பட்ட இலங்கையை ஆதரிக்கிறீர்கள்…..

    எனில் நீங்கள் மாணவ போராட்டத்தை ஆதரிப்பது முரண் நகையாக தோன்றுகிறதே ???

    இதன் ரீதியில் எதாவது கட்டுரை எழுதி உள்ளீர்களா

  309. நண்பர் கமால் ஷிஃபான்,

    கால வெளியில் சிக்கிக் கொண்ட அல்லா எனும் கட்டுரைக்கான மறுப்பான இந்த நீள பின்னூட்டத்தை குறிப்பிட்ட அந்த காலவெளியில் சிக்கிக் கொண்ட அல்லா எனும் கட்டுரையில் இடாமல் இங்கு வந்து இட்டது ஏன்?

    நீங்கள் காப்பி பேஸ்ட் செய்த இந்த நீளமான பின்னூட்டம் நீங்களாகவே எழுதியதல்ல. கார்பன் கூட்டாளி எனும் ஒருவர் எழுதிய பதிவைத்தான் நீங்கள் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறீர்கள். இதை கார்பன் கூட்டாளி என்பரே குறிப்பிட்ட அந்தப் பதிவில் சுட்டி கொடுத்து அதற்கு பதில் கூறி அதன் தொடர்ச்சியின் பதில் கூறாமல் ஓடிப் போனது கார்பன் கூட்டாளி தான்.

    இதை என்னுடைய பதிவின் பின்னூட்டங்களைப் பார்த்தால் புரியும். அல்லது நீங்கள் எங்கிருந்து காப்பி செய்தீர்களோ அந்த கார்பன் கூட்டாளி பதிவிலும் என்னுடைய பின்னூட்டம் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம்.

    சும்மா செக்கு மாட்டுத்தனமாக சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிராமல் உருப்படியாய் எதையாவது செய்ய முயலுங்கள்.

  310. நண்பர் msm,

    உங்கள் கேள்வியில் பிழையான தகவல்கள் இருக்கின்றன. மாணவர் போராட்டங்கள் விடுதலைப்புலிகளை ஆதரித்து நடத்தப்படவில்லை. போர்க்குற்றங்களுக்கான தண்டனை, பொது வாக்கெடுப்பு மூலம் ஈழ விடுதலை இவை தான் மாணவர் போராட்டங்களின் கோரிக்கைகள். மறுமுனையில் புலிகளை எதிர்க்கிறோமா? ஒன்றுபட்ட இலங்கையை ஆதரிக்கிறோமா? இரண்டுமில்லை. புலிகளின் அரசியல் தவறுகளை விமர்சிக்கிறோம். புலி ஆதரவாளர்களின் பிழைப்புவாதத்தையும், ஓட்டுப்பொறுக்கி அரசியல் விளையாட்டுகளையும் அம்பலப்படுத்துகிறோம். ஈழத்தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என்கிறோம். இவைகளை வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்பது போல் பார்க்கக் கூடாது.

    புலிகள், புலி ஆதரவாளர்கள், தமிழகத்து தமிழினவாதிகள் ஆகிய அனைவரும் கடந்த 30 ஆண்டுகளாக ஈழ விடுதலை குறித்து கூறியதென்ன? இப்போது நடந்ததென்ன? இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருக்கிறது. இந்த முரண்பாடுகளுக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள் யாவர்? ஆனால் அவர்களோ இன்றும் கடந்த காலங்களில் செய்த அதே தவறுகளைச் செய்து மக்களை ஏய்த்து புதிய புதிய பிம்பங்களை ஏற்படுத்திக் காட்டுவதின் மூலம் தங்களின் தவறுகளை மறைத்துக் கொள்கிறார்கள். ஆனால், நாங்கள் எதை எச்சரித்துக் கொண்டிருந்தோமோ அது இன்று நடந்திருக்கிறது.

    நிலமைகளை அரசியல் ரீதியாக ஆய்வு செய்வதற்குப் பதிலாக தங்களின் கற்பனையான விருப்பங்களை கூறிச் செல்வது என்றுமே சரியான முடிவாக இருக்க முடியாது. மாணவர்களின் தன்னெழுச்சியான, உணர்ச்சி மேலிடும் போராட்டங்களையும் இந்த அடிப்படையில் பகுத்துப் பார்க்க வேண்டும். ஆய்வுகளுக்குப் பதிலாக ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பன போன்ற எளிமையான முடிவுகளை முன்தள்ளினால் இலக்கை அடைய முடியாது. இது குறித்து பல கட்டுரைகள் வினவில் வெளிவந்திருக்கின்றன. இங்கு ஈழம்: 80களின் எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம் (https://senkodi.wordpress.com/2013/03/19/ealam/) எனும் கட்டுரையை படித்துப் பாருங்கள்.

  311. வணக்கம், வடகிழக்கு மாநிலங்கள்,காஷ்மீர் ஆகியவற்றிற்கு உங்கள் தீர்வு என்ன? சுதந்திரம் கொடுத்து விடுவதா?

  312. சவுதியில் இருந்துகொண்டு எப்படி இவ்வளவு தீவிரமாக எழுத முடிகிறது? அங்கே யாருக்கும் தமிழ் தெரியாதோ?

  313. நண்பர் சொர்ணமித்ரன்,

    காஷ்மீர், வடகிழக்கு மாநில மக்களுக்கு எது தேவை என்பதை தென்மாநிலத்தில் இருக்கும் ஒருவனோ, ஒரு அமைப்போ முடிவு செய்ய முடியாது. அவர்களுக்கு எது தேவை என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஈழத்தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதைக்கூட நாம் முடிவு செய்யக் கூடாது. அவர்கள் முடிவு செய்ய வேண்டும் அதற்காக அவர்கள் போராட வேண்டும். அவர்கள் கோரிக்கைகள் சரியானதாக இருந்தால் அதை ஆதரித்து, அந்த கோரிக்கை நிறைவேற இங்கிருந்து என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். ஒடுக்கப்படும் மக்களின் விடுதலையை வேறெங்கோ இருந்து இறக்குமதி செய்து கொடுக்க முடியாது. தமிழ் மொழி பேசும் ஒரே இன மக்கள் என்பதற்காக ஈழத்தில் ஒரு நிலையும், காஷ்மீர் வடகிழக்கில் இன்னொரு நிலையும் எடுக்க முடியுமா?

    காஷ்மீர், வடகிழக்கு மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக இந்திய பிராந்திய வல்லாதிக்க அரசு அவர்களை இந்தியக் கொட்டடியில் வைத்து ஒடுக்கிக் கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து அவர்கள் போராடுகிறார்கள். அதை ஆதரிப்பது தான் எல்லா இடங்களிலும் இருக்கும் புரட்சிகர இடதுசாரிகளின் கடமை. இந்தியாவிற்குள் இருந்தால் இந்தியாவின் அடக்குமுறையை அம்பலப்படுத்துவதும் கடமையாகிறது. இந்தியாவில் இருக்கிறோம் என்பதற்காக இந்தியாவின் அடக்குமுறையை ஆதரிப்பதும் ஏற்றுக் கொள்வதும் முறையற்ற செயல். இதற்குப் பெயர் தேசப்பற்றும் அல்ல.

    இதற்கு அப்பாற்பட்டு தேசியஇனப் பிரச்சனைக்கு தீர்வு என்றால் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை தான் சரியான தீர்வு.

  314. tamililqurandotcom intha websitla neenga sonna quran karuthukalai thedungal ungaludaiya pulupu makkaluku theriyum, ungaluku thairiyam irunthal pothu medaiyil vivatham nadatha thayara?

  315. மின்னஞ்சல் மூலமாக நண்பர் வினோத் குமார் அனுப்பிய கேள்வி.

    கேள்வி பதில் பகுதிக்கான கேள்வி,

    அன்புள்ள செங்கொடி ,

    எழுத்தாளர் சுஜாததா பற்றிய அவர் மனைவியின் பேட்டியை படிக்கும்பொது ஆயசம் எற்படுத்துகிறாது..பாரதியை பற்றி மணிமாறின் பாரதிய ஜனதா படிக்குபோது ஏற்பட்ட அதே ஆயாசம்..

    பாரதியை பற்றி பாரதி படத்திலேயே சிறிய சிறிய சந்தேகம் வந்தது. அன்னிபெசண்டு அம்மையார் கொல்கத்தாவில் பாரதியிடம் பெண்கள் சுதந்திரம் பற்றி பேசும் நீர் அதே கருத்துடைய இந்த கூட்டத்துக்கு உம் மனைவியை ஏன் அழைத்துவரவில்லை என கேட்டதை படித்ததும் சுத்தமாக புரிந்துகொண்டேன்.

    எனினும் போன தலைமுறை இளைஞர்கள் அதாவது இப்போது 35-45 வரையில் இருக்கும் இப்பொதய நடுத்தர வயதினரிடம் இணையம் பிரபலமாகும்முன் சுஜாதாவின் அறிவியல் அறிவு மிக பிரபலம் என்பதை மறுப்பதற்கில்லை.

    அப்படிப்படவரும் தன் மனைவியை வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாக , சமையல் காரியயாக நடத்தினர் என்பதை மேற்படியார் ஏற்றுகொள்ள இயலாமல் பிதற்றுகின்றனர்.

    உண்மையில் 50% மக்கள் தொகையில் உள்ள பெண்கள் இப்படி நடத்தபடுவது பக்கவாதத்தால் பாதிக்கபட்ட மனிதனின் நிலையில் தான் சமூகம் இருப்பதற்கொப்பக எனக்கு படுகின்றது…

    உண்மையில் ஆண்கள் பெண்கள், எல்லாரும் எல்லாம் பெற என்ன வழி?

    அவரி பேட்டியுடனான இட்லிவடை பக்கதை இணைத்துள்ளேன்.. உங்களீன் கருத்தை எதிர் பார்க்கிறேன்.
    நன்றி

    வினோத்

  316. நண்பர் வினோத் குமார்,

    எந்த ஒரு மனிதரையுமே என்ன செய்தார் என்பதைக் கொண்டே மதிப்பிட முடியும், வேண்டும். சுஜாதாவைப் பொருத்தவரையில் தமிழ் மக்கள் அவர் மீது கொண்டிருக்கும் மதிப்பு பிம்பமாக்கலின் விளைவாக கிடைத்த மதிப்பு என்பதை எப்போதும் அவர் தம் எழுத்துகளில் வெளிப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறார். எடுத்துக் காட்டாக, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பார்ப்பன கருத்தியலை நைச்சியாமாக தம் கதைகளில் வெகுமக்கள் ஏற்கும்படியான விதத்தில் எழுதியது, பார்ப்பன அக்கிரகார பண்பாட்டை அழகியல் நேர்த்தியுடன் தம் படைப்புகளில் கொண்டுவந்தது. தாம் பொருப்பேற்றிருந்த ஒரு வார இதழில் நடுப்பக்கத்தில் இரண்டாம் தர நடிகைக்கு சிவப்பு ஜாக்கெட் அணிவித்து உட்பொருளுடன் வக்கிரமாக ‘சிவப்பு என்றாலே பிளவு தானா’ என்று எழுதியது என ஏராளம் சொல்லலாம். இவைகளையெல்லாம் மறைத்துத்தான் ஜனரஞ்சகமான எழுத்துநடை, அறிவியல் என்று திரை போடுகிறார்கள்.

    மதிமாறன் பாரதியின் உண்மை முகத்தை வெளிக் கொண்டுவந்தால் இது இலக்கிய நடை இல்லை என்கிறார்கள். ஜல்லியடித்தல், உட்டாலக்கடி என்று எழுதினால் அது ஜனரஞ்சகமான எழுத்து நடையா? அறிவியல் என்றால் ஜூவி யில் வந்த ஏன் எதற்கு எப்படி தான் அவருக்கு அறிவியல் பட்டாடை போர்த்தியது. அதற்கு முன்பு அவர் எழுதிய கதைகளில் பெரிதாக அறிவியல் எட்டிப்பார்க்கவில்லை. அதிலும் பெரிய குழு ஒன்று வாசகர்கள் அனுப்பும் கேள்விகளுக்கான பதிலை இணையத்திலிருந்தும் நூல்களிலிருந்தும் தேடி எடுத்துத்தரும் அதை படித்துப்பார்த்து என்னுடைய நடையில் எழுதியது மட்டும் தான் நான் செய்தது என்று அவரே அதன் முன்னுரையில் எழுதியிருக்கிறார். ஆக அமெரிக்கா சென்றாலும் அறிவியல் பேசினாலும் எங்கும் அவர் பார்ப்பனியத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார் என்றால் அவரை எப்படி மதிப்பிடுவீர்கள்? ஒரு பார்பனியவாதி தன் மனைவியை பிள்ளை பெறும் இயந்திரமாக கருதியிருந்திருந்ததில் வியப்படைய ஒன்றுமில்லை.

    பெண்கள் சக மனிதப் பிறவிகள் என்று உணர்வதை தடுக்கும் அம்சங்கள் சமூகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது? இந்தியப் பண்பாடு, நுகர்வுக் கலாச்சாரம் இரண்டுமே பெண்ணை அடிமையாக, போகப் பொருளாக பார்க்கத் தூண்டுகின்றன. இந்த இரண்டையும் துடைத்தெறியும் ஒன்று தான் பெண்ணை சக பிறவியாக மதிக்கும் நடத்தும். அந்த இரண்டையும் துக்கியெறியும், பகரமாக ஏறத்தாழ்வற்ற சமூகத்தை நோக்கமாக கொண்டிருக்கும் அமைப்பு எதுவோ அது தான் பெண்ணுக்கு சக உரிமையும், சம உரிமையும் பெற்றுத் தரும். இவை புரட்சிக இடதுசாரி இயக்கங்களைத் தவிர வேறு எதிலும் உண்டா? தேடிப் பாருங்கள், கிடைக்காது போயின் அவ்வமைப்புகளில் மார்க்சிய லெனினிய இயக்கங்களில் செயல்பட வாருங்கள்.

  317. thangal munpu oru pathivil nilaiyaga iyankum aatral enru ethum illai enru pathintheergal aanal sooriya uthayam maraiuo irauo pagal ena nilaiyaga iyankugirathea (therinthu vaikalam ena keatkirean ma…..va……ku……udan searthuvidathirgal)