அறிவிப்பு

நூல்களைக் காதலிப்போம்

அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே,

இந்த வலைதளத்தில் நூலகம் பகுதி மிகவும் சிறப்பாக செயல்பாட்டில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதில் உங்களுடைய பங்களிப்பையும் இணைத்துக் கொண்டு இன்னும் சிறப்பாக எப்படி செயல்படுத்தலாம் என சிந்திக்கிறேன். இது குறித்த உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இதை நீங்கள் இந்த பகுதியின் பின்னூட்டமாக தெரிவிக்கலாம். அல்லது, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டாம் என கருதுவோர் senkodi002@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்.

மேலும் நூலகம் பகுதி பற்றிய என்னுடைய சில யோசனைகளை செயல்படுத்துவது குறித்தே இந்த அறிவிப்புப் பலகை.

  1. இங்கு வெளியிடப்படும் நூல்களில் சில பதிப்பக காப்புக்கு உட்பட்டவையாக இருக்கலாம். அவ்வாறான நூல்களை பொதுவெளியில் வெளியிடலாமா? என்பது மையமான ஒரு கேள்வி. பொதுவாக இது வணிக நோக்கில் வெளிப்படும் கேள்வியாகவே இருக்கிறது. முதலில், இவ்வாறு வெளியிடுவது வாசகர்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி வளர்க்கத் தூண்டுகிறது என்றே நான் கருதுகிறேன். எனவே, இது வணிக நோக்கத்திற்கும் உதவுகிறது என்பதே உண்மை. தவிரவும், ஒரு நூலை படைப்பது என்பது தனி ஒருவரின் முற்று முழுதான உரிமை என்பது சரியல்ல. எவ்வாறென்றால் தனி ஒருவரின் எழுதும் ஆற்றல், கற்பனை வளம், குறிப்பிட்ட படைப்பின் உள்ளீடு, வடிவம் ஆகிய அனைத்தும் சமூகத்திலிருந்தே அவருக்கு கிடைக்கிறது. ஆகவே, சமூகத்திலிருந்து பெற்றதை சமூகத்திற்கு திரும்ப அளிப்பது என்பது சரியான நடவடிக்கையே. இந்த இரண்டு காரணங்களையும் முன்வைத்தே பதிப்பக காப்புக்கு உட்பட்ட நூல்களும் இங்கே வெளியிடப் படுகின்றன. இவைகளை மீறி இவ்வாறு வெளியிடுவது தவறு என பதிப்பக நிறுவனங்கள் கருதுமாயின் அவற்றை எனக்கு தெரிவித்தால் குறித்த நூலை நூலை நீக்கி விடுவதில் எனக்கு மறுப்பு ஒன்றுமில்லை என்பதையும் இங்கே வெளிப்படுத்திக் கொள்கிறேன்.
  2. இதுவரை நூல்களை பதிவிறக்க சுட்டியை கொடுத்து பதிவிறக்கி பயன்படுத்துங்கள் என்று வெளியிடுவதோடு முடித்துக் கொண்டிருந்தேன். சிலர் தனக்கு மின்னஞ்சலில் அனுப்பக் கோரியபோது அதை மறுதலித்தே வந்திருக்கிறேன். காரணம் தரவிறக்கி கொள்ளலாமே, அதில் என்ன பிரச்சனை என்று கேட்டிருக்கிறேன். ஆனால் அவ்வாறு கேட்டவர்கள் குறிப்பிட்ட நூலை பதிவிறக்கி படித்திருப்பார்களா என்று ஐயம் எழுகிறது. எனவே, இனி மின்னஞ்சலில் அனுப்பக் கேட்போருக்கும் தயக்கமின்றி அனுப்பி வைக்கலாம் என்று எண்ணியுள்ளேன். எனவே, அவ்வாறு கோர விரும்புவோர் மேற்கண்ட மின்னஞ்சலில் அல்லது பின்னூட்டத்தில் தெரியப் படுத்தலாம்.
  3. இத் தளத்தை தினமும் இருநூற்றுக்கும் அதிகமானோர் பார்வையிடுகிறார்கள். அவர்களில் இங்கு வெளியிடப்படாத, வெளியிட விரும்பும் நல்ல நூல்களை மின்னூல் கோப்பாக வைத்திருப்போர் மேலுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் அல்லது நூல்களுக்கான இணைய இணைப்பை (லிங்க்) எனக்கு தெரிவித்தால், அவைகளை பரிசீலித்து இங்கு வெளியிடலாம் என எண்ணியுள்ளேன்.

எனவே, தோழர்களே, நண்பர்களே, உங்களை ஆலோசனைகளை அள்ளி விடுங்கள். இப்படி சொல்லியதும் ஆலோசனைகளை கொட்டிக் குவித்து விடுவீர்கள் என்றெல்லாம் நான் கற்பனை வளர்த்துக் கொள்ளப் போவதில்லை. வாய்ப்பிருப்பவர்கள் தெரிவியுங்கள், மின்னூல்களையும் அனுப்பித் தாருங்கள்.

நன்றி.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s