காஷ்மீர் எனும் ஒரு தேசம் மூன்று நாடுகளுக்குள் கடந்த வாரத்திலிருந்து காஷ்மீர் ஒரு செயற்கையான கொதிப்பு நிலைக்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டிருந்தது. இதற்கு ஏதேதோ காரணங்களை கூறிக் கொண்டிருந்தார்கள். அமர்நாத் யாத்திரைப் பாதையில் பாகிஸ்தான் புதை குண்டுகளை புதைத்து வைத்திருந்தது என்றார்கள். ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்றார்கள். ஏழு பேரை சுட்டுக் கொன்று விட்டோம் வெள்ளைக் கொடிகளுடன் வந்து பொறுக்கிக் கொண்டு செல்லுங்கள் என்றார்கள். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் அவர்கள் பாகிஸ்தானியர்கள் இல்லை என்று … காஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: அகதி
இந்தியப் பட்டியிலிருந்து முதலில் விடுபடுமா காஷ்மீர்?
கடந்த பத்து நாட்களாக காஷ்மீர் எரிந்து கொண்டிருக்கிறது. அதனை எரியவைத்துக் கொண்டிருக்கும் இந்திய இராணுவத்தின் கொடூர முகம் கண்டு சமூக நலன் பேணும் உள்ளங்களும் எரிந்து கொண்டிருக்கின்றன. உணர்வின் உந்துதலால் எடை மிகக் கூடிப் போயிருக்கும் காஷ்மீர் இளைஞர்களின் கையிலிருக்கும் சிறுகற்களும் எரிந்து கொண்டிருக்கின்றன. இந்த நெருப்பின் அண்மைக்கால தொடக்கப் புள்ளியாய் இருந்தது புர்ஹான் வானி. குளிர் ஏரிகளும், பனிமலையுமாய் சொர்க்க பூமியாய் தெரிந்த காஷ்மீர் தன் மேலோட்டைப் பிய்த்துக் கொண்டு எரிமலையாய் வெடித்துச் சீறிக் கொண்டிருக்கிறது … இந்தியப் பட்டியிலிருந்து முதலில் விடுபடுமா காஷ்மீர்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அய்லான் குர்தி – முதலைக் கண்ணீர் நாடகங்கள்
கடந்த வாரம் முழுவதும் உலகெங்குமுள்ள ஊடகங்களின் ஒட்டுமொத்தச் செய்தியும் இது தான் - உலகை உறைய வைத்த அய்லான் குர்தி. துருக்கியின் கடற்கரை ஒன்றில் மணலில் முகம் புதைந்தபடி குப்புறக் கிடந்த ஒரு சிறுவனின் உடல். இந்தப் புகைப்படம் வெளியானதிலிருந்து அகதிகளின் மேல் உலகின் கவனம் குவிக்கப்பட்டதைப் போல ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்போதும் அகதிகளை வரவேற்கும் ஜெர்மனியின் இளக்கம் எடுத்துக் காட்டப்படுவதில் தொடங்கி, உலக நாடுகள் அகதிகள் குறித்த தங்கள் பார்வையை மறுபரிசீலனை செய்ய … அய்லான் குர்தி – முதலைக் கண்ணீர் நாடகங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ரொகிங்கியா இனப்படுகொலைகளை முன்னிட்டு .. .. ..
உலக ஊடகங்கள் கண்களை மூடிக் கொண்டனவா? கடந்த பத்து நாட்களாக சமூக வலைத்தளங்களில் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் கேள்வி இது தான். ஊடகங்கள் ஜநாயகத்தை காக்கின்ற தூண்களில் ஒன்று என்றும், உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அவைகளை உலக மக்களின் முன் வைக்கும் கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது என்றும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உண்மையான தகவல்களை மக்களிடம் சேர்க்கும் முனைப்புடன் இருப்பவையே ஊடகங்கள் என்றும் மூடநம்பிக்கையில் இருப்பவர்கள் மட்டுமே மேற்கண்ட கேள்வியை எழுப்ப முடியும். அரசு … ரொகிங்கியா இனப்படுகொலைகளை முன்னிட்டு .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, சிங்கள இனவெறிப் பாசிஸ்டு ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக மாணவர் போராட்டம் தோற்றுவித்த பொதுக் கருத்தைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக, தாங்களும் மாணவர் கோரிக்கைகளை ஆதரிப்பது போல எல்லா ஓட்டுக் கட்சிகளும் நடிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, “இலங்கையின் மீது பொருளாதாரத் தடை, போர்க்குற்ற விசாரணை, பொது வாக்கெடுப்பு” என்று அடுத்தடுத்து சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றி, நடிப்பில் மற்றெல்லா ஓட்டுக் கட்சிகளை விஞ்சுகிறார். இராஜபக்சேவுக்கு எதிரா … ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை-ஐ படிப்பதைத் தொடரவும்.