கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்

  இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த நாடே மோடியின் ஆட்சி ஒழிய வேண்டுமென்கிறது. கஜா புயலால் வாழ்விழந்த தஞ்சை விவசாயிகள், சாகர் மாலா திட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்கள், பண மதிப்பழிப்பாலும், ஜி.எஸ்.டி-யாலும் தொழிலே அழிந்துபோன சிறு உற்பத்தியாளர்கள் – வணிகர்கள், இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்ற மோடியின் வாக்குறுதியால் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள், நீட் – தனியார் கல்விக் கொள்ளைக்கு இரையாகும் மாணவர்கள், பசுக்குண்டர்களால் வேட்டையாடப்படும் … கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?

நவம்பர் எட்டாம் தேதி மோடியிடமிருந்து கிளம்பிய பணத்தாள் மதிப்பிழப்பு எனும் ஓங்கலை (சுனாமி) மக்களின் வாழ்வாதாரத்தை வாரிச் சுருட்டிக் கொண்டது, இன்னமும் சுருட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடியும் அதன் வீழ்படிவுகளும், அரசும் அதன் காலாட்படைகளும் அது சரியான நடவடிக்கை என்று தடிக் கம்புகளால் நம்மை கனிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.   கடந்த ஆண்டின் இறுதி நாளன்று, மோடி விதித்த 50 நாள் கெடு முடிந்த பின்னரும் நிலமை சீரடையவில்லை என்பதால் மோடியைக் கண்டித்து இந்திய ஜனநாயக … பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஏன் அவர்களால் பதில் கூற முடியவில்லை?

கடந்த 6ம் தேதி நீதிமன்ற அடக்குமுறைக்கு எதிராக வழக்குறைஞர்கள் பேரணி சென்னையில் வெற்றிகரமாக நடந்தது.  ஊழலுக்கு எதிரான வழக்குறைஞர்களின் பேரணி, ஹெல்மெட் பிரச்சனை, விசாரணை என்ற பெயரில் மூத்த வழக்குறைஞர்களுக்கு அவமரியாதை. இந்த விசயத்தில் எந்த சட்ட, நீதிமன்ற மரபுகளும் பின்பற்றப்படாதது, எல்லாவற்றையும் விட, எட்டு மாதங்களுக்கும் மேலாக 43 வழக்குறைஞர்கள் வழக்குகளை நடத்த விடாமல் தடுக்கப்பட்டிருப்பது என, பல மாதங்களாக வழக்குறைஞர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தின் … ஏன் அவர்களால் பதில் கூற முடியவில்லை?-ஐ படிப்பதைத் தொடரவும்.

சட்டத்தைக் கூட மதிக்காத நீதிபதிகளை நாம் மதிக்க வேண்டுமா?

தமிழ்நாடு பல விசயங்களில் இந்தியாவுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது. இந்திய விடுதலைப் போர் தமிழகத்திலிருந்து தான் தொடங்கியது. பார்ப்பனீயத்துக்கு எதிராக சளைக்காமல் போராடியது, இந்தி திணிப்பை எதிர்த்தது என சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அட்டவணையில் புதிதாக இன்னும் ஒரு விசயமும் சேர்ந்திருக்கிறது. கடந்த 10/09/2015 அன்று மதுரையில் ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு நடத்திய நீதிபதிகளின் ஊழல்களுக்கு எதிரான பேரணி. அதன் முடிவில் ஊழல் நீதிபதிகளின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. நீதிபதிகளின் ஊழல் போக்கு … சட்டத்தைக் கூட மதிக்காத நீதிபதிகளை நாம் மதிக்க வேண்டுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே,   மே தினம் - முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை ரத்தம் சிந்தி போராடி நிலை நாட்டிக் கொண்ட நாள். எட்டு மணிநேர வேலை என்ற உரிமை மட்டுமல்ல, குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை உலகெங்கும் மக்கள் போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு போராடிப் பெற்ற பல உரிமைகள் இன்று நேரடியாக பறிக்கப்படுவதுடன், பல மறைமுகமான வழிகளிலும் நம் … தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுதந்திரம் என்றொரு கற்பிதம்

இன்று 64 ஆம் சுதந்திர தினமாம். உள்ளீடற்று சடங்காய் பின்பற்றப்படும் பண்டிகை போல் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 வந்துவிட்டால் சுதந்திரமும் நினைவுக்கு வந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் கொண்டாட்டங்கள் பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் நீட்டி முழக்கி வருகின்றன. சென்னையை மட்டும் 5000 காவலர்கள் பாதுகாக்கப் போகிறார்களாம். கண்காணிப்பு கேமராக்கள் ஆயுதப் படை உள்ளிட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் கொண்டாடப்படப்போகும் விழாவின் பெயர் சுதந்திர தின விழா. முரண்தொடைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது. சுதந்திரம் என்றால் என்ன? … சுதந்திரம் என்றொரு கற்பிதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.