பாசிச மோடி

பிரசன்னா, ராஜ் ரம்யா ஆகியோரின் கேள்விகளுக்கும், ஃபெரோஸ் அவர்களின் பின்னூட்டத்திற்குமான பதில்கள் தான் இந்த இடுகை. தோழர் செங்கொடி, ஆதிகால மனித சமூகம் பொதுவுடமை அமைப்பைக் கொண்டிருந்தது என பல ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். உங்களுடைய எழுத்துகளிலும் அக்கருத்து உள்ளது. எனவே, கார்ல் மார்க்ஸ் தன் எழுத்துகளின் மூலம் மீட்டுருவாக்கம் செய்த பொதுவுடமை கருத்தாக்கமானது, நமது ஆதி மனித சமூகம் கொண்டிருந்த ஒன்றுதானா? அல்லது அதன் அடிப்படையிலமைந்த, ஆனால் பல மாறுதல்களைப் பெற்ற ஒரு கருத்தாக்கமா? கார்ஸ் மார்க்ஸின் … பாசிச மோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.

அடிமை – பண்ணையடிமை வேறுபாடு என்ன?

தோழர் செங்கொடி,  ஆண்டான் - அடிமை சமூகத்திற்கும் நிலப்பிரபுத்துவ சமூகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? அதைப்பற்றி விளக்குமாறு அன்புடன்‍ கேட்டுக்கொள்கிறேன். திரு பிரசன்னா கேள்வி பதில் பகுதியிலிருந்து சமூக மாற்றம் என்பது அடிப்படையில் உற்பத்தி முறை மாறியதன் விளைவாக ஏற்படும் உற்பத்தி சக்திகளின் உறவு மாற்றத்தைக் குறிக்கும். ஆண்டான் அடிமை சமூகத்துக்கும், நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் என்றால் அதன் பொருள் அடிமை உற்பத்திமுறையில் இருந்த மக்களின் உறவுநிலைக்கும், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் இருந்த மக்களின் உறவு நிலைக்கும் இடையிலான … அடிமை – பண்ணையடிமை வேறுபாடு என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகம்மது தேன் குடித்த கதை

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 56 நபியே உம் மனைவியரின் திருப்தியை நாடி அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? .. .. .. குரான் 66:1   இப்படி ஒரு வசனம் குரானில் உண்டு. அல்லா அனுமதித்த எதை முகம்மது தம் மனைவிகளின் விருப்பத்திற்காக விலக்கினார்? என்றொரு கேள்வியை எழுப்பினால் விடையாகக் கிடைப்பது தான் முகம்மது தேன் குடித்த கதை. அதாவது முகம்மது தன் பல மனைவியர்களின் வீட்டில் முறைவைத்து … முகம்மது தேன் குடித்த கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.

மூத்திரம் மட்டுமே தெரிந்தவர்கள்

தன் மேலடித்த ஒற்றச் செருப்பால் இருவருக்கும் பயனில்லை என இன்னொரு செருப்பையும் ஏசிப் பெற்ற பகலவனே! இதோ, உன் படத்தின் மீதே குறி நீட்டுகின்றனர் அடிமையா நீங்கள் என்று யாரைக் கேட்டு நீ விரல் நீட்டினாயோ அவர்கள் நான் அடிமை தான் என்று உன் படத்தின் மீதே குறி நீட்டுகின்றனர். எவருடைய அழுக்கை கழுவ நீ மூத்திரப்பை சுமந்தாயோ அவர்கள் தன் மூத்திரத்தை தந்திருக்கிறார்கள். நீ நீயாக இருக்கிறாய் அவர்கள் அவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் யாராக இருப்பது? … மூத்திரம் மட்டுமே தெரிந்தவர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பகத் சிங்: அந்த வீரன் இன்னும் சாகவில்லை

 அந்த சிறுவன் நடந்து வருகிறான். சுற்றிலும் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த சூழலின் அழுத்தத்தை தாங்கும் வயதோ அல்லது உடல் பலமோ கொண்டவனாக அந்தச் சிறுவன் இல்லை. ஆயினும் அந்த சிறுவன் நடந்தான். அவனது கண்களில் குளமாய் தேங்கிய துக்க முத்துக்கள் சிதறி விழுகின்றன. சிதறிய முத்துக்கள் உள்ளக் கொதிப்பின் வெம்மையை படர விடுகின்றன. அதில், தோல்கள் கருகுகின்றனவோ என்று அய்யுறும் அளவு, ஆற்றாமையின் துயரம் அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.கரி மருந்தின் நாற்றமும், புதிய ரத்தத்தின் … பகத் சிங்: அந்த வீரன் இன்னும் சாகவில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

  இஸ்லாமிய நீதி வழங்களில் முஸ்லீம்களில் பேருவப்பாக கூறப்படும் சட்டங்கள் என்றால் அது குற்றவியல் சட்டங்கள் தான். இஸ்லாமியச் சட்டங்கள் இருந்தால் நாட்டில் கற்பழிப்பே நடக்காது என்பார்கள். திருட்டு அறவே ஒழிந்துவிடும் என்பார்கள். அப்படி என்ன சிறப்பு இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களில்? கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று கூறப்படும் ஹமுராபி காலத்துச் சட்டங்கள் தான். முகம்மது தான் வாழ்ந்த காலத்தின் போது 2,300 ஆண்டு பழமையாக இருந்த ஹமுராபி காலத்து பாபிலோனியச் சட்டங்களை சீர்திருத்தி மறுபதிப்பு … அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 1. மணச் சட்டம்

இஸ்லாத்தில் சட்டங்களுக்கு மிகுந்த முதன்மையான இடமுண்டு. அல்லா கூறும் சட்டங்களை மீறும் யாரும் இஸ்லாமியனாக இருக்கும் தகுதியை இழந்தவர்கனாகிறார்கள். மட்டுமல்லாது நியாயத் தீர்ப்பு நாளில் நரகத்திலும் வீழ்த்தப்படுவார்கள். இந்தச் சட்டங்களை மனிதர்களுக்காக இயற்றித் தந்தது அல்லா தான். மனிதர்களில் எவருக்கும் சட்டங்கள் இயற்றும் தகுதி இல்லை மட்டுமல்லாது அவைகளை மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ எந்த மனிதருக்கும் அறுகதை இல்லை. இதை குரான் வசனங்கள் 5:48; 5:50 தெளிவுபடுத்துகிறது,   .. .. .. எனவே அல்லாஹ் அருள் செய்ததைக் … அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 1. மணச் சட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 3

  ஆண்டான் அடிமை காலகட்டத்தில் அரேபிய தீபகற்பத்தில் வாழ்ந்த, பல அடிமைகளை உடமையாய் வைத்திருந்த ஓர் உயர் குல வணிகர், தம் வணிகர் குல மேலாதிக்கத்திற்காக உருவாக்கிய ஓர் அரசின் சட்டதிட்டங்கள் அடிமைமுறையை நீக்குவதை நோக்கமாக கொண்டிருந்தது என்பது இயல்பாகவே முரண்பாடுடையது. மட்டுமல்லாது நகைப்பிற்கும் இடமானது. இஸ்லாமே அடிமை முறையை ஒழித்தது எனும் மதவாதிகளின் புழகத்தை ஒதுக்கி வைத்து விட்டு அடிமைகள் குறித்து இஸ்லாம் என்ன கருத்து கொண்டிருந்தது என்பதை பார்க்கலாம்.   அடிமைகளும் அவர்களின் எஜமானர்களும் … அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 3-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 2

இஸ்லாம் அடிமை முறையை ஒழித்ததா? அடிமை முறையை ஒழித்துக் கட்டும் அவசியமோ தேவையோ முகம்மதுவுக்கு இருக்கவில்லை. மட்டுமல்லாது அடிமை முறையின் வரலாற்றுப் பார்வையோ, அது பின்வரும் காலங்களில் நீக்கப்பட்டு மாறுபாடடையும் என்றோ முகம்மது அறிந்திருக்கவில்லை. ஆனால் சில போதுகளில் தன்னால் போதிக்கப்படும் கட்டளைகளை மீறுபவர்களுக்கான தண்டனையாக, பரிகாரமாக அடிமையை விடுவிப்பது குறித்து பேசியிருக்கிறார். இந்த விடுவிப்பு என்பது அடிமை முறையை நீக்குவதோடு தொடர்புடையதா? முகம்மதோ அல்லது அவரால் இயம்பப்படும் அல்லாவோ அடிமை முறை மனித குலத்திற்கு எதிரானது … அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 1

இஸ்லாம் அனைவரையும் சகோதரர்களாகக் கருதுகிறது, இஸ்லாம் அடிமைத் தனத்தை ஒழித்தது, விடுதலையை தூண்டியது என்றெல்லாம் பலவாறாக பரப்புரை செய்து வருகிறார்கள் இஸ்லாமிய மதவாதிகள். ஆனால் இஸ்லாம் அடிமைத்தனத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இன்று ஒரு இஸ்லாமியன் ஒருவனை அடிமையாக வைத்திருந்து அவன் உழைப்பைத் திருடினாலோ, பெண்ணை அடிமையாக வைத்திருந்து பாலியல் ரீதியாக பயன்படுத்தினாலோ அதை இஸ்லாமிய அடிப்படையில் குற்றம் என்று கூற முடியாது. ஆனால், உலகின் எந்த நாட்டுச் சட்டமும் இவைகளை அனுமதிக்காது. இதை … அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமைகளும் 1-ஐ படிப்பதைத் தொடரவும்.