மகஇக வின் பாடல்கள் என்றால் உள்ளம் துடித்து எழும். பறையின் அதிர்வுகளைப் போல் மனம் அதிர்ந்து சோம்பலை உதறித் தள்ளி வீரெழும். ஆனால், நேற்று அந்த பாடலைக் கேட்ட போது உள்ளம் துணுக்குற்றுப் போனது. முனை மழுங்கி விட்டால் வாட்கள் கரும்புத் தோகை ஆகிவிடுமோ! மூளை மழுங்கி விட்டால் கோவன் கத்தார் ஆகி விடுவாரோ! கடந்த 7ம் தேதி ‘திராவிட மாடலாகும் இந்தியா’ எனும் தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் மகஇக நடத்திய … மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: அடையாள அரசியல்
கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?
சமூகம் தன் ஒவ்வாமைகளை உதறும் ஒரே வழியாக அறிவினை மட்டுமே கொள்ள முடியும். அவ்வகையில் தலித் என்ற அடையாளத்துக்கு வரலாற்று விளக்கங்களையோ வரிசைப்படுத்தப்பட்ட தரவுகளையோ அளிப்பதை இக்கட்டுரைகள் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக அவ்வடையாளம் பெருஞ்சமூகத்தில் உருவாக்கும் மிக நுண்ணிய அசௌகரியத்தை உணர்ந்து அதற்கான காரணங்களை ஆராய முயல்கிறது. அதன் வழியே தரவுகளும் சமூக அசைவுகளும் விவரிக்கப்படுகின்றன. தலித்துக்கள் குறித்து வாசிக்க ஒவ்வாமை உடைய பேரரறிவாளிகளும் அணுகுவதற்கு அஞ்சும் சிக்கலான அதே நேரம் மயக்கம் தரும் வசீகரமான மொழிநடையைக் … கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இலுமினாட்டி: நகைக்கவும் தகுதியற்றது
வணக்கம் ராஜ்ரம்யா, ஆம். நீங்கள் குறிப்பிடுவது போல இலுமினாட்டி எனும் சொல் சமூக வலைதளங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை விளக்குவதற்கு வேறொரு புள்ளியிலிருந்து தொடங்கலாம். ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து உலகெங்கும் தற்போது வலதுசாரி அமைப்புகள் தலை தூக்கி வருகின்றன. தேர்தல் வெற்றிகளை சம்பாதித்திருக்கின்றன. இதை ஆராய்வோர்கள், உலகின் இந்த போக்கு கம்யூனிசம் தோல்வியடைந்து வருவதன் குறியீடு என்கிறார்கள். அதாவது, கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் ஆதரவளிப்பார்கள். தங்களுடைய பிரச்சனைகளை கம்யூனிஸ்டுகள் மூலம் தீர்த்துக் கொள்ள … இலுமினாட்டி: நகைக்கவும் தகுதியற்றது-ஐ படிப்பதைத் தொடரவும்.