தமிழ்நாட்டில் அதிமுகவின் இடம் என்ன?

அதிமுக தோற்றத்தின் அரசியல், அதற்கு காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளின் துணை,  எம்ஜிஆரின் நாயக பிம்பம், ஜெயலலிதாவின் ஆதிக்கம்,  பாஜக, கொடநாடு, ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட அனைத்தையும் விளக்கும் காணொளி https://youtu.be/Zm7Zc7wK63g

வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்

முன்குறிப்பு: திமுகவின் ஊதுகுழல் என்பது தொடங்கி இன்னும் பலவிதமாக பட்டம் வழங்கப்போகும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் வாதங்களை முறையான மறுப்பை வழங்கிய பின் உங்கள் பட்டங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீண்ட நாட்களாக பேசப்பட்டுவந்த சேதி இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதயநிதி அமைச்சராக்கப்பட்டார். எதிர்பார்த்தது போலவே விமர்சனங்களும் தூள் பறந்து கொண்டிருக்கின்றன. அதைப் போலவே முட்டுக் கொடுத்தல்களும். இந்த வழமைச் சகதிகளுக்கு அப்பாற்பட்டு வாரிசு அரசியல் என்பதைப் பார்க்கலாம். முதலில், வாரிசு அரசியல் என்ற … வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

விசாரணை அறிக்கை: திமுக தொடங்கி வைக்குமா?

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரண்டு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை 2. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகச்சாமி அறிக்கை. இந்த இரண்டு அறிக்கைகளின் மீதும் சட்டமன்றத்திலும் வெளியிலும் ஊடகங்களிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற விசாரணை கமிசன்கள் மீது பெரிய மதிப்பு எதுவும் இருப்பதில்லை. காரணம், அவை நிகழ்வுகள் மீதான மக்களின் எதிர்ப்புணர்வு, அரசாங்கங்களின் மீதான எதிர்ப்புணர்வாக மாறிவிடாமல் ஆற்றுப்படுத்துவதற்காக அமைக்கப்படுபவை. மட்டுமல்லாது அந்த … விசாரணை அறிக்கை: திமுக தொடங்கி வைக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேனீர் விருந்தில் புறக்கணிப்பு சர்க்கரை

கடந்த சித்திரை முதல் தேதியன்று ஆளுனர் தமிழ்நாட்டு அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேனிர் விருந்து ஒன்றை அளித்தார். அந்தத் தேனீர் விருந்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கிடக்கையை வெளிப்படுத்தும் குறியீடாக அமைந்தது. பொதுவாக ஆளுனர் எனும் பதவியின் அதிகார வரம்பு என்ன? என்பது இங்கு எப்போதும் பேசு பொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆட்டுக்கு தாடி எதற்கு? எனும் கேள்வி மக்களை ஈர்த்த கேள்வியாக இங்கு உலவியதுண்டு. அண்மையில் மத்திய அரசா? ஒன்றிய அரசா? எது சரியான சொல் … தேனீர் விருந்தில் புறக்கணிப்பு சர்க்கரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

மே.2க்கு முன் ஏதேனும் நடக்குமா?

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021, வழக்கமான தேர்தலைப் போலல்லாமல் தனிச் சிறப்பான ஒரு தேர்தலாக அமைந்து இருந்தது. தேர்தல் புறக்கணிப்பை நடைமுறையாக கொண்டிருந்த பல புரட்சிகர இடதுசாரி அமைப்புகள், வசதியான இடங்களில் எல்லையைக் கடந்து தேர்தல் அரசியலுக்குள் நுழைந்திருந்தன. அவை நேரடியாக பரப்புரை செய்தது தொடங்கி சமூக வலைதளங்களில் செய்த பரப்புரை வரை தங்களுக்கு உகந்த வழிகளில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது யாருக்கு வாக்களிக்கக் கூடாது என மக்களை வாக்களிக்கத் தூண்டின. இந்த … மே.2க்கு முன் ஏதேனும் நடக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாறும் எம்.ஜி.ஆர்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 பரப்புரைகள் முடிந்து விட்டன. நாளை வாக்குப் பதிவு. இந்த பரப்புரையில் சங்கிகளை ஒத்த அதிமுகவினரிடம் இருந்து எதிர்கொண்ட முதன்மையான ஒரு கேள்வி, “எங்களால் கருணாநிதியை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியும், உங்களால் எம்ஜிஆரை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியுமா?” என்பது. உண்மை தான். நடைமுறையில் அப்படி ஒரு தடை இருக்கத்தான் செய்கிறது. எளிய மக்கள் மத்தியில் எம்ஜியாருக்கு இருக்கும் செல்வாக்கு அப்படி. கலைஞர் ஆட்சியையும் எம்ஜிஆர் ஆட்சியையும், நிர்வாக … நாறும் எம்.ஜி.ஆர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிம்பச் சிறை

எம்.ஜி.ஆர் - எதிர்க் கட்சிகளும் விமர்சிக்கத் தயங்கும் ஒரு பெயர். சிறந்த முதல்வர் என்பதால் அல்ல, அடித்தட்டு மக்களிடம் இவர் மீதான மயக்கம் இன்னமும் முடிந்து போய்விடவில்லை என்பதால். சாராய வியாபாரிகளும், ரவுடிகளும் உருமாறி அதிகாரம் மிக்கவர்களாக உலவரத் தொடங்கியது இவரிடமிருந்து தான். வெளிப்படையாக காவல்துறையின் அத்துமீறல்களை ஆதரித்ததற்கும் இவரே தொடக்கப்புள்ளி. ஆனாலும் மரணிக்கும் வரை அசைக்க முடியாத தலைவராய் வலம் வந்தார். அது எப்படி? என்று ஆராய்கிறது இந்த நூல். இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல், … பிம்பச் சிறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

பன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளும் மறக்கடிக்கப்பட்டு அதிமுக அடிமைக் கூடாரத்தின் கொள்ளைக் கூட்டத் தலைவனாக கோலோச்சப் போவது யார்? எனும் பிரச்சனையே முதன்மையான மக்கள் பிரச்சனையாக மாற்றப்பட்டது. ஊடக விலங்குகள் அப்படிக் கருதிக் கொண்டதால் மக்களும் அவ்வாறே கருதும்படி ‘வைத்து’ செய்யப்பட்டனர். ஆனால் மக்கள் பிரச்சனைகள் மேலும் மேலும் தீவிரமடைந்தன. அவற்றில் குறிப்பானதும், முதன்மையானதுமான பிரச்சனை விவசாயிகளின் மரணம்.   விவசாயிகள் மரணமடைவது இந்தியாவில் புதிய விடயமல்ல. கடந்த 25 ஆண்டுகளில் சற்றேறக் குறைய … பன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஓ.பி.எஸ் சசி பதவிச் சண்டை: அதிமுகவின் பிரச்சனையா?

மக்கள் அதிகாரம் பத்திரிக்கைச் செய்தி ஓ.பி.எஸ் சசி பதவிச் சண்டை: அதிமுகவின் அரசியல் நெருக்கடி மட்டுமல்ல. அனைத்து கட்சிகளும் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றன. அது மட்டுமல்ல நாட்டின் மொத்த அரசு கட்டமைப்பும் எல்லா நிறுவனங்களுமே இம்மாதிரியான நெருக்கடியில் சிக்கி, எதற்கும் தீர்வு காண முடியாத நிலைக்கு வந்துள்ளன. கால் வைக்கும் இடமெல்லாம் முள் குத்தும் நெருஞ்சிக் காட்டில் சிக்கிக்கொண்டன. எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும் தலைமை இல்லை. கேடுகெட்ட பன்னீர் சசிகலா போன்றோர்களைத்தான் உருவாக்கவும் முன்னிறுத்தவும் முடிகிறது. மங்காத்தா போல … ஓ.பி.எஸ் சசி பதவிச் சண்டை: அதிமுகவின் பிரச்சனையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜல்லிக்கட்டும் பொங்கலும் விவசாயிகளுக்கு உயிர் தருமா?

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இடையே பொங்கல் விடுப்பு விடுபட்டதும் வந்து போனது. ஆனால் இப்படி பொங்கி எழுந்து போராடும் அளவுக்கு ஜல்லிக்கட்டுக்கு என்ன கனம் இருக்கிறது? வீர விளையாட்டு, நாட்டு மாடுகள், தமிழர் அடையாளம் இத்யாதி, இத்யாதிகளை.. .. .. கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு பார்ப்போம். மாட்டுக் கொம்பின் கூர்ப்பில் கண்டுபிடிக்கப்பட்ட வீரமா? கொத்துக் … ஜல்லிக்கட்டும் பொங்கலும் விவசாயிகளுக்கு உயிர் தருமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.