தேர்தல் முடிவு: பின்வாயால் சிரிக்கும் மக்களாட்சி

உத்திரப்பிரதேசம், உத்தர்காண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு பல கட்டங்களாக தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இவைகளில் உத்திரப்பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. பஞ்சாப்பில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்திருக்கிறது.  மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டாலும் அதிக இடங்களைப் பிடித்த கட்சியாக வந்துள்ளது. ஓட்டுக் கட்சிகள் தேர்தல்களை எப்படி எதிர் கொள்கின்றன என்பதற்கு புதிதாக விளக்கம் கூற வேண்டிய … தேர்தல் முடிவு: பின்வாயால் சிரிக்கும் மக்களாட்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.

அப்சல்குரு: நிரபராதியின் மரணத்தில் திருப்தியடைந்த இந்திய மனசாட்சி

  கடந்த 09/02/2013 சனியன்று காலை எட்டு மணிக்கு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தார் எனும் வழக்கில் அப்சல் குரு தூக்கிலப்பட்டிருக்கிறார். அஜ்மல் கசாப் தூகிக்கிலடப்பட்டதைப் போல் இரகசியமாக தூக்கிலிடப்பட்டிருக்கிறார். இதனால் பிரச்சனை ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காஷ்மீரில் இரண்டு நாட்களாக 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரிலிருந்து வெளியாகும் அனைத்து நாளிதள்களும் அதிகாரபூர்வமற்ற முறையில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. உள்ளூர் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பயங்கரவாதியை(!) தூக்கிலிடுவதற்கு … அப்சல்குரு: நிரபராதியின் மரணத்தில் திருப்தியடைந்த இந்திய மனசாட்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.

அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! அருந்ததி ராய்!!

நமக்குத் தெரிந்தது இவ்வளவுதான்: டிசம்பர் 13, 2001 அன்று, இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. (ஊழல் விவகாரங்களின் வரிசையில் இன்னும் ஒரு விவகாரத்தில் தேசிய முன்னணி அரசாங்கம் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது). காலை 11.30 மணிக்கு, 5 ஆயுதம் தாங்கிய மனிதர்கள் IED ( (உருவாக்கப்பட்ட வெடிக் கருவி) பொருத்தப்பட்ட வெள்ளை அம்பாசடர் காரை நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவாயில் வழியாக ஓட்டி வந்தார்கள். அவர்கள் தடுக்கப்பட்ட போது, காரிலிருந்து வெளியில் குதித்து சுட ஆரம்பித்தார்கள். அதைத் … அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! அருந்ததி ராய்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊழலை ஒளிக்க உருளும் ரத யாத்திரைகள்

இன்றைய தேதியில் இந்தியாவில் ஊழல் தான் செல்லுபடியாகும் சரக்கு. அதனால் தான் அன்னா ஹஸாரே முதல் அத்வானி வரை அதைக் கொண்டு கல்லா கட்ட துடிக்கிறார்கள்.  இவர்களின் ஊழல் ஒழிப்பு நாடகங்களில், ஊழல் ஒழிப்பைத் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது.  ஏற்கனவே அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்ட ரத யாத்திரை நடத்தி பலருக்கு கல்லறை கட்டிய அனுபவம் இருப்பதால் இப்போது ஊழலுக்கு கல்லறை கட்ட ரத யாத்திரை நடத்தி அதற்கு கோவில் கட்டி எழுப்புவார் என எதிர்பார்க்கலாம். … ஊழலை ஒளிக்க உருளும் ரத யாத்திரைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!

நண்பர்களே, திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பை கண்டித்தும், சம்பந்தமே இல்லாமல் அவரது பெயர் இழுக்கப்பட்டிருப்பது குறித்தும் அப்சல் குரு அவரது வழக்கறிஞர் பஞ்சொலி மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தரப்பட்டிருக்கின்றது. மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், … குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!-ஐ படிப்பதைத் தொடரவும்.

கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?

தமிழகத்தில் இது தேர்தல் காலம். யாருக்கு ஓட்டுப் போடுவது;  யாரை வீட்டுக்கு அனுப்பித் ‘தண்டிப்பது’  குறித்தெல்லாம் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். மாறி மாறி வரும் ஆட்சியாளர்களிடையே அவர்கள் கட்சிக் கொடியில் காணப்படும் வண்ணங்களைத் தாண்டி வேறெந்த வித்தியாசத்தையும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள் – அவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுமாறு உங்களிடம் கேட்டால் உங்களால் மௌனத்தைத் தவிற வேறு பதில் எதையும் சொல்லிவிடவும் முடியாது தானே. ஆனாலும் நீங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் கட்சி இனி ஐந்தாண்டுகளுக்கு நாட்டை … கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி!

அஜ்மல் கசாபுக்கு தூக்குத்தண்டனை - நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவையும் உடனே தூக்கில் போடச்சொல்லி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டிய குற்றத்திலிருந்து அத்வானி, ஜோஷி முதலான சங்கப் பரிவரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு - தன்னுடைய தங்கையை காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞனையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக்கொன்ற தீபக் என்ற பார்ப்பன ஜாதிவெறியனுக்கு உச்சநீதி மன்றத்தில் தூக்குத்தண்டனை ரத்து. இத்தீர்ப்புகளுக்கிடையில் இழையோடும் ஒற்றுமை, … நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி!-ஐ படிப்பதைத் தொடரவும்.

அனைவருக்கும் அருள் பாலித்த‌ லிபரான் அறிக்கை

மாட்சிமை தாங்கிய ஆட்சிமை வழங்கும்(!) பெருமை மிகு பாராளுமன்றத்தில் வெளியிடும் முன்பே நாளிதழ்களில் வெளியாகி விட்டது லிபரான் அறிக்கை. அடுக்குமா இது, இந்தியாவுக்கே தலைகுனிவல்லவா எகிரிக்குதிக்கின்றன ஓட்டுக்கட்சிகள். காட் ஒப்பந்தம் முதல் இப்போதைய அணு ஒப்பந்தம் வரை நாடாளுமன்றத்தில் வைக்காமலேயே நடப்புக்கு வந்தபோதெல்லாம் அடங்கியிருந்த கோபம் லிபரான் அறிக்கையில் பொங்கி வழிகிறது. 17 ஆண்டுகள் 48 முறை கால நீட்டிப்பு சற்றேறக்குறைய 8 கோடி ரூபாய் செலவு இவ்வள‌வையும் செரித்துவிட்டு லிபரான் அறிக்கை தந்திருக்கும் சாறு வாஜ்பாய், … அனைவருக்கும் அருள் பாலித்த‌ லிபரான் அறிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!

சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து. பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது … உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.

வறுமை தலையெழுத்துமல்ல, கருப்புப்பணம் தனியுரிமையுமல்ல….

  வறுமை தலையெழுத்துமல்ல, கருப்புப்பணம் தனியுறிமையுமல்ல....           இந்திய அரங்கில் சுவிஸ் வங்கி பற்றியும், கருப்புப்பணம் பற்றியும் அவ்வப்போது பேசப்படுவதுண்டு, அந்த வேகத்திலேயே மறக்கப்படுவதுமுண்டு. இந்த முறை தேர்தலோடு இணைந்து வந்திருப்பதால் கொஞ்சம் பரபரப்பு ஏறிவிட்டிருக்கிறது. போலிகள் (மார்க்சிஸ்டுகள்) தங்கள் தேர்தல் அறிக்கையில் சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்பட்டிருக்கும் இந்திய கருப்புப்பணத்தை மீட்டுக்கொண்டுவருவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து அத்வானியும் ந நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீட்டுக்கொண்டுவருவோம் என அருளியிருக்கிறார்.  பெருமுதலாளிகளின் பணம் சொத்துகள் நட்ட … வறுமை தலையெழுத்துமல்ல, கருப்புப்பணம் தனியுரிமையுமல்ல….-ஐ படிப்பதைத் தொடரவும்.