மின்சார தூக்குக் கயிறு

அண்மையில் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தது. இதற்கு மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர், ஒன்றிய அரசு மின் கட்டண உயர்வை அறிவிக்கச் சொல்லி எங்களை கட்டாயப்படுத்துகிறது என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் சொல்வது உண்மை தான் என்று கடந்த எட்டாம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மின்சாரத் திருத்தச் சட்டம் 2022 வெளிப்படையாக அறிவித்து விட்டது. தற்போது மின் பகிர்மானம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை தனியாருக்கு மாற்றுவதை … மின்சார தூக்குக் கயிறு-ஐ படிப்பதைத் தொடரவும்.

விவசாயியா?(நம்பியார் ஸ்டைலில் உச்சரிக்கவும்)

செய்தி: வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் பீகாரில் உரையாற்றிய பிரதமர், “பல்வேறு தடைகளில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. தங்கள் விளைப்பொருட்களை எந்த ஊரில் உள்ள, எந்த ஒரு நபருக்கும் விவசாயி நிர்ணயிக்கும் விலைக்கு விற்பதில் அவர்களுக்கு இனி எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது” “அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் விவசாயி தனது விளை பொருளை விற்க முடியும்” குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை … விவசாயியா?(நம்பியார் ஸ்டைலில் உச்சரிக்கவும்)-ஐ படிப்பதைத் தொடரவும்.

பி.எஸ்.என்.எல் ஏன் விற்கப்படுகிறது?

பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது என்பது அரசுகள் பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள்கை. அந்தக் கொள்ளை, மன்னிக்கவும் கொள்கை சரியா தவறா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நட்டமடைந்து விட்டது அதனால் விற்கிறோம் என்பது எளிதான பதிலாக இருக்கிறது. ஆனால் ஏன் நட்டமடைந்தது என்பதை அரசு மக்களுக்கு விளக்குவதே இல்லை. உலகிலேயே பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே ஒரு அமைச்சரவையை ஏற்படுத்திய முதல் அரசாங்கம் பாஜக அரசாங்கம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். (வாஜ்பேயி அமைச்சரவையில் அருண்ஷோரி என்பவர் … பி.எஸ்.என்.எல் ஏன் விற்கப்படுகிறது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

13 நாள் கூத்து முடிந்துவிட்டது, அடுத்தென்ன?

    மின்னூலாக(PDF) தரவிறக்க‌