கடந்த 29ம் தேதி மதுரையில் செஞ்சட்டைப் பேரனி மீகச் சிறப்பாய் நடந்து முடிந்திருக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் சிவப்பு சட்டையணிந்து கலந்து கொண்டது மிகுந்த உவகையூட்டக் கூடியதாக இருந்தது. இது இடதுசாரிகள் நடத்திய பேரணி அல்ல. கருப்புச் சட்டைகள் முன்னின்று நடத்திய செஞ்சட்டைப் பேரணி. சிவப்பு, கருப்பு, நீலம் மூன்றும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பது ஆசையாகவும், கருத்தியலாகவும் இங்கு நீண்ட காலமாக நிலவில் இருக்கிறது. அதற்கு இது பெருந் தொடக்கமாக இருக்க வேண்டும். இந்தப் பேரணி … செஞ்சட்டைப் பேரணியின் பின்னால்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: அம்பேத்கரியம்
மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?
மகஇக வின் பாடல்கள் என்றால் உள்ளம் துடித்து எழும். பறையின் அதிர்வுகளைப் போல் மனம் அதிர்ந்து சோம்பலை உதறித் தள்ளி வீரெழும். ஆனால், நேற்று அந்த பாடலைக் கேட்ட போது உள்ளம் துணுக்குற்றுப் போனது. முனை மழுங்கி விட்டால் வாட்கள் கரும்புத் தோகை ஆகிவிடுமோ! மூளை மழுங்கி விட்டால் கோவன் கத்தார் ஆகி விடுவாரோ! கடந்த 7ம் தேதி ‘திராவிட மாடலாகும் இந்தியா’ எனும் தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் மகஇக நடத்திய … மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?
சாதியப் பிரச்சனைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியத் தேவை எனும் நூல், ரங்கநாயகம்மா என்பவர் எழுதி கொற்றவை தமிழில் மொழி பெயர்த்து அண்மையில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மீதான விமர்சனம் எனும் பெயரில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரல்கள் வரிசையாக வலம் வந்து கொண்டிருக்கிறதோ என்று ஐயுறும் வண்ணம் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அம்பேத்கர் மீதான விமர்சனம் மெல்ல மார்க்ஸுடனான ஒப்பீடாக மாறியது. பின் அம்பேத்கரா மார்க்ஸா என்று உருவெடுத்தது. தொடர்ந்து அது … அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.