வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு

இந்துக்களின் பாதுகாவலன் என்று தன்னைத் தானே விளம்பிக் கொள்ளும் பாஜக, ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனியத்தின் அறுவெறுப்பான பரப்பல்களை முறியடித்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. அவர்கள் ஏதோ அடுக்கடுக்கான சான்றுகளுடன் புதிது புதிதான விவாதங்களைச் செய்கிறார்கள். அதற்கு உடனடியாக நாம் மறுப்பு தெரிவித்து வெளிக்காட்ட வேண்டும் எனும் பொருளில் இதைக் கூறவில்லை. அவர்கள் சொல்வதெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. ஆனால் எத்தனை முறை கன்னத்தில் அறைந்தாலும் இளித்துக் கொண்டே சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் மனநிலை பிறழ்ந்தவன் … வர்ணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?

மகஇக வின் பாடல்கள் என்றால் உள்ளம் துடித்து எழும். பறையின் அதிர்வுகளைப் போல் மனம் அதிர்ந்து சோம்பலை உதறித் தள்ளி வீரெழும். ஆனால், நேற்று அந்த பாடலைக் கேட்ட போது உள்ளம் துணுக்குற்றுப் போனது. முனை மழுங்கி விட்டால் வாட்கள் கரும்புத் தோகை ஆகிவிடுமோ! மூளை மழுங்கி விட்டால் கோவன் கத்தார் ஆகி விடுவாரோ! கடந்த 7ம் தேதி ‘திராவிட மாடலாகும் இந்தியா’ எனும் தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் மகஇக நடத்திய … மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரும் அம்பேத்கரும் இன்று

ஆ. ராசாவை ஒரு அரசியல்வாதியாக மட்டுமே தெரிந்த பலர் இருக்கிறார்கள். துணிச்சலாக தன் வாதங்களை எடுத்துவைக்கக் கூடியவராக 2ஜி வழக்கிலும், அண்மையில் ஜெயலலிதா குறித்த பிரச்சனையிலும் ஊடாக சிலர் தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இவைகளுக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு சிறந்த திராவிடவியல் பேச்சாளர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இந்த சிறு நூலை படிப்பவர்கள் அதை தெரிந்து கொள்ளலாம். 2008 பிப்ரவரி 22ம் தேதியன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து … பெரியாரும் அம்பேத்கரும் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கர் கொல்லப்பட்டாரா?

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மேதமையும், சிந்தனைகளும் ஒதுக்கித் தள்ளப்பட்டு, இன்றைய காலங்களில் ஒருபுறம் அவரை சாதித் தலைவராகவும், மறுபுறம் இந்துத்துவ அம்பேத்கராகவும் உருவகப்படுத்தப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். மற்றொரு புறமோ தொடர்ச்சியாக அம்பேத்கரின் குறியீடுகள் சிலைகள் உடைப்புக்கும், இழிவுபடுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றன. அந்த மேதையின் மரணம் குறித்து தமிழ் விக்கிபீடியா பக்கம் இப்படிக் கூறுகிறது, \\ 1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் 1954 சூன் முதல் … அம்பேத்கர் கொல்லப்பட்டாரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்

அம்பேத்கரியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்ரெதிராக நிறுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதன் பின்னாடும் அரசியல் சதிகளை காணாமல், காணச் செய்யாமல், தூண்டி விடப்படும் உணர்ச்சிகளை பற்றிக் கொள்வது இரண்டுக்குமே பலன் தரப்போவதில்லை. அம்பேத்கரா? மார்க்ஸா? யார் பெரியவர் எனும் கேள்வியும், சாதி ஒழிப்பா? புரட்சியா? எது முதலில் எனும் கேள்வியும், முட்டையா கோழியா எது முதலில்? எனும் கேள்வியின் தரத்துக்கு பொருளற்றும், ஊள்ளீடற்றும், நோக்கமின்றியும், திசையின்றியும் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தேவை என்ன? நாம் … அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

  .. .. .. காந்தியடிகள் இந்திய மண்ணில் நிலவி வந்த சதுர்வர்ணத்தை எதிர்ப்பதில் தீவிரம் காட்டவில்லை. இந்தியாவில் மேல்ஜாதியினரால் ஒடுக்கப்பட்டு பொருளாதாரம் சமூக நீதி உள்ளிட்ட தளங்களில் போராடிக் கொண்டிருந்த மக்களின் மீது அவர் இரக்கம் காட்டவில்லை. ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராட்டம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் என்ற நிலைகளில் மட்டும், “சகோதரனுக்கு எதிராக அறப் போராட்டமா?” என வினவி காந்தி சிக்கலிலிருந்து விலகிச் செல்கிறாரே ஏன் என்பது டாக்டர் அம்பேத்கரின் வினா. இது போன்று டாக்டர் … தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

காந்தி யார்?

இன்று அக்டோபர் இரண்டு, காந்தி ஜெயந்தி. மகாத்மா என்று கொண்டாடப்படும் பிம்பம். இன்று இது போன்ற கொண்டாட்டங்கள் மட்டுமே காட்சிப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1947 ல் நாம் பெற்றது சுதந்திரமா? எனும் முதன்மையான கேள்வியை ஒதுக்கி விட்டாலும் கூட அவரின் சமகால ஆளுமைகள் அவர் மீது வைத்த விமர்சனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு அவர் மீதான பிம்பம் ஏகாதிபத்தியங்களுக்கு தேவைப்படுவதாக இருக்கிறது. ஒரு மாணவி அவருக்கு மகாத்மா எனும் அடைமொழி யாரால் எப்போது கொடுக்கப்பட்டது எனும் … காந்தி யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?

சாதியப் பிரச்சனைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியத் தேவை எனும் நூல், ரங்கநாயகம்மா என்பவர் எழுதி கொற்றவை தமிழில் மொழி பெயர்த்து அண்மையில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மீதான விமர்சனம் எனும் பெயரில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரல்கள் வரிசையாக வலம் வந்து கொண்டிருக்கிறதோ என்று ஐயுறும் வண்ணம் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அம்பேத்கர் மீதான விமர்சனம் மெல்ல மார்க்ஸுடனான ஒப்பீடாக மாறியது. பின் அம்பேத்கரா மார்க்ஸா என்று உருவெடுத்தது. தொடர்ந்து அது … அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.