காந்தி யார்?

இன்று அக்டோபர் இரண்டு, காந்தி ஜெயந்தி. மகாத்மா என்று கொண்டாடப்படும் பிம்பம். இன்று இது போன்ற கொண்டாட்டங்கள் மட்டுமே காட்சிப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1947 ல் நாம் பெற்றது சுதந்திரமா? எனும் முதன்மையான கேள்வியை ஒதுக்கி விட்டாலும் கூட அவரின் சமகால ஆளுமைகள் அவர் மீது வைத்த விமர்சனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு அவர் மீதான பிம்பம் ஏகாதிபத்தியங்களுக்கு தேவைப்படுவதாக இருக்கிறது. ஒரு மாணவி அவருக்கு மகாத்மா எனும் அடைமொழி யாரால் எப்போது கொடுக்கப்பட்டது எனும் … காந்தி யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?

சாதியப் பிரச்சனைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியத் தேவை எனும் நூல், ரங்கநாயகம்மா என்பவர் எழுதி கொற்றவை தமிழில் மொழி பெயர்த்து அண்மையில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மீதான விமர்சனம் எனும் பெயரில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரல்கள் வரிசையாக வலம் வந்து கொண்டிருக்கிறதோ என்று ஐயுறும் வண்ணம் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அம்பேத்கர் மீதான விமர்சனம் மெல்ல மார்க்ஸுடனான ஒப்பீடாக மாறியது. பின் அம்பேத்கரா மார்க்ஸா என்று உருவெடுத்தது. தொடர்ந்து அது … அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரியத்துக்கும், அம்பேத்காரியத்துக்கும் எதிராக பெரியாரியமும், அம்பேத்காரியமும்

பெரியாரியம் , அம்பேத்கரியம் , மார்க்சியம்  கொஞ்சம் எளிமையா தெளிவு படுத்துங்க தோழர். திரு ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து நண்பர் ராஜ் ரம்யா, பெரியாரியம், அம்பேத்காரியம், மார்க்சியம் இவை மூன்றும் தனித்தனியான, ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத இயங்களல்ல. நோக்கங்களால் ஒன்றியவை. தனித்தனியாக குறிப்பிடப்பட்டாலும் இவைகளை இணைக்கும் மையச் சரடு தலித்தியம். அந்த வகையில் முன்னிரண்டைக் காட்டிலும் மார்க்சியம் முழுமையானது. பெரியாரியம், அம்பேத்காரியம் என்பவை தலித்தியம் எனும் சொல்லின் பின்னுள்ள அரசியல் தொழிற்பாடுகளால் தனித்தனியானதாக உயர்த்தப்படுபவை. இங்கு … பெரியாரியத்துக்கும், அம்பேத்காரியத்துக்கும் எதிராக பெரியாரியமும், அம்பேத்காரியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்

ஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். ஏனென்றால் அது நமீதாக்களின் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட உச்சரிப்புகளுக்கு சிக்கெடுப்பது போன்றது. எனவே, ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்போம். 1947ல் நடந்தது விடுதலையல்ல, ஆட்சி மாற்றம் மட்டுமே. இங்கிலாந்து வெள்ளை அரசின் நேரடி காலனி நாடாக வைத்து இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் … சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்-ஐ படிப்பதைத் தொடரவும்.

காந்தி, பெரியார், அம்பேத்கார்: புனைவுகளும் புரிதல்களும்.

அண்மையில் காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு என்ற தலைப்பில் இடப்பட்ட பதிவிற்கு மின்னஞ்சலில் வந்த எதிர்வினையையும் அதற்கான பதிலும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. மஹாத்மா, தேசத்தந்தை எனும் விதந்தோதல்களெல்லாம் பிம்பங்களின் பின்னே ஒழிந்துகொள்வதை வெளிப்படுத்தவே இவை பதிவிடப்படுகிறது. நண்பர் செங்கொடி அவர்களுக்கு,  வணக்கம்.    காந்தியாரைத்  திறனாய்வு செய்யும் போது இந்தியாவின் உயர்ந்த மேதைகளான  இரவீந்திர நாத்  தாகூரையும், விவேகானந்தரையும், பண்டித நேருவையும் இகழ்ந்துள்ளது நியாயமாகத் தெரியவில்லை.   காந்தியின்  மீது நீங்கள் கூறிய 100 மேற்பட்ட குற்றங்கள் படித்த பின் ஒன்று கூட  என் மனதில்  ஒட்ட வில்லை.  காரணம் உங்களுடைய தனிப்பட்ட தீர்ப்பான முழு வெறுப்பு உணர்ச்சியே.   இரு தரப்பார் கருத்தின்றி ஒருவர் மட்டும் இகழ்ச்சியாக இப்படி எழுதுவது பொதுக் … காந்தி, பெரியார், அம்பேத்கார்: புனைவுகளும் புரிதல்களும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.