முன்குறிப்பு: திமுகவின் ஊதுகுழல் என்பது தொடங்கி இன்னும் பலவிதமாக பட்டம் வழங்கப்போகும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த கட்டுரையில் பேசப்பட்டிருக்கும் வாதங்களை முறையான மறுப்பை வழங்கிய பின் உங்கள் பட்டங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீண்ட நாட்களாக பேசப்பட்டுவந்த சேதி இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. உதயநிதி அமைச்சராக்கப்பட்டார். எதிர்பார்த்தது போலவே விமர்சனங்களும் தூள் பறந்து கொண்டிருக்கின்றன. அதைப் போலவே முட்டுக் கொடுத்தல்களும். இந்த வழமைச் சகதிகளுக்கு அப்பாற்பட்டு வாரிசு அரசியல் என்பதைப் பார்க்கலாம். முதலில், வாரிசு அரசியல் என்ற … வாரிசு அரசியலும் வன்ம அரசியலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: அரசியல்
வெகுஜனங்களிடையே கட்சியின் பணி
தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வள்ர்ச்சிக்கும், அரசியல் நிறுவன ஒழுங்கமைப்புக்கும் உதவுவது தான் நமது முதன்மையான அடிப்படையான பணி. இந்தப் பணியைப் பின்னுக்குத் தள்ளுகிறவர்கள், எல்லாத் தனிப்பட்ட பணிகளையும் குறிப்பிட்ட போராட்ட முறைகளையும் இதற்கு கீழ்ப்படுத்த மறுப்பவர்கள் தவறான பாதையில் செல்கிறவர்களாவர். இயக்கத்துக்கு பெருந்தீங்கு இழைப்பவர்களாவர். .. .. .. .. .. .. அரசியல், பிரச்சாரம், கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பு இவற்றின் உள்ளடக்கத்தையும் வீச்சையும் குறுகச் செய்து விடுவோராலும் தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் விதிவிலக்கான சில தருணங்களில் … வெகுஜனங்களிடையே கட்சியின் பணி-ஐ படிப்பதைத் தொடரவும்.
வலிக்கிறது தம்பீ
துபாய் ஜெபல் அலி பகுதியில் வேலை செய்து வந்த என் தம்பி சிந்தா மதார் கடந்த ஜூலை 11 திங்கட் கிழமை மாலையில் உடல்நலக் குறைவினால் மரணமடைந்தார். அவரின் உடல் நேற்று துபாய் நேரப்படி மாலை ஐந்து மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. சரியாகச் சொன்னால் மரணமடைந்த பிறகு ஏழு நாட்கள் கடந்து எட்டாவது நாள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனையின் மரண அறிக்கை போதிய விவரங்களின்றி இதயம் செயலிழந்ததால் மரணம் நேர்ந்திருக்கிறது என பொதுவாக குறிப்பிடுகிறது. எங்களுக்கு தெரியவந்த … வலிக்கிறது தம்பீ-ஐ படிப்பதைத் தொடரவும்.
திமுகவின் திராவிடம் ஆரியமா?
கடந்த ஓராண்டாய் ஆட்சித் தலைமை ஏற்றிருக்கும் திமுக ஒப்பீட்டளவில் அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றிருப்பதாக கருதப்பட்டது. ஆனால் அதன் அண்மை நடவடிக்கைகளில் சில கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. நேரடியாக அந்தந்த நடவடிக்கைகளுக்கான எதிர்வினைகளை தாண்டி, கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்த அனைவரும் இதற்கொரு பதிலை கூறியாக வேண்டும் எனும் அழுத்தமாக சிலர் இந்த விமர்சனங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆர்.ஏ புரம் ஆக்கிரமிப்பு அகற்றம், பல்லக்கு ஏற தடை பின்பு அனுமதி, ஆம்பூர் மாட்டுக்கறி பிரியாணி தடை, … திமுகவின் திராவிடம் ஆரியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்தியாவின் அரசியல் பொருளாதார பாதை
நிலைகுலைக்கப்படும் தெற்காசியா! பகுதி 3 மிகைடாலர் அச்சடிப்பால் ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த விலைவாசி உயர்வு பிரச்சினையை உக்ரைன் போர் எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கிறது. அமெரிக்காவின் டாலர் வர்த்தகத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையும் அதற்கு எதிரான ரஷ்ய - சீன நாடுகளின் சொந்த நாணய வர்த்தக மாற்று முன்னெடுப்பும் இதுவரையிலான உலக வர்த்தகக் கட்டமைப்பை உலுக்கி உடைக்க ஆரம்பித்திருக்கிறது. இது உலகம் முழுக்க விலைவாசி உயர்வு, டாலர் கடன் கொடுப்பனவுப் பற்றாக்குறை பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்நாட்டுக் குழப்பங்கள், போராட்டங்களை … இந்தியாவின் அரசியல் பொருளாதார பாதை-ஐ படிப்பதைத் தொடரவும்.
பாருக்குள்ளே நல்ல நாடு
அவர்களைச் சிறையில் சந்தித்தேன். “என்ன குற்றம் செய்தீர்கள்” என்று கேட்டேன். ஒவ்வொருவராகச் சொன்னார்கள்.. எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான். “திருடன் திருடன்” என்று கத்தினேன். அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக் கைது செய்து விட்டார்கள். “என் வருமானத்தைக் கேட்டார்கள்” ‘நான் வேலையில்லாப் பட்டாதாரி’ என்றேன் வருமானத்தை மறைத்தாக வழக்குப் போட்டு விட்டார்கள். “நான் கரி மூட்டை தூக்கும் கூலி” கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில் கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது. கறுப்பு பணம் வைத்திருந்ததாகக் கைது செய்து … பாருக்குள்ளே நல்ல நாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
இதை முதல்ல பாருங்க!
ஒரு குறும்படத்தால் என்ன செய்ய முடியும்? ஒரு குறும்படத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும்? கலையின் அழகியலில் யதார்த்தம் என்பது என்ன? அரசு என்றால் என்ன? பாசிசம் என்றால் என்ன? ஒரு பாசிச அரசின் கீழ் நாம் இருக்க நேர்ந்தால் என்ன செய்யலாம்? உண்மைகளை பேசும் வழிமுறை என்ன? இன்னும் இது போன்ற பல கேள்விகளுக்கு மிக எளிமையாகவும், கூர்மையாகவும், ஆறே நிமிடத்தில் புரியவைத்துவிட முடியும் என்று காட்டியிருக்கிறார்கள் இந்த குறும்படத்தில். பாருங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் … இதை முதல்ல பாருங்க!-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெரியாரும் அம்பேத்கரும் இன்று
ஆ. ராசாவை ஒரு அரசியல்வாதியாக மட்டுமே தெரிந்த பலர் இருக்கிறார்கள். துணிச்சலாக தன் வாதங்களை எடுத்துவைக்கக் கூடியவராக 2ஜி வழக்கிலும், அண்மையில் ஜெயலலிதா குறித்த பிரச்சனையிலும் ஊடாக சிலர் தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இவைகளுக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு சிறந்த திராவிடவியல் பேச்சாளர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இந்த சிறு நூலை படிப்பவர்கள் அதை தெரிந்து கொள்ளலாம். 2008 பிப்ரவரி 22ம் தேதியன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து … பெரியாரும் அம்பேத்கரும் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.
பிரபலமான குசு
ஒரு பிரபல மனிதருக்குஎப்போதாவது தான்குசு விடவேண்டும் போலிருக்கிறதுஅப்போது அவர்எல்லோருக்கும் கேட்கும்படியாகஒரு குசு விடுகிறார்அது நகரத்திற்கு மேலாக‘டமாரெ’ன்று வெடிக்கிறதுபோன மாதம்இன்னொரு பிரபலமான மனிதர் விட்ட குசுவை விட’இந்தக் குசு பெரிதாக இருந்தது. நகரவாசிகள் அனைவரும்அந்த சத்தைக் கேட்கிறார்கள்அவர்கள் அந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள்அந்த குசு வெடித்த இடத்தில்ஒரே புகை மண்டலமாக இருக்கிறதுசத்தம் கேட்டு நிறையக் கேமிராக்கள்சில நொடிகளில் வந்துவிட்டனஒரு குசுவை படம் பிடிப்பதில்அங்கு ஒரே தள்ளு முள்ளு நடக்கிறது அவர் ஏன் இப்போதுகுசு விடுகிறார் என்று கேட்கப்படுகிறதுஇதற்கு முன் … பிரபலமான குசு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?
நேற்று இரவு பெங்களூருவில் வன்முறை வெடித்தது, கடைகள், வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை அடக்க கண்ணீர்புகை குண்டு வீசியும் அடங்காததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் மூன்று பேர் மரணமடைந்தனர். தற்போது நிலமை கட்டுக்குள் உள்ளது, என்றாலும் நகரின் பல இடங்களில் மக்கள் கூட தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படித் தான் செய்திகள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் தில்லியில் சங்கிகள் வன்முறை செய்தார்கள். இப்போது பெங்களூருவில் முஸ்லீம்கள் வன்முறை செய்திருக்கிறார்கள். இரண்டுமே கண்டிக்கத் தக்கது என்று ஒப்பீட்டு … பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.