அப்சல் குரு கடந்த 12ம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவினார் என்பதற்காக காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருக்கும் தாவீந்தர் சிங் என்பவரை கைது செய்தனர். மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரண செய்தி போல கடந்து போகத் தோன்றும். ஏனென்றால், காஷ்மீரில் இராணுவமும் போலீசும் நடத்தி வரும் வெறியாட்டங்களை அறிந்திருப்பவர்களுக்கு, இது அதிர்ச்சி தரத்தக்க செய்தியாக இருக்காது. அதேநேரம், இந்திய அரசையும், காவி பயங்கரவாதிகளையும் புரிந்திருப்பவர்களுக்கு இதில் முக்கியமான செய்தி இருகிறது. தாவீந்தர் சிங்கை விசாரித்த அதிகாரிகள் கூட, … தாவீந்தர்: நாடாளுமன்ற தாக்குதல் நாடகத்தின் முடிச்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: அரசு பள்ளி
குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்
கடந்த 25ம் தேதி சென்னை சேலையூர் ஜீயோன் மெட்ரிகுலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்த சுருதி என்ற சிறுமி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே சாலையில் தவறி விழுந்து, பயணித்த பேருந்தின் சக்கரத்திலேயே மாட்டிக் கொண்டு துடிக்கத் துடிக்க உயிரிழந்தாள். காட்சி ஊடகங்கள் இதை தங்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்தும் விதத்தில் பரபரபரப்பான செய்தியாக மாற்ற, தமிழகம் பற்றிக் கொண்டது. பார்த்த கணத்திலேயே பதற வைக்கும் செய்தி என்பதால் சலை மறியல், கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்கள், … குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கலைஞரின் சமச்சீர் கல்வி: அசுரப்பசிக்கு அல்வா மிட்டாய்
இன்றைக்கு கல்வி என்பது மிகவும் இன்றியமையாத ஒரு கருவியாகும். வாழ்க்கை எனும் திசை தெரியாத கடலில், ஊழிக்காற்றின் அலைப்புகளில் கரை காண உதவும் சின்ன விளக்கு. ஆனால் இந்த சின்ன விளக்கை கைக்கொள்வதற்குள் மக்களின் குருதி வற்றிவிடுகிறது. அறிவு, அறிவுக்கான தேடல் எனும் புள்ளியிலிருந்து புறப்பட்ட கல்வி இன்று மக்களை பிழிந்து குடிக்கும் கல்வி வள்ளல்களின்(!) கைகளில் ஒரு கொடு வாளாகவே மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை சிலரால், "அரசுப்பள்ளிகளில் யார் படிப்பது", "மாடு மேய்க்கத்தான் … கலைஞரின் சமச்சீர் கல்வி: அசுரப்பசிக்கு அல்வா மிட்டாய்-ஐ படிப்பதைத் தொடரவும்.