அண்மைக்காலமாக முகநூலில் இஸ்லாமிய பரப்புரைப் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாத்திகர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு அவர்கள் இடும் பதிவுகள் நகைப்பை வரவழைக்கின்றன. எடுத்துக்காட்டாக புர்கா கலாச்சாரத்தை எதிர்க்கிறோம் என்றால் பெண்களை ஆடையில்லாமல் அலையச் சொல்கிறோம் என்று அவர்களாகவே பொருள் கொண்டு அதற்கு விளக்கம் அளித்து புளகமடைந்து கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு முகநூல் பக்கத்தை இப்படி தொடங்கி இருக்கிறார்கள். “நாத்திகர்கள் இஸ்லாத்தை நோக்கி பல கேள்விகளையும் அவதூறுகளையும் முன்வைப்பர். முஸ்லிம்கள் பதில்களை மட்டுமே அளிப்பர். இங்கு … கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: அறிவியல்
சொல்லுளி டிச 22 இதழ்
டிசம்பர் மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது. ஆண்டுக் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளடைவு: ஆசிரிய உரை இளையராசாவின் இசையில் இப்போதையை பா(ட்)டு - கட்டுரை - தமிழ்நாடு ஈர்ப்பு விசை: பேரண்டத்தின் மாய நடனம் - தொடர் கட்டுரை - அறிவியல் நகராட்சியும் வீட்டாட்சியும் - நாட்டு நடப்பு அரியவகை இடஒதுக்கீடு சில புரிதல்கள் - … சொல்லுளி டிச 22 இதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தடுப்பூசி அறிவாளிகளும், கட்டாய எதிர்ப்பு அறிவிலிகளும்
கட்டாயாமாக திணிக்கப்படும் தடுப்பூசி மருத்துவத்துக்கு எதிராக உலகமெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான ஓர் இயக்கமே இயங்கி வருகிறது. கட்டாயத் தடுப்பூசி எனும் நிலை, நேரடியாகவோ மறைமுகமாகவோ உலகின் எந்த நாட்டிலும் இல்லை. என்றாலும் கூட கட்டாயத் தடுப்பூசி என்று அவ்வப்போது அரசுகள் பூச்சாண்டி காட்டுவதும், மக்கள் அதற்கு எதிராக போராடுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. உலகமெங்கும் இருக்கும் இந்தப் போக்கு தற்போது இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் தொடங்கி இருக்கிறது. கொரோனாவுக்கு … தடுப்பூசி அறிவாளிகளும், கட்டாய எதிர்ப்பு அறிவிலிகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெரியார் 142
கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 76 வருடங்களுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது. இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது.. "போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்" "கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்" "உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்" … பெரியார் 142-ஐ படிப்பதைத் தொடரவும்.
மோடி சொன்னால் உண்மை இருக்குமா?
ஜூலை 27 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, "கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது" என்று கூறினார், இது தனக்கு வசதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தரவு அடிப்படையில் ஒப்பீடுகளைச் செய்யும் அவரது போக்கை பிரதிபலிக்கிறது. தொடர்ச்சியான ஊரடங்குகள் COVID-19 பாதிப்பு வரைபடத்தை தட்டையாக்குவதற்கு பதிலாக வீங்கச் செய்திருக்கிறது. அரசாங்கத்தில் உள்ள மற்றவர்களைப் போலவே (தொற்றுநோயின் வளர்ச்சியைக் குறைப்பதில் இந்தியாவின் ஊரடங்கின் தாக்கம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய நிதி ஆயோக் உறுப்பினர் … மோடி சொன்னால் உண்மை இருக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மீள் தொடக்கம்
மக்களியம் - பகுதி 2 வாழ வேண்டும். உயிர் வாழ வேண்டும் இது மட்டுமே அனைத்து உயிர்களையும் உந்தும் ஒரே உள்ளாற்றல். இன்னும் அதிக காலம் உயிர் வாழ்வது எப்படி எனும் கேள்வியே அனைத்து உயிர்களையும், குறிப்பாக மனிதர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த அனைத்துக்கும் இது தான் உள்ளடக்கமாக இருந்திருக்கிறது. மனிதனின் தொடக்க காலங்களை எடுத்துக் கொண்டால், ‘உண்ணு, உண்ணப்படாமலிரு’ என்பது தான் ஒரே இலக்கு. அந்த ஒற்றை இலக்கிலிருந்து மனிதன் வெகு தூரம் கடந்து … மீள் தொடக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இஸ்லாம்: விவாத நேர்மை
விந்து குறித்த குரானின் விந்தைகள் என்ற என்னுடைய பழைய பதிவில் யாஸீன் என்பவருடன் கடந்த சில நாட்களாக நடந்த விவாதம் இது. இது அந்தப் பதிவின் மேலதிக விளக்கமாக இருக்கும் என்பதாலும், விவாதம் என்று வருகிற மதவாதிகளின் விவாத நேர்மை என்பது எந்த அளவுக்கு மட்டமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்பதாலும் இதை தனிப்பதிவாக வெளியிடுகிறேன். விந்து வெளிப்படும் இடம் குறித்து குர்ஆன் கூறினால், அது ஏன் உற்பத்தியாகும் இடம் குறித்து கூறவில்லை என … இஸ்லாம்: விவாத நேர்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Interstellar: திரைப்படத்தை முன்வைத்து
இண்டர்ஸ்டெல்லர் என்றால் விண்மீன்களுக்கு இடையேயான பயணம் என்று பொருளாம். அறிவியல் புனைகதைகள் ஈர்ப்பு மிக்கவைகள். அவைகளின் கதைக் களம் மூன்றாம் தர மசாலை நெடியுடன் இருந்தாலும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அறிவியல் புனைவு நம் கற்பனைகளை விரிக்கும் என்பதால், அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டும் என்பதால் அவைகளின் மீதான ஈர்ப்பு குறைவதில்லை. அந்த வகையில் இண்டர்ஸ்டெல்லர் மிகச் சிறந்த படமாக கொள்ளலாம். இது 2014ல் வெளிவந்த படம். ஆங்கிலப் படங்களை பார்த்து தோராயமாக புரிந்து கொள்ள மட்டும் தான் … Interstellar: திரைப்படத்தை முன்வைத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆழ்துளை குழந்தை மீட்பு கருவி
சில வாரங்களுக்கு முன் நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமத்தில் இரண்டு வயதே ஆன சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணித்து, அதிலேயே சமாதியும் ஆகிப் போனான். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தும், விழும் குழந்தைகளைக் காப்பாற்ற தனிப்பட்ட கருவிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. ஓர் ஒப்பீட்டுக்காக செவ்வாய்க்கு ராக்கெட் விடும் அரசால், ஆழ்துளையில் விழும் குழந்தைகளை காப்பாற்ற வழி காண முடியாதா? எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது, அது சமூக வலை தளங்களில் பரவலாக … ஆழ்துளை குழந்தை மீட்பு கருவி-ஐ படிப்பதைத் தொடரவும்.
சிவப்புச் சந்தை
இந்நூல், உலகெங்கும் பரவியுள்ள கொடூரமிக்க, பாதாள உலகத்தின் வழியே அதிர்ச்சியூட்டும் சுற்றுலாவுக்கு வாசகர்களை அழைத்துச் செல்லும் ஒரு விரிவான விவரணை. அங்கு சிவப்புச் சந்தையில் உடலுறுப்புகள், எலும்புகள், உயிரோடிருக்கும் மனிதர்கள் முதலியவை வாங்கி விற்கப்படுகின்றன. மனித உடல்களையும் உடல் பகுதிகளையும் கொண்டு நடக்கும், அதிக லாபம் ஈட்டித்தரும் தீவிரமிக்க, இரகசியமான வணிகம். இதைத் தொடர்ந்து செல்வதில் ஐந்து ஆண்டு காலம் களப்பணி செய்திருக்கிறார் புலனாய்வு பத்திரிக்கையாளரான ஸ்காட் கார்னி அது ‘சிவப்புச் சந்தை’ என்று அறியப்படும் பரந்தகன்ற … சிவப்புச் சந்தை-ஐ படிப்பதைத் தொடரவும்.