மக்களியம் - பகுதி 2 வாழ வேண்டும். உயிர் வாழ வேண்டும் இது மட்டுமே அனைத்து உயிர்களையும் உந்தும் ஒரே உள்ளாற்றல். இன்னும் அதிக காலம் உயிர் வாழ்வது எப்படி எனும் கேள்வியே அனைத்து உயிர்களையும், குறிப்பாக மனிதர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த அனைத்துக்கும் இது தான் உள்ளடக்கமாக இருந்திருக்கிறது. மனிதனின் தொடக்க காலங்களை எடுத்துக் கொண்டால், ‘உண்ணு, உண்ணப்படாமலிரு’ என்பது தான் ஒரே இலக்கு. அந்த ஒற்றை இலக்கிலிருந்து மனிதன் வெகு தூரம் கடந்து … மீள் தொடக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: அறிவு
நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்
சிறு வயதில் ஒருவன் கற்கும் நூல்களே பின்னர் அவனை ஆற்றுப்படுத்துகின்றன, அவனுக்கான கண்ணோட்டத்தை வந்தடைய உதவுகின்றன. வழி நடத்தும் தோழனாகின்றன. நூல்களின் சுவை கண்ட யாரும் ஒற்றை ஒரு நாளேனும், இந்த வாசிப்புப் பழக்கத்தை மக்களிடம் எப்படி ஏற்படுத்துவது என்று சிந்திக்காமல் இருந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு சரியான நூல்கள் மக்களின் உள்ளொளியை பற்றிக் கொள்கின்றன. இதை விரிவாக்குவதும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவதும் யார் பொறுப்பு? ஐயம் சிறிதும் இல்லாமல், இது அரசின் கடமையே. ஆனால் அரசு … நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மதங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?
நண்பரே … ! ஓர் அறிவுஜீவி … என்பவர் யார் … ? உங்கள் பார்வையில் .. ! செல்வராஜன் கேள்வி பதில் பகுதியிலிருந்து தோழர் செங்கொடி, தங்களின் பதில்களுக்கு நன்றி. எனது மற்றுமொரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது … மதங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
சமூகத்தை நேசிப்பவர்களின் நூல்
ஒரு சொல்லின் பொருள் என்பது வெறுமனே அந்தச் சொல் அடையாளப் படுத்தும் ஒன்றோடு முடிந்து விடுவதில்லை. பல்லாயிரம் மக்களின் உழைப்பிலிருந்தே அந்தப் பொருள் வடிவம் பெற்றிருக்கிறது. அந்தப் பல்லாயிரக் கணக்கான மக்களின் உழைப்பை விலக்கி விட்டு அந்தச் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டால் அதன் பொருள் ஒரு போதும் முழுமை பெறாது. பாசிசம் எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம், முதலாளித்துவத்தின் நெருக்கடியின் போது மிகவும் பிற்போக்கான, ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட சக்திகளின் அரசியல் போக்கு என்று … சமூகத்தை நேசிப்பவர்களின் நூல்-ஐ படிப்பதைத் தொடரவும்.