தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்

  சுவனப்பிரியனுக்கு மறுப்புரை – பகுதி 3   எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவு, “செத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செங்கொடி”   இந்த பதிவுக்கு செல்லும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்தி விடுவது சரியாக இருக்கும். முதல் பதிவான “கள்ள உறவுக்குள் சிக்கிக் கொண்ட கடவுள்” என்பதற்கு பதிவர் சுவனப்பிரியன் இதுவரை எந்தப் பதிலையும் தரவில்லை. எனவே, அதற்கு முதலில் பதில் தர வேண்டும். அடுத்த பதிவில் க.உ.சி.க குறித்து அவர் பதிலேதும்…

மார்ச் 8 – உலக உழைக்கும் பெண்கள் தினம்!

அன்பார்ந்த உழைக்கும் பெண்களே !      முதன் முதலில் மார்ச் 8 படைத்த பெண்கள் ஏதோ வேலைக்கு சம ஊதியம் என்ற கூலி உயர்வு பிரச்சனைக்காக போரடிய நாள் மட்டும் அல்ல. ஆண்களுக்கு இணையான ஊதியம், நிர்ணயித்த வேலை நேரம், வாக்குரிமை என தங்கள் அரசியல் உரிமைக்காக போரடிய நாள் தங்களுடைய உரிமைகளைப் பெற போராட வேண்டும், அமைப்பாக திரள வேண்டுமென பெண்கள் தங்களே உணைர்ந்த நாள். உலகிற்கும் உணர்த்திய நாள்.      டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹெகனில்…

அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 3. சொத்துரிமை சட்டம்

சொத்துரிமை எனும் சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் பெரும்பாலும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. தனியுடமையின் பொருளை உணர்த்துவதற்கு உதவும் மிகத் துல்லியமான சொல் சொத்துரிமை. தான் அனுபவிக்கும் உடமையின் வசதிகளை தனக்குப் பின் தன்னுடைய வாரிசுகளுக்கு கடத்துவது தான் சொத்துரிமை. ஆனால் வாரிசு என்பது யார்? எந்த அடிப்படையில் அவர்களுக்கு கடத்துவது என்பதற்கு உலகின் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் மரபு சார்ந்து வெவ்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை தொடங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் கலாச்சார விழுமியங்கள் வரை அனைத்தும் சேர்ந்தே…

அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

  இஸ்லாமிய நீதி வழங்களில் முஸ்லீம்களில் பேருவப்பாக கூறப்படும் சட்டங்கள் என்றால் அது குற்றவியல் சட்டங்கள் தான். இஸ்லாமியச் சட்டங்கள் இருந்தால் நாட்டில் கற்பழிப்பே நடக்காது என்பார்கள். திருட்டு அறவே ஒழிந்துவிடும் என்பார்கள். அப்படி என்ன சிறப்பு இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களில்? கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று கூறப்படும் ஹமுராபி காலத்துச் சட்டங்கள் தான். முகம்மது தான் வாழ்ந்த காலத்தின் போது 2,300 ஆண்டு பழமையாக இருந்த ஹமுராபி காலத்து பாபிலோனியச் சட்டங்களை சீர்திருத்தி மறுபதிப்பு…

அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 1. மணச் சட்டம்

இஸ்லாத்தில் சட்டங்களுக்கு மிகுந்த முதன்மையான இடமுண்டு. அல்லா கூறும் சட்டங்களை மீறும் யாரும் இஸ்லாமியனாக இருக்கும் தகுதியை இழந்தவர்கனாகிறார்கள். மட்டுமல்லாது நியாயத் தீர்ப்பு நாளில் நரகத்திலும் வீழ்த்தப்படுவார்கள். இந்தச் சட்டங்களை மனிதர்களுக்காக இயற்றித் தந்தது அல்லா தான். மனிதர்களில் எவருக்கும் சட்டங்கள் இயற்றும் தகுதி இல்லை மட்டுமல்லாது அவைகளை மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ எந்த மனிதருக்கும் அறுகதை இல்லை. இதை குரான் வசனங்கள் 5:48; 5:50 தெளிவுபடுத்துகிறது,   .. .. .. எனவே அல்லாஹ் அருள் செய்ததைக்…

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்

  பொதுவாக அனைத்து மதங்களுமே ஆணாதிக்கப் பார்வை கொண்டவைகள் தாம். இஸ்லாத்திற்கு இதில் விலக்கு ஒன்றுமில்லை. ஆனால் இதற்கு நேரெதிராக இஸ்லாம் பெண்களுக்கு பல்விதமான உரிமைகள் வழங்கியிருப்பதாக பரப்பித் திரிகிறார்கள். இதில் பொருள் இல்லாமலும் இல்லை. ஏனைய பிற மதங்களை விட காலத்தால் பிந்திய மதம் என்பதால் ஒப்பீட்டு முறையில் சற்று மேலோங்கிய தோற்றம் கிடைத்திருக்கிறது என்பதை மறுக்கவியலாது. ஆனால் உள்ளீட்டில் அனைத்து பிற்போக்குத் தனங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் ஆணாதிக்க மதம் என்பதையும் மறுக்கவியலாது.   பெண்ணை…

வரட்டுத்தனம் என்று கூறப்படுவதிலுள்ள வரட்டுத்தனம்

சில நாட்களுக்கு முன் சிறகுகள் வலைப்பக்கத்தை நடத்துபவர்களில் ஒருவரான நண்பர் முகம்மது ரஃபி கேள்வி ஒன்றை மின்னஞ்சலில் கேட்டிருந்தார். அதற்கு பதில் எழுதிவிட்டு பார்த்தால் சற்று நீளமாக இருந்தது. எனவே, அதை இன்னும் சற்று விரிவுபடுத்தி பதிவாக இட்டால் என்ன எனும் எண்ணமே இந்த பதிவு. மட்டுமல்லாது, வழக்கமாக கேள்வி பதில் பகுதியில் கேள்விகளை கேட்கும் அவர் எனக்கு ஏதும் சங்கடம் நேரக் கூடும் எனும் எண்ணத்தில் இந்த முறை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கலாம் எனகருதுகிறேன். அவ்வாறான தயக்கமோ,…

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 4. மஹ்ர் மணக்கொடை

  தமிழக இஸ்லாமியர்களைப் பொருத்தவரை ஆணோ, பெண்ணோ கொடையளிக்காமல் திருமணம் செய்யும் சமூகங்களும் உலகில் இருக்கின்றன என்பதை அறியாதவர்களைப் போல் தான் நடந்து கொள்வார்கள். பெண்ணிடமிருந்து ஆண் பெறும் வரதட்சனை என்பது சமூகப் பெருங்கேடு, எனவே ஆணிடமிருந்து பெண் பெறும் தனதட்சனையே சிறந்தது என்பது முஸ்லீம்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த அடிப்படையில் இருந்து தான் யாரும் வழங்க முடியாத உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதாக புழகமடைந்து கொள்கிறார்கள்.   மஹ்ர் என்பது திருமணத்தின் போது மணமகளுக்கு…

அல்லாவின் பார்வையில் பெண்கள்: 3. விவாரத்து

விவாகரத்து செய்யும் வசதி பெண்களுக்கு அவசியம் என்பதிலோ, அதை இஸ்லாம் அங்கீகரித்திருக்கிறது என்பதிலோ மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் அதை ஆண்களுக்கு நிகராக இஸ்லாம் கொடுத்த பெண்களுக்கான உரிமை என்பதில், அதை இஸ்லாம் தான் முதலில் வழங்கியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமுண்டு. தவிர்க்க முடியாத ஒன்றாக, ஆணாதிக்கப் பார்வையுடன் தான் விவாகரத்து உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது. அதேநேரம் விவாகரத்து எனும் அனுமதி பெண்களுக்கு சரியான அளவில் பலனளிக்க வேண்டுமென்றால் பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு இன்றியமையாதது….

பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்?

சூரியன் உதிப்பதைப்போல், காற்று வீசுவதைப்போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் என்று கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைக் கூறலாம். அந்த அளவுக்கு குப்பை வீசியே மறைத்துவிடும் எத்தனத்தில் விதவிதமான புனைவுகளும், பொருளற்ற பொய்களும், பொருந்தா விளக்கங்களும் நாளும் பொழிந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற அவதூறுகளுக்கு விளக்கமளிக்க முனைந்தால், வேறு எதையும் செய்யமுடியாத அளவுக்கு கம்யூனிஸ்டுகளின் நேரம் அவர்களுடையதாக இருக்காது. அதேநேரம் அத்தனை அவதூறுகளுக்கும் மறுக்கவியலா முறையில் தகர்ப்புகளும், தரவுகளும் தரப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவதூறுகளுக்கான தேவை குறைவதே இல்லை….