பெண்கள் என்றால் .. .. ..

மூதூர் மொகமட் ராபி செங்கொடி தளத்தை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்த பெயர் தான். பலமுறை கேள்வி பதில் பகுதியில் தன்னுடைய கேள்விகளால் இந்தத் தளத்தின் ஈர்ப்புக் கவர்ச்சியை கூட்டியவர். அந்தக் கேள்விகளும், சில பின்னூட்டங்களும் அவரின் அகத் தேடல்களை, அற உணர்ச்சிகளை புறம் கொண்டு வந்தவைகள். அண்மையில் ஆணாதிக்கம் குறித்து ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தார். வெகு எதார்த்தமான கேள்விகள், எளிமையான விளக்கங்கள். அந்தக் கட்டுரையை உங்களுக்கும் அறியத்தருவதில் எனக்கு மகிழ்ச்சியே. இவருடைய வேறு ஆக்கங்களை வாசிக்க … பெண்கள் என்றால் .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

இஸ்லாம் ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கிறது என்பவர்கள் அதற்கு ஆதாரமாக கூறுவது பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது தான். பொதுவாக மனிதனின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை பெண்களுக்கு சொத்துரிமை என்பது முழுமையான அளவில் இல்லை. இன்று பல நாடுகள் சட்டரீதியாக பெண்களுக்கு சொத்துரிமையை ஏற்படுத்தியிருக்கின்றன. என்றாலும், நடைமுறையில் ஆணாதிக்க உலகம் பெண்களுக்கான சொத்துரிமையை அதன் முழுமையான பொருளில் அங்கீகரிக்கவில்லை என்பதே மெய். சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழி நடத்திய போதும் அவளுக்கு தனித்த சொத்துரிமை ஒன்றுமில்லை. … அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை-ஐ படிப்பதைத் தொடரவும்.